Monthly Archives: August 2009

ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2

தோழர் ஸ்டாலின் இறந்து சுமார் அறுபதாண்டுகளான பின்னரும் முதலாளியம் அவர் மீதான அவதூறுகளை நிறுத்திய பாடில்லை. இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும் தாம் உலக அளவிலும் தமிழ்ச்சூழலிலும் இந்த அவதூறுகளை பரப்புரையை செய்கின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2 ஐ வெளியிடுகிறோம்.

வில்லியம் ரடால்ப் ஹெர்ஸ்ட்

வில்லியம் ரடால்ப் ஹெர்ஸ்ட்

பத்திரிக்கையாளர் டோட்டில் நிரூபித்துள்ள வேறு பலவற்றுள் முக்கியமானவை சோவியத் ஒன்றியத்தில் நடந்ததாகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் பற்றியவை. உண்மையில் அவையெல்லாம் 1922இல் பிரசுரிக்கப்பட்ட புகைப் படங்கள். 1918-21 உள்நாட்டுப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் மீது எட்டு அந்நிய நாடுகளின் இராணுவங்கள் படையெடுத்தபோது நிகழ்ந்த போர் மற்றும் பட்டினி நிலைமைகளில் இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து போயினர்; அந்தச் சமயத்தில் அடுக்கப்பட்ட குழந்தைகள் பசி பட்டினியில் வாடிக் கிடக்கும் கோரமான புகைப்படங்கள்; அவற்றைத் தான் 1930களில் நடந்த பட்டினிச் சாவுகள் என்பதாக நாஜிக்களும் மற்ற கம்யூனிச எதிரிகளும் பிரசுரித்திருந்தனர். 1934 பஞ்சம் பற்றிய பல உண்மை விவரங்களை டக்ளஸ் டோட்டில் வெளிக் கொண்டு வந்து, ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கைகள் பிரசுரித்த கலப்படப் பொய்களை அம்பலப்படுத்தினார். உக்ரைன் பஞ்சப் பூமியிலிருந்து நெடுநாட்களாகச் செய்திகளும் புகைப் படங்களும் அனுப்பிய ஒரு பத்திரிக்கையாளர் தாமஸ் வாக்கர் எனப்படுபவர்; இந்த மனிதர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஒரு ஐந்தே நாட்கள்தான் தங்கி இருந்தார்.

இந்த உண்மையை “தி நேசன்” என்ற ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் தெளிவுபடுத்தினார். எம். பரோட் என்ற நிருபர்தான் ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கையின் உண்மையான மாஸ்கோ நிருபர்; இவர், 1933இல் சோவியத் ஒன்றியம் மிகச் சிறந்த அறுவடையைச் சாதித்துள்ளது என்றும் உக்ரைன் மிகவும் முன்னேறியுள்ளது என்றும் ஹெர்ஸ்டுக்கு அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்படாமலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்டன என்பதைக் கூட பிஷர் தெளிவுபடுத்தினார்.

தனது பத்திரிக்கைகளின் மூலம் அவதூறு பரப்பிய ஹெர்ஸ்ட்

தனது பத்திரிக்கைகளின் மூலம் அவதூறு பரப்பிய ஹெர்ஸ்ட்

டோட்டில் மேலும் ஒன்றை நிரூபிக்கிறார். உக்ரைன் பஞ்சம் எனச் சொல்லப்பட்டதின் மீதான செய்திகளை எழுதிய “தாமஸ் வாக்கர்” என்ற நிருபரின் உண்மைப் பெயர் ராபர்ட் கிரீன்; இவன் அமெரிக்காவின் கொலராடோ மாநிலச் சிறையில் இருந்து தப்பிய ஒரு கிரிமினல் கைதி. இந்த வாக்கர் எனப்படும் கிரீன் அமெரிக்கா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு வழக்கு மன்றத்தில் நிறுத்தப் பட்டபோது, தான் உக்ரைனுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு பஞ்சத்தில், 1930களில் உக்ரைனில் ஏற்பட்ட பட்டினியினால் பல பத்து இலட்சம் பேர் மடிந்து போனார்கள் என்கிற இந்தப் பொய்களெல்லாம் கடைசியாக,  1987இல் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் மூலம் அம்பலப்பட்டுப் போனது.

ஹெர்ஸ்ட், நாஜிக்கள், போலீசு உளவாளி கான்குவஸ்ட் மற்றும் பலரும் பலபத்து இலட்சம் மக்களின் உயிரைப் பற்றி பித்தலாட்டம் செய்து, கட்டுக்கதைச் செய்திகளைப் பரப்பியிருக்கிறார்கள். இன்றும் கூட, வலதுசாரிச் சக்திகளின் சம்பளப் பட்டியிலில் உள்ள ஆசிரியர்கள் எழுதிப் புதிதாகப் பிரசுரிக்கப்படும் நூல்களில் நாஜி ஹெர்ஸ்டின் கட்டுக் கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஒரு ஏகபோக நிலைவகிக்கும், உலகம் முழுவதும் செய்தி முகாமைகளைக் கொண்ட ஹெர்ஸ்டின் குடும்பப் பத்திரிக் கைகள் நாஜி கெஸ்டபோ என்ற இட்லரின் அரசியல் உளவுப் படையின் பெரும் பிரச்சார பீரங்கியாக விளங்கின. ஏகபோக மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் இந்த உலகில், ஹெர்ஸ்டின் செய்தி ஊடகம் உலகம் முழுவதுமுள்ள பல பத்திரிக்கைகள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் கெஸ்டபோவின் புளுகுகளை உண்மையெனப் பரப்பிட முடிந்தது.

கெஸ்டபோ ஒழிந்து போனபின், அமெரிக்க சி.ஐ.ஏ. வைப் புதிய புரவலனாகக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போர் தடையின்றி நடந்தது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கொஞ்சமும் குறைவின்றி நடந்தது. வழக்கம் போல தொடர்ந்த இந்த வேலை, முதலில் நாஜி உளவுப்படை கெஸ்டபோவின் ஆணையாலும், பின்னர் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆணையிலும் நீடித்தது; நீடிக்கிறது.

ராபர்ட் கான்குவஸ்ட்

புஷ் தம்பதியினருடன் கான்குவஸ்ட்

புஷ் தம்பதியினருடன் கான்குவஸ்ட்

முதலாளியச் செய்தி ஊடகம் மிகவும் பரவலாக மேற்கோள் காட்டும் ராபர்ட் கான்குவஸ்ட் எனப்படும் இந்த மனிதர், முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான உண்மையான பூசாரியான இந்த மனிதர் இந்தச் சமயத்தில் நமது குறிப்பான கவனத்துக்குரியவராக உள்ளார். சோவியத் ஒன்றியத்தில் இலட்சக்கணக்கானோர் மடிந்ததைப் பற்றி மிகமிக அதிகமாக எழுதிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் ராபர்ட் கான்குவஸ்ட். இரண்டாம் உலகப் போரில் இருந்து சோவியத் ஒன்றியம் குறித்த எல்லாப் புனைக் கதைகளையும் பொய்களையும் உண்மையில் உருவாக்கியவர் இவர்தான். “மாபெரும் பயங்கரம்” (1969) “சோகத்தின் அறுவடை” (1986) ஆகிய இரண்டு நூல்கள் மூலம் முக்கியமாக அறியப்பட்டவர்தான் கான்குவஸ்ட்.

குலாக்குகள் எனப்படும் நிலப்பிரபுகளுக்கான உழைப்பு முகாம் களிலும், 1936-38 விசாரணையின்போதும், உக்ரைன் பஞ்சத்தாலும் லட்சக்கணக்கானோர் மாண்டுபோனதாக கான்குவஸ்ட் எழுதுகிறார். இவர் தமது தகவல் மூலாதாரங்களாக அமெரிக்காவில் அகதிகளாக வாழும் வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உக்ரைனியரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்; இவர்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் கூட்டுறவாடியவர்கள். கான்குவஸ்டின் நாயகர்கள் எல்லாம் உக்ரைனில் வாழ்ந்த யூதச் சமுதாயத்துக்கு எதிராக 1942இல் நடந்த படுகொலைகளில் தலைமையேற்றுப் பங்காற்றிய போர்க் குற்றவாளிகள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு போர்க் குற்றவாளியெனத் தண்டிக்கப் பட்டவர். இந்த எலபிட், நாஜி ஆக்கிரமிப்பின்போது எல்வோவ் நகரத்தின் போலீசுத் தலைவனாக இருந்தான்; 1942இல் நடந்த யூதப் படுகொலை பயங்கரத்துக்குத் தலைமையேற்றவன். 1949இல் (சி.ஐ.ஏ.வால்) அவதூறு பரப்பும் ஊற்றுமூலமாகப் பணியாற்றினான்.

கான்குவஸ்டினுடைய நூல்களின் கரு கம்யூனிசத்துக்கு எதிரான வன்முறையும் வெறியும் நிறைந்தது. “1932க்கும் 1933க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை 50 முதல் 60 இலட்சம் வரையிலானவை, அவற்றில் பாதி அளவு உக்ரைனில் ஏற்பட்டவை”, என்று கான்குவஸ்ட் தனது 1969 நூலில் சொல்கிறார். ஆனால், ரீகன் கால கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது அதாவது 1983இல் அதே பஞ்சம் 1937 வரையிலானது என்று நீட்டிக்கிறார்; பஞ்சத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை 140 இலட்சமாக ஊதிப் பெருக்குகிறார்! இம்மாதிரியான புளுகுக்காக அவருக்கு நல்ல வெகுமதி கொடுக்கப் பட்டது; சோவியத் படையெடுப்புக்குத் தயாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது அதிபர் தேர்தல் பிரச்சார சரக்குகளை எழுதித் தரும்படி, கான்குவஸ்ட்டுக்கு ரீகன் (1988இல்) பொறுப்பு ஒப்படைத்தார் “ரஷ்யர்கள் படையெடுக்கும்போது என்ன செய்வது உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான ஒரு கையேடு” என்பது கான்குவஸ்ட் எழுதிய உரையின் தலைப்பு! ஒரு வரலாற்றுப் பேராசிரி யரிடமிருந்து என்ன வித்தியாசமான சொற்கள் பாருங்கள்!

உண்மையில் வித்தியாசமானவை ஒன்றும் இல்லை. ஏனென்றால் முதலில் ஒரு உளவுப் படையின் முகவர், பின்னர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர், எழுத்தாளர் என்கிற முறையில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான பொய்யுரைகளாலும், புனை கதைகளாலும் தனது பிழைப்பை நடத்திய மனிதனிடமிருந்துதான் இந்தச் சொற்கள் வருகின்றன. அவன் பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் பொய்ப் பிரச்சாரத் துறை, அதாவது தகவல் ஆய்வுத் துறை (ஐ.ஆர்.டி.)யின் ஒரு முன்னாள் முகவர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் அடையாளங் காட்டியது. “ஐ.ஆர்.டி.” என்பது பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் ஒரு பிரிவாக 1947இல் நிறுவப்பட்டது. (கம்யூனிசத் தகவல் குழு என்பது அதன் மூலப்பெயர்.) அதன் பிரதானப் பணி அரசியல்வாதி, பத்திரிக்கை யாளர்கள், பதவியிலுள்ள மற்றும் பிறர் மத்தியில் கட்டுக் கதைகளைப் பரப்பி, பொது மக்கள் கருத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கம்யூனிசச் செல்வாக்கை முறியடிப்பதுதான்.

பிரிட்டனைப் போலவே வெளிநாடுகளிலும் ஐ.ஆர்.டி.யின் நடவடிக்கைகள் மிகமிகப் பரவலானவை. வலதுசாரித் தீவிர வாதத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.ஆர்.டி. கலைக்கப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் நூற்றுக்கும் மேலான பிரபலமான பத்திரிக்கையாளர்கள் ஐ.ஆர்.டி. தொடர்பில் இருந்து கட்டுரை களுக்கான விடயங்களைக் கிரமமாக வழங்கி வந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. ஃபினான்சியல் டைம்ஸ், தி டைம்ஸ், எகானமிஸ்ட், டெய்லி மெயில், டெய்லி மிர்ரர், தி எக்ஸ்பிரஸ், தி கார்டியன் மற்றும் பிற பெரிய பிரித்தானியப் பத்திரிக்கைகள் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. எனவே கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்திய விவரங்களில் இருந்து எவ்வாறு இரகசிய உளவுப் படையினர் மக்களைச் சென்றடையும் செய்திகளைத் திரித்துப் புரட்ட முடியும் என்பதை நாம் அறிய முடியும்.

இந்த ஐ.ஆர்.டி. நிறுவப்பட்டதில் இருந்து 1956 வரை ஐ.ஆர்.டி.க்காக ராபர்ட் கான்குவஸ்ட் வேலை செய்தான். அங்கே கான்குவஸ்டின் வேலை சோவியத் ஒன்றியத்தின் “கருப்பு வரலாறு’ என்று சொல்லப்பட்டதைப் புனைந்தளிப்பது தான்; இந்தக் கட்டுக் கதைகள்தாம் உண்மையானவை என்பதைப் போல வெளியிடப் பட்டு, பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரப்பப்பட்டன. ஐ.ஆர்.டியை விட்டு அதிகாரபூர்வமாக விலகிய பிறகும் கூட அதன் யோசனை ஆதரவோடு, கான்குவஸ்டு நூல்கள் எழுதுவதைத் தொடர்ந்தான்.

ராபர்ட் கான்குவஸ்ட்

ராபர்ட் கான்குவஸ்ட்

“மாபெரும் பயங்கரம்” என்னும் கான்குவஸ்டின் நூல் 1937இல் சோவியத் ஒன்றியத்தில் நடந்த அதிகாரப் போட்டி என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது, அடிப்படையில் ஒரு வலதுசாரி நூலாகும். உண்மையில் அது, அவன் இரகசிய உளவுப் படையில் இருந்தபோது எழுதியதின் மறுவார்ப்பு ஆகும். அந்த நூலே ஐ.ஆர்.டி.யின் உதவியோடு முடிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டது. சி.ஐ.ஏ. மூலங்களில் இருந்து வரும் நூல்களைப் பதிப்பிப்பதோடு அதன் மூன்றில் ஒரு பகுதிப் பிரதிகள், பிரேஜர் நிறுவனத்தால் வாங்கிக் கொள்ளப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிக்கை; வானொலி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் போன்ற “பயன்பாடுடைய முட்டாள்களுக்கு” பரிசளிப்பதற்காக கான்குவஸ்டின் நூல்கள் வாங்கப்பட்டன. இதன்மூலம் கான்குவஸ்ட் மற்றும் வலதுசாரித் தீவிரவாதிகளின் பொய்கள் மக்கள் திரளின் பெரும் பகுதி முழுவதும் பரப்புவதைத் தொடர்வதற்கான உறுதி செய்யப்பட்டது. வலதுசாரி வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியம் பற்றிய செய்தி களுக்கான மிக முக்கியமான மூலாதாரங்களில் ஒன்றாக இன்றுவரை கான்குவஸ்ட் நூல்கள்தான் விளங்குகின்றன.

சோவியத் ஒன்றியத்தில் உயிரையோ, சுதந்திரத்தையோ இழந்ததாகப் புளுகும் புத்தகங்கள் கட்டுரைகளோடு எப்போதும் தொடர்புபடுத்தப்படும் இன்னொரு நபர் ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். “தி குலாக் ஆர்சிபிலாகோ” என்ற அவரது நூல் மூலமாக 1960களின் இறுதியில் முதலாளித்துவ உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இந்த சோல்ஜெனித்சின். சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பரப்பிய எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்காக இவர் 1946ஆம் ஆண்டிலிருந்து எட்டு வருடங்கள் உழைப்பு முகாமில் வாழும்படி தண்டிக்கப்பட்டவர். இட்லருடன் சோவியத் ஒன்றிய அரசு ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான மோதலை அது தவிர்த்திருக்கலாம் என்பது சோல்ஜெனித்சின்னின் கருத்தாகும். சோவியத் ஒன்றியத்தின் மக்கள் மீது போர் ஏற்படுத்திய பேரழிவுப் பாதிப்பின் நோக்கில் பார்த்தால் சோவியத் அரசாங்கமும் ஸ்டாலினும் இட்லரை விட மோசமானவர்கள் என்று சோல்ஜெனித் சின் கூறினார். தனது நாஜி ஆதரவு அனுதாபங்களை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆகவேதான் அவர் ஒரு துரோகி எனக் கண்டிக்கப்பட்டார்.

ஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்த நிகிடா குருசேவின் ஒப்புதலோடும் உதவியோடும் சோல்ஜெனித்சின் 1962 முதல் தனது நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். ஒரு கைதியின் வாழ்க்கையைப் பற்றி, “ஐவான் டெனிசோவிச் வாழ்வில் ஒரு நாள்” என்பது அவர் பதிப்பித்த முதல் நூல். ஸ்டாலினுடைய சோசலிசப் பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு சோல் ஜெனித்சினுடைய எழுத்தை குருச்சேவ் பயன்படுத்திக் கொண்டார். “தி குலாக் ஆர்ச்சிபிலாகோ” என்ற அவரது நூலுக்காக 1970இல் சோல்ஜெனித்சின் நோபல் பரிசு பெற்றார். அதன்பிறகு அவரது நூல்கள் பெரும் எண்ணிக்கையில் முதலாளித்துவ நாடுகளில் பிரசுரிப்பது துவங்கியது; அவற்றின் ஆசிரியர் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான மிகவும் மதிப்புமிக்க கருவிகளில் ஒருவரானார்.

சோவியத் ஒன்றியத்தில் பலபத்து லட்சம்பேர் மாண்டு போனார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தோடு உழைப்பு முகாம்கள் பற்றிய இவரது எழுத்துக்களையும் சேர்த்து இவையும் உண்மையானவை என்பது போல் முதலாளித்துவச் செய்தி ஊடகங்கள் பரப்பின. 1974இல் சோல்ஜெனித்சின் சோவியத் குடியுரிமையைத் துறந்து சுவிட்சர்லாந்திலும் பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அக்காலங்களில் அவர் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான ஒரு மாபெரும் போராளியாக முதலாளியச் செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு நாஜி ஆதரவாளர் அனுதாபி என்பது சோசலிசத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் குறுக்கிடாதவாறு மூடி மறைக்கப்பட்டது. அமெரிக்காவில், பல முக்கியக் கூட்டங்களில் உரையாற்றும்படி சோல்ஜெனித்சின் அடிக்கடி அழைக்கப்பட்டார். அவரது உரைகள் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டக் கூடியவையாகவும் அதீத பிற்போக்கு நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவையாகவும் இருந்தன. அவற்றில் ஒன்று அமெரிக்காவின் மீது வியத்நாம் வெற்றி பெற்ற பிறகும் மீண்டும் வியத்நாமைத் தாக்க வேண்டும் என்ற கருத்து.

அது மட்டுமல்ல; 40 ஆண்டு கால பாசிச ஆட்சிக்குப் பிறகு போர்ச்சுக்கலில் இடதுசாரி இராணுவ அதிகாரிகள் மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தபோது, போர்ச்சுகலில் அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கான பிரச்சாரத்தில் சோல் ஜெனித்சின் இறங்கினார். அமெரிக்கா தலையிடவில்லையெனில் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள் தலையிடும் என்று சொன்னார். அவரது உரைகளின் மூலம் போர்ச்சுக்கலின் பிடியில் இருந்து ஆப்பிரிக்கக் காலனிகள் விடுதலை அடைவதைக் கண்டு எப்போதும் வேதனை தெரிவித்தார்.

ஆனால், சோல்ஜெனித்சின்னுடைய உரைகளில் எப்போதுமே சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போருக்கு முக்கிய அழுத்தம் தரப்பட்டது தெளிவாக உள்ளது. அது சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முதல் வட வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கப்பட்டு விட்டதாகப் புளுகுவது வரை சோல்ஜெனித்சின் புளுகுப் பிரச்சாரம் நீடித்தது. வடக்கு வியத்நாமில் அமெரிக்கர்கள் அடிமை உழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிற சோல்ஜெனித்சினுடைய இந்தக் கருத்துதான் வியத்நாம் போர் பற்றிய “ராம்போ” சினிமாக்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு ஆதரவாக எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர்கள் துரோகிகளாக மாறக் கூடியவர்கள் என்று தனது உரைகளில் இந்த சோல்ஜெனித்சின் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக பீரங்கி வண்டிகள் மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் பெற்றிருக்கிறது; அதேபோல அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கிறது அதாவது அமெரிக்காவில் இருப்பதைவிட மூன்று அல்லது ஐந்து மடங்கு கூட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் ஒன்றியம் பெற்றுள்ளது; ஆகவே அதற்கு எதிராக அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இதே சோல்ஜெனித்சின் பிரச்சாரம் செய்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான சோல்ஜெனித்சின்னுடைய உரைகள் வலதுசாரித் தீவிரவாதத்தைத்தான் பிரதிபலித்தது. ஆனால் அவரோ மேலும் ஒருபடி நகர்ந்து பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார்.

எனவே, சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம்பேர் மாண்டனர், சிறையிலடைக்கப்பட்டனர் என்கிற கட்டுக் கதைகளை “சப்ளை” செய்த மதிப்புமிக்க புளுகு வியாபாரிகள் இவர்கள்தான்; நாஜி வில்லியம் ஹெர்ஸ்ட், இரகசிய உளவாளி ராபர்ட் கான்குவஸ்ட், மற்றும் பாசிஸ்ட் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின், இவர்களில் கான்குவஸ்ட்தான் தலைமைப் பாத்திரமாற்றியவன். ஏனென்றால், இவன் கொடுத்த செய்தியைத்தான் உலகெங்கும் உள்ள முதலாளித்துவப் பெருந்திரள் செய்தி ஊடகம் பயன்படுத்திக் கொண்டது. மேலும் அதுதான் சில பல்கலைக் கழகங்களில் நிறுவப்பட்ட திணைப் புலன்களுக்கு அடிப்படையாக அமைந்தது. கான்குவஸ்ட்டின் வேலை முதல்தரமான போலீசுப் புளுகுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை.

சோவியத் சுவரொட்டிகள்

சோவியத் சுவரொட்டிகள்

1970களில் சோல்ஜெனித்சின் மற்றும் இரண்டாம்தர ஆசாமிகளான ஆண்ட்ரேய் சக்கராவோ, ராய் மேட்வேடேவ் போன்றவர்களோடு, சோவியத் ஒன்றியத்தில் மாண்டவர்கள், சிறையிலடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய ஊகங்கள் வதந்திகள் பரப்பும் பல நபர்கள், உலகமெங்கும் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்டவர்கள் முதலாளித்துவச் செய்தி ஊடகங்களால் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றனர். ஆனால், இறுதியில் இந்த விவகாரங்கள் பற்றிய முழு உண்மையும் வெளியானது; வரலாற்றுப் பொய்யர்களின் உண்மை முகங்கள் தெரிந்தன. வரலாற்று ஆய்வாளர்களுக்காக கட்சியின் இரகசிய ஆவணப் பாதுகாப்பகங்களைத் திறக்கும்படி கோர்பச்சேவ் உத்தரவு போட்டார்; அது யாரும் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தியது.

பிரச்சாரப் பொய்கள்

சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற வதந்திகள் எல்லாம் அந்நாட்டிற்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போரின் ஒரு பகுதிதான்; இதன் காரணமாகத்தான் சோவியத் ஒன்றியம் அந்த வதந்திகளுக்குக் கொடுத்த மறுப்புகளும் விளக்கங்களும் பாரதூரமாக எடுத்துக் கொள்ளப்படவுமில்லை, முதலாளித்துவச் செய்தி ஊடகங்களில் இடம் பெறவுமில்லை. அதற்கு மாறாக, அவற்றைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிய அதேசமயம், முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்ட தனிச்சிறப்பானவர்கள் தாராளமாக இடம் பிடித்துக் கொண்டார்கள்; ஏனென்றால் இவர்கள்தான் முதலாளியம் விரும்பிய கட்டுக் கதைகளை வழங்கினர். அதென்ன கட்டுக் கதைகள்? கான்குவஸ்ட்டின் பொய் மற்றும் பிற விமரிசனங்களும் உரிமை கொண்டாடியபடி பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் என்கிற கதைகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பொதுவாகக் கொண்டிருந்தன; அந்தக் கதைகள் எல்லாமும் பொய்யான தோராயப் புள்ளி விவரங்களின் தொகுப்புத் தானே தவிர எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளாலும் தொகுக்கப்பட்டவையல்ல.

கான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், மேட்வேடேவ் மற்றும் பிறர் சோவியத் ஒன்றியம் பிரசுரித்த புள்ளி விவரங்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்; உதாரணமாக, தேசிய மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள்; இவற்றோடு அந்த நாட்டின் குறிப்பான நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் எந்த விகிதத்தில் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும் என்று யூகித்தார்களோ அதைச் சேர்த்தார்கள்; தமது சொந்த யூகத்தின்படி குறிப்பிட்ட ஆண்டின் இறுதியில் இவ்வளவுபேர் இருக்க வேண்டுமே என்று கணக்குப் போட்டார்கள். அவ்வாறின்றி மக்கள் தொகை குறைவாக இருந்ததால், இந்தக் குறைக்குக் காரணம், அவ்வளவு பேர்கள் மாண்டு போனார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள், ஸ்டாலினும் சோசலிசமும் மேற்கொண்ட கொடூரத்தின் விளைவுதான் இதுவென்று முடிவு செய்தார்கள். எளிமையான முறை. ஆனால் முற்றிலும் மோசடியானது. மேலை உலகைப் பற்றிய அம்பலப்படுத்துதல் என்றால் இவ்வளவு முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பற்றி இந்த மாதிரியான அம்பலப்படுத்தும் முறையை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அங்கேயென்றால் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் இம்மாதிரியான கட்டுக் கதைகளைக் கட்டாயம் எதிர்த்து ஆர்ப்பரித்திருப்பார்கள். ஆனால் இது சோவியத் ஒன்றியம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்தக் கட்டுக் கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. காரணம் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் தங்கள் தொழில் நேர்மைக்கு மேலாகத் தொழில் ரீதியிலான பிழைப்பு முன்னேற்றத்தை வைக்கிறார்கள்.

எண்ணிக்கையைப் பொருத்தவரை, இந்த விமர்சகர்களின் இறுதி முடிவுகள்தான் என்ன? ராபர்ட் கான்குவஸ்ட்டைப் பொறுத்தவரை, அவர் 1961இல் செய்த கணிப்புப்படி சோவியத் ஒன்றியத்தில் 1930களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவின் எண்ணிக்கை 60 இலட்சமாக இருந்தது. 1986ல் அதே கான்குவஸ்ட் சாவின் எண்ணிக்கையை 140 இலட்சமாக உயர்த்திக் கொண்டார். இந்த கான்குவஸ்ட்டின் கணக்குப்படி, கட்சி, படை மற்றும் அரசு இயந்திரத்தில் 1937 களையெடுப்பு துவங்குமுன்பு சிறையிலடைக்கப்பட்ட குலாக்குகள் எனப்படும் புதிய நிலப்பிரபுக்களின் எண்ணிக்கை 50 இலட்சம். 193738இல் களையெடுப்புகள் துவங்கிய பிறகு மேலும் 70 இலட்சம் கைதிகள் கூடியிருக்க வேண்டும்; அதாவது 1939இல் 120 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்று தானாகவே கான்குவஸ்ட் கூட்டிக் கொண்டார். கான்குவஸ்டினுடைய கணக்குப்படி இந்த 120 இலட்சம் பேரும் அரசியல் கைதிகளாகத்தான் இருக்க முடியும்! அவரது கணக்குப்படி இந்த அரசியல் கைதிகளைவிட மிகவும் மிதமிஞ்சியவர்களாக பொதுவான கிரிமினல் குற்றவாளிகள் இருப்பார்கள்; எனவே, இவர்களையும் சேர்த்து சோவியத் யூனியனின் உழைப்பு முகாம்களில் 250300 இலட்சம் பேர் அடைபட்டிருந்தார்கள் என்கிறார்.

கான்குவஸ்டின் இன்னொரு கணக்குப்படி, 193739 கால கட்டத்தில் ஒரு 10 இலட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள்; இதோடு மேலும் 20 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டு போனார்கள்; 193739 களையெடுப்புக்குப் பிறகு இறுதித் தொகுப்பாக 90 இலட்சம் பேர் சிறையில் இறந்திருக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிக்கட்டி 1939க்கும் 1953க்கும் இடையே 120 இலட்சம் அரசியல் கைதிகளை போல்ஷ்விக்குகள் கொன்று விட்டார்கள் என்கிற முடிவைக் கான்குவஸ்ட் வந்தடைந்தார். இந்தத் தொகையை 1930களில் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்கள் என்று கொல்லப்பட்ட தொகையோடு சேர்த்து ஆக மொத்தம் 260 இலட்சம் பேரை போல்ஷ்விக்குகள் கொன்றார்கள் என்ற முடிவுக்கு வந்தார். 1950இல் 120 இலட்சம் அரசியல் கைதிகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்தனர் என்று வேறு கான்குவஸ்ட் சாதித்தார்.

அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் இதே புள்ளி விவர முறைகளைத்தான் ஏறக்குறைய பயன்படுத்தினார். ஆனால் பல்வேறு கருதுகோள்களின் அடிப்படையிலான இந்த அறிவியல்பூர்வமற்ற முறைகளைப் பயன்படுத்திய சோல்ஜெனித்சின் இன்னும் கடைக் கோடித்தனமான முடிவுகளைச் சென்றடைந்தார். 1932-33 பஞ்சத்தால் 60 இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கான்குவஸ்டின் கணக்கை சோல்ஜெனித்சின் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி 1936-39களில் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பேர் என்று கணக்கிட்டார். விவசாயத்தைக் கூட்டுமயமாக்கியதில் இருந்து 1953இல் ஸ்டாலின் இறந்தது வரை அங்கே 660 இலட்சம் மக்களைக் கம்யூனிஸ்டுகள் கொன்று விட்டார்கள் என்று தொகுத்துச் சொல்கிறார் சோல்ஜெனித்சின். இவர்கள் தவிர இரண்டாம் உலகப் போரில் 440 இலட்சம் பேர் பலியானதற்கும் சோவியத் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதையெல்லாம் வைத்து, பதினோரு கோடி ரஷ்யர்கள் சோசலிசத்துக்குப் பலியாகிப் போனார்கள் என்கிற முடிவுக்கு சோல்ஜெனித்சின் போனார். 1953இல் அங்கே 250 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்ததாகப் புளுகுகிறார்.

கான்குவஸ்ட் மற்றும் சோல் ஜெனித்சின்னுடைய புளுகுகளை கோர்பச்சேவின் புதிய சுதந்திரச் செய்தி ஊடகம் என்கிற ஒப்பாரிக் கூச்சல் முன்னுக்குக் கொண்டு வந்தது. இந்தச் செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியினுடைய மத்தியக் கமிட்டி ஆவணக் காப்பகத்தை வரலாற்று ஆய்வுக்காக கோர்பச்சேவ் திறந்து விட்டார். இந்த ஆவணக் காப்பகத்தைத் திறந்ததானது மிகவும் குழப்பப்பட்ட இந்த கட்டுக் கதைகளைப் பொறுத்தவரை உண்மையில் இரண்டு வகையில் பிரச்சினையாக அமைந்தது. அதாவது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விவரங்கள் இந்த ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும். அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால், சோவியத் ஒன்றியத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு பரப்பியவர்கள் எல்லாம், ஆவணக் காப்பகம் திறக்கப்படும் நாளில் தாங்கள் சொல்லி வந்தவையெல்லாம் சரி தானென்று உறுதி செய்யப்படும் என்று சாதித்தார்கள். கான்குவஸ்ட், சாக்காரோவ், மெட்வேடேவ் மற்றும் எஞ்சிய அனைவரும் இப்படித்தான் கூச்சல் போட்டார்கள். ஆனால் ஆவணக் காப்பகம் திறக்கப்பட்டு அசலான ஆவணங்களின் அடிப்படையிலான ஆய்வு அறிக்கைகள் பிரசுரிக்க ஆரம்பித்தவுடன் வினோதமானவை நிகழ்ந்தன. கோர்பச்சேவின் சுதந்திரச் செய்தி ஊடகமும் சரி, சாவையும் சிறையிலடைப்பையும் பற்றிய ஊகக்காரர்கள் புளுகுணிகளும் சரி திடீரென்று அந்த ஆவணக் காப்பகம் மீது ஆர்வம் காட்டாமல் போய் விட்டார்கள். அதாவது வாயும் மெய்யும் பொத்திக் கொண்டார்கள்.

ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜுக் ஆகிய ருசிய வரலாற்றாசிரியர்கள் மத்தியக் கமிட்டியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆய்வு செய்து, தமது முடிவுகளை 1990லிருந்து வரலாற்று அறிவியில் ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் வெளியிடத் துவங்கினர்; ஆனால் அவற்றை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க கண்டு கொள்ளவே இல்லை. இந்த வரலாற்று ஆய்வு முடிவுகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் ஒரு விடயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதாவது ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட பொய்யுரைக்கப்பட்ட சாவுகள், சிறையிலடைப்புகள் பற்றிய சுதந்திரச் செய்தி ஊடகங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் வெறுமே ஊதிப் பெருக்கப்பட்ட புளுகுகள்தாம் என்பதை நிரூபித்தன. இதன் காரணமாகவே ஆய்வு முடிவுகளின் உள்ளடக்கத்தை அவை பிரசுரிக்கவே இல்லை; இருட்டடிப்புச் செய்தன. ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் பெருந்திரள் மக்கள் கண்டறியாத, சிறிய எண்ணிக்கையிலான அறிவியல் ஆய்வுப் பத்திரிக்கைகளில் மட்டும் வெளிவந்தன.

தோழட் ஸ்டாலின்

தோழர் ஸ்டாலின்

முதலாளியச் செய்தி ஊடகங்கள் போடும் வெறியாட்டத்தோடு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் போட்டி போடுவது மிகமிகக் கடினமானது; எனவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மக்கள் திரளின் பல பிரிவினரிடையே கான்குவஸ்டும் சோல்ஜெனித்சினும் தொடர்ந்து ஆதரவு பெற முடிகிறது. மேற்குலகில் கூட, ஸ்டாலினுடைய தண்டனை அமைப்பு முறைகள் என்று சொல்லப்படுவதின் மீதான ருசிய ஆராய்ச்சியாளர்களுடைய அறிக்கைகள் பத்திரிக்கைகளின் முன் பக்கங்களாலும் தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்புகளாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஏன்? ஏன் என்பதற்கான பதிலை கம்யூனிச எதிரிகளும் அறிவர்; கம்யூனிஸ்டுகளும் அறிவர். இனி, அறிய வேண்டியவர்கள் மக்கள் தான்!

(கட்டுரையின் மூலம்: சுவீடன் நாட்டின் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புரட்சியாளர்கள்) உறுப்பினர் மரியோ சூசா, “நார்த்ஸ்டார் காம்பஸ்’ என்ற வட அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஃபிராண்டியர் என்ற ஆங்கில வார இதழ் (ஜனவரி 915, 2000) அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ததில் இருந்து சில விளக்கங்கள் சேர்க்கைகளுடன் இத்தொடர் மொழி பெயர்க்கப்பட்டது.)

மாணிக்கவாசகம்
மார்ச் மே ஜூன்  2000

புதிய கலாச்சாரம்.

தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்

“ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஓர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கெதிரான வர்க்கப் போராட்ட்த்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசிய போராட்ட்த்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கு அருகில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும்”.  இதுவே மார்க்சிய அடிப்படை. – தத்துவ மேதை அதிரடியான்.

பாசிசத்தில் மார்க்சியம் தேடும் தத்துவ மேதை அதிரடியான் என்கிற நபர் கீற்று இணைய தளத்தில் அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள் ன்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். புலி ரசிகனுடைய மனப்பான்மையிலிருந்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்புகளை அவதூறு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்த நபர் இதே கீற்று இணையத்தில் ஏற்கனவே ஒரு கட்டுரையை
எழுதியுள்ளார். தை பொருட்படுத்தி பதிலளிப்பதற்கு முற்றிலும் தகுதியற்றதொரு அவதூறு கதம்பம் என்பதால் நாம் அதை அப்போது சட்டை செய்யவில்லை. அப்படியானால் இந்த கட்டுரை பொருட்படுத்தத்தக்கது என்று கருதிவிட வேண்டாம். இது அதற்கும் மேலான புலி பற்றிய க‌ற்பனாவாத சவடால் கதம்பம். இதற்கு நாம் பதிலளிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று
புலிகள் மீது வைக்கப்படும் குறிப்பான சில விமர்சனங்களுக்கு இவர் அரைகுறையாகவும், சப்பைக்கட்டு கட்டும் விதமாகவும் பதிலளித்திருப்பதை அம்பலமாக்க வேண்டும் என்கிற நோக்கம்.

இரண்டு
புலிகளை யார் விமர்சித்து பேசினாலும், எழுதினாலும் அவர்களை தமிழின விரோதியாகவும், சிங்கள கைக்கூலியாகவும் சித்தரித்து அவதூறு செய்யும் தமிழினவாத கும்பலின் நேர்மையற்ற அரசியலை அம்பலமாக்குவது.

இந்த இரண்டு காரணங்களிலிருந்து மட்டுமே இந்த காழ்ப்புணர்ச்சி கதம்பத்திற்கு எமது மறுப்பை முன் வைக்கிறோம்.

சிங்கள இனவெறி அரசையோ அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியாவையோ, உலக நாடுகளையோ கண்டிக்க வக்கற்ற கூட்டம் என்று தமது கட்டுரையை துவங்குகிறார் அதிரடியான்.

யார் வக்கற்ற கூட்டம் ?

இந்தியாவே போரை நிறுத்து!

இந்தியாவே தலையிடு!

இந்தியாவே ஈழத்தை அங்கீகரி!

என்று இந்தியாவிடம் பிச்சை கேட்ட தமிழ்தேசிய அமைப்புகள்(நேரடியாக மற்றும் மறைமுகமாக) சோனியா காந்தியிடம் மடிபிச்சை கேட்டும், ஒபாமாவின் மனிதாபிமான உணர்வுக்கும், கருணாநிதியின் தமிழின உணர்வுக்கும் கோரிக்கைகள் வைத்தும், மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு பார்ப்பன ஜெயலலிதாவை நம்பச்சொன்னதும் யார்? ம.க.இ.க வா? தமிழ் தேசிய கூட்டமா ?

யார் வக்கற்ற கூட்டம் ?

ஓட்டுப்பொறுக்கிகளை, அதுவும் ஜெ போன்ற பாசிஸ்டுகளை கூட தாஜா செய்து ஈழத்தை பெற்றுவிடலாம், அல்லது அங்கே போரையாவது தடுத்து நிறுத்தலாம் என்கிற அளவுக்கு அரசியல் மூடர்களாக இருக்கும் தமிழினவாதிகளுக்கு ம.க.இ.க புலிகளின் இராணுவாதத்தை, சுய அழிவுப்பாதையை நேர்மையாக விமர்சித்தால் எமது அமைப்புகளையும், பத்திரிக்கைகளையும் பார்ப்பனீயம் என்றும் பார்ப்பன கும்பல், கைக்கூலிகள் என்றும் இந்த கருப்பு பார்ப்பன கும்பல் அவதூறுகளை அள்ளி வீசுகிறது. அவற்றுக்கு பதிலளித்தாலோ, கேள்விகளை எழுப்பினாலோ, நேர்மையாக விவாதிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டு அதே அவதூறுகளை திரும்பத் திரும்ப வாரி இறைக்கிறது.

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று திரு.அதிரடியானே ஒப்புக்கொள்கிறார். சரி புலிகள் மீதான ம.க.இ.க வின் விமர்சனம் அவதூறு என்றால், அது தவறு என்றால் உங்களுடைய விமர்சனம் தான் என்ன? எந்த தமிழ்தேசிய அமைப்பு இதுவரை புலிகளை விமர்சித்துள்ளது? அவற்றை எங்கே பதிவு செய்திருக்கிறீர்கள்?

கடந்த காலத்தில் களத்தில் நிற்பவர்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். தற்போதோ மரணித்தவர்களை விமர்சிக்க கூடாது என்கிறார்கள்.

தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும், போர்க்குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும், லட்சியத்துடனும் நீடித்தவர்கள் சிலரே ஆனால் புலிகள் அவ்வாறின்றி, இறுதி வரை உறுதியுடன் இருந்தனர் என்கிறார்.

அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. மற்ற அனைவரையும் கொன்று ஒழித்தது தான். துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். சோசலிசம் பேசுகிற புலி புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகளையும் கூட கொன்றொழித்து தமது லட்சிய உறுதியையும், போர்க்குணத்தையும் நிலை நாட்டினார்கள்..

புலிகளுக்கு அரசியல் கண்ணோட்டம் இருந்தது, அவர்கள் அரசியலையும் முக்கியப்படுத்தி தான் இயக்கத்தை கட்டி முன்னெடுத்தார்கள் என்று பிரச்சாரம் செய்யும் பலரும் புலிகள் எந்த முறையில் அரசியலை முன்னெடுத்தார்கள் என்று விளக்குவதில்லை.

மார்க்சிய அமைப்பாக அதிரடியான் முன்னிறுத்தும் புலிகள் எப்போதாவது மார்க்ஸியத்தை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. ஆனால் அவர்களுடைய வேலைத்திட்டப்படி அவர்களின் லட்சியமாக இருந்தது சோசலிச தமிழீழம் தான் என்கிறார். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கட்சித் திட்டம்என்று ஏட்டில் எழுதி வைத்துக்கொள்ளலாம். அதை கடைபிடிக்கிறார்களா அல்லது நடைமுறைப்படுத்தப்படுத்துகிறார்களா என்பது தானே முக்கியம்.

சோசலிச திட்டமுள்ள ஒரு கட்சி மக்களை அரசியல் படுத்த வேண்டும். புலிகள் அதை செய்தார்களா என்றால் இல்லை. ஆனால் புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தியதன் காரணமாகத்தான் புலிகள் கை காட்டியதும் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்துள்ளது என்கிறார். புலிகள் மக்களை அரசியல் ரீதியாக வளர்த்திருந்தால் அவர்கள் தமது தேசத்தை விட்டு அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓடியிருக்க மாட்டார்கள். புரட்சியை தமது சொந்த தோள்களில் தாங்கி நின்றிருப்பார்கள். ரசியாவிலும், சீனாவிலும் புரட்சி நடந்த போது வெளி நாடுகளில் இருந்தவர்கள் கூட சொந்த நாட்டிற்கு ஓடி வந்து செஞ்சேனையில் இணைந்து கொண்டார்கள். ஆனால் ஈழத்திலோ ஒரு பக்கம் சிங்கள இனவெறி அரசுக்கு பயந்தாலும் இன்னொரு பக்கம் எங்கே வலுக்கட்டாயமாக புலிப்படைக்கு இழுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்கிற அச்சத்திலும் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். இது தான் புலிகள் மக்களை அரசியல்படுத்திய லட்சணம்.

அவர்கள் மக்களை அரசியல் படுத்தியிருந்தால் மாமேதை மார்க்ஸ் சொன்னதை போல கருத்துக்கள் மக்களை பற்றிக்கொண்டால் அது பவுதீக சக்தியாகிறது. என்பது நடந்திருக்க வேண்டும். சோசலிச தமிழீழ குடியரசை அமைக்க புறப்பட்ட புலிகள் மக்களை மக்களாக நடத்தவில்லை. மந்தைகளாகவே நடத்தினர். எங்கும் மக்களை முன்னிறுத்துவதில்லை. மாறாக தங்களை முன்னிறுத்தும் இராணுவ வாதத்தையே நம்பி இருந்தனர். அவர்களது முழக்கத்தில் கூட – புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று தங்களை முன்னிறுத்தும் ஜனநாயகவாதிகள் புலிகள் (பி றகே இது தமிழரின் தாகம் – தமிழீழ தாயகம் என்று மாறியது). அரசியல் எனும் வலிமை மிகு ஆயுதம் தரிக்கப்பட்ட கூட்டமாக அந்த மக்கள் மாற்றப்பட்டிருந்தால் சிங்கள பாசிசம் ஒழித்துக்கட்டப்பட்டிருக்கும். இது தான் உண்மை மாறாக புலி புகழ் பாட வேண்டும் என்பதற்காக கதை புனையக் கூடாது. மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் எந்த ஒரு அமைப்பும் அரசியலை தான் தலையாயதாக, முதன்மையானதாக வைக்க வேண்டும். அரசியலின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் இருக்க வேண்டும். ஆனால் புலிகளிடமோ அரசியல் தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட்து.

எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறும் புலித் தலைமை, “ஆயுத போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியல் போராட்ட வடிவமாகவே கொள்கிறது என்றும் கூறுகிறது.

இதன் மூலம் ஆயுதப்போராட்டம் தான் அதியுயர்ந்த அரசியல் போராட்டம் என்கிற புலிகளின் இராணுவவாதமும், மக்களை மந்தைகளாக நடத்தியதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அதே போல ம.க.இ.க “அரசியல் போராட்ட்த்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுத போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அநுபவத்தினூடாக ஆயூதப்போராட்ட்த்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் அதை மாவோயிஸ்டுகளோ புலிகளோ செய்தால் அவர்களை தூற்றுகிறது என்கிறார். இந்த வாக்கியத்திலிருந்து அதிரடியான் என்ன புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. அந்த பத்தினுடைய இந்த வரிக்கு என்ன பொருள் ஆயூதப்போராட்ட்த்தின் அவசியத்தை மக்களை உணரச் செய்ய வேண்டும் ஆயுதங்களை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ தூக்கிக் கொண்டு போய் வாங்கிகொடுக்க புரட்சி ஒன்றும் குச்சி மிட்டாய் அல்ல, அதை மக்களே தமது சொந்த கரங்களில் செய்ய வேண்டும். மக்களை வழி நடத்துவது மட்டும் தான் நம்முடைய வேலை. மக்களை மந்தைகளாக்கும் சாகசவாதத்தை கேள்விக்குள்ளாக்கி புதிய ஜனநாயகம் வெளியிட்ட நூலின் வரிகளுக்கு அர்த்தம் என்ன என்பதை கூட புரிந்து கொள்ளாதவர் தமக்கும், புலிக்கும் எதிரான வரிகளை கொண்டு வந்து நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

புலிகளை சர்வாதிகாரிகள் என்று சொல்லிவிட்டு பின்னர், அவர்களுக்கே வீரவணக்கம் வைத்தது ம.க.இ.க வின் ஊரை ஏமாற்றும் வேலை என்கிறார் அதிரடியான். புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறோம், மாறாக வீரமரணம் என்று தான் குறிப்பிட்டுள்ளோம். அதுவும் தப்பித்து உயிர் பிழைக்க நினைத்த தலைமைக்கு அல்ல, கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம். புலி தலைமை துரோகம் செய்வதும், காட்டிக்கொடுப்பதும் பற்றிய அனுபவம் நமக்கு ஒன்றும் புதியதல்ல. ராஜீவ் கொலைக்கு பிறகு இரண்டு வாரங்களில் இலண்டன் பிபிசி பேட்டியில் அன்றைக்கு உயிருடன் இருந்த கிட்டு ராஜீவ் கொலையை நட்த்தியது ம.க.இ.க தான் என்று கேவலமான ஒரு பொய்யை சொன்னார். ஆனாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. அடுத்த புதிய ஜனநாயகம் இதழிலேயே புலிகளின் இந்த இழிவான நடவடிக்கையை கடுமையாக எச்சரித்து எழுதினோம். அவர்கள் அரசியல் நேர்மையை என்றுமே மீட்டெடுக்கவில்லை.

புலிகள் வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல என்றும், புலிகள் 80-களிலேயே சோசலிச பாதையைத் தேர்ந்தெடுத்ததாக புளங்காகிதமடையும் இவர்களின் மார்க்ஸிய பார்வையை கண்டு நமக்கு மாரடைப்பே வந்து விடும் போல் இருக்கின்றது.

தேசிய இன விடுதலை பற்றிய மார்க்சிய புரிதலுடன் தான் புலி இயக்கம் கட்டியமைக்கப்பட்டது என்கிறார் அதிரடியான். அவர்களுடைய மார்க்சிய தத்துவத்தையும் அதை நடைமுறை படுத்திய விதத்தையும் இப்போது பார்ப்போம்.

ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லாத நிலையில் ஒடுக்கப்படும் இனம் எப்படி அவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியும் என்கிறார் அதிரடியான். இவருடைய கூற்றுப்படி புலி இயக்கம் மார்க்சிய அடிப்படையை கொண்டிருந்தது என்பது உண்மை எனில்(?) அது தமிழ் பாட்டாளி வர்க்கம். ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்கம் சக்திகள் இல்லை எனில் (அவ்வாறு சுத்தமாக இல்லாத நிலை ஒன்றும் இல்லை) இனவாதத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒடுக்கும் இனத்தின் பாட்டாளி வர்க்கத்தை விழிப்படைய செய்து பாட்டாளி வர்க்க உணர்வை, வர்க்க உணர்வுள்ள தமிழ் பாட்டாளி வர்க்கம் தான் ஊட்ட வேண்டும். ஆனால் இங்கு அதிரடியானுடைய வரலாற்றுப்பொருள் முதல்வாத ஆய்வின் படி ஒடுக்கும் சிங்கள இனத்தில் அவ்வாறான புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவாகாமல் போனதற்கும், அதற்கு உணர்வூட்டமுடியாமல் போனதற்குமான காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த காரணம் என்னவெனில், சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான். இவ்வாறான (எவ்வாறான என்பதை அவர் விளக்கவில்லை) உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் செய்ததில்லை, இனிமேல் செய்யப் போவதுமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இவருடைய மார்க்சிய ஆய்வின்படி இனத்திற்கு ஒரு உளவியல் இருக்கும் போலிருக்கிறது. அப்படியானால் ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் உளவியல் என்ன? பாசிசமா?

மேற்கண்டது தான் தத்துவம் என்றால் கீழ் உள்ளது தான் நடைமுறை.

சிங்கள இன மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்கிற புலிகளின் 1980 வரையறுப்பிற்கு பிறகுதான், புலிகள் 18ஆம் காலனி, அனுராதாபுரம், அரண்தலவா போன்ற இடங்களில் சிங்கள வியாபாரிகளையும், சிங்கள குடும்பத்தினரையும் கொன்றிருக்கின்றனர். சிங்கள குடியிருப்புகளில் புகுந்து பல மணி நேரம் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள். அதாவது கிராமங்களில் புகுந்து மக்களை கொல்வதன் மூலம் இலங்கையை பேச்சுவார்த்தைக்கு இழுக்கலாம் என்கிற ராவினுடைய திட்டத்தை, தூண்டுதலை பின்னாட்களில் சீரழிந்து போன PLOT, EPRLF போன்றவர்கள் கூட செய்ய மறுத்த வேலையை பணத்தையும், ஆயுத்த்தையும் பெற்றுக்கொண்டு புலிகள் செய்தார்கள். கடைசியாக 2000 மாவது ஆண்டு செப்டம்பர் மாத்த்தில் சிலாவ் பூந்த், கோகைலா ஆகிய கிராமங்களில் புகுந்து 60 பேரை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார்கள். இதில் 14 பேர் சிறுவர்கள்.

மார்க்சியத்திற்கு ஏற்ற பொருத்தமான நடைமுறை தான்.

சிங்கள இனத்தில் சரியான பாட்டாளி வர்க்கம் இல்லை. அதனால் இனவாதத்தை முன் வைத்து போராடியதாக இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

சுயநிர்ணய உரிமையை வெறும் பிரிந்து செல்லும் உரிமையாக குறுக்கும் தமிழ்தேசியர்கள் தான் இதையெல்லாம் மறைத்து புலிகளை மார்க்சிய இயக்கம் என்று காட்டமுனைகின்றனர்.

சிங்கள மக்களுடன் புலிகள் இணைந்து போராட முன் வந்தார்கள் என்று கூறும் தமிழினவாதிகள், பாட்டாளி வர்க்க சக்திகளுக்கெதிரான புலிகளின் செயல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது.

புலிகள் தமிழ் மக்களையும் வென்றெடுக்கவில்லை, சிங்கள பாட்டாளி வர்க்கத்தையும் வென்றெடுக்கவில்லை. ஆனால் பணத்தைக்காட்டி தனக்கு ஆதரவாக சிங்கள இராணுவ அதிகாரிகளை வென்றெடுக்கும் கலையை மட்டும் கற்றிருக்கிறது. இது வெட்கக்கேடாக இல்லை. இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகளை உன்னால் கொண்டு வர முடிகிறது என்றால் சாதாரண மக்களை ஏன் கொண்டுவர முடியவில்லை ?

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் கூறுவதற்கு அதிரடியான் கீழ்கண்டவாறு திரித்து எழுதியுள்ளார்.

சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவகம் புரிய வேண்டுமாம். இதை தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது.

இந்திய உளவு அமைப்புகளிடம் சமரசம் செய்து கொள்ளச் சொல்லி புலிகளுக்கு ம.க.இ.க வா பாடம் நட்த்தியது? அல்லது ம.க.இ.க வுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று புலிக்கு ராபாடம் நடத்தியதா? அவர்களுக்கு (RAW) வுடன் இருந்த கள்ள உறவிற்கு யார் காரணம்?

நாங்கள் காரணமா? இல்லை அவர்களுடைய மார்க்சிய தத்துவம் தான் காரணமா?

அதே போல பொய்க்கு மேல் பொய் சொல்கிறது இந்த இனவாத சந்தர்ப்பவாதிகள் கூட்டம். ம... ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்துகிறதாம் ம.க.இ.க எங்கும் அப்படி வலிறுத்துவதில்லை தமிழினவாதிகளே, இதை சுய நிர்ணய உரிமை என்கிற வார்த்தையை காதால் கூட கேட்க விரும்பாத சி.பி.எம் போலிகளிடம் போய் சொல்லுங்கள். ம.க.இ.க தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையே ஆதரிக்கிறது. இந்த சுயநிர்ணய உரிமையை பிரிந்து செல்லும் உரிமையுடன் ஒன்றுபடுத்தியும், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதை ஒன்றுபட்ட இலங்கையாக திரித்தும் பேசுவதன் மூலம் நம்மை எதிரியாக்குவது தான் இந்த திரிபுவாத, குறுந்தேசிய வெறியை கிளப்பும் கும்பலின் நோக்கமாகும்

நாம் இந்திய மாயையிலிருந்து விடுபடவில்லையாம், எனவே விடுபட வேண்டுமாம். நாங்கள் இந்திய மாயையிலிருந்து விடுபடுவது இருக்கட்டும், நீங்கள் ஆரிய மாயையிலிருந்து எப்போது விடுபடுவீர்கள்? இதே ஆரிய கும்பல் தான் முப்பது வருடங்களுக்கு முன்பு புலிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியது. அதற்கான காரணம் என்ன? எந்த வன்மமும் வர்க்க நலன்களுக்கு, பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்ட்தல்ல. அப்போது இந்தியா புலிகளுக்கு உதவியதும், இப்போது சிங்களவர்களுக்கு உதவியதும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்குட்பட்டே நடக்கிறது. ஆரிய சதி, மலையாளிகள் சதி என்பதெல்லாம் வெறும் தமிழின வாத உளரல்களே. புலி தலைமையின் மானசீக தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்பதை இவர்கள் புலிமயக்கத்தில் மறந்து போனார்களோ?

ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவகாலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்து வந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாகவும், கெளரவத்துடனும் வாழ விரும்புகிறார்கள். அவர்களது அரசியல் பொருளாதார கொள்கையை அவர்களே நிர்ணயித்து கொள்ள விரும்புகிறார்கள் என்று புலிதலைவர் பிரபாகரன் குறிப்பிட்டார்.

ஒரு தேசியத்தின் மையமான விடயம் என்ன?

அது எப்போதும் எங்கும் தேசிய பொருளாதாரம். தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், ஒரு நிலத்தொடர் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மீது கட்டமைக்கப்பட வேண்டும். தேசியத்தின் மையமான விடயத்தை விட்டு தேசியத்தை விளக்கினால் அது தேசிய பொருளாதாரமில்லாத ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடிமையாக வாழ்வதையே குறிக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வு என்பது எதனை குறிக்கிறது எனில் ஏகாதிபத்திய பொருளாதாரம். ஏகாதிபத்தியத்தின் அடிப்படையிலான பண்பாடு, ஈழ மண்ணில் ஊடுருவதை எதிர்த்து, அதற்கெதிரான அரசியல் பொருளாதாரத்தை புலி கட்டியமைத்ததா எனில் இல்லை. ஆயுதங்களை ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து கடத்தியது போல, ஏகாதிபத்தியத்திய பொருளாதார கொள்கையை தான் தங்களுடைய பொருளாதாரமாக கட்டமைக்க முயன்றனர்.

சாதியை புலிகள் பேசவில்லையா என்று அதிர்ந்து போய் ஆச்சர்யமாக கேட்கும் தமிழின வாதிகள், சாதியை ஒழிக்க புலிகள் ஒரே சாதியில் யாரும் திருமணம் செய்தல் கூடாது என்று சட்டம் விதித்திருந்தனர் என்று கூறுகின்றனர்.

சரி, மதிவதனி எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதியா??

சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன.

ஏட்டளவில் சோசலிஸத்தை வைத்து கொண்டு வெளி உலகத்தில் ஈழ சோசலிஸ மாயையை உருவாக்கியது போலவே தான், சாதியை ஒழிப்போம் என்கிற புலி கோசமும். சாதியை ஒழிக்க நீண்டகாலத் திட்டம் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்று அத்தோடு முடிப்பது ஏன்? அதற்கான திட்ட்த்தை உண்மையில் புலிகள் வகுத்தார்களா? இல்லையா ?

தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதிவெறி முத்திரை குத்தப்படுகின்றது என்றும் இதற்கான வேலையை தமிழகத்தின் ஏஜெண்டாக தோழர் மதிமாறனை திட்டகுழுவில் வைத்திருப்பது போலவும் இவர்கள் கூறுகிறார்கள். இதுவரை அவர் தனது வலைதளத்தில் புலிகளை பற்றி விமர்சித்தது கூட கிடையாது. இருந்தும் ஏன் அவர்களுக்கு மதிமாறனை பிடிக்கவில்லை என்றால் தமிழ் இனவாதிகளின் சாதிய முகத்தை டார் டாராய் கிழித்து தமிழ் என்பதற்கு உண்மையான பொருளான சாதியை சுட்டிக் காட்டுகிறார். அதுவும் அம்பேத்கர், பெரியாரின் துணை கொண்டு தமிழினவாதிகளின் கருப்பு பார்ப்பனிய முகத்தை அம்பலப்படுத்துகிறார். இதற்காக சாதிவெறியர்கள் கோபப்படுவது இயற்கையே. ஆனால் தன்னை போராளிகள் என்றும், புரட்சியாளர்கள் என்றும் அடையாளப்படுத்தி கொள்பவர்கள் கோபப்படுவது உண்மையிலேயே நல்ல நகைச்சுவை.

அம்பேத்கர் சட்டக்கல்லூரி சாதி மோதல்களுக்கும் மற்றும் தமிழகம் முழுமைக்குமுள்ள சாதி பிரச்சனைகளுக்கும் உளவுத்துறைதான் காரணமா? பார்ப்பனியம் காரணமில்லையா?

தியாகி முத்துகுமரனின் அனுமானத்தை பிடித்து கொண்டு சாதிய பிரச்சனைகளை உளவு துறையின் மேல் போட்டு விட்டு லாவகமாக தன்னை விடுவித்து கொள்ள பார்க்கிறார்கள் இந்த தமிழ் பார்ப்பனியவாதிகள். தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் உளவு துறையினரின் சதிதான் எனில் உங்கள் பார்வையில் தென் மாவட்டங்களில் 60களில் சாதிய கலவரத்தை தூண்டிய முத்துராமலிங்கம் உளவு துறையின் கைக்கூலியா?

சாதியை வைத்து தமிழரின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக கூறும் தமிழினவாதிகள், தியாகி முத்துகுமரனின் இரங்கலுக்கு அவரின் சாதியை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனவே, இதை எதிர்த்து சாதியின் முத்திரையை இந்த தியாகிக்கு குத்த வேண்டாம் என்று சிறு முணகலாவது முணகினார்களா உண்மையான தமிழினவாதிகள்?

இவர்கள் சொல்வது போல உண்மையிலேயே தமிழ் மக்கள் சாதி மத வேறுபாடின்றி நாம் தமிழர் என அணி திரள்கிறார்களா? இவர்கள் கனவிலிருந்து விழிப்பதுமில்லை, மக்களை வர்க்க உணர்வுடன் விழிப்படையச் செய்வதும் இல்லை.

முஸ்லீம்களுடன் நல்லிணக்கம் பேணியதாக புலிகளை பாதுகாக்கும் இவர்களை பார்த்து ஏட்டளவில் இருந்த சோசலிச குடியரசு திட்டத்திலும், தனி இனமாக அங்கீகரிகத்த(!) முஸ்லீம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையையோ, பிரதேச தன்னாட்சியையோ உறுதிசெய்ய வில்லையே ஏன் என்று கேட்டால் பதிலில்லை.

எங்களைப்போன்ற இளைஞர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படும் அதிரடியான் அவர்களே! இளைஞராகிய நாங்கள் சிந்திப்பதால் தான், சந்தி சிரிக்கும் உங்கள் அமைப்பில் இல்லாமல் உண்மையான மார்க்சிய அமைப்பில் இருக்கிறோம்.

தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி 2

நம் அளித்த பின்ணூட்டம் முன்று நாட்களுக்கு
பிறகு தற்போது விடுதலையாகியுள்ளதை
தொடர்ந்து அதையும் அதற்கு அவருடைய‌
பதிலையும் நமது பதிலையும் இங்கு பதிப்பிக்கிறோம்.

ஸ்டாலின் குருவுடன் அசுரன் நடத்திய‌
விவாதத்திற்கான சுட்டி கீழே.

http://tamilparai.blogspot.com/2009/08/blog-post.html

தமிழ்தேசியவாதி ஸ்டாலின்குருவுடன் ஒரு விவாதம்.

அவருடைய தளம்.

http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_12.html#comments


சர்வதேசவாதிகள் said…
நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?
August 20, 2009 1:15 AM


ஸ்டாலின் குரு said…

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?///

யார் அந்த இந்திய தேசியவாதிகள்?

இந்திய ஆளும் வர்க்கமா?

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_6001.html

இந்த பதிவில் ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்

என்னும்போது உங்கள் அமைப்போடு தொடபுபடாத வேறு
ஒரு தலைப்பை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்
August 20, 2009 11:56 PM


ஸ்டாலின் குரு said…

நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.///

இழிவுபடுத்துவதை கண்டு கோபம் கொள்வது
வேறு,ரசிப்பது வேறு,இதில் இரயாகரன் எந்த
பகக்த்தில் இருந்து அந்த பதிவை பதிந்திருப்பார்
என்பதை புரிந்துகொள்வதில் ஒன்றும் சிரமமில்லை
எமக்கு
August 21, 2009 12:01 AM

சர்வதேசவாதிகள் said…

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌

அவை இருக்கட்டு

இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?

அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?

இதற்கு பதில் சொல்லுங்கள் குரு ?

August 23, 2009 4:00 AM

ஸ்டாலின் குரு said…

இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?

இல்லை

அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?//

அணுகினார்கள் என்பது உண்மை அதற்காக என்ன
விலை கொடுக்க முன்வந்தார்கள் என்பதுதான் கேள்வி
August 24, 2009 12:08 AM


ஸ்டாலின் குரு said…

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌///

எமது பார்வைக்கு, உங்கள் தலைவரையே இந்த கதிக்கு ஆளாக்கிய எங்களால்
உங்களையும் போராட்டததையும என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை
புரிந்துகொள்ளுங்கள் என்று தமிழ் மக்களை மிரட்ட சிங்கள ராணுவம் பயன்படுத்திய
இந்த விசயத்துக்கு இரயாகரனும் துணை போகிறார் என்று தெரிகிறது என்ன செய்ய
August 24, 2009 12:15 AM


சர்வதேசவாதிகள் said…

உங்களுக்கான  பதிலை தோழர் ரயாகரன்  எமது தளத்தில் பின்ணுட்டமாக போட்டுள்ளார் இதோ அந்த பதில்‌.

தமிழ் அரங்கம்

11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009

தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.பி.இரயா

August 24, 2009 1:52 AM

சர்வதேசவாதிகள் Said

இந்தியாவை புலிகள் தமது நட்பு சக்தியாக கருதவில்லையா ?
நெஞ்சே வெடித்து விடுவதைப் போன்ற கடுமையான அதிர்ச்சி
தரும் செய்திகளையெல்லாம் கூட நீங்கள் மிகவும் சிம்பிளாக‌
தருகிறீர்கள் !

புலிக்கு தத்துவ விளக்க நூல் எழுதியதும் அதையே அனைத்து இடங்களிலும் பேசியதும் நீங்களா இல்லை ஆன்டன் பாலசிங்கமா ?
புலிகளுடைய அரசியலுக்கு அவர்களுக்கே புரியாத‌ புதிய விளக்கம் தருகிறீர்கள்.

உங்க‌ளுடைய கூற்றுக்கு என்ன ஆதார‌ம் ?

புலிகள் இந்தியாவுக்கு வால் பிடித்தார்கள் என்பதை ஆன்டன் பாலசிங்கத்தினுடைய பேச்சிலும் பிரபாகரனுடைய மவீரர் நாள்
உரையிலும் நீங்கள் கேட்கலாம்.

இதோ இணைப்புகள்.

http://www.orunews.com/?p=2793

http://www.pulikalinkural.com/

அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?

விடுதலைப் புலிகள் மாவீரர் உரை இந்தியா நட்பு சக்தி

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml

ஸ்டாலின் குரு said…
///தமிழ் அரங்கம்
11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்

இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.

பி.இரயா///

நல்ல மனநல மருத்துவரை பார்க்கச் சொல்லவும்

August 25, 2009 12:12 AM
ஸ்டாலின் குரு said…
அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?///சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது

)))))))

August 25, 2009 12:18 AM
ஸ்டாலின் குரு said…
ஏகாதிபத்தியத்தை புலிகள் நட்புச்சக்தியாக
கருதினார்களாம் அடடா என்ன கண்டுபிடிப்புஈழத்தின் புல்மோட்டையில் இருந்து இலிமனைட்
தாதுப்பொருளை ஏற்றிகொண்டு சென்ற அமெரிக்க
கப்பலை கடற்புலிகள் தாக்கி அழித்ததை தொடர்ந்தே
புலிகளை அமெரிக்கா தடை செய்திருந்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே உள்ள
முரண்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளவே
புலிகள் விழைந்தார்கள்.

August 25, 2009 12:26 AM
ஸ்டாலின் குரு said…
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.htmlஅப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறது

உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.

August 25, 2009 12:35 AM
ஸ்டாலின் குரு said…
மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்

August 25, 2009 12:38 AM
சர்வதேசவாதிகள் said…
/////////சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது.////////////

உண்மை தான் ஆனால் மாவோ போய் நிக்சனை சந்திக்கவில்லை மாறாக நிக்சன் தான் சினாவிற்கு வந்த போது மாவோவை சந்தித்தார்.
மேலும் மாவோ நிக்சனிடம் போய் எங்களுக்கு மக்கள் சீனத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றோ,அல்லது எமது புரட்சிக்கு கரம் நீட்டி உதவுங்கள் என்றோ ம‌ன்றாடிக்கொண்டிருக்கவில்லை.

அமெரிக்கா என்பது யார்,அதனுடைய தன்மை என்ன அது சீன மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக மக்களுக்குமே எதிரி என்பதை மாவோ தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்.
அதன் படி தான் அவர் அமெரிக்காவை அனுகினார்.

பிரபாகரன் எங்கேயாவது அமெரிக்காவுக்கு எதிராக எழுதியிருக்கிறாரா அல்லது பேசியிருக்கிறாரா ? அப்படி எழுதியோ பேசியோ இருப்பின் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாரா ?

August 25, 2009 10:47 PM

சர்வதேசவாதிகள் said…
///////////////////////////////////////////////////////////////////////
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.html

அப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறது
உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.
////////////////////////////////////////////////////////////////////////

கேட்கிற கேள்விக்கு நாணயமா பதில் சொல்லிப்பழகுங்க‌
மயக்கம் உடனே தெளிந்து விடும்.

நேற்று எழுதியது,முந்தின நாள் எழுதியது எல்லாம் எதற்கு
விவாதம் நடப்பது இன்று,அதே பதிலை இன்றைக்கு சொல்லுங்களேன்.
ஏன் ஒரு கருத்தை ஒரு முறைக்கு மேல் சொல்ல மாட்டீங்களோ ?

உங்களுடைய தேவயற்ற மொக்கை பதிலுக்கு
பதில் சொல்லி நான் விவாதத்திற்கு வெளியே செல்ல‌
விரும்பவில்லை.

அதனால நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க.

August 25, 2009 10:59 PM
//////////////////////////////////////////////////////////////////////////
மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்

தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்.
//////////////////////////////////////////////////////////////////////////

அஹா என்னே ஒரு ஜனநாயக பண்பு.
எமது அமைப்பை பற்றி அவதூறாக‌
எழுதுவாராம்,அதற்கு பதில் சொல்வதற்கு
நாம் வர முடியாதபடி தடை போடுவாராம்.
இதுவே ஒரு போலி ஜனநாயக நாடு இந்த நாட்டில்
ஒரு தமிழ்தேசியவாதி வாழ்ந்தால் ஜனநாயகம் பற்றி
கேட்கவா வேண்டும்.

நல்லது
இருக்கட்டும்,இருக்கட்டும்..
கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க.
எல்லோரும் பார்த்திட்ருக்காங்க 🙂

August 25, 2009 11:05 PM

இதற்க்கு பிறகு இன்று வரை (27.08.09) ஒரு பதிலும் இல்லை.

.