மனித உரிமை பாதுகாப்பு மையம் – சென்னை கிளை துவக்க விழா

lawyers

நிகழ்ச்சி நிரல் :

நாள் : 08.08.2009, சனிக்கிழமை.

நேரம் : மாலை 5 முதல் 8.

இடம் : AK நாயக் பவன், 3வது தளம், 2வது லேன், பீச் ரோடு, GPO பின்புறம், சென்னை-1.

வரவேற்புரை :

 • தோழர் பொற்க்கொடி, வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.

தலைமை உரை :

 • தோழர் ராஜு, வழக்குரைஞர் – விருத்தாச்சலம், மாநில  ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு.

சிறப்புரை :

 • தோழர் திருமலைராசன், வழக்குரைஞர் – ஈரோடு, முன்னாள் தலைவர் – தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
 • தோழர் சு.ப.தங்கராசு, பொதுச்செயலாளர் – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி (NDLF),  தமிழ்நாடு.

வாழ்த்துரை :

 • தோழர் துரை.சண்முகம், கவிஞர், மக்கள் கலை இலக்கிய கழகம்  (PALA).
 • திரு மருதன், எழுத்தாளர்
 • திரு A.நடராசன், மூத்த வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.
 • தோழர் சங்கரசுப்பு , வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம், தமிழ் மாநில தலைவர் – இந்திய மக்கள் வழக்குரைஞர் கழகம்.
 • திரு சகாதேவன், வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றியுரை :

 • தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம், செயலாளர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), சென்னை கிளை.

தொடர்புக்கு :

தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர் ,

5/7,  2வது தெரு,  ராஜாஜி நகர்,

வில்லிவாக்கம்,

சென்னை – 49.

அலைபேசி : 98844 55494

அனைவரும் வருக!!!

————————————————————————————————————–

violence_1violence_2

protest_2

protest_1

17 responses to “மனித உரிமை பாதுகாப்பு மையம் – சென்னை கிளை துவக்க விழா

 1. செம்பியன்

  ம.க.இ.க பார்ப்பன கும்பல் புரட்சி பேச‌ வந்துவிட்டது.
  மருதையன் போடும் தாளத்துக்கு ஆடும் ஆடுகள்
  தமிழ்தேசியத்தை மறுக்கும் இந்திய தேசியவாதிகளே
  தமிழ் இளைஞர்களை இந்திய தேசிய சாக்கடைக்குள்
  தள்ளி நாசமாக்காதீர்கள்.‌

 2. அய்யா, செம்பியன் இந்திய ச்ச்க்கடையில் நாங்கள் விழவில்லை, உங்கப்பன் நெடுமாறன் தான் இந்திராவுக்கு வால் பிடித்தார், அப்புறம் சோவியாவுக்கு வால் பிடித்தார் அது ஒத்து வராமல் போய் தான் புலம்பிக்கொண்டு இருக்கிறார், ஆனால் ஒன்று செயாவுக்கு சோப்பு போடுவதில் மட்டும் நீங்கள் எல்லாரும் ஒரே அணி.

  மனித உரிமை பாதுகாப்புமையத்தின் துவக்க விழாவுக்கு வாழ்த்துக்கள்.

  கலகம்

 3. தமிழ் தேசியம் பேசும் அனைவரும் ம.க.இ.க ஒரு பார்பன கும்பல் எனும் வார்த்தையாலே அவர்கள் பிழைப்பை ஓட்டும் வண்டியை என்று தான் ”பழைய இரும்பு சாமான்,பேரிச்சம் பழ வண்டிக்கு” போட போகிறார்களோ?

  பழ.நெடுமாறன் தமிழ் தேசியவாதியல்ல! நல்ல பிழைப்புவாதி. அதை பற்றி ஏற்கனவே தோழர் கலகம் அவர்கள் குறிப்பிட்டுருக்கிறார்.

  நண்பர் செம்பியன் அவர்களே, ஒரு நபரை எந்த அடிப்படையில் பார்பனர் என்று கூறவேண்டும்.
  அவர் பிறப்பின் அடிப்படை வைத்தா? அல்லது அவர் கொண்ட தத்துவத்தையும், வாழ்வின் நடைமுறையையும் வைத்தா?

  பிறந்த குலம் வைத்து பார்த்துதான் பார்ப்பான் என்று கூறவேண்டும் என்றால் அதுவும் ஒரு மூடநம்பிக்கையே.

  பெரியாரை பின்பற்றும் தமிழ் தேசியம் பேசுபவர்கள், தன்னை முற்போக்காளனாக அடையாளம் காட்டி கொள்வோரின் கூற்றும் இவ்வாறே உள்ளது.

  பெரியாரை பற்றி பேசும் தமிழ் தேசியவாதிகளும் பிறப்பின் அடிப்படை வைத்து பேசும் இதே மூடநம்பிக்கையை தான் பின்பற்றுகிறார்கள்.

  ”பெரியாரை பின்பற்றுபவர்கள்” என்று தன்னை பீற்றிக் கொள்பவர்களே,
  பெரியார் கூறுகிறார் – “அறிவு வளர்ச்சிக்கு பெரும்பாலும் சுற்றுச் சார்பு தான் காரணம். ஒரே தகப்பனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்து பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்த மகன் இந்தியாவில் வளர்ந்த மகனை விடப் பல மடங்கு அறிவு விசாலம் அடைந்தவனா யிருப்பான் என்பது திண்ணம். அவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான்.”

  தோழர் மருதையனை பற்றி பேச, பார்பானியத்து குடைபிடிக்கும் சாதி இந்துக்களுக்கும், தன் சாதியை சட்டை பைக்குள் ஒலித்து கொண்டு தமிழ் தேசியம் பேசும் எந்த சாதி தமிழனுக்கும் அறுகதை இல்லை.அவரின் ஏற்றுகொண்ட தத்துவம், வாழ்வின் நடைமுறையை வைத்து பாருங்கள்.

  அதை விடுத்து ”பார்ப்பான்,பார்ப்பன கும்பல்” என்று வெற்று தனமாக, வேரெந்த அரசியல் விமர்சனத்தையும் கூறாமல் கூப்பாடு போடுவது வரட்டுதனம்.

 4. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆற்றல் மிக்க தோழர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஐயா செம்பியன் அவர்களே!

  பார்ப்பன இந்துத்துவ மோசடி தேசிய மான இந்து தேசியத்தினை ம.க.இ.க. ஆதரித்ததாக ஏதாவது ஒற்றை ஆதாரத்தை உங்களால் காட்டமுடியுமா?

  தவிர பார்ப்பன இந்துத்துவத்தை முறியடிக்காமல் மோதி வீழ்த்தாமல் தமிழ் தேசியத்தை எப்படி வென்றெடுக்கப்போகிறீர்கள்? ஐயா பழநெடுமாறன் ஏதாவது மந்திரத்தில் மாங்காய் பறிக்கும் வித்தை கற்று வைத்திருக்கிறாரா?

  காஷ்மீர், அஸ்ஸாம், மனிப்பூர் என சந்தி சிரிக்கும் இந்தியாவின் தேசியத்தை மக்கள் முன் நேரடியாக அம்பலப்படுத்தும் துணிவு உங்கள் தலைவர்களுக்கு உண்டா?

  இலங்கையில் மட்டுமல்ல நேபாளத்திலும் தனது மோசடிக் கரத்தை துருத்திக் கொண்டிருக்கும் இந்திய தேசியத்தை உங்களால் கவனிக்க முடிகிறதா? நேபாளத்தின் மீதான இந்திய தலையீட்டைக் கண்டித்து உங்கள் தலைவர்கள் பேசக்கூட வேண்டாம் யோசித்ததாவது உண்டா?

  இவை எல்லாவற்றிலும் சமரசமில்லாமல் களத்தில் போராடிக் கொண்டிருப்பது ம.க.இ.க. மட்டும்தான். எமக்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு முன்னால் நீங்கள் பதித்த பார்ப்பன் எதிர்ப்புச் சுவடுகள் ஏதேனுமிருப்பின் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம். பார்ப்பன எதிர்ப்பானாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் ஈழப் போராட்டமானாலும் எமது அமைப்புகள் மற்றவர்களை கேள்விக்குட்படுத்துகின்ற வகையில்தான் செயலாற்றிவருகின்றன. உங்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை. இருப்பினும் உங்களது அவதூறைக் கூட விமர்சனமாகக் கருதியே இப்பதிலை இங்கே பதிப்பிக்கிறேன்.

  உங்கள் நேர்மையான கருத்தைப் பதிலாகத் தாருங்கள் செம்பியன்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

  ’சர்வதேசியவாதிகள்’ தோழர்களுக்கு ஒரு குறிப்பு:

  நீங்கள் மேற்பதிவிட்டுள்ள செய்தியில் ‘வழக்குரைஞர்’ எனும் சொல் தவறாக வழக்குறைஞர் என்று பதிவிடப்பட்டுள்ளது. பிழைகளைச் சரிசெய்யவும்.

  • vrinternationalists

   தோழர் ஏகலைவன்,

   தங்கள் வருகைக்கு நன்றி.

   பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

   – சர்வதேசியவாதிகள்.

 5. பாவெல்

  மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

  திரு செம்பியன்,

  ///ம.க.இ.க பார்ப்பன கும்பல் புரட்சி பேச‌ வந்துவிட்டது.
  மருதையன் போடும் தாளத்துக்கு ஆடும் ஆடுகள்
  தமிழ்தேசியத்தை மறுக்கும் இந்திய தேசியவாதிகளே
  தமிழ் இளைஞர்களை இந்திய தேசிய சாக்கடைக்குள்
  தள்ளி நாசமாக்காதீர்கள்.‌///

  நாங்கள் ம.க.இ.க, மற்றும் அதன் தோழமை அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான்.
  நீங்கள் எந்த அமைப்பு/இயக்கத்தை சார்ந்து இக்கருத்துகளை முன்வைக்கிறீர்கள்???
  உங்களது அரசியல் என்ன என்பதைப்பற்றி தெரியப்படுத்துங்கள். அல்லது அமைப்பு/இயக்கம் சாராமல் தனிப்பட்ட முறையில் கூறுவதாக இருந்தாலும், உங்களது சொந்த அரசியல் புரிதலின் அடிப்படையில் எங்களது அரசியலை விமர்சியுங்கள்.
  நேர்மையாக விவாதிக்கலாம் வாருங்கள்.

  எவ்விதத்தில் ம.க.இ.க பார்பன கும்பல்??
  சிரிரங்கத்தில் கருவரை நுழையும் போராட்டம், சிதம்பரம் நடராசர் கோவிலில் மொழித்தீண்டாமையை பார்ப்பன திமிரை எதிர்த்து போராட்டம், சிறுபான்மை முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியின் சென்னை வருகையை எதிர்த்து போராட்டம், பெரியார் சிலை உடைப்பை எதிர்த்து போராட்டம், இன்னும் பல போராட்டங்களில் இந்து பார்பன பாசிசத்தை சமரசமின்றி எதிர்ப்பது தான், உங்களின் மொழியில் பார்பனியமா?

  எந்த தமிழ் தேசிய அமைப்பாவது (பெ.தி.க விதிவிலக்கு) இந்து பார்பன பாசிசத்தை சமரசமின்றி எதிர்த்து போராட்டம் நடத்தியதாக காட்ட முடியுமா?

  ஒரு நபரை எந்த அடிப்படையில் பார்பனர் என்று கூறவேண்டும்?
  அவர் பிறப்பின் அடிப்படை வைத்தா? அல்லது அவர் கொண்ட தத்துவத்தையும், வாழ்வின் நடைமுறையையும் வைத்தா?

  இதே அடிப்படையில் தான் பெரியாரையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவராக திரிபுவாத கும்பல் கூறுகிறது/கூறும், அதை ஏற்றுக்கொள்வீர்களா?

  தோழர் மருதையனின் எந்த நடைமுறையில் பார்பனியத்தை காண்கிறீர்கள்??

  பார்பனிய பனியா மற்றும் தரகு முதலாலித்துவ இந்திய தேசியத்தை ம.க.இ.க எங்கு எப்போது ஆதரித்தது?
  இந்தியா என்பது பல்தேசியங்களின் சிறை கூடமென்பதை எங்காவது ம.க.இ.க மறுத்திருக்கிறதா?
  தேசியங்களின் சுயநிர்னய உரிமையை எங்காவது ம.க.இ.க மறுத்திருக்கிறதா?

  ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பு என்கிற முறையில் சர்வதேசியம் – அனைத்துலக பாட்டாளி வர்க்க ஓற்றுமை – என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடாகும்.

  இதனடிப்படையிலேயே இந்திய – பார்பன பனியா தரகு முதலாளி – தேசியத்திற்கெதிராக சமரசமில்லாமல் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

  இதில் எந்த சாரத்தில் ம.க.இ.க, இந்திய சாக்கடைக்குள் இருக்கிறது? உங்களை தள்ளுகிறது?

  வாருங்கள் நேர்மையாக விவாதிக்கலாம்.

  இங்கு எனது கேள்விகளுக்கும், மேலே தோழர்களின் கேள்விளுக்கும் வந்து விடையளியுங்கள்.

  அவ்வாறல்லாமல் போகிற போக்கில் வெறும் அவதூறு பரப்புவதாக இருந்தால்…….

  நீங்கள் திரு செம்பியன் அல்ல, (வெறுமனே தமிழ்தேசியத்திற்க்கு சொம்படிக்கும்) தமிழ்தேசிய சொம்பியன்!

 6. செம்பியன்

  ஒரு கேள்வி கேட்டால் நாலு ம.க.இ.க அடிபொடிகள் பதில் தருகிறது.
  நீங்களும் தமிழர்கள் என்பதை முதலில் நினைவில் இருத்துங்கள்.

  முத‌லில் கலகம்
  நெடுமாற‌னை நான் த‌மிழ்தேசிய‌ ஆற்ற‌லாக‌ க‌ருத‌வில்லை.

  பிற‌கு பூசிக்கு

  //ஒரு நபரை எந்த அடிப்படையில் பார்பனர் என்று கூறவேண்டும்.
  அவர் பிறப்பின் அடிப்படை வைத்தா? அல்லது அவர் கொண்ட தத்துவத்தையும், வாழ்வின் நடைமுறையையும் வைத்தா?//

  பார்ப்பானை ம‌ட்டும் அது போன்று பார்க்க‌ இய‌லாது என்ப‌து ம்ட்டுமே
  என‌க்கு தந்தை பெரியாரும்,தமிழும் தமிழ்ரின் வரலாறும் க‌ற்றுத்தந்துள்ளது.

  எம‌து த‌மிழ்தேசிய‌ நிலை என்ன‌ என்ப‌தையே அறியாத திரு ஏக‌லைவ‌ன் எமது தலைவர் அது இது என்று என்ன‌வெல்லாமோ பேசுகிறார்.
  முத‌லில் ம‌.க‌.இ.க‌ த‌மிழ்தேசிய‌த்தை ஆத‌ரிக்கிற‌தா வெறுக்கிற‌தா என்ப‌தை கூற‌வும் ஆம் எனில் இந்திய‌ தேசிய‌ம் தான் உங்கள் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌து என‌ ஏற்றுக்கொள்ள‌வும்.

  ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேட்ட‌வ‌ற்றையே தான் பாவேலும் கேட்றார்.
  அத‌ன் பின் இவ்வாறு கேட்கிறார்

  ///பார்பனிய பனியா மற்றும் தரகு முதலாலித்துவ இந்திய தேசியத்தை ம.க.இ.க எங்கு எப்போது ஆதரித்தது?
  இந்தியா என்பது பல்தேசியங்களின் சிறை கூடமென்பதை எங்காவது ம.க.இ.க மறுத்திருக்கிறதா?
  தேசியங்களின் சுயநிர்னய உரிமையை எங்காவது
  ம.க.இ.க மறுத்திருக்கிறதா?///

  பிற‌‌கு ஏன் இந்திய‌ அள‌வில் க‌ட்சி க‌ட்டடுறீர்க‌ள்.
  உங்க‌ள் நோக்க‌ம் அது தானே
  ஒருங்கினைன்த‌ இன்தியா தானே
  அது இந்திய‌‌ தேசிய‌ம் இல்லையா.

 7. நண்பரே… முதலில் இந்த அடிபொடி போன்ற வார்த்தைகளால் தனிநபரை விமர்சினத்தை விடுத்து அரசியல் விமர்சன கண்ணோட்டதுடன் வாதித்தால் நன்ற்.எங்களுக்கும் அடி பொடி மூக்குபொடி,ஆயா பொடி போன்ற வார்த்தைகள் வைத்து எங்களுக்கும் பேச தெரியும்.அது ஆரோகியமான விவாதமாக இருக்காது.நன்றாக இருக்காது. /

  //பார்ப்பானை ம‌ட்டும் அது போன்று பார்க்க‌ இய‌லாது என்ப‌து ம்ட்டுமே
  என‌க்கு தந்தை பெரியாரும்,தமிழும் தமிழ்ரின் வரலாறும் க‌ற்றுத்தந்துள்ளது.//

  சரி பெரியார் தமிழர் இல்லையே.அவரை எந்த கண்ணோட்டத்தில் தமிழரின் சுயமரியாதை சின்னம் என்றும்,தன் மானத்தின் சின்னம் என்றும்,தமிழின தலைவர் என்று ஏற்று கொண்டுள்ளீர்?
  தமிழரில்லாதவரை தமிழரின் தலைவராக எவ்வாறு கூறமுடிந்தது? அவர் ஆற்றிய களபணிகள், துணிச்சலான போராட்டங்கள் ஆகியவையே அவரை,அவரின் தாய் மொழியின் அளவுகோலை வைத்து காண முடியாததற்கு காரணம்.
  பெரியாரின் தாய்மொழி,பிறந்தமண் ஆகிய அளவீடுகளை ஒதுக்கி தமிழரின் சுயமரியாதையின் அடையாளமாக போற்ற காரணம் என்ன? அவரின் கொள்கைகளும்,வாழ்வியல் முறைகளுமே.
  சில விசமிகள் பெரியார் மீது இம்மாதிரியான அவதூறுகளை வீசி தமிழ்தேசிய பார்வையிலிருந்து பிரிக்க பார்க்கின்றனர்.அவர்களுக்கு உங்கள் பதிலென்ன?
  அப்போது பெரியாரை எப்படி பார்ப்பீர்கள்?

  //முத‌லில் ம‌.க‌.இ.க‌ த‌மிழ்தேசிய‌த்தை ஆத‌ரிக்கிற‌தா வெறுக்கிற‌தா என்ப‌தை கூற‌வும் ஆம் எனில் இந்திய‌ தேசிய‌ம் தான் உங்கள் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌து என‌ ஏற்றுக்கொள்ள‌வும்.//

  நாங்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை. மாறாக தமிழ் தேசியம் பேசுவோர், அவர்களின் சாதிய அழுக்குகளை மறைக்க, சாதியின் நாற்றம் வெளியே தெரியாமல் மறைக்க தமிழன் எனும் ’வாசனை திரவியத்தை’ பயன்படுத்துவதையும், அவர்களின் முரண்பாடுள்ள அரசியல் நிலைபாடுகளையும் விமர்சிக்கிறோம்.

  இதனால் நாங்கள் இந்திய தேசிய ஆதரிக்கிறோம் என்றால் அது புரிந்து கொள்வோரின் தவறு.
  இந்தியா தேசியங்களின் சிறைகூடாரம் என்று தான் இந்தியாவை விமர்சிக்கிறோம். தமிழ் தேசிய அமைப்புகள் “இந்தியாவே தலையிடு” என்று முழங்கிய வேளையில், இந்தியா தான்(உங்கள் பார்வையில் எங்கள் மனங்கவர்ந்த தேசம்)போரை நடத்துகிறது என்று துணிச்சலாக கூறியது நாங்கள் தான்.
  இலங்கையின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை தமிழ் தேசியவாதிகள் காங்கிரஸ் எனும் கட்சியின் சதி,பழிவாங்கும் உணர்ச்சி என்று வெறும் உணர்ச்சிவசப்பட்டு சரியான அரசியல் பார்வையற்று சுருக்கி பார்த்தனர்.அதற்கு இன்னொரு காரணம் உண்டு. தமிழ் தேசியவாதிகள் அதிமுக,பிஜேபி யை எதிர்க்க திராணியில்லை.ஏனெனில் அம்மா வாக்குறுதி அளித்துவிட்டார் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” இலையும் மலரவில்லை.ஈழமும் மலரவில்லை.மாறாக மரண ஓலங்களே கேட்டு கொண்டிருக்கின்றன.அப்போதும் நாங்கள் தான் இந்தியாவின்(உங்கள் பார்வையில் எங்கள் மனங்கவர்ந்த தேசம்)ஆளும் வர்க்கத்தை அம்பலபடுத்தினோம்.

  காஷ்மீர்,அஸ்ஸாம்,மணிபூர் ஆகிய மக்களின் பிரச்சனைகளை பற்றி எந்த தமிழ் தேசியவாதிகளும், முனக கூட இல்லாத வேளையில் நாங்கள் தான் இந்தியாவின்(உங்கள் பார்வையில் எங்கள் மனங்கவர்ந்த தேசம்) கோர முகத்தை பற்றி பேசுகிறோம்.காஷ்மீர் தனி நாடு பற்றி பேசுகிறோம்.

  இதற்கு பிறகும் நாங்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறோம் என்று நீங்கள் கூறினால் அது உங்கள் அறியாமை.

  கம்யூனிஸ்டுகளுக்கு எல்லா ஒடுக்கப்படும் தேசியங்களும் தன் தேசியமே. நீங்கள் எதிர்பார்ப்பது போல் மற்ற தேசியங்களையெல்லாம் ஒதுக்கி ’தமிழ் தேசியம் மட்டும்’ என்று வெற்று காகிதத்தில் மையில்லாத பேனாவால் எழுத முடியாது.

  தமிழ் தேசியத்திற்கான போராட்ட வழிமுறைகளை பற்றி கூறமுடியுமா உங்களால்?

  மற்ற மாநிலங்களின் யாருடைய உதவியும் அறவே இன்றி இந்திய தேசியத்தை எதிர்க்க நடைமுறை சாத்தியம் உண்டா?

  நீங்கள் முன் மொழியின் தமிழ் தேசிய குடியரசின் ‘அரசியல் கொள்கை’, ’பொருளாதார கொள்கை’ எவ்வாறு கட்டமைக்கபடும் என்று கூறமுடியுமா?

  கம்யூனிஸ்டுகளுக்கு நாடு இல்லை.ஆனால் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் போது உயிரையும் தியாகம் செய்ய தயங்குவதில்லை.

  இதற்கு பிறகும், நாங்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறோம் என்று நீங்கள் கூறினால் அது உங்கள் அறியாமை.

 8. //பிற‌‌கு ஏன் இந்திய‌ அள‌வில் க‌ட்சி க‌ட்டடுறீர்க‌ள்.
  உங்க‌ள் நோக்க‌ம் அது தானே
  ஒருங்கினைன்த‌ இன்தியா தானே
  அது இந்திய‌‌ தேசிய‌ம் இல்லையா.//

  வெறும் தமிழகத்தில் மட்டும் கட்சி கட்டி இந்தியாவை இம்மியளவும் அசைக்க முடியாது.
  இந்தியாவை சிறையை உடைக்க வேண்டுமாயின், இந்தியாவால் ஒடுக்கப்படும் மற்ற தேசியங்களையும் இணைத்து நடத்தும் போராட்டத்தினால் மட்டுமே சாத்தியம். அப்போதுதான் இந்தியாவின் பார்பன கூடாரத்தை தகர்க்க முடியும்.இல்லையேல் காஷ்மீரில் என்ன நடை பெறுகிறதோ அதே நிலை தான் தனித்து நின்று போராடும் மற்ற தேசியங்களுக்கும்.
  இதனால் நாங்கள் இந்திய தேசியத்தை ஆதரிக்கிறோம், உச்சி முகர்ந்து கொள்கிறோம் என்று பொருளாகுமா?

 9. அய்யா உங்களைப்போன்ற தலைவர்களுக்கு,
  இந்த அடிப்பொடிகளெல்லாம் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திலிருப்பதை அறிவோம், வேறென்ன செய்வது உங்கள் அளவுக்கு இன்னும் வளரவில்லையோ என்னவோ(!!!!!!!). உங்கள் அறிவினை தயவு செய்து எங்களுக்கும் பயன் படுத்துங்கள்? கேள்விகளை ஆரம்பிக்கலாமா

  1.உங்கள் தமிழ் தேசியத்துக்கான வரையரை என்ன?
  2.இலங்கையிலே மொத்தம் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன?
  3.தேசிய இனப்போராட்டம் சாதியத்துக்கு அப்பாற்பட்டதா?
  4.சாதி ஒழிப்பில்லாத தேசியம் சாத்தியமா? (அவ்வப்போது நெடுமாறன், ராமதாசோடு டூயட் பாடிக்கொண்டிருப்பதால் இக்கேள்வி)
  5.மேலும் தாங்கள் எப்படி தமிழ் தேசியப்புரட்சியை செய்யலாம் எனக்கூறுகின்றீர்கள்?
  அ.தேர்தல் மூலமா ஆ.ஆயுதந்தரித்தா
  6.எல்லாம் சரி திருவரஙத்திலே கருவறையில் தமிழன் நுழைய நக்சல்பாரிகள் தான்
  ரத்தம் சிந்தினார்கள், தில்லையிலே தமிழ் நுழைய நக்சல்பாரிகள் தான் இன்று வரை போராடி வருகிறார்கள். அப்போதெல்லாம் என்கே போனீர்கள்? சேக்கிழார் மகிமையை பாட போனீர்களோ? அப்போது கூட பு.மா.இ.மு சார்பில் துண்டறிக்கை போட்டோமே ? அய்யா கி.வெ கொண்டு வந்து கொடுத்தாரா?
  இந்திய அளவில் கட்சியோ, அல்லது மாநில அளவிலான கட்சியோ எதை செய்கிறது என்பதை பாருங்கள், எங்கே எங்களின் நடைமுறையில் இம்மிஅளவாவது இந்திய தேசியத்துக்கு ஆதரவாய் போனதை காட்டுங்கள். அஎயா வீட்டிலேயும் கருணாவீட்டிலேயும் மாரடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் நீங்கள் புரட்சியைப்பற்றி பேசுவதெல்லாம் செம காமெடிம்மா………..
  இந்த கேள்வி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

 10. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 11. தமிழன் என்றால் யார்? பொள்ளாச்சி மகாலிங்கம், ஸ்பிக் முத்தையா செட்டியார், சேதுராமன், வாண்டையார், கவண்டர்கள், சைவ்வேளாளர்கள், ஆதினங்கள் முதலான முதலாளிகள் மற்றும் ஆதிக்க சாதியின் தேசியத்தை கட்டியமைக்கும் தமிழ்ப்பாரப்பனியம் ஓடுக்கப்பட்ட மக்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிரானது.இதே வரையறை இந்திய தேசியத்திற்கும் பொருந்தும். எனவேதான் இந்தியாவில் உள்ள முதலாளிகளையும், பார்ப்பன மேல்சாதி, ஆதிக்கசாதி களையும் எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி புதிய இந்தியாவை படைக்க ம.க.இ.கபோராடுகிறது.செம்யின் வகையறா தமிழ் பாரப்பனியத்தை கொண்டுவருவதற்கு ஊளையிடுகிறது.முதலில் தான் பார்ப்பனிய சாக்கடைக்குள் விழுந்திருப்பதை செம்பு உணரட்டும், பிறகு மற்றவர்கள் சுத்தமா, அசுத்தமா என்று உளறட்டும். வெள்ளைப் பார்ப்பனர்களை எதிரிகளென்று அடையாளம் காட்டி எதிர்ப்பது சுலபம். ஆனால் செம்பியன் வகையறாவின் கருப்பு பார்ப்பனியம்தான் மிகவும் அபாயகரமானது. செம்பி ஐயர் வாள் சற்று சிந்திப்பவர்களாக இருந்தால் பேஷாக புரிந்து கொள்வார்கள். இல்லேயேல் கருப்பு பூணூலை இழுத்து விட்டு வேகாத வெயிலில் தமிழ் காயத்ரி மந்திரம்சொல்லி சொர்க்கத்திற்கு போகும் புண்ணியத்தை நன்னா செய்ய்யலாம்.

  • செம்பியன்

   சொம்படிப்பது,ஊளையிடுகிறது,கத்துகிறது என்பது தான்
   உங்கள் விவாத முறை போலும்
   உங்கள் கூட்டத்தின் தலை வினவே கூறிவிட்டார்
   இனி நாம் விவாதிக்க வேண்டாம்.

   நன்றி

 12. //ம.க.இ.க பார்ப்பன கும்பல் புரட்சி பேச‌ வந்துவிட்டது.
  மருதையன் போடும் தாளத்துக்கு ஆடும் ஆடுகள்
  தமிழ்தேசியத்தை மறுக்கும் இந்திய தேசியவாதிகளே
  தமிழ் இளைஞர்களை இந்திய தேசிய சாக்கடைக்குள்
  தள்ளி நாசமாக்காதீர்கள்.‌//

  ஐயா செம்பு மேலே நீங்கள் இட்ட “நாகரீகமான” விமரிசனத்தின் உண்மையை புட்டு புட்டு வைத்ததும் இப்படி நாகரீகத்தின் பெயரைச் சொல்லி ஜகா வாங்கியிருப்பது என்ன வகை நியாயாம்? தமிழ்ப் பாரப்பனியத்தின் ஆன்மாவை கிழித்துக் காட்டியதும் செம்பு துண்டைக் காணாம், துணியைக்காணோம்,அப்புறம் முக்கியமாக கருப்பு பூணூலைக்காணோம் என ஓட்டம் பிடித்து விட்டு அதையே நாகரீகமாக விவாதத்தில் இருந்து டீசென்ட்டாக விலகிவிட்டராம் என்பதுதான் தமிழ்ப் பார்ப்பனியத்தின் தந்திரம் போலும். தோழர்களே இனி யாராவது தமிழ் தேசியம் என்று முக்காடு போட்டுக்கொண்டு வந்தால் முக்காட்டைக் கிழித்து தமிழ்ப் பார்ப்பனியம் என்றே பொருத்தமாக அழையுங்கள்.அப்போதுதான் கருப்பு பாரப்பனியம் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடும். செம்பு ஓடிவிட்டார். பார்த்தவர்கள் பிடித்து வாருங்கள். நட்புடனே விவாதிப்போம்.என்ன இருந்தாலும் இந்தியப் பார்ப்பனியத்தின் கள்ளக்குழந்தையான தமிழ்ப் பாரப்பனியத்திற்கு சமாதி கட்டப் போவது நாம்தானே?

  • செம்பியன்

   என‌து நாகரீகத்தை அனுகுமுறையை பற்றி்
   ம.க.இ.க கும்பல் பேச வேண்டாம்
   அதற்கு உங்களுக்கு யோக்கியதை கிடையாது.
   தோழர் திருமாவளவனை பீயை கிளறுபவன்
   என்று நீங்கள் எழுதியது மிக மிக நாகரீகமானது என்று
   அனைவருக்கும் தெரியும்
   தோழர் கொளத்தூர் மணியை பிழைப்புவாதி என்றதை
   யாரும் மற‌க்கவில்லை அது நல்ல நாகரீகம்.
   இப்போதை உங்கள் புதிய ஜனநாயகம் இதழில் எவ்வளவு
   நாகரீகமாக தோழர் மணியரசனை பற்றி எழுதினீர்கள்
   மணியரசன் கும்பல் என்று எழுதியுள்ளீர்கள் இது நாகரீகமா
   இல்லையா என்பதை ஊர் அறியும்.

   அதுபடி தான் இந்த வினவு வருகிரது எம்மைபார்த்து
   ஊளையிடுகிறோம் என்று ஊளையிட்டுக்கொண்டு
   வந்து விட்டது இந்த வினவு.

   தமிழ்பார்ப்பனியமாம்
   வினவு ம.க.இ.க பார்ப்பன கும்பலே தமிழைப்பற்றியும்
   நீங்கள் பேசாதீர்கள்.
   பார்ப்பானை தலைமையில் வைத்துக்கொண்டு
   தமிழை பற்றி நீ பேசாதே.

 13. செம்பியன்,
  தோழர் மருதையனையும், இங்கு பின்னூட்டமிடும் தோழர்களை அடிப்பொடிகள் என்றும், பார்ப்பனக்கும்பல் என்றும் வயிறெரிந்து வசைபாடுவது நீங்கள்தான். அதைத்தான் நீங்கள் ஊளையிடுகிறீர்கள் என்று பொருத்தமாக எழுதினோம். இதை வேறு எப்படி பார்ப்பது என்று சொன்னால் பரிசீலீக்கிறோம். உங்களைப் பொறுத்தவரை ஈழம், காவிரி, முல்லைப்பெரியாறு என்பதைத் தவிர நீங்கள் அரசியல் பேசுவதற்கு ஏதுமில்லை. ஆனால் நாங்கள் மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் மாற்றுவதற்காக போராடும் ஆயிரக்கணக்கான தியாக உள்ளம் கொண்ட தோழர்களது இயக்கம். எங்களை கொச்சைப்படுத்துவது என்பது உண்மையில் தமிழக மக்களை மிகவும் இழிவாக பார்ப்பதாகும். மற்றபடி தமிழ் பார்ப்பனியம் பற்றி நீங்கள் வாயே திறக்காத்தினால் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லது மறுக்க முடியவில்லை என்றாகிறது. நல்லது தமிழ் பார்ப்பனியத்தைப் பற்றி வினவில் விரிவாக ஒரு கட்டுரை எழுதலாம் என்று தோன்றுகிறது. இப்படி ஒரு அருமையான தலைப்பு கொடுத்த செம்பியனுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s