உயிரற்றிருக்கும் மனித உரிமைகளுக்காக போராடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை துவக்க விழா..

எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு ஓட்டு போடும் உரிமையை மட்டுமே மக்களுக்கான உரிமையென்று, மக்கள் தாங்களாகவே அதை ஏற்று கொள்ளும் அளவிற்கு ஆளும் வர்க்கத்தால் கற்பிக்கப்படும் இந்நாட்டில், பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்விகற்கும் உரிமை மற்றும் சங்கம் அமைக்கும் உரிமை போன்ற மறுக்கப்படும் அனைத்து உரிமைகளுக்காகவும், சமரசமற்று போராடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC) சென்னை கிளை துவக்க விழா சென்ற சனிக்கிழமை (08.08.2009) மாலை நடைபெற்றது.

சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் சிவனடியார் ஆறுமுகசாமியை தமிழில் பாடவைத்ததும், தீட்சித பார்ப்பன கொள்ளையர்களிடமிருந்து கோவிலை இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வைத்ததும், வாடிப்பட்டி நல்லகாமன் வழக்கில் பிரேம்குமார் என்ற போலீஸ் ரவுடியை தொடச்சியான போராட்டங்களின் மூலம் பணி நீக்கம் செய்ய வைத்ததும், மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்காக போராடிய தொடர் போராட்டங்களில் அடைந்த முக்கியமான வெற்றிகளாகும்.

திரளான வழக்குரைஞர்களும், மக்களும் பங்கேற்ற இவ்விழாவில்..

வழக்குரைஞர் தோழர் பொற்கொடி வரவேற்புரை ஆற்றினார்.

வழக்குரைஞர் தோழர் கா.சுரெஷ் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இச்சூழலில் இருக்கும் போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அவசியம் குறித்தும்,குறிப்பாக சென்னையில் கிளை தாமதமாக துவக்கப்பட்டாலும் அதன் அவசியம் குறித்தும் பேசினார்.

தோழர் ராஜு (HRPC மாநில ஒருங்கினைப்பாளர்) அவர்கள் சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் மொழி தீண்டாமை பிரச்சனை, மனித உரிமை போராளி பினாயக் சென்னின் கைது,  சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கெதிரான விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு போன்ற அனைத்து மனித உரிமை மீறல்களும், பார்பனியத்திற்காகவும், பெரு முதலாளிகளுக்காகவும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைகளாகவே இருந்து வருகின்றன. இவ்வாறு மனித உரிமைகள் மீதான சட்ட மீறல்கள் அனைத்தும் அரசினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வேளையில் மக்கள் தங்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை சட்டத்திற்க்கு உட்பட்டு மட்டுமே நடத்த முடியாது.  ஏனெனில் மனித உரிமை பிரச்சனைகள் அனைத்தும் சட்டப்பிரச்சனைகள் அல்ல. அது சமூக பிரச்சனை என்று பேசினார்.மேலும் அன்றாட மக்கள் பிரச்சனையில் இருந்து, தில்லை போராட்டம், நல்லகாமன் வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி சுபாசன் ரெட்டி ஊழலை அம்பலப்படுத்தியது போன்ற பல்வேறு போராட்டங்களில் HRPCன் செயல்பாடுகளை பற்றியும் விளக்கி பேசினார்.

எழுத்தாளர் மருதன், உலகளவில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அவற்றின் போலி தன்மை குறித்த விவரங்களுடன், HRPC போன்ற சமரசமற்ற நேர்மையான அமைப்பின் தேவை குறித்து பேசினார்.

பணக்காரர்களின் உரிமையை மக்களின் உரிமையாக காட்டுவதுதான் நீதித்துறையின், அரசின் வேலையாக இருக்கும் போது, HRPC சட்டத்தின் மாயையிலிருந்து மக்களை மீட்கிறது என்று HRPCயின் பணியை விளக்கிய தோழர் துரை.சண்முகம், தொழிலாளர்களின் உணர்வுகளை மரத்து போக செய்யும் முதலாளித்துவத்தின் மாயையிலிருந்து அவர்களை மீட்கும் பொருட்டும் மனித உரிமை பாதுபாப்பு மையம், மனித உணர்வு பாதுகாப்பு மையமாக விரிவதற்கு வாழ்த்தினார்.

வழக்குரைஞர் சகாதேவன் தனது வாழ்த்துரையில், கடலூர் மாவட்ட HRPC தோழர்கள் தில்லை போராட்ட வெற்றியையும், மதுரை மாவட்ட HRPC தோழர்கள் நல்லகாமன் வழக்கின் வெற்றியயையும் பெற்றது போல சென்னை கிளை தோழர்கள் மக்கள்/சமூக பிரச்சனைகளுக்காக சமரசமற்று போராடி வெற்றி பெற வாழ்த்தினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மீதான தாக்குதல் வழக்கின் அவசியத்தையும், அதனை HRPC யின் சென்னை கிளை எடுத்து போராட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்ததாக வாழ்த்தி பேசிய தோழர் சங்கரசுப்பு, ”எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா மனித உரிமை மீறல்களுடன் தங்களின் மீதான உரிமை மீறல்களையும் கூட ஓட்டு பொறுக்கவே பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின் மக்களின் மீது  உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டே வருகின்றனர்” என்று குறிப்பிட்டு  HRPC மக்களுக்காக போராட வாழ்த்தினார்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. பொதுச்செயலாலர் தோழர் சுப.தங்கராசு,

மனித உரிமையை பாதுகாக்க நீதித்துறையே தயாராக இல்லை. சென்னை சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் சரியான பாதுகாப்பு வசதியின்றி – இதுவும் மனித உரிமை மீறலே – 15 பேர் வரை இறந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்ட அதன் முதலாளிக்கு அடுத்த நாளே பிணை வழங்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மீதான தாக்குதலை, போலீஸ் அராஜகத்தை கண்டித்து போரட்டம் நடத்திய பு.ஜ.தொ.மு தோழர்களுக்கு 45 நாள்களுக்கு பின்னரே பிணை வழங்கப்பட்டது. மனித உரிமை மீறலுக்கு ஒரு நாள், உரிமை மீறலுக்கு எதிராக போராடியவர்களுக்கு 45 நாள், என்று நீதித்துறை முதலாளி/அதிகாரவர்க்க சார்பை அம்பலபடுத்தி பேசினார். பிறகு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் போலீஸ் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு,வெறுமனே இழப்பீடு வழங்கப்பட்டதும், அதில் குற்றமிழைத்தவர்கள் சுதந்திரமாக இருப்பதையும் இடித்துரைத்தார். அரசு SEZ களுக்காக நிலங்களை விவசாயிகளிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும் பறிப்பதை வெடிக்கை பார்க்கும் நீதிமன்றங்கள் அரசின் பொருளாதார கொள்கையில் தலையிடமுடியாதென ஏனோ நழுவிக்கொள்கின்றன என்று நீதிமன்றத்தின் அநீதியான போக்கை செயலை சுட்டி காட்டினார்.

மேலும், பு.ஜ.தொ.மு வின் பல்வேறு போராட்ட அனுபவங்களில் இருந்து HRPC போன்ற அமைப்பின் தேவையையும், நீதிமன்றத்தின் இந்து மதவெறி & முதலாளித்துவ சார்பினை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும், மக்களுக்கு போலீஸ் – அதிகாரவர்கத்தின் மீதான பயத்தை விலக்குவதில் HRPC யின் கடமைகள் குறித்தும் விளக்கினார். ம.க.இ.க, வி.விமு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் சமூகத்தின் பல தளங்களில் இயங்கினாலும், இன்றைய சூழலில் HRPC அமைப்பில் குடும்பத்தில் ஒருவராவது இணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

வழக்குரைஞர் தோழர் தியாகு ஆதரவளித்த வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Lawer - Police clash

4 responses to “உயிரற்றிருக்கும் மனித உரிமைகளுக்காக போராடும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை துவக்க விழா..

 1. மார்க்சிய கண்ணோட்டம் கொண்ட
  மனித உரிமை அமைப்புகளை
  உருவாக்குவது என்பது இன்றைய
  நிலையில் மிகவும்
  அவசியமான ஒன்று.
  தோழர்களின் பணி வெல்லட்டும்.
  வாழ்த்துக்கள்.

 2. மேலும் சற்று விரிவாக
  எழுதியிருக்கலாம்
  எனினும் நல்ல அறிமுகம்.

  வாழ்த்துக்கள்.

 3. தோழர் சமரன் சொன்னது போல விரிவாக எழுதியிருக்க வேண்டும், இல்லை யாரவது ஒருவரின் பேச்சையாவது விரிவாக எழுதியிருக்கலாம். காலம் ஒன்றும் போகவில்லை, அங்கு பேசிய ராஜு,தங்கராசு,மருதனின் உரைகளை தனிதனிப்பதிவாக இட்ட்டீர்களெனில் சாரம்சத்தை புரிந்து கொள்ள முடியும்.

  கலகம்

 4. தோழர்கள் சமரன், கலகம்

  கருத்துகளுக்கு நன்றி. வேலை பளுவுடன் மற்ற பதிவுகளையும் இட வேண்டியிருப்பதால், அடுத்தமுறையிலிருந்து இதை கவனத்தில்கொள்கிறோம்.

  தோழமையுடன்,

  சர்வதேசியவாதிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s