சுதந்திரம் – பொய்யும் புனைசுருட்டும்..

நாடெங்கும்  ஆகஸ்ட் 15 கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. தேச பக்தர்கள்  (!)  அனைவரும்  தத்தமது  சட்டைகளில் pig_by_soskina 1 தேசிய கொடி   (யாருக்கு என்பதை தனி பதிவாக தான் எழுத வேண்டும்) லேபிள்களை இன்றிலிருந்தே

குத்திக்கொள்ளத்துவங்கியிருக்கிறார்கள். தேர்தலில் ஐநூறு  ரூபாய்க்கு  விலைக்கு போன தேசபக்த யோக்கியர்களும் இதில் அடக்கம் என்பது முக்கியமானது. ‘ஜனநாயகம்’ என்றால் என்ன என்று  நாலு வரி கூட விளக்கம் சொல்லத் தெரியாத, வாழ்க்கை அனுபவங்களின் வழியே இது ஜனநாயகம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப ஆகஸ்ட் 15 ஐயும் ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என்கிற களிப்புடன் மட்டுமே காணும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த ‘ஜனநாயக’  நாட்டில் படித்த அறிவாளிகளுக்கு  மட்டும் தான் ஜனநாயக பற்றும் தேசபக்தியும் அதிகமாக பொங்கி வழிகிறது. அது  எந்தளவிற்கு பொங்குகிறதோ அந்தளவிற்கு பொய்யானதாகவும் இருக்கிறது.

கலாச்சார சீரழிவும், சேற்றில் புரளும் பன்றிகளை போல  நுகர்வுக்கலாச்சாரத்தில் திளைப்பதையுமே மக்களின் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமையாகவும் சித்தரிப்பது ஒரு புறமும். தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயக உரிமையாகவும், எல்லாவற்ரையும் விட அது தான் வாழ்க்கையின் முக்கிய கடமையாகவும் ஓட்டுபோடாவிட்டால் பிண‌‌த்திற்கு சமம் என்றும் இங்குள்ள ஊடகங்களும் அதிகாரவர்க்கமும்  ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு கருத்தை தொடர்ச்சியாக பரப்பியதன் மூலமாக ஓட்டுப்போடுவது தான் ஜனநாயகம் என்பதை போல மக்கள் மனங்களில் ஒரு கருத்தை கட்டமைத்துள்ளன. மாறாக ஜனநாயகத்தின் கூறுகளாக விளங்கும் அடிப்படை ஜனநாயக  உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, சம உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலை எதிர்க்கும் உரிமை, சமய சார்பு உரிமை, கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை, அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை,சங்கம் வைக்கும் உரிமை என பல உரிமைகள் இந்த ஜனநாயக நாட்டில் அடியோடு மறுக்கப்படுகிறது.தொழிற்சாலைகளில், ஐ.டி கம்பெனிகளில் ஒரு யூனியன் கூட வைக்க முடியவில்லை இது ஒரு ஜனநாயக நாடா ? இந்த ‘ஜன‌நாயக’ நாட்டின் சுதந்திரத் திருநாளான இன்று எத்தனை  ஐ.டி கம்பெனிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று ஒரு கணக்கு எடுப்பதே போதுமானதாக இருக்கும் ஆகஸ்ட் 15 ஐ மதிப்பிட.

இதை ‘ஜனநாயகம்’ என்று நம்பி இந்த  போலி ஜனநாயகத்தில் வாக்களிப்பதன் மூலம் ஈழத்தில் ஏதாவது செய்து விட முடியும் என்று   தோழர் கொளத்தூர் மணி, பெரியார்.தி.க தோழர்கள், மற்றும்  இயக்குனர் சீமான் ஆகியோரும் ‘இந்திய ஜனநாயகத்திற்காக’ பரிந்து பேசி  மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தமது ‘ஜனநாயக கடமையை’ தவறாமல் செய்ய வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்கள். ‘இந்திய ஜனநாயகத்திற்காக’ இந்தளவிற்கு பேசிய அவர்களுக்காவது  ‘ஜனநாயகம்’ வழங்கப்பட்டதா என்ன ? இல்லை, மாறாக  ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியபோது அவர்களது ஜனநாயக உரிமையை நசுக்கி, ஒடுக்கி பயங்கரவாதிகள் மீது பாய வேண்டிய தேசிய பாதுகாப்பு சட்டம்  தான்  (NSA) அவர்கள் மீது பாய்ந்தது.

அதிகாரவர்க்கத்தின் குரூரமான,அநியாய வன்முறையை எதிர்த்து மக்கள் நியாயமாக கூட வன்முறையை பயன்படுத்தக்கூடாதென்ற காந்தியாரின் அகிம்சையை  தத்துவமாக கொண்ட இந்த  நாட்டில் உரிமைகளை பற்றி பேசுவதும்,அவை மறுக்கப்படும்போது போராடுவதும், தேச விரோத குற்றமாகும்.
இதுதானே நடைமுறை ?

“Freedom in capitalist society always remains about the same as it was in ancient Greek republics: Freedom for slave owners” என்றார் தோழர் லெனின். அதன் படி மக்களுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்படும் வேளையில், அதே உரிமைகள் அல்ல அதை விட நூறு மடங்கு,ஆயிரம் மடங்கு அதிகமான‌ உரிமைகள்  நிலபிரபுக்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இங்கே வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் சமூக மாற்றம் நடந்த காலங்களில், ஏகாதிபத்திய எதிர்ப்பும், நிலபிரபுத்துவ எதிர்ப்பும் முழுவிடுதலைக்கான போராட்டமும்  உலகில் அடிமைப்பட்டிருந்த பல்வேறு நாட்டு மக்களாலும் முன்னெடுக்கப்பட்டு  போராடிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும் அவ்வாறு நடந்த மக்கள் போராட்டங்களை இராணுவத்தின் ஆயுதங்களால் மட்டுமே அடக்கி ஒடுக்கிவிடமுடியவில்லை. சாதி, மத, இன மற்றும் பிராந்திய பிரிவினைகளின் மூலமும்,அதனுடன் கூடாக முக்கியமாக ‘காந்தி’ என்கிற வன்முறை ஆயுதத்தை கொண்டும் தான் வெள்ளையன் மக்களின் எதிர்ப்பை ஒடுக்கினான். போராட்டங்களை நீர்த்துப்போக செய்ய ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தை தான் காங்கிரஸ் கட்சி. அதை உருவாக்கியவன் ஆலம் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயன். வளர்த்தவர்கள், நாம் பள்ளிக்கூட பாட புத்தகத்தில் படித்த படி நமக்கு ‘சுதந்திரம்’ வாங்கித்தந்த “தேசப்பிதா காந்தி” மற்றும் இன்ன பிற ‘ மகாத்மாக்கள்’.

gandhi- 2

பெஷாவரில் (இப்போது பாகிஸ்தான்) மக்கள் போராட்டத்தை ஒடுக்கச் சென்ற இராணுவத்தினரில் ஒரு பிரிவினர்  வெள்ளையனின்  ஆணையை நிறைவேற்றவில்லை, ஆணை  என்ன ?  மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது தான் ஆணை. ஆனால் அந்த வீரர்கள் தமது மக்களை சுட மறுத்துவிட்டார்கள். இவ்வாறு மறுத்தது அகிம்சையா வன்முறையா ? அனைவருக்கும் அது மக்கள் மீதான பற்று என்பது நன்றாகத் தெரியும். ஆனால்  அந்த வீரர்களின் தீரமிக்க இந்த  செயலுக்கு ‘தேசப்பிதா’ காந்தி மட்டும் கண்டனம் தெரிவித்ததோடு  “வீரர்கள் அதிகாரிகளின் உத்தரவை மீறுவது குற்றம், அவர்கள் காலிகளை போல நடந்து கொண்டனர்” என்றார்.

காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் நமது பிதாவை பின்பற்றி சிறை சென்றவர்களுக்கு பொது மன்னிப்பும் விடுதலையும் வழங்கப்பட்டது. ஆனால் தோழர் பகத்சிங் மற்றும் புரட்சியாளர்கள் பற்றி பேசாமல், அவர்களை தூக்கிலிட தேதி மட்டும் குறித்து கொடுத்த தனது அஹிம்சை கடமையை மட்டுமே செய்தார் அஹிம்சா மூர்த்தி காந்தி. மேலும் மக்களின் வன்முறையை தான் எப்போதும் ஆதரிப்பதில்லை என வெள்ளை ஏகாதியபத்தியத்திற்கு காட்ட இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டார் (இதை ’வெள்ளையனுக்கு விசுவாசம்’ என்று நாம் அழைத்தால் அது தேச குற்றம்). பெசாவரில் மக்களை சுட மறுத்து ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிய வீரர்களை பற்றி கூட காந்தியார் வாய் திறக்கவேயில்லை. சௌரி சவுராவிலும், போலீஸின் வன்முறையை எதிர்த்து மக்கள் வன்முறையில் ஈடுபட்ட போது, அவர் மக்களையே சாடினார். விசுவாசம் எஜமானனின் செயலை எதிர்த்து என்றுமே ஊளையிடாதுஎன்பது இயற்கையின் விதி போலும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையிலும், இன்னும் பல சமயங்களிலும் அரசின் அடக்குமுறைகளை வன்முறைகளை காந்தி கண்டனம் செய்யவில்லை, மாறாக அவர் மக்களின் வன்முறை குறித்தே அதிக கவனமும் கண்டமும் செய்திருக்கிறார்.

அகிம்சை காந்தியாரின் கொள்கையுமல்ல,ஆயுதமுமல்ல. உண்மையில் சொன்னால் வன்முறை தான் காந்தியின் ஆயுதமாக இருந்தது. அகிம்சை என்பது மக்களின் போர்குணத்திற்கு எதிராக வெள்ளையனால் திணிக்கப்பட்டு காந்தியாரால் பார்பனிய இந்து மதத்தின் மூலம் தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டதே ஆகும். ஒவ்வொரு முறையும் காந்தி செய்ததெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை மழுங்கடிக்கவும்,  போர்குணமிக்க‌  போராட்டங்களை ஒரு முகபடுத்தி பிறகு அதை  களைத்துவிட்டு  நீர்த்து போகச்செய்தது தான். ஒரே வரியில் சொல்வதெனில் வெள்ளையனுக்கு அகிம்சை. மக்களுக்கும், மக்களுக்காக போராடி  மடிந்த பகத்சிங், ஆசாத் போன்றவர்களுக்கும் வன்முறை. இது தான் காந்தியின் அகிம்சை.

ஆக  இது தான் கதை..

ஆனால் நம்முடைய ‘ ஜனநாயகவாதி’ களோ  எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு காந்தியின் அகிம்சை தத்துவத்தாலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் மற்ற சக்திகள் தோற்றுப்போனதாகவும் பரப்புரை செய்கிறார்கள்.  இப்படி பொய் சொல்வதும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது கூட ‘ஜனநாயகம்’ போலும்.

எல்லா வெளிநாட்டு சக்திகளில் இருந்தும் பரிபூரண சுதந்திரம் என்பதை காந்தி ஆழம் தெரியாத தண்ணீர் என்று காங்கிரஸ் மாநாட்டில் அதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தோற்கடித்தார். நிலபிரபுக்களுக்கு வரிகொடாமல் மக்கள் போராடியபோது, அதை கண்டித்ததோடு, வரி பாக்கியை கட்டுமாறு மக்களை நிர்பந்தித்தார். ஏகாதிபத்தியத்திற்க்கு மட்டுமல்ல நிலபிரபுத்துவத்திற்க்கும் ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் இந்த தேசிய கட்சிகள் ஒரு துரும்பையும் அசைத்துப்  போடவில்லை என்பதுடன், போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக தீர்மானங்கள் இயற்றியதோடு மட்டுமல்லாது மக்களிடம் பிரச்சாரம் செய்து இராணுவத்திற்க்கு ஆள் சேர்த்தனர்.

போர் முடியும் போது உலக மக்கள் வீறுநடை போட்ட போது, கப்பல் படை எழுச்சி, தெழுங்கானா எழுச்சி போன்ற பல்வேறு போராட்டங்கள் காங்கிரஸின் கருங்காலிதனத்தாலும், போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தாலும் கடுமையாக ஒடுக்கப்பட்டு அடிமைத்தனம் நிலைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், சர்வதேச அழுத்தம் காரணமாகவும், தனது சுரண்டல் அமைப்பை மட்டும் அப்படியே நீடிக்கச்செய்து விட்டு  அரசியல் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியமும், நெருக்கடியும் ஆங்கிலேயனுக்கு வந்த போது தான் ‘போலி சுதந்திர தாய்’ பிறந்தாள்.

முழு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றவகையில் இல்லாமல், வெள்ளையனின் நூற்றாண்டு கால பழமையான மக்களின் மீதான சுரண்டல், ஒடுக்குமுறையை கட்டவிழ்த்த அதிகார அமைப்பை தகர்த்தெரியாமல், முழு சுதந்திரம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பதை யாரும் பரிசீலிக்கவில்லை. மேலும் அப்போதைய தேசியவாதிகளும், தாத்தா, மாமாக்களும், பழைய அமைப்பை தூக்கியெறிய முற்படவில்லை, மாறாக அதே அமைப்பை பயன்படுத்தவே விரும்பினர். ஆகவே நடந்தது தரகு முதலாளிகளிடம் அதிகார கைமாற்றமே அன்றி வேறல்ல.

உலகில் எந்த அடிமைக்கும் எந்த ஆண்டானும் சுதந்திரத்தை வழங்கியதில்லை. சுதந்திரம் பெறப்படுவதல்ல பறித்தெடுக்கப்படுவது. இது தான் உலக வரலாறு. இந்த விதிக்கு இந்தியா மட்டும் விலக்கல்ல.

indo-us-flag4

மறுகாலனிய தேசியக்கொடி

இன்று..
இந்த தரகு முதலாளி கூட்டம் தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் கொள்கைகளால் நாட்டை மறுகாலனியமாக மாற்றி வைத்திருக்கிறது. ஆரம்பம் முதலே இந்த தரகு முதலாளிகளின் அரசு பேசியதெல்லாம் ”சுதேசி”, ஆனால் செயலோ ”விதேசி”.  1994 நரசிம்மராவ் ஆட்சியில் முதல் அடிமை சாசனமாக ’காட்’ ஒப்பந்தம் வந்தது .இதை ஒரு வரி கூட படித்துப்பார்க்காமல் போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டார்கள். இதனடிப்படையில், பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயம் – அந்நிய முத்லீடுகளுக்கு கட்டுப்பாடற்ற தாராள‌ அனுமதி வழங்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையை திறந்து விட்டதால் சிறு தொழில்கள் நசுக்கப்பட்டு உள்நாட்டு பொருளாதாரம் நசிவுற்றது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் நாட்டின் பாரம்பரிய விவசாயமும்  விதைகளும் ஏகாதிபத்தியத்திற்கு எம்.எஸ் சாமிநாதன் போன்ற‌ ஏகாதிபத்திய  அடிவருடிகளால் விற்கப்பட்டது. விவசாயநிலங்கள் தரிசு நிலங்களாக்கப்பட்டன, பாரம்பரிய விவசாயம் ஒழிந்து பணப்பயிர்கள் பயிரிட அரசே நிர்பந்தித்தது. கல்வி தனியார் மயமானதால் பல மாணவர்களின் கல்வி கேள்விகுறியானது.

அதன் நீட்சியாக பின்னால் வந்தது ’காட்ஸ்’ ஒப்பந்தம் இது சேவைதுறைகளை தனியார்மயமாக்கி பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்தது. தண்ணீரை தனியார்மயமாக்கி கோக் பெப்சி பன்னாட்டு நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைத்தது.  இன்று அரசு என்பது வெறும் லாபம் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு இயந்திரமாகவும், அதற்காக தன் கோவண துணியை கூட விற்கத் தயாராகவும் உள்ளது. அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டிய அரசு கல்வியை கள்ளச் சாராயம் காய்ச்சுபவனுக்கும், ரௌடிகளுக்கும் தாரை வார்க்கிறது. அவர்களுக்கு பதிலாக சாராய வியாபாரத்தை அரசே தன் கடமையென நடத்துகிறது.
இது தான் ’பாரத அன்னையின் பத்தினிதனம்’ !

இத்தகைய ஒப்பந்தங்களின் மூலம் மக்களின் சுதந்திரமும் உரிமைகளும் கேள்விக்குள்ளாக்கபடுகிறன.
தரகு முதலாளிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது, ’சிறப்பு பொருளாதார மண்டம்’ (SEZ) என்ற பெயரில் விவசாய மற்றும் பழங்குடியன மக்களின் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் கொடுப்பது, அதை எதிர்த்து போராடும் மக்களை அடக்குமுறையை கொண்டு ஒடுக்குவது, கொன்று குவிப்பது, பயங்கரவாதிகளாக சித்தரிப்பது என்பதை முதலாளித்துவ கட்சிகள் மட்டும் செய்வதில்லை, போலி கம்யூனிஸ்டுகளும் தரகு முதலாளிகளின் தரகர்களாக மாறி மக்களை கொல்கின்றனர்.
நீதிமன்றங்களோ அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட முடியாதென்கின்றன.

pigs 5

பங்கு சந்தையில் புள்ளிகள் உயர்ந்ததையே  நாட்டின் உயர்வாக‌,  வளர்ச்சியாக சித்தரித்து அனைவரும் புளாங்காகிதமடைந்த நேரத்தில் நாட்டில் லட்சக்கணக்கான‌  விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.அதை பற்றி இந்த அரசும் ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. இந்த சாதனை பட்டியலில் சமீபத்திய சேர்க்கை ஆந்திரமாநிலத்தில் ஒரே வாரத்தில் நாற்பதிற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை.

இன்று பொருளாதார சரிவில் வேலை இழந்தோரை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், எவ்வித நிபந்தனையும் இன்றி (குறைந்த பட்சம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனை கூட இன்றி) இந்த அரசு வரி, காப்பீடு (LIC), ஓய்வூதியம் (PF) போன்ற மக்களின் பணத்தை பெரு முதலாளிகளுக்கு வழங்குகிறது.

பல கோடி பேருக்கு வேலை இல்லை. 87 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ரூபாய் இருபது கூட பார்ப்பதில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும்  பல லட்சம் பேருடைய வேலைகள் பரிபோயுள்ளன, அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆவது ? கடந்த ஏப்ரல் முதல் ஜீன் வரை மட்டும்  மூன்றே மாதங்களில்  இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் பேரின் வேலைகள் போய் விட்டது.

காந்தியாரின் அகிம்சை தத்துவத்தை கொண்டுள்ள‌ நாட்டில் உரிமைகளை பற்றி பேசுவதும், அவை மறுக்கப்படும் போது போராடுவதும்  “வன்முறையாகும்,தேசவிரோதமாகும்” . ஆனால் அரசின் மனித உரிமை மீறல்கள் மீதான வழக்குகள் தேசிய மனித உரிமைகள் அமைப்பில் (NHRC) கேட்பாரற்று தூங்கும்.

இப்பொது வந்திருக்கிறது மற்றுமொரு அடிமை சாசனம் ’123 ஒப்ப்பந்தம்’. இந்த  ஒப்ப்பந்தம் தேசத்திற்க்கான மின் தேவையை / எரிபொருள் தேவையை ஈடுகட்டவே போடப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், இது அணுசக்தி ஒப்பந்தம் மட்டும் அல்ல‌ இராணுவ  ஒப்ப்பந்தமும் ஆகும். தேவைப்படும் போது அமெரிக்க இராணுவத்திற்க்கு பின்னால் ஓட வேண்டும் என்கிற‌‌ ஒப்புதலுடன் தான் இந்த‌  ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க இராணுவத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களும், 123 ம் சேர்ந்து இந்திய இராணுவத்தின் சுயசார்பை இதன் மூலம் அடகு வைத்திருக்கின்றன. ஆனால் முதலாளித்துவ பத்திரிக்கைகளோ காட், காட்ஸ், 123 இன்ன பிற ஒப்பந்தங்கள் அனைத்தும் வளர்ச்சி என்கின்றன. இந்தியா வல்லரசாகிறது என்று காட்டுக் கூச்சலிடுகின்றன.

“ஒரு தேசத்தை ஒடுக்கக்கூடிய எந்த ஒரு தேசமும் விடுதலை பெற்ற தேசமாக இருக்கமுடியாது” என்றார் காரல் மார்க்ஸ்.

அகிம்சா மூர்த்தியான காந்தியின் தேசமாக இருக்கும் இந்தியாவில் தேசியஇனங்கள் ஒடுக்கப்படுகின்றன. தேசிய விடுதலைக்காக போராடும் மக்களை இராணுவமும், போலீசும் வன்முறையை கொண்டு கடுமையாக ஒடுக்குகிறது. மணிப்பூரில் ’ ஐரம் ஷர்மிளா’ என்ற பெண்மணி,  தினமும் மக்களை போலி மோதல்களினால் (Fake Encounter) கொன்றுகுவிக்கும்  “Armed Forces Special Powers Act” (AFSPA) என்ற கொடுமையான சட்டத்தை எதிர்த்து அகிம்சை முறையில் கடந்த ஒன்பதாண்டு காலமாக உண்ணாநிலை போராட்டம் இருந்து வருகிறார். ஆனால் இன்று வரை போலீஸ் இராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜனநாயகம்/சுதந்திரம் என்பது உண்மையிலேயே இந்நாட்டில் இருக்கும் பட்சத்தில், காஷ்மீரிலும், மணிப்பூரிலும் சுயநிர்ணய உரிமையை வழங்க நேர்மையாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தினால் என்ன கேடு வந்துவிடும்..

manipur

மணிபூரி பெண்களின் இந்தியாவிற்கெதிரான போர்

காஷ்மீர் அக்கிரமமான முறையில், அநீதியான வழியில் இந்தியாவால் ஆக்கிரமித்து கைப்பற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் ஒருதனி நாடு. அந்த நாடு  என்றைக்கும் இந்தியாவிற்கு சொந்தமானதல்ல. தற்போது காசுமீரில் 7 லட்சம் இராணுவத்  துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது இந்திய அரசு.

வடகிழக்கில் மணிப்பூரிலும், தெற்கு ஆசியாவில் மேலாதிக்க நலன்களுக்காக ஈழத்திலும் காந்திய தேசத்தின் கருவியாக செயல்படுவது அகிம்சை அல்ல வன்முறையே. ஆகையால் காந்தியம் அகிம்சையுமல்ல, கிடைத்தது சுதந்திரமுமல்ல, நடந்த அதிகார மாற்றமும் காலத்தின் கட்டாயமே அன்றி ‘தேசப்பிதா’வால் பெறப்பட்டதல்ல.

வன்முறையை அகிம்சை வெல்லவில்லை
காந்தி மகாத்மா அல்ல.
உண்மையை பொய்களால் மூட முடியாது

இரவின் இருளை  பிடித்துவைக்க முடியாது
விடியும் பொழுது இருளை ஒளி அகற்றும்.

இது தான் வரலாறு, இது தான் நிகழ் காலம் !

இந்த நிலையில்,
இவ்வள‌வு மோசமான ஒரு நிலையில்
தன் மக்களை நேசிக்க கூடிய யாரும்
தன் நாட்டை நேசிக்க கூடிய எவனும்
உண்மைகளை காண மறுக்க மாட்டான்
உண்மையை கண்டடையும் போது ஆகஸ்ட் 15  ஐ மட்டுமல்ல‌
நம் மூளைக்குள் தங்கிவிட்ட
இன்னும் பல‌ பொய்களையும் அறிந்து கொள்ளலாம்.

உண்மைகளை காணுங்கள்.

related

“அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை,
விடுதலையும் இல்லை”


விடுதலைப் போரின் வரலாறு


காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

19 responses to “சுதந்திரம் – பொய்யும் புனைசுருட்டும்..

 1. good one

 2. ///அகிம்சை காந்தியாரின் கொள்கையுமல்ல,ஆயுதமுமல்ல. உண்மையில் சொன்னால் வன்முறை தான் காந்தியின் ஆயுதமாக இருந்தது. அகிம்சை என்பது மக்களின் போர்குணத்திற்கு எதிராக வெள்ளையனால் திணிக்கப்பட்டு காந்தியாரால் பார்பனிய இந்து மதத்தின் மூலம் தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டதே ஆகும்.///

  இது தான் உண்மை

 3. மோகன்

  நீங்கள் போட்டிருக்கும் படங்கள் இந்திய மக்களை பன்றிகள் என்று கேவலப்படுத்துகிறது.

  மக்களை கேவலப்படுத்துவது யார் ?
  கம்யூனிஸ்டுகள் தான்.

  • மோகன்,

   நாம் மக்களை பிழைப்புவாத பன்றிகளோடு ஒப்பிடவில்லை.

   மேலும் இந்த அடிமைகளோடு ஒப்பிடும்போது பன்றிகள் கூட எவ்வளவோ பரவாயில்லை தானே.

   • பன்றிகளுக்கான தலைமைச்செயலகம்
    பன்றிப்பேட்டை

    தாங்கள் எங்கள் சமூகத்தினரை மிக கேவலமாக அதுவும் மானங்கெட்டு, இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் கடைந்தெடுத்த பிழைப்பு வாதியான இந்தியனோடு ஒப்பிட்டு பேசியதால் எங்கள் மனம் புண்படுகிறது. இனியும் எங்கள் கோபத்திற்கு ஆளாக வேண்டாமென தங்காஇ எச்சரிக்கிறேன். நாங்கள் பன்றிகளாக இருந்தாலும் தன்மானத்தோடு வாழ்பவர்கள் என்பதை தெரிவிக்கிறோம்.

    பன்றிகளுக்கான சோலிட்டர் ஜெனரல்
    பன்றிகளுக்கான தலைமைச்செயலகம்

  • மனிதனாக இல்லாதவன் பன்றி அல்ல அதை விட மோசம்.
   அவர்க‌ளுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு.
   பிழைப்புவாதி என்பவன் ஐந்தடி புழு அது பன்றி கூட இல்லை.

 4. இந்தியா நமது தாய் நாடு அல்ல.

 5. எளிமையான நல்ல பதிவு.
  இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு ?
  புரச்சிதானா ?

 6. பகத்சிங்

  காந்தி என்கிற விசம் நமது குழந்தைகளுக்கு
  சிறு வயது முதல் பள்ளிக்கூடம் துவங்கி அனைத்து
  இடங்களிலும் ஏற்றப்படுகிறது.
  அதை முழுமையாகவே அகற்ற வேண்டியுள்ளது.
  நாம் வேகமாகவும்,நிறையவும் மக்களிடம்
  பணிகளை செய்ய வேண்டியதை மக்களின்
  உணர்வற்ற‌ நிலை நமக்கு உணர்த்துகிறது.

 7. நல்ல பதிவு தோழர் இடைவெளி விடாமல்
  தொடர்ந்து எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்

 8. கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!
  http://www.vinavu.com/2009/08/15/august15/#comment-7894

 9. இந்திய சுதந்திரத்திற்கு
  பிறந்த நாளாம்
  இந்தியாவே
  நீ பிறந்த நாள்தான்
  எம் மக்களுக்கு துக்க நாள்…..

  இந்தியர்களின் ரத்தம்
  கொதிக்கலாம் இன்னும்
  எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
  கொதிக்கட்டும் மானத்தை
  இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
  எரிவதை பிடுங்கினால்
  கொதிப்பது அடங்குமாம்
  ஆனால் இங்கு
  நடப்பதே வேறு
  மனிதத்தை,சுயமரியாதையை
  பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
  கொதிக்கிறதோ இந்தியம் ….

  ஆயிரம் செண்ட் அடித்தாலும்
  துரோகத்தின் ரத்த கவுச்சி
  போவதில்லை – உழைக்கும் மக்களின்
  ரத்தத்தை நக்கிக்கொண்டே
  உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……………………..

  http://kalagam.wordpress.com/2009/08/15/%e0%ae%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-15/

 10. ஆகஸ்டு 15க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்..

 11. மனிதன் மனிதனாக ஆகாதவரை அதாவது மனிதன் என்பதன் முழுப்பொருளில் ஆகாதவரை அவனுக்கு சுதந்திரமும் தெரியாது சுதந்திரமின்மையும் புரியாது. இந்திய மக்கட்தொகையில் ஒரு விடுமுறை நாளாகவன்றி சுதந்திரத்தை தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

  தோழமையுடன்
  செங்கொடி

 12. ஐயா வணக்கம்..
  உங்களின் வலை தளத்தை நான் கொஞ்ச நாட்களகாவே படித்து வருகிறேன்.. ஒன்று மிகவும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்ளவும் இல்லை. இன்டியாயனாக இருக்க விருபா பாடவும் இல்லை.. தமிழனாக இருக்க விருப்ப படுகிறிர்களா என்று எனக்கு தெரிய வில்லை.. சரி விஷயத்துக்கு வருவோம்.. நீங்கள் உங்க வலை பதிவில் முழக்கமிட்டு கொண்டு இருக்கும் விஷயம் வேற ஒன்றும் இல்லை.. கம்யூனிசம்.. சோசியலிசம்.. உங்களுக்கு தேவை இது ரெண்டும் தான்.. சொல்ல போனால் இன்ற சூழலில் ரெண்டுக்குமே அர்த்தம் ஒன்று தான் என்று முதல்கலை நம்ப வைத்து விட்டார்கள்.. அதில் நீங்களும் ஒருவர் என்று நான் கருதுகிறேன்..

  சரி இந்திய மீது என்ன கோவம்? வறுமையா? உங்களை ஓடுகிரார்கள? அது இண்டவின் தவற? அல்ல இந்தியாவை ஆள்பவரின் தவறா? இதை நீங்க கொஞ்சம் சிந்திடு பார்க்க வேண்டும்.. கூடி வாழ்ந்தால் கோடி நம்பி எந்தை மறந்து விட்டிர்கள் போலும்.. நீங்க நினைத்து போலவ்வே இந்தியாவின் ஆதிக்கத்தில் இருது விடுதலை பெற்று விட்டிர்கள் என்று வைத்து கொள்வோம்.. ஒரு தனி தமிழ் தேசத்தை உருவாகி விடோம் என்று வைத்து கொள்வோம்.. அடுத்து என்ன? எப்படி உங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போகிறிர்கள்? வெறும் விவசாயத்தை வைத்தா? கொஞ்சம் யோசித்தu பார்த்தல் முட்டாள் தனமாக இருக்கும் உங்களுக்கு. இந்தியாவின் வரலாற்றை எடுத்து பாருங்க.. நரசிமரோ காலம் வரை இந்தியாவை ஆண்டவர்கள் ஒரு சோசியலிச கொள்கையை தான் கடை பிடித்தார்கள்..நடந்தது என்ன? இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி என்ன? கொஞ்சம் புரட்டி பாருங்க.. இன்று காபிடளிச கொள்கையினால் தான் இவளவு வளர்ச்சி இந்தியாவிற்கு. நீங்கள் இப்படி வலை பதிவு ஒன்றை திறந்து கண்ட மாணிக்கு எழுதுகிர்கலே அதுக்கு கூட இது தான் காரணம்..

  நீங்க கம்யூனிஸ்ட் என்று கூருகிர்கலே “கார்ல் மார்க்ஸ் ” தெரியுமா ? தெரியுமா என்றால் அவர் எழுதிய டாஸ் கபிடல் புத்தகத்தை பஅடிதிருகிர்கள என்று கேட்டேன்.. கண்டிப்பாக நீங்க படித்திருக்க மட்டேர்கள்..அப்படி படித்திருந்தால் நீங்க இப்படி கூற வைப் இல்லை.. இல்லை நான் படித்திருகிறேன் என்று நீங்க கூறினால் நீங்கள் கம்யூனிசம் என்ற பெயரால் ஊரை ஏமாற்ருகிர்கள் என்று தான் அர்த்தம்…

  உங்கள் ஆயுதம் ஏந்திய போரடதால் ஒன்றும் சாதிக்க முடியாது.. அதற்கு உதாரணம் வரலாற்றில் பல உண்டு.. இந்திய என்ற ஒரு தேசமே இல்லை என்று கூருகிரிகள்.. தமிழ் நாடு மட்டும் தனியாக எதனை ஆண்டுகள் போராடியது விடுதலைகாத.. கிள்ளு கீரை போல கிளி எறிந்தனர் ஆங்கிலயர்கள்.. அந்த தேசத்தை விடு நீங்கள் வெளியே வந்தால் உங்கள ஒரு ஆட்சி காலம் கூட உருப்படியாக தமிழ் நாட்டை ஆள முடியாது..

 13. ஐயா வணக்கம்..
  உங்களின் வலை தளத்தை நான் கொஞ்ச நாட்களகாவே படித்து வருகிறேன்.. ஒன்று மிகவும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்ளவும் இல்லை. இன்டியாயனாக இருக்க விருபா பாடவும் இல்லை.. தமிழனாக இருக்க விருப்ப படுகிறிர்களா என்று எனக்கு தெரிய வில்லை.. சரி விஷயத்துக்கு வருவோம்.. நீங்கள் உங்க வலை பதிவில் முழக்கமிட்டு கொண்டு இருக்கும் விஷயம் வேற ஒன்றும் இல்லை.. கம்யூனிசம்.. சோசியலிசம்.. உங்களுக்கு தேவை இது ரெண்டும் தான்.. சொல்ல போனால் இன்றைய சூழலில் ரெண்டுக்குமே அர்த்தம் ஒன்று தான் என்று முட்டாள்களை நம்ப வைத்து விட்டார்கள்.. அதில் நீங்களும் ஒருவர் என்று நான் கருதுகிறேன்..

  சரி இந்திய மீது என்ன கோவம்? வறுமையா? உங்களை ஓடுகிரார்கள? அது இந்தியாவின் தவற? அல்ல இந்தியாவை ஆள்பவரின் தவறா? இதை நீங்க கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து விட்டிர்கள் போலும்.. நீங்க நினைத்து போலவ்வே இந்தியாவின் ஆதிக்கத்தில் இருது விடுதலை பெற்று விட்டிர்கள் என்று வைத்து கொள்வோம்.. ஒரு தனி தமிழ் தேசத்தை உருவாகி விடோம் என்று வைத்து கொள்வோம்.. அடுத்து என்ன? எப்படி உங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போகிறிர்கள்? வெறும் விவசாயத்தை வைத்தா?

  கொஞ்சம் யோசித்த பார்த்தல் முட்டாள் தனமாக இருக்கும் உங்களுக்கு. இந்தியாவின் வரலாற்றை எடுத்து பாருங்க.. நரசிமரோ காலம் வரை இந்தியாவை ஆண்டவர்கள் ஒரு சோசியலிச கொள்கையை தான் கடை பிடித்தார்கள்..நடந்தது என்ன? இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி என்ன? கொஞ்சம் புரட்டி பாருங்க.. இன்று காபிடலிச கொள்கையினால் தான் இவளவு வளர்ச்சி இந்தியாவிற்கு. நீங்கள் இப்படி வலை பதிவு ஒன்றை திறந்து கண்ட மாணிக்கு எழுதுகிர்களே அதுக்கு கூட இது தான் காரணம்..

  நீங்க கம்யூனிஸ்ட் என்று கூருகிறீகளே “கார்ல் மார்க்ஸ் ” தெரியுமா ? தெரியுமா என்றால் அவர் எழுதிய டாஸ் கபிடல் புத்தகத்தை படித்திறுகிறீங்களா என்று கேட்டேன்.. கண்டிப்பாக நீங்க படித்திருக்க மட்டீர்கள்..அப்படி படித்திருந்தால் நீங்க இப்படி கூற வாய்பே இல்லை.. இல்லை நான் படித்திருகிறேன் என்று நீங்க கூறினால் நீங்கள் கம்யூனிசம் என்ற பெயரால் ஊரை ஏமாற்ருகிர்கள் என்று தான் அர்த்தம்…

  உங்கள் ஆயுதம் ஏந்திய போரடதால் ஒன்றும் சாதிக்க முடியாது.. அதற்கு உதாரணம் வரலாற்றில் பல உண்டு.. இந்திய என்ற ஒரு தேசமே இல்லை என்று கூருகிரிகள்.. தமிழ் நாடு மட்டும் தனியாக எதனை ஆண்டுகள் போராடியது விடுதலைகாத.. கிள்ளு கீரை போல கிளி எறிந்தனர் ஆங்கிலயர்கள்.. அந்த தேசத்தை விடு நீங்கள் வெளியே வந்தால் உங்கள ஒரு ஆட்சி காலம் கூட உருப்படியாக தமிழ் நாட்டை ஆள முடியாது..

  • ஐயா வணக்கம்,

   நாங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்ளவும் இல்லை. இந்தியனாக இருக்க விரும்பவும் இல்லை என்னும் மாபெரும் விடயத்தை கண்டுபிடித்தற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்..

   கம்யூனிசம், சோசலிசம் இரண்டும் ஒன்று தான் என்று நாங்கள் நினைத்திருப்பதாக தாங்கள் கூறுவது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை – ஆம். இங்கிருக்கும் தரகு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்து கொண்டு நம்மை சுரண்டி கூடிவாழ்ந்தால் அவர்களுக்கு பல்லாயிர கோடி நன்மையே!

   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, மிடில்கிலாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் என்று காமெடி பண்ணாதீர்கள்.

   நரசிம்மராவ் காலம் வரை சோசலிச பொருளாதாரம் இருந்ததா????? இதை அந்த நரசிம்மராவே உயிரோடிருந்து கேட்டிருந்தால் ஓடியிருப்பார் பின்னங்கால் பிடறியில் அடிக்க..

   எப்படி ஐயா இப்படியெல்லாம்????? உங்கள் விசாலமான பார்வையை பாராட்ட பண்டைய புலவர்வர்களாலேயே முடியாது. என்னால் மட்டும் முடியுமா என்ன?

   காரல் மார்க்ஸ் தெரியுமா? கம்யூனிசம் தெரியுமான்னு அறிவுஜீவி மாதிரி கேட்கும் போதே தெரிகிறது உங்களுக்கு எதுவும் தெரியாது என்று.

   உங்கள் பதிலை பார்த்தால் வேகும் முட்டை அனலை விட்டு பாதிலேயே வந்து எங்களுக்கு அருள் பாலிப்பது போல் தோன்றுகிறது.

   நாங்கள் தமிழ் தேசியவாதியும் அல்ல.. இந்திய தேசிய வாதியும் அல்ல..
   ஒடுக்கபடும் எல்லா தேசியங்களும் எங்களின் தேசங்களே.. நாங்கள் சர்வதேசியவாதிகள்.

   முதலில் பதிப்பை முழுவதும் படித்துவிட்டு வாருங்கள் விவாததிற்கு அல்லது ”வேர்டுபிரஸ்” தலைப்பையாவது சரியா படித்துவிட்டு வரவும்.

   அதுவும் முடியலையா, தயவு செஞ்சு வீட்லருந்து யாராச்சும் பெரியவங்கள வரசொல்லுங்க…

   • //
    நரசிம்மராவ் காலம் வரை சோசலிச பொருளாதாரம் இருந்ததா????? இதை அந்த நரசிம்மராவே உயிரோடிருந்து கேட்டிருந்தால் ஓடியிருப்பார் பின்னங்கால் பிடறியில் அடிக்க..//

    நரசிமராவ் காலம் வரை என்று நான் கூறியது நரசிமராவ் பிரதமார் ஆகும் வரை இருந்தது என்று கூறினேன்.. அவர் காலத்தில் தான் சோஷலிச கொள்கையை விட்டு இந்தியா விலகி “free market” System கொண்டு வாந்தார்.. இவரை “Father of Indian Economic Reforms” என்று கூட அழைப்பார்கள்.. இதெலாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா??

    //
    நாங்கள் தமிழ் தேசியவாதியும் அல்ல.. இந்திய தேசிய வாதியும் அல்ல..
    ஒடுக்கபடும் எல்லா தேசியங்களும் எங்களின் தேசங்களே.. நாங்கள் சர்வதேசியவாதிகள்
    //

    காலம் காலமாக கம்முனிஸ்டுகளும் சோசியலிஸ்டுகளும் உலகை ஏமாற்றுவதே இது போன்ற வசனத்தை வைத்து தானே.. நீங்கள் மட்டும் என விதி விலக்கா.. காம்ரேட்..தோழர் .. என்று புல் அரிக்கும் வார்த்தைகள் அனைத்தையும் கட்டவிழ்த்து விடுங்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s