தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1

ஸ்டாலின் குரு என்கிற தமிழ்தேசியவாதியுடன்
நாம் நடத்தும் விவாத‌ பின்ணூட்டங்கள்
அனைத்தும் இந்த‌ விவாதம் முடிவுறும் வரை
இங்கு தனி ஒரு பதிவாக இடப்படும்.
இது விவாதத்தின் முதல்பகுதி.

ஸ்டாலின் குருவுடன் அசுரன் நடத்திய‌
விவாதத்திற்கான சுட்டி கீழே.

http://tamilparai.blogspot.com/2009/08/blog-post.html

internationalists

தமிழ்தேசியவாதி ஸ்டாலின்குருவுடன் ஒரு விவாதம்.

அவருடைய தளம்.

http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_12.html#comments

bagat said…
உங்களுடன் விவாதிக்க வேண்டும் ஸ்டாலின் குரு அவர்களே
விவாதத்தை துவங்கலாமா ?
உங்களுடைய தளத்திலேயே விவாதிக்கலாமா ?
உங்க‌ளுடைய விருப்பப்படியே பதிலுக்கு காத்திருக்கிறோம்.
August 12, 2009 1:04 AM

ஸ்டாலின் குரு said…
தாராளமாக இங்கேயே விவாதிப்போம்
August 12, 2009 1:30 AM

சர்வதேசியவாதிகள் said…
இந்த பதிலை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்
அதாவது இங்கேயே விவாதிப்போம் என்கிற‌ பதிலை.
உங்களுடன் விவாதிக்கலாம் தான் ஆனால் அதை
எமது தளத்தில் வைத்துக்கொள்வதே நல்லது என்று கருதுகிறோம்.
ஏனெனில் 2007 ம் ஆண்டு ஆர்குட்டில் உங்களுடன் விவாதித்த‌
எங்களுடைய தோழர் ரஞ்சித் ஸ்டாலினுடைய அனைத்து
ஸ்கிராப்புகளையும் நீங்கள் நீக்கியுள்ளீர்கள்.
இல்லை அவ்வாறு நீக்கவில்லை என்றால் அந்த ஸ்க்ராப்களை
காட்ட முடியுமா ?
எனவே தற்போதைய இந்த விவாதத்ததிலும் அதுபோல எதுவும்
நடக்க வேண்டாம் என நாங்கள் விரும்புகிறோம்.அதனால் இந்த‌
விவாதத்தை எமது தளத்தில் நடத்துவதே சரி என்று கருதுகிறோம்.
உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள்.
விவாதத்தை துவக்குவோம்.

https://vrinternationalists.wordpress.com
August 15, 2009 1:46 AM


ஸ்டாலின் குரு said…

ஸ்டாலின் ரஞ்சித்துடன் நான் ஸ்க்ராப் புக்கில் விவாதித்தேனா? எப்பொழுது அந்த சம்பவம் நடந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்

ஸ்க்ராப் புக்கில் உரையாட மட்டுமே செய்தோம்.எனது பதிவுகளைத் தவிர என் ஸ்க்ராபில் எந்த உரையாடலையும் நான் வைத்துகொள்வதில்லை,எனது ஸ்க்ராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பது எனது விருப்பம்.

ஸ்க்ராப் புக்கை கண்காணிப்பு செய்யும் மக்கள் கமிசாராக உங்களை யார் நியமித்தது என்று அறியலாமா?

அது சரி புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள் என்கிற தலைப்பில் என்னோடு விவாதித்த அசுரன் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதபோது விவாதிக்க நேரம் இல்லை என்று சொல்லிய பிறகு தனது பிளாக்கில் எந்த பதிவுகளையும் இடாமல்தான் இருந்தாரா?

சிபிஎம் கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும் டவுசர் கழண்ட சந்திப்பும்
என்கிற தலைப்பில் நான் இட்ட பின்னூட்டங்களை இரண்டு நாட்கள் கழித்தே பிரசுரித்தாரே அப்பொழுது நான் ஏதும் கேள்விகள் கேட்டேனா உங்களை ?

அவ்வளவு பயத்துடன் வந்து என்னுடன் விவாதிக்குமாறு உங்களை வருந்தி அழைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நீங்கள் தாராளமாக உங்கள் அன்பு
சர்வதேசியவாதிகளுடனே கூடிக் குலாவிக் கொண்டிருங்கள்.
August 16, 2009 10:36 PM

சர்வதேசவாதிகள் said…

ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் விவாதிக்கவே இல்லை
அப்படி ஒன்று நடக்கவே இல்லை இல்லையா ?
நல்லது,சரி அது போகட்டும்.

உங்களுடைய பிளாக்கிலேயே விவாதம் செய்வோம் ஆனால் அப்போது ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் ‘சும்மா பேசியதை’ஸ்கிராப் புக்கில் டெலிட் செய்ததை போல தற்போது உங்கள்
பிளாக்கில் நடக்கும் விவாத பின்ணூட்டங்களை அழிக்க மாட்டீர்களே?

அசுரன் இரண்டு நாட்கள் கழித்து பின்ணூட்டங்களை வெளியிட்டார்,இருந்தும் நான் எதுவும் கேள்வி கேட்டேனா என்று கேட்கிறீர்கள்
இதற்கு என்ன அர்த்தம் ? நான் கேள்வி கேட்கவில்லை அதனால நீங்களும் கேட்காதீங்கன்னு
சொல்ல வர்றீங்களா ?
உங்கள் கேள்விகளுக்கு அசுரன் பதிலளிக்கவில்லை என்றால் ஏன் பதில் சொல்லவில்லை என்று நீங்கள் தான் கேட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அப்படி கேட்டும் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது எனவே விவாதிக்க முடியவில்லை என்று அவர் பதிலளித்திருந்தால்,அப்படியானால் மற்ற பதிவுகளை மட்டும் எப்படி எழுதுகிறீர்கள் என்று நீங்கள் தான் அவரை விடாமல் கேட்டிருக்க வேண்டும்.உங்களைப்பார்த்து அவர் பயந்து ஓடுகிறார்
என்றால் நீங்களும் ஏன் அதை அனுமதித்தீர்கள்.
அசுரன் விவாதிக்க வரவே முடியாது என்று சொல்லியிருந்தாலும் நீங்கள் அவரை அம்பலப்படுத்தி ஒரு பதிவு எழுதி அவரை பொது மேடைக்கு இழுத்திருக்க வேண்டியது தானே ?

இதையெல்லாம் நீங்கள் செய்தீர்களா ?
செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ?
சரி பாவம் பொழச்சிபோகட்டும்ன்னு
பெருந்தன்மையோடு விட்டுட்டீங்களா!

ஆனால் எங்களையும் அப்படி பெருந்தன்மையுடன்
துரத்திவிடாதீர்கள்.
உங்களைப் போன்ற பெரியவர்களை கண்டு சின்னப்பசங்களான‌ எங்களுக்கு சற்று அச்சம் தான்,எனினும் உங்களிடமிருந்து துணிவை
கற்றுக்கொள்ள நாங்கள் முன் வருகிறோம்.

அசுரனிடம் நீங்கள் கேட்டு அவர் பதிலளிக்காமல் போன கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்.

விவாதத்தை துவங்கலாமா ?
August 18, 2009 12:39 AM

ஸ்டாலின் குரு said…

உங்களோடு விவாதத்தை தவிர்க்க விரும்பும் என்னுடைய
கோழைத்தனத்தை அம்பலபடுத்தி ஒரு பதிவு இடும்
வாய்ப்பை உங்களுக்கு அளிப்பதிலேயே எமக்கு விருப்பம்

)))))))
August 18, 2009 11:07 PM


ஸ்டாலின் குரு said…

உங்கள் பதிலகளை எல்லாம் பதிவாக்கி போடுங்கள்
பிறகு நான் அதற்கு எனது பிளாக்கில் பதில்
அளிக்க முயலுகிறேன்

இருவருக்கும் பிரச்சணைகள் இல்லை இந்த முறையில்
August 18, 2009 11:10 PM


சர்வதேசவாதிகள் said…

என்ன சொல்றீங்க‌ ஸ்டாலின் குரு
இப்படி ஒரு அதிர்சியை அள்ளி வீசிட்டீங்களே?

சரி விசயத்திற்கு வ‌ருகிறேன்
வார்த்தைகளில் விளையாடவேண்டாம்.
காமெடி பன்னி கவனத்தை திசை திருப்ப
வேண்டாம்.
விவாதத்தை துவக்கலாமா ?
August 19, 2009 5:28 AM


ஸ்டாலின் குரு said…

பிரபாகரனின் உள்ளாடை இது ஆண்குறி இது
என்று வட்டமிட்டு படம் காட்டிக் கொண்டு
இருக்கும் வன்மம் பிடித்த இரயாகரன்
தலைமையில் அலரி மாளிகையிலும்,
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழ்நாட்டுக்குள்ளேயே இந்திய மார்க்சிய
லெனினிய கட்சியை நடத்திக்கொண்டிருக்கும்
மக இக வின் மருதையன் தலைமையில்
டெல்லி செங்கோட்டையிலும் செங்கொடி
ஏற்றுவதை புலிகள் குறுக்கே விழுந்து
கையைக் காலை உதைத்து அழுது தடுத்து
விட்டதாக ஓவர் பிலடப் கொடுக்கும்
அதிபுத்திசாலிகளிடம் ஒரு புலி ஆதரவாளன்
விவாதிக்க பயம் கொள்வதன் நியாயம்
புரியவில்லையா பிரதர் உங்களுக்கு
August 19, 2009 11:12 PM

இதற்கு நாம் பதிலளித்த பின்னூட்டத்தை ஸ்டாலின் குரு அவருடைய தளத்தில் பதிக்க அனுமதிக்கவில்லை.

நாம் அளித்த பின்னூட்டத்தை பதிக்க அனுமதிக்காததன் காரணம் கேட்டு மறுபடியும் பின்னூட்டமிட்டோம். அதுவும் இதுவரை அனுமதிக்கபடவில்லை.

இதோ அந்த பின்னூட்டம்:

ஸ்டாலின் குரு, இது தான் உங்கள் விவாதத்தின் நேர்மையா?
எங்கள் கடைசி பதிவை போடாமல் உங்கள் பிளாகிற்கு முக்காடு போடும் இந்த விதத்தை
என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?
உங்கள் ஸ்கிராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனும் பாணியில் உங்கள் பிளாகிலும் எதை வைப்பது எதை நீக்குவது என்பதையும் “நான் தான் முடிவு செய்வேன்” என்று வீர வசனம் பேச போகிறீர்களா?
உங்களை விவாதிக்க அழைத்தபோது “தாரளமாக இங்கேயே விவாதிக்கலாம்” என்று இதனால் தான் அழைத்தீர்களா?

ஸ்டாலின் குரு, இது தான் உங்கள் விவாதத்தின் நேர்மையா?
எங்கள் கடைசி பதிவை போடாமல் உங்கள் பிளாகிற்கு முக்காடு போடும் இந்த விதத்தை
என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?
உங்கள் ஸ்கிராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனும் பாணியில் உங்கள் பிளாகிலும் எதை வைப்பது எதை நீக்குவது என்பதையும் “நான் தான் முடிவு செய்வேன்” என்று வீர வசனம் பேச போகிறீர்களா?
உங்களை விவாதிக்க அழைத்தபோது “தாரளமாக இங்கேயே விவாதிக்கலாம்” என்று இதனால் தான் அழைத்தீர்களா?

நம் அளித்த பின்ணூட்டம் முன்று நாட்களுக்கு
பிறகு தற்போது விடுதலையாகியுள்ளதை
தொடர்ந்து அதையும் அதற்கு அவருடைய‌
பதிலையும் நமது பதிலையும் இங்கு பதிப்பிக்கிறோம்.

ஸ்டாலின் குருவுடன் அசுரன் நடத்திய‌
விவாதத்திற்கான சுட்டி கீழே.

http://tamilparai.blogspot.com/2009/08/blog-post.html

தமிழ்தேசியவாதி ஸ்டாலின்குருவுடன் ஒரு விவாதம்.

அவருடைய தளம்.

http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_12.html#comments


சர்வதேசவாதிகள் said…
நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?
August 20, 2009 1:15 AM


ஸ்டாலின் குரு said…

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?///

யார் அந்த இந்திய தேசியவாதிகள்?

இந்திய ஆளும் வர்க்கமா?

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_6001.html

இந்த பதிவில் ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்

என்னும்போது உங்கள் அமைப்போடு தொடபுபடாத வேறு
ஒரு தலைப்பை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்
August 20, 2009 11:56 PM


ஸ்டாலின் குரு said…

நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.///

இழிவுபடுத்துவதை கண்டு கோபம் கொள்வது
வேறு,ரசிப்பது வேறு,இதில் இரயாகரன் எந்த
பகக்த்தில் இருந்து அந்த பதிவை பதிந்திருப்பார்
என்பதை புரிந்துகொள்வதில் ஒன்றும் சிரமமில்லை
எமக்கு
August 21, 2009 12:01 AM

சர்வதேசவாதிகள் said…

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌

அவை இருக்கட்டு

இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?

அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?

இதற்கு பதில் சொல்லுங்கள் குரு ?

August 23, 2009 4:00 AM

ஸ்டாலின் குரு said…

இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?

இல்லை

அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?//

அணுகினார்கள் என்பது உண்மை அதற்காக என்ன
விலை கொடுக்க முன்வந்தார்கள் என்பதுதான் கேள்வி
August 24, 2009 12:08 AM


ஸ்டாலின் குரு said…

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌///

எமது பார்வைக்கு, உங்கள் தலைவரையே இந்த கதிக்கு ஆளாக்கிய எங்களால்
உங்களையும் போராட்டததையும என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை
புரிந்துகொள்ளுங்கள் என்று தமிழ் மக்களை மிரட்ட சிங்கள ராணுவம் பயன்படுத்திய
இந்த விசயத்துக்கு இரயாகரனும் துணை போகிறார் என்று தெரிகிறது என்ன செய்ய
August 24, 2009 12:15 AM


சர்வதேசவாதிகள் said…

உங்களுக்கான  பதிலை தோழர் ரயாகரன்  எமது தளத்தில் பின்ணுட்டமாக போட்டுள்ளார் இதோ அந்த பதில்‌.

தமிழ் அரங்கம்

11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009

தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.பி.இரயா

August 24, 2009 1:52 AM

சர்வதேசவாதிகள் Said

இந்தியாவை புலிகள் தமது நட்பு சக்தியாக கருதவில்லையா ?
நெஞ்சே வெடித்து விடுவதைப் போன்ற கடுமையான அதிர்ச்சி
தரும் செய்திகளையெல்லாம் கூட நீங்கள் மிகவும் சிம்பிளாக‌
தருகிறீர்கள் !

புலிக்கு தத்துவ விளக்க நூல் எழுதியதும் அதையே அனைத்து இடங்களிலும் பேசியதும் நீங்களா இல்லை ஆன்டன் பாலசிங்கமா ?
புலிகளுடைய அரசியலுக்கு அவர்களுக்கே புரியாத‌ புதிய விளக்கம் தருகிறீர்கள்.

உங்க‌ளுடைய கூற்றுக்கு என்ன ஆதார‌ம் ?

புலிகள் இந்தியாவுக்கு வால் பிடித்தார்கள் என்பதை ஆன்டன் பாலசிங்கத்தினுடைய பேச்சிலும் பிரபாகரனுடைய மவீரர் நாள்
உரையிலும் நீங்கள் கேட்கலாம்.

இதோ இணைப்புகள்.

http://www.orunews.com/?p=2793

http://www.pulikalinkural.com/

அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?

விடுதலைப் புலிகள் மாவீரர் உரை இந்தியா நட்பு சக்தி

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml

ஸ்டாலின் குரு said…
///தமிழ் அரங்கம்
11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்

இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.

பி.இரயா///

நல்ல மனநல மருத்துவரை பார்க்கச் சொல்லவும்

August 25, 2009 12:12 AM
ஸ்டாலின் குரு said…
அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?///சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது
)))))))

August 25, 2009 12:18 AM
ஸ்டாலின் குரு said…
ஏகாதிபத்தியத்தை புலிகள் நட்புச்சக்தியாக
கருதினார்களாம் அடடா என்ன கண்டுபிடிப்புஈழத்தின் புல்மோட்டையில் இருந்து இலிமனைட்
தாதுப்பொருளை ஏற்றிகொண்டு சென்ற அமெரிக்க
கப்பலை கடற்புலிகள் தாக்கி அழித்ததை தொடர்ந்தே
புலிகளை அமெரிக்கா தடை செய்திருந்தது.ஏகாதிபத்தியங்களுக்கு இடையே உள்ள
முரண்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளவே
புலிகள் விழைந்தார்கள்.

August 25, 2009 12:26 AM
ஸ்டாலின் குரு said…
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.htmlஅப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறதுஉங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.

August 25, 2009 12:35 AM
ஸ்டாலின் குரு said…
மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்

August 25, 2009 12:38 AM
சர்வதேசவாதிகள் said…
/////////சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது.////////////உண்மை தான் ஆனால் மாவோ போய் நிக்சனை சந்திக்கவில்லை மாறாக நிக்சன் தான் சினாவிற்கு வந்த போது மாவோவை சந்தித்தார்.
மேலும் மாவோ நிக்சனிடம் போய் எங்களுக்கு மக்கள் சீனத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றோ,அல்லது எமது புரட்சிக்கு கரம் நீட்டி உதவுங்கள் என்றோ ம‌ன்றாடிக்கொண்டிருக்கவில்லை.

அமெரிக்கா என்பது யார்,அதனுடைய தன்மை என்ன அது சீன மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக மக்களுக்குமே எதிரி என்பதை மாவோ தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்.
அதன் படி தான் அவர் அமெரிக்காவை அனுகினார்.

பிரபாகரன் எங்கேயாவது அமெரிக்காவுக்கு எதிராக எழுதியிருக்கிறாரா அல்லது பேசியிருக்கிறாரா ? அப்படி எழுதியோ பேசியோ இருப்பின் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாரா ?

August 25, 2009 10:47 PM

சர்வதேசவாதிகள் said…
///////////////////////////////////////////////////////////////////////
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.htmlஅப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறது
உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.
////////////////////////////////////////////////////////////////////////

கேட்கிற கேள்விக்கு நாணயமா பதில் சொல்லிப்பழகுங்க‌
மயக்கம் உடனே தெளிந்து விடும்.

நேற்று எழுதியது,முந்தின நாள் எழுதியது எல்லாம் எதற்கு
விவாதம் நடப்பது இன்று,அதே பதிலை இன்றைக்கு சொல்லுங்களேன்.
ஏன் ஒரு கருத்தை ஒரு முறைக்கு மேல் சொல்ல மாட்டீங்களோ ?

உங்களுடைய தேவயற்ற மொக்கை பதிலுக்கு
பதில் சொல்லி நான் விவாதத்திற்கு வெளியே செல்ல‌
விரும்பவில்லை.

அதனால நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க.

August 25, 2009 10:59 PM
//////////////////////////////////////////////////////////////////////////
மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்.
//////////////////////////////////////////////////////////////////////////

அஹா என்னே ஒரு ஜனநாயக பண்பு.
எமது அமைப்பை பற்றி அவதூறாக‌
எழுதுவாராம்,அதற்கு பதில் சொல்வதற்கு
நாம் வர முடியாதபடி தடை போடுவாராம்.
இதுவே ஒரு போலி ஜனநாயக நாடு இந்த நாட்டில்
ஒரு தமிழ்தேசியவாதி வாழ்ந்தால் ஜனநாயகம் பற்றி
கேட்கவா வேண்டும்.

நல்லது
இருக்கட்டும்,இருக்கட்டும்..
கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க.
எல்லோரும் பார்த்திட்ருக்காங்க :)

August 25, 2009 11:05 PM

இதற்கு பிறகு இன்று வரை (27.08.09) ஒரு பதிலும் இல்லை.


80 responses to “தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1

 1. தோழரே வணக்கம்.
  நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் அப்படி ஒரு பிளாகே இல்லையே.

  http://trovkin.blogspot.com/2009/08/blog-post_12.html#comments

  • தோழர்,அவர் தனது வலைபதிவையே அழித்து விட்டார்.
   நேர்மை, துணிச்சல் இருக்குமிடத்தில் பதில் கிடைத்திருக்கும். இவை இல்லாதவர்களிடம் பதில் கிடைக்காது. ”காணவில்லை” என்ற செய்தி தான் கிடைக்கும். இது தான் வரலாறு நெடுகிலும் நிருபணம் ஆகியுள்ளது. இவரும் ஒரு உதாரணம்.

 2. புலிகள் தோற்றவுடன் விமர்சனம் செய்த
  மக இக பேச்சு புலிகளுக்கு வணக்கம்

  ஈழம் ஒரு மறு ஆய்வு புலிகள் செய்த தவறுகள்

  என புத்தகம் போட்டு விற்ற நீங்கள்

  இந்த அறிவுரையை தேர்தலுக்கு முன் ஏன் சொல்லவில்லை

  • சித்தார்த்த‌ன்

   தேர்தலுக்கு முன்னாடி இல்லை அதற்கும் முன்னால்
   25 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்,புலிகளை பற்றி.

   மேலும் அந்த நூல்கள் அனைத்தும் தேர்தல் நேரத்தில்
   தான் வெளி வந்தன.

   தாங்கள் யார் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ?

 3. நான் யாராக இருந்தால் என்ன

  சரி முன்பு சொன்ன அறிவுரை சரியாக மே 17 க்கு பிறகு விற்பனைக்கு

  வந்ததா நம்பிட்டோம்

  புலிகள் தீர்வல்ல சரி என்ன தீர்வு

  இரயாகரன் கூறும் தீர்வு சரியா அதாவது சிங்கள மக்களை உள்ளடக்கிய

  வர்க்க போராட்டம் இலங்கை மேலாதிக்கத்தையும் இந்திய மேலாதிக்கத்தையும்

  எதிர்த்து போராடி போராடி ஈழத்தை வெல்ல வேண்டும்

  வெறும் காகித போராட்டமாக தெரியவில்லையா

  • சித்தார்த்த‌ன்

   நீங்கள் எமது வெளியீடுகள் எதையும் வாசிப்பதில்லை
   அல்லது எம் மீதான ஒருதலை பட்ச‌ பார்வையிலிருந்து
   வாசிப்பது.விமர்சனங்களை வெறுப்புடன் அனுகுவது
   ஆகிய‌வ‌ற்றால் உங்க‌ளுக்கு உண்மைக‌ளை அறிய‌
   இயலாது போகிறது,அதன் காரணமாக‌ எம் மீது
   வெறுப்பை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

   உங்க‌ள் கூற்றுப்ப‌டி 17ம் தேதி வ‌ரை புலிக‌ளை
   கொண்டாடிவிட்டு அத‌ன் பிற‌‌கு விம‌ர்சன‌‌ங்க‌ளை
   சாஃப்டாக‌ சந்துக்குள் நுழைக்கும் இழிவான‌ வேலையை‌
   த‌மிழ்தேசிய‌வாதிக‌ள் தான் செய்துவ‌ருகிறார்க‌ள்.

   மார்க்சியவாதிகளான நாங்கள் எதையும் த‌மிழ்தேசிய‌ர்களை
   போல குருட்டுத்த‌ன‌மாக‌வும்,உண‌ர்ச்சிப்பூர்வமாகவும்
   பார்ப்பதுமில்லை,அனுகுவதுமில்லை.
   எனவே எமது அமைப்பு என்றைக்கும்
   புலிகளை தலையில் வைத்துக் கொண்டாடியதும் இல்லை.
   மாறாக அவர்களுடைய இராணுவவாத,சாகசவாத‌
   ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தொட‌ர்ச்சியாக விம‌ர்ச‌ன‌ம்
   செய்து வந்திருகிறோம்.த‌மிழ‌க‌த்தில் இதை பல்வேறு
   எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து வந்தது,வ‌ருவ‌து
   ம‌.க‌.இ.க மட்டும் தான்.

   மார்ச்,ஏப்ர‌ல்,மே மாத‌ங்க‌ளில் ஏன் விம‌ர்சிக்க‌வில்லை
   என்று கேட்கிறீர்க‌ள்.
   அதையும் முன்பே சொல்லியுள்ளேன்,
   நாங்க‌ள் த‌மிழ்தேசிய‌ர்களை போல‌ மூட‌ர்க‌ள் அல்ல
   எதை எப்போது செய்ய‌ வேண்டும் என்கிற‌ சொந்த
   அறிவு இருப்பதால் அதன் படி நடக்கிறோம்.

   இல‌ங்கையில் என்ன‌ செய்ய‌ வேண்டும் வ‌ர்க்க‌புர‌ட்சியா,
   தேசிய‌ புர‌ட்சியா என்பதையெல்லாம் நீங்களோ ம‌.க‌.இ.க வோ
   ஆய்வு செய்து சொல்ல‌ வேண்டிய அவசியம் இல்லை.
   அது ந‌ம‌து வேலையும் இல்லை‌.அதை அந்த‌ ம‌க்களே முடிவு
   செய்து‌ கொள்வார்க‌ள்.மாறாக அவர்களுக்கு எந்த வகைகளில்
   உதவ முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் உதவுவது தான்
   நமது சரியான கடமை.

   நேபாளில் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ப‌தை நேபாளிகளுக்கு
   நாமா சொல்லிக் கொடுத்தோம் ?

  • புலி அரசியல் எப்படி தீர்வு இல்லை
   என்ப‌தை நாம் விள‌க்கியுள்ளோம்
   இல்லை அது தான் தீர்வு என்றால்
   அது எப்ப‌டி என்ப‌தை ம‌திப்பிற்குரிய
   த‌லைவர் மாவோ பெயரை சூட்டியுள்ள,
   தன்னை யார் என்று அறிவித்துக்கொள்ள‌
   விரும்பாத ‘மறத்தமிழன்’
   நமக்கு விளக்குவாரா ?

  • எனக்கு ஒன்னு தெரிந்தாக வேண்டும்.
   எங்களுக்கு தான் தேசம் என ஒன்று கிடையாது.
   ஆனால் தேசிய‌வாதியான‌ நீங்கள் எப்படி இன்னொரு
   நாட்டின் தேசிய தலைவரான மாவோ வுடைய
   பெயரை வைத்துக்கொள்ளலாம்.

   இது தேசியமா
   சர்வதேசியமா ?

  • மாபெரும் அந்த பாட்டாளிவர்க்கத்தலைவரி பெயரை வைத்துக்கொண்டு கோபப்படாதீர்கள்.
   தோழர் இரயாகரன் கூற்று தவறில்லை. அந்தபுத்தகங்கள் விற்பனைக்கு வந்தது தேர்தலுக்கு பிறகாயிருக்கலாம். ஏன் 17க்குமுன் புலிகளை விமரிசனம் செய்ய வில்லையா என்ன? பழைய புதிய ஜன நாயகத்தை படியுங்கள் , இந்திய மேலாதிக்கம் சிங்கள பேரினவாதம், புலிகளின் பாசிசத்தலைமையை சரியாகவே அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

   அது தவறு எனில் தீர்வு தமிழ் தேசியத்தை எப்படி கட்டியமைப்பீர்கள்? தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களிடம் ஐக்கியத்தை ஏற்படுத்தாமல் உங்களால் சாத்தியமா? நீங்கள் சாதியை மீறி தமிழ் தேசியத்தை எப்படி கட்டுவீர்கள் . நாமெல்லோரும் ஒரே இனம் என சொல்லித்தானே.

   அப்படி ஏன் ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடு உழைக்கும் தமிழ் மக்களும் இணைந்து புரட்சி செய்ய முடியாது ஒரே வர்க்கமாய்? பாசிச ஹிட்லரின் ஆட்சியின் போது ஜெர்மானியர்கள் புரட்சிக்காக உயிரைத்தரவில்லையா?

   இலங்கையில் யார் நம் எதிரி சிங்களனா? அல்லது சிங்கள இனவெறியர்களா? இரன்டுக்கும் வித்யாசத்தை காணுங்கள், பாலாறு பிரச்சினையில் ஒட்டுமொத்த ஆந்திர மக்களும் நம் எதிரியா? பிறகெப்படி கொளத்தூர் மணி ஆந்திர பல்கலையில் ஈழம் சம்பந்தமாக உரையாற்றினார்.

   அப்படி எனில் தமிழர்களை சுரண்டும் தமிழனை என்னவென்று அழைப்பீர்கள்? அவன் நட்பு சக்தியா? உழைக்கும் மக்களுக்கு யார் எதிராய் இருந்தாலும் அவர்கள் எதிரிகளே.மீண்டும் சொல்கிறோம் இந்திய மேலாதிக்கத்தை நம்பி பலியான நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கள் இல்லையேல் உழைக்கும் மக்களால் காற்றோடு காற்றாய் கலக்கப்படுவீர்கள்

   கலகம்

 4. \\பிரபாகரனின் உள்ளாடை இது ஆண்குறி இது
  என்று வட்டமிட்டு படம் காட்டிக் கொண்டு
  இருக்கும் வன்மம் பிடித்த இரயாகரன்
  தலைமையில் அலரி மாளிகையிலும்\\

  அய்ய குரூ ,(ஸ்டாலின் பெயர் வேண்டாம்)

  வன்மமா , சொந்தத்தலைவன் கொல்லப்பட்டிருக்கிறார். எப்படி யார் செய்த துரோகத்தால் என சொல்ல வக்கில்லை . இன்னமும் வருவார் நாளை கிடைக்குமென்று படம் காட்டிக்கொண்டு திரிகிறீர்கள்?வெட்கமாயில்லை சொந்த தலைவனை சித்திரவதைக்குப்பிறகு கொன்று போட்டிருக்கிறார்கள். அதை சொல்ல எது தடுக்கிறது, தேர்தலுக்கு முன் செயா வீட்டில் தின்ன நெய்யா?

  பிரபாகனை வைத்து பொறுக்கி தின்பதற்காக இன்னும் அவர் இருப்பு தேவைப்படுகிறதல்லவா உங்களுக்கு.

  கலகம்

 5. தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

  சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்

  இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.

  பி.இரயா

 6. //அப்படி ஏன் ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடு உழைக்கும் தமிழ் மக்களும் இணைந்து புரட்சி செய்ய முடியாது ஒரே வர்க்கமாய்? பாசிச ஹிட்லரின் ஆட்சியின் போது ஜெர்மானியர்கள் புரட்சிக்காக உயிரைத்தரவில்லையா?

  //

  ஒடுக்கப்படும் மக்களும் ஒடுக்கும் மக்களும்

  ஒரே பாட்டாளிகள் தாம் எப்படி ஒன்றினைப்பீர்கள்

  உதாரணமாக தமிழனை நடுவீதியில் கொன்றவன் சிங்கள சாதாரண மக்கள் தாம்

  அவர்கள் எந்த வர்க்கம்

  வர்க்கமாக பிரிந்து இருக்கிறதா இலங்கை

  அல்லது இனரீதியாக பிரிந்து இருக்கிறது

  எது தலையாய முரண்பாடு

  • சித்தார்த்த‌ன்

   நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே திருவாளர் ‘மாவோ’ அவர்களே ?

 7. புலி அரசியல் எப்படி தீர்வு இல்லை
  என்ப‌தை நாம் விள‌க்கியுள்ளோம்
  இல்லை அது தான் தீர்வு என்றால்
  அது எப்ப‌டி என்ப‌தை ம‌திப்பிற்குரிய
  த‌லைவர் மாவோ பெயரை சூட்டியுள்ள,
  தன்னை யார் என்று அறிவித்துக்கொள்ள‌
  விரும்பாத ‘மறத்தமிழன்’
  நமக்கு விளக்குவாரா ?

  மாணவனுக்கு

  புலி அரசியல் தீர்வு இல்லை என்றால் மாற்று தீர்வு என்ன வென சொல்லவேண்டும்

 8. //தன்னை யார் என்று அறிவித்துக்கொள்ள‌
  விரும்பாத ‘மறத்தமிழன்’
  நமக்கு விளக்குவாரா //

  என்ன மாணவன்

  மக இக வில எத்தனை வருசமா இருக்கீங்க

  நீங்க இனையத்தில் சொந்த பேரிலா எழுதுரீங்க

  அசுரன் ,கலகம் இதெல்லாம் சொந்த பேரா

  என்னை மட்டும் பேர் கேட்டு சோக்கடிக்காதீங்க

  புரட்சி தமிழனே

  • மார்க்சிய மாணவன்

   ஹைய்யோ ஹைய்யோ..
   அசுரன்,கலகம் என்கிற பெயர்களில் எழுதும் எங்கள் தோழர்கள் எங்கேயாவது
   தமது அரசியலுக்கு முக்காடு போட்டுக்கொண்டிருக்கிறார்களா ?

   நங்கள் அனைவரும் புரட்சிகர அமைப்பான ம.க.இ.க வில் தான் இருக்கிறோம்,
   இதை எங்கேயாவது மறைத்திருக்கிறோமா ?

   நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்
   நான் கேட்டது உங்கள் சொந்த பெயரை அல்ல.
   உங்களுடைய அரசியலை.

   உங்கள் அரசியல் மார்க்சியம் அல்ல‌ இனவாதம் என்பது
   எல்லோருக்கும் தெரிகிறது.
   இனவாதிகள் தான் பலபல, கலர்களில் இருக்கிறர்களே
   நீங்கள் எந்த கட்சி,அமைப்பை சேர்ந்த‌வர் என்பதை தான் கேட்கிறேன்.

   மாற்று என்ன என்பதை ஈழ புரட்சியின் இளம் குருத்துக்கள்
   முடிவு செய்வார்கள்.
   புலிகள் புரட்சியாளர்கள் அல்ல.
   புலி அரசியல் என்ன தீர்வை முன் வைத்து அதை எப்படி முன்னெடுத்தது ?

 9. //நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்
  நான் கேட்டது உங்கள் சொந்த பெயரை அல்ல.
  உங்களுடைய அரசியலை.//

  உங்கள் அரசியல் என்னவென்றுதானே கேட்டிருக்க வேண்டும்

 10. //சரி. உங்கள் அரசியல் என்ன?

  //

  எந்த அரசியலும் சரியான தீர்வு தரவில்லை என்பது எனது அரசியல்

 11. எந்த அரசியலும் சரியான தீர்வு தரவில்லை என்பது எனது அரசியல்//

  இதை தான் விஜயகாந்த் முதல் சரத்குமார், கார்த்திக், விஜய T.ராஜேந்திரர் வரை உள்ள காமெடி பீசுகள் வழமையான வாக்கியமாக சொல்லுகின்றனர். இதன் பின்னணியில் அறிவியல் பூர்வமான எந்த ஒரு அரசியல் தத்துவமோ, கொள்கையோ இல்லை. இவர்களை போல் தானா நீங்களும்?இல்லையெனில் சொல்வதற்கு தயக்கம் ஏன்? நேர்மையும் துணிச்சலும் உள்ள அமைப்பில் உள்ளவர்கள் என்றுமே தன் அரசியலை மறைப்பதில்லை.

 12. //இவர்களை போல் தானா நீங்களும்?இல்லையெனில் சொல்வதற்கு தயக்கம் ஏன்? நேர்மையும் துணிச்சலும் உள்ள அமைப்பில் உள்ளவர்கள் என்றுமே தன் அரசியலை மறைப்பதில்லை.
  //

  இதுதான் எனது அரசியல் என்று சொன்னால்தான் எந்த விவாதத்துக்கும் வருவீர்களா

  ஏன் இந்த அரசியல் கொண்டவனுக்கு இந்த பதில் சொல்லனும் என ஹோம் ஒர்க் செய்வீர்களா

  கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க கத்து தரவில்லையா உங்கள் அமைப்பில்

  • ஜூலிஸ் ஃபூசிக்

   ’எங்க போனாலும் நம்ம டவுசர மட்டும் காட்டிடாத. அது தெரிஞ்சா அவுத்துவிட்ருவாங்க இந்த பாவி பசங்க’ ன்னு தெளிவா அறிவுரையெல்லாம் சொல்லி கொடுத்திருக்காங்களா உங்கள் அமைப்பில்? அதனால தான் பயமா?

   சரி விடயத்திற்கு வருவோம்.

   //தமிழனை நடுவீதியில் கொன்றவன் சிங்கள சாதாரண மக்கள் தாம். அவர்கள் எந்த வர்க்கம்
   வர்க்கமாக பிரிந்து இருக்கிறதா இலங்கை அல்லது இனரீதியாக பிரிந்து இருக்கிறது
   எது தலையாய முரண்பாடு//

   இலங்கையில் பாட்டாளி வர்க்கமே இல்லையா?

 13. //தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

  //

  இரயாகரன் இந்த தகவல்களை எந்த அடிப்படையில் உறுதி செய்கிறீர்கள்

 14. //தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

  //

  அல்லது நீங்கள் சொல்வது சரி என நீங்கள் சொல்லிவிட்டாலே நம்பி விட வேண்டுமா

 15. இத பாத்தா ஏதோ டீ கடை பெஞ்ச் அரசியல் மாதிரி இருக்கு எனக்கு.. ஹ்ம்ம்

 16. ஜூலிஸ் ஃபூசிக்

  ஓ..நீங்க காஃபி டே பென்ச் ரேஞ்சுல எதிர்பார்த்தீர்களோ?

  ’டீ கடை பெஞ்ச் அரசியல்’ என்று மட்டமாக நினைத்து விடவேண்டாம். தமிழ் நாட்டில் பல மக்கள் டீ கடை பெஞ்சில் தான் அரசியல் நிகழ்வுகளை செய்திதாள்கள் வழியாக தெரிந்து கொண்டார்கள்.

 17. “டீ கடை பெஞ்ச் அரசியல்” என்றால் உங்களுக்கு என்ன என்று தெரிந்திருக்கும் என்று நினைதேன்.. பாவம் ஏதோ தெரியாமல் உளறுகிறீகள் .. சரி அதையும் நானே சொல்லி தொலைகிறேன்..

  டீ கடையில் பார்த்திர்கள் என்றால் ஏதோ ஒரு பத்திரிகை தாளை படித்து விடு அது தான் உண்மை என்று நம்பி அதை வைத்து இரண்டு கூட்டம் விவாதம் நடத்தி கொண்டு இருக்கும்.. அவர்களுக்கு எது உண்மை என்றும் தெரியாது.. அவர்கள் பேசுவதில் “லாஜிக்” கூட இருக்காது.. ஆனால் டீ பன் சாப்பிடும் நேரம் வரை ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று பேசி கொண்டே இருப்பார்கள்.. அந்த விவாதத்தை கவனித்தால் அர்த்தமும் இருக்காது ஒரு முடிவுக்கும் வர மாட்டார்கள் அந்த இரு தரப்பினரும் .. அது தான் டீ கடை பெஞ்ச் அரசியல்..

  அது சரி ஏதோ “காஃபி டே பென்ச்” என்று ஏதோ சொங்கிர்கலே!! அது என்ன ?? ஓ ஜோக்கா? எது நாலும் சொல்லிட்டு செய்ங்க பாஸ்.. ரொம்ப நேரம் யோசிச்சேன் அது ஜோக் என்று கண்டு பிடிக்க.. 😉

  • ஜூலிஸ் ஃபூசிக்

   டீ கடை பெஞ்ச் மக்கள் லாஜிக்கா பேசாமாட்டாங்க.. ஆனா நீங்க ரொம்ப லாஜிக்கா பேசுவீங்க ஏனா நீங்க தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கொஞ்சம் லாஜிக்கா பேசினா நல்லா இருக்கும். இந்த கண்ணடிக்கிற பொம்மை போடுற நீங்க எவ்வளவு காமெடி பீசுன்னு தெரியுது. உங்க கிட்டயே நான் காமெடி பண்ண விரும்பவில்லை. உருப்படியான விவாதத்தை மேற்கொண்டால் நன்று..

   • அதையே தான் நானும் சொல்றேன். “உருப்படியான விவாதத்தை மேற்கொண்டால் நன்று”

 18. அப்படி எல்லாம் இங்கே பேச வரவில்லை

  இருக்கும் இயங்கத்தில் ஓரளவு லாஜிக்கான இயகத்தில் இருக்கும் பையன்கள் என்ற முறையிலும்(மக இக)

  விசயம் மிக சீரியசானது அதை சரியாகத்தான் நாம் புரிந்து கொண்டோமா என உறுதி படுத்தவும்
  இங்கே விவாதத்தை ஆரம்பித்தேன்

  மார்க்சிய ரீதியில் ,இயங்கியலின் அடிப்படையில் ஈழத்துக்கான போராட்டத்தை ஆராய்ந்து

  இன விடுதலை போருக்கு உதவ முடியுமா என்ற உன்னத நோக்கம் மட்டுமே

  மற்றபடி வெட்டி அரட்டை அல்ல அருண்

 19. //இலங்கையில் பாட்டாளி வர்க்கமே இல்லையா?

  //

  இலங்கையில் பாட்டாளி வர்க்கம் எந்த அடிப்படையில் ஒன்று சேர்கிறார்கள்

  • ஜூலிஸ் ஃபூசிக்

   இலங்கையில் மட்டுமல்ல! உலக நாடுகள் அனைத்திலும், தான் ”பாட்டாளி வர்க்கம்” என்னும் அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்கம் ஒன்று சேரவேண்டும். சேர்கிறார்கள். அதுபோல் இலங்கையிலும் பாட்டாளி வர்க்கம் இருந்தது.ஆனால் அதை நட்பு சக்தியாக பார்ப்பதற்கோ, மார்க்ஸியத்தை ஏற்பதற்கோ அணுகுவதற்கோ புலிகள் தயாராக இருந்ததில்லை.இதற்கு கட்டுரையிலேயே பதில் உள்ளது.

   ”உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்” – மார்க்ஸின் இக்கூற்றை அடிப்படையில் பின்பற்றாத பாட்டாளி வர்க்கம் உண்மையான பாட்டாளி வர்க்கமாக இருக்கமுடியாது.

 20. //உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்” – மார்க்ஸின் இக்கூற்றை அடிப்படையில் பின்பற்றாத பாட்டாளி வர்க்கம் உண்மையான பாட்டாளி வர்க்கமாக இருக்கமுடியாது.//

  ஒரு பார்முலா மாதிரி இதை பயன்படுத்த முடியுமா

  சமூகத்தை ஆராய்கின்ற கருவிகள் இந்த கோசங்களா அல்லது உற்பத்தி உறவுகளா

  சமூகம் வெறும் உற்பத்தி உறவுகளால் மட்டும் முரண்பட்டு உள்ளதா

  இலங்கை உதாரணத்தில்

  திரிகோண மலையில் இருக்கும் ஒரு விவசாய கூலியும்

  கண்டியில் இருக்கும் மலைதோட்ட தொழிலாளியும்

  எந்த முரண்பாடுகளை கொண்டுள்ளனர்

 21. ஹல்லோ, இதென்ன பேரு சர்வதேச வியாதிகள்… விளக்கம் பிளீஸ் !!!

  • ஜூலிஸ் ஃபூசிக்

   அதென்ன பேருங்க..? ”தமிழா! தலை நிமிர்ந்து நில்லடா”
   தமிழன்னு சொல்ற நீங்களெல்லாம் வயசுக்கு வந்த பொன்னு மாதிரி வெட்கப்டுறீங்களா என்ன? – விளக்கம் பிலீஸ்!!!

   • Mr ஜூலிஸ் ஃபூசிக் நீங்கள் எல்லாத்துக்குமே ஏட்டிக்கு பூட்டியா தான் பேசுவீங்களா? அவரு என்ன கேட்டாரு? அதுக்கு உங்க பதில் என்ன? அத அனுப்பாம ஏதோ எழுதணுமே என்று எல்லாம் எழுத கூடாது.. “தமிழா! தலை நிமிர்ந்து நில்லடா” இதற்கு உமக்கு உண்மையிலயே அர்த்தம் தெரியாதா? இல்லை சர்வதேச வியாதிகள்.. சாரி சர்வதேசியவாதிகள் என்பதற்கு முழுமையான அர்த்தம் இன்னும் நீங்கள் உருவாக்க வில்லையா?

   • மார்க்சிய மாணவன்

    சூப்பரா சொன்னீங்க தோழர்..

   • அருண்,

    நான் கொஞ்சம் நகைச்சுவையா கேட்டதுக்கு அவர் ஏன் இப்படி விதண்டாவாதம் பேசுறார்னு தெரியல!! நமக்கு தேவை பதில் தான். பணிவாவே கேட்டுறேன் !!!

    தமிழ், தமிழன்னு தமிழ் நாட்டுல பேசினா “தமிழ் தீவிரவாதி” நு சொல்லி சிறையில அடிக்கிறானுங்க… “போராட்டம், தொழிலாளர் ” போன்ற வார்த்தைய கேட்டா மார்க்சிஸ்ட் தீவிரவாதி நு அடிக்கிறானுங்க… ஏழை.. பணக்காரன்னு பேசினா நக்சல் பாரின்னு புடிக்கிரனுங்க .. சர்வதேசம்னு பேசினா யாரும் புடிக்க மாட்டாங்க …!!!

   • ளிமாகோ

    //////////நான் கொஞ்சம் நகைச்சுவையா கேட்டதுக்கு அவர் ஏன் இப்படி விதண்டாவாதம் பேசுறார்னு தெரியல!! நமக்கு தேவை பதில் தான். பணிவாவே கேட்டுறேன் !!!

    தமிழ், தமிழன்னு தமிழ் நாட்டுல பேசினா “தமிழ் தீவிரவாதி” நு சொல்லி சிறையில அடிக்கிறானுங்க… “போராட்டம், தொழிலாளர் ” போன்ற வார்த்தைய கேட்டா மார்க்சிஸ்ட் தீவிரவாதி நு அடிக்கிறானுங்க… ஏழை.. பணக்காரன்னு பேசினா நக்சல் பாரின்னு புடிக்கிரனுங்க .. சர்வதேசம்னு பேசினா யாரும் புடிக்க மாட்டாங்க …!!!////////////////

    ஐயா JP,

    உங்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சமில்லை, ரெம்ப அதிகந்தேன்!!!!

    ////பணக்காரன்னு பேசினா நக்சல் பாரின்னு புடிக்கிரனுங்க .. சர்வதேசம்னு பேசினா யாரும் புடிக்க மாட்டாங்க////

    என்னே உங்க அறிவு/ஆய்வு???

    மகஇக வும் நக்சல் பாரி அமைப்பென்பதையும், அது எங்கும் அதை மறைத்ததில்லை என்பதையும் நினைவுறுத்துகிறேன்.

    கம்யூனிசம், தமிழ்தேசியம், காமடியிசம்… இன்னும் என்னவெல்லாம் வெச்சிருக்கீங்க.. வாங்க அவுத்து விடுங்க.. உங்க ரசிகர்கள் காத்திருக்கிறோம்.

 22. ஜூலிஸ் ஃபூசிக்

  முதலில் மார்க்ஸியம் ஒரு வரட்டுதனமான சூத்திரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

  சமூகம் வெறும் உற்பத்தி உறவுகளால் மட்டும் முரண்படவில்லையெனில், வேறென்ன முரண்பாடுகள் சமூகத்தில் உள்ளன? அவ்வாறிருப்பின் அதன் காரணி என்ன?

  இன ரீதியான முரண்பாடு என்பது ஒரு உருகுலைந்த வர்க்க முரண்பாடே.

  நீங்கள் கூறிய கண்டி மலைதோட்ட தொழிலாளிக்கும், திரிகோண மலையில் இருக்கும் ஒரு விவசாய கூலிக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தில் உள்ள தலையாய முரண்பாடு வர்க்க முரண்பாடே. ஆனால் மலைதோட்ட தொழிலாளிகள், விவசாயி கூலிகளை வர்க்க உணர்வுடன் பார்க்காமல் இன ரீதியில் பார்ப்பார்களேயானால் அது உண்மையான பாட்டாளி வர்க்கமாக இருக்க முடியாது.

  தற்போது தமிழர் மீதான ஒடுக்குமுறைகளை சிங்கள் பேரினவாத அரசு தான் செய்கிறது. பாட்டாளி வர்க்கம் அல்ல!

 23. ஜூலிஸ் ஃபூசிக்

  Mr.அருண், உண்மையாகவே விளக்கம் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கத்துடன் பதில் தரலாம். ஆனால் இந்த மாதிரி நையாண்டி, நக்கல், இருமாப்புடன் கேட்கும் கேள்விகளுக்கு அவருடைய பாணியில் தான் பதில் தரமுடியும்.

  ”சர்வதேசியவாதிகள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதாம். ஆனால் ’சர்வதேசிய வியாதிகள்’ என்று கிண்டலாக கேட்பாராம். அதற்கு பதிலாக ’தமிழ் தேசிய வியாதிகளிடம்’ நாங்க கேள்வி கேட்டா நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கி கோபிச்சிப்பீங்களாம். நல்லா இருக்கு அருண் உங்க நியாயம். ஏதோ ஜால்ரா தட்டனுமேனு தட்டாம முறையா அவருகிட்ட பயிற்சி எடுத்துட்டு வந்து தட்டுங்க. பாவம் கேட்ட கேள்வி அவர தலை குனிய வச்சுடிச்சு போல… இப்போது நீங்கள் சொல்லுங்கள் அவரை பார்த்து “தமிழா! தலை நிமிர்ந்து நில்லடா!’

  சரி. அவர விடுங்க.உங்களுக்காவது தமிழ் தேசியவியாதிகள் சாரி தமிழ் தேசியவாதிகளுக்கு அர்த்தம் தெரியுமா? இல்லை சும்மா ஏதோன்னு… அப்படியொன்றும் இல்லையே???

 24. //நீங்கள் கூறிய கண்டி மலைதோட்ட தொழிலாளிக்கும், திரிகோண மலையில் இருக்கும் ஒரு விவசாய கூலிக்கும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தில் உள்ள தலையாய முரண்பாடு வர்க்க முரண்பாடே. ஆனால் மலைதோட்ட தொழிலாளிகள், விவசாயி கூலிகளை வர்க்க உணர்வுடன் பார்க்காமல் இன ரீதியில் பார்ப்பார்களேயானால் அது உண்மையான பாட்டாளி வர்க்கமாக இருக்க முடியாது//

  கண்டியில் உள்ள ஒரு மலைதோட்ட தொழிலாளியுடன் கூலி உயர்வுக்காக

  ஒரு சிங்கள மலைத்தோட்ட தொழிலாளி என்றைக்காவது நின்று இருக்கிறானா

  இல்லையென்றால் ஏன்/

  தொழிலாளர் காங்கிரசை தொண்டைமான் தொடங்கினார் அதில் சிங்கள கூலி தொழிலாளிகள் இருக்கிறார்களா அல்லது சிங்கள தொழிலாளிகளும் இருந்தார்களா

  • ///////கண்டியில் உள்ள ஒரு மலைதோட்ட தொழிலாளியுடன் கூலி உயர்வுக்காக ஒரு சிங்கள மலைத்தோட்ட தொழிலாளி என்றைக்காவது நின்று இருக்கிறானா இல்லையென்றால் ஏன்/

   தொழிலாளர் காங்கிரசை தொண்டைமான் தொடங்கினார் அதில் சிங்கள கூலி தொழிலாளிகள் இருக்கிறார்களா அல்லது சிங்கள தொழிலாளிகளும் இருந்தார்களா///////.

   மாவோ
   நீங்கள் சொல்வது போல் ‌தொழிலாளர்களுக்கிடையே இனவெறி வேற்றுமை
   உச்சத்தில் இருந்தது உண்மை தான்.ஆனால் அது என்பதுகளில்,தற்போது அத்தகைய‌ நிலை இல்லை.என்பதுகளிலும் கூட சோசலிச மாற்றுக்கான ஐக்கியத்திற்காக சிங்கள இடதுசாரிகள் இருந்தனர்( நாம் ஜே.வி.பி. யை குறிப்பிடவில்லை)ஜனநாயக சக்திகள் இருந்தனர்.

   ஜீலைப் படுகொலை நடந்த என்பதுகளில் இனவெறி உச்ச நிலையில் இருந்தது.சாதாரன மக்களும்,தொழிலாளிகளும் கூட இனவெறியூட்டப்பட்டிருந்தனர்.
   ஆனால் இன்றைக்கு இருப்பது சிங்கள அரசு இயந்திரத்தின் பேரினவாத‌ பாசிசமாகும்.இதற்கெதிராகவும் கூட சிங்கள ஜனநாயகசக்திகள், ப‌த்திரிகையாளர்கள்,மனித உரிமையாளர்கள்,தொழிற்சங்கவாதிகள்
   ஆகியோர் இயன்ற வழிகளில் எல்லாம் போராடியிருக்கிறார்கள்.

   க‌ண்டியில் உள்ள ஒரு மலைதோட்டத் தொழிலாளியுடன் கூலி உயர்வுக்காக ஒரு சிங்கள மலைத்தோட்ட தொழிலாளி இணையாமல் இருப்பதற்கும், தொழிலாளர் காங்கிரசில் சேராமல் இருப்பதற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

 25. நக்கலாக கேட்டது தப்புதான், மன்னித்துகொள்ளுங்கள் !! தயவு செய்து சர்வதேசவாதிகள் என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் கொள்கை விளக்கம் தரவும் !!!

  • பாவெல்

   பாட்டாளிவர்கத்திற்க்கு வரைமுறைக்குட்பட்ட தேசம் இல்லை. அதனால் நாங்கள் சர்வதேசியவாதிகள்.
   நங்கள் எல்லா தேசங்களையும் நேசிக்கிறோம்.

   எந்த ஒரு தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும் வன்மையாக எதிர்க்கிறோம்.

   தேசிய விடுதலையில் பாட்டாளிவர்கம், சுயநிர்னய உரிமையை ஆதரிக்கிறது.

   தேசிய/இன ஒடுக்குமுறையை, வர்க்க ஒடுக்குமுறையின் திரிந்த நிலையாகவே பாட்டாளிவர்க்கம் வரையறுக்கிறது.

   பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச வர்க்கப் போர் என்பது ஒவ்வொரு நாட்டின் வர்க்க மற்றும் தேசியப் போரின் ஒட்டுமொத்த வடிவமே.

   • சோசியலிச புரட்சியே ஒரு நாட்டில் மட்டும் நடந்தேற முடியாது.. உலகம் தழுவிய அளவில் நடக்க வேண்டும் என்று பிரிடறிச் ஏஞ்சல்ஸ் கூரியதாத ஞாபகம் .. ஆகையால் உங்களுக்கும் மற்ற சோசியலிஸ்ட்களுகும் உள்ள வித்யாசம் / வித்யாசங்கள் என்ன?

   • கொள்கை விளக்கத்துக்கு நன்றி நண்பரே !! அதெப்படிங்க எல்லா தேசத்தையும் உங்களால நேசிக்க முடியுது ??

    தனது தொழில் அதிபர்களின் நலனிற்காக பல நாடுகளில் குண்டு மழை பொழிந்து கொண்டும், உலகுக்கே பெரிய அண்ணனாகவும் இருக்கும், பொது உடமை பேசும் அரசியல் கட்சிகளை தடை செய்தும், அதன் உறுப்பினர்களை சிறையில் அடைக்கும் அமெரிக்கா போன்ற நாட்டையும்; அத்தனை கட்சிகள் கேட்டுக்கொண்டும், பொதுமக்கள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதையும் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் எல்லாவிதமான ஆயுதங்களை வழங்கி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த இந்தியா போன்ற நாட்டையும் உங்களால் நேசிக்க முடிகிறது என்றால் உங்களின் பரந்த மனதிற்கு பாராட்டுகள் !!

    //பாட்டாளிவர்கத்திற்க்கு வரைமுறைக்குட்பட்ட தேசம் இல்லை.//

    உண்மை தான். ஆனால் எல்லா தேசங்களிலும் பாட்டாளி ஒரே விதமான சூழலில் இல்லை. அவனது சூழல் அந்த நாட்டில் எல்லைகளால் – அதன் சட்டங்களால் ஆளப்படுகிறது. ஒரே சட்டத்தால் அல்ல. பல நாடுகளில் சட்டப்படி உள்ள குறைந்த பட்ச ஊதியம் பெற்று – சட்டப்படி உள்ள அதிக மணி துளிகள் மட்டுமே உழைத்தாலும் அந்த பாட்டாளி வீடு, வாகனம் என்று ஓரளவுக்கேனும் மனிதனாக வாழ முடிகிறது. அங்கு அந்த சட்டங்களை அந்த முதலாளித்துவ நாடுகளே கடுமையாக நடைமுறை படுத்தவும் செய்கின்றன !
    ஆனால் இந்தியா போன்ற கீழ் தரமான நாடுகள் பாட்டளிக்கு என்று ஒரு மயிரையும் செய்யவில்லை.
    இரண்டு பாட்டாளி வர்கங்களின் இன்றைய நிலையை முடிவு செய்வது நாட்டின் எல்லை கோடுகள். ஒவ்வொரு நாட்டில் இருக்கும் பாட்டளிகளின் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையும் வெவ்வேறு வடிவங்கள். பாட்டாளியின் வாழ்க்கை நிலையை உயர்த்தாமல் எல்லை கோடுகளை அழிக்க முடியாது. அதுவரை நீங்கள் சர்வதேசவாதிகள் என்று சொல்லிகொண்டால் மூன்றாம் நாடுகளை சுரண்டி வாழும் “globalaization” (உள்நாட்டு உற்பத்தி, மக்கள் மற்றும் இயற்க்கை வளங்களை பாதுகாக்க இயலா இந்தியா போன்ற நாடுகளில் ) க்கு சப்பை கட்டு கட்டும் பெரு முதலாளிகள் உங்களை பார்த்து சிரிப்பார்கள். பெரும் முதலாளிகளுக்கு மட்டும் தான் எல்லா பாட்டாளியும் ஒன்று. எல்லா அரசுகளும் அவர்களுக்கு சல்யூட் அடிக்கும்.

 26. //பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச வர்க்கப் போர் என்பது ஒவ்வொரு நாட்டின் வர்க்க மற்றும் தேசியப் போரின் ஒட்டுமொத்த வடிவமே.

  //

  தமிழ் இனம் தன்மீதான ஒடுக்குமுறையை குறைக்க நிறுத்த,

  பாட்டாளி வர்க்கமாக திரண்டு நின்றால்தான் முடியுமா

  அதாவது சிங்கள உழைக்கும் மக்களையும் சேர்த்து

  இல்லாவிடில் தமிழ் மக்களே வர்க்க வேறுபாட்டை மறந்து

  ஓர் இனமாக நின்று போரிடலாமா?

  முன்னது தான் சரி என்றால் எதனால்

  பின்னது தவறு என்றால் ஏன்?

 27. /////////////
  சோசியலிச புரட்சியே ஒரு நாட்டில் மட்டும் நடந்தேற முடியாது.. உலகம் தழுவிய அளவில் நடக்க வேண்டும் என்று பிரிடறிச் ஏஞ்சல்ஸ் கூரியதாத ஞாபகம் .. ஆகையால் உங்களுக்கும் மற்ற சோசியலிஸ்ட்களுகும் உள்ள வித்யாசம் / வித்யாசங்கள் என்ன?
  /////////////

  அப்படினா உலகம் முழுவதும் புரட்சி நடக்கும் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா ?
  அப்படி இருந்தால் கூட பரவாயில்லை !
  உங்களை ஒரு டிராட்ஸ்கியவாதி என்றாவது அழைக்கலாம்…

  சரி சரி உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும்
  உள்ளூரில் புரட்சி நடத்த போராடும் எங்களுக்கே
  நேரம் போதவில்லை என்றால் உலகப்புரட்சி
  செய்யப்போகும் உங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும்

  • நான் கேட்டதுக்கும் நீங்க சொன்ன பதிலுக்கும் எதாவது சம்பந்தம் இருகிறதா? மீண்டும் நான் கூறியதை ஒரு முறை படித்து பார்க்கவும் ப்ளீஸ்

  • நான் தேடிய பதில் “சர்வதேசவாதிகள்” என்பவர் 12:53 மு.பகல் இல் செப்டம்பர்2, 2009 எழுதியதிலயே இருக்கிறது. நீங்க ரொம்ப கஷ்ட பட வேண்டாம்.,.

 28. அதெப்படிங்க உங்களால உங்க தேசத்தை மட்டும் நேசிக்க முடியுது.
  இதன்படி ‘முதலில் உன் வீட்டைப் பாரு அதன் பிறகு
  நாட்டை பார்க்கலாம்’ என்கிற கொள்கை முடிவிற்கு அல்லவா
  வர வேண்டியுள்ளது.

  ஒரு நாட்டை நேசிப்பது என்பதை நீங்கள் இப்படி புரிந்து கொள்வீர்கள்
  என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஒபாமவை வெறுக்க வேண்டுமா
  அமெரிக்க உழைக்கும் மக்களை வெறுக்க வேண்டுமா ?
  மன்மோகன் கும்பலை வெறுக்க வேண்டுமா
  இந்திய உழைக்கும் மக்களை வெறுக்க வேண்டுமா ?

  சர்வதேசவாதிகள் என்றால் அது நாங்கள் ம்ட்டும் இல்லை நண்பரே
  மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைவரும் சர்வ்தேசவாதிகள் தான்.
  யாரெல்லாம் தம்மை மார்க்சியவாதி் என்று சொல்லிக்கொள்கிறார்களோ
  அவர்கள் எல்லோருமே சர்வதேசவாதிகள் தான்.
  ஒரு வரியில் சொல்வதெனில் ‘கம்யூனிஸ்டுகள்’அனைவரும்
  சர்வதேசவாதிகள்.

  அனைத்துமே உலகமயமாகி வரும் சூழலில் ‘தேசியம்’ உட்பட
  ‘சர்வதேசியமாகி’ வரும் சூழலில் ‘தமிழ்தேசியத்தை’ பார்த்து தான்
  முதலாளிகள் மட்டுமல்ல தொழிலாளிகளும் கூட நகைப்பார்கள்.

  • சர்வதேசவாதிகள், ஆம் பெருமையாய் சொல்லுவோம் நாங்கள் சர்வதேசவாதிகள், எங்களுக்கு நாடில்லை, மொழியில்லை, உலகப்பாட்டாளிகளின் தோழர்கள் நாங்கள்.

   நீங்க எப்படி தாழ்த்தப்பட்டவ்ர், பிற்படுத்தப்பட்டவர், மி.பி, எல்லாத்தையும் ஒண்ணு சேர்ப்பீங்க, நாங்களாவது ஏப்பா பாரு இந்த முதலாளி உன்னை உறிஞ்சரான் நீ இல்லைன்னா இந்த முதலும் கிடையாது லாலியும் கிடையாதுன்னுவோம்,

   நீங்க பாவம் என்னன்னு சொல்லுவீங்க , தமிழன்னா அவன் கேப்பான்னே ஏப்பா எங்க முதலாளியும் தமிழன் அதுவும் எங்க சாதி வேற பின்ன எதுக்குன்னு கேட்டா என்னா பண்ணுவீங்க?

 29. ஹிஹி… உங்கள் புரிதலுக்கு நன்றி … எப்படி தான் உங்களுக்கு நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று தெரிந்ததோ!! இந்த உலகிலேயே நான் அதிகமாக வெறுக்கும் தேசம் நான் பிறந்த நாடு தான் !! அத விடுங்க …

  அமெரிக்க மக்களின் பிரதிநிதி தான் ஒபாமாவும். தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் வரை மரமண்டை சிங் தான் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறான்.

  _________________________
  நான் எழுதிய பின்வரும் கருத்துக்கு தாங்கள் பார்வையில் பதில் சொல்லவும்.

  “”களிலும் பாட்டாளி ஒரே விதமான சூழலில் இல்லை. அவனது சூழல் அந்த நாட்டில் எல்லைகளால் – அதன் சட்டங்களால் ஆளப்படுகிறது. ஒரே சட்டத்தால் அல்ல. பல நாடுகளில் சட்டப்படி உள்ள குறைந்த பட்ச ஊதியம் பெற்று – சட்டப்படி உள்ள அதிக மணி துளிகள் மட்டுமே உழைத்தாலும் அந்த பாட்டாளி வீடு, வாகனம் என்று ஓரளவுக்கேனும் மனிதனாக வாழ முடிகிறது. அங்கு அந்த சட்டங்களை அந்த முதலாளித்துவ நாடுகளே கடுமையாக நடைமுறை படுத்தவும் செய்கின்றன !
  ஆனால் இந்தியா போன்ற கீழ் தரமான நாடுகள் பாட்டளிக்கு என்று ஒரு மயிரையும் செய்யவில்லை.
  இரண்டு பாட்டாளி வர்கங்களின் இன்றைய நிலையை முடிவு செய்வது நாட்டின் எல்லை கோடுகள். ஒவ்வொரு நாட்டில் இருக்கும் பாட்டளிகளின் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையும் வெவ்வேறு வடிவங்கள். பாட்டாளியின் வாழ்க்கை நிலையை உயர்த்தாமல் எல்லை கோடுகளை அழிக்க முடியாது. அதுவரை நீங்கள் சர்வதேசவாதிகள் என்று சொல்லிகொண்டால் மூன்றாம் நாடுகளை சுரண்டி வாழும் “globalaization” (உள்நாட்டு உற்பத்தி, மக்கள் மற்றும் இயற்க்கை வளங்களை பாதுகாக்க இயலா இந்தியா போன்ற நாடுகளில் ) க்கு சப்பை கட்டு கட்டும் பெரு முதலாளிகள் உங்களை பார்த்து சிரிப்பார்கள். பெரும் முதலாளிகளுக்கு மட்டும் தான் எல்லா பாட்டாளியும் ஒன்று. எல்லா அரசுகளும் அவர்களுக்கு சல்யூட் அடிக்கும்.””
  ______________________________

  • என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.
   நான் உங்கள் நாடு என்று சொன்னது தமிழ்நாட்டை தான்,
   அதாவது ‘தமிழ்தேசத்தை’
   நீங்கள் உலகத்திலேயே அதிகமாக நமது தமிழ்நாட்டை தான்
   வெறுக்கிறீர்களா ? என்ன கொடுமை சார் இது !

   அமெரிக்க மக்களின் பிரதிநிதி ஒபாமா தான் சரி அதற்கு
   என்ன செய்யலாம் என்கிறீர்கள் ?
   தமிழ்நாட்டை தனி நாடாக்கும் உங்கள் கொள்கை வெற்றி பெறட்டும்
   அதற்கு முன் அதற்காக‌ பிரச்சாரம் செய்யும் உங்கள் கட்சி அல்லது
   அமைப்பின் பெயர் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா ?

   பாட்டாளி வர்க்கம் வெவ்வேறு நடுகளில் வெவ்வேறு விதமாக
   தான் இருக்கிறது.இந்தியாவில் பாட்டாளிகளுக்கு எந்த உரிமைகளும்
   இல்லை,சரி அதற்காக கம்யூனிஸ்டுகளான (சர்வதேசியவாதிகளான)
   நாங்கள் தேசியவாதிகளாகி விட முடியுமா ?

   நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்.
   தேசங்களுக்கிடையிலான எல்லைக்கோடுகள் மறைந்தால் தான்
   ‘சர்வதேசியவாதிகள்’ என்று சொல்லிக்கொள்ள முடியும் இல்லையென்றால்
   அவ்வாறு சொல்லிக்கொள்ளக் கூடாது என்கிறீர்களா?

   • தமிழ் நாட்டையும் சேர்த்து தான் வெறுக்கிறேன். உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்னு நீங்க கூவினா எந்த தமிழனும் சீந்த கூட மாட்டான். அதகூட நயன் தாராவோ இல்லை ரஜினியோ சொன்னதான் கேட்பான். வாங்குனா காசுக்கு மனசாட்சியோட காசு கொடுத்த கட்சிக்கே கரைக்டா ஒட்டு போட்டுரவான்ன பாத்துக்கங்க !!! நிற்க.

    பொதுவுடமை வாதிகள் சர்வதேச வாதிகளாக செயல்பட முடியாது என்பது என் கருத்து. ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளிகள் சந்திக்கும் அடக்குமுறைகளும் பிரச்சனைகளும் வெவ்வேறானவை. அவற்றை அணுக வெவ்வேறு தளங்களும் போராட்ட முறைகளும் தேவை என்பது என் கருத்து.
    பொதுவுடமை வாதிகள் சர்வதேசவாதிகளாக செயல்பட வேண்டிய எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    ஏன்…வாதத்திற்காக சொல்ல்கிறேன் … இந்த பேரண்டம் மிக பெரியது. எண்ணற்ற சூரிய குடும்பங்களும் கோடிக்கணக்கான் நட்சத்திரங்களையும் கொண்டது. வேறொரு கிரகத்தில் உயிரணம் இருக்கலாம். அங்கும் தொழிலாளர் முதலாளி வர்க்கம் இருக்கலாம். அதற்காக “milky way வாதிகள்” என்று கூட உங்களை சொல்லிகொள்ளலாம் !! என்ன சொல்லுகிறீர்கள் ??

    எனது கருத்தை சொல்ல நான் ஏதேனும் அமைப்பில் அல்லது கட்சியில் இருந்துதான் ஆகவேண்டுமா ? பழ நெடுமாறன், தியாகு, கொளத்தூர் மணி போன்றவர்கள் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தான். அவர்களில் அமைப்பில் ஏதேனும் ஒன்றில் அல்லது எல்லாவற்றிலுமே நான் உறுப்பினர் என்று வைத்துகொள்ளுங்களேன்.

   • ளிமாகோ

    //////தமிழ் நாட்டையும் சேர்த்து தான் வெறுக்கிறேன். உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்னு நீங்க கூவினா எந்த தமிழனும் சீந்த கூட மாட்டான். அதகூட நயன் தாராவோ இல்லை ரஜினியோ சொன்னதான் கேட்பான். வாங்குனா காசுக்கு மனசாட்சியோட காசு கொடுத்த கட்சிக்கே கரைக்டா ஒட்டு போட்டுரவான்ன பாத்துக்கங்க !!! நிற்க///////////

    ஐயா JP,

    நீங்க “தமிழ் நாடு, தமிழ் நாடு தங்கத் தமிழ் நாடு” ன்னு லாட்டரி விக்கிறது போல கூவிக்கினு இருந்தா மட்டும் எல்லா தமிழனும் ஓடி வந்துவானாக்கும்?

    நல்ல காமெடி!

   • ளிமாகோ

    ///////பழ நெடுமாறன், தியாகு, கொளத்தூர் மணி போன்றவர்கள் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தான். அவர்களில் அமைப்பில் ஏதேனும் ஒன்றில் அல்லது எல்லாவற்றிலுமே நான் உறுப்பினர் என்று வைத்துகொள்ளுங்களேன்.//////////////

    ஏனுங்க ‘கார்முகில்’ன்னு ஒருத்தர் இருக்காரே அவரை விட்டுட்டீங்க??? அந்த அமைப்புல அவர் பேர கூட சொல்லக்கூடாதாமே(!) உண்மையா ???

    பேரைக்கூட சொல்லாத பக்தியுடன் இங்க வந்து பார்பன தலைமை அப்புடி இப்புடின்னு கூவுறாங்க!

 30. //க‌ண்டியில் உள்ள ஒரு மலைதோட்டத் தொழிலாளியுடன் கூலி உயர்வுக்காக ஒரு சிங்கள மலைத்தோட்ட தொழிலாளி இணையாமல் இருப்பதற்கும், தொழிலாளர் காங்கிரசில் சேராமல் இருப்பதற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?//

  இன பகைமைதான் 1970 – 80 ல் கத்தியை இடுப்பில் கண்டிப்பாக ஒவ்வொரு சிங்களவனும் வைத்து இருப்பான் , முழுநேர வேலையே தமிழர்களை வழிபறிசெய்வதுதான்

  இன்றும் அதில் மாற்றம் இல்லை பிரபாகரன் இருந்தவரை பயந்து கொண்டு இருந்தால் சாதாரண சிங்களவன் இப்போ அது இல்லை என்பதுதான் அங்கு வாழும் தமிழர்கள் சொல்லும் நிதர்சண உண்மை

  அரசு பயங்கரவாதம் என்றால் அரசுக்கு வாக்களித்த சிங்கள மக்களின் வெறியை எப்படி பார்க்கிறீர்கள் கம் அண்டு சீ

  • ஏன் அப்படி பார்க்கிறீர்கள் நான் சொல்லும் திசையிலும் பாருங்கள்.

   சிங்களவர்கள் வீட்டில் என்ன பாலும் தேனுமா ஆறாய் ஓடுகிறது? அவனும் கஷ்டப்பட்டு உழைத்து , தன்னையே உருக்க வேண்டிய நிலையில் இருக்கிறான் , இந்த உலகமய தாராளமய நிலையில்,

   எப்படி பொள்ளாச்சி மகாலிங்கம் வேறு, அவன் சாதியிலே பிறந்த தமிழன் வேறு என பிரிக்கிறீர்கள்? அப்படி பிரித்துபாருங்கள் சிங்கள இன வெறியர்களையும், சிங்கள மக்களையும், வெள்ளைக்காரனுக்கு சாமரம் வீசிய மேட்டுக்குடி மேல்சாதி தமிழர்களை என்னவென்று சொல்வீர்கள்?

   குஜராத்தில் மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து மோடியை உட்கார வைத்தார்கள். உடனே அறிவியுங்கள் எல்லோரும் பாஸிஸ்டுகள் என்று. ஏன் ஜெயாவுக்கு ஒட்டு கேட்டு நடையாய் நடந்தீர்கள், மறத்தமிழனோ மூக்குத்திக்கும் பட்டு வேட்டிக்கும் விலை போனதை அதோடு கொஞ்சம் கம்ப்பேர் பண்ணுங்கள்

   ஈழத்தில் சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொன்று குவிக்கிறது. ஆரம்பத்தில் இது இனவெறியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் , இறுதியாக தரகு முதலாளிகளின் தேவைக்காகவே அத்தனை மக்களும் கொல்லப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியுமா?

   உங்கள மாதிரிதான் ஒருத்தர் பேசுவார் அவர் முசுலீம்கள் எல்லாம் தேசத்துரோகிகள் எப்படி என்றால் நாம இப்படி கும்பிட்டால் அவன் கையை விரிச்சு கும்புடுவான் என்பார், அப்புறம் நாம மீசை வச்சா, அவன் மீசை எடுப்பான் என்பார். அந்த ரேஞ்சுக்கு பேசாம இருந்தா சரிதான்.

  • /இன பகைமைதான் 1970 – 80 ல் கத்தியை இடுப்பில் கண்டிப்பாக ஒவ்வொரு சிங்களவனும் வைத்து இருப்பான் , முழுநேர வேலையே தமிழர்களை வழிபறிசெய்வதுதான் /

   தமிழரே,

   1980ஐ வுடுங்க இப்போ உங்க தமிழனுங்க பீகார் தொழிலாளிங்களை மிரட்டி பணம் புடுங்குன கத சென்னையில் நடந்துச்சு தெரியுமா? டவுட்டுன்னா முதலாளித்துவ பயங்கரவாத மானாட்டு சீடி(அதான் குறுந்தகடு) போட்டு கேளுங்க

  • @மாவோ, சிங்கள மக்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாக இல்லை.சரி. ஆனால் புலிகளும், ஈழ தமிழரும் மலையக மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கவில்லையே அது ஏன்?

 31. ELLAM SARI.

  PULI ETHIRPPU COMMUNISTUKALLUKKU NAN ELUPPIYA KELVIKAL APPADIYE IRUKIRATHU. ANGE ORU THOLARUM KOODA NERMAIYANA PATHILAI VAIKKAVILLAI. ITHARKUM EN PATHIVIN INAPPAI VIVANU VIVATHILUM KOODA POTTU VAITHIRUNTHEN.

  http://www.mathibala.com/2009/08/blog-post_27.html

  PARKALAM ITHAN PINNAVATHU , YARENUM ORU THOLAR VARUVARA ENDRU. ILLAI THOLARKAL AVARKALUKKUL MATTUME VIVATHITHU KOLVARKALA ILLAI VELIYIL IRUNTHU KETKUM YARUKKUM PATHIL SOLVARKALA ENDRU.

 32. நண்பர் மதிபாலா அவர்களுக்கு,
  கம்யூனிச புரிதலுடனே நீங்கள் எழுதியிருக்க கூடும் என்ற அனுமானம் எனக்கு இருந்ததற்கு முதலில் மன்னிக்கவும். அது என் தவறு தான். ஏனெனில் கம்யூனிச புரிதல் இருந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள் என்பது படித்த பிறகே புரிந்தது.
  தோழர்களிடம் நெருக்கமாய் இருந்த அளவிற்கு நீங்கள் கம்யூனிச தத்துவத்தின் கருத்தியலில் நெருக்கமாய் இல்லாமல் போனதே நீங்கள் இவ்வாறு புரியா குழந்தையை போல் அறியாமல் கேள்வி கேட்டு எழுதியதற்கு காரணம். இருந்தாலும் உங்களின் சமூக நிகழ்வுகளின் தேடலினூடே எழுந்த கேள்விகள் அவை என்பது நன்கு புலனாகிறது. தன் புறசூழலை மட்டும் வைத்து உலகத்தை புரிந்து கொள்ளுதல் என்பது உண்மையான சமூக புரிதலாக இருக்காது என்பதே உண்மை. நீங்கள் அவ்வாறே தமிழ் பட கதாநாயகர்கள் போல் உங்கள் சிறுவயது அனுபவத்தினூடே பொதுவுடமையாளர்களையும், பொதுவுடைமை சித்தாந்தத்தையும் காண்கிறீர். அதனால் தான் கீழ்கண்ட கேள்வியும் எழுந்தது.

  //எல்லாமே சுமுகமாக போய்க்கொண்டிருக்கையில் இவர்கள் மட்டும் கலகம் செய்கிறார்கள் அல்லது சமரசமின்றி இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் என்ற கேள்வி இருந்தது என்னுள் எப்போதும்!!!//

  ”எல்லாமே சுமூகமாய் போய் கொண்டிருந்தது” என்று எதை சொல்கிறீர்கள்? உதாரணமாக இன்று வதைமுகாமில் அவதிபடும் ஒரு ஈழ தமிழன் புலிகளையும் மற்ற ஈழ விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பார்த்து, ”நம் சுமூகமாகவும் சமரசதுடன் தானே போய் கொண்டிருந்தது சிங்களவனுடன், இவர்கள் மட்டும் ஏன் கலகம் செய்கிறார்கள்” என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வாறே தான் நீங்கள் கேட்பதும்.
  நீங்கள் சொல்லும் சுமூகம் எல்லாம் கொழுத்த முத்லாளிகளுக்கு தான் இருந்ததே தவிர உழைக்கும் மக்களுக்கு சமரசம் இன்றி வேறு அல்ல. இருப்பினும் இதை எதிர்க்காமல் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் சகித்து கொண்டு சமரசத்துடன் வாழும் வாழ்க்கை தான் உங்கள் அகராதியில் சுமூகமா?

  கம்யூனிச கட்சிகளை விமர்சிப்பதற்கு முன் கம்யூனிச தத்துவத்தில் புரிதல் ஏற்படுத்தி கொண்டு எழுதியிருந்தால் உங்கள் பதிப்பு முழு அர்த்தமுள்ளதாய் இருந்திருக்கும். அதற்காக கம்யூனிச தத்துவத்தை படித்துவிட்டுத்தான் கம்யூனிச கட்சியை விமர்சிக்க வேண்டும் அல்லது ஒரு சாமானியன் விமர்சிக்க கூடாது என்று பொருளில்லை. ஒரு சமூகத்தின் கடைநிலையில் உள்ளவனும் கட்சியை விமர்சிக்கலாம். ஆனால் நீங்கள் கம்யூனிச தத்துவத்தையே, எந்த ஒரு தத்துவ பார்வையோ அரசியல் பார்வையோ இன்றி விமர்சித்தது மிகையே. எல்லா பொதுவுடமை கட்சிகளையும் எழுதியிருக்கும் உங்கள் பதிப்பில் மார்க்ஸிய புரிதலில் உங்களை தத்துகுட்டியாகவே பார்க்க வைக்கிறது. இது தலைகணத்துடன் கூடி வந்த எழுத்து என்று எண்ணவேண்டாம். ஏனெனில் மார்க்ஸிய புரிதலுடன் எழுதியிருந்தால் உண்மையான கம்யூனிச தத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்வது யார்?
  மக்களுக்காக உண்மையாக போராடுகிறவர்கள் யார்?
  கம்யூனிஸ்டுகள் தங்களை சொல்லி கொண்டு போலியாக உலா வருபவர்கள் யார்? என்ற புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். இந்த நீண்ட கட்சி பட்டியலின் தேவை இருந்திருக்காது.

  //மக்கள் கலை இலக்கியக் கழகம் – புலிகளின் பாசிசத்தை எதிர்ப்பவர்கள்…அதே சமயம் பேரினவாதத்தை எதிர்ப்பவர்கள்…..அது தமிழ்ப் பேரினவாதமென்றாலும் சரி , சிங்களப் பேரினவாதமென்றாலும் சரி……தோழர் மருதையன் ஒருபேட்டியில் புலி ஆதரவுக் கட்சிகள் தமிழகத் தமிழர்களின் எழுச்சியை விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்…………புலிகள் இந்திய அமைதிப்படையை எதிர்த்த போது அதை ஆதரித்த ஒரே இயக்கம் ம.க.இ.க தான் என்று சொல்கிறார்…இப்படி கொஞ்சம் நாம் குழம்பிப் போகிற நிலை இவர்களது…..அல்லது எனக்குச் சரியாகப் புரியாத..!//

  இதில் குழம்பி போகிற நிலை இவர்களது அல்லது உங்களுக்கு சரியாக புரியாத! என்று நீங்களே கூறிய இருநிலையில் இரண்டாவதே உண்மை.

  சரியான புரிதலுக்கு கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும். பிறகு தெரிந்து கொள்வீர்.
  அது குழம்பி போகிற நிலையன்று; இயங்கியலின் பார்வை என்று.
  http://www.vinavu.com/2009/09/04/raya3/

  //இன்னமும் வெற்றியடையுமா இல்லையா என்று தெரியாத சித்தாந்தத்தை ஒதுக்கிவைத்து விட்டு தமிழர்களாய் இணைந்து முகாம்களில் வாடும் மக்களின் முள்வேலிகளை அறுத்தெரிய முனைவோம்…..//

  உங்கள் மதிப்பீட்டின் படி வெற்றியடையுமா இல்லையா என்று தெரியாத சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த சித்தாந்தமும் இல்லாத கண் மூடித்தனமான கால் போன போக்கின் வழிமுறையை கையாள சொல்கிறீர்களா? இது தான் மக்களை விடுதலைக்கு இட்டு செல்லும் உண்மையான அரசியல் திட்டமா?? இது தான் புலிகளும் செய்த மாபெரும் தவறு.
  ஏதோ செய்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் எதை செய்ய வேண்டும் என்பதை சரியான புரிதல் இல்லாமல் செய்வது அறிவீனம். இது உங்களுக்கு மட்டுமுள்ள பார்வை என்று எம்மால் சுருக்கி பார்க்க இயலாது.
  இது தேசியவாதம் பேசும் தமிழ் தேசியவாதிகளின் பண்பு. நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

  தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டு பயணத்திற்கு சமம்.

  இதை தான் நாங்கள் விமர்சித்து வருகிறோம். ஆனால் உங்கள் பார்வையில் நாங்கள் மக்களை குழப்புகிறவர்கள்!!!

  இனவாததிற்கு எதிரான இனவாதத்தை விடுத்து மக்கள் மீதான சுரண்டலற்ற ஒடுக்குமுறையற்ற விடுதலைக்கு வழிகாட்டும் சரியான சித்தாந்த்தின் கீழ் இணைவோம்.

  இந்திய மேலாதிகத்தை எதிர்ப்போம்!!
  மக்களின் முள்வேலிகளை அறுத்தெரிய முனைவோம்!!

  ஒடுக்கபடும் எல்லா தேசங்களும் எங்கள் தேசங்களே!!

 33. கம்யூனிச புரிதலுடனே நீங்கள் எழுதியிருக்க கூடும் என்ற அனுமானம் எனக்கு இருந்ததற்கு முதலில் மன்னிக்கவும். அது என் தவறு தான். ஏனெனில் கம்யூனிச புரிதல் இருந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள் என்பது படித்த பிறகே புரிந்தது.//

  நான் எங்கே கம்யூனிசப் புரிதலுள்ளவன் என்று சொல்லியிருக்கிறேன் நண்பரே…இதோ கீழீருக்கும் பத்தி அந்தப் பதிவில் நான் சொல்லியிருப்பதுதான்.

  ///

  ஆனாலும் , கம்யூனிஸ்டுகளை ஹீரோவாகக் கருதிய சிறுவயது நினைவுகளும் இன்னமும் அகலவில்லை என்பதும் ஒருவிதத்தில் உண்மையே…ஆனாலும் ,மார்க்சியம் , இன்ன பல இசங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்கத் துவங்கியவுடனே போரடிக்க ஆரம்பித்ததால் எந்த இசங்களையும் நான் படித்தவனில்லை என்ற அளவிலேயே கம்யூனிசம் பற்றிய புரிதல் இருந்தது.!

  ///

  நீங்கள் குறிப்பிட்டுள்ள இன்னொரு பத்திக்கு வருகிறேன்.

  ////

  ”எல்லாமே சுமூகமாய் போய் கொண்டிருந்தது” என்று எதை சொல்கிறீர்கள்? உதாரணமாக இன்று வதைமுகாமில் அவதிபடும் ஒரு ஈழ தமிழன் புலிகளையும் மற்ற ஈழ விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பார்த்து, ”நம் சுமூகமாகவும் சமரசதுடன் தானே போய் கொண்டிருந்தது சிங்களவனுடன், இவர்கள் மட்டும் ஏன் கலகம் செய்கிறார்கள்” என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வாறே தான் நீங்கள் கேட்பதும்.

  //

  எல்லாமே சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த போது என்பது எனது சிறுவயது புரிதல் …அதையும் இன்றைய ஈழத்த்தையும் நீங்கள் எப்படி ஒரு பார்வையில் பார்க்கிறீர்கள்??

  இன்னொன்று நான் சொல்வது அபத்த்தமாகத் தெரியலாம் உங்களுக்கு….ஆனால் தமிழ்த்தேசியத்தை முன்னிருத்தி உரிமைகளைப் பெறுவதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது பாசிசம் பாசிசம் என்று ஒப்பிவித்த தோழர்களின் வாதமும் அந்த உரிமைப் போராட்டம் முடங்க ஒரு காரணமாய் இருந்தது என்ற உண்மை உங்களுக்குப் புலப்படும் போது உங்களின் வாதம் அந்த அபத்தத்திலும் அபத்தமாகக் காட்சியளிக்கும்.

  ****

  ///உங்கள் மதிப்பீட்டின் படி வெற்றியடையுமா இல்லையா என்று தெரியாத சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த சித்தாந்தமும் இல்லாத கண் மூடித்தனமான கால் போன போக்கின் வழிமுறையை கையாள சொல்கிறீர்களா? இது தான் மக்களை விடுதலைக்கு இட்டு செல்லும் உண்மையான அரசியல் திட்டமா?? இது தான் புலிகளும் செய்த மாபெரும் தவறு.
  ஏதோ செய்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் எதை செய்ய வேண்டும் என்பதை சரியான புரிதல் இல்லாமல் செய்வது அறிவீனம். இது உங்களுக்கு மட்டுமுள்ள பார்வை என்று எம்மால் சுருக்கி பார்க்க இயலாது.
  இது தேசியவாதம் பேசும் தமிழ் தேசியவாதிகளின் பண்பு. நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல.//

  இன்று புலிகள் இல்லாத சூழலில் , உங்களாலும் நீங்கள் வைக்கிற மாற்றுக்கொள்கையை முன்வைத்து முள்வேலிக்குள்ளிலிருந்து மக்களை விடுவிக்க வியலாத சூழலில் தமிழ்த் தேசியவாதிகள் தான் இன்று இராஜதந்திரப் போரை முன்னெடுக்கிறார்கள்..தமிழ்த்தேசியவாதிகள் தான் அவ்வளவு இழப்பிற்கும் உள்ளாகிறார்கள்……..தமிழ்த் தேசியவாதிகள் தான் இன்று மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள் என்ற அளவில் அவர்களின் நம்பிக்கையை ஒருமையை சிதைக்கும் வண்ணமாக இணையத்தில் உலாவரும் கருத்துக்கள் “கருணா” இழைத்த துரோகத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல என்பதே என் நிலைப்பாடு…! உங்களை உங்கள் சித்தாத்தங்களை வைத்து புதுச்சமுதாயத்தினை கட்டமைக்க நான் ஒன்றும் தடை சொல்லவில்லை….குறைந்தபடசம் உங்கள் எதிர்மறை விமர்சனம் தமிழர்களின் மன உறுதியை குலைக்கிறது என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்……

 34. ஆனால் நீங்கள் கம்யூனிச தத்துவத்தையே, எந்த ஒரு தத்துவ பார்வையோ அரசியல் பார்வையோ இன்றி விமர்சித்தது மிகையே. எல்லா பொதுவுடமை கட்சிகளையும் எழுதியிருக்கும் உங்கள் பதிப்பில் மார்க்ஸிய புரிதலில் உங்களை தத்துகுட்டியாகவே பார்க்க வைக்கிறது///

  மீண்டும் நான் ஒப்புக்கொண்ட விடயத்தையே என்மீது குற்றமாக வைக்கிறீர்கள்….நான் தான் எனது நிலையை வெளிப்படையாக கம்யூனிச தத்துவத்தை புரிந்து கொண்டவன் அல்ல்ன்..ஒரு சாதாரணின் பார்வையிலேயே என் விமர்சனத்தை வைக்கிறேன் என்று சொன்ன பிறகும்..

  தங்களைப் புரிந்து கொள்ளாதவர்களை , தங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்ளாதவர்களை கத்துக்குட்டியாகப் பார்ப்பவர்கள் தோழர்கள் என்பதை வெளிப்படுத்தியமைக்கு நன்றி…..கடந்த வாரம் நான் / தோழர் அறிவுமணி இராவணன் , திறந்து வைத்த இரு விவாதக் களங்களிலும் யாதொரு தோழருமே கலந்து கொள்ளாமைக்கும் , புறக்கணித்தமைக்கும் இப்படி எங்களை கத்துக்குட்டிகளாகக் கருதியமையும் , விவாதத்திற்கான பொருளாக அவற்றை கருதாமையும் ஒரு காரணம் என்ற அளவில் புரிந்துகொள்கிறேன்….

  நன்றி…!

 35. உண்மையான கம்யூனிச தத்துவத்தை மக்களிடம் பிரசாரம் செய்வது யார்?
  மக்களுக்காக உண்மையாக போராடுகிறவர்கள் யார்?
  கம்யூனிஸ்டுகள் தங்களை சொல்லி கொண்டு போலியாக உலா வருபவர்கள் யார்? என்ற புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். இந்த நீண்ட கட்சி பட்டியலின் தேவை இருந்திருக்காது.//

  சத்தியமாக அப்போதும் எனக்கு புரிந்திருக்காது….தோழர் அறிவுமணி இராவணனின் கருத்தைப் பாருங்கள்..

  http://www.mathibala.com/2009/08/blog-post_31.html

  அதுதான் உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா? இல்லை ம.க.இ.க தோழர்கள் சொல்வதுதான் உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா ? இல்லை தமிழ்மணி சொல்வது உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா ?

  இந்த விவாதத்தை நான் இங்கே திறந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது…நீங்கள் ஸ்டாலின் குருவுடன் ஒரு விவாதம் என்று தலைப்பிட்டிருந்தால் கடந்து போயிருப்பேன்…..தமிழ்த்தேசியவாதியுடன் ஒரு விவாதம் என்ற தலைப்புதான் இங்கே என்னை இழுத்து வந்தது…..

  புலிகளுக்குப் பின்னரான காலத்தில் அவர்களை கடுமையாக விமர்சித்து வந்த தோழர்களுடைய (மக்களைத் திரட்டி ஒடுக்கப்பட்ட ஈழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ) செயல் திட்டத்தை தமிழ்த் தேசியவாதிகளுள் ஒருவனான எனக்குச் சொல்வீர்கள் என்று நான் காத்திருக்கிறேன்….!

  என்னை அடிக்க வந்தவனை திருப்பி அடிக்கிறேன்…இதற்கு எதற்கு கொள்கை? எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் இதை முன்னெடுப்பீர்கள்???

  தமிழனை அடிக்க வந்தவனை திருப்பி அடித்தவன் புலியானானான்…..அந்தப் புலியை காட்டிக்கொடுத்தவன் துரோகியானான்….அந்தத் துரோகியைக் கொன்றதால் புலி பாசிட்டு ஆனான்….!

  அவ்வளவுதானே?

 36. //அதுதான் உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா? இல்லை ம.க.இ.க தோழர்கள் சொல்வதுதான் உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா ? இல்லை தமிழ்மணி சொல்வது உண்மைக்கும் , போலிக்குமான அளவுகோலா ? //

  அளவு கோல் என்ன என்பதை தெரிவதற்காக கூட கம்யூனிச தத்துவம் தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து அளப்பது வெறும் கையால் முழம் அளப்பது போன்றது.

  //இந்த விவாதத்தை நான் இங்கே திறந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது…நீங்கள் ஸ்டாலின் குருவுடன் ஒரு விவாதம் என்று தலைப்பிட்டிருந்தால் கடந்து போயிருப்பேன்…..தமிழ்த்தேசியவாதியுடன் ஒரு விவாதம் என்ற தலைப்புதான் இங்கே என்னை இழுத்து வந்தது//

  மிக்க மகிழ்ச்சி. மேலும் தமிழ் தேசியம் குறித்து உங்களுடனும் விவாதிக்கலாம். நீங்களும் விரும்பினால்..

  //புலிகளுக்குப் பின்னரான காலத்தில் அவர்களை கடுமையாக விமர்சித்து வந்த தோழர்களுடைய (மக்களைத் திரட்டி ஒடுக்கப்பட்ட ஈழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ) செயல் திட்டத்தை தமிழ்த் தேசியவாதிகளுள் ஒருவனான எனக்குச் சொல்வீர்கள் என்று நான் காத்திருக்கிறேன்….!//

  நீங்கள் நினைப்பது போன்று செயல் திட்டம் என்பது ஓரிரு வரிகளிலோ அல்லது பிளாகிலோ சொல்வதல்ல! விவாதிப்போம்..

  //என்னை அடிக்க வந்தவனை திருப்பி அடிக்கிறேன்…இதற்கு எதற்கு கொள்கை? எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் இதை முன்னெடுப்பீர்கள்??? //

  உங்களை அடிக்க வந்தவனை திருப்பி அடியுங்கள். தவறில்லை. ஆனால் கண்முன் தெரியாமல் யார் அடிப்பவன்? யார் அரவணைப்பவன்? யார் விரோதி? யார் துரோகி? யார் நண்பன்? அடிப்பதற்கான மூலகாரணம் என்ன? என்று எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமான தாக்குதல் என்பது தவறு. இதனை தவிர்ப்பதற்கான பக்குவத்தை கொடுப்பது தான் கொள்கை.

  //தமிழனை அடிக்க வந்தவனை திருப்பி அடித்தவன் புலியானானான்…..அந்தப் புலியை காட்டிக்கொடுத்தவன் துரோகியானான்….அந்தத் துரோகியைக் கொன்றதால் புலி பாசிட்டு ஆனான்….! //

  திருப்பி அடித்தவன் புலியானான். குறுக்கே வந்தவன் பலியானான். குருதியை ருசித்து ருசித்து வீரத்தை மட்டுமே நம்பி அரசியலை விடுத்த புலிக்கு, அரசியலை சொன்னவனும் புலிக்கு பலியானான். புலியை விமர்சிக்கிறவன் எதிரியானான்.
  அவ்வளவுதான்..

  • //
   திருப்பி அடித்தவன் புலியானான். குறுக்கே வந்தவன் பலியானான். குருதியை ருசித்து ருசித்து வீரத்தை மட்டுமே நம்பி அரசியலை விடுத்த புலிக்கு, அரசியலை சொன்னவனும் புலிக்கு பலியானான். புலியை விமர்சிக்கிறவன் எதிரியானான்.//

   every political party in this world has this attitude.. which does not have? every political leader considers his political opposition as enemy.. even in the case of vladimir lenin he was responsible for the division of Russian Social-Democratic Labour Party into the bolshevik and menshevik factions.. he riped fruits out of this division.. you praise lenin on one hand and curse the LTTE on the other “FOR THIS ATTITUDE OF HOSTILITY”.. I appears to be as partialism…

 37. அளவு கோல் என்ன என்பதை தெரிவதற்காக கூட கம்யூனிச தத்துவம் தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து அளப்பது வெறும் கையால் முழம் அளப்பது போன்றது./

  சாதாரண மக்களும் கூட கம்யூனிசத்தைத் தெரிந்துதான் எது போலி எது உண்மை என்று கண்டுபிடிக்க வேண்டுமா? சரி சரி போகாத ஊருக்கு வழி தேடி என்ன புண்ணியம்?

  ***

  மிக்க மகிழ்ச்சி. மேலும் தமிழ் தேசியம் குறித்து உங்களுடனும் விவாதிக்கலாம். நீங்களும் விரும்பினால்..//

  நாங்கள் விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறோம்! இப்போது மட்டுமல்ல , எப்போதும்…ஆனால் எப்போதும் முட்டுச்சுவரிலேயே அதாவது புலிப்பாசிசத்திலேயே முட்டி நிற்கும் விவாதங்கள் மிகுந்த சலிப்பைத் தருகின்றன.

  ***

  நீங்கள் நினைப்பது போன்று செயல் திட்டம் என்பது ஓரிரு வரிகளிலோ அல்லது பிளாகிலோ சொல்வதல்ல! விவாதிப்போம்..//

  இதுதான்…..இங்கேதான் புலிகள் தனித்து நிற்கிறார்கள்…நாம் வலைப்பூக்களில் பேசிக்கொண்டிருக்கிறோம்..விவாதித்துக்கொண்டிருக்கிறோம்…புலம்பெயர் தமிழர்களில் சிலரும் அங்ஙனமே….

  ***

  உங்களை அடிக்க வந்தவனை திருப்பி அடியுங்கள். தவறில்லை. ஆனால் கண்முன் தெரியாமல் யார் அடிப்பவன்? யார் அரவணைப்பவன்? யார் விரோதி? யார் துரோகி? யார் நண்பன்? அடிப்பதற்கான மூலகாரணம் என்ன? என்று எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமான தாக்குதல் என்பது தவறு. இதனை தவிர்ப்பதற்கான பக்குவத்தை கொடுப்பது தான் கொள்கை.///

  நண்பனாகவே இருந்தாலும் தன்னை அடிக்க வரும் போதோ , கொல்ல வரும் போதோ எதிர்ப்பது மனித இயல்பு….மனித இயல்புக்கு மாறானதொன்றை நீங்கள் மனிதர்கள் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்…அவ்வாறு அவர்கள் செய்யாத போது செய்யவில்லையே என்று குறைபட்டுக்கொள்கிறீர்கள்..இதில் தவறு யார் பக்கம்.?

  ***

  திருப்பி அடித்தவன் புலியானான். குறுக்கே வந்தவன் பலியானான். குருதியை ருசித்து ருசித்து வீரத்தை மட்டுமே நம்பி அரசியலை விடுத்த புலிக்கு, அரசியலை சொன்னவனும் புலிக்கு பலியானான். புலியை விமர்சிக்கிறவன் எதிரியானான்.//

  புலியை விமர்சிக்கிறவன் எதிரியானான்…அந்த புலிகளின் எதிரி போட்டுக்கொடுத்து துரோகியானான்.அந்தத் துரோகி போட்டுக்கொடுத்ததால் புலி அழிந்து போனான். புலிகளுக்கு அரசியலை சொல்லிக்கொடுத்தவர்களுக்கும் புலிகள் அழிந்து போனதால் வேலையின்றி போய்விட்டது.

 38. இலங்கை நிலவரத்தை அப்படியே இந்தியாவின் சமூக சூழலுக்கு பொருத்தி பார்க்க முடியுமா/
  என்ற அடிப்படை கேள்வியிலேயே அதை புரிந்துகொள்வதின் சிக்கல் உள்ளது
  சிங்களவனை முஸ்லீமுடனும் தமிழனை இந்துவுடனும் ஒப்பிட்டு இங்குள்ளதை போன்ற
  மோதல்கள் தாம் அங்கே இன முரண்பாடாக இருக்கிறது எனவே நாம் இந்திய
  சமூகத்துக்கு என்ன தீர்வு சொல்கிறோமோ அதே தீர்வைத்தான் இலங்கைக்கும் சொல்வோம் என்பது சரியா

 39. மார்க்சிய மாண‌வன்

  தீவிர இனவாதம் என்பது பாசிசத்தின் கூறுகளை தன்னுள் அடக்கியது.எனவே தான் வெறித்தனமான தமிழ்தேசியவாதிகளை ‘நாம்’ இனவாதிகள் என்கிறோம்.
  சரி அதைக் கூட இவர்கள் தமது ‘நாட்டில்’ செய்ய முன் முயற்சியோ திட்டமோ வகுப்பதில்லை. ஈழத்தில் தமிழ்தேசிய புரட்சிக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு (ஈழத்தமிழருக்கு) மூளை இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்.

 40. சந்திரசேகர் ஆசாத்

  அய்யா சாமிகளா,
  உங்கள் தமிழ் தேசியம் எப்படி இருக்கும் ? சாதியை எப்படி ஒழிப்பீர்கள்,உற்பத்தியை எப்படி பெருக்குவீர்கள்,
  அதற்காக இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதையெல்லாம்
  கொஞ்சம் சொல்லுங்களேன் ?

 41. என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா……? எனது குரல் புரிகிறதா..? வணக்கம் எனது இரத்த, இன, மொழி பேசுகின்ற உறவுகளே. இங்கு எங்களை விட்டு தூரப் போய்க் கொண்டே இருக்கிறீர்களோ? தெரியவில்லை உங்களைப் பிணைத்திருக்கும் பாசக்கயிறுகளையா? அல்லது உங்களைச் சுற்றி ஏற்பட்ட மாய வலைகளையா? என்பது எங்களுக்கு விளங்கவில்லை என் தமிழ் உறவுகளே. உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எதிர்காலம் பற்றிய பல கனவுகளுடன் சிறகடித்த எமது தேசியம் நசுக்கப்பட்டு இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கையில் நீங்கள் எங்கு நோக்கி பயணப்படுகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. எங்கே எங்கள் மாவீரர்களையும் வீரர்களையும் தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இன்னோரன்னரையும் பழித்துரைத்த புத்திஜீவிகளே வணக்கம். இப்போ நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்? உங்களை நினைக்கும் போது சில சந்தர்ப்பங்களில் எரிச்சல் தான் வருகிறது. உங்களை நீங்களே புத்திஜீவிகள் என்றழைத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே அடைமொழிகளையும் பட்டங்களையும் பெற்று சமுதாயத்தில் உங்களை மனிதர்களாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் பெருமக்களே! உங்களை ஒரு கணம் வணங்குகின்றேன். முடிந்தால் என் தாய்நாட்டுக்காக எதையாவது செய்யுங்கள் அல்லது வாய்மூடி அமைதியாகி விடுங்கள். உங்களைப் போன்றோரால் தான் எங்கள் தாய்த்திருநாட்டுக்கு இந்த நிலை. உங்கள் மேதாவித்தனத்தாலும், கோழைத்தனத்தாலும் என் தாய் நாட்டை இன்னோரன்னவனுக்கு தாரை வார்க்க நீங்கள் எடுக்கும் பெரும் முயற்சி அப்பட்டமாக தெரிகிறது. அதனைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கமுடியாது. உங்களால் வெறும் அரசியல் மட்டும் தான் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கிடையில் தலைமைக்கான போட்டிகள். பண ஆசைகள் காட்டி கொடுப்புகள் எனத் தொடரும் இழுபறிகள். நாங்கள் இழந்தது போதும் உங்களால் தான் எங்களது கட்டுப்பாட்டு நிலங்களை நாம் இழந்தோம். அந்த சந்தர்ப்பத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தற்போதும் நீங்கள் நல்லவற்றை செய்வதாக எண்ணிப் பிறநாடுகளுக்கு எங்களைப் பிடிக்காமல் போக போராட்டம் தான் காரணம் என தப்பான அபிப்பிராயங்களை மீண்டும் நிறுவ முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் கேட்பது ஒன்று தான். போராட்டம் என்பது வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டு கூட்டங்கள், ஒன்று கூடல், விழாக்கள் என நடத்துவதல்ல. அல்லது வெளிநாடுகளில் வாழும் மக்களுக்காக மட்டுமல்ல. தாயகத்தில் வாழும் எம் இரத்த உறவுகளுக்கும், தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளவும் தான் ஆயுதம் தூக்கினோம். அதிலிருந்து நீங்கள் தூரப் போய் இருக்கலாம். ஆனால் விலகி இருக்க முடியாது. எப்படியும் ஒரு வகையில் நீங்கள் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அல்லது நீங்கள் அகிம்சை வழி என்று சொல்லிக் கொண்டிருக்க, உங்களுக்கு ஆட்டிக் அல்லது அந்தாட்டிக்காவில் கூட ஒரு சிறு குடிசை கூட இந்த உலகு உங்களுக்கு வழங்காது. நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியவர்களல்ல. எங்களுக்கான நாட்டுக்காக நாங்கள் உரிமையுடன் உணர்வுடன் போராடுவோம் இறுதிவரை. இறுதிவரை என்பது தனி ஒருவனின் வீர மரணம் அல்ல. இந்த உலகின் மரணம் மட்டும். இந்தப் பூமி வாழும் வரை எங்கள் நிலங்களை நாங்கள் யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே எமது மக்களுக்கு இப்படியான சல சலப்புகளை ஏற்படுத்தி அவர்களை பிளவு படுத்தி சிங்களவனின் இன வெறி அழிப்பிற்கு துணை போகாதீர்கள். தனி ஒருவன் என்ற பதத்தை வைத்து தப்பான அபிப்பிராயத்தை வளர்க்க வேண்டாம். தாயகப் போரையும் சம நேரத்தில் கொண்டு செல்வதால் மட்டுமே எங்களின் உரிமையை நாள்கள் பெற்று சரியான இடத்தில் சரியான விதத்தில் எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வலுச் சேர்க்க வேண்டுமே ஒழிய காலை வாராதீர்கள். சொந்த நாட்டுப் பிரச்சனையைவைத்து அரசியல் ஆதாயமோ அல்லது பணத்தையோ சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். களத்தில் நிற்கும் போராளிகளுக்கு வலுச்சேருங்கள். அவர்களுக்கு பின்பலமாக நீங்கள் இருந்து செயற்பட வேண்டும் என்பதே எங்கள் அவா. இது வரை காலமும் நீங்கள் வழங்கிய ஆதரவையும் தனி நாட்டுக் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க உங்களின் ஆத்மபலம் எங்களுக்கு வேண்டும். அதனைத் தொடர்ந்தும் எங்களுக்கு நல்குவீர்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம். உங்களில் ஒரு பகுதியினர் மட்டும் கூட்டம் கூடி பேசுவதால் பயனில்லை. எல்லாத் தமிழ் உறவுகளையும் ஒன்று சேருங்கள். எங்களை எல்லா தமிழர்களையும் ஒன்றிணைக்கும் வண்ணம் அமைப்புக்களையும் சங்கங்களையும் அந்தந்த நாடுகளிலேயே அமையுங்கள். மதத்தால் நிறத்தால் வேறுபட்டு இருக்கம் எமது சமூக கட்டமைப்பை தமிழீழம் என்ற ஒன்றுக்காக தனி நாட்டுக்கான கட்டமைப்புக்களை கட்டும் விதமாக அமையுங்கள். அவை மதங்களைத் தாண்டி எமது இனத்திற்கான சேவையைப் புரியட்டும். அதற்கு உதவி செய்யுங்கள். உருவாக்குங்கள். அந்த உன்னதமான ஓரணிதிரண்ட புலம் பெயர் தாயக மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்தின் முன் வையுங்கள். உங்களின் உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசம் எங்கும் பிரச்சாரப்படுத்துங்கள். வெறுமனே நாங்கள் யூதர்களைப் போல, எனச் சொல்லி நப்பாசை படாதீர்கள். யூதர்களை இந்த உலகில் இருந்து பிரித்துப் பார்க்க முடியா வண்ணம் அவர்கள் ஒன்றித்து போய் இருக்கிறார்கள். நாங்கள் அப்படி இருக்கிறோமா? மற்ற சமூகங்கள், நாடுகள் எங்களில் தங்கி நிற்கின்றனவா? என்பதை யோசியுங்கள். அப்படி ஒரு உயர்ந்த நிலையில் தமிழன் இருக்கும் போது, இந்த உலக பொருளாதாரம் சரிந்துவிடும் என்னும் நிலை வரும் போது தான் எங்களை இந்த உலகம் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்படும். அதற்காக அந்தந்த நாடுகளில் நீங்கள் தனிப்பட்டு அல்லாமல் எல்லாமே மக்கள் சொத்துக்களாக கூட்டிணைந்து விமான சேவை, கப்பற்துறை, தொலை தொடர்புத் துறை தொலைக்காட்சி, வானொலிப் பணிகள் என இன்னோரன்ன பணிகளைக் கட்டியெழுப்புங்கள். எங்களுக்கான நிலங்கள் மீட்கப்படும் போது அவற்றை தாய் நாட்டுக்கு கொண்டு வர முடியும். அப்படி ஒனறிணையும் பட்சத்தில் எங்களது நிதி எங்களிடம் இருக்கும்; அவற்றை யாரும் சுரண்டி விட முடியாது. மக்களின் நிதி மக்களிடம் இருக்கும். அவற்றை வைத்து வேண்டுமானால் நாங்கள் சந்திரனையும் விலைக்கு வாங்கலாம். மற்றவர் எல்லாம் அதன் பின் தூசு தான் எமக்கு. அதை விட்டு வெறுமனே தமிழர்களை மட்டும் குறிவைத்து உங்கள் வியாபாரங்களை பெருக்கி அதை வைத்து சீரில்லாத இலங்கையில் முதலீட்டையோ அல்லது உங்கள் வீட்டு வாசலையோ கட்டி கொண்டாடுங்கள். யுத்த பூமியில் உங்கள் ஒரு சேமிப்பையும் காண முடியாது. உங்கள் வாழ் நான் பூராகவும் உழைத்ததும் உண்டதும் தான் மிச்சமாக இருக்கும். வேறெதுவும் மிச்சமிருக்காது. எனவே எங்கள் பாரம்பரீயத்துடன், எங்களின் சந்ததிக்காக எதையாவது அறிவு பூர்வமாக செய்யுங்கள். அது எல்லா வழிகளிலும் எல்லா இன மக்களையும் கவரும். அல்லது சார்ந்து இருக்கும் வண்ணம் அமையுங்கள். எங்களுக்கென தனி பரப்புரையை செய்யுங்கள். அதையெல்லா ஊடகங்கள் வாயிலாகவும் செய்ய முயற்சியுங்கள். அதன் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை எட்டலாம். அதை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் தனித்து மக்களைப் பிரித்து என்ன செய்கிறீர்கள். யாருக்காக செய்கிறீர்கள் என்பதை யோசித்து செயற்படுங்கள். இதற்கு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விதிவிலக்காக முடியாது. மக்களின் துயர் துடைக்க வேண்டிய வேலைகளை உடனடியாக செய்யுங்கள். பருவ மழை பெய்ய முன்பே நாளுக்கு 100பேர் வீதம் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரண சடங்குகளுக்கா நீங்கள் உதவி செய்யப்போகிறீர்கள்? நாளுக்கு நாள் காணாமல் போகும் மக்களின் தொகை சிங்களவனுக்கு மட்டுமே தெரியும். குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருக்கும் மக்களின் தொகையை கூட்டிப்பாருங்கள். விளங்கும். எவ்வளவு மக்களை நாம் இழந்திருக்கிறோம் என்பதை, அவர்களிடம் கணக்குகள் இருக்கின்றனவா என்பது கூட கேள்விக் குறிதான். அப்படி இருப்பின் ஏன் சர்வதேச செஞ்சிலுவைகள் கூட இத்தனை ஆயிரம் உறவுகளைப் பற்றிப் பதிவைக் கூட இணைத்து வைக்க முடியவில்லை. எல்லா முகாம்களும் ஒரு சில கிலோமீற்றர் பரப்பளவுக்குள் தான் காணப்படுகின்றன? வன்னியில் 480,000 மக்கள் வாழ்ந்தார்கள். இன்று 330,000 கூட கணக்கிலில்லை. அதிலும் பல குளறுபடிகள். மிகுதி மக்கள் எங்கே என்பதை யாரும் இது வரை வாய்திறக்கவில்லை. ஏன்? சர்வதேசத்தின் கதவுகளில் தட்டவேண்டியது யார்? தமிழ் எம்பிக்கள் வாய் கிழியக் கத்துவதுடன் சரி. அவர்களே என்ன செய்வது என்ற நிலை அல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வழியை பின் பற்றுவது என்பதில் அவர்களுக்குள் நிறைய ஐயப்பாடுகள் எழுகின்றன போலும். எனவே இதற்கான தீர்வினை நீங்களே எடுக்க வேண்டும் எங்களுக்கான எந்த அரைகுறை தீர்வையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இவ்வளவு காலமும் போராடினோம். அதே போல் அந்த மக்களின் சொந்த நிலமல்லாத காட்டு நிலங்களில் அவர்களைக் குடியேற்றுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் தமிழர் நிலங்களை, சிங்களவன் சூறையாடுவதற்கு நாங்களே வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம். எனவே அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காக பாடுபடுங்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிது யார்? ஐ. நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இல்லை. புலம் பெயர் வாழ் மக்கள் நீங்கள் தானே! அதை விட்டு விட்டு களியாட்டங்களையும் நிகழ்வுகளையும் நடத்துவதால் யாருக்கு இலாபம்? கைது செய்யப்பட்ட போராளிகளின் பட்டடியல் 20,000 தை தாண்டிவிடும் போல் உள்ளது. ஆனால் உண்மையை அறிய கூடக் உங்களாலோ சர்வதேசத்தாலோ முடியவில்லை. அதற்கு நீங்கள் வலுச் சேர்கலாமா? எங்கள் மக்கள் என்ன ஆடு மாடுகளா? சிங்களவன் காலால் உதைத்து விரட்ட, வெறி கொண்ட வேங்கைக் கூட்டம் கைகால்கள் கட்டப்பட்டு சிங்களவன் கால்பட்டு சாவதா? நிராயுதபாணியாக துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாளுக்கு நாள் இரையாக நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறீர்கள். நாங்கள் சீறும் வேங்கைக் கூட்டம் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். இருந்தும் ஏமாந்தோம். அதற்கு நீங்களும் ஒரு காரணம் எல்லோரையும் நம்பி எங்கள் உறவுகளை நட்டாற்றில் விட்டுவிட்டீர்களே? எங்களது கைகளையும் கால்களையும் அவிழ்த்து விட்டு, எந்த சிங்களவனாவது எங்களுக்கு எதிரே துப்பாக்கியை நீட்டட்டும் பார்க்கலம். எமது மக்கள் போரில் வீழ்ந்து கொண்டிருக்க உணர்வுள்ள எல்லா மக்களையும் பிழையாக வழி நடாத்தினீர்களோ என்பது பெருத்த சந்தேகம். உண்மையில் நீங்கள் எல்லோரும் பொம்மைகளோ என்ற சந்தேகம் தற்போதய நிலையில் பலர் பல நாடுகளுக்கு பொம்மைகள் தான். ஏனெனில் சுயமாக தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை. எனது கடந்த மடலுக்கு பல அபிப்பிரயா பேதங்கள் எழுந்தன. இருந்தும் அதற்கு நாம் மதிப்பளித்தோம். ஏனெனில் சில நேரங்களில் எங்களின் முடிவுகள் தவறாக போய்விடலாம்; என்பதை அமைதியாக உங்களின் கபடி ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் ஆட்டம் என்னவோ ரசிக்கும் படி அமையவில்லை என்பது உண்மை. உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் பல விடயத்தைப் போட்டு உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. உங்களுக்கு அதீத தெளிவை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் உங்களை பிழையாக பிறர் வழிடத்தா வண்ணம் காப்பாற்ற, போராளிகளாகிய எமக்கு கட்டாய கடமையாக இருக்கிறது இப்போ. எல்லாம் பரகசியமாக தான் இருக்கிறது. அதை வைத்தத் தான் இலங்கை இராணுவம் தங்கள் நிகழ்ச்சி நிரலை அமைத்து இருக்கிறது. ஆனாலும், எங்கள் கட்டமைப்புகளை சிதைக்க இந்த சின்னப்பயல் சிங்களவனால் முடியாது என்பதை நீங்கள் புரிந்த கொள்ளவேண்டும். மாற்றுக் கருத்துடையவர்களே உங்களை இரு கரம் நீட்டி அழைக்கிறோம். உண்மையில் நீங்கள் ஈழம் என்ற தாய் நாட்டை நேசிக்கும் ஒரவராக இருந்தால் உங்கள் அபிப்பிராய பேதங்களை மறந்து சிதறடிக்கும் சிந்தனை கொண்ட சிங்களவனை சிதறடிக்க ஒன்றிணையுங்கள். அது உங்களால் முடியும். உங்கள் சக்தியை நீங்களே துர்ப்பிரயோகம் செய்கிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசியுங்கள். புரிவது போலிருந்தால் உங்கள் கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த நவீன உலகம் நிச்சயம் எங்களை ஏற்றுக் கொள்ளும். எங்களுக்கு என்ன எனப் பருவகால விடுமுறையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரை பல முகங்களில் காணலாம். உண்மையில் உங்களுக்காக வெட்கப்டவோ வேதனைப்படவோ முடியவில்லை. ஏனெனில் நீங்கள் உங்களின் உண்மையான சுய முகங்களை சமுதாயத்திற்கு இப்போதுதான் காட்டுகிறீர்கள். இப்படி எங்களுக்கு ஒரு வீழ்ச்சி இல்லாவிட்டால் உங்களை போன்ற பச்சோந்திகளை நிச்சயம் அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். கும்பலில் கோவிந்தா போட்டு விட்டு நீங்கள் உங்கள் பாட்டில் போய்விட்டீர்கள். ஆனால் இப்போ எல்லா முகங்களையும் அடையாளம் காணமுடியுமென நினைக்கின்றேன். தற்போது ஈழத்தில் நாலாங் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்து இருக்கிறதொழிய நீங்கள் எண்ணுகிறது போல் அல்லாமல் மீண்டும் பெரும் போர் தொடரப் போகிறது. அதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள். அதில் நாம் தோற்க முடியாது ஏனெனில் நாம் வெற்றிப் பரம்பரை. முதுகில் குத்துவது சிங்களவனுக்கு பழக்கமாகிப் போயிருக்கலாம். அதற்காக நாம் நெடுக முதுகைக் காட்டமுடியாது. தற்போது எங்கள் படையணிகள் மரபு நிலையிலிருந்து கெரில்லா நிலைக்கு மாற்றம் பெற்ற இருக்கின்றனவே ஒழிய எங்களை அழிப்பதென்பது முடியாத காரியம்; எனவே எங்கள் தலைமையின் தொடர்புகள் அற்று இருப்போரும், குழப்பத்தில் இருப்போரும் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடனும் ஓர் திடமான நம்பிக்கையுடனும் போராட்டத்தை தொடருங்கள். உங்களுக்கான இலக்கை தீர்மானித்து அதனை வெற்றிகொள்ள உங்களுக்கேற்ற வழிகளை பின்படுத்துங்கள். நீங்களும் உடைந்து எங்களின் அணிகளையும் சிதைக்காமல் செயற்படுங்கள். எதிரிக்கு இனி நீங்கள் சிம்மசொப்பனமான இருக்கப் போகிறீர்கள். நாளடைவில் நீங்கள் எங்கள் எல்லோருடனும் இணையும் காலம் வரும். எனவே தாக்கிவிட்டுத் தப்பிக்கும் கெரில்லா முறையை பின்பற்றுங்கள். அதை இந்த சிங்களவன் எந்த நாட்டைவைத்து அடக்குவானென்று பார்க்கலாம். எனவே நீங்கள் எல்லோரும் கெரில்லாவாக மாற வேண்டிய சந்தர்ப்பம் இது என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்பகிறேன். பிரபலமான எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூடி புலிகளைத் தோற்கடித்த பின் அல்லது அழித்தபின் என்ற தோரணைகளில் தங்கள் கட்டுரைகளை வரைகிறார்கள். அவர்களுக்கு காலம் சிறந்த பாடத்தைக் கொடுக்கும். புலிகளை அழிக்கவோ தோற்கடிக்கவோ இந்த உலகால் கூட முடியாது. தோற்பது என்பதைக் கூட நாங்கள் தான் தீர்மானிக்கமுடிமே ஒழிய எதிரி அல்ல. போரில் நாங்கள் தோற்று இருந்தால் இன்று அல்ல என்றும் தமிழர்களுக்கு என்று விடிவு காலம் பிறக்கப்போவதில்லை. அந்த விடிவை சுபீட்சமான வாழ்வை தமிழருக்கு புலிகள் கொடுத்தார்கள். மீண்டும் கொடுப்பார்கள். அதற்கான காலத்தை நாங்கள் ஒன்றிணைந்து கனியவைப்போம். சென்ற போரில் எல்லாவற்றையும் இழந்து வெறுமையாக முகாம்களில் வாழும் மக்களை எவ்வளவு சுலபமாக மறந்து விட்டீர்கள் என்பது பெரும் வேதனை. வெளியில் இருக்கும், எந்த ஒரு தமிழனையும் விட உண்மையான தமிழர்கள் என நெஞ்சு நிமிர்த்திக் கூறிய பெருமையை பெற்றார்கள். அந்த மக்களுக்கு. “எனது தாய்மார்களே! என்னருமைத் தந்தைகளே! உடன் பிறவா எனது சகோதரர்களே! சகோதரிகளே! வீரர்களே! என் வீராங்கனைகளே! உங்களை ஆரத்தழுவ முடியவில்லை. என்பதை எண்ணி எனது நெஞ்சம் வெடித்துவிடும். உங்கள் தலை வணங்கா குணத்திற்காக மீண்டும் மீண்டும் பிறந்தாலும் உஙகளுக்காக இந்த உலகத்தையே எதிர்த்தாகினும் போரிட்டு சாவோம். அதுவே உங்களுக்காக நாங்கள் தருகின்ற உன்னதமான பரிசு. அது ஈழம் என்ற ஒன்று தான். இது உங்களுக்கு விரைவில் கிடைக்க எங்களுக்கு மாவீரர் உதவி புரிவார். உலகெல்லாம் வாழும் தமிழர்களே நீங்கள் தமிழர்களாக இருந்தால் அந்த மக்களுக்கு உணவு உடை உறையுளைக் கொடுங்கள். அதை விட்டு உங்கள் உறவுகளை மறக்கும் அளவிற்கு உங்கள் மனங்கள் என்ன மாசடைந்து விட்டனவா? கற்கள் கூட பெறுவதைத் திரும்பக் கொடுக்குமாம். உங்களால் ஏன் முடியவில்லை. ஈழப்பிரச்சனையைக் காரணம் காட்டி வைத்து பிழைப்பாயும் பாதுகாப்பாயும் தேடிய எனது உறவுகளே இயன்ற மட்டும் நீங்கள் வசதியான வாழ்வில் கட்டுண்டது எப்படி? உங்கள் தாய்வயிற்றை உங்களால் மறந்து விடத்தான் முடியுமா? எனவே அந்த மக்களின் வாழ்விற்கு வாழ்வாதாரத்திற்கு சொந்த நிலங்களில் குடியேற உண்மையாக உழையுங்கள். அல்லது வணங்காமண் கப்பலில் வந்த பொருட்களை வைத்து அரசியல் செய்யும் சிங்களவர்களுக்கு முண்டு கொடுக்காதீர்கள். இதை வைத்து அரசியல் செய்யும் தென்னிந்திய ஆட்சியாளர்களின் அன்புப் பரிசுகள் அந்த மக்களைச் சென்று அடைவதில்லை. அவை பத்திரிகை விளம்பரங்களைத் தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. சில நேரம் சிங்களவனின் கோரப்பசியை சில நேரம் ஆற்றலாம். எனவே உங்கள் மக்களை நீங்கள் கைதூக்கி விடுங்கள். அவற்றை நீங்கள் எந்த வழியில் செய்தாலும் அவை அவர்களை அடைவதை உறுதிப்படுத்துங்கள். வணங்காமண். மக்களை சென்றடைய செஞ்சிலுவை சங்கம் முட்டுக்கல்லாக இருப்பதாக தகவல். எனவே நாங்கள் எங்ளை நம்புவோம். பிறரை தூர ஒதுக்குவோம். அது துறைமுகத்தில் கிடப்பது பான்கிமூனுக்கு கூடத் தெரியவில்லை. இன்னமும். மாயை உலகைப் பின்பற்றாதீர்கள். எங்கள் உணவுகளை கைப்பற்றிய இந்தியா அதை இதுவரை எங்கள் மக்களிடம் சேர்க்கவும் இல்லை. அதற்கான தனது நல்லெண்ணத்தை கூட வாய்திறந்து செய்ய முன் வரவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து அவர்கள் சாப்பாடு அனுப்பப்போகிறார்கள் என்பது மட்டும் விளம்பரமாக சொல்ல நா கூசவில்லை. வன்னிக்கு 200,000 மக்களுக்க 2,000பேர் தான் என சொல்லி உணவு அனுப்பும் போது இந்தியாவும் சர்வதேசமும் ஆமாப்போட்டவர்கள்தான். ஏன் தற்போதும் முகாம்களுக்கு மேலே ஹெலியில் பறக்கும் போது கூட அங்கு சாக்கடைகளும் வாய்க்கால்களும் நாற்றமெடுக்குமே. அது கூட அவர்களுக்கு மணக்கவில்லை போல் தெரிகிறது. ஏனெனில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் அறிந்து கொள்ளும் மார்க்கமாகவில்லை. அறிந்தும் அறியாதவர்களாக நடிப்பவர்களை எப்படிப் பின்பற்றுவார்கள். திறக்காத கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்காதீர்கள். உடைத்துத் திறவுங்கள். சரியான நேரத்தில் சரியான எதுவும் சரியாக எதுவும் அமைந்து விடுவதில்லை. எனவே உங்களைக் கண்டு கொள்ளத் தவறுபவர்களின் காலை நக்கிக் கொண்டு இருப்பதை விடுத்து அனுசரிப்பவர்களுக்கு சமனாக நடவுங்கள். மேற்குலகம் என்ற மாயைக்குள் உங்களைக் கட்டிப் போட நடக்கும் சதிக்குள் சிக்கி விடாதீர்கள். அதிலும் அமெரிக்கா என்ற சந்தர்ப்பவாதிகளையும் இந்தியா என்ற பச்சோந்தி நாட்டையும் விட்டு விட்டு வேண்டுமானால் சீனாவுடன் ரஷ்யா, இஸ்ரேல் என எல்லா நாடுகளுடனும் உங்களின் கரங்களை பலப்படுத்துங்கள். அது ஆசியப்பிராந்தியத்தில் ஓர் புது மாற்றத்தைக் கொண்டு வரும். வெறுமனே இந்தியாவை நம்பியோ அல்லது இந்தியாவுக்கு பயந்தோ இருந்து விடாதீர்கள். இந்தியா என்பது பல பேரரசுகளை உள்ளடக்கிய நாடுதான். அதில் தமிழ் பேரரசுகள் மூன்று. இப்போது தான் தமிழனுக்கு என்று ஓர் அரசு இல்லாமல் போனால் நாங்கள் பல நாடுகளில் இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லாமல் எங்கள் சொந்த நிலங்களையே இழந்து கொண்டு இருக்கிறோம். வெள்ளையன் எங்களை ஒற்றுமை வரக் கூடாது என்பதற்காகவே பல மதங்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறான். நன்றியோடு நடந்து கொள்கிறோம்.. ஆனால் அவர்கள் எங்களை சீரழித்ததை பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை. அசோக சக்கரவர்த்தி பல நாடுகளில் வென்று மாபெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கி அதற்கு ஏற்ற மக்களை பிளவு படுத்தாமல் தனது ஆட்சியை கொண்டு போகவே தேர்ந்தெடுத்த மதம் தான் புத்த மதம். அதை அவனுக்கு கீழே இருந்த எல்லோரும் பின் பற்றினார்கள். தமிழனுக்கு பயந்த தேவநம்பிய தீசனும் தானாக சரணடைந்து பெற்று கொண்ட புத்தமதம். பிறந்த நாட்டில் ஒளிந்து விட்டது. ஆனால் அதை வைத்து புனையப்பட்ட கதையை வைத்து இன்று சிங்கள மக்களைக் கட்டிவைத்து ஓரணியில் திரட்டி வைத்திருக்கிறார்கள் தமிழனுக்கெதிராக. இப்போது தாய் நாட்டில் எட்டப்பன் வேலை பார்த்து முடிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை குறிவைத்து நகர்கிறது புலனாய்வு வேலைகள். அதில் சிக்கி விடாதீர்கள். அமெரிக்கா சிங்களவனைக் கட்டுப்படுத்த தங்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்ள ஒரு பகடைக் காயாகவே எங்களைப் பயன்படுத்தியது. பயன்படுத்தும் அதைத் தான் இந்தியாவும் பிராந்திய நலன் என்று சொல்லிக் கொண்டு செய்கிறது. எங்களின் கட்டுப்பாட்டு நிலைகளில் சூறையாடி இன்னும் 10,000துக்கு மேற்பட்ட துருப்புகளை பல காரணங்களைக் கூறி கொண்டு போர் நடைபெற்ற நிலத்தில் இந்தியா நிறுத்தியிருக்கிறது. சிங்களவன் காட்டுகின்ற மயானங்களுக்கும் விகாரைகளுக்கும் வரைபடம் கீறி காட்டிக் கொடுக்க அவர்கள் வரவில்லை. எங்களை அழித்து மீண்டும் எழ முடியாமல் அங்கு சிங்களவனையும் குடியேற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த எல்லா வழிகளையும் இந்தியா முயலுகின்றது. அதற்கு போட்டியாக பல சீனா முகாங்கள் வவுனியாவில் தென்பட தொடங்கியிருக்கிறது. இது எப்படியும் இந்தியாவுக்கு உறுத்தலான விடயம். ஆனால் உங்களின் விளையாட்டுக்களை எங்களின் நிலங்களுக்கு அப்பால் வைத்து கொள்ள சொல்லி வைக்க வேண்டியது எங்களின் கடமை. அதே போல் தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளைக் கூறி அரசியல் நடாத்தும் பரதேசிகளுக்கு ஒன்றை சொல்லி வைக்க வேண்டும். இந்த தமிழ் முஸ்லிம் பிரச்சனையை சீரான முறையில் தொடக்கி வைத்து அவசரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தது என்னவோ இந்தப் பேரினவாத சிங்கள அரசுதான். இன்று அரசியலில் ஊன்றி இருக்கும் பலர் அதற்கு காரணம் யாழ்ப்பாண முஸ்லிம்களை பற்றி கண்ணீர் விடும் முதலைகளே. உண்மையான காரணங்களை மக்களுக்கு சொல்ல விளையுங்கள். அதன் மூலம் இன மத நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து ஆராச்சிகளை செய்யுங்கள். மக்களை பகடைகளாக்கி அரசியல் ஆதாயத்திற்காக எதையும் பேசாதீர்கள். பல கோடிகளை அடித்து கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இயக்க மரபை மீறி அதற்காகவே புலிகளோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒரு சிலருடன் இந்த முஸ்லிம்களின் வாழ்க்கையில் சந்தோசத்தைப் பறித்து முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்த கருணா அதே முஸ்லிம் இனத்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஓடிப்போய் கலதாரி உல்லாச விடுதியில் கூட வந்தவரையும் விட்டு விட்டு ஓடிப்போன வரலாறு உண்டு. இப்போது எல்லாம் அவர் சொன்னார் நான் செய்தேன் என தலைவர் மீது கரி பூசும் கருணா முஸ்லிம்கள் பணத்தை கொள்ளை அடித்து அனுப்பி அதிக வரி அறவிட்ட பெருமையை தேடிக்கொண்டார். ஒரே நேரத்தில் இப்போது முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம்களிடம் அவர் பறித்த பணம் உயிர்கள் எல்லாம் இப்போது அரசியல் செய்வதற்காக சேர்த்த சொத்துக்கள் தான். நல்லவர்களை இந்த உலகம்; அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் தீயவர்களை எளிதில் பின்பற்றி விடுவார்கள். அதே போல் கூகீல் மூலம் பணம் முகாம்களுக்கு வழங்கப்படவில்லை எனச் சொல்லும் முகாம்களுக்கான அமைச்சர் றிசாட் பதியுதீன் அரசு சாப்பாட்டுக்கே பிச்சை எடுக்கும் போது முகாம் வாழ் தமிழ் மக்களுக்கு பணத்தை அவர், மன்னாரில் கழுதை மேய்த்து கொண்டு வந்து கொடுத்தாரோ என்பது சந்தேகம்; தனது சொந்தங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் முகாம் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டி எழுப்புகிறேன் என சொல்லி வீதிகள் முகாம்கள் மற்றும் கட்டுமானங்கள் எல்லாவற்றையும் கொடுத்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு இருக்கும் ஒருவர் புனர் நிர்மானம் பற்றி பேசுகிறார். ஹக்கீமுடன் உள்ள பிணக்குகளுக்கு முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை காரணம் காட்டி அந்த மக்களின் வேதனைகளில் குளிர்காய என ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை பிளந்து அதற்கு ஒவ்வொரு முஸ்லிம் பெயர்களை வைத்து இயக்கிக் கொண்டு மதவாத அரசியல் செய்கிறார்கள். இவர்கள் பேரில் இருந்த ஆயதங்களைத்தான் தற்போது ஆயத ஒப்படைப்பு என கிழக்கில் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கொடுத்தெல்லாம் என்னவோ ஒல்லாந்தர் காலத்தில் வந்தவை. ஆனால் அவர்களிடம் தங்கமுலாமிடப்பட்ட நவீன ஆயதங்களில் எதுவுமே வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம். இதை முஸ்லிம் தலைமை புரிந்து கொண்டு தமிழ் மக்களோடு இணைந்து தாங்கள் அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செல்லும் போது தங்களுக்கான இட ஒதுக்கீடடையாவது பெற்றுக் கொள்ளலாம். அல்லது அரசின் பசப்பு வார்த்தைகளில் மயங்கினால் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற கூறி சிங்களம் இந்த முஸ்லிம் மக்களையும் ஒரு சிறுபான்மையினமே அல்லாமல் அவர்களை மதம் மொழி மற்றம் நிகழ்வுகள் கொண்டு போய் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுவர். யாழ்ப்பாண முஸ்லிம்களின் இடப்பெயர்வு தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை உண்டு பண்ணி அரசக்கு பலம் சேர்த்தது. பின்னைய முஸ்லிம் படுகொலைகள் மட்டக்களப்பில் கட்டவிழ்த்து விட்டு நிரந்தர முறுகல் நிலையை கருணா ஏற்படுத்தி இப்போது அரசுடன் தான் அவர் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மேல் சீற்றம் கொள்ளாமல் அது ஒரு தனி நபரின் பிழையான வரலாற்று பிழை என்பதை எமது இயக்கம் ஏற்றுக் கொள்கிறது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது. இருந்தும் எங்களோடு தோள் கொடுத்து போராடிய இறுதியாக ஆனந்தபுர சண்டையில் ஒரு கனரக இயந்திர சுடுகலனுக்கு சூட்டாளராக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிய என் தாய் நாட்டின் விடுதலைக்கு உழைத்த முஸ்லிம் வீரனுக்காக வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த இடத்தில். ஆனாலும் அவரும் எங்கள் போராட்டத்தில் அவரைப் போன்ற பலருடன் நினைவுகூரத்தக்கவர்; அவரும் எங்கள் மாவீரச் செல்வங்களில் ஒருவர். அதே போல் ஈழத்திற்காக உயிர் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்; இனங்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களைத் தோற்கடிப்போம். பல ஆரம்பகாலப் போராளிகளில் முஸ்லிம்களின் பங்கும் அதிகம் இருந்தன. பின்னைய நாட்களில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குகள் அவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்து செல்ல வழி வகுத்தது என்பதை இப்போதைய பல அரசியல் முஸ்லிம் தலைமைகளும் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார். எனவே இப்போதைய அரசியலைக் கொண்டு செல்லும் அவர்கள் உணர வேண்டும். கசப்புணர்வுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றன. அவற்றை மறந்து ஒன்றிணையும் வண்ணம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். “நல்லூரில நல்ல சனமப்பா அத எல்லா வெளிநாட்டுக்காரர்களும் பார்த்தவை. அதற்கு உதவிய டக்ளஸ் தொலைக்காட்சிக்காரர் கஸ்டப்பட்டு ஹெலிகொப்டர் எல்லாம் கொண்டு வந்து அசத்திப்போட்டினம். வாய் பிளந்து பார்த்த எங்கட சனத்துக்கு ஒன்று சொல்ல வேணும். யாழ்ப்பாணத்துச் சனம் சண்டை நடக்கேக்கைக்குள்ளயே ஒரு கொடி பிடிச்சதும் இல்லை. வாய் திறந்து கதைச்சதும் இல்லை. இப்பையும் முகாம் சனத்திண்ட சொந்தங்கள் யாழ்ப்பாணத்தில இல்ல எல்லாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து குடியேறினவை. அவைக்கு டக்ளஸ் மாமா தான் சாப்பாடு தண்ணீர் எல்லாம் கொண்டு போய்க் குடுத்து இவ்வளவு காலமும் காப்பாத்தினவர். அதால அவரக்கு எத்தினை கப்பல் ஓடுது என்டு தெரியுமா? அமைச்சர்கள் தான் கப்பல் ஓட்டவேண்டுமென்ற யாழ்ப்பாணத்திற்கு ஒரு எழுதாத சட்டம் இருக்குதுங்கோ. அதால ஏ 9 பாதையால போற சாமானுக்கு கொஞ்சம் விலை கூட. ஏனென்றால் இப்ப றோட் கொஞ்சம் நல்லாப் போடுறாங்கள் இராணுவ பாவனைக்காக. அதால விலை கூட. கப்பலால்தான் பாதுகாப்பாக கொண்டு போகலாம். மக்களை ஒரு மாயைக்குள்ள தள்ளி விட வேண்டும் எண்டதை இந்தியாவின்ர கை போல வடிவா செய்யும். இப்ப சங்கரியாரும் வந்து இருக்கிறார். அவர் தான் மக்களைக் காப்பாத்த வேண்டுமாம்; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆதாயத்துக்காக இவர்கள் என்னவும் செய்வார்கள். அதை இவர்களின் கடந்த கால அரசியலே சொல்லும். மக்கள் சொல்லத்தேவையில்லை. மக்களை சுதந்திரமாக கதைக்கக் கூட விடுறாங்கள் இல்லை. பிறகு எப்படி? சாப்பாடு நிம்மதியான நித்திரை எல்லாம்;.இன்னும் வெள்ளை வான் எல்லாம் கலர் வானாக மாறி சமாதானத்தில ஓடின நிறுவனங்களின் பேரில் ஓடுது. மக்களெல்லாம் இப்ப நிறுவனங்களைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கு.அதே மாதிரி யாழ்ப்பாண மக்கள் பெரிசா வன்னிச் சனத்தை கவனிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தான் போராடப் பிறந்தவர்கள். மற்றவர்களெல்லாம் குளிர்காயப் பிறந்தவை. இப்பவும் யாழ்ப்பாணச் சனத்தை கேளுங்கோ சாமான் விலை கொஞ்சம் 2000, 3000 ரூபாவில இருந்து 300, 400 குறைஞ்சு இருக்கு. அது அந்த சனத்திக்கு போதும். அது தான் இவ்வளவு காலமும் போராடிப் பெற முயற்சி செய்தாங்கள். இப்ப அதே யாழ்ப்பாணத்தில டக்ளஸ் மாமா கெண்டு வந்து தாரார். இதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப் படவேண்டாம். ஏனெனில் வெளிநாடுகளில் எல்லாம் ஊர்வலம் போராட்டம் என நடந்த வேளை இலங்கையில எந்த இடத்திலையும் எந்தப் போராட்டமும் நடக்கயில்லை. அதைப் பற்றி எங்கட சனம் கவலைப்படவுமில்லை. ஏனெனில் தங்கள் சுக துக்கங்களை மட்டும் கவனிக்கும் நிலையில் மாற்றம் பெற்று வருகிறது தமிழினம் அதையும் மீறி யாராவது கிளர்ந்தெழுந்தால் அவையை சிறப்பாக கவனிக்க எங்கட தமிழ் இயக்கங்கள் சம்பளம் வேண்டிக்கொண்டு இருக்குதுகள். அதால வாய்பொத்தி கண்ணை மூடித்தான் நடக்க வேண்டியிருக்கு சனத்திற்கு. அண்டை நாட்டு இரத்த உறவுகள் தீ
 42. @மாவோ,

  எனது கேள்வியை மீண்டும் நினைவுறுத்துகிறேன்.

  சிங்கள மக்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாக இல்லை.சரி. ஆனால் புலிகளும், ஈழ தமிழரும் மலையக மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கவில்லையே அது ஏன்?

 43. //சிங்கள மக்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாக இல்லை.சரி. ஆனால் புலிகளும், ஈழ தமிழரும் மலையக மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கவில்லையே அது ஏன்?

  //

  மலையக மக்கள் என்பவர்கள் சிறுபான்மை தேசிய இனம் அதனால் கூட இருக்கலாம்

  • இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சு வந்து பதில் சொல்ல வேண்டியது தானே ?
   இங்க விவாதமே மாறி வேற ரூட்ல போய்கிட்டுருக்கு தலைவா.

 44. Pingback: அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு « சர்வதேசியவாதிகள்

 45. Pingback: அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு « சர்வதேசியவாதிகள்

 46. Pingback: அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு « சர்வதேசியவாதிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s