வாழ்க தமிழ்! வாழ்க பார்ப்பனீயம்!

“பலவீனம் அதிசயங்களை நம்புவதில் அடைக்கலம் பெற்றுவிடுகிறது” என்றார் காரல் மார்க்ஸ்.

ஆம். மார்க்சின் கூற்று ஓர் அறிவியல் உண்மையே. இதற்கான உதாரணத்தை நாம் தமிழகத்திலேயே காண்போம். நகைசுவை நடிகர் வடிவேல் ஒரு படத்தில் காலை எழுந்ததும் தன் தாயையும், தந்தையையும் வணங்கி உலகில் அவர்களை விட சிறந்த கடவுள் யாரும் இல்லை என்கிற பயபக்தியுடனும், அளவிலா அன்புடனும் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு வேலைக்குச் செல்வார். மாலை வேலை முடிந்த பிறகு புல் மப்பை ஏற்றிக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே கடவுள்களான தன் தாயையும், தந்தையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் போட்டு அர்ச்சனை செய்து கொண்டே நுழைவார். இவருக்கு பயந்து கொண்டே அவருடைய அப்பா ஆறு மணிக்கெல்லாம் முழுக்க போர்த்திக்கொண்டு படுத்துவிடுவார்கள். திட்டிக்கொண்டே அப்பாவை எழுப்பி நல்லா சாத்து சாத்தென்று சாத்துவார். அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பந்தாடிவிட்டு கடைசியாக தான் ஏன் அவ்வாறு அடித்தேன் என்பதை அழுதுகொண்டே விளக்குவார். ஆனால் அடியும் அரவணைப்பும் அன்றோடு முடியாது. அடுத்த நாள் காலை அளவிலா அன்பும், மாலை அளவிலா அடியும் கிடைக்கும். இது தினமும் தொடரும்.

அதே போலத்தான் சில சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், மூத்தகுடிகள் என்றும் புகழ்ந்துவிட்டு பிரிதொரு சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே அடி முட்டாள்கள், சொரணையற்றவர்கள், ஏமாளிக்கூட்டம் என்றும் தமிழ் மக்களை கண்டபடி புகழ்வதும் கண்டபடி ஏசுவதுமாக இருக்கும் ஒரு கூட்டம்  ‘தமிழ் தேசியம்’ என்கிற அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுவதற்காக அந்த சூடு, சொரணையற்ற மக்களைத் திட்டித்திட்டி திரட்டும் பகீரத முயற்சியில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. முதிர்ச்சியின் கிழட்டுத்தன்மையும் அதன் விளைவாக பலவீனமும் அடைந்துவிட்ட  ‘தமிழ்தேசியம்’ பல அதிசயங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. சாதி உணர்வுள்ள தமிழன் இன உணர்வுள்ளவனாக மாறி விடுவான் என்றும், பிரபாகரன் மார்க்சியவாதி என்று  ‘மார்க்சியவாதிகள்’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், “பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார்” என்றும் காத்துக்கொண்டிருக்கிறது. அதிசயங்கள் நிகழுமா? நிகழும் ஆனால் நிகழாது! சாதி உணர்வுள்ள தமிழனுக்கு வர்க்க உணர்வை ஊட்டலாம். ஆனால் உயிரோடிருந்தாலும் பிரபாகரனை மார்க்சியவாதியாக்க முடியாது.

இன்று தமிழ்நாட்டிலுள்ள பல வண்ணத் தமிழ் தேசிய கற்பனாவாத அரசியலின் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சில இளைஞர்கள் கற்பனாவாத தத்துவத்திற்கேற்பவே ஈழமும், தனித் தமிழ்நாடும் தானாகவே அமைந்து விடும் என்கிற கற்பனை மயக்கத்திலிருக்கும் இந்த சூழலில், தத்துவ அடித்தளமே இல்லாத தமிழ் தேசியத்தின்  ‘வீரம்’ என்ன என்பதை இங்கு பார்ப்போம். தமிழகத்தில் பல பல வண்ணங்களில் ஆவிகளாக மட்டுமே உலா வரும் தமிழ் இனவாதிகள் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கும் புரட்சிகர அமைப்புகளான எம் மீது சில நேர்மையற்ற  அரசியலற்ற ‘விமர்சனங்களை’ வைக்கிறார்கள். தோழர் மருதையன் பார்ப்பனர், பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள்,  தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் என்கிற சில  ‘நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த அக்கப்போர்களுக்கு ஆயிரம் முறை பதிலளித்த பிறகும்  ‘இல்ல, இல்ல மொதல்ல இருந்து வா’ என்பது ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்த மொக்கை விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முறை ஒரு சில வரிகளில் மட்டும் பதிலளித்துவிட்டு மேலே செல்வோம்.

எங்களைப் பொறுத்தவரை தோழர் மருதையன் பார்ப்பனர் இல்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட் அவ்வளவே. மற்றபடி ஒரு நபரின் சாதியை கொண்டு அவருடைய நடவடிக்கைகளை அளக்கும் கண்ணோட்டம் தான் பார்ப்பனீய கண்ணோட்டம். ஒருவரின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் எல்லாம்   பிறப்பின் அடிப்படையில் தான் அமையும் என்று பார்ப்பனீயம் தான் வரையறுத்து வைத்துள்ளது. இப்போது பார்ப்பனீயத்தின் இளைய பங்காளிகளாகி விட்ட தமிழ்பார்ப்பனியவாதிகளும் அதையே சொல்லி வருகிறார்கள்.

உங்கள் பார்வையில் தோழர் மருதையன் பார்ப்பனர் எனில், தாழ்த்தப்பட்ட மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான்! இதை ஒத்துக்கொள்வீர்களா ?

புலிகளை ம.க.இ.க ஏன் ஆதரிக்கவில்லை என்கிறார்கள். ஏன் ஆதரிக்கவேண்டும்?  ஈழத்தின் விடுதலைக்காக நின்ற மார்க்சிய லெனினிய தோழர்களையே கொன்றொழித்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா ?

ராஜீவ் கொலையை ஆதரித்து  “ராஜீவ் ஒரு முறையல்ல நூறு முறை கொள்ளபட வேண்டியவர்” என்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்த எங்கள் மீதே அந்த கொலைப் பழியை போட்டு துரோகம் செய்யப் பார்த்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா ?

மக்களை கேடயமாக்கி கொன்றார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? அல்லது இறுதி நாட்களில் தப்பித்து ஓட நினைத்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? எதற்காக ம.க.இ.க புலியை ஆதரிக்க வேண்டும்?

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று பிரசாரம் செய்கிறார்கள். உண்மை தான், ஆனால் யாருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்? தமிழ்தேசியவாதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான், இடஒதுக்கீட்டை கொடுக்கவே கூடாது என்று ம.க.இ.க மிக தீவிரமாகவும், வன்மையுடனும் எதிர்க்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை நாம் என்றைக்கும் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில்  ‘இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வு இல்லை’ என்றும் சொல்கிறோம். ஆனால் தமிழ் தேசிய பித்தலாட்டக்காரர்கள் ம.க.இ.க வின் இடஒதுக்கீடு பற்றிய இந்த நிலைப்பாடு தமக்கும் தமது சாதிக்கும் எதிராக இருப்பதால் அதை திரித்து, வெட்டி, சுருக்கி ம.க.இ.க இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று சொல்லி தாழ்த்தபட்ட மக்களையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

ஆனால் பாவம்! ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் தம்மை தமிழராய் எண்ணியதுமில்லை. இந்த தமிழ்தேசிய கனவான்களும் அவர்களைத் தன் உறவுகளாய் ஏற்பதுவுமில்லை. எம்மை பற்றிய இந்த அவதூறுகளுக்கு நாம் பல முறை பதிலளித்து விட்டோம். இருந்தும் பாசிச ஜெயலலிதாவிடம் கூட நேர்மையான சந்தர்ப்பவாதத்தை காணும் இந்த நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள் மீண்டும் மீண்டும் அதே அவதூறுகளை கொஞ்சமும் வெட்கமின்றி கக்கி வருவதாலேயே இதற்கு பதிலளிக்கிறோம்.

தமிழ் தேசியம் என்பதன் ஆன்மாவே பார்ப்பனியம் தான். ஒரு இனம் என்கிற வரையறையின் படி முழுமை அடையாத தமிழர்களை, சாதிப் பெருமை பாராட்டும் நிலப்பிரபுத்துவ அடையாளத்தை மகிழ்ச்சியுடன் சுமக்கும் தமிழர்களை, அவர்களின் மனம் கோணாதபடி அணி திரட்டி இவர்கள் தமிழ் தேசியம் அமைப்பார்களாம்.

தமிழனுடைய சாதிப்பற்றை ஒழிக்க விரும்பினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி தமிழனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்களா ? ஒடுக்கும் ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று சொல்கின்ற ம.க.இ.க வை எதிர்ப்பார்களா ? ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு கேட்பது மட்டுமல்ல, பார்ப்பன இந்து மதத்தை ஒழிக்காமலேயே தமிழனுடைய விடுதலையை பற்றி பேசுகிற யோக்கியர்களும் கூட இந்த தமிழினவாத கூட்டத்திலே உண்டு. மேலும் கற்பிலிருந்து பூ, பொட்டு, தாலி என்று அனைத்திலும பார்ப்பனிய பண்பாடே தமிழ் பண்பாடு. கண்ணகியின் கற்பு உயர்ந்தது, பூ,பொட்டு தமிழர்களின் அடையாளம், தாலி (சிலர் மாறுபடலாம்) தமிழ் பெண்ணின் அடையாளம் என்பது தான் இவர்களின் உயர்ந்த ‘தமிழர் பண்பாடு’.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனியத்திற்கு முற்போக்கு என்னும் சுண்ணாம்பு அடித்தால் அது தான்  ‘தமிழ் பார்ப்பனியம்’.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசும் தமிழினவாதிகள் அனைவரும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்காக இவர்கள் ஒன்றையும் செய்தது கிடையாது. அப்படி ஏதேனும் இருந்தால் அந்த சாதனைப் பட்டியலைத் தரட்டும் பார்க்கலாம். ஆனால் சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தமிழுக்காக செய்தது ஏராளம்.

திருவையாற்றில் பார்ப்பன கூட்டம் தமிழை  ‘நீச மொழி’ என்று சொல்லி தமிழில் பாட மறுத்ததையொட்டி திருவையாறு உற்சவத்திற்குள் புகுந்து பறையிசை முழங்கி  “தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டை  விட்டு ஒடு” என்று பார்ப்பன கும்பலின் மொழி வெறி தீண்டாமையை தமிழகம் முழுவதும் அம்பலமாக்கியது  ம.க.இ.க. தான். இதை தமிழினவாதிகள் செய்திருக்க வேண்டியது தானே?செய்தார்களா அல்லது யாராவது தடுத்தார்கள்? ஏன் செய்யவில்லை ?

அதன் பிறகு பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து  “அனைவரும் இந்து,  இந்துவே ராமர் கோவிலை கட்ட வா”  என்று தமிழ் மக்களையும் இந்து என்று கூறி கரசேவைக்கு அழைத்த பார்ப்பன கும்பலை அம்பலமாக்கும் வகையில்  “எல்லோரும் இந்து என்றால் எங்களையும் கருவறைக்குள் விடு” என்கிற முழக்கத்துடன் சேரி மக்களையும், பெண்களையும் அணிதிரட்டிக் கொண்டு திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்தோம். தமிழகம் முழுவதும் இது விவாதத்தை கிளப்பியது. தமிழுக்காக இந்த நடவடிக்கையை செய்ய வேண்டாம் என்று தமிழினவாதிகளை தடுத்தது யார்? ஏன் செய்யவில்லை ? இதை செய்யாதது மட்டுமல்ல தமிழ் தேசப்  “பொதுவுடைமை” க் கட்சி என்கிற ஒரு தமிழ் தேசிய கட்சி, பார்ப்பன தேசியத்தின் நாயகனான இராமனை  ‘தமிழ் பழங்குடி’ என்று கூறி பெருமை கொள்கிறது. பார்ப்பன தேசியத்தின் உதவியோடு தான் தமிழ் தேசியம் அமைக்கப்போகிறார்கள் போலிருக்கிறது.

பாசிச ஜெயலலிதாவின் பண்பாட்டு ரீதியான பார்ப்பனமயமாக்கல் திட்டப்படி நாட்டார் கோவில்களில்  ‘கிடா வெட்ட்த்தடைச்சட்டம்’  கொண்டு வந்த போது எந்த தமிழ் தேசியவாதியும் மீசையை முறுக்கிக்கொண்டு, அருவாளைத் தீட்டிக்கொண்டு போய் கிடாவை கூட வெட்டவில்லையே ஏன் ? ம.க.இ.க தானே தமிழ் மக்களிடம் போய்  “சாமி பேச்சக் கேப்பியா மாமி பேச்சக் கேப்பியா” என்று கிடாவை வெட்டியது.

அதன் பிறகு பார்ப்பன கும்பல் திருச்சியில் பெரியார் சிலையை இடித்து தள்ளிய போது உடனே இராமன் உருவப்படத்தை செருப்பால் அடித்து அய்யா சிலையின் காலடியில் இழுத்து வந்து போட்டது யார் ? அதையும் நாங்கள் தானே செய்தோம். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? நாங்கள் செய்து விட்டோம் என்பதாலா ?

தில்லையில் நடராசனை விட பெரிய ஆட்டம் காட்டிய திமிர் பிடித்த தீட்சித பார்ப்பன கும்பலின் குடுமியை பிடித்து ஆட்டி பத்து ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடி தமிழுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் யார் ? தமிழை சிற்றம்பல மேடையில் ஏற்றியவர்கள் யார் ? தமிழ், தமிழ் என்று மந்திரம் பாடும் நீங்களா இல்லை நாங்களா ? நீங்கள் ஏன் இதை செய்யவில்லை. சிதம்பரம் எங்கே இருக்கிறது தெரியாதா என்ன?

மேற்கண்ட நடவடிக்கைகள் சில தான். இது போன்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாத கூட்டம் செய்யவில்லை மாறாக சோசலிசம், கம்யூனிசம், சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தான் செய்துள்ளது. இதையெல்லாம் ஏன் தமிழ் தேசியவாதிகள் செய்யவில்லை இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா எனில் இருக்காது. சந்தர்ப்பவாதத்திலேயே  “நேர்மையான சந்தர்ப்பவாதம்”,  “நேர்மையற்ற சந்தர்ப்பவாதம்” என்று வகை பிரிக்கும் இவர்கள் போன்றவர்களை என்ன வகை என்றே தெரியாத சந்தர்ப்பவாதிகளிடம் இதற்கெல்லாம் பதில் இருக்காது. மாறாக அவதூறுகள் தான் இருக்கும்.

இப்படிப்பட்ட அருமை பெருமைகளையெல்லாம் கொண்ட கூட்டத்தில் ஸ்டாலின் குரு என்கிற நபர், அதாவது தமிழினவாதி தொடர்ச்சியாக எமது அமைப்புகளைப் பற்றி மேற்கண்ட ரெடிமேட் அவதூறுகளையே கக்கி வந்தார். சரி அண்ணாருடன் விவாதித்து தான் பார்க்கலாமே என்று களத்தில் குதித்தோம். ஏற்கெனவே இவருடனான விவாதத்தில் இவருடைய  ‘நேர்மை’  பற்றி நமக்கு நேர் மறையான அனுபவம் இல்லை என்பதால் விவாத பின்னூட்டங்கள் அனைத்தையும் சேமித்து வைத்தோம். அவ்வாறு நாம் எச்சரிக்கையுடன் இல்லாமலிருந்திருந்தால் அவை அடுத்தடுத்த நாட்களே காற்றில் கரைந்து காணாமல் போயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அவருடைய தளத்தில் சென்று அவரை விவாதிக்க அழைத்திருந்தோம். வீரத்தோடு எம்மை நோக்கி ஓடோடி வந்தவர் கடைசியில் வடிவேலின் கெத்தோடு என்னமாய் ஒரு  ‘வீர நடை’ நடந்து போனார் என்பதை கீழ் உள்ள விவாதப் பின்னூட்டங்களில் காண்க.

இந்த ஸ்டாலின் குரு என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எமது தோழர் ரஞ்சித் ஸ்டாலின் ஆர்குட்டில் டவுசரை கழட்டி ஓடவிட்டார்.  “நான் தமிழ் தேசியமே பேசவில்லை தோழர்” என்கிற அளவிற்கு கேவலமாக எமது தோழரிடம் சரணடைந்து விட்டு உடனுக்குடன் தனது ஸ்கிராப்புகளை டெலிட் செய்து விட்டார். தற்போது அது பற்றி கேட்டதற்கு நான் அப்படி ஒருவருடன் விவாதிக்கவே இல்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் இந்த தமிழினவாதி.

இருப்பினும் நாம் அதை பொருட்படுத்தாமல் இவருடன் விவாதிக்க இறங்கிய போது   “உங்கள் தோழர் அசுரன் என்னோடு விவாதிக்கத் துணிவில்லாமல் ஓடிப்போய் விட்டார்” என்றார். இவரை தப்ப விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். எனவே நாம் அதையும் பொறுத்துக்கொண்டு  “சரி அசுரனிடம் நீங்கள் கேட்டு அவர் பதிலளிக்காத (ஆனால் தோழர் அசுரன் இவருக்கு மிக விரிவாக பதிலளித்துள்ளார்) கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம். விவாதத்தை துவங்கலாமா” என்று கேட்டிருந்தோம்.

அதற்கு தப்பித்து ஓடும் எண்ணத்தோடு   “உங்களோடு விவாதத்தை தவிர்க்க விரும்பும் என்னுடைய கோழைத்தனத்தை அம்பலமாக்கி ஒரு பதிவிடும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குவதிலேயே எனக்கு விருப்பம். உங்கள் கேள்விகளையெல்லாம் உங்கள் தளத்தில் பதிவாக போடுங்கள். நான் அதற்கு எனது தளத்தில் பதிலளிக்கிறேன். இந்த முறையால் இருவருக்குமே பிரச்சினை இல்லை” என்று பதிலளித்தார்.

எனினும் நாம் விடவில்லை.  “என்ன ஸ்டாலின் குரு இப்படி சொல்லிட்டீங்க ? சரி விசயத்துக்கு வருகிறேன். வார்த்தை விளையாட்டு வேண்டாம். காமெடி பன்னி கவனத்தை திசை திருப்ப வேண்டாம். உங்களோடு விவாதிக்க வேண்டும், விவாதத்தை துவங்கலாமா” என்று கேட்டிருந்தோம்.

இதனால் முகம்வாடிய முயலை போல் இருந்தாலும் அவர் வேக வேகமாக ஒரு பதிலை நமக்கு அளித்தார்.  அதாவது  “புலிகளை இழிவு படுத்தும் மருதையனுடைய பார்ப்பனத்தலைமையை கொண்ட அதிபுத்திசாலிகளிடம் ஒரு புலி ஆதரவாளன் விவாதிக்க பயம் கொள்வதன் நியாயம் உங்களுக்கு  புரியவில்லையா பிரதர்” என்று  நழுவழுக்கான ஒரு டீசண்ட் பிட்டை போட்டார்.

எனினும் நாம் அவரை விடுவதாக இல்லை. எனவே அவருடைய கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் விவாதத்திற்குள்ளே இழுத்து விடும் வகையில் ஒரு பின்னூட்டத்தை போட்டோம். அந்த பின்ணூட்டத்தை அவர் மூன்று நாட்களாக வெளியிடவில்லை. அதன் பிறகு அதை வெளியிட்டார். பிறகு தான் வடிவேல் பாணிக்கு மாறினார்.

“ம.க.இ.க வினருக்கு எனது பிளாக்கில் அனுமதி இல்லை என்று நான் அறிவிப்பு போடாமல் இருந்தது என்னுடைய தவறு தான், அதற்காக நான் மன்னிப்பு கூட கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.விவாதிக்க பயந்து கொண்டு கோழைத்தனமாக ஓடிவிட்டான் என்று கூட சொல்லிக்கொள்ளுங்கள் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. தயவு செய்து என்னை ஆளை விட்டு விடுங்கள்” என்று ஜகா வாங்க பார்த்தார்.

ஆனால் நாம் அப்போதும் விடவில்லை. சில பின்னூட்டங்களைப் போட்டோம். ஆனால் அதன் பிறகு யோசித்ததில் “ஒரு அடிமை கிடைச்சுட்டாங்கிறதுக்காக இப்படியா. சரி வேண்டாம் விட்டுத்தொலைவோம்” என்று விட்டுவிட்டோம்.

இவரிடம் நாம்  கேட்ட கேள்விகளுக்கு பயந்தோ அல்லது பயப்படாத மாதிரி நடித்தோ அவர் பதிலளிக்க வில்லை என்றே எங்களுக்குத் தெரிகிறது.

உண்மையிலேயே தமிழ் தேசியவாதிகளுக்கு அரசியல் பார்வையும் துணிச்சலும், நேர்மையும் இருக்குமேயானால் அவ்வாறானவர்களுடன் நாம் விவாதிக்க காத்திருக்கிறோம்.

ஆனால் ஸ்டாலின்குரு போன்ற  ‘காமெடி பீஸ்’ வகையறாக்களுடன் இனி நாங்கள் விவாதிக்க விரும்பபோவதில்லை.

பின்குறிப்பு: ஸ்டாலின் குரு இப்போது மிகவும் மகிழ்வார். ஏனெனில் அவரின் விருப்பப்படியே, நாம் அவருக்கென்று ஒரு தனிப் பதிவு போடுகிறோமே. ஸ்டாலின் குரு பெரிய ஆளு சார் நீங்க….

25 responses to “வாழ்க தமிழ்! வாழ்க பார்ப்பனீயம்!

 1. சிதம்பரத்தில் த.தே.பொ.க கட்சி கூட இருக்கிறது, கி.வெங்கட்டராமம் அங்கு தான் கட்சியை வளர்க்கிறார், அய்யா கிவெ சேக்கிழார் விழாவுக்கு போய் நடத்தி வைத்து விட்டு வந்தார், அப்போது அவ்விழாவுக்கு ஒரு தீட்ஷிதன் தான் அருளாசி வழங்கினார். அங்கேயே பு.மா.இ.மு சார்பில் துண்டறிக்கை வினியோகிக்கப்பட்டது. சிதம்பரம் மக்களை கேட்டுப்பாருங்கள் இவர்கள் பார்ப்பனீயத்தை “பிடுங்கிய கதையை”, தெருவுக்கு ஒரு கொடி கட்டி சீன் மட்டும் காட்டத்தெரியும்.

  தமிழ்த்தேசியம் பேசும் இவர்கள் பார்ப்பனீயத்தின் பிம்பங்கள், நெடுமாறனை கோயில் பிரச்சினைக்காக கூட்டிவந்து சிதம்பரத்தில் கூட்டம் போட்டார்கள். அவர் பார்ப்பானை , பார்ப்பனீயத்தை வையவேஇல்லை.

  எப்படி வையுவார், மனசு கஸ்டமா இருக்காது.

  கலகம்

 2. சித்தார்த்த‌ன்

  தமிழ்தேசியம் என்பது தமிழ் பார்ப்பனீயம் தான் என்பதை நிறுவுவது மிகவும் அவசியம்.தமிழினவாத கூட்டத்தின் இத‌யத்தை கிழித்து பார்ப்பனீய சீழை சிந்த விட வேண்டும்.அதற்கு கடந்த காலத்தின் பொருள்முதல்வாத மரபும் அதன் தொடர்ச்சியான‌ நவீன காலத்தின் பகுத்தறிவு மரபையும் நாம் ஆழ கற்பது அவசியம்.

 3. சென்ற மாதம் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு மாவோ என்பவர் இன்று வரை பதிலளிக்கவில்லை என்பதை கவனப்படுத்துகிறேன்.

 4. தமிழ்தேசியம் எவ்வாறு அமைக்கப்படும் அதற்கான திட்டம் என்ன என்பதை மாவோ விளக்க வேண்டும். த.தே புரட்சிக்கு பிறகு என்ன வகை உற்பத்தி முறைக்கு சமூகம் மாற்றப்படும் என்பதையும் கலாச்சாரம் என்பதாக எது முன்னிறுத்தப்படும் என்பதையும் இதற்கான தத்துவ வழிகாட்டியாக இருப்பது எது என்பதையும் த.தே மறுக்கும் நமக்கு அவர் விளக்க வேண்டும் என்று கருதுகிறேன்.விளக்குவார் என்று நம்புகிறேன்.

 5. தமிழினவாதிகளை,தமிழ் பார்ப்பனியவாதிகளை தமிழ் மக்கள் முன்பு சரியான முறையில் அம்பலமாக்க வேண்டும்.தோழர் சித்தார்த்தின் கேள்விகளுக்கு இவர்கள் நேர்மையோடு பதிலளிக்க வேண்டும்.அத்துடன் எனது கேள்வியை, எனது ஒரே ஒரு கேள்வியை மட்டும் தமிழினவாத புரட்சியாளர்களுக்கு இங்கு முன் வைக்கிறேன். இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலத்தின் தேசிய புரட்சி எந்த வடிவத்தை மேற்கொள்ளும் ? இது பற்றி மார்க்சிய ஆசான்கள் யாரேனும் ஏதேனும் சொல்லியுள்ளார்களா ?

 6. தோழரே என்னைப்பொறுத்தவரையில் உங்களுடைய ம.க.இ.க மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.ஆனால் ஒன்று நீங்கள் மிகவும் அவசரம்பட்டு எல்லொரையும் விமர்சித்து விலகிதான் செல்கிறீர் . உங்களுடைய விமர்சனம் எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு புரியவே புரியாது. உங்களுடைய பார்வை மாக்ஸிய பார்வை. அது உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களை மனிதனாக மட்டுமே பார்க்கும்.இதில் தேசியம்,மொழி,இனம்,மதம்,சாதி இவற்றையெல்லாம் உடைத்துப்போட்டு,எண்ணங்களை மாற்றிய மாக்ஸியப்பார்வை.ஆனால் நடைமுறையில் வாழும் மக்களுக்கு இது தான் எண்ணங்களாகவே,சிந்தனைகளாகவே,செயல்களாகவே இருக்கிறது.இவையாவுமே ஒரு நேரத்தல் நாம் முட்டாள்தனமாக ஏற்றுக்கொண்டு,பின்பு உடைத்தது.ஆனால் மற்றவர்களையும் உங்கள் அறிவுக்கு இணையாக உடனே வர நினைப்பதுதான் உங்களுடைய பார்வையாக இருக்கிறது. தோழமையுடன் மனம்திறந்து விவாதித்தால் எல்லொருக்கும் நன்றாக இருக்கும்.ஒரு முட்டாள்தனத்தில் இருந்து மீண்டதாக இருக்கும்.

 7. வணக்கம் தோழர் ரூபகாந்தன்,
  உங்கள் கருத்து மிகவும் தவறானது.நாங்கள் அனைவரையும் விமர்சிப்பதன் மூலம் அனைவரிடத்தும் விலகிச் செல்கிறோம் என்பது தவறு.நாம் அனைவரையும் கண்களை மூடிக் கொண்டு விமர்சிப்பதில்லை,யாரிடம் தவறு இருக்கிறதோ அவர்களை விமர்சிக்கிறோம்.கம்யூனிஸ்டுகளாகிய எங்களை நாங்கள் மனம் திறந்து, மார்க்ஸ் கூறியது போல ஈவிரக்கமற்ற முறையில் ‘சுயவிமர்சனம்’ செய்துகொள்வதாலும்,எமது தோழர்கள் சக தோழர்களை விமர்சிப்பதாலும், அதற்கும் மேலாக எமது அமைப்பை நாங்கள் விமர்சிப்பதாலும் அமைப்பு எமது த‌வறுகளை விமர்சிப்பதாலும் தவறுகளை, மக்களின் நலன்களுக்கு எதிரான தவறுகளை விமர்சிக்கும் தார்மீக உரிமை எமக்கு உண்டு.

 8. உங்களுடைய விமர்சனங்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு புரியவே புரியாது என்கிறீர்கள்.இதுவும் தவறு என கருதுகிறேன். நேற்றுவரை, தோழர்களாகிய நாங்களும் மக்களிடமுள்ள அனைத்து மூட வழக்கங்களையும் கொண்டிருந்த சாதாரண‌ மனிதர்கள் தான்.எமது விமர்சனங்கள் மக்களுக்கு புரியவில்லை எனில் ம.க.இ.க எனும் மார்க்சிய லெனினிய‌ புரட்சிகர அன்மைப்பு மக்கள் திரள் வழியில் வளர்ந்திருக்காது,புதிய கலாச்சாரம்,புதிய ஜனநாயகம் இதழ்களை மக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கி வாசிக்க மாட்டார்கள்.உங்களுடைய வினாவிற்கு ஒரு வரியில் விடைய‌ளிப்பது எனில் தோழர் லெனின் கூறியது தான் நினைவிற்கு வருகிறது. “மக்களை அவர்கள் பழகிவிட்ட முறைகளில் வாழ்வதற்கு கம்யூனிஸ்டுகளாகிய‌ நாம் அனுமதிக்கக் கூடாது”

 9. தோழர் !
  இவர் வேண்டுமென்றே! இவ்வாறு செய்கிறாரா? அல்லது வேறு யாராவது இவ்வாறு சக தமிழர்களுக்கு எதிராக செய்ய தூண்டுகிறார்களா? என தெரியவில்லை.. அங்கு அங்கு ஈழ தமிழன் சுட்டு கொல்லபடும் காணோளியை கண்டு தன்னால் இயன்ற அளவுக்கு மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தடுத்து நிறுத்த மின்னஞ்சல் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்..முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை மீட்க அடுத்த நாட்டினரிடம் கையேந்தி கொண்டு இருக்கிறார்கள்..ஆனால் இவரோ சக தமிழர்களை இந்த இக்கட்டான நேரத்திலும் திட்டி பதிவு போட்டு கொண்டு இருக்கிறார்.. ஒரு பதிவு சிங்கள களவாணிகளை கண்டித்து போடக்காணோம்.. இதில் இருந்தே தெரியவில்லை..உடனே இவர் கருநாகத்தின் வழியில் பதிவிட்ட பழைய தேதிகளை குறிப்பிடலாம்..ஆம் அதை குறிப்பிட்டால் நிகழ்கால பிரச்சனைகள் தீர்ந்து விடும்..முழுமையடைந்த ஒரு மனிதன் பிறக்கிறான் என்றால் நாகசாகி ஹரோசிமா போன்ற அவலங்கள் நிகழ்ந்திருக்காது..

  மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன். நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள். என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நாளைய ஈழத்திற்கு நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ பெரியாரிசமோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? முதலில் மக்கள் அங்கு உயிரோடு இருக்கவேண்டும் அப்போதுதான் தாங்கள் சொல்லும் ரசம் சாம்பார் ஈஸ்டுகளை கேட்க அங்கு இருப்பார்கள்! தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்..
  தமிழ்தேசியன்

  • கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையா தமிழ்தேசியன் உளரி கொட்டுராரு,ஈழத்துக்கு போயி ஆயுதம் தூக்குரது இருக்கட்டும் மொதல்ல முல்லைபெரியார்,காவிரி,ஒக்கேனேக்கல், இப்படி தமிழ் நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு, அதுக்கு உங்கள் தமிழ் தேசிய வாதிகளை கூட்டி போராட்டம் பண்ணி காட்டுங்க,அப்பரம்,தேவர் தமிழ்தேசியவாதி, வன்னியதமிழ்தேசியவாதி,கவுண்டர்தமிழ்தேசியவாதி,இன்ன பிற தமிழ் தேசியவாதிகலெல்லாம், பள்ளர்,பரையர்தமிழ்தேசிய வாதிகளுக்கு எதிரா நிக்கிராங்களே…அதுக்கும் ஒங்க த வியாதிகளை கூட்டி போராடுங்க அப்பரமா…ஈழத்துக்கு போவோம், அதுக்கு முண்ணாடி நீங்க நல்ல மனநல மருத்துவரைப்பாருங்க…ஆமா..ஆயுதம்..ஆயுதம்ங்குரியளே..பிரபாகரன் எதத்தூக்கி போராடுனாறு? //நாகராசன்.

 10. தோழரே சித்தார்தன் அவர்களே ஒருவர் ஒரு அமைப்பில் சென்று சேர்ந்துவிட்டால்,அந்த அமைப்பின் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது தான் இன்று அனைத்து கம்யுனிஸ்ட்டுகள் செய்யும் தவறுகளே. ஒருவர் தான் சுயவிமர்சனம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லலாம் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அது அவரின் செயல்பாடுகளைப்பொறுத்துதான் சொல்ல முடியும்.
  நீங்கள் ஓட்டு சீட்டு அரசியலை புரக்கணிக்கிறீர்கள்.நல்லது,மிகப்பெரிய இந்திய அரசியலை பல விதத்தில் சிந்தித்து எடுத்த முடிவு.இப்படி ஒரு கம்யுனிஸ்ட் அமைப்பு கண்டிப்பாக தேவை.அவர்கள்தான் இந்தியாவின் நம்பிக்கை ஓளி.நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் மக்கள் மத்தில் தன் கொள்கைகளை எடுத்துச்செல்லும்போதுதான் பல பிரச்சனைகளே வருகிறது. நீங்கள் அனைத்தையும் கடந்து ஒரு பொன் உலகத்தைக்படைக்க போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்.ஆனால் நடைமுறையில் வாழும் மனிதன்,முதலாளித்துவ தரகு சமுதாயம்,சாதி,மத,இனம் அடிப்படியில் அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் மனிதன்.தன்னுடைய பிரச்சனைகளில் இருந்து என்று மீளப்போகிறோம் என்று தான் யோசித்துக்கொண்டியிருப்பான்.அவனுக்கு தெரியாது. ஓட்டு அரசியலுக்கு என்பது ஒரு உடைக்கக்கூடிய அரசியல் என்று,அது முதலாளித்துவ அரசியல் என்று,அது தன்னை சுரண்டிக்கொண்டுயிருக்கிற அரசியல் என்று,அது தன்னை இன்னும் ஒடுக்கிவைத்துயிருக்கிற அரசியல் என்று,இங்கு தலைவன் என்பவன் சுயநல பேர்வழி,மக்களைப்பிளவுப்படுத்தி தன்னுடைய அதிகாரத்தைதக்கவைத்துக்கொண்டியிருப்பவன் என்று.மக்கள் இப்பொழுது தான் ஓட்டு போடவே வருந்திருக்கிறார்கள்.ஓட்டு என்பது என்ன என்பதே இப்பொதுதான் உணரந்து இருக்கிறார்கள்.இதற்கு முன்னாடி ஓட்டு போடவே ஆர்வம் கொள்ளமாட்டார்கள்.ஏன்னென்றால் ஒட்டு என்பது எதற்கு பயன்படும்,அதனால் என்ன உபயோகம் யார்வந்தால் நமக்கு என்ன என்ற அரசியலே தெரியாத,ஒரு முட்டால் கூட்டம்.இப்பொழுது விளம்பரப்படுத்தி ஒர் அளவிற்கு ஒட்டையாவது தெரிந்து இருக்கிறார்கள்.அதனால் 100,500ரோவாது கிடைக்கிறது என்று நினைக்கிறார்கள்.
  இதுதான் இப்பொழுது நிலை.நீங்கள் சிந்தித்து வெறுத்துப்போய் வெளியேறிய நிலையின் தொடக்கநிலையில் தான் மக்கள் உள்ளார்கள்.அதைப்புரிந்துக்கொள்ளுங்கள்.நீங்கள் அவர்களை சிந்திக்கவைத்து எளிமையான முறையில் புரியவைத்தால் தான் அவர்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள்.சாதி,மத பேதமின்றி எல்லா ஓட்டு அரசியல்வாதிகளையும் ஒரே அளவில் வைத்து விமர்சிப்பது,ஒருவகையில் பார்ப்பன பார்வையே.குழப்பத்தை ஏற்படுத்துவது முதலாளித்துவமே,அதில் தெளிவான பாதையை தேர்ந்தெடுத்து கலகம்செய்து இலக்கை அடைப்பவனே கம்யுனிஸ்ட்.

  • தோழர் ரூபகாந்தன் நீங்கள் கூறுவது உண்மை.அவ்வாறு பல்வேறு அமைப்புகள் உள்ளன.குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று வேசங்கட்டிக் கொண்டுள்ள‌ சி.பி.எம்,சி.பி.ஐ போலிகள் ஒரு உதாரணம்.ஒரு அமைப்பின் அல்லது கட்சியின் உறுப்பினனாக இருக்கும் ஒருவர் தான் சார்ந்துள்ள‌ அமைப்பின் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவ்வாறு செய்வாறாயின் அது அந்த அமைப்பிற்கு அல்லது கட்சிக்கு செய்யும் நன்மை அல்ல மாறாக‌ அந்த அமைப்பை ஒழிக்கும் செயல் என்பதை கம்யூனிஸ்டுகளாகிய‌ நாங்கள் நன்கறிவோம். எமது அமைப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும்
   விமர்சன சுதந்திரம்- சுயவிமர்சனம் எனும் மார்க்சிய கோட்பாட்டால் கட்டப்பட்டுள்ள கட்சி.எனவே நாங்கள் மற்ற அமைப்புகள் கட்சிகளை விமர்சிப்பதை விட‌ எமது கட்சி அமைப்பை நூறு மடங்கு விமர்சிக்கிறோம்.விமர்சனம் என்பது தான் தவறுகளை களைந்து கொண்டு சரியான பாதையில் மேலும் மேலும் சரியான பாதையில் பயணிப்பதற்கான‌ வழிகாட்டும் விள‌க்கு என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பதால் எம்மையும் எமது அமைப்புகளையும் எப்போதும் சுயவிமர்சனம் செய்து கொள்கிறோம்.மக்களை ஏமாற்றும் போது, மக்களுக்கு எதிராக செயல்படும் போது பிறரை விமர்சனமும் செய்கிறோம்.

   • ‘மக்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள்’ உண்மை தான். எப்படி மாற்றுவது? ‘மக்கள் மிகவும் மோசமாக இருக்கிறார்கள்’என்று கூறி நாம் அவர்களை விட மோசமான நிலையிலிருந்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்த முடியாது. சாதியை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா ? இந்துமதத்தை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் அது நாளைக்கே முடிகிற காரியம் இல்லை எனவே அனைத்தையும் மாற்றித்தான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைப்போம். போராடாமல் மலைத்து நிற்பதால் எதையும் செய்ய முடியாது தோழர்.

  • ////சாதி,மத பேதமின்றி எல்லா ஓட்டு அரசியல்வாதிகளையும் ஒரே அளவில் வைத்து விமர்சிப்பது,ஒருவகையில் பார்ப்பன பார்வையே.குழப்பத்தை ஏற்படுத்துவது முதலாளித்துவமே,அதில் தெளிவான பாதையை தேர்ந்தெடுத்து கலகம்செய்து இலக்கை அடைப்பவனே கம்யுனிஸ்ட்./////

   இதற்கு என்ன அர்த்தம் சற்று தெளிவாக விளக்குங்கள்.யாரை விமர்சிக்கலாம் யாரை விமர்சிக்க கூடாது என்று சொல்ல வருகிறீர்கள் என்பதை சட் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

 11. ‘ஒருவர் தான் சுயவிமர்சனம் செய்துக்கொள்கிறேன் என்று சொல்லலாம் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை’ என்கிற உங்கள் கூற்று மிகச் சரியானது .ஒருவர் ‘சுயவிமர்சனம்’ செய்து கொள்கிறேன் என்று சொல்வதால் மட்டுமே அதை அப்படியே நம்பி விட‌ முடியாது. குறிப்பாக ஒரு கம்யூனிஸ்ட் அதை நம்ப முடியாது. மாறாக அவருடைய‌ ‘சுயவிமர்சனம்’ நேர்மையானதாக இருக்கிறதா அவரிடம் மாற்றம் உள்ளதா அது உண்மையான சுயவிமர்சனமா என்பதை எல்லாம் நடை முறையில் தான் காண வேண்டும்,முடியும். நீங்கள் எமது சுய விமர்சனத்தை தற்போதுள்ள இடத்திலிருந்தே காண முடியும் எனினும் இன்னும் எம்முடன் நெருங்கி வந்தீர்கள் எனில் துலக்கமாய் காணலாம்.

  • தோழர் சித்தார்தின் பதில்கள் மிகச்சிறப்பாக உள்ளன. நல்ல ஒரு விவாதம் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.விவாதத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.தோழர் ரூபகாந்தனும் மற்றவர்களும் தமக்குள்ள‌ கேள்விகளை முன் வைத்தால் மேலும் விவாதத்தை முன்னெடுக்கலாம்.
   நன்றி

 12. தமிழ் தேசியவாதிகள் யாரையும் காணவில்லையே எங்கே தான் சென்றார்கள் ? அடிக்கிற தமிழ்தேசிய அலையில் ஆளுக்கு ஒரு பக்கம் காணாமல் போய் விட்டார்களோ ?
  மாவோ போன்றவர்கள் கூட பரவாயில்லை உண்மையுடன் விவாதம் செய்ய வேண்டும் என்று நம்மிடம் வருகிறார்கள்.ஆனால் ஸ்டாலின் குரு போன்றவர்களுக்கு உண்மை பற்றியும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது.
  துளியும் நேர்மை இல்லாத நபர் தான் இந்த ஸ்டாலின் குரு (ச்சே ச்சே இனிமேல் ஸ்டாலின் என்று சொல்லக்கூடாது வெறுமனே ‘குரு’ என்று சொன்னால் போதும்) என்பது உங்கள் பதிவின் மூலம் தான் அறிந்தேன் மோசமான பொய்யராக இருகிறார் இவருடன் போய் விவாதமா ?

 13. தோழர்களுக்கு செவ்வணக்கம்.

 14. மாவோ என்ற‌ தமிழ்தேசிய தோழர் எங்கே போனார் ?
  அவருக்கும் மற்ற பிர தேசியவாதிகளுக்கும்
  எனது ஒரே ஒரு கேள்வி.

  தமிழ்தேசியம் மார்க்சியத்தை ஏற்கிறதா எதிர்க்கிறதா ?

 15. தமிழ்தேசியம் என்பது தமிழ்பார்ப்பனியம் தான் இதில் மாற்றுக்கருத்தே இல்லை.
  நீங்கள் கூறியுள்ளதை போல
  “ஆனால் பாவம்! ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் தம்மை தமிழராய் எண்ணியதுமில்லை. இந்த தமிழ்தேசிய கனவான்களும் அவர்களைத் தன் உறவுகளாய் ஏற்பதுவுமில்லை”

  இது தான் உண்மை நிலை.
  தமிழ்தேசிய கலாச்சாரமே இதற்கு சான்று.

 16. நாம் தமிழை நேசிக்கிறோம்,எனவே தான் திருவரங்கத்திலிருந்து தில்லை வரை தமிழுக்காக களம் காண்கிறோம். அவர்கள் தமிழை நேசிக்கவில்லை தமிழ் வெறிபிடித்து அல்லது தமிழ் போதையில் இருக்கிறார்கள்.எனவே தான் தமிழை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு எல்லாம் சரியான முறையில் பயன்படுத்தாமல் அதன் மேல் படுத்து புறளுகிறார்கள்.

  நாம் தான் தமிழுக்காகவும் நிற்கிறோம்
  தமிழருக்காகவும் நிற்கிறோம்.

  வாழ்க தமிழ் ஒழிக தமிழ் பார்ப்பனீயம்.

 17. மார்க்சிய மாண‌வன்

  தமிழ்தேசியவாதிகளில் ஸ்டாலின்குரு (மண்ணிக்கவும் தோழர் சூப்பர்லிங் சொன்னது போல ‘ஸ்டாலின்’ என்பதை தவிர்த்துவிட்டு அழைப்போம்) குரு போன்ற அரசியல் கூமுட்டைகள்,முரட்டுவாதிகள் தான் அதிகம். சதா கற்பனை உலகிலும்,புறனானூற்று வீர ம‌ரபின் விடைப்பிலும் தான் கிடப்பார்கள். இவர்களை வைத்துக்க்கொண்டு நாம் ஒன்றும் செய்ய முடியாது. லோக்கல் ஸ்டேக்ஷன் கான்ஸ்டபிளோட லத்தியை கூட உடைக்க முடியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாவது வெண்றெடுத்தால் கூட ஒன்றுக்கும் பயன்படமாட்டார்கள் என்பது இவர்களின் நிலை.

 18. தோழரே நீங்கள் ஸ்டாலின் குருவை விமர்சிப்பது சரி இல்லை என்றுதான் தோன்றுகிறது.மாக்சியம் படிக்கும்போது எல்லோருக்கும் ஏற்படும் சில நிகழ்வுகளில், அதனால் ஏற்படும் சில குழப்பங்களில் ஒருவரின் கருத்துக்காக அவரை தூற்றுவது சரி அல்ல.
  தான் ஒரு கம்யுனிஸ்ட் என்று யார் சொன்னாலும் தன் விருப்பு,வெறுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுபடையாக மனம் திறந்து பேசுபவன்,தவறு இருந்தால் திருத்திக்கொள்பவன் தான்.ஆனால் தான் கம்யுனிஸ்ட் என்று யார் சொல்லிக்கொள்கிறானோ ,அவர் தன் பார்வையிலே விவாதிப்பதால் கருத்து முரன்பாடுகள் வருகிறது. முரன்பாடு என்பதே சரியாக ஒன்றை புரிந்துக்கொள்ளாதது தான்.ஸ்டாலின் குருவின் ஆர்குட் மற்றும் ப்ளாக் பதிவுகளைப்படித்திருக்கிறேன்.நல்ல தோழர் கருத்து முரன்பாடுகளுக்காக அவரை தூற்றுவது சரியில்லை.

 19. பாவெல்

  விமர்சனம், சுயவிமர்சனம் மட்டுமே தனிமனிதனை மட்டுமல்ல ஒரு அமைப்பையும் வளத்தெடுக்கும். மேலும் யாருமே விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டவரல்ல..

  //////தான் ஒரு கம்யுனிஸ்ட் என்று யார் சொன்னாலும் தன் விருப்பு,வெறுப்புகளை உடைத்துக்கொண்டு பொதுபடையாக மனம் திறந்து பேசுபவன்,தவறு இருந்தால் திருத்திக்கொள்பவன் தான்.//////////

  வெளிப்படையாக நாம் விவாதிக்க அழைத்தும், அவர் தான் ஓடிச்சென்று தமிழ் தேசியத்தின் ஒளிந்து கொள்கிறார்.

  /////அவர் தன் பார்வையிலே விவாதிப்பதால் கருத்து முரன்பாடுகள் வருகிறது//////

  முரண்பாட்டை விவாதிப்பதின் மூலம் தெளிவு படுத்திக்கொள்வது தான் நடைமுறை.

  நமக்கும் அவருக்கும் இருப்பது நட்பு முரண்பாடா பகை முரண்பாடா என்று தெளிவாவது அவசியம். ஆனால் அவர் எமது அமைப்பை பகை நிலையில் வைத்தே அணுகுவதும், விவாதத்திற்க்கு வராமல் எமது அமைப்பின் மீது அரசியலற்ற அவதூறுகளை அள்ளி வீசி செல்வதும், விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டதா?

  இந்த பதிவை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் தோழர், நாம் அவரிடம் வெளிப்படையாக விவாதிக்க தயாராகவே இருக்கிறோம் என்பது புரியும்.
  தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1 இதையும் பாருங்கள்.

 20. Pingback: அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு « சர்வதேசியவாதிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s