ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே

இம்மானுவேல் சேகரன் என்கிற‌ பெயர் சாதிய சமூக‌ அமைப்பு நீடிக்கும் வரை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய அடையாளமாக நினைவுத்தூண் போன்று சாட்சியம் அளிக்கும்.

தியாகி இம்மானுவேல் சேகரன்

தியாகி இம்மானுவேல் சேகரன்

யாரைக் கடித்து குதறலாம் என்று நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு உலகை வலம் வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் என்கிற‌ வெறி நாயின் நடு மண்டையில் விழுந்த கல்ல‌டியாய் குறிக்கப்படும் நாள் செப்டம்பர் 11 .

பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் தன் குருதியை விதையாய் விதைத்த நாள் செப்டம்பர் 11 .

1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம்  நாள், தென்மாவட்டங்களில் அப்போது நடந்த தேர்தலுக்கு பின் நடந்த ஆதிக்க‌ சாதி ஒடுக்குமுறையின் மீது அமைதியை(!) நிலைநாட்ட இராமநாதபுரம் ஆட்சியரால் கூட்டப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் வெவ்வேறு சமூகத்தை (சாதி) சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அக்கூட்டத்திற்கு ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதியாக,தலைவராக‌ இம்மானுவேல் சேகரனும் அழைக்கப்பட்டிருந்தார். இது பார்ப்பனியத்தின் அடியாளான முத்துராமலிங்கத்துக்கு பொறுக்குமா ? பொறுக்கவில்லை, இம்மானுவேலை எப்படி இந்த கூட்டத்திற்கு அழைக்கலாம், இம்மானுவேல் தனக்கு சமமான தலைவனா என்றெல்லாம் கொதித்து போய் கேள்வி எழுப்பினார். இதற்கு தியாகி இம்மானுவேல் சேகரன், தான் தேவருக்கு சமமான தலைவனா இல்லையா என்பதைப் பற்றி தன்னை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும் என்று பதிலளித்தார். கூட்டத்திலிருந்து கடுகடுவென்று வெளியே வந்த முத்துராமலிங்கம்,தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்த ஒருவன் தனக்கு சரிசமமாக காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு வளரவிட்டு விட்டீர்களே என்கிற தனது சாதிவெறியை தொண்டர்களிடம் கொட்ட‌, அந்த கோபத்தை தணிக்கும் பொருட்டு அடுத்த நாளே (செப்டம்பர் 11ம் நாள்) தேவர் சாதிவெறியர்கள் இம்மானுவேல் சேகரனை கொடூரமாக வெட்டி சாய்த்தார்கள். தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 52ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமகுடியில் இவ்வருடமும் நினைவஞ்சலிக்காக ஆதிக்க சாதிக்கெதிரான தன் வலிமையை காட்டும் குருபூஜைவிழா 11-09-09 அன்று நடைபெற்றது.

மதுரையில் இருந்து  சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள பரமகுடியில் இவ்விழா வருடந்தோரும் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து பரமகுடி நோக்கி போகும் வழி நெடுகிலும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள பிளெக்ஸ் பேனர்களில் தியாகி இம்மானுவேல் சேகரன் கம்பீரமாக வரவேற்கிறார். அம்மாவீரனின் கம்பீர தோற்றம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஒன்று குவிந்துள்ள ஆதிக்க சாதிகெதிரான சினமாக‌ காட்சியளிக்கிறது.

நினைவஞ்சலி செலுத்த வரும் மக்கள் வண்டிகளில் வரும் போது சில அவசர காரியமாக‌ மரத்தின் ஓரமாக‌ வண்டியை நிறுத்தினாலும் காவல் துறையினர் கலகலத்து போய் விடுகிறார்கள். ஆளும் வர்க்கத்தின் ஏவல் ஆட்களான இந்த காவல்துறையினர் ஆதிக்க சாதி பெரும்பாண்மையினர்‌ வாழும் ஊர்களின் எல்லைகளிலும், முத்துராமலிங்கத்தின் சிலையை சுற்றிலும் கண் இமைக்காமல் காவல் காக்கின்றனர். தாழ்த்தபட்ட மக்கள் அவ்வூர்களில் எல்லாம் நுழைந்து கலகம் செய்வதற்காகவே வருவது போலவும் அதை தடுப்பதற்காகவே இவர்கள் இருப்பது போலவும் சிறப்பு அதிரடி படை, அந்த படை, இந்த படை என்று பரமகுடியை சுற்றி குவிந்து கிடக்கிறார்கள். இந்த‌ காவல்துறை அடிமைகள் முத்துராமலிங்கத்தின் குருபூஜை நடக்கும் போதும் பாதுகாப்புக்கு(!) வருவார்கள். ஒடுக்கபட்ட மக்கள் மீது வன்மத்தை செலுத்துவதில் வெறி கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் தாங்கள் செல்லும் வழிகளில் எல்லாம் ஓநாய்களைப் போல தமது இரத்தவெறிக்கு தாழ்த்தபட்ட மக்கள் வாழும் ஊர்களில் புகுந்து நாசம் செய்யும் போது மட்டும் காக்கிகள் கிராபிக்ஸ் காட்சி மாதிரி காணாமல் போய்விடுவார்கள்.

DalitWoes

ஒடுக்க‌ப்பட்ட சிறுமி‌

தியாகி இம்மானுவேல்  சேகரன், அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த நுழைவு வளையத்திலிருந்து பரமக்குடி துவங்குகிறது. அங்கிருந்து சுமார் 3கி.மீ தொலைவில் நினைவிடம் உள்ளது. ராணுவ உடையில் காட்சியளிக்கும் அம்மாவீரனின் அணியில் இளைஞர்கள் சேருவது போல் நினைவிடத்தை நோக்கி அணி வகுத்து செல்கின்றார்கள். பல கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கபட்டும் நசுக்கப்பட்டும் வருகிறார்கள். சிதைக்கப்படும் தமது வாழ்க்கை பற்றி உள்ளத்தில் புகைந்திருக்கும் தன் உள்ளக் குமுறல்களை, உணர்ச்சியை சிலம்பாட்டம், தப்பாட்டத்துடன் கூடிய கிராமிய கலையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்த்து தன் இன்னுரை நீத்த ஈகைக்கு நன்றி செலுத்தும் நாளாக இவ்விழாவில் பால் குடம் ஏந்தி தன் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.

ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் இம்மக்கள் தமது அவலங்களுக்கெல்லாம் தீர்வு என்ன என்று திக்குத்தெரியாமல் தவிப்பது அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் அவர்களின் அவலங்களை தன் கட்சியின் விளம்பரத்திற்காகவும், அவர்களின் ஓலங்களை தன் கட்சியின் ஒலிபெருக்கிக்காகவும் பயன்படுத்தி தேர்தலில் ஆளும் வர்க்கத்துடனும், ஆதிக்க சாதி வெறியர்களுடனும், ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சியினருடனும் தஞ்சம் அடைந்த தலைவர்களோ மக்கள் நடந்து செல்லும் வழி முழுதும் தியாகி இம்மானுவேல் சேகரன் பேனரில் பளிச்சென பல்லிளித்து போஸ் கொடுக்கிறார்கள். ம‌க்கள் அதையும் பார்த்து எந்த உணர்ச்சியுமற்று கடந்து தான் செல்கிறார்கள். தன்னை ஆண்ட பறம்பரை என்று கூறும் ஆதிக்க சாதியினரிடம் அடிமைசாதியாய் ஒருபுறம். தன்னை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தனக்கான தலைவனிடம் தான் அடிமை என்று உணராமலேயே அடிமையாய் இருப்பது மறுபுறம். இதுதான் இன்று தாழ்த்தபட்ட மக்களின் நிலை, மிகவும் அவலமான‌ நிலை.

இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்று  அப்பாவித்தனமாய் (!) கேட்பவர்க‌ளும், மக்கள் போராடுவதற்கு தயாராக இல்லை என்றும் அரசு தான் எதையாவது பார்த்து செய்ய வேண்டும் என்று அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் சமரசவாதிகளும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். சாதி கொடுமையென்றால் என்ன என்பதையும் அதற்கெதிரான மக்களின் எழுச்சியையும் அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொளும் போராட்டங்களையும் காண வேண்டும்.

ஆனால் ஆண்ட பர‌ம்பரையினருக்கு எதிராக தாங்களும் ஆண்ட பர‌ம்பரையினரே என்று தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவது ஆண்ட பர‌ம்பரையினர் என்னும் குலப்பெருமையில் வாழ ஆசை படுவதையே காட்டுகிறது. ஆனால் தாழ்த்தபட்டவர்கள் ஒருகாலத்தில் வரலாற்றில் ஆண்டபறம்பரையினராய் இருந்திருந்தாலும் அவர்கள் ஆண்ட பரம்பர‌ையாய் வாழ்ந்ததற்கு ஒரு அடிமை சமூகமும் இருந்திருக்கும். இன்று இவர்கள் எவ்வாறு அடிமை தீயால் வேகின்றனரோ இதே அடிமை தீ அன்று அந்த அடிமைகளையும் சுட்டிருக்கும். ஆண்ட பர‌ம்பரையினர் எனும் ஆதிக்க சாதியினர் தேவர் என்றால் நாங்கள் தேவேந்திரர் என்றும், தாழ்த்தபட்ட மக்களுடன் எங்களை சேர்க்க வேண்டாம் என்றும், நாங்கள் தாழ்த்தபட்ட மக்கள் அல்ல என்றும் என்று சிலர் கூறுவது சற்று வேதனையான உண்மை. நினைவிடத்தில் மக்கள் எழுச்சியை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு துண்டு பிரசுரம் கைக்கு கிடைத்தது. இதில் சில கருத்துகள் மக்களை ஏய்க்கும் ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பது பற்றி இருந்தாலும் கீழ்காணும் கருத்துக்கள் நெருடலை உண்டாக்குபவையே.
தேவேந்திரகுலப் பெருமக்களே!

1. தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே அரசியலாக்குவோம் தலித்திய வியாபாரிகளிடமிருந்து விலகி நிற்போம்!

2. சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்ற பெயரிலேயே தலைவரை அடையாளப்படுத்துவோம்!

3. தேவேந்திரர்களை ஏமாற்றும் இந்திய, திராவிட மாயையிலிருந்து விடுபட்டு, தமிழ் தேசியம் குறித்துப் பார்வையைச் செலுத்துவோம்!

4. தேவேந்திரர்களை ஆதிதிராவிடராக மாற்றும் அரசியல் சதியை முறியடிப்போம்!

இவர்கள் தங்களை ஒடுக்கபட்டவர்கள் அல்லது தாழ்த்தபட்டவர்கள் என்று  கூறிக்கொள்வதற்கே கூச்சப்படுகிறார்கள். அதனாலேயே தவறுதலாக கூட தாழ்த்தபட்டவர்கள் அல்லது ஒடுக்கபட்டவர்கள் சாயம் தன் மீது பூசப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாய் ‘தேவேந்திரர்’ என்றே தங்களை ஒவ்வொரு முறையும் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். இதில் ஆதிக்க சாதியினரின் மனோபாவமே இவர்களிடமும் தெரிகிறது.

dalit

பார்ப்பனீய கொடுங்கோன்மை

மேலும் ஒடுக்கபட்ட மக்களிடையே பள்ளர், பறையர், அருந்ததியர் என்னும் பிரிவை தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்களே வலிமைப்படுத்துகின்றனர்.

பார்ப்பனியத்தால் தன் அடையாளம் பறிக்கப்பட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாய் சேரியில் வாழும் தாழ்த்தபட்ட மக்களை பார்ப்பனியத்திற்கெதிரான போருக்கு அணி திரட்ட வேண்டிய கடமையுள்ள தலைவர்களே பார்ப்பனியத்தின் படிநிலையை சார்ந்து நின்று அதன் முகவர்களாக இருக்கிறார்கள். பள்ளர் சமூகத்தை சேர்ந்த தலைவர் பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவரை தன் தலைவர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த தலைவரை ஒருபோதும் தன் தலைவர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர், அவரவர் சமூகத்தின் தலைவராகவே தம்மை அடையாளபடுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஓட்டு சீட்டு அரசியலில் ஆதாயம் தேடி நமது மக்களை அடகு வைக்கும் வேலையை கச்சிதமாக குழப்பமின்றி செய்து முடிப்பதற்கும் இந்த தனி அடையாளம் பயன்படுகிறது. இத்தலைவர்கள் தன் வர்க்க நோக்கத்திற்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவும் தாழ்த்தபட்ட மக்களின் பிரிவினையை மேலும் விசாலமாக்குகின்றனர்.

மற்ற அரசியல் தலைவர்கள் மேல்த்தட்டு  மக்களையும், நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் ஒரு சேர ஏய்க்கும் வேளையில், ஏற்கனவே கசக்கி பிழியபட்ட அடித்தட்டு மக்களின் தலையில் மேலும் மேலும் மிளகாய் அரைக்கும் வேலையை தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று மார்த்தட்டிக்கொள்கிறவர்களும், மீசையை முறுக்குகிறவர்களும் இன்று செய்து வருகிறார்கள். உழைக்கும் வர்க்கமாய் எழ வேண்டிய மக்களை தன் உட்சாதிய பிரிவின் பெரும்பாண்மையை கொண்டு எழ விடாமல் அவர்களை அழுந்தி, வர்க்க பார்வை கிடைக்கா வண்ணம் வெற்று வாய் சவடால்களின் மூலம் மக்களின் உள்ளக் கிளர்ச்சியை, போராட்டக் குணத்தை வேறொரு பக்கத்திற்கு மடைமாற்றி கொண்டு சென்று வரப்புக்கிழைத்த நீராய் அவர்களின் உணர்வுகளை வடித்து விடுகின்றனர். சில நேரங்களில் தனது ரெளடி அரசியலுக்காகவும் கட்டபஞ்சாயத்துக்காவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாண்மை இளைஞர்களை பிழைப்புவாதிகளாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

தியாகி இம்மானுவேலை படுகொலை செய்தவர்களின் பிறந்தநாள் அன்று அரசு விடுமுறை நாள் என்று அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தது ஆதிக்க சாதி தலைவர்கள் அல்ல. இதே தாழ்த்தபட்ட மக்களின் பிரதிநிதி என்று சொல்லிகொள்ளும் ‘நிதி’ பிரியர்களே! இவர்கள் என்றும் மக்களுக்கு நேர்மையாய் இருக்கபோவதுமில்லை. தமது மக்களின் விடுதலையை தமது பிளக்ஸ் பேனர்களில் தவிர உண்மை வாழ்வில் முன்னெடுக்கப் போவதுமில்லை.

Surya Kutty 149

பிரமாண்டமாய் “இங்கு புரட்சியாளர் விதைக்கப்பட்டுள்ளார்” என்ற வாசகத்தை பின் சுவராக பெற்ற தியாகி இம்மானுவேலின் நினைவிடைத்தை அடையும் மக்கள், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் தமது பால் குடங்களை வைத்தும், தம் வாழ்நிலை திணித்திய கருத்தியலில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
முதலாளியத்தை ஒழிக்க மார்க்சிய‌ ஆயுதத்தை வழங்கிய மேதை மார்க்ஸ்

முதலாளியத்தை ஒழிக்க மார்க்சிய‌ ஆயுதத்தை வழங்கிய மேதை மார்க்ஸ்

சாதி என்கிற வகையில் பார்ப்பனிய சாதி அமைப்பின் ஒடுக்குமுறைகளும், வர்க்கம் என்கிற வகையில் ஆளும் அதிகாரவர்க்கத்தின் சுரண்டலும் இரண்டற கலந்து ஒரு சேர தன் வாழ் நாள் முழுதும் வெள்ளபெருக்கு போல் தாழ்த்தபட்ட மக்களை அடித்துகொண்டே இருக்கிறது. அவைகளுக்கு எதிராக அவர்கள் எதிர் நீச்சல் போட்டு கொண்டே வாழ வேண்டியுள்ளது. சுரணடலுக்கு உள்ளாகும் இம்மக்கள் வர்க்க உணர்வோடு எழ வேண்டிய சமயத்தில் பருண்மையாய் சாதி ஒடுக்குமுறை எனும் கொடுமைகளையும் எதிர்க்கவேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனமான “கருப்பின மக்களின் போராட்டம் என்பது வர்க்க போராட்டமே” என்றார் மாவோ .

நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலபிரபுக்களின் வாரிசுகள் சாதியின் பெயரால் இன்று கோலோச்சுவதை எதிர்த்தும் அடிமைகளாய் இருந்தவ்ர்களை இன்றும் தாழ்ந்த சாதி என்னும் பெயருடன் தன்னை அடிமை படுத்துவதை எதிர்த்தும் ஆளும் வர்க்கத்திற்கெதிராக தாழ்த்தபட்ட மக்கள் போராடும் போராட்டமே இது.

தாழ்த்தபட்ட மக்களின் போராட்டம் என்பதும் வர்க்க போராட்டமே.

ஆனால் இதை ஆளும் வர்க்கமும், அவ்வர்க்கத்தை சேர்ந்த பலரும் சாதிப்பிரச்சனை என்று சுருக்கி அம்மக்களின் போராட்டங்களை அங்கீகரிக்க மறுப்பதுடன் ஆளும் வர்க்கத்தின் அதிகார மையதுடன் இணைத்து அற்ப சலுகைகளை அளிப்பதன் மூலம் இம்மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் வேலையையும் செய்கின்றனர். தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்களும் தம் மக்களை ஆளும் கும்பலிடம் அடகு வைக்கிற‌ அரசியலை தான் ‘வீரதீரமாக’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

பார்ப்பனீயத்தை ஒழிக்க தன்னையே ஆயுதமாக வழங்கிய அண்ணல் அம்பேத்கர்

பார்ப்பனீயத்தை ஒழிக்க தன்னையே ஆயுதமாக வழங்கிய அண்ணல் அம்பேத்கர்

உலகில் எங்கும் இல்லாத சாதி எனும் சிறப்பு அம்சத்தை கொண்ட இந்த‌ நாட்டில் சாதிகொடுமைக்குள்ளாகும் மக்களிடமுள்ள‌ ஆதிக்க சாதிக்கெதிரான போராட்ட உணர்வை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வர்க்க உணர்வோடு இணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாமல் சாதியை எதிர்க்கும் போராட்டங்களை முன்னெடுக்க இயலாது. அதே போல ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை தமது சொந்த சாதி்க்கு எதிராகவும், தாழ்த்தபட்ட மக்களுக்கு ஆதரவாகவும் திருப்பாமல் சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க இயலாது.

ஒடுக்கப்படும் மக்களையும், ஒடுக்கும் சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்திலும் அணிதிரட்டி ஒன்றிணைக்காமல் பார்ப்பனீயத்தையும் வீழ்த்த முடியாது ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த முடியாது.

சாதிய சமூகத்தை அடித்து தகர்ப்பதற்கு இது ஒன்றே வழி, இதற்கு மாற்றாக முன் வைக்கப்படும் ஏகாதிபத்திய தத்துவங்களாக ‘தலித்தியம்’ , ஒட்டுப்பொறுக்கி அரசியல் மைய்ய நீரோட்டத்தில் பங்கு பெறுவது, அதிகார மைய்யங்களில் பங்கேற்க வைப்பது, இடஒதுக்கீடு போன்ற‌ சில்ல‌ரை சலுகைகள் அனைத்தும் ‘பார்ப்பனீய‌ சாதிய சமூகத்தை’ என்றைக்குமே ஒழிக்காது. மாறாக அதை  அதே நிலையில் அப்படியே தக்க வைக்கவே பயன்படும்.

55 responses to “ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே

 1. சிறப்பான பதிவு. ஆதிக்க சாதியில் உள்ளவர்கள் தலித் மக்களின் அவல நிலை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். மன‌ம் மற வேண்டும் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

 2. தாழ்த்தபட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்து பலர் கண்டும் காணாமல் போகும் உள்ள போக்கை
  நிறுத்தி சுயசாதியபிமானம் விடுத்து ஒடுக்கப்படும் மக்களுக்காய் போராட முன்வரவேண்டும்.

  உலகெங்கிலும் காண இல்லாத சாதி எனும் சிறப்பம்சத்தை கொண்ட நாட்டில் சாதிகொடுமைக்குள்ளாகும் மக்களை ஆதிக்க சாதிக்கெதிரான உணர்வையும், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வர்க்க உணர்வுடனும், தாழ்த்தபட்ட மக்களை உழைக்கும் வர்க்கமாய் அணி திரட்டவேண்டிய தலையாய கடமை கம்யூனிஸ்டுகளாகிய நமக்கே உண்டு…

 3. மார்க்சிய மாண‌வன்

  நல்ல பதிவு தோழர் வாழ்த்துக்கள்.

  தலித்தியம் எப்படி ஒரு ஏமாற்று வித்தை என்பதை பற்றி ஒர் கட்டுரை எழுதலாம். அதில் த‌லித் மக்கள் மீது சவாரி செய்யும் பிழைப்புவாதிகளையும் ஏகாதிபத்திய காசுக்கு நிற்கும் கூலிகளையும் அம்பலப்படுத்தும் நோக்குடன் எழுதலாம்.

 4. இது நம்முடைய போராட்டம், இதைத் தாங்கிப்பிடியுங்கள்.

  http://supperlinks.blogspot.com/2009/09/blog-post_7852.html

 5. ஸ்டாலின்

  இது நம்முடைய போராட்டம், இதைத் தாங்கிப்பிடியுங்கள்.

  http://supperlinks.blogspot.com/2009/09/blog-post_7852.html

 6. good post

 7. அண்ணல் அம்பேத்கர் பற்றி எனக்கு சில மாற்று கருத்துகள் உண்டு..

  மக்களின் மனதில் மட்டும் இருந்த ஜாதி வேறு பாட்டை எதில் கொண்டு வந்த பெருமை அவருகே சேரும்.

  அதன் விளைவாக தான் இன்று வரை ஜாதி ஒழிய வில்லை என்று நான் தீவிரமாக நம்புகிறேன்.. எந்த ஒரு தாழ்ந்த ஜாதி காரன் இது வரை எங்க ஜாதியில் படித்தவர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள், இனிமேல் எங்களுக்கு ஒதுக்கீடு வேண்டம் என்று கூறியிருக்கிறான்.. இல்லை இந்த அறுபது ஆண்டு காலத்துலயும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி கூட முன்னேர வில்லையா? அப்படி என்றால் என்ன தான் காரணம்? மேல்ஜாதி காரன் அவ்ளோவா ஒடுகுறான்? எனக்கு தெரிந்தே பன்னகார SC களும் இருகிறார்கள்.. அவர்களும் கல்வி ஒதுகிட்டில் அந்த SC Quota பயன் படுத்தி இருகிறார்கள்.. ஏன் எம்.ஜி.ஆர் ஜாதி அடிப்படை இல்லாமல் பொருளாதர அடிபடையில் கல்வி ஒதுக்கு கொண்டு வர வேண்டும் என்று முயன்ற பொது கூட எதிர்ப்பு கிளம்பியதே!! ஆகையால் இன்று ஜாதி அடிபடையில் ஆனா பிரச்சனைகள் இருபதற்கு அம்பேத்கர் ஒரு பெரிய காரணம் என்று நான் நினைகிறேன்..

  ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும்

  • நீங்கள் சொல்வது, அம்பேத்கரால் தான் தாழ்த்தபட்ட சாதியே உருவானது போலவும், அவரால் தான் ஒழியவில்லை என்பது போலவும் உள்ளது. அம்பேத்கரின் வரலாற்றையும் ஆய்வையும் படித்தால் தெரியும். இந்திய வரலாற்றில் சாதியை பற்றி பலர் பல கருத்துக்களை கொண்டிருந்தபோதும், சாதி என்பது இந்து பார்ப்பனீயத்தின் மூலமே என்று வரலாற்றிய ஆய்வில் அம்பலபடுத்தியவர்.அதன் கோர முகத்தை கிழித்து காட்டியவர். அவர் ஒரு ஆய்வாளர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள்வேண்டும். இருப்பினும் சாதியொழிக்க போராடுவதில் அம்பேத்கரிடமும் பெரியாரிடமும் என்ன தேவையோ அதை எடுத்து கொண்டு மார்க்ஸிய வழியில் போராடுவதே சரியான போராட்டமாகும்.நீங்கள் சொல்வது போல் தாழ்த்தபட்ட மக்களிலும் சிலர் வசதியாக உள்ளனர்.ஆதிக்க சாதியிலும் ஏழ்மையான நிலையில் இன்று உள்ளனர்.
   ஆனால் உயர் நிலையில் உள்ள ஆதிக்க சாதியினரின், தாழ்த்தபட்டவர்களின் விகிதம் என்ன?
   ஏழ்மை நிலையிலுள்ள ஆதிக்க சாதியினரின், தாழ்த்தபட்டவர்களின் விகிதம் என்ன?
   கடந்த அறுபதாண்டுகளில் உயர்ந்த நிலைக்கு வந்த தாழ்த்தபட்டோர், ஆதிக்க சாதியினர் விகதம் என்ன?

   விகிதாசாரத்தை பாராமல் ”தாழ்த்தபட்ட மக்கள் எல்லோரும் ஏழை இல்லை. ஆதிக்க சாதியினரிலும் ஏழைகள் இருக்கிறார்கள்” என்னும் வழமை வாக்கியம் தவறானது.

   அம்பேதகரின் மீது விமர்சனம் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் சாதிய கட்டமைப்பு பார்ப்பனீயத்தையும், ஒடுக்குமுறைக்கு காரணமான ஆதிக்க சாதியினரை ஒரு சிறிய காரணமாக கூட நீங்கள் சுட்டிகாட்டாமல் அதை விடுத்து இங்கே அம்பேத்கரை ஒரு பெரிய காரணமாக சொல்லுவதில் உள்ளே உள்ள அர்த்தத்தை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

   • நான் அம்பேத்கர் மட்டுமே காரணம் என்று கூற வர வில்லை.. அம்பேத்கர் ஏன் பொருளாதார அடிபடையில் ஒதுகீடுகு வழி வகுக்க வில்லை என்று எனக்கு இனும் புரியவில்லை.. விடை அறிந்தால் சொல்லவும்..

    கல்வி ஒன்று மட்டுமே ஜாதியை ஒலிக்க வல்ல ஒரு ஆயுதம்.. உங்கள் துப்பாக்கி முனையால் ஜாதி வெறியை ஒடுக்க முடியுமே தவிர அழிக்க முடியாது..

    ஒரு மாணவன் கல்லூரியில் நுழைவதற்கு ஒதுக்கீடு வழியாக போகிறான். அதன் பிறகு அலுவக வேலைகும் அவனுக்கு ஏன் அந்த சலுகை தேவை என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது..!!

    //மார்க்ஸிய வழியில் போராடுவதே சரியான போராட்டமாகும்//

    என்று நீங்க குறிப்பிட்டு உள்ளிர்கள்.. சரி ஒரு வேளை உங்கள் போராட்டம் வெற்றி பெற்று நீங்கள் இந்தியாவை ஆள போகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.. இந்த ஜாதி பிரச்னை எப்படி ஒழிக்க போகிர்கள்? ஜாதியே இல்லை என்று இரவோடு இரவாக அறிவிப்பு வெளியிட்டால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நீங்க உண்மையிலேயே நம்புகிர்களா? இதை எதிர்த்து போராடுபவர்கள் முதலில் தாழ்த்தப்பட்ட சாதியினராக தான் இருப்பார்கள் ..

    பார்ப்பனியம் என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் எனக்கு தெயர்யாது.. மன்னிக்கவும்.. ஆகையால் உங்கள் பதிலில் அதையும் சேர்த்து கூறவும் என்று கேட்டு கொள்கிறேன்..

   • ளிமாகோ

    ////////கல்வி ஒன்று மட்டுமே ஜாதியை ஒலிக்க வல்ல ஒரு ஆயுதம்//////////

    எந்த படிச்ச மூதேவியும் சாதி பாக்குறதில்லைன்னு சொல்றீங்களா?

   • //எந்த படிச்ச மூதேவியும் சாதி பாக்குறதில்லைன்னு சொல்றீங்களா?//

    உங்கள் கல்லூரியில் உங்கள் நண்பன் எவனும் ” நீ என ஜாதி” என்று கேட்டுவிட்டு உங்களுடன் பழக அரம்பிதான? சத்யமாக என்னிடம் எவனும் கேட்டதில்லை.. கேட்டதா என் கல்லோரியிலும் நான் கேள்வி பட்டதும் இல்லை

    அதுசரி படித்தவன் மேல் உங்களுக்கு என்ன அவளோ கோவம்? மூதேவி என்று எல்லாம் அர்ச்சனை செய்றீங்க

 8. நல்ல பதிவு. திருமாவளவன்,கி.சாமி,பூவை ஜெகன் போன்ற தலித் மக்களின் பெயரில் கட்சி நடத்தும் பிழைப்புவாத தலைவர்களை புரட்சிகர சக்திகள் தலித் மக்கள் முன்பே அம்பலப்படுத்தி திரைகிழிக்க வேண்டும்.

  அடித்தட்டு உழைக்கும் மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க‌சர்வாதிகாரம் பிறக்கட்டும் அது தான் சாதியை வேறோடு அழிக்கும்.

 9. ஆதிக்க சாதி வெறிக்கு தீ மூட்டுவோம்.

  அதே சமயம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சவாரி செய்யும், அவர்களின் வியர்வையையும் இரத்தத்தையும் உறிஞ்சும் பிழைப்புவாத பொறுக்கிகளையும் அம்பலப்படுத்துவோம்.

 10. //அம்பேத்கர் ஏன் பொருளாதார அடிபடையில் ஒதுகீடுகு வழி வகுக்க வில்லை என்று எனக்கு இனும் புரியவில்லை.. விடை அறிந்தால் சொல்லவும்.. // –
  பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்தால் உயர் ஜாதி என்று சொல்லி கொள்பவர்கள் எல்லாரும் எளிதில் போலி சான்றிதழ் கொடுத்து சலுகைகளை அனுபவித்து விடுவார்கள் என்பதால் இருக்கலாம். பொருளாதாரம் மேம்பாடு மட்டும் இட ஒதுக்கீட்டின் நோக்கமல்ல; தாழ்த்தப்பட்டவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதே முக்கிய நோக்கம்.

  • //பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்தால் உயர் ஜாதி என்று சொல்லி கொள்பவர்கள் எல்லாரும் எளிதில் போலி சான்றிதழ் கொடுத்து சலுகைகளை அனுபவித்து விடுவார்கள் என்பதால் இருக்கலாம்.//

   இதை நான் நம்பவில்லை.. காதல் திருமணம் செய்து கொள்ளும் சில தம்பதியினர் தங்கள் இருவரில் யார் தாழ்ந்த சாதி என்று பார்த்து அந்த சாதிக்கான சான்றிதழை தன் குழந்தைகளுக்கு வாங்குகின்றனர்..

   //பொருளாதாரம் மேம்பாடு மட்டும் இட ஒதுக்கீட்டின் நோக்கமல்ல; தாழ்த்தப்பட்டவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதே முக்கிய நோக்கம்.//

   இட ஒதுக்கீட்டால் தாழ்த்த பட்டவரின் அந்தஸ்து எப்படி உயரும் என்று நீங்க நினைகிர்கள்? உங்கள் வாதத்தின் படி அன்ட்சதும் பொருளாதர நிலையும் வேறு வேறு என்பதை நினைவில் கொண்டு பதில் அளிக்கவும்.. அதன் பின் என் கருத்தை நான் கூறுகிறேன்..

   • //காதல் திருமணம் செய்து கொள்ளும் சில தம்பதியினர் தங்கள் இருவரில் யார் தாழ்ந்த சாதி என்று பார்த்து அந்த சாதிக்கான சான்றிதழை தன் குழந்தைகளுக்கு வாங்குகின்றனர்.. // இப்படி கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இட ஒதுக்கீடு பயன்படுவது சந்தோஷமான விஷயம். என்னை கேட்டால் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

    ஒரு தலித் பணக்காரன் என்பதால் ஒரு ஏழை பிராமணன் மதிப்பானா? கண்டிப்பாக மதிக்க மாட்டான். ஒடுக்கப்பட்டோருக்கு சமுதாயத்தில் அநதஸ்து கிடைக்க பணம் மட்டும் போதுமானதல்ல. கல்வியறிவு, அரசாங்கத்தில் நல்ல பதவிகள் போன்ற பல விஷயங்கள் தேவை. ஒரு மாவட்ட ஆட்சி தலைவர் தலித்தாக இருந்தாலும் அவருக்கு கீழ் வேலை செய்பவர் எந்த கொம்பனாக இருந்தாலும் மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும். இப்படி ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து இன்று பிற்படுத்தபட்ட வகுப்புக்கு முன்னேறி இருக்கும் ஜாதியினர் தமிழ்நாட்டில் உண்டு.

    இட ஒதுக்கீட்டு முறையை நீக்க உயர் ஜாதியினர் பல வகைகளிலும் முயன்று வருகின்றனர், அதில் நீங்கள் கூறும் காரணங்களும் அடக்கம்.

   • //
    ஒரு தலித் பணக்காரன் என்பதால் ஒரு ஏழை பிராமணன் மதிப்பானா? கண்டிப்பாக மதிக்க மாட்டான்
    //

    உண்மையாக சோழ போனால் நீங்க சொல்வதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை..

    தாழ்த்த பட்ட ஜாதியினர் இன்று மனம் சார்ந்த மற்றும் பணம் சார்ந்த வேறுபாட்டால் தான் ஒதுக்க படுகிறார்கள்.. பணம் சார்ந்த வேறுபாட்டை சரி செய்து விட்டால் மனம் சார்ந்த வேறுபாடுகள் எனும் காரிருள் கல்வி என்னும் கதிரால் காரிருள் விலக ஆரம்பித்து விடும்..

   • //

    இப்படி கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு இட ஒதுக்கீடு பயன்படுவது சந்தோஷமான விஷயம். என்னை கேட்டால் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

    //

    இதுல என்னய்யா உமக்கு சந்தோஷம் இருக்கு? இனொரு தாழ்ந்த சாதி காரன் ஒருவன் போலியாக உருவாவதில் உங்களுக்கு சந்தோசமா? சூப்பர் ..

    இப்படி நூறு சதவிதத்தையும் இட ஒதுகீடுலயே முடிசுடீங்கனா திறமைக்கும் அறிவுக்கும் எங்க மதிப்பு இருக்கும் ?

 11. அம்பேத்கரால் தான் இன்று வரை ஜாதி ஒழிய வில்லை என்கிற உங்களை என்னவென்று
  சொல்வது ?

  உங்கள் கருத்துப்படி அம்பேத்கர் சாதி அமைப்பை காப்பாற்றினார் என்றாகிறது!
  நல்லது, அதற்கான ஆதாரங்களையும் இங்கு வைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

  எந்த ஒரு தாழ்த்தப்பட்டவரும் (தாழ்த்த ஜாதிக்காரன் என்பது உங்கள் வார்த்தை) இது வரை எங்க ஜாதியில் படித்தவர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள், இனிமேல் எங்களுக்கு இட‌ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறியிருக்கிறான் என்று கேட்கிறீர்கள்.

  ஏன் வேண்டாம் என்று கூற வேண்டும் என்பதற்கு நீங்கள் முதலில் பதிலளிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.தலித் மக்கள் வேண்டாம் என்று கூறுவது இருக்கட்டும் அதற்கு முன்பு எந்த‌ பார்ப்பான் தனக்கு இடஒதுக்கீடு
  வேண்டாம் என்று கூறுகிறான்.பார்ப்பானுக்கு அடிமையாக‌ இருக்கும் எந்த‌ மேல் சாதிக்காரன் தனக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுகிறான் என்பதை முதலில் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

  • //
   ஏன் வேண்டாம் என்று கூற வேண்டும் என்பதற்கு நீங்கள் முதலில் பதிலளிக்க வேண்டும் என்று கருதுகிறேன்//

   நன்று.. இட ஒதுக்கீடு என்பது எதற்காக தர படுகிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.. ஒருவன் சமுதாயத்தில் தன் நிலயை உயர்த்தி கொள்ள.. சமுதாயத்தில் தன் நிலயை எப்படி உயர்த்தி கொள்வது? பதித்து, சம்பாதித்து. நாலு பேரு மதிக்கும் பதி வாழ்தல் அவன் சமுதாயத்தில் தன் நிலயை உயர்த்தி கொண்டான் என்று தானே பொருள் கொள்ள வேண்டும்? சரி ஒரு வேலை அவன் புல்லை ஒரு தரு தலை என்று வைத்து கொள்வோம்.. அவன் ஒரு மாநகரத்தில் ஒரு பள்ளியில் படிக்கிறான். படிப்பு ஏற வில்லை.. மதிபென்னும் எடுக்க வில்லை.. அவனுக்கு கல்லூரிக்குள் நுழைய எதற்கு ஒதுக்கீடு என்று தான் நான் கேட்கிறேன்.. உனக்கு படிக்கச் நல்ல வசதியும் செய்து கொடுத்தாச்சு… இன்னும் மயிறு உனக்கு படிக்க வலிக்குதுனா போய் பிச்சை எடு என்று விரட்ட வேண்டாமா அவன? இவன் அந்த இட ஒதுக்கீட்டை பயன் படுத்துவதால் இன்னொரு நல மாணவனின் வாழ்க்யை பாதிக்காத? நான் ஜாதி அடிபடையான இட ஒதுக்கீடே தவறு என்று தான் கூறுகிறேன்..

   //
   தலித் மக்கள் வேண்டாம் என்று கூறுவது இருக்கட்டும்
   //

   இப்படி நான் எங்க சொல்லிருகேன்?? சுட்டி காட்டவும். பதிலுக்கு காத்திருக்கிறேன்.

   • நல்லா புரிஞ்சுக்கங்க இப்ப காசு உள்ளவனுக்கு தான் கல்வி. நீங்க சொல்வது போல எந்த காலேஜில இலவச கல்வி தர்றான் ?

    மேலும் சாதி ரீதியான இடஒதுக்கீடு வேண்டும், அதை நாங்கள் ஆதரிக்கிறோம், அதுவும் ஒடுக்கப்படவர்களுக்கு மட்டும்.ஆனால் அது முழுமையான தீர்வு இல்லை என்றும் சொல்கிறோம்.

    எல்லாத்துறையிலையும் பாப்பான் உட்கார்ந்திட்ருக்கானே அது எப்படி ?
    இரண்டாயிரம் ஆண்டுகளாக அவன் மட்டுமே முழு ஒதுக்கீடையும் அனுபவித்தானே அதையெல்லாம் கேட்க மாட்டீர்கள். ஒடுக்கப்பட்டவர்கள் அதுவும் ஒரு ஐம்பது ஆண்டுகளாக‌ இடஒதுக்கீடு பெறுவதை உங்களால் பொறுக்க முடியவில்லை. அப்படி பெற்றும் ரெண்டு, நாலு பேரைத்தவிர யாரும் முன்னேறவில்லை என்பது வேறு கதை.

   • //
    ஆனால் அது முழுமையான தீர்வு இல்லை என்றும் சொல்கிறோம்
    //
    முழுமையான தீர்வு இல்லாத ஒரு விஷயத்த நீங்க ஏன் இவளோ வருபுர்த்துரிங்க என்று தான் எனக்கு புரியவே இல்லை..

    அடி பட்டு வர ஒருத்தனுக்கு மருத்துவம் பாகாம வலி மாத்திரை மட்டும் குடுத்து கொஞ்சம் பொறுத்துக்கோ நு சொல்ற கதை தான் நீங்க சொல்றது.. ஜாதி என்ற சமூக அமைப்பை ஏட்டில் இருந்து தூக்கி எரிய வேண்டும் முதலில்.. அதன் பின் மக்கள் மனதில் இருந்து தானாக அது விலகி விடும்.. இப்போ உள்ள எல்லாரும் நான் ரெண்டாவதா கூறியதை முதலில் செய்ய பாக்குறீங்க..

    அது எப்படி சார் போகும் என்று நீங்க கேக்கலாம்.. ஏட்டில் சாதி இனும் இருக்குறது நால சாதி வேணாம் என்று நினைகிறவன் கூட சரி எழுதி தொலைவோம் என்று எழுதி விட்டு போகிறான்.. அவன் விரும்பாவிட்டாலும் அவனை ஜாதி விடவில்லை..

    //
    ஒடுக்கப்பட்டவர்கள் அதுவும் ஒரு ஐம்பது ஆண்டுகளாக‌ இடஒதுக்கீடு பெறுவதை உங்களால் பொறுக்க முடியவில்லை.
    //

    இப்படி நான் பொருகாம இருக்கேன் என்ற எனக்கே தெரியாத என்னை பற்றிய ரகசியத்தை உங்களுக்கு யார் சொ்ன்னது? உங்கள் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டால் நீங்க காப்பாற்ற நினைக்கும் அடித்தட்டு மக்கள் என்றுமே அடித்தட்டு மகலாத தான் இருப்பார்கள் என்பது தான் என் வாதம்

    சரி முழுமையான தீர்வு என்று எதை நீங்க நினைகிறீர்கள். அதை முதலில் எனக்கு கூறுங்கள்..

   • இடஒதுக்கீடு முழுமையான தீர்வு இல்லை தான், ஆனால் அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைப்பதை ஆதரிக்கிறோம். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு விசயத்தில் பார்ப்பன கும்பல் கொழுப்பு பீறிட குதிக்கும் போது அதை இன்னும் ஆதரிக்கிறோம். முழுமையான தீர்வு இல்லை என்பதற்காக இடஒதுக்கீட்டுக்கெதிரான பிரச்சாரத்தை,பார்ப்பன கொழுப்பை,‌பார்ப்பன வெறியை,பார்ப்பன திமிரை வேடிக்கை பார்க்க முடியாது. ஆனால் எம்மை பொறுத்த‌வரை இடஒதுக்கீடு முழுமையான தீர்வு இல்லை தான்..

    ////////////சரி முழுமையான தீர்வு என்று எதை நீங்க நினைகிறீர்கள். அதை முதலில் எனக்கு கூறுங்கள்..//////////////

    மொத்த சமூக மாற்றம் தான். ஒரு முழுமையான புரட்சி தான் அனைவருக்கும் முழுமையான தீர்வாக அமையும்.

   • முழுமையான புரட்சி .. நல்லது.. அந்த புரட்சி எப்படி பட்டது? அந்த புரட்சிக்கு பின் நீங்க அமைகவிருகும் சமூகத்தின் அமைப்பை கொஞ்சம் கூறினால் கொஞ்சம் நல்லா இருக்கும்.. (ரொம்ப கேள்வி கேட்டு கொடயிரேனோ உங்கள?)

 12. ////////இந்த அறுபது ஆண்டு காலத்துலயும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி கூட முன்னேர வில்லையா?/////////

  எவ்வளவு பேர் முன்னேறி முன்னுக்கு போய் விட்டார்கள் என்பதை சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

  ////////எனக்கு தெரிந்தே பணக்கார SC களும் இருகிறார்கள்.. அவர்களும் கல்வி ஒதுகீட்டில் அந்த SC Quota பயன் படுத்தி இருகிறார்கள்..///////

  நண்பரே அவர்கள் மிகக் குறைவு, மிக மிக குறைவு. அப்படி முன்னேறியவர்களை பற்றி அம்பேத்கரே ஒரு கடும் சொல்லை சொல்லியிருக்கிறார்.அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  மேலும் பொருளாதார ரீதியாக முன்னேறி விடும் போது சமூக ரீதியான ஒடுக்குமுறையிலிருந்து சற்று விடுபடுகிறார்கள், ஆனால் வர்க்கம் மாறி விடுகிறார்கள். எனவே அதில் பெரும்பாண்மையினர் தம்மை தலித் என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை, காரணம் அது தமது வர்க்கத்திற்கு பொருத்தமான சமூக அந்தஸ்தாக பொருந்துவதில்லை எனவே அவர்கள் புதிய வகை ‘கருப்பு பார்ப்பனர்களாக’ அமைகிறார்க‌ள்.

  இது தான் சூழ்நிலை சிந்தனையை தீர்மானிப்பது என்பது.

  • //

   எனவே அதில் பெரும்பாண்மையினர் தம்மை தலித் என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை

   //

   அய்யா சாமி அவன் ஏன் தன்னை தலித் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்? எனக்கு சத்யமா ரொம்பவே கோவம் வந்தது இதை வாசித்தும் . உங்களின் கருத்தை வாசிக்கும் போது எனக்கு இது தான் தோன்றுகிறது .. நீங்க தலித் என்ற சமூக அமைப்பை காபர்ற்ற வேண்டும் என்று தான் நினைகிறீர்களே தவிர தலித் மக்களை காபர்ற்ற வேண்டும் என்று நினைக்கவே இல்லை..

   • அய்யா சாமி, நான் யாரும் தன்னை தலித் என்று அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை! ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்த பிறகு வர்க்கம் மாறி தனது மக்களை மறந்துவிடுகிறார்கள் என்று தான் சொன்னேன். மேலும் கருப்பு பார்ப்பனர்களாகி தங்களை தன் சமூக‌ மக்களிடமிருந்தே விலக்கிக்கொள்கிறார்கள் என்று தான் சொன்னேன். அதை ஏன் உங்கள் வசதிக்கு ஏற்ப திரிக்கிறீர்கள் ?

    இது தலித் மக்களுக்கு மட்டும் அல்ல அமெரிக்காவிலுள்ள கருப்பின மக்களுக்கும் அதே போன்ற ஒடுக்குமுறைக்குட்பட்ட‌ அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.‌

    //////////நீங்க தலித் என்ற சமூக அமைப்பை காபர்ற்ற வேண்டும் என்று தான் நினைகிறீர்களே தவிர தலித் மக்களை காபர்ற்ற வேண்டும் என்று நினைக்கவே இல்லை../////////////////

    இந்த முடிவுக்கு எப்படி வந்தீங்க ?

   • அமெரிகால்வில் உள்ள கருப்பர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை இந்தியாவில் உள்ள ஜாதி பிரிவினையுடம் ஒப்பிடுவது சரி அல்ல.. இரண்டும் வேறு என்பதை நாம் புரிந்து கோள்ள வேண்டும்..

    //
    கருப்பு பார்ப்பனர்களாகி தங்களை தன் சமூக‌ மக்களிடமிருந்தே விலக்கிக்கொள்கிறார்கள் என்று தான் சொன்னேன்
    //

    இதை நான் ஒப்பு கொளிகிறேன். அனால் தலித் ஒருவர் முனேறிய பிறகு தான் ஒரு தலித் பெயரால் தலித் சலுகையை வாங்கி கொள்ள கூடாது என்று தான் நான் இங்கு வற்புறுத்துகிறேன்

    //
    அப்படி முன்னேறியவர்களை பற்றி அம்பேத்கரே ஒரு கடும் சொல்லை சொல்லியிருக்கிறார்.அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?//

    அம்பேத்கர் அவர்களை பற்றி என்ன கூறினார் என்று என்னகு தெயர்யாது.. மனிக்கவும்.. நீங்களே என்ன கூறினார் என்று பதிலில் தெரிவிக்கவும்.

   • ////////அமெரிகாவில் உள்ள கருப்பர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை இந்தியாவில் உள்ள ஜாதி பிரிவினையுடம் ஒப்பிடுவது சரி அல்ல.. இரண்டும் வேறு என்பதை நாம் புரிந்து கோள்ள வேண்டும்./////////

    இரண்டும் வேறுபட்டது தான் ஆனாலும் ஒற்றுமையுடையது, எனவே வேறுபாடு முக்கியத்துவமற்றதாகிறது. அது நிற‌ம் தொடர்பான ஒடுக்குமுறை, இதுவும் நிறம் தொடர்பானது தான், வர்ணம். அது வெள்ளை பயங்கரம் இது ஆரிய பயங்கரம், அதாவது பார்ப்பன பயங்கரவாதம். எங்களுக்கிடையில் நாங்கள் வேறுபாடு பார்க்கவில்லை பிறகு உங்களுக்கேன் அந்த கவலை.
    ஒடுக்குமுறை என்கிற வகையில் இரண்டும் ஒன்று தான்.ஆதிக்கம் செய்து எம் மக்களை அடிமைப்படுத்துகிறது.

 13. /////////////கல்வி ஒன்று மட்டுமே ஜாதியை ஒலிக்க வல்ல ஒரு ஆயுதம்.. உங்கள் துப்பாக்கி முனையால் ஜாதி வெறியை ஒடுக்க முடியுமே தவிர அழிக்க முடியாது..////////////

  அப்படியானால் படித்தவர்கள் எல்லாம் ஜாதி பார்ப்பதில்லை என்கிறீர்களா. இது எப்படி இருக்கிற‌து என்றால் படித்தவனெல்லாம் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறிடும் என்கிற மிடில் கிளாஸ் வாதத்தை போல இருக்கிறது. நீங்கள் ஒன்று செய்யுங்கள் ‘அண்ணன் வர்றாரு’ என்று எங்கள் அமைப்பு பாடல் சிடி் ஒன்றை வெளியிட்டுள்ளது முதலில் அதைப் போட்டுக் கேளுங்கள். சாதி ஒழிப்பு பற்றிய உங்கள் கண்ணோட்டம் அரசியலிலும் அப்படியே பிரதிபலிக்கும் என்பதால் தான் இந்த யோசனையை சொல்கிறேன். முயற்சித்து பாருங்கள்.

  • கண்டிப்பாக.. படித்தவன் ஜாதி பார்த்து பழகுவதும் இல்லை.. ஜாதி பார்த்து ஒதுக்குவதும் இல்லை(திருமணம் போன்ற விஷயங்களில் பார்பது வேறு கதை.. அதை இங்கே சேர்க்க முடியாது ).. இன்று ஜாதி கட்டமைப்பு மிகவும் குருரமான வடிவம் கொண்டிருப்பது என்பது நம்ம கிராமபுரங்களில் தானே தவிர நகரங்களில் இல்லை.. படித்தவன் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்.. அனால் எதை படித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.. ஜாதி ஒழிய ஒரு முதல் படியாக “ஜாதி ஒதுக்கீட்டை பெற விரும்ப வில்லை ” என்று ஒன்று வைத்தால் கண்டிப்பாக படித்தவர்கள் பலர் அதை தேர்ந்தெடுப்பார்கள் .. அனால் அதே சமயத்தில் தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் உண்மையிலயே தாழ்த்தப்பட்டு(பொருளாதார ரீதியில்) தான் இருகிரார்கள என்றும் உறுதி செய்து கொள்ள வேண்டும்

   • //////படித்தவன் ஜாதி பார்த்து பழகுவதும் இல்லை.. ஜாதி பார்த்து ஒதுக்குவதும் இல்லை/////////

    உங்களோட நல்ல காமடி சார், இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது.
    இருந்தாலும் பரவாயில்லை ஒரு நாலு வரில‌ நாலு படிச்சவங்க பேர மட்டுமாவது சொல்லலாம்னு பார்த்தா அடுத்த வரியிலேயே நீங்க‌‌ அடிச்சிருக்க காமெடியால‌ எனக்கு வயித்து வலி வந்துடுச்சு.

    இது தாம்பா அந்த காமெடி வரிகள்.

    (திருமணம் போன்ற விஷயங்களில் சாதி பார்ப்பது வேறு கதை.. அதை இங்கே சேர்க்க முடியாது ).. ஆனால் ப‌டித்தவன் சாதி பார்க்கமாட்டான் !!!

   • இதுல காமெடி என்ன அண்ணாச்சி இருக்கு? படிகாதவினடம் இருக்கு ஜாதி வெறியை விட படித்தவனிடம் இருக்கும் ஜாதி வெறி மிகவும் கம்மி தான்.. ஜாதி பார்த்து ஒருவனை வீடிற்குலயே வர வேண்டம் என்று கூறுவது வேறு.. ஆனா ஜாதி மாறி சிலர் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளாமல் இருப்பது வேறு காரணதிகாக என்பதை நீங்க அறிந்திருப்பீர்கள் என்று நினைதேன். பாவம் உங்களக்கு தெரியாது போலிருக்கிறது

 14. அம்பேத்கரை நாம் விமர்சனத்துடன் தான் அணுகுகிறோம்.
  அம்பேத்கர் பற்றிய மார்க்சிய பார்வை என்ன என்று ஒரு
  கட்டுரை எழுதினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும்.
  வாய்ப்பிருந்தால் எழுதுங்கள் தோழர்.

  அம்பேத்கர் ஒரு மார்க்சிய பார்வை என்கிற நூலை
  தோழர் கோ.கேசவன் எழுதியுள்ளார் வாசிக்கலாம்,
  ஓரளவு சரியான நூல் என்று தான் கருதுகிறேன்.

 15. சாதிய படிமுறை குவியல் அமைப்பு ஒரு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் வடிவம். இன்றும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை நிலவிக் கொண்டுள்ளது. எனவே அதை ஒழிக்காது சமத்துவம் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

  இதை எளிதில் கூற வேண்டும் எனில், இன்னும் சாதி முறை தொழில்களில் இருந்து முழுமையாக ஒடுக்கப்படும் சாதியினர் விடுவிக்கப் பட வில்லை. அத்தகைய நிகழ்வை கொணரும் தேசிய முதலாளித்துவ புரட்சியும் இங்கு நடந்து விடவில்லை. அதற்கு காரணம் வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக பீற்றிக் கொண்டாலும், ஏகாதிபத்தியத்தின் வேர்கள் வேரூன்றி இருந்தன.
  இத்தகைய தரகு முதலாளிகள் மற்றும் நிலவுடைமை ஆண்டைகளே இன்னும் முதலாளிகளாக உள்ளனர்.
  எனவே உற்பத்தி முறையில் ஒரு முழு அளவிலான மாற்றம் வரும் வரையில், அது மக்களை சாதிய ரீதியான தொழில்களில் இருந்து பிய்த்தெடுக்கும் வரையில் அவர்களை இத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் வர்க்கம் அளிக்கும் சலுகைகளினூடாக சிலர் பயன் பெறுவது தொடரும். ஆனால் முழுமையாக அவர்கள் சாதிய அமைப்பு முறையை ஒழித்து விட முடியாது. ஒடுக்கப்படும் மக்களின் பொருளாதார நிலைமையும் மேம்பட்டு விடாது.

  ஆனால் நிலவும் சாதிய அமைப்பு முறையின் கொடுமைகளுக்கு எதிராக போரை நம் நடத்த வேண்டும்.

 16. தோழர் என்.வரதராஜன் இந்த குரு பூஜையில் கலந்து கொள்ள வில்லையா ?
  அட போங்கப்பா எத்தனை வோட்டு கை மாறிப் போயிரும் ? தப்பு பண்ணிட்டாரே ?

 17. //இதுல என்னய்யா உமக்கு சந்தோஷம் இருக்கு? இனொரு தாழ்ந்த சாதி காரன் ஒருவன் போலியாக உருவாவதில் உங்களுக்கு சந்தோசமா? சூப்பர் ..

  இப்படி நூறு சதவிதத்தையும் இட ஒதுகீடுலயே முடிசுடீங்கனா திறமைக்கும் அறிவுக்கும் எங்க மதிப்பு இருக்கும் ?//

  இட ஒதுக்கீட்டினால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி வருவது உம்மை போன்ற பார்ப்பனர்களுக்கு எரிச்சல் தருகிறது. இது நாள் வரை கேவலமாக நடத்தபட்டவர்கள் முன்னேறி உமக்கு சமமாகவோ அதற்கு மேலோ உயரும்போது வரும் எரிச்சல் சாதாரணமானதல்ல என்று எனக்கு தெரியும். இட ஒதுக்கீட்டால் வருபவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்காதீர். அறிவும் திறமையும் இருந்தும் சக மனிதனை மதிக்க தெரியாத ஜென்மங்களால் நாட்டுக்கு கேடுதான் விளையும். இப்படிபட்டவர்கள் அமெரிக்கவுக்குபோய் வெள்ளைகாரனின் காலை நக்கட்டும்.

  • சபாக்ஷ் சரியாச் சொன்னேள் போங்கோ, வந்திருக்கது அவா தான்.. அதான் அவாள், அவாளே தான் வந்திருக்கா.

   • ///

    சபாக்ஷ் சரியாச் சொன்னேள் போங்கோ, வந்திருக்கது அவா தான்.. அதான் அவாள், அவாளே தான் வந்திருக்கா.

    //

    ம.க.இ.க ல இப்படி எல்லாம் கூட சில பேரு இருக்காயங்களா !! அய்யகோ

 18. என்னையும் பார்ப்பான் கூடத்துல சேத்தாச்சா !! ஹா ஹா ஹா ஹா ஹா.. சந்தோஷம்.. நானும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியில் இருந்து வந்தவன் தான். உடனே என்னை கருப்பு பார்ப்பான் என்று சொல்ல போறீங்க.. பாவம் உங்களுக்கு வேற என்ன சார் தெரியும்.. சொல்லிகோங்க!!

  சரி நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்வே இல்லை..

  //
  இனொரு தாழ்ந்த சாதி காரன் ஒருவன் போலியாக உருவாவதில் உங்களுக்கு சந்தோசமா?
  //
  இருக்கட்டுமே.

  • நிழல் அவர்களே,
   நாங்கள் இடஒதுக்கீடு தீர்வு அல்ல என்கிறோம் முழுமையான மாற்றத்தை தான் முன் வைக்கிறோம்.எனவே இடஒதுக்கீடு பிரச்சனையை சற்று ஓரமாக வைத்துவிட்டு அடுத்த விசயத்திற்கு போவோமா ?
   சாதியை ஒழிக்கும் எமது முழுமையான தீர்வின் முதல் நடவடிக்கை ‘பார்ப்பன இந்துமதத்தை ஒழித்துக்கட்டுவது’ தான் இந்த தீர்வை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ?

   • All religions in the world are in the decayed form.. Not just hinduism.. As you all know The original hinduism did not have the rigid caste system.. they had the system of varna where ppl can move from one varna to another.. so mobility in the upward direction is possible.. that also means that mobility in the downward directions also happened.. and the varna system is purely based on profession tat one carries out.. Not by birth.. so i would not accept to your propoganda of “பார்ப்பன இந்துமதத்தை ஒழித்துக்கட்டுவது” but rather i would prefer refining and reviving hinduism in its original form in India.. To be more precise we should adhere to the principle of “இன்றைய இந்து மதத்தில் பார்பனியத்தை ஒழித்து கட்டுவது “.. I dont know how far you will agree with me.. But the feasilbility of every idea should be studied before you put forward it as a solution. do you think that hinduism can altogether be abolished in india? People from working class are not atheists… and you can no way force an ordinary man to an atheist juz by destroying temples and other hindu monuments.. I am expressing my comments here so that there can be a meaningful outcome.. Not juz for the sake of arguing..

   • நான் அப்பவே சொல்லல இவா அவாளே தேன்னு.. சந்தேகம் வேண்டாம் வேணுமின்னா மேலே உள்ளதை படியுங்கோ!!!

  • நீங்கள் கண்டிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்திருக்கமுடியாது.

 19. பெரியார் பேரன்

  சரிங்க அண்ணல் அம்பேத்கரின் இடஒதுக்கீட்டு கொள்கையை நீங்க ஏற்றுக்கொள்ள வேண்டாம். பார்ப்பனீயம் பற்றிய அவருடைய போதனைகளை பற்றி என்ன சொல்கிறீர்கள் ? அவை சரியா தவறா ?

 20. எல்லோரையும் நம்புறவன்

  //////////நானும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியில் இருந்து வந்தவன் தான். உடனே என்னை கருப்பு பார்ப்பான் என்று சொல்ல போறீங்க../////////

  யார் நம்புறீங்களோ இல்லையோ நாம் நம்பிட்டேன்
  இவர் ஒடுக்கப்படவர்.. ஒடுக்கப்படவர்.. ஒடுக்கப்படவர்..

  நீங்களும் நம்பிடுங்க!

  • Its up to you to believe it or not.. and i dont give a damn to those who dont believe.. i cant bring my community certificate and publish it here for you to believe..

   • ஒடுக்கப்பட்டவன்

    அய்யா சாமி இவ்ளோ நேர‌ம் நல்லாத்தானேய்யா தமிழ்ல பேசினுருந்த அப்புறம் இன்னாத்துக்கு இவ்வளோ கொலைவெறியோட இங்லிபீக்ஷீ பீட்ரெல்லாம். இத்து வேலைகாவாது, வேண்டாம் வேண்டாம் எது சொல்றதுனாலும் தமிழ்லயே சொல்லு.அது இன்னா பாப்பார பலுக மாதிரி ஒட்டனே டொடக்குன்னு இங்லிபீசை நீட்டிக்கினு வர்ற. நங்கெல்லாம் படிக்காத புள்ளைங்கோ இடஒதுக்கீடு கெடச்சுதான் மெலே போவனும், அப்படி போனா அப்பால இங்லிபிக்ஷ்சுல‌ பாத்துக்கலாம்.

   • இந்த பினூட்டத்தை நம்பர் ஒருவரின் வீட்டில் இருந்து அவர்சரம் அவரசரமாக அனுபினேன்.. மொழி பெரியாரது அனுப்ப நேரம் இல்லாததால் அப்படியே ஆங்கிலத்திலயே அனுப்பி விட்டேன். மன்னிக்கவும்..

   • இந்த பினூட்டத்தை நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து அவர்சரம் அவரசரமாக அனுபினேன்.. மொழி பெரியாரது அனுப்ப நேரம் இல்லாததால் அப்படியே ஆங்கிலத்திலயே அனுப்பி விட்டேன். மன்னிக்கவும்..

 21. Pingback: சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள். « சர்வதேசியவாதிகள்

 22. Pingback: சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள் « சர்வதேசியவாதிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s