Daily Archives: September28, 2009

அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு

Keetru_logo_70தமிழ் தேசியம் என்கிற மண் குதிரையில் அமர்ந்துகொண்டு ஆற்றைக்கடக்க முயலும் இனவாதிகளுக்கு எத்தனை முறை சொன்னாலும் அது ஒன்னுக்கும் ஆகாத ‘மண்’னு  என்று புரிவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் அதை குதிரை என்றே நம்புகிறார்கள்.

மார்க்சிய‍-லெனினிய புரட்சிகர அமைப்புகளான எம் மீது தமிழினவாத கும்பலுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி, எதற்கு பொறாமையில் புழுங்குகிறார்கள் என்பதற்கு எமக்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான் புலப்படுகின்றன. ஒன்று எமது அமைப்புகள் இளமைத்துடிப்புடன் பெரும்பாண்மையாக இளைய தலைமுறை இளைஞர்களையே அதிக எண்ணிக்கையில் கொண்டதாக இருக்கிறது. மாறாக அவர்கள் பக்கமோ தாத்தா பாட்டிகள் கூட்டம் தான் அதிகம். இரண்டாவதாக அவர்களுடைய கொள்கைகளை எமது வாயால் நாம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அத்துடன் இனவாதிகளின் சந்தர்ப்பவாத டவுசரை நாம் அவ்வப்போது கழட்டிவிட்டு அம்மணமாக்கிவிடுவதாலும் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.

இவர்களிடம் துளியும் நேர்மையோ,நாண‌யமோ கிடையாது. கொஞ்சமும் நா கூசாமல் ஒரு அமைப்பைப் பற்றி கற்பனையான செய்திகளை பரப்பி விடுவது, அதாவது அவதூறு செய்வது. தமது செயல்களுக்கு சந்தர்ப்பவாதமாக விளக்கமளிப்பது. தாம் ஆதரிப்பவர்களின் யோக்கியதையை கேள்விக்குட்படுத்தினால் அதை சந்தர்ப்பவாதமாக நியாயப்படுத்துவது. எப்போதும் புறநாணூற்று பழம்பெருமை பேசி தமிழ்தேசிய கற்பனாவாதத்திலேயே மூழ்கிக்கிடப்பது.அதை சரியாக தட்ட வேண்டிய இடத்தில் நாம் தட்டினால் ‘பார்ப்பான், பார்ப்பனீயம்’ என்று நம் மீது விழுந்து பிறாண்டி வைப்பது.அதற்கு விளக்கமளித்து தெளிவுபடுத்தினாலும் நேர்மை கொண்டு சிறிதும் பரிசீலிக்காமல் சொன்னதையே மீண்டும்,மீண்டும் சொல்வது. இது தான் இவர்களுடைய, அனைத்து தமிழினவாதிகளின் அரசியல் நடைமுறை.

தமிழினவாதிகளே உங்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் முதலில் கம்யூனிஸ்டுகள் உங்க‌ளுக்கு புரியும் படி சொன்னால் சர்வதேசவாதிகள்.அதன் பிறகு தான் ‘தமிழன்’ என்பதெல்லாம். நாங்கள் எங்களை முதலில் பாட்டாளி வர்க்கமாக அடையாளப்படுத்திக்கொள்வதையே விரும்புகிறோம், மற்ற அனைத்திற்கும் இரண்டாவது இடம் தான்.
நாங்கள் ‘தமிழன்’ என்று அழைக்கப்படுவதை விட ‘கம்யூனிஸ்டு’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம் மார்க்சியத்தை அறிந்தவர்களுக்கு இது போன்ற‌ ‘அ’ன்னா ‘ஆ’ வன்னா பாடத்தையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இவர்கள் இனவாதிகளாக இருப்பதால் இவற்றை விளக்க வேண்டியுள்ளது. ஆனால் இது முதல் முறை அல்ல, பல முறை விளக்கி விட்டோம். ஆனாலும் புரிந்துகொள்வது மாதிரி தெரியவில்லை.

3802abstract_design

அதிரடியான் என்பவருக்கு நாம் இனி பதிலளிக்கப் போவதில்லை என்று உறுதியாக கூறியிருந்தோம். எனினும் இதை எழுத வேண்டிய சூழல் வந்துவிட்ட்டது. ஆனாலும் இது  அவருக்கான பதில் கட்டுரை அல்ல. ஒரு சிறு விளக்கம் அவ்வளவே. அவரைக் கண்டு நாம் ‘ஓடி ஒளிந்து கொண்டதாக’ திரு அதிரடியான் அளவுக்கு மீறி அநியாயமாக ஆசைப்பட்டுள்ளார். இவர் வைப்பதெல்லாம் ஒரு வாதமே இல்லை என்பது தான் நமது கருத்து. எனவே தான் அவருடைய முதல் கட்டுரையை நாம் சிறிதும் சட்டை செய்யவில்லை. இரண்டாவது கட்டுரைக்கும் சில அவசிய காரனங்களின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று கருதியதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கிறோம் என்று குறிப்பிட்டு அனைத்திற்கும் விரிவாக கீற்றிலேயே பதிலளித்திருக்கிறோம். ஆனால், அதன் பிறகும் அதே பாணியில் அவதூறுகள் தொடர்ந்ததால் இறுதியாக தமிழ்தேசியத்தை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையுடன் இவருக்கு பதிலளிப்பதில் சிறிதும் பயன் இல்லை எனவே இதிலிருந்து நாம் விளகிக்கொள்கிறோம், இனி உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறி வில‌கிக்கொண்டோம். அதுவும் கீற்றில் வெளியானது. ஆனால், அதன் பிறகு தற்போது நாம் ‘ஓடிவிட்டதாக’ ஜாலியாக கனா கண்டுகொண்டிருக்கிறார் அதிரடியான். அவருக்கு கொஞ்ச‌ம் தண்ணி தெளித்து எழுப்பிவிடுவதற்காகத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

நீங்கள் ஒரு கட்டுரையை எழுதினால் அதற்கு நாங்கள் ஒரு பதில், நாங்கள் ஒரு பதில் எழுதினால் அதற்கு நீங்கள் ஒரு கட்டுரை என்று கட்டுரைக்கு கட்டுரை,கட்டுரைக்கு கட்டுரை என்று எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். அவ்வாறு எழுதி எழுதி விளையாட உங்களுக்கு ரொம்ப ஆசை இருக்கலாம், எமக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை. ஆசை இருந்தாலும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாங்கள் உங்களைப் போன்ற கற்பனைப் புரட்சியாளர்கள் அல்ல .தீபாவளி வரும், பொங்கல் வரும் என்பதைப் போல புரட்சியும் வரும் என்று அந்த நாளுக்காக உங்களைப் போல தின்னையில் உட்கார்ந்து கொண்டு எங்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக நாங்கள் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு இருக்கும் பத்து வேலைகளில் இணையத்திற்கு வருவதும் ஒன்று அவ்வளவு தான். எனவே இந்த எழுதி எழுதி விளையாடும் விளையாட்டுக்கு ஒரு அழுத்த்மாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் இதை எழுதுகிறோம். இதைக் கூட முதலில் எழுத வேண்டுமா என்று தான் யோசித்தோம். அதன் பிறகு ‘நாங்கள் ஓடிப்போய் விட்டதாக‌’ கனவு காணும் உங்களை கொஞ்சம் துக்கத்திலிருந்து எழுப்பிவிடுவது அவசியம் என்று கருதியதால் இதை எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து எழுதினோம்.

இதற்கு முன்பு உங்களுடைய‌ அனைத்து கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம். ஆனால் நீங்கள் தப்பிக்கும் விதமாக எமது பெரும்பாண்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஒரு சில சிலவற்றுக்கு மட்டும் ‘பதில்’ என்கிற பெயரில் ஒரு அவதூறு கட்டுரையை எழுதி அதில் நேர்மையற்ற முறையில் எமது விளக்கங்களையும் திரித்திருந்தீர்கள். எனினும் நாம் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். ஆனால் தற்போது நாம் ஒரு முடிவிற்கு வந்துள்ளோம். உங்களுடன் தர்க்கம் செய்வதென்று முடிவு செய்திருக்கிறோம். தனித்தனியாக கட்டுரை எழுதுவதில் ஒருவரை அவ்வளவு சுலபமாக அம்பலமாக்க முடியாது, தர்க்கிப்பதன் மூலம் தான் நாலு பேர் பார்க்கும் வகையில் தர்க்கிப்பதன் மூலம் தான் உங்களை அம்பலமாக்க முடியும் என்று கருதுகிறோம். சுருக்கமாக சொன்னால் உங்களை இல்லாமல் ஒழித்துக்கட்ட விரும்புகிறோம். அதாவது, உங்களிடமிருக்கும் கருத்துக்களை ஒழித்துக்கட்ட விரும்புவதை சொல்கிறோம். ஏற்கெனவே ‘ஸ்டாலின்’ குரு என்கிற தமிழ்தேசிய வீரருக்கு விருந்து வைக்கலாம் என்று விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர் அழைக்கும் போதே தயங்கினார். அதன் பிறகு தான் அவர் மான்கராத்தேயில் மாபெரும் வல்லுனர் என்றும், பிளாக் பெல்ட் என்றும் தெரிந்தது. அவருடைய தமிழ்தேசிய துடை நடுக்கத்தை எமது தளத்தில் கிழித்து தொங்க விட்டுள்ளோம் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் போய் பாருங்கள்.

https://vrinternationalists.wordpress.com/2009/08/20/தமிழ்தேசியவாதியுடன்-ஒரு/

abstract-blackஇப்போது உங்களுடைய வீரத்தையும் தரிசிக்க காத்து நிற்கிறோம். உங்களை விவாதிக்க அழைக்கிறோம். நீங்கள் பங்கேற்காத பட்சத்தில் அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இது ஒரு பகிரங்க அழைப்பு. இந்த விவாதத்திற்கு நீங்கள் வராத பட்சத்தில் உங்களுடைய ‘நேர்மையும் வீரமும்’ வாசகர்களுக்கு அறிமுகமாகும். உங்களுடைய அனைத்து பின்னூட்டங்களும் பிரசுரிக்கப்படும். அவற்றுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படும் என்கிற உத்திரவாதத்துடன் உங்களுடைய தமிழ் வீரத்துடன் ச‌ர்வதேசியவாதிகள் மோதுவதற்காக‌ காத்து நிற்கிறோம். வாருங்கள்.
எமது தள முகவரி.

https://vrinternationalists.wordpress.com

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1

தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்

வாழ்க தமிழ்! வாழ்க பார்ப்பனீயம்!

தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!