தமிழ் தேசியம் என்கிற மண் குதிரையில் அமர்ந்துகொண்டு ஆற்றைக்கடக்க முயலும் இனவாதிகளுக்கு எத்தனை முறை சொன்னாலும் அது ஒன்னுக்கும் ஆகாத ‘மண்’னு என்று புரிவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் அதை குதிரை என்றே நம்புகிறார்கள்.
மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகளான எம் மீது தமிழினவாத கும்பலுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி, எதற்கு பொறாமையில் புழுங்குகிறார்கள் என்பதற்கு எமக்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான் புலப்படுகின்றன. ஒன்று எமது அமைப்புகள் இளமைத்துடிப்புடன் பெரும்பாண்மையாக இளைய தலைமுறை இளைஞர்களையே அதிக எண்ணிக்கையில் கொண்டதாக இருக்கிறது. மாறாக அவர்கள் பக்கமோ தாத்தா பாட்டிகள் கூட்டம் தான் அதிகம். இரண்டாவதாக அவர்களுடைய கொள்கைகளை எமது வாயால் நாம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அத்துடன் இனவாதிகளின் சந்தர்ப்பவாத டவுசரை நாம் அவ்வப்போது கழட்டிவிட்டு அம்மணமாக்கிவிடுவதாலும் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.
இவர்களிடம் துளியும் நேர்மையோ,நாணயமோ கிடையாது. கொஞ்சமும் நா கூசாமல் ஒரு அமைப்பைப் பற்றி கற்பனையான செய்திகளை பரப்பி விடுவது, அதாவது அவதூறு செய்வது. தமது செயல்களுக்கு சந்தர்ப்பவாதமாக விளக்கமளிப்பது. தாம் ஆதரிப்பவர்களின் யோக்கியதையை கேள்விக்குட்படுத்தினால் அதை சந்தர்ப்பவாதமாக நியாயப்படுத்துவது. எப்போதும் புறநாணூற்று பழம்பெருமை பேசி தமிழ்தேசிய கற்பனாவாதத்திலேயே மூழ்கிக்கிடப்பது.அதை சரியாக தட்ட வேண்டிய இடத்தில் நாம் தட்டினால் ‘பார்ப்பான், பார்ப்பனீயம்’ என்று நம் மீது விழுந்து பிறாண்டி வைப்பது.அதற்கு விளக்கமளித்து தெளிவுபடுத்தினாலும் நேர்மை கொண்டு சிறிதும் பரிசீலிக்காமல் சொன்னதையே மீண்டும்,மீண்டும் சொல்வது. இது தான் இவர்களுடைய, அனைத்து தமிழினவாதிகளின் அரசியல் நடைமுறை.
தமிழினவாதிகளே உங்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் முதலில் கம்யூனிஸ்டுகள் உங்களுக்கு புரியும் படி சொன்னால் சர்வதேசவாதிகள்.அதன் பிறகு தான் ‘தமிழன்’ என்பதெல்லாம். நாங்கள் எங்களை முதலில் பாட்டாளி வர்க்கமாக அடையாளப்படுத்திக்கொள்வதையே விரும்புகிறோம், மற்ற அனைத்திற்கும் இரண்டாவது இடம் தான்.
நாங்கள் ‘தமிழன்’ என்று அழைக்கப்படுவதை விட ‘கம்யூனிஸ்டு’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம் மார்க்சியத்தை அறிந்தவர்களுக்கு இது போன்ற ‘அ’ன்னா ‘ஆ’ வன்னா பாடத்தையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இவர்கள் இனவாதிகளாக இருப்பதால் இவற்றை விளக்க வேண்டியுள்ளது. ஆனால் இது முதல் முறை அல்ல, பல முறை விளக்கி விட்டோம். ஆனாலும் புரிந்துகொள்வது மாதிரி தெரியவில்லை.
அதிரடியான் என்பவருக்கு நாம் இனி பதிலளிக்கப் போவதில்லை என்று உறுதியாக கூறியிருந்தோம். எனினும் இதை எழுத வேண்டிய சூழல் வந்துவிட்ட்டது. ஆனாலும் இது அவருக்கான பதில் கட்டுரை அல்ல. ஒரு சிறு விளக்கம் அவ்வளவே. அவரைக் கண்டு நாம் ‘ஓடி ஒளிந்து கொண்டதாக’ திரு அதிரடியான் அளவுக்கு மீறி அநியாயமாக ஆசைப்பட்டுள்ளார். இவர் வைப்பதெல்லாம் ஒரு வாதமே இல்லை என்பது தான் நமது கருத்து. எனவே தான் அவருடைய முதல் கட்டுரையை நாம் சிறிதும் சட்டை செய்யவில்லை. இரண்டாவது கட்டுரைக்கும் சில அவசிய காரனங்களின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று கருதியதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கிறோம் என்று குறிப்பிட்டு அனைத்திற்கும் விரிவாக கீற்றிலேயே பதிலளித்திருக்கிறோம். ஆனால், அதன் பிறகும் அதே பாணியில் அவதூறுகள் தொடர்ந்ததால் இறுதியாக தமிழ்தேசியத்தை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையுடன் இவருக்கு பதிலளிப்பதில் சிறிதும் பயன் இல்லை எனவே இதிலிருந்து நாம் விளகிக்கொள்கிறோம், இனி உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறி விலகிக்கொண்டோம். அதுவும் கீற்றில் வெளியானது. ஆனால், அதன் பிறகு தற்போது நாம் ‘ஓடிவிட்டதாக’ ஜாலியாக கனா கண்டுகொண்டிருக்கிறார் அதிரடியான். அவருக்கு கொஞ்சம் தண்ணி தெளித்து எழுப்பிவிடுவதற்காகத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறோம்.
நீங்கள் ஒரு கட்டுரையை எழுதினால் அதற்கு நாங்கள் ஒரு பதில், நாங்கள் ஒரு பதில் எழுதினால் அதற்கு நீங்கள் ஒரு கட்டுரை என்று கட்டுரைக்கு கட்டுரை,கட்டுரைக்கு கட்டுரை என்று எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். அவ்வாறு எழுதி எழுதி விளையாட உங்களுக்கு ரொம்ப ஆசை இருக்கலாம், எமக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை. ஆசை இருந்தாலும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாங்கள் உங்களைப் போன்ற கற்பனைப் புரட்சியாளர்கள் அல்ல .தீபாவளி வரும், பொங்கல் வரும் என்பதைப் போல புரட்சியும் வரும் என்று அந்த நாளுக்காக உங்களைப் போல தின்னையில் உட்கார்ந்து கொண்டு எங்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக நாங்கள் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு இருக்கும் பத்து வேலைகளில் இணையத்திற்கு வருவதும் ஒன்று அவ்வளவு தான். எனவே இந்த எழுதி எழுதி விளையாடும் விளையாட்டுக்கு ஒரு அழுத்த்மாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் இதை எழுதுகிறோம். இதைக் கூட முதலில் எழுத வேண்டுமா என்று தான் யோசித்தோம். அதன் பிறகு ‘நாங்கள் ஓடிப்போய் விட்டதாக’ கனவு காணும் உங்களை கொஞ்சம் துக்கத்திலிருந்து எழுப்பிவிடுவது அவசியம் என்று கருதியதால் இதை எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து எழுதினோம்.
இதற்கு முன்பு உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம். ஆனால் நீங்கள் தப்பிக்கும் விதமாக எமது பெரும்பாண்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஒரு சில சிலவற்றுக்கு மட்டும் ‘பதில்’ என்கிற பெயரில் ஒரு அவதூறு கட்டுரையை எழுதி அதில் நேர்மையற்ற முறையில் எமது விளக்கங்களையும் திரித்திருந்தீர்கள். எனினும் நாம் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். ஆனால் தற்போது நாம் ஒரு முடிவிற்கு வந்துள்ளோம். உங்களுடன் தர்க்கம் செய்வதென்று முடிவு செய்திருக்கிறோம். தனித்தனியாக கட்டுரை எழுதுவதில் ஒருவரை அவ்வளவு சுலபமாக அம்பலமாக்க முடியாது, தர்க்கிப்பதன் மூலம் தான் நாலு பேர் பார்க்கும் வகையில் தர்க்கிப்பதன் மூலம் தான் உங்களை அம்பலமாக்க முடியும் என்று கருதுகிறோம். சுருக்கமாக சொன்னால் உங்களை இல்லாமல் ஒழித்துக்கட்ட விரும்புகிறோம். அதாவது, உங்களிடமிருக்கும் கருத்துக்களை ஒழித்துக்கட்ட விரும்புவதை சொல்கிறோம். ஏற்கெனவே ‘ஸ்டாலின்’ குரு என்கிற தமிழ்தேசிய வீரருக்கு விருந்து வைக்கலாம் என்று விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர் அழைக்கும் போதே தயங்கினார். அதன் பிறகு தான் அவர் மான்கராத்தேயில் மாபெரும் வல்லுனர் என்றும், பிளாக் பெல்ட் என்றும் தெரிந்தது. அவருடைய தமிழ்தேசிய துடை நடுக்கத்தை எமது தளத்தில் கிழித்து தொங்க விட்டுள்ளோம் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் போய் பாருங்கள்.
https://vrinternationalists.wordpress.com/2009/08/20/தமிழ்தேசியவாதியுடன்-ஒரு/
இப்போது உங்களுடைய வீரத்தையும் தரிசிக்க காத்து நிற்கிறோம். உங்களை விவாதிக்க அழைக்கிறோம். நீங்கள் பங்கேற்காத பட்சத்தில் அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இது ஒரு பகிரங்க அழைப்பு. இந்த விவாதத்திற்கு நீங்கள் வராத பட்சத்தில் உங்களுடைய ‘நேர்மையும் வீரமும்’ வாசகர்களுக்கு அறிமுகமாகும். உங்களுடைய அனைத்து பின்னூட்டங்களும் பிரசுரிக்கப்படும். அவற்றுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படும் என்கிற உத்திரவாதத்துடன் உங்களுடைய தமிழ் வீரத்துடன் சர்வதேசியவாதிகள் மோதுவதற்காக காத்து நிற்கிறோம். வாருங்கள்.
எமது தள முகவரி.
https://vrinternationalists.wordpress.com
–
தொடர்புடைய பதிவுகள்
தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1
தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்
அய்யா அவர் விவாதிக்க மாட்டார்
விமர்சனங்களை வைத்து விட்டு மட்டும் போய்விடுவார்
மாவோ
அவர் விவாதிக்க வந்துவிட்டார்.
சரியான சவால்,
தமிழ் வீரம் முறுக்கிக்கொண்டு முட்டுவதற்கு வருமா ?
பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
இவர்களை விவாதிப்பதன் மூலமே அம்பலமாக்க முடியும் என்கிற முடிவு சரியானது. அதில் நாங்களும் பங்கேற்கிறோம்.பெரும்பாலும் அவர் விவாதத்திலிருந்து தப்பி ஓடத்தான் நினைப்பார், வர மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.
உங்கள் பழைய பதிவுகளையும் முழுமையாக வாசித்தேன்.தமிழ்தேசியம் பற்றின உங்கள் கருத்துக்கள் உண்மை என்று தான் கருதுகிறேன்.அது சாத்தியப்படுத்தவியலாத கற்பனை என்பது உண்மை தான்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.
இது ஆரோக்கியமான அழைப்பு. நீங்கள் விவாதம் செய்யுங்கள்,நாங்கள் ஒதுங்கி
நின்று வேடிக்கை பார்க்கிறோம்.
‘நிழல்’ என்று ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தாரே அவா எங்கே போனா ?
நான் இங்க தான் டா அம்பி இருக்கேன் .. என்ன வேணும் நோக்கு ?
இங்கே தா இருக்கேளா.. ஓக்கே ஓக்கே அப்படினாச் சரி மாமா, நீங்களே உங்களைப் பத்தி ஒத்துன்டேள் அப்புறம் நேக்கு என்ன ஜோலி நான் வரட்டே..
test
முத்துக்குமார் என்பவரிடமிருந்து எனக்கு வந்த மெயில்
மற்றும் நான் அதற்கு அனுப்பிய பதிலை இங்கு
பின்னூட்டமிடுகிறேன்.
முத்துக்குமார்:
வணக்கம் நீங்கள் வேண்டுமானால் கம்யூனிஸ்ட் அக
இருக்கலாம் ………………….
பட் நாங்கள் தமிழன் தமிழர்கள் ………….
நான்: நல்லது..
‘ஆனால்’ தமிழன் என்கிற உணர்விருந்தால்
தமிழில் பேச வேண்டியது தானே அது என்ன ‘பட்’ ?
சரி அதனால் நீங்கள் தமிழர் என்று சொல்லவில்லை
ஒன்று செய்யுங்கள், சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ
போன்றவர்களின் படங்களை உங்கள் புரொபைலிலிருந்து
எடுத்துவிட்டு. ராஜராஜ சோழன் பாண்டிய மன்னனுடைய
படங்களை எல்லாம் போட்டுக்கொள்ளுங்கள்.
சேகுவேர,பிடல் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்பதற்காக
சொல்லவில்லை, அவர்கள் கம்யூனிஸ்டுகளும் அல்ல
அது வேறு கதை. அவர்கள் வேற்று இனத்தவர்கள்
என்பதால் சொல்கிறேன்.
உங்களுக்கு மேற்கொண்டு ஆட்சேபனைகள்,
கருத்து வேறுபாடுகள் இருப்பின் சர்வதேசியவாதிகள்
தளத்தில் போய் விவாதியுங்கள்.
நன்றி
பின்னூட்டத்தை முதலில் போட முடியவில்லை. பின்னர் முழுமையாக போட முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.
மின்னஞ்சலின் தொடர்ச்சி
முத்துக்குமார்:
எனக்கோ அந்தே வார்த்தைக்கு உண்டனே தமிழ் எழுத்துகிடைக் வில்லை …..என்ன சொன்னீர் என் ப்ரோபிலே பாரும் என் தலைவன் இருப்பார் ……………சரி
நான்:
இருந்தால் நல்லது.
யார் உங்கள் தலைவர் பிரபாகரனா ?
புலி பற்றிய இந்த பதிவையும் வாசியுங்கள்
ரசிக மணப்பாண்மையிலிருந்து வெளியேற
உதவும்.
https://vrinternationalists.wordpress.com/2009/08/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/
மேலும் நீங்கள் எனக்கு அனுப்பிய மெயில்
நான் உங்களுக்கு அனுப்பியது இரண்டையும்
பொதுமேடைக்கு வைத்துவிட்டேன்.
பாருங்கள்.
https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comments
அதிரடியான் கீற்றில் எழுதுவதில் மட்டும் கெட்டிகாரரா? அல்லது அரசியலில் நேர்மையும் கொள்கையும் உள்ளவரா என்பதை அறிய அதிரடியானுக்காக காத்திருக்கிறோம்.
அன்பார்ந்த தோழர்களுக்கு… வணக்கம்.
விவாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். விவாதிப்போம்.
இவ்விவாதம், நேர்மையானதாக, ஒளிவு மறைவற்றதாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். தாங்கள் உறுதியளித்துள்ளபடி தயவு செய்து அனைத்துப் பின்னூட்டங்களையும் வெளியிடுங்கள்.
தமிழ்த் தேசியத் தோழர்களோ, ம.க.இ.க. தோழர்களோ அனைவரும் இச்சமூகத்தின் விடிவுக்காக ஏதேனும், செய்ய வேண்டுமென தாங்களுக்கு சரியெனப்பட்ட தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள இளைஞர்களே.. எனவே தனிநபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் வேண்டாம். விவாதம் தோழமையுடன் நடந்தால் நன்றாகவிருக்கும். கொச்சைப் பேச்சுகளுக்கு எதிராக் திரும்பவும் கொச்சைப் பேச்சகளே பதியப்படும் போது விவாதம் திசைத்திருப்பப்பட்டு விடும்.
கட்டுரைக்கு பதில் கட்டுரை என்று எழுதும் பொழுது, புதிய செய்திகளையும் மறுப்புகளையும் எழுத இயலும் என்று நினைத்தேன். வரிக்கு வரி விவாதம் எனும் பொழுது ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், உமது விருப்பப்படியே வரிக்கு வரி விவாதம் செய்வோம்.
தமிழ்த் தேசியத்தை மண் குதிரை என்றிருக்கிறீர். அந்த ”மண் குதிரை”யிலிருந்தே விவாதத்தை தொடங்கும் பொருட்டாக, அதைப் பற்றி எமது நிலைப்பாட்டை நான் தெளிவு படுத்துகிறேன். பிறகு, இந்நிலைப்பாடுகளை ம.க.இ.க.வினர் தர்க்கம் செய்யுங்கள். விமர்சியுங்கள். விளக்கமளிப்போம். விவாதிப்போம்.
அன்புடன்,
அதிரடியான்.
தமிழ்த் தேசியம் – வரலாற்று அடிப்படை
உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது. இது பல்வேறு ஆய்வுகளாலும நிறுப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் தற்பொழுது உள்ள இந்திய நிலப்பரப்புகள் முழுவதிலும் ”தமிழர்” என்ற மரபினம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
பின்னர் வந்த, வந்தேறிகளான ஆரியர்கள் தமிழர்களின் சிந்துசமவெளி நாகரீகங்களை அழித்து சமஸ்கிருத மேலாண்மையை புகுத்தி, தமிழர்களின் இடங்களை பாரம்பர்யப் பிரதேசங்களைப் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கான ஆதாரங்களாகவே ருக் வேதம் உள்ளிட்டவை விளங்குகின்றன.
தமிழினம் பல்வேறு குறுநில மன்னர்களாலும், பேரரசுகளாலும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்த நிலையில், ”தமிழ்” என்ற மொழி தமிழர்களை உளவியல் ரீதியாக ஒன்றிணைத்திருந்தது.
தொல்காப்பியத்திற்கு விளக்கமளித்து எழுதிய இளம்புரனார், ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கு எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவாறு எழுதினார்.
”நும் நாடு யாதெனில் தமிழ் நாடு என்க!”
”உன்னுடைய நாடு தமிழ்நாடு” என்று ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கேற்ப அன்றைக்கே உரைத்திருக்கின்றனர்.
”வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்”
இதுவும் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பிற்கான சங்க காலத்தில் வழங்கப்பட்ட ஒர் வரையரையே எனலாம்.
லெமூரியர் கண்டம் என்ற நிலப்பரப்பு முழுவதும் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இதற்கான சான்றுகளை முனைவர் க.ப.அறவாணன் தனது ஆய்வு நூல்களின் படி நிறுவியுள்ளார். தற்பொழுதிருக்கும், தமிழ்நாடும் இலங்கைத் தீவும் லெமூரியா கண்டத்தின் பிரியாத நிலப்பரப்புகளாக விளங்கிற்று. இவ்வாறு விளங்கிய நிலப்பரப்புகள் கடல் கோள்களால் பிரிக்கப்பட்டே இலங்கைத் தீவு, தனியாகவும் தமிழ்நாடு தனியாகவும் பிரிய நேர்ந்தது.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்னர் வந்த வந்தேறிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டனர். இலங்கைத் தீவின் தமிழர்கள் சிங்களர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். இன்றைக்கு ”இந்தியா” என்ற ஒரு செயற்கை நாட்டில், ஒரு மாநிலமாகக் குறுக்கப்பட்டு, மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அவர்களின் விடுதலைக்கான தத்துவமாகவே, வழிகாட்டு நெறியாகவே, ”தமிழ்த் தேசியம்” உள்ளது.
எம்மைப் பொறுத்தவரை, ”இந்தியா” என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூட்டிய காலனிப் பெயர். பார்ப்பன பனியாக்களும் பெருமுதலாளிகளும் விரும்பி உருவாக்கிய ஒர் சந்தை. பார்ப்பனர்களும், பார்ப்பனிய பாதந்தாங்கிகளும் இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனத்தவர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டிக் கொழுக்கவும் உருவாக்கியக் கட்டமைப்பே ”இந்தியா”. அந்த ”இந்தியா” என்ற நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும், தற்பொழுதுள்ள இந்திய ஆளும் வர்க்கம் (பார்ப்பனர்கள், பனியாக்கள், பெருமுதலாளிகள்) ஒரு போலித்தனமான ”இந்தியத் தேசியம்” என்ற இல்லாத தேசியத்தை கட்டமைத்தது.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்ற கருத்தியலை ஆரியப் பார்ப்பன இந்து மத வெறி சக்திகளையும், பெரு முதலாளிகளின் நலன் காக்கும் சந்தைகளையும் நன்கு வளர்த்து வருகின்றது. எனவே இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பது யம் நிலைப்பாடு.
உடைத்தெறிப்பட்டப் பிறகு, இந்நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. இந்நிலப்பரப்பில், வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை யார் வைத்திருப்பார்கள்? மார்க்சிய லெனினியப் புரட்சகர சக்திகள் ”இந்தியா” என்ற இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் தற்பொழுதுள்ள ஒடுக்குமுறையை ஒழித்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது என்று நாம் தெளிவாகக் கூறுகிறோம்.
முதலில் இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும், ”இந்தியன்” என்ற போலித்தனமான கருத்தியலை மிருகத்தனமாக இந்திய ஆளும் வர்க்கம் வளர்த்துவிட்டுள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படாமலிருக்க, தேசிய இனங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து விட்ருப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியே ஆகும்.
இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமமான அளவில் இருந்ததில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினையிலும் கன்னடத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரளத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றது இந்திய அரசு. பாலாறு அணை சிக்கலில் ஆந்திரத்திற்கு ஆதரவாக வாய் மூடி நிற்கிறது இந்திய அரசு. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படும் பொழுது கூட, அதனை ஆதரித்து குதூகலிக்கிறது இந்திய அரசு.
ஈழத்தமிழர்கள் மீது இந்திய அரசு நடத்திய இன அழிப்புப் போரை நிறுத்து என்று தமிழகம் ஒன்று திரண்டு போராடிய பிறகும், அப்போரை தொடர்ந்து நடத்தி ஈழத்தமிழினத்தை இந்திய அரசு கொன்றழித்தது.
இந்திய அரசின், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண்டு காசுமீரிலும், அசாமிலும், மிசோரத்திலும் அந்தந்த தேசிய இனத்தவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வாறான தேசிய இனப் போராட்டங்கள் மற்ற தேசிய இனங்களில் நடைபெறவுமில்லை.
அதே சூழலில், ”தமிழர்கள்” மீது இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது பல்வேறு நடவடிக்கைகளாலும் தொடரப்பட்டு வருவதும் மறுக்கப்படாத உண்மை.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில், ”இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பான இந்திய அரசு” என்பது ஆரியர்கள், பார்ப்பனர்கள், பனியா முதலாளிகள் உள்ளிட்டவர்களாலும், அந்த கும்பலுடன் சமரசம் செய்து கொண்ட தேசிய இனத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அரசே என்பதால் இந்திய அரசை ஆரிய இனவெறி அரசு என்று நாம் வரையறுக்கிறோம்.
இந்தித் தேசிய இனமே ஆரிய இனவெறி அரசை வழிநடத்துகின்றது என்கிறோம்.
இந்துமதவெறிப் பண்பாடே இந்தியத் தேசியப் பண்பாடு என்கிறோம்.
இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.
இந்தியத் தேசியக் கருத்திலை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், முதலாளிகள் உள்ளிட்டோர் இப்புரட்சிக்கான எதிரிகள்.
தமிழ்த் தேசிய ஆதரவு சனநாயக சக்திகள், இயக்கங்கள், கட்சிகள் முதலியன இப்புரட்சிகான நேச அணிகளாக அணிவகுப்பர்.
மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.
எனவே அத்தத்துவங்களை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ப உபயோகித்து அவற்றைக் கொண்டு நமக்கான ஒரு சுயநிர்ணயமுள்ள ஒரு தனித் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவே ”தமிழ்த் தேசியம்” என்ற இக்கருதாக்கம் படைக்கப்பட்டுள்ளது.
(இதன் மீது விவாதம் செய்யுங்கள்)..
மீண்டும் தொடர்வேன்..
/////இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.////
தோழர் ஸ்டாலின் ‘வரையறை’ படி தமிழர்கள்
ஒரே தேசிய இனமாக வளர்ச்சியடைந்துள்ளதாக
கூறுகிறீர்கள்.
தோழர் ஸ்டாலினுடைய தேசிய இன வரையறை என்ன,
தமிழர்கள் எப்படி எவ்வாறு தேசிய இனமாக
அமைந்துள்ளார்கள் என்பதை கூற முடியுமா ?
பரவாயில்லை, அதிரடியான் விவாதத்தில் குதித்து விட்டார்.
வாழ்த்துக்கள் அதிரடியான். எல்லை மீறும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தாதீர்கள்.
////மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.////
இதில் தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு பற்றிய உங்கள் புரிதல் என்ன?
தேசிய இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்துவது மார்க்சிய நிலையா அல்லது தேசிய இனங்களிடையே பிளவையும் பூசலையும் ஏற்படுத்துவது மார்க்சிய நிலையா ?
நீங்கள் மார்க்சியத்தையும் பயன்படுத்திக்கொள்வோம் என்று கூறுவதால் தான் இதை கேட்கிறேன்.
இது அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கட்டுரை
தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!
ஒய்யாரக் கொண்டையாம் இனவாதமாம் உள்ளே இருப்பது முதலாளி வர்க்கமாம்!
இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.
சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.
புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.
இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
“தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?
ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?
கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?
தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,
ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?
பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.
எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!
ந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.
இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.
பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?
“வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?
வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!
“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?
சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?
தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.
“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?
வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.
ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.
தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?
இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?
ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.
இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.
மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.
வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கு ம் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.
· பரிதி
அதிரடியான் விவாதிக்க வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நாங்கள் அனைவரும் ம.க.இ.க வினர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.ஆனால் நீங்கள் எந்த கட்சி என்று எங்களுக்குத் தெரியாது,பொதுவில் தமிழ்தேசியவாதி
என்று மட்டுமே அறிகிறோம், எனவே உங்களுடைய கட்சி, மற்றும் பல முக்கிய விசயங்களில் அதன் நிலைப்பாடு ஆகியவற்றையும் கூறினீர்கள் என்றால் விவாதிக்க வசதியாக இருக்கும்.
ஒவ்வொரு விசயமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது நல்லது, உதாரனமாக ஈழம் பற்றி,புலிகள் பற்றி என்று வரிசைப் படி விவாதியுங்கள்.
தமிழர்கள் ஒரு தேசிய இன இல்லை என்பதை சர்வதேசியவாதிகளே நீங்கள் எப்படி மறுக்கிறீர்கள் ? தமிழர்கள் ஒரு இனம் இல்லையா ?
தமிழ்தேசிய அரசு என்றால் நீங்கள் கூறுவதைப் போல அதுவும் ஒரு சோசலிச அரசு தான்.எனது புரிதல் சரி எனில் தமிழ்தேசீய குடியரசு என்பது சோசலிச குடியரசு தான்.
தம்பி’
தமிழ்தேசிய சோசலிச குடியரசு என்பதெல்லாம் கற்பனைக் கோட்டை.
சோஷலிச அரசு என்பது எந்த ஒரு கொள்கையின் அடிப்படையிலும் இருக்கலாம். அது மார்சிய அடிபடயில் தான் இருக்க வேண்டும் என்ற வரையறு கிடையாது என்பதை நீங்க முதலில் புரிஞ்சுக்கணும்.. ஆகையால் தமிழ் தேசிய குடியரசு என்பது வெறும் கற்பனை கோட்டை அல்ல.. நடை முறைக்கு ஒத்து போக கூடியதே
தமிழ்தேசியம் என்பது தமிழ் பார்ப்பனியம் என்று சொல்வது எப்படி சரி ?
சாதி என்கிற நிலப்பிரபுத்துவ உறவு இன்னும் இருக்கிறதா இல்லையா ?
அது தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இருக்கிறதா இல்லையா அனைவரிடமும் என்று சொல்ல முடியாது.
பார்ப்பனப் பண்பாட்டை தான் அப்படியே மாற்றாமல் அல்ல்து சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்து தமிழ் பண்பாடு என்று அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். அது பார்ப்பனீயம் அல்லாமல் வேறு என்ன ?
இந்தியா என்பதை தேசிய இனங்களின் சிறைக்கூடாரம் என்று தான் ம.க.இ.க வரையறுத்துள்ளது. இந்தியாவை ம.க.இ.க ஒரு தேசம் என்றும் கருதவில்லை. இது இந்து தேசம் என்று தான் சொல்கிறது.
விவாதம் எப்போது துவங்கும் ?
இந்த விவாதம் துவங்கிவிட்ட பரபரப்பில் எல்லோரும் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,
நிழல் என்கிற பெயரில் உலாவும் அம்பியை யாரும் நம்பிவிடாதீர்கள்.
என்னை நம்பாவிட்டால் நான் என்ன தற்கொலையா செய்து கொள்ள போகிறேன். அட போங்கபா.. இந்த நிஜம் என்பவர் காமெடி பீஸ் என்று எனக்கு கொஞ்சம் முன்னாடியே தெரியும். இப்போ யாரு நமஸ்காரம் என்று ஒருத்தர் வந்துருக்கார் புதுசா.. நிஜத்துக்கு நீங்க ரொம்ப நெருங்கிய தோழர் தான் என்று நினைகிறேன்.. சரி ஜூலிஸ் ஃபூசிக் கூறியதை போல தனி நபர் தாக்குதலுக்கு இது நேரம் அல்ல. விவாதம் நடக்கும் . அதில் நான் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
உண்மை இதை நான் வழி மொழிகிறேன்.
எல்லாம் அடிதடியின்றி நல்லபடியாக நடந்து
முடிய இரு தரப்புக்கும் வாழ்த்துக்கள்.
அதிரடியான் விவாதத்தில் கலந்துகொள்வதற்கு மகிழ்ச்சி.
தோழர்களே, தனிநபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் வேண்டாம்.
விவாதம் தோழமையுடன் நடந்தால் நன்றாகவிருக்கும்.
அதிரடியானும் இதை கடைபிடிப்பார் என்று எதிர்பார்கிறோம்…
இவ்விவாதம் தனிநபர்
தாக்குதாலாக திசை
திரும்பாமலிருக்க வேண்டும்.
அதற்கு விவாதத்தில் பங்கேற்போர்
உதவ வேண்டும்.
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை பாட்டாளி வர்க்கம் தான் வைத்திருக்கும்.அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தான் எந்த ஒரு ஒடுக்குமுறையையும் நிர்மூலமாக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும்,அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் வழங்குவது புரட்சிகர சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றும் போது தான் சாத்தியம். இதை எப்படி நீங்கள் ’தெளிவாக’ முடியாது என்று கூறுகிறீர்கள் ?
தேசிய இனங்களின் சிறைக்கூடாரமான இந்தியாவை கைப்பற்றி உடைத்தெறியாமல் தேசிய இனங்களுக்கு வேறு எவ்வாறு சுயநிர்ணய உரிமையை வழங்க இயலும் என்பதை நீங்கள் தான் ‘தெளிவாக’ கூற வேண்டும்.
இந்திய தேசிய அரசு அனைத்து தேசிய இனங்களையும் ஒரே விதமாக ஒடுக்குவதில்லை என்கிறீர்கள்! அதற்கு உதாரணமாக, காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் பிரச்சினையிலும் கன்னட தேசிய இனத்திற்கு ஆதரவாகவும், முல்லைப் பெரியாறு நீர் பிரச்சினையில் கேரளவிற்கு ஆதரவாகவும், பாலாற்று பிரச்சனையில் ஆந்திராவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது என்கிறீர்கள். இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல. இந்திய அரசு அனைத்து தேசிய இனங்களையும் ‘இந்தியா’ என்கிற சிறைக்கூடாரத்திற்குள் தான் அடைத்து வைத்திருக்கிறது. எந்த தேசிய இனத்தையும் சுதந்திரமாக விட்டுவைக்கவில்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளில் இந்திய அரசு ஆதரவாக நடந்து கொள்வதை அந்த இனங்களின் மீது மட்டும் குறைவான ஒடுக்குமுறை செலுத்தப்படுவதாக புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக நீங்களே ஒரு இடத்தில் கூறியிருப்பதைப் போல இந்திய ஆளும் வர்க்கம் தேசிய இனங்களுக்கிடையில் வெறுப்பையும், பகைமையையும், முரண்பாட்டையும் வளர்த்துவிடும் தனது சூழ்ச்சியின் ஓர் பகுதியாகத்தான் மேற்கண்ட பிரச்சனைகளில் சில தேசிய இனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறது. அதிலும், பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நாத்திக இயக்கம், தமிழகம் மட்டும் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்’ வராமல் இருப்பது ஆகிய சிறப்பு காரணங்களால் தமிழகத்துடன் இந்திய தேசிய அரசுக்கு நீண்ட கால பகை இருப்பதால் நமக்கு ஓரவஞ்சனை இன்னும் அதிகமாக இருக்கிறது. அது காஷ்மீருக்கும், மணிப்பூருக்கும் இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படாமல் இல்லை, அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன.
இந்திய அரசு என்பது பார்ப்பன இந்து தேசிய அரசு தான் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால் எந்த தேசிய இனம் இந்திய அரசிடம் சமரசம் செய்துகொண்டது? அதாவது உங்களுடைய கூற்றுப்படி அப்படி ஒரு இனம் இருந்தால், அது இந்திய தேசியத்துக்கு கைக்கூலி வேலை செய்கிறது என்று அர்த்தமாகிறது. அந்த கைக்கூலி தேசிய இனம் எது என்பதை சொல்லுங்கள். நீங்கள் இந்திய தேசியத்துக்கு காட்டிக்கொடுக்கிற கைக்கூலிகளா என்பதை அந்த மக்களிடமே கேட்கலாம்.
உங்கள் கூற்றின்படி இந்தி தேசிய இனம் தான் இந்த அரசை வழி நடத்துகிறது எனில் அது தான் ஒடுக்கும் தேசிய இனமாகும். ஆனால் நாம் அப்படி இல்லை என்கிறோம். இந்த நாட்டில் ஒடுக்கும் தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தி தேசிய இனமும் கூட ஒடுக்கப்படுகிற இனம் தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவது இந்து தேசியமும், அதை கட்டியமைத்த பார்ப்பன பனியா கும்பல் தான். இந்தி தேசிய இனம் தான் ஒடுக்கும் இனம் எனில் அது எவ்வாறு என்று விளக்க முடியுமா?
நவீன சமூகத்தில் தேசம், தேசிய இனம் குறித்து தோழர் ஸ்டாலின் கூறிய வரையறையை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பின் ‘தேசிய இனமாக வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுத் தமிழர்கள்’ எனும் பதத்தை பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனெனில் தமிழ் இனம் ஒரு முழுமை பெற்ற தேசிய இனமாக இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதே உங்களைச் சுடும் உண்மை.சிதறிக்கிடந்த நிலப்பிரபுத்துவ சமூகமாக வெள்ளையன் வந்து இணைக்கும் வரை உருவாக்கப்படாத இந்தியா பின்னர் அவர்களால் காலனியாக்கப்பட்டது. பிரிட்டனில் முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை முழுமையாக வென்றெடுத்த உடன் நிகழ்வாக இங்கு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து காலனியாட்சி முழுமையாக நிலை நிறுத்தப்பட்டு பிரிட்டன் பாணி முதலாளிய வடிவம் இங்கும் புகுத்தப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு அதிகார மாற்றத்திற்கு பிறகு காலனிய உற்பத்தி முறையிலிருந்து இந்த நாடு முழுமையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுடன் அரை காலனிய உற்பத்திக்கு மாற்றமடைந்தது. 47ல் அதிகார மாற்றம் நிகழும் இச்சூழலில் தமிழ் தேசிய இனமோ அல்லது மற்ற பிற தேசிய இனங்களின் தேசிய எழுச்சிகளோ எதுவும் இங்கு நடக்கவில்லை. காரணம், இங்கு தேசிய முதலாளித்துவமே வளரவில்லை. மாறாக வெள்ளையன் தரகு முதலாளிகளைத் தான் உணர்வுப் பூர்வமாகவே வளர்த்துவிட்டான். மேலும் உற்பத்தி முறை அரைகாலனி அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தியாக நீடிக்கும் சமூகத்தில் பிரபுத்துவ உறவே ஆதிக்க நிலை செலுத்துவதாக இருந்தது. அத்துடன் பார்ப்பனிய இந்து தேசியமும் கட்டி எழுப்பப்பட்டது. இவை அனைத்தின் காரணமாக தான் தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனமாக வளர்ச்சி பெறவில்லை.
//
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை பாட்டாளி வர்க்கம் தான் வைத்திருக்கும்
//
பாட்டாளி வர்க்கம் என்பதே தேசிய இனங்களுக்கு அப்பார் பட்டது என்பது தாம் மார்சிய கூற்று.. அப்புறம் எப்படி நீங்க பாட்டாளி வர்க்கம் இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்க முடியும் என்று கூறுகிறீர்கள் ..
முத்துக்குமாருடனான மின்னஞ்சல் விவாதம் இன்னும் முடியவில்லை
இதற்கு முன்பும் ஒரு பகுதியை இங்கு பின்னூட்டமிட்டுள்ளேன்
அதன் பிறகான உரையாடலை இப்போது இங்கு பதிகிறேன்.
//////////////////////////////////////
வணக்கம் நண்பா !
i really respect Internationalists,
i also believe that only a true communist policy can save India.
அதிரடியானுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனையோ எனக்கு தெரியாது !
ஆனாலும்
எனக்கு ந்யாயம் என தோன்றும் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசை படுகிறேன் !
உலகம் எங்கும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார சுதந்திரத்தை ஆதரிக்கும் நீங்கள் ,
ஏன் போருலரத்ரா மற்றும் அரசியல் ரீதியான சுதந்திரதிக்கு போராடும் தமிழர்களுக்கு ஒரு ஸ்திரமான ஆதரவு தருவதில்லை ?
நீங்கள் அனைவரையும் உழைக்கும் வர்க்கம் என்றே பார்க்கும் நீங்கள், ஏன் தமிழ் மக்களை அவ்வாறு பார்ப்பதில்லை, நாங்கள் தமிழர் என்பதாலா?
மனிதர்களை சரியான நியாய தராசில் பார்க்கும் உங்களை போன்றவர்களின் கூட இந்த போராட்டத்தை ஆதரிக்காது ஏன் ?
ச்சே குவாரா , லெனின் , மார்க்ஸ் ஆகியோர் இந்த போரட்டத்தை ஆதரிதுஇருக்க மாட்டார்கள் என்பது உங்கள் கருத்தா?
//////////////////////////////////////////////
நாங்கள் எந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை ?
ஈழப்போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது ?
புலியை ஆதரிப்பது போராட்டத்தை ஆதரிப்பது அல்ல என்பதை உணருங்கள்.
நன்றி
/////////////////////////////////////////////
நன்றி நண்பா !
இந்த உறுதி உங்கள் தளமைஇடம் ஒரு மனதாக இல்லாததே எனது வருத்தம் !
நானும் புலிகளை முழுமையாக ஆதரிப்பவன் அல்ல,
இனிய நாளாக வாழ்த்துக்கள் !
/////////////////////////////////////////////
///////////////////////////////////////////
எமது தலைமையிடம் இல்லையா ?
நண்பரே எமது அமைப்பில் தலைவர் தொண்டர் என்றெல்லாம் இல்லை. எமது அமைப்பில் ஒருவர் தலைவர் என்று தெரிவு செய்யப்பட்டு அந்த தகுதி அவருவருக்கு வழங்கப்படுகிறது என்றால், அதில் எமது அங்கீகாரம்,ஆதரவு உள்ளது என்றே பொருள்.
எம்மை மீறி எமது தலைமை ஒன்றும் செய்ய முடியாது, அதாவது எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க முடியாது.முக்கியமான அனைத்தும் அமைப்பு முழுமைக்கும் சுற்றுக்கு விடப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும்.மேலும் தலைவர் திறமையின் அடிப்படையில் மட்டுமே தெரிவு செய்யப்படுவார். ஆள் இல்லை என்றால் அவர் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவதற்கும் கூட தயாராக இருப்பார், இது தான் எமது தலைமை.
எமது அமைப்பு தலைமை பற்றிய இனவாதிகளின் அவதூறுகள், உங்களைப் போன்ற பல நல்ல நபர்களிடமும் கூட தவறான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது.
நீங்கள் எமது அமைப்பிற்குள் வந்து பார்க்கும் வரை இது போன்ற சந்தேகங்களை பதிலளிப்பதால் தீர்த்துவிட முடியாது என்று கருதுகிறேன். எனவே எம்மை நெருங்கி வந்து பாருங்கள்.
எமது தோழமை உங்களுக்கு என்றும் உண்டு.
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்
////////////////////////////////////////////
////////////////////////////////////////////
உங்கள் நட்பை பெறுவதில் எனக்கு பெருமை நண்பா !
கோவை வந்தால் நிச்சயம் என் வீட்டுக்கு வரணும் !
நம் உரையாடலுக்கு வருவோம் ,
உங்களின் (இயக்கத்தின்) செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பில் எனக்கு எந்த அதிர்ப்ப்தியும் கெடயாது ,
அனால்
கடந்த ஓர் ஆண்டு காலமாக உங்கள் தலைவர்களில் சிலர் முன்னுக்கு பின் முரண்பாடான அறிக்கைகளை வெளிஎடுவாதாக நான் அறிகிறேன் ! ஆகவே தான் நான் அப்படி ஒரு கேள்வியை முன்வைத்தது !
உங்களிடம் மேலும் சில கேள்விகள், என் ஐயப்பாட்டை போர்க்க ,
௧. சரி புலிகள் இயக்கம் இல்லது , தனிச்சியாக உங்களால் ஈழம் பெற முடியும் என நீங்கள் நம்புகுரீர்களா ?
௨. அப்படி உங்களால் முடயும் என்றால் அது ஒரு ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருக்கும்மா ? (அற வாளியில் போராடுவோர் நிலைமை நீங்கள் அறிவீர்)
௩. இந்தியாவில் உங்கள் தலைவர்கள் தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என அறிவித்திருகிரார்களா ? எனயும் தைரியமாக சொல்வார்களா ?
எந்த கேள்வயும் உங்களையோ அல்லது எந்த ஒரு இயக்கத்தையோ புண்படுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை !
நன்றி
உங்களுடன் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி,
இனிய இரவு நண்பா !
//////////////////////////////////////////////
//////////////////////////////////////////////
எமது தோழர்கள் (தலைமை) முன்னுக்கு பின் முரணாக
எங்கேயும்,எப்போதும் அறிக்கைகள் வெளியிட்டதில்லை,
பேசியதில்லை. உங்களுக்கு அவ்வாறு யாரேனும் வாய்
வழியாக சொன்னார்களா ? அப்படியென்றால் அது ஒரு
கேடுகெட்ட அவதூறு. இதோ மருதையன் இப்படி இப்படி
பேசியிருக்கிறார் அதற்கு இது தான் ஆதாரம் என்று உண்மையை
முன் வைத்து பேச வேண்டும். ஆனால் இங்கு எம்மைப் பற்றி
பேசுகிற யாரும் நேர்மையாக எங்களை விமர்சிப்பதில்லை,
நேர்மையை விடுங்கள் இவர்கள் எம்மை விமர்சிப்பதே இல்லை.
மாறாக எம்மைப் பற்றி கிசுகிசு தான் பேசுகிறார்கள்.
ஒரு இயக்கத்தின் அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்
கொள்ளத் துணிவின்றி அந்த அமைப்பையும் அதன் அரசியலையும்
கொச்சைப்படுத்தி கிசுகிசுவையும் அவதூறையும் கிளப்புகிறார்கள்.
நீங்கள் அது பற்றி சட்டை செய்யாதீர்கள்.
எங்களை நீங்கள் உண்மையாக அறிய விரும்பினால் மாதம் மாதம்
புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தை வாசியுங்கள்.
இப்போது உங்களுடைய கேள்விகளுக்கு வருகிறேன்.
௧. புலிகள் இல்லாது , உங்களால் தமிழ் ஈழம்
பெற முடியும் என நம்புகுறீர்களா ?
புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று நாங்கள் கருதவில்லை,ஈழ தமிழரிலும் பலர் அவ்வாறு கருதுவதில்லை.ஈழத்தில் பல்வேறு போராளி அமைப்புகள் இருந்த அவையெல்லாம் எங்கே தொலைந்து போயின என்பதை வரலாற்று பக்கத்திற்கு சென்று பாருங்கள்.அனைவரையுமே கைக்கூலிகள் என்று கூறி புலிகள் அழித்தொழித்தார்கள்.மேலும் எதிர்கால நம்பிக்கை என்று சொல்வதற்கு தற்போது புலி இயக்கமும் இல்லை என்பது நம் கன் முன்னுள்ள எதார்த்தமான உண்மை.
மேலும் தற்போது முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுடன் உயிர் தப்பிய புலிகளும் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களை மக்கள் அடிக்கிறார்களாம் எம்மை இந்த நிலைக்கு தள்ளியது நீங்கள் தான் என்று தாக்குகிறார்களாம்.இதனால் புலிகள் தமக்கு தனி முகாம் வேண்டும் என கேட்டுள்ளார்கள்.எனவே தனி ஈழமா அல்லது வேறு எதுவோ அதை அந்த மக்கள் தீர்மானிப்பார்கள்.அதற்கு புலி அவசியமில்லை.
௨. அப்படி நம்பினால் , உங்கள் போராட்டம் எப்படியான போராட்டமாக இருக்கும் (அஹிம்சை மார்க்கம் ஈழ விஷியத்தில் எப்படி என்று நான் உங்களுக்கு விளக்க அவசியமில்லை )
நாம் காந்தியின் அகிம்சையை எல்லாம் நம்புவதில்லை.மாவோவின் மேற்கோள் தான் உங்களுக்கான பதில்.
‘நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள்’
௩. உங்கள் தலைவர்கள் “தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு” என்று ஒரு தேசிய அளவிலான அறிக்கை வெளியிட்டிருக்கிறார்களா ? இனிமேலும் தைரியமாக அறிவிப்பார்களா ?
தனி ஈழம் அமைந்தால் நாம் அதை எதிர்க்கவில்லை. மேலும் அங்கு என்ன செய்ய வேன்டும் என்பதை இன்னொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்ய முடியாது. அதை அங்குள்ள மக்களும் தோழர்களும் தீர்மானிப்பார்கள்.
கோவை வரும் சமயம் உங்கலை பார்க்க முயற்சிக்கிறேன் அல்லது எமது தோழர்கள் வரும் வாய்ப்பிருந்தால் உங்களை சந்திக்க சொல்கின்றேன்.
மேலும் எமது தோழர்கள் முன்னுக்கு பி்ன் முரனான அறிக்கைகள் எதையும் எங்கும் எப்போது வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்
தமிழ்த் தேசியம் – வரலாற்று அடிப்படை
உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது. இது பல்வேறு ஆய்வுகளாலும நிறுப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் தற்பொழுது உள்ள இந்திய நிலப்பரப்புகள் முழுவதிலும் ”தமிழர்” என்ற மரபினம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன//
மூத்த இனமென்றால் மனித குரங்குலிருந்து மனிதன் தோன்றினானே அந்த இனமா?
மூத்த இனம் என்பதன் அடிப்படையில் தேசியம் வேண்டுமென்றால் தமிழர்களை விட மனித குரங்குகளுக்கு தான் தனி தேசியத்திற்கான உரிமை அதிகம் உண்டு.மனித குரங்குகளுக்கான தேசிய கோரிக்கையை அவைகளுக்காக நாம் கோரலாமா?
விலங்கினங்களுக்காக தேசிய கோரிக்கையா என்று வாயடைத்து அப்படியெல்லாம் விலங்கினங்களுக்காக தேசிய கோரிக்கை எழுப்ப முடியாது.மனித சமூகம் தான் தேசிய கோரிக்கையை கோர முடியும் என்று பகுத்தறிவின் மூலம் பதில் சொன்னீர்களேயானால் அதே பகுத்தறிவுடன், உண்மையிலேயே மூத்த குடிகள் என்பவர் யார் என்றும் சொல்லுங்கள்?
தமிழர் என்று நீங்கள் பொத்தாம் பொதுவாக கூறலாம்.
ஆனால், டாக்டர் அம்பேத்கரின் ஆய்வின்படி இந்தியாவில் நாகர் சமூகம் தான் பூர்வகுடிகளாகவும் நாகரிக வாழ்க்கையுடன் இருந்தார்களே அவர்களே தமிழர்கள்.பின்னர் ஆரியம் வந்தபிறகு இனக்குழு மோதலில் இந்தியா முழுவதும் இருந்தவ நாகர் சமூகம் தெற்குவரை தேய ஆரம்பித்தனர். வேறு இனகுழுவினர் நாகர் சமூகத்தை தாக்கி சிதரியடித்தனர். சிதறியவர்கள் மற்ற இனக்குழு நாகரீகத்துடன் கலக்க முடியாமல் ஊர்களின் எல்லையிலேயே தங்கள் வாழ்கையை அமைத்து கொண்டனர். அவர்களே பிறகு தீண்டாதாராயினர் என்று கூறுகிறார்.
இனமரபின் அடிப்படையில் தேசியம் கோருவதேன்றால் அதற்கான முழு உரிமையும் ஆதி திராவிடர்களுக்கும், ஆதி தமிழருக்குமே உள்ளது.சாதி இந்துக்களுக்கும் ஆதிக்க சாதி தமிழருக்கும் இல்லை. அதற்காக அவர்களின் தேசிய கோரிக்கை சரியா தவறா என்பது தனி விவாதம்.
மரபு தேசிய இனம் என்றுமே பாசிசத்திற்கு தான் கொண்டு செல்லும். யூதர்கள் மரபு தேசியம் ஹிட்லரை உருவாக்கியது. சிங்களவர்களின் இனவெறி ராஜபக்சேவை உருவாக்கியது. மூவேந்தனின் மரபு முக்குலத்தோர் ஆதிக்க சாதியரை உருவாக்குகிறது. பல்லவ மரபினம் வன்னியரை உருவாக்குகிறது. இவ்வாறு ஆளுக்கொரு மரபை பற்றிகொல்வதே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணம்.
எனவே மரபு தேசியத்தின் கோரிக்கை பாசிசத்தின் வழி.
நாகரிகம் அடைந்த குரங்கயே மனிதன் என்று கூரிகிறோம்.. ஆகையால் மனிதன் என்று பேசும் போது நாம் (அடிப்படை) நாகரிகம் அடைந்த மனிதர்களில் இருந்து தான் பேச ஆரம்பிக்க வேண்டும்..
தோழர் அதிரடியான் கூறிய
//உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது//
என்ற வாக்கியத்தில் ஒரே ஒரு தவறு தன எனக்கு தெரிகிறது..
இதில் இனம் என்ற வார்த்தை தவறு.. குடி என்ற வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.. இதன் அடிபடியில் நான் உங்கள் //”உண்மையிலேயே மூத்த குடிகள் என்பவர் யார் என்றும் சொல்லுங்கள்?”// என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன்..
குடி என்றால் என்ன? இனத்திற்கும் குடிக்கும் உள்ள வேறு பாடுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைகிறேன்.. இந்த அடிபட்யில் பார்க்கும் போது Bronze Age என படும் காலத்தில் சிந்து நதியோரம் ஒரு மேம்பட்ட சமுதயாம வாழ்ந்த குடி நம் குடி.. அது எப்படி சார் சொல்றிங்க அவங்க தமிழர்கள் என்று ?? சமிபத்தில் நடந்த அராய்ச்சி ஒன்றில் சிந்து நாடி கரையோரம் வாழ்ந்த மகள் பயன் படுத்திய மொழி தமிழ் மொழியின் மூதாதைய மொழி என்று கண்டு பிடிக்க பட்டுள்ளது..
இன்னும் எழிய முறையில் சொல்ல வேண்டு என்றால்.அது ஒரு திராவிட மொழி என்று கண்டு பிடிக்க பட்டுள்ளது!!
சரி சிந்து நதி கரையோரம் வாழ்ந்தது எல்லாம் சேரி.. ஏன் இவர்களை மூத்த குடி என்று கூறுகிறீர்கள் என்று கேட்கலாம்.. சிந்து நதி நாகரிகம் இருந்த சம காலத்தில் உலகத்தில் இருந்த மற்ற நாகரிகளான மேசபடோமியன் நாகரிகத்தின் தோற்ற ஆண்டுகளை நீங்க ஆராய்ந்து பார்த்தல் தெரியும்.. மெசபடோமியா நாகரிகத்தின் முதல் நகரம் தோன்ற ஆண்டு 5300 BC என்று கண்டறியபட்டுளது. அனால் சிந்து நாகரிகத்தின் முதல் நகரம் மேஹ்கர் என்ற இடத்தில 5300 BC தோன்றி இருக்கிறது!! அபோ எது முதலில் தோன்றியது !! நமது நாகரிகம் தானே? இதனலயே தமிழரின் குடி மூத்த குடி என்று கூற படுகிறது..
பாசிசம் சம்பந்தமான உங்கள் கருத்தகளை நான் முற்றிலும் ஏற்று கொள்கிறேன்
”பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நாத்திக இயக்கம், தமிழகம் மட்டும் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்’ வராமல் இருப்பது”
என இந்திய அரசால் தமிழகம் அதிகமாக ஒடுக்கப்படுவற்கு இது தான் காரணம் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த ”சிறப்புக் காரணங்களால்” தான் தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுவதாக நீங்களே ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள் பல.
தமிழ் இனத்தின் மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு இவ்வளவு சிறப்புக் காரணங்களும் அதன் பட்டியல்களும் தேவையில்லை. ”தமிழினம்” என்ற ஒற்றைக் காரணமே, இந்தியாவில் மட்டுமனி்றி, ஈழம் உள்ளிட்ட உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மீது இந்திய அரசின் பாசிச தேசிய இன ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என்பதே நமது கருத்து.
இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை அனைத்து தேசிய இனங்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள நிலையில், தமிழ் இனத்திற்கு இது அதிகமாக இருக்கிறது என்று தான் நாம் சொல்கிறோமே, தவிர, தமிழ் இனத்திற்கு எதிராக மட்டும் தான் இந்திய அரசு தேசிய இன ஒடுக்குமுறை செலுத்துகின்றது என்று நாம் ஒரு போதும் வாதிடவில்லை.
இந்தியா என்ற கட்டமைப்பு என்பதே ஆங்கிலேயார்களால் உருவாக்கப்பட்டது தான். எவ்வளவு தான் புரட்சிகரமானதாக இருந்தாலும், அது முதலாளிகளுக்கும் சுரண்டும் பார்ப்பனிய பனியாக்களுக்கும் சாதகமானதாகவே இருக்கும் என்பது எம் கணிப்பு. ஏனெனில், தற்பொழுதுள்ள இந்திய நிலப்பிரப்பில், உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒற்றைப் புள்ளியில் இணைத்துப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் சூழல் நிலவவில்லை. இதற்குக் காரணம், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்து தேசிய இனங்களுக்கும் சரி சமமானதாக இல்லை என்பதே எமது கருத்து.
இந்தியாவில், காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் மீது இந்திய அரசுக் காட்டுகின்ற வன்மமும், கர்நாடகத்தின் தேசிய இனத்திற்குக் காட்டப்படுவதில்லை.
முல்லைப் பெரியாற்று அணை மீது புதிய அணைக் கட்ட, மகிழ்ச்சியுடன் இந்திய அரசு வழங்கியிருக்கும் அனுமதி என்பது, மலையாளித் தேசிய இனத்தவர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.
குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் கூட, பாசிசப் பாசத்துடன் பொங்கி எழும் இந்திய ஆளும் வர்க்கங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் நாயைப் போல சுட்டுக் கொல்லப்பட்டால் கூட கண்டுகொல்வதில்லை.
ஒருவேளை, குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதால் ஏற்படும் பிரச்சினையை பயன்படுத்தி, ”இந்திய – பாகிஸ்தான்” என்றுக் கூக்குரலிட்டு, இந்து மதவெறியைக் கட்டமைத்து ”இந்திய”த் தேசிய வெறியைக் கிளப்பி விடும் நோக்கம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருப்பதால் இதனை பெரிதுபடுத்துகின்றது என்று சொல்லாம்.
அப்படியெனில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை பயன்படுத்தி இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பிவிட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சிறு நொடி போதுமே. ஏன் அதனை இந்திய ஆளும் வர்க்கங்கள் செய்யவில்லை..?
ஏனெனில், இன்று மட்டுமல்ல வரலாற்றின் அனைத்து இடங்களிலும் தொன்று தொட்டே தமிழினத்திற்கு எதிரானதாகவே ஆரியம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இது மறுக்க முடியாத உண்மை. ஆரியத்தின் இன்றைய பாசிச சட்ட வடிவான ”இந்திய அரசு” என்ற ஒடுக்குமுறைக் கருவியும், அது பாதுகாக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களும் தொடர்ந்து இதைத் தான் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் மீதும் உலகமயம் ஏற்படுத்தியுள்ள பாய்ச்சல் வேகத்திலான ஒடுக்குமுறையை கைக் காட்டி, இது தான் இந்திய அரசின் சமமான ஒடுக்குமுறை என்று சொல்லாதீர். இந்த வரையறை தவறு.
தேசிய இனங்களிடையே பகைமை உண்டாக்கும் நோக்கும், இந்தியத் தேசிய அரசிற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளும் நீங்கள், ஏன் அந்த பிழைப்புவாத நோக்கில் கூட இந்திய ஆளும் வர்க்கங்கள் தமிழினத்திற்கு ஆதரவாக நிற்க மறுக்கின்றன? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்..?
காவிரி சிக்கலில் கன்னட தேசிய இனத்தோடும், முல்லைப் பெரியாறு சிக்கலில் மலையாளி தேசி இனத்துடனும், பாலாறு சிக்கலில் தெலுங்கு தேசிய இனத்துடனும், உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியங்களுடனும், இந்தியப் பாசிச அரசுக் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டை, தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்குகின்றது என்பது தாம் நம் பிரதானக் குற்றச்சாட்டு. இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே நினைக்கிறேன்.
இந்நிலையில், இத் தமிழ்த் தேசிய இனத்தில் தேசிய இன விடுதலைக்காக நாம் அணி திரள வேண்டும் என்று சொன்னால் அது எந்த வகையில் தவறானது?
தமிழினத்தின் மீது செலுத்தும் அதே அளவு ஒடுக்குமுறை தான் கேரளாவிற்கும், மற்ற தேசிய இனங்களுக்கும் செலுத்தப்படுகின்றது என நீங்கள் வாதாடுகிறீர்கள். அதே வேளையில், ”சிறப்புக் காரணங்கள்” என பட்டியலிட்டு தமிழகத்திற்கு இவ்வொடுக்குமுறை அதிகமானதாக இருக்கிறது என்றும் சொல்கின்றீர். ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைப் பாதுகாப்பதற்காக இந்த வேடம் தரித்து நிற்கின்றீர்..?
தேசிய இனப் போராட்டத்தை இன்னும் துவங்காத, கேரளம், கன்னடம், மகாராட்டிரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியத் தேசியத்தின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் ஏதேனும், தேசிய இன உரிமைப் போராட்ட அமைப்புகள் எழுந்துள்ளனவா? ஏன் அவ்வாறு இதுவரை எழவில்லை?
தற்பொழுதுள்ள இந்தியாவில், காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தான் தேசிய இன உரிமைக்கான போர்க் குரல்கள், ஓரளவாவது தெரியும்படி எழும்பியுள்ளன.
இந்திய அரசின் ஒடுக்குமுறை அனைவருக்கும் பொதுவானது என்றால், ஏன் கன்னடத்திலும், கேரளத்திலும், வேறு எந்த தேசிய இனத்திலும் தேசிய இன உரிமைக்கான போராட்டங்கள் எழவில்லை? அங்கெல்லாம் நாங்கள் கட்சி கட்டவில்லை அதானால் தான் எழவில்லை என்று சொல்லாதீர். பிறகு, அந்தந்த தேசிய இனங்கள் தான் அவர்களுக்கான தீர்வை முன் மொழிய வேண்டும் நீங்கள் சொல்வதை நீங்களே மீறுவதாகிவிடும் இக்கூற்று.
முதலில் இதனை மீளாய்வு செய்யுங்கள்.
தேசிய இனப் போராட்டத்தை இன்னும் துவங்காத, கேரளம்,”கன்னடம்”, எனக் கூறும் நீங்கள்,
தற்பொழுதுள்ள இந்தியாவில், காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, “கன்னடம்” உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தான் தேசிய இன உரிமைக்கான போர்க் குரல்கள், ஓரளவாவது தெரியும்படி எழும்பியுள்ளன எனக்கூறியுள்ளீர்கள்.
தவறுதலாக இரு இடங்களிலும் கன்னடத்தை குறிப்பிட்டுவிட்டீர்கள் என நினைக்கின்றேன்.
கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
அன்பார்ந்த தொழிலாளர்களே!
கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் “வன்முறை – பேராபத்து” எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.
அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.
மேலும்….
http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post.html
அதிரடியானை, அதிரவைப்போம் விவாதத்தால்.
இதை ஏதோ நாம் இப்போது தான் உலகத்துக்கே முதல் முறையாக சொல்வதைப் போல் அதிரடியான் வியப்படைகிறார்.மேலும் நாம் இவ்வளவு நாட்களாய் இதை மறைத்து வைத்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது தான் மெல்ல மெல்ல ஒப்புக்கொள்வதை போலவும் சித்தரிக்கிறார். இதுவா உண்மை ? இல்லை. இந்தியாவை பற்றியும், பார்ப்பனீயத்தை பற்றியும், தமிழ் ஆரிய போராட்டம் பற்றியும் நாம் நன்கு அறிவோம். இது இந்து,இந்தி,இந்தியா என்கிற பார்ப்பனிய உள்ளடக்கத்துடன் கட்டியெழுப்பபபட்டிருக்கும் ‘இந்து தேசியம்’என்பதையும் அறிவோம். எனவே தமிழுக்கும் ஆரியத்துக்குமான போராட்டத்தை நாம் எங்கேயும் எப்போதுமே மறுத்ததில்லை, அதை எதார்த்தமாக உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் ஏற்கிறோம். அதே காரணங்களால் தான் நாம் மிகை உணர்சியிலும்,கற்பனைகளிலும் மூழ்காமல் எதார்த்ததமாக என்ன சாத்தியமோ அதை நோக்கிப் பயணிக்கிறோம்.
இது எப்படி என்பது புரியவில்லையே ?
தமிழ்தேசியத்திற்கு மார்க்சியத்தை வரித்துக்கொண்டிருப்பதாக கூறுகிறீர்கள் ஆனால், வரலாற்று ரீதியான சிறப்பு காரணங்கள் எதுவும் இன்றி ‘தமிழ் இனம் என்பதனாலேயே’ நம் மீது இந்திய அரசின் பாசிச ஒடுக்குமுறை ஏவி விடப்படுகிறது என்கிற உங்கள் பார்வை என்ன வகை பார்வை என்பது புரியவில்லை !
இதற்கு ஏற்கெனவே வரலாற்று ரீதியான காரணத்தை கூறியுள்ளோம்.ஆனால் தமிழ் இனத்தை விட பல மடங்கு கொடூரமான முறையில் காஷ்மீரிகளும், மணிப்பூரிகளும் வடகிழக்கு பகுதியின் பல்வேறு தேசிய இனங்களும் ஒடுக்கி நசுக்கப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஏழு லட்சம் ராணுவத்துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.எனவே காக்ஷ்மீரி மணிப்பூரிகளை விட நமக்கும் ஆரிய பார்ப்பனீயத்திற்கும் கூடுதலான வரலாற்றுப் பகை இருந்தாலும், தற்போது காஷ்மீர்,மணிப்பூர் தேசிய இனங்களின் மீது தான் அருவருப்பான ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. அது அளவிலும் சரி தன்மையிலும் சரி நம் மீது செலுத்தப்படுவதில்லை என்பதே உண்மை
இந்திய கட்டமைப்பு புரட்சிகரமானதா ! என்ன சொல்கிறீர்கள் ?
இங்கு ஒடுக்கும் தனி தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களும் இந்து தேசியத்தால் தான் ஒடுக்கப்படுகின்றன, அதில் சில தேசிய இனங்கள் பல்வேறு சிறப்பு காரணங்களால் அதிகமான ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றன.இந்த ஒடுக்குமுறைக்குள்ளியிலிருந்து தேசிய இனங்கள் அனைத்தும் விடுதலை பெற வேண்டுமானால் ஒடுக்குமுறையாளனான இருக்கும், அனைத்து மக்களுக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்திய தேதியத்துக்கு எதிராக தமக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனி ஒரு தேசிய இனம் மட்டும் இதை எதிர்த்து போராடி விடுதலை பெற முடியாது. இதற்கான உதாரணம் தான் காஷ்மீரும்,வடகிழக்கு மாநிலங்களும்.
இரண்டாவதாக இன்றைய உலகமய சூழலில்,ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒரு தேசிய இனம்,எண்ணிக்கையில் எவ்வளவு பலம் வாய்ந்த இனமாக இருப்பினும் மற்ற தேசிய இனங்களிடமிருந்து தனித்து,விலகி நின்று விடுதலை பெறுவது சாத்தியமற்றது.ஏகாதிபத்தியத்தின் உதவியால் தான் பல்வேறு தேசிய இனங்கள் ‘விடுதலை’ பெற்றுள்ளன. இது போன்ற நாடுகள் தனியாக செல்வதில் ஏகாதிபத்திய நலன்கள் அடங்கியிருப்பதே ஏகாதிபத்தியங்கள் அவற்றை ஆதரிப்பதற்கு காரணம். கிழக்கு திமோர் ஆகட்டும்,செக் மர்றும் ஸ்லோவாக்கியா,செர்பியா மற்றும் செசன்யாவாகட்டும் பிரிந்து சென்ற எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் ஏகாதிபத்திய அடியாட்களாகத் தான் இருக்கிறார்கள்.அந்த நாடு ஏகாதிபத்தியத்தியங்களுக்கு புழக்கடையாகத் தான் விளங்குமே அன்றி சுதந்திர தேசிய அரசாக என்றுமே இருக்க முடியாது. ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை பெற்ற ஒரு நாடாவது இன்று உலகில் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஒரு தேசிய இனத்தின் போராட்டத்திற்கு வழிகாட்டும் தத்துவமாக இன்று ‘மார்க்சியம்’ மட்டுமே இருக்க முடியும். இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் தேசிய போராட்டம் என்பது வர்க்க உள்ளடக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்,தேசிய இயக்கத்திற்கு கூட வர்க்க கண்ணோட்டம் என்பது தான் முதன்மையானதாக இருக்க வேண்டும்.தேசிய சூழல்,சர்வதேச சூழல் ஆகியவற்றின் ‘எதார்த்தத்தை’ கணக்கில் கொள்ளாத போராட்டம் வெற்றி பெற முடியாது.
அந்த வகையில் இந்திய தேசியத்தை நாம் முறியடிக்க வேண்டுமானால், நம்மைப் போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தேசிய இனங்களுடனும் ஐக்கியப்படுவது ஒன்றே சாத்தியம். இதற்கு மாற்றான வழிமுறை இல்லை என்பதே எமது கருத்து.
நாம் சமமான ஒடுக்கு முறை நிலவுகிறது என்று கூறவில்லையே. ஒடுக்குமுறையில் பாராபட்சம் உள்ளது என்று தான் கூறுகிறோம், அதற்கு காரணம் தேசிய இனங்களிடையே பகைமையையும், வெறுப்பையும், முரண்பாட்டையும்,மோதலையும் உண்டாக்கும் நோக்கம் இந்திய ஆளும் கும்பலுக்கு உள்ளது என்று தான் கூறுகிறோம்.
நாம் அவ்வாறு கூறவில்லை. அனைத்து தேசிய இனங்களும் சம அளவில் தான் ஒடுக்கப்படுகின்றன என்று நாம் கூறவில்லை.அவற்றில் வேறுபாடு உண்டு என்று தான் கூறுகிறோம். எமது கூற்றுக்கு தவறாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.
இதற்கான பதிலும் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது.தமிழினத்தின் மீதான அதிகப்பட்ச ஒடுக்குதலுக்கு சிறப்பான காரணங்கள் உண்டு என்று முன்னரே கூறியுள்ளோம்.அதன் காரணமாகத்தான் நமக்கு ஆதரவாக நிற்பதில்லை. இதையே ஏன் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக நிற்பதில்லை என்று நீங்கள் கேட்பதில்லை, அப்படிக் கேட்டுப்பாருங்களேன்.
நீங்கள் குறிப்பிடும் மாநிலங்களில் எல்லாம் போராட்டங்களை அந்த தேசிய இங்களின் மக்கள் தான் முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பகுதிகளின் தேசிய எழுச்சிக்கு சிறப்பு காரணங்கள் உண்டு.அவையெல்லாம் தனிப்பிரதேசங்களாக இருந்து வெள்ளையனால் காலனியாக்கப்பட்ட பொழுதே அங்கெல்லாம் முதலாளிய கூறுகள் வளரத் துவங்கின.பார்ப்பனிய நிலப்பிரபித்துவ உறவுகள் தமிழகத்திலோ,கேரளாவிலோ இருந்ததை போல அங்கு இருக்கவில்லை.போலி சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவால் கைப்பற்றப்பட்ட அந்த பகுதிகளில் தேசிய இயக்கங்கள் வளர்ந்தன.இந்தியா தமது தேசம் அல்ல என்பது அனைவரிடமும் ஆழப்பதிந்திருந்தது.காஷ்மீரோ துவக்கத்திலிருந்தே தனி நாடாக தான் இருக்கிறது. இந்தியா அதை அபகரித்து திருடிக்கொண்டது. ஆனால் தமிழகத்தில் அதுவா நிலைமை ? இங்கும் சிறப்பு காரணங்கள் இருந்தன எனினும் அது காஷ்மீர்,வடகிழக்குடன் ஒப்பிடத்தக்கது அல்ல. இங்கு உருவானது பார்ப்பனீயத்திற்கு எதிரான நாத்திக இயக்கம், ஆனால் பின்னர் அது இந்திய தேசிய சாக்கடையில் அன்ணாவின் பிழைப்புவாதத்தால் கலந்துவிடப்பட்டது.மக்கள் இங்கு அரசியல் படுத்தப்படவில்லை,அவ்வாறு அரசியல் மயப்பட்டிருந்தால் அண்ணா பிழைப்புவாதி ஆகியிருந்தாலும் மக்கள் போராட்டங்களை அடுத்தக்கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காட்டிக்கொடுத்து ஓட்டம் பிடித்த அண்ணாவின் மரியாதை அன்றைக்கே காற்றில் பறந்திருக்கும். மணிப்பூரில் எந்த தலைவனும் போராட்டத்திற்கு துரோகம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அங்கு மக்கள் தான் போராட்டங்களை வழி நடத்துகிறார்கள். காக்ஷ்மீரில் துரோகிகள் உருவானாலும், அதையும் மீறி அவர்களின் போராட்டங்கள் நடக்கின்றன. எனவே தமிழகத்திற்கும் சிறப்பு நிலமை இருக்கிறது தான் ஆனால் அது வேறுபட்ட சிரப்பு நிலைமையாக இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும்
கர்நாடகாவில் தேசிய இன உரிமைக்கான போர்க் குரல் எழுந்துள்ளது என்று கூறியுள்ளீர்கள்.என்ன தேசிய இன உரிமைக்கான போர்க் குரல் எழுந்துள்ளது என்பதை சற்று விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
அதிரடியானுக்கு நீங்கள் அளித்திருப்பது நிதானமான பதில்கள்.
நான் முன்னர் ‘மவோ’ என்கிற தமிழ்தேசியவாதிக்கு பல
கேள்விகளை முன் வைத்திருந்தேன், அவர் இன்று வரை அவற்றுக்கு
பதிலளிக்கவில்லை, இனியும் பதில் தரப்போவதில்லை என்று
கருதுவதால் அவரை இனி நான் ‘ஓடுகாலி’ என்றே குறிப்பிடப்போகிறேன்.
மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன். நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள். என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நாளைய ஈழத்திற்கு நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ பெரியாரிசமோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? முதலில் மக்கள் அங்கு உயிரோடு இருக்கவேண்டும் அப்போதுதான் தாங்கள் சொல்லும் ரசம் சாம்பார் ஈஸ்டுகளை கேட்க அங்கு இருப்பார்கள்! தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்..
உங்களை யார் நண்பரே உண்ணாவிரதம் இருக்கச்சொன்னது ? புலிகள் ஆயுதம் தாங்கி தானே போராடினார்கள் ?
தோழர் கொசுக்கடி வளவள கொழ கொழ என்று பேசி என்ன பிரயோசனம்..வலிந்தவன் வாழ்வான் இது உலக நியதி…தற்போது விடுதலைபுலிகள் பற்றி இழுத்து உள்ளீர்கள்.. சிங்களன் முற்று முழுதாக மரபுவழி போருக்கே வரவில்லை அவன் நம்பியிருந்தது இஸ்ரேலிடம் இருந்து வாங்கிய கிபீர் விமானங்களைத்தான்… அதனால் தான் சொல்கிறோம் தோழரெ நாம் அங்கு செல்வோம்! ஆயுத பயிற்சிக்கு நீங்கள் உங்கள் கம்னியுச நாடுகளில் ஒன்றில் ஏற்பாடு செய்யவும்.. நாம் உங்களுடைய விருப்பப்டி கம்னியுச மார்க்கசிய சோசலிச ஆட்சியை நிறுவுவோம்..முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் அந்த மக்களும் அவர்களை விடுவித்தால் போதும் நீங்கள் கைகாட்டும் எந்த ஆட்சிமுறையும் ஏற்று கொள்வார்கள்..சொல்லபோனால் இந்த நேரத்தில் விடுவித்தீர்கள் என்றால் கை எடுத்து கும்பிடுவார்கள்.. மற்றது விடுதலை புலிகள் விடுத்த தவறை நாமும் செய்யகூடாது தோழரே! முழுமையாக ஆயுதத்தோடு செல்லவேண்டும்..முதலில் கீழ் கண்ட படத்தில் உள்ள
விமான எதிர்ப்பு பீரங்கிகளை கையாள்வதற்கு எதாவது ஒரு கம்னியுச நாட்டில் ஏற்பாடு செய்யவும்
தமிழ்தேசியன்….புலிகளின் பாதை சரியானதா?புலிகளுக்கு எதிராக களத்தில் நின்ற நாடுகளெவை? அவற்றின் நோக்கம் என்ன? இங்குள்ள தமிழின வாதிகளால் புலிகள் அடைந்த நன்மை? இதைப்பற்றி முதளில் நன்கு படியுங்கள், சும்மா ஆயுதம்..ஆயுதம்னு…. நாலு பேரோ.. நானூறு பேரோ..ஆயுதம் தூக்கி எந்த ஒரு நாடும் விடுதலை அடைந்ததாக வரலாறு இல்லை. அந்த நாட்டு மக்கள்தான் ஒரு சரியான் பாதையை தெரிவு செய்து போராடி விடுதலையைஅடைய வேன்டும் நாம் அவர்கலுக்கு வழி காட்டலாம் ,[அதை புலிகளைப்போல் நிராகரித்தால் நாம்பொருப்பல்ல]
//
ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும்
//
இலங்கையில் தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கியது சீனா!!
ஐநா சபையில் இலங்கையை காப்பாற்ற நினைப்பது சீனா!!
நீங்க சீனாவிடம் ஆயுத பயிற்சி எடுக்க போகிறிர்களா?
காமெடி தான்!!!!
அப்படியே எடுத்தாலும் உங்களை இலங்கையில் வைத்து கொன்று விடும் சீனா!!
நீங்க எல்லாத்துக்கும் தயாரக இருப்பது போல பேசுறீங்களே. உங்களை பார்த்த எனக்கு பயமா இருக்கு தமிழ்தேசியன்.!!
தோழர்களின் பதில் சிறப்பு. அதிரடியானை நழுவவிடாதீர்கள்.
அதிரடியானைத் தவிர அவருக்கு ஆதரவாக ஒரு தமிழ் தேசியவாதி கூட வரவில்லையா ? ஆமாம் இந்த இசுடாலின் குரு எங்கே போனார் ஒடினார் ஓடினார் உலகின் எல்லைக்கே ஓடிவிட்டாரா ? இது தான் இவர்களுடைய தமிழ் வீரத்தின் யோக்கியதை !!
அதிரடியான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான் பதிலளிப்பாரா ? உடனுக்குடன் பதிலளித்தால் தானே நாங்கெல்லாம் படிக்க முடியும். இல்லையினா சும்மா வந்து வந்து பாத்துட்டு போர மாரி இருக்கு. வேட்ல வேற ரொம்ப கொசுக்கடிக்குது !!
இது என்ன ஒரே காமெடியா இருக்கு அதிரடியான் வேறு காணவில்லை. என்ன தான்யா நடக்குது இங்க ??
நீங்க பேசுறதை பர்த்தா போதையில உளறுவது போல இருக்கு. என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா ? இது உங்கள் அரசியல் உங்களுக்கு ஏற்றியுள்ள மயக்கமா.
இது நாள் வரை கீழ்க்கண்டவாறு தான் ம.க.இ.க.வின் உண்மையான நிலைப்பாடு இருப்பதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் (Races) ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்”
அதாவது, அவர்கள் தற்பொழுது குறிப்பிட்டு வருவதைப் போல ”தமிழர்”, ”கன்னடர்” என்பதெல்லாம் கூட இனவெறி இவர்கள் வரையறுப்பதில்லை. ”ஆரியர்”-”திராவிடர்” என்பது தான் இனவெறி என்று அவர்கள் வரையறுத்திருக்கின்றனர்.
ஆரியர்களை இடித்துரைத்தால் பார்ப்பனர்களுக்குத்தானே வலிக்க வேண்டும். ம.க.இ.க.விற்கு ஏன் வலிக்கிறது என்று தான் புரியவில்லை.
எனவே ”ஆரியம் – திராவிடம் எல்லாம் பேசாதீங்க” என்று முழக்கமிடும் ம.க.இ.க. தற்பொழுது கீழ்க்கண்டவாறும் எழுதி தனது இரட்டை வேடத்தை தற்பொழுது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
//////////”இந்தியாவை பற்றியும், பார்ப்பனீயத்தை பற்றியும், தமிழ் ஆரிய போராட்டம் பற்றியும் நாம் நன்கு அறிவோம். இது இந்து,இந்தி,இந்தியா என்கிற பார்ப்பனிய உள்ளடக்கத்துடன் கட்டியெழுப்பபபட்டிருக்கும் ‘இந்து தேசியம்’என்பதையும் அறிவோம். எனவே தமிழுக்கும் ஆரியத்துக்குமான போராட்டத்தை நாம் எங்கேயும் எப்போதுமே மறுத்ததில்லை, அதை எதார்த்தமாக உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் ஏற்கிறோம். ”//////////
“ஆரிய திராவிடமெல்லாம் என்னைக்கோ முடிஞ்சி போச்சு.. இப்ப ஏன் அவா அதப் பேசணும்” என்கிற திருவல்லிக்கேணி பார்ப்பானைப் போலவே ம.க.இ.க.வினரும் எழுதியிருப்பதை எண்ணி நாம் நகைக்கவே முடிகிறது.
ஏன் இந்த இரட்டை வேடம் என்று தாம் நாம் உரத்துக் கேள்வி கேட்கிறோம்!
இன்றைக்கு திராவிடம் என்கிற கருத்தாக்கமே தி.மு.க வில் மட்டும் தான் இருக்கிறது அதிரடியான். மேலும் நீங்களே திராவிடம் என்பதை மறுக்கக்கூடியவர்கள் தானே.திராவிடம் என்பது எங்குமே இல்லை,மாறாக பார்ப்பனியம் தான் இருக்கிறது.எனவே திராவிடத்தை மறுக்க ஒன்றும் அவசியமில்லை.
ஆரியப் பார்ப்பனியம் என்பதை நாம் எங்கேயாவது மறுத்திருக்கிறோமா ?
எங்கேயும் மறுக்கவில்லை.இதுபற்றி 2004ல் ஒரு சிறப்பு வெளியீடை கூட ம.க.இ.க கொண்டுவந்துள்ளது.அதன் பெயர் ‘ஆரியப் பார்ப்பனிய சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்’ வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.
நாங்கள் ஆரியத்தையோ,பார்ப்பனியத்தையோ ஏற்காமல் இல்லை. நாங்கள் எதை ஏற்கவில்லை என்றால், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா உதவி செய்ததற்கு ‘ஆரியம்’ தான் காரணம் என்கிற காமெடியை தான் நாங்கள் ஏற்கவில்லை. இந்த முட்டாள் தனத்தை நாங்கள் மட்டுமல்ல புலிகள் கூட ஏற்க மாட்டார்கள்.
பார்ப்பனியம் என்று சொன்னால் எங்களுக்கு ஒன்றும் வலிக்காது, பார்ப்பனியத்தின் இளைய பங்காளியான ‘தமிழ் பார்ப்பனீயத்திற்கு’ தான் வலிக்கும்.
எல்லாம் இருக்கட்டும் நாங்கள் கேட்டிருந்த பல்வேறு கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை பதிலளிக்காமல் புதிது புதிதாக சொக்கனைப் போல கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன ? புத்திசாலித்தனமா!!
உண்மைதான், அதிரடியான் சர்வதேசவாதிகளின் பல்வேறு
கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை.
நான் கூட தான் இங்க ரெண்டு மூணு கேள்வி கேட்டேன்.. அதுக்கும் உங்க சர்வதேசவாதிகள் பதில் சொல்லவே இல்லை.!!!
உங்கள் கேள்விகளுக்கு சர்வதேசவாதிகள் தான் பதிலளிக்க வேண்டுமா, நாங்களெல்லாம் சொல்லக்கூடாதா ? உங்கள் கேள்விகள் என்னென்ன என்பதை இங்கு அடுக்குங்கள் அதற்கு பதில் சொல்கிறேன்.
பதில் சோழ தெரிந்தவனுக்கு நான் கேட்ட கேள்வியை தேடி கண்டு பிடிக்க தெரியாது. போய் தேடுங்க
பதில் சொல்ல தெரிந்தவனுக்கு நான் கேட்ட கேள்வியை தேடி கண்டு பிடிக்க தெரியாது. போய் தேடுங்க
உங்கள் கேள்விகளை எல்லாம் தேடி அத்ற்கு நான் பதில் தரவேண்டுமா ? அது இந்த ஜன்மத்தில் நடக்கவே நடக்காது. நான் எவ்வளவு பெரிய சோம்பேறின்னு உங்களுக்கு தெரியல. தெரிஞ்சிருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டீங்க. நீங்களும் என்னை மாதிரி சோம்பேறித்தனப்படாம உங்கள் கேள்விகளை கொஞ்சம் சொல்றீங்களா.
நான் எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். என்னடா உங்களுக்கு இன்னும் கோபம் வரலையேன்னு பார்த்தேன் வந்துட்டுது. உங்கள் குடுமி தெரியுதுங்கோன்னா கொஞ்சம் மறைச்சுக்கிடறேளா.
1. https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-336
2. https://vrinternationalists.wordpress.com/2009/09/15/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/#comment-223
அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்…
கணினியில் அமர்வதற்கேற்ப நேரமும், சூழ்நிலையும் இல்லாமைக்கு வருந்துகிறேன். பதில் அளிக்காமல் எங்கும் ஓடி விட மாட்டேன். எனது மின்னஞ்சலைத் தொடர்பு கொண்டு என்னை நினைவு படுத்துங்கள். ஆனால், பதிலளிப்பதற்கு நேரமின்றி வேறு வேலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த கால தாமதங்கள். அனைவரும் பொறுத்தருளவும், மன்னிக்கவும் வேண்டுகிறேன்..
அன்புடன்,
அதிரடியான்.
சர்வதேசியவாதிகளுக்கு பதில்….
தமிழர்கள் மீது தில்லிக்காரர்கள் செலுத்தும் ஒடுக்குமுறை சிறப்புக் காரணங்களைக் கொண்டது என்று தங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உங்களின் பதில் மூலம் அறிந்தேன். வரலாற்று ரீதியாக தமிழினம் ஆரிய இந்திய அரசால் ஒடுக்கப்படுதற்கு சிறப்புக் காரணங்கள் உண்டு என்பதற்கு, சில காரணங்களை நீங்களே பட்டியலிட்டும் காட்டியுள்ளீர்கள். நன்று.
அதே போல, தமிழுக்கும் ஆரியத்திற்கும் இடையிலான பகைமையை நாங்கள் மறுப்பதில்லை என்றும் நீங்கள் கூறியிருப்பதன் மூலம் ஆரியத்தின் இன்றைய வடிவமான இந்திய அரசுக்கும், தமிழினத்திற்கும் முரண்பாடும் பகைமையும் இருப்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். சரி.
ஆனால், இவற்றையெல்லாம், உணர்ந்த உங்களால், ”வரலாற்று ரீதியான சிறப்பு காரணங்கள் எதுவும் இன்றி ‘தமிழ் இனம் என்பதனாலேயே’ நம் மீது இந்திய அரசின் பாசிச ஒடுக்குமுறை ஏவி விடப்படுகிறது என்ற பார்வை புரியவில்லை” என்று எப்படி வாய்க்கூசாமல் சொல்ல முடிகின்றது?
ஆயிரமாயிரமாண்டுகளாக தமிழினத்திற்கு எதிரியாகவே நின்று கொண்டிருக்கும் ஆரியத்தையும், அதன் இன்றைய அரசு – அரசியல் வடிவமே, இந்திய அரசு – இந்தியத் தேசியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தால் தான் இதில் தெளிவுபெற முடியும். இதில், தெளிவுபெற்றது போல் நடித்துக் கொண்டிருந்தால் இவையெல்லாம் புரியாது.
எப்படி சிங்களனுக்கு, தமிழர்களை ஒடுக்க ”தமிழன்“ என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே போதிய காரணமாக இருக்கின்றதோ, அதே போலத்தான் ஆரிய ”இந்திய”னுக்கும் ”தமிழர்” என்ற அடையாளமே அவாகளை ஒடுக்கத் தூண்டுகிற சிறப்புக் காரணமாக விளங்குகின்றது. ஏனெனில், இந்திய அரசு என்பது ஆரிய இனவெறி அரசு என்பதே எங்களது வரையரை. இது உங்களுக்கு தெரிந்திருந்தும், அது தெரியாதது போல பேசி நடிக்கீறீர்கள் என்று தான் நான் குற்றம் சாட்டுகின்றேன்.
மார்க்சியத்தை அறிவியலாக பார்க்காமல், அதனை ஒரு சூத்திரம்(Formula) போலவே பார்த்து வருகின்ற மடமைத்தனம் தான் உங்களைப் போன்ற பலரிடமும் உள்ளது. இதிலிருந்து பிறக்கும் பார்வை கோளாறு தான் இதற்குக் காரணம். அதனால் தான் எங்களது பார்வை புரியவில்லை என உங்களால் வாதிட முடிகிறது.
மார்க்சியத்தை இன்றைய சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், ”அது இவ்வாறு கூறுகின்றது, எனவே அதன்படி இப்படி இருக்க வேண்டும், இப்படி செயல்பட வேண்டும்” என்று சூத்திரத்தை கையாள்வது போல மார்க்சியத்தை பார்ப்பது தான் உங்களைப் போன்றோரின் ”புரியாமை”க்கான காரணம் என்று நான் உறுதியாக வரையறுக்கிறேன்.
“திராவிடம்” இன்று தி.மு.கவிடம் மட்டும் தான் உள்ளது என்கிறீர்கள். சரி. நாம் திராவிடத்தை ஆதரிக்கவில்லை என்பதும் சரி. ஆனால், ”ஆரியம் – திராவிடம்” என்று கூறுவதைக் கூட ”இனவெறி” என்று கூறுவது தானே உங்களது வழக்கமான பார்வை.
”இந்திய நாட்டின் பல்வேறு இனங்களும் ஒன்று கலந்து பல்வேறு இனக் கலாச்சாரங்களிடையே பரிவார்த்தனைகளும் கலப்புகளும் ஏற்பட்டு இன்று ஒன்றுகலந்த பின்னரும் இனவெறி (“ஆரிய“, “திராவிட”) வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான்” என்பது தானே உங்களது நிலைப்பாட்டின் சாரம். இதனை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.
கன்னடர், தெலுங்கர், தமிழர் என்று கூறுவதெல்லாம் கூட நேரடி இனவெறி என்று நீங்கள் வரையறுக்கவில்லை. மாறாக, எந்த ”“ஆரியம் – தமிழர்” ஆகியவற்றின் பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று கூறுகிறீர்களோ, அதே “ஆரிய – திராவிடர்” வாதங்களைத் தான், ம.க.இ.க.வினர் இனவாதம் என்று இடது கையால் தள்ளுகின்றனர் என்பதே உங்களை சுட்டெரிக்கும் உண்மை. இதனை மறைத்திடவே, தற்பொழுது, “ஆரிய தமிழ்” பகையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்றும் பசப்புகிறீர்கள்.
ஆரியம் இந்திய அரசை ஆள்கின்றது என்பதனை ஏற்கிறீர்களா? அல்லது அதெல்லாம் இன்றைக்கு கிடையாது என்கிறீர்களா?
“ஏற்கிறீர்கள்” என்றால், “ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்க்கு எதிராக நிற்கிறது” என்ற எங்களது கூற்றை எப்படி உங்களால் நகைக்க முடிகிறது?
“ஏற்கவில்லை” என்றால், ““ஆரியம்- தமிழர்” என்ற பகைமை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என்று எப்படி உங்களால் சொல்ல முடிகின்றது?
நாங்கள் கேட்பதெல்லாம் ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைக் காப்பாற்ற இந்த இரட்டை வேடம்? என்பதைத் தான்….
இந்திய நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறையின் வகை
—————————————————————
சர்வதேசியவாதிகள்: ////////////இந்த நாட்டில்(இந்தியா) ஒடுக்கும் தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தி தேசிய இனமும் கூட ஒடுக்கப்படுகிற இனம் தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவது இந்து தேசியமும், அதை கட்டியமைத்த பார்ப்பன பனியா கும்பல் தான். இந்தி தேசிய இனம் தான் ஒடுக்கும் இனம் எனில் அது எவ்வாறு என்று விளக்க முடியுமா?////////////
ஆரிய இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது நேரடியான பெருந்தேசிய இன ஒடுக்குமுறை வகை சார்ந்த ஒடுக்குமுறை அல்ல. மாறாக, இது கட்டமைப்பு ஒடுக்குமுறை எனப்படுகின்ற Structural Opression என்ற வகையிலான ஒடுக்குமுறையாகும். இதற்கு பின்புலமாக இந்தித் தேசிய இனம் உள்ளது என்பதே எமது வரையறுப்பு. குற்றச்சாட்டு.
அதாவது, ஒர் இனத்திற்கு கூடுதல் நலன் பயக்கக்கூடிய ஓர் அரசியலமைப்பைக் கொண்டு அதன் கீழ் வாழும் பல்வேறு தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தி ஒடுக்குகின்ற அரசின் கட்டமைப்புகளை கொண்டு நடைபெறும் ஒடுக்குமுறை இது.
இந்தியத் தேசிய அரசால், இந்தித் தேசிய இனம் ஒடுக்கப்படுவதென்பது இன ஒடுக்குமுறையை மையமாகக் கொண்ட ஒடுக்குமுறை வடிவம் அல்ல.
சிங்கள இனவெறி அரசு எப்படி ஈழத்தமிழர்களை ஒடுக்கிறதோ அதைப் போல, இந்திய அரசு இந்தித் தேசிய இனத்தை ஒடுக்குவதில்லை.
மாறாக, இந்தித் தேசிய இனத்திற்கு இந்தியத் தேசிய அரசு ஏற்படுத்துகின்ற ஒடுக்குமுறை என்பது ஒரு தேசிய முதலாளிய அரசு, அதன் இறையாண்மையின் கீழ் வாழ்கின்ற தம் மக்களுக்கு எதிராக தொடுக்கும் ஒடுக்குமுறை வகையைச் சேர்ந்தது இது. இதனை தேசிய இன ஒடுக்குமுறை என்று கூறுவதே முட்டாள்தனம் ஆகும்.
இந்தித் தேசிய இனத்தின் மொழியான ”இந்தி” இந்தியத் தேசிய அரசின் மொழியாக வழங்கப்பட்டு, அனைத்து தேசிய இனங்கள் மீதும் திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில், இந்தித் தேசிய இனத்திற்கு அது ஆதாயமானதாகும். இந்தி மொழியுடன் சமரசம் கொள்ளாத மற்ற தேசிய இனங்களுக்கு அது பாதகமானதாகும். இச்சூழலில், ”இந்தித் தேசிய இனமும் ஒடுக்கப்படுகின்றது” என்பது எங்காவது பொருந்துமா?
”இந்தித் தேசிய இனமும் இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்றது” என்ற இந்தக் கூற்றை, ”அமெரிக்க மக்கள் அந்நாட்டு முதலாளி அரசால் ஒடுக்கப்படுகின்றனர்” என்ற கூற்றுக்குத் தான் எடுத்துக்காட்டாக கூற முடியுமே தவிர, ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் ஒடுக்கப்படுவதைப் போலவே, இந்தித் தேசிய இனத்தையும் இந்திய அரசு ஒடுக்குகின்றது என்று கூற முடியாது. கூறவும் கூடாது.
இந்தித் தேசிய இனத்திற்கு இந்திய அரசு என்பது, அதன் தேசிய முதலாளிய அரசாகும். அதனால் இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தித் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை பொருளியல் ரீதியில் சுரண்டுகின்றன. ஒடுக்குகின்றன.
ஆனால், இந்தித் தேசிய இனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அயல் தேசிய இனத்தவர்களுக்கு இந்திய அரசு என்பது ஆதிக்க இந்தித் தேசிய இனத்தின் இனவெறி அரசாகும். இத்தேசிய இனங்கள் மீது இந்திய அரசு செலுத்தும் ஒடுக்குமுறை என்பது தமது இந்தி ஆதிக்கக் கட்டமைப்பின் கீழ்படியாத தேசிய இனங்களை மீதான இனவெறியில் பிறப்பதாகும். இந்த இனவெறியின் வழியே, கீழ்படியாத தேசிய இனங்கள் மீது இந்திய ஆளும் வர்க்கங்கள், அவர்தம் தாயகங்களைப் பறித்து தமது பொருளியல் சுரண்டலை விரிவுபடுத்துகின்றனர்.
இதிலிருந்து நாம் சொல்வதன் சாரம் இது தான்.
ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்துடன், கலந்து உருவான ”இந்தி” மொழி பேசுகின்ற மக்களுக்கு பெருமிதத்தையும், இறையாண்மையையும் வழங்கக்கூடிய ஆரிய இனவெறி நாடே இந்தியாவாகும். இந்தி தேசிய இனத்திற்கு ”இந்தியா” தேசிய அரசாகவும், மற்ற தேசிய இனங்களுக்கு ”இந்தியா” இந்தி ஆதிக்க இனவெறி அரசாகவும் விளங்குகின்றது. இந்தி இதன் தேசிய மொழியாக உள்ளது என்பதால் இங்குள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. இந்தியுடன் சமரசம் செய்து கொண்டோர் மட்டுமே தேசிய முதலாளிகளாக வெளிப்படுகி்ன்றனர். குஜராத், பீகார் உள்ளிட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மக்களும் அவர்தம் சொந்த மொழிகளை மறந்து இந்தித் தேசிய இனத்தோடு சங்கமித்து ஒற்றைத் தேசிய இனமாகவே வளர்ந்து வருகின்றனர். இவ்வாறு, வடநாட்டில் உள்ள பல்வேறு தேசிய இனத்தவர்களும் பெரும்பாலும் இந்தித் தேசிய இனத்துடன் இணக்கம் கொண்டே வாழ்கின்றனர். இவர்களுக்குள் தேசிய இனம் தொடர்பாக எவ்வித முரண்பாடுகளும் பெரிதாக இதுவரை எழுந்ததில்லை.
இவ்வாறு வடநாட்டு பெரும்பான்மையினராக வாழக்கூடிய இந்தி மொழி பேசும் மக்களினது கட்சிகளும், முதலாளிகளும் ”இந்தித் தேசிய இனம்” என்ற ஒரு ”மொசாக்” தேசிய இனமாக உருபெற்றிருக்கின்றனர். இது நேரடியான ஒரு பெருந்தேசிய இனம் இல்லையென்றாலும், இது இந்தியத் தேசியம் என்ற ஒடுக்குமுறை கருத்தியலை மேலும், வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மையமாகக் கொண்ட தேசிய இனங்களின் கூட்டாகும்.
இந்தித் தேசிய இனத்தின் மொழியாக விளங்கும் இந்தி மொழியே இந்தியத் தேசிய அரசின் ஆட்சி மொழியாக விளங்கி, அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகின்றது. இந்தித் தேசிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட மற்ற தேசிய இனங்களும் கூட இவ்வொடுக்குமுறை மைய முரண்பாடாக்கி, போராட்டங்களையோ, இயக்கங்களையோ கட்டியெழுப்பவில்லை.
மாறாக, ஆரிய மரபினத்திற்கு தொடர்பே இல்லாது விளங்குகின்ற காசுமீரி தேசிய இனத்தவர்கள், நாகர் மரபினத்தைச் சேர்ந்த நாகா தேசிய இனத்தவர்கள், மங்கோலிய மரபினத்தைச் சேர்ந்த அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாப் தேசிய இனத்தவர்கள், தமிழர் மரபினத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆகியோர் தான் ஆரிய இனவாத இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
ஆனால், இந்திய அரசின் இதே அளவு ஒடுக்குமுறையை உள்வாங்கும் கேரளா, ஆந்திரம், ராஜஸ்தான், மகாராட்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏன் இந்திய அரசுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக் குரல்களும், போராட்டங்களும் எழவில்லை என்பதை ம.க.இ.க.வினர் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?
அங்கெல்லாம் அம்மக்கள் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை உணர வேண்டிய தேவை ஏன் இதுவரை எழமாலிருக்கிறது? தமிழகத்தில் உள்ளது போலான, ”இந்திய அரசு நம் தேசிய இனத்திற்கு தொடர்பில்லாத அரசு” என்ற சிறு அளவிலான உணர்வு கூட அங்கே எழாமல், இன்னும் ”இந்தியத் தேசியக்” கட்சிகளின் பிடியில் இருக்கின்றனவே இது ஏன்?
ஓரளவு தேசிய இன உணர்வு எழுந்த காலகட்டத்தில், பெரியார் ”திராவிட நாடு” கேட்ட பொழுது கூட, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட தேசிய இனத்தவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் கண்டு நொந்த பிறகு தான் ”தனித் தமிழ்நாடு” தான் நமது இலக்கு தனது இறுதி கூட்டத்தில் கூட பெரியார் கூறினார். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
காசுமீர், மணிப்புரை போல் தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டத்தை முழு வீச்சில் தொடங்கி நடத்தப்பட்டு தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உழைக்கிறோம். போராடுகிறோம். இதே நேரத்தில், அயல் தேசிய இனங்கள் நம் தமிழ்த் தேசத்துடன் ஐக்கியப் படுவதற்கான சிறிய அளவிலான முயற்சிகளையும் எடுப்பதில்லை. ஆனால், இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் போக்கை உணராமல் இந்தியத் தேசிய அரசிற்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்நிலையில், நாம் கேரளாவுடனும், கர்நாடகவுடனும் தொடர்ந்து ஐக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாம்.
இந்த அயல் தேசிய இனத்தவர், எல்லோரும் தம் இனம் ஒடுக்கப்படுகின்றது என்று உணர்ந்து மெல்ல போராடுவதற்காக நாம் தான் முன்முயற்சி எடுக்க வேண்டுமாம். அதுவரை நாம் நம் தேசிய இன விடுதலைக்குப் போராடாமல், இந்தியத் தேசிய அரசின் ஒடுக்குமுறையில் வெந்து சாகவேண்டுமாம். இது தானே உங்களைப் போன்றோரின் விருப்பம். இந்த விருப்பத்தைக் கொண்டிருப்பதால் தான் நாம் உங்களை ”சீர்குலைவு” சக்திகள் என வரையறுக்கிறோம்…
மேலுள்ள கருத்தையும் கீழுள்ள கருத்தையும் விடுத்து நடுவில் உள்ளதை மட்டும்
எடுத்துக் கொண்டு அதையும் திரித்துக் கொண்டு வாதிடுவது எப்படி சரியாகும்
அதிரடியான் ?
நாங்கள் கூறுவது என்னவென்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.நம் நாட்டில்
பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன உண்மை தான். இந்த அனைத்து
தேசிய இனங்களையும் ஒடுக்குவது தனி ஒரு பெருந்தேசிய இனம் அல்ல.
மாறாக பார்ப்பன,பனியா,தரகு முதலாளிகள்,நிலப்பிரபுக்களின் நலனை காக்கும் மையப்படுத்தப்பட்ட அரசு தான் ஒடுக்குகிறது,அதாவது இந்திய ஆளும் வர்க்கம்
தான் ஒடுக்குகிறது. தேசிய இனங்களுக்கிடையே இந்த ஆளும் வர்க்கம் இரண்டு
காரணங்களுக்காக முரண்பாட்டையும்,பிரிவினையையும் தூண்டி விடுகிறது.
ஒன்று பல சிறப்பு காரணங்களால் துவக்கம் முதலே இந்திய அரசுக்கு எதிராக
தேசியப் போராட்டத்தை நடத்தி வரும் காஷ்மீரி, வடகிழக்கு பகுதி மக்களின்
போராட்டங்களை மழுங்கடிக்கவும், அவர்களை மற்ற இனங்களிடமிருந்து விலக்கி
அவர்கள் மீது கூடுதலான ஒடுக்குமுறையை ஏவவும் மற்ற இனங்களுக்கு சிறப்பு
சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்தி மற்ற தேசிய
இனங்களுடன் முரண்படவும் வைக்கின்றது.இரண்டு இந்த அரசு தீவிரமாக
அமுல்படுத்தி வரும் பொருளாதார கொள்கைகளான தனியார்மயம்,தாராளமயம்,
உலகமய கொள்கைகளுக்கு எதிராக எழும் போராட்டங்களை திசை திருப்பி விடுவதற்காகவும்,இனவாதமும்,தேசிய வெறியும் தூண்டி விடப்படுகிறது.
அதாவது நீங்கள் கூறியிருப்பதைப் போல சமகால சமூக அரசியல் பொருளாதாரச் பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகவே என்று புரிந்து
கொள்ளக்கூடாது, மாறாக திசை திருப்புவதற்காகவும் அவை பயன்படுத்தப்படுகின்றன
என்பது தான் சரி.
காவிரி,முல்லைப்பெரியாறு,பாலாற்று பிரச்சனைகளும்,(இதற்கு மட்டுமே என்று
புரிந்து கொள்ளாதீர்கள் இவை வேறு காரணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிரது)
அண்டை நாடுகளான பாகிஸ்தான்,சீனா மீதும் வெறுப்பை உண்டாக்குவதன் மூலம்
தேசிய வெறியை கிளப்பிவிட்டு இந்தியாவின் மீது தேசப்பற்றை வரவழைத்து
மையமான சமூக அரசியல் பொருளாதாரச் பிரச்சனைகளிலிருந்து மக்களைத்
திசைத் திருப்புகிறது இந்திய ஆளும் வர்க்கம்.
தமிழ் தேசியம் பேசுபவர்கள் கன்னடர்களையும், மலையாளிகளையும் பகையாளியாக
பார்க்கும் அளவிற்கு பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கத்தின் அரசியல்
பொருளாதார கொள்கைகளை மறந்து விட்டு, நீங்களும் அதற்கு பலியாகி மலையாள,
கன்னட உழைக்கும் மக்களையும் பகையாளியாகவே பர்ர்க்கிறீர்கள்.அதாவது இந்த
ஆளும் வர்க்கத்தின் இனவெறி வாதத்திற்கு நீங்களே பலியாகியுள்ளீர்கள் என்று
சொல்கிறோம். இவ்வாறு பிரிவினை தூண்டுதலினால் ஒட்டு மொத்த இந்தியாவின்
அனைத்து தேசியங்களை பகைக் கண் கொண்டு பார்ப்பது தான் அறிவீனம்.
இந்த கண்ணோட்டத்தின் விளைவாக எழும் உங்கள் தமிழ் தேசிய கோரிக்கைகளை
காஷ்மீர் வடகிழக்கு பகுதிகளின் கோரிக்கைகளோடு பொருத்திப் பார்க்க முடியாது.
தமிழ் ஆரியப் பகை இல்லை என்று நாங்கள் எங்கும் கூறவில்லை. மாறாக
இனவெறி வாதங்கள் தூண்டப்படுவது இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச்
சிக்கலிலிருந்து மக்களைத் திசைத் திருப்புவதற்காகத்தான் என்று கூறுகிறோம்.
எனவே இது தான் நாம் கூறுவது. நாம் ஒன்றைச்சொன்னால் நீங்கள் ஒன்றாக
புரிந்து கொள்ளாதீர்கள்.
இதன் பின் புலமாக இருப்பது இந்தி தேசிய இனம் இல்லை. பார்ப்பன-பனியா
கும்பல். இந்தியாவில் பார்ப்பன பனியா தரகு முதலாளித்துவ கும்பலின் அரசு தான்
ஒடுக்கப்படும் எல்லா தேசிய இனங்களுக்கும் எதிரி.இந்தி தேசிய இன மக்களும் பிற மக்களைப்போலவே தான் அனைத்து சமூக சிக்கல்களுக்கும் ஆட்படுகிறார்கள்.
தனியார்மய, தாராளமய,உலகமய கொள்கைகளால் இந்தியாவின் பிற பகுதி
மக்களைப் போலத் தான் அவர்களும் துன்பப்படுகிறார்கள். உலகமயமாக்கலால்
இந்தியா முழுவதும் தாற்போது லட்சக்கணக்கானவர்களின் வேலைகள் நாளும்
பறிபோய்க் கொண்டிகின்றது.அதில் இந்தி தேசிய மக்களுக்கு மட்டும் ஏதேனும்
சலுகைகள் உண்டா என்ன ? அவர்கள் இந்தி தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு
மட்டும் வேலை உத்திரவாதம் கிடைக்குமா என்ன ? இந்தியா முழுவதும்
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அதில் இந்தி தேசிய இன
விவசாயிகளும் தான் அடங்குவார்கள்.இந்தி மொழிக்கு கிடைத்துள்ள தகுதியை
வைத்து மட்டுமே அந்த இனத்தை ஆளுகிற, ஒடுக்குகிற தேசிய இனம் என்று
வரையறுக்க முடியாது.மொழி மட்டுமே அதற்கு ஒரு காரணியாக இருக்க முடியாது.
எனவே இந்திய அரசை வழி நடத்துவது, மற்ற இனங்களின் மீது வெறியை
தூண்டிவிடுவதும் இந்துதேசிய ஆளும் வர்க்கமே அன்றி இந்தி தேசிய இனம் அல்ல.
டெல்லியை போய் ஏகாதிபத்தியம் என்கிறீர்கள்.இதை விட காமெடி ஏதாவ்து இருக்க
முடியுமா ?
அதை ஒத்ததொரு கற்பனை புனைவு தான் இந்த இந்தி தேசிய இனம் பற்றியதும்.
இல்லை, இந்தி தேசிய மக்கள் தான் ஒடுக்குகிற பெருந்தேசிய இனம் என்றால்
அதற்கு சான்றுகள் தாருங்கள்.
சரியாக சொன்னீர்கள். அதே போல் சிங்கள இனவெறி அரசு எப்படி
ஈழதமிழரை ஒடுக்குகிறதோ அதைபோல் இந்திய அரசு இந்தி தேசியத்தை
மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஒடுக்குவதில்லை என்பதையும்
ஒப்புக்கொள்கிறீர்களா?ஈழத்தமிழர் அளவிற்கு இந்திய அரசால் இங்கே
தமிழினம் கூடஒடுக்கப்படுவதில்லை. இல்லையில்லை அப்படித்தான்
ஒடுக்குப்படுகிறதுஎன்று நீங்கள் கூறுவீர்களேயானால் எவ்வாறு என்பதை
கூறமுடியுமா?
நீங்களே ஒப்புகொள்ளும் அளவிற்கு பொருளாதார சுரண்டல் என்பது
உலகமயமாக்கல் சூழலில் தனியார்மயத்தாலும், தாராளமயத்தாலும்,
எல்லா தேசிய இனங்களும் இந்திய ஆளும் வர்க்க அரசால்
ஒடுக்கப்படுகின்றன.இதை தவிர்த்து (பொருளாதார சுரண்டல்),
இன ரீதியான ஒடுக்குமுறை என்பது இங்கிருக்கும் தமிழருக்கு
எவ்வாறு நேருகிறது என்பதையும் விளக்கவும். உடனே ஈழ
தமிழர் தமிழர் என்பதற்காகவே ஒடுக்கப்படுகிறார்கள் என்று
இலங்கைக்குத் தாவ வேண்டாம்.
அங்கே இன ஒடுக்குமுறை உள்ள அளவிற்கு இங்கே இந்தியா
தமிழ்நாட்டு தமிழர்கள் மீது குண்டுமழை பொழியவுமில்லை.
இங்கே யாரும் ஆயுந்தாங்கி அவர்களைப் போல் போராடவும்
இல்லை. ஈழத்தமிழரை தமிழக தமிழருடன் ஒப்பிடாதீர்கள்.
அவ்வாறு நீங்கள் ஒப்பிடுவது ஈழத்தமிழரின் போராட்டத்தை
கொச்சைப்படுத்துவதற்கு ஒப்பாகும்.
ஈழத்தமிழர் ஒடுக்குமுறையில் இந்தியாவின் பங்கு அதிகமாக
உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் அதன்
பிண்ணனி இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்
அன்றி வேரென்ன?? பொருளாதார நலனே இன ஒடுக்குமுறையை
ஏவுகிறது. மேலாதிக்க நலன் தான் இலங்கைக்கு உதவி செய்ய
வைக்கிறது.
பார்ப்பனீயம் தமிழை ஆரம்பம் முதலே ஒடுக்குகிறது என்று
மொழி ஒடுக்குமுறையை நீங்கள் கூறலாம். பார்பனீயம் தமிழை
மட்டுமல்ல சமஸ்கிரதத்தை தவிர்த்த அனைத்து
மொழிகளையுமே ஒடுக்குகிறது..
எந்த தேசிய இனமாக வெண்டுமானாலும் இருக்கட்டும், மற்ற
இனங்களை ஒடுக்கி அந்த இனம் ஆளுகின்ற இனமாக இருந்தாலும்
(உதாரணம் சிங்கள இனம்) அதனால் அந்த இனத்தின் உழைக்கும்
மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்கள் அப்போதும் ஏதுமற்ற
பாட்டாளிகள் தான். மாறாக தேசிய இனத்தின் நலன்கள் அனைத்தும்
அந்த இனத்தின் முதலாளிகளுக்குத் தான் போய்ச் சேருகின்றது.
எனவே தான் தேசியப் பிரச்சனையை புனிதப்படுத்தும் எந்த செயலையும்
நாம் அனுமதிக்க முடியாது என்றார் லெனின். நீங்களோ தமிழர்களின்
தேசிய இனப்பிர்ச்சனை தான் உலகத்திலேயே மிக முக்கியமான பிரச்சனை
என்பதைப் போல பேசுகிறீர்கள்.
தமிழ் தேசியர்களின் தனித்தமிழ் நாடு போராட்டம் என்பது வடகிழக்கு
பகுதிகள், காஷ்மீர் மக்களின் போராட்டங்களின் அளவிற்கு நிகரானது
என்று சொல்லவருவது நகைப்பு கலந்த வேதனை.அம்மக்களின் தேசிய
இன போராட்டம் என்பது ஆரம்பம் முதலே நடந்து வருகிறது.ஆனால்
தமிழ் நாட்டில் தமிழர்கள் இந்திய மாயையிலேயே தொடர்ந்து வாழ்ந்து
வருகின்றனர்.இங்கு பெரியாரின் நாத்திக இயக்கம்,பிறகு திமுக,இந்தி
எதிர்ப்பு போராட்டங்களால் தான் ஓரளவு இந்திய எதிர்ப்பு இருந்தது.
ஆதை மேலும் வளர்த்துச்சென்று மக்களுக்கு தலைமை தாங்க
வேண்டிய சக்திகள் பிழைப்புவாதிகளாகிப் போனார்கள். தற்போதோ
நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய உலகமயத்தின் கீழ்
தனித் தமிழ் நாடு மட்டுமல்ல எந்த நாட்டையும் தனியாகப்பெறுவது
சாத்தியமே அல்ல. தமிழர்களை காஷ்மீர் மக்களுடனும்,வடகிழக்கு
பகுதி மக்களுடனும் ஒப்பிடுவது தமிழ் தேசிய போராட்டத்தை
முன்னெடுக்கும் உங்களை மிகைபடுத்திக் கொள்வதோடு அவர்களின்
போராட்டங்களை சிறுமைப்படுத்துகிறது.
தனித்தமிழ்நாடு தான் இலக்கு என்று கூறிய பெரியார் தான்,
இங்குள்ள தமிழன் சாதியை விட்டு வெளியே வரமாட்டான்,
தற்போது தனித்தமிழ்நாடு சாத்தியமில்லை என்று உணர்ந்து
இந்திய தேசியத்தின் தேர்தலில் காமராசருக்கும்,அண்ணாவிற்கும்
ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்துவிட்டீர்களா
நேரடியான ஒடுக்குறைக்குள்ளான அவர்களின் இந்திய அரசுக்கு
எதிரான போராட்டம் என்பது அம்மக்களால் தன்னிச்சையாக
எழுந்தது.இன்றும் உணவுபூர்வமாக,நீரு பூத்த நெருப்பாக உள்ளது.
ஆனால் தமிழ் தேசியத்தை முன்னெடுப்பது என்பது செயற்கையாக
நடத்தப்படுகிறது. அந்த மக்களை பிளவு படுத்த அவர்களிடையே
சாதி (பார்ப்பனீயம்) இல்லை. ஆனால் தமிழனிடம் இருக்கும்
முதல் அடையாளமே அது தான்.
தொன்று தொட்டு தமிழ்நாட்டில் இந்திய அரசுக்கு எதிரான
போராட்டங்கள் எழவில்லை என்பதே உண்மை. எழும்
சாத்தியமும் சாதியே சகதியான தமிழ் நாட்டுக்கு இல்லை.
சாதியை எதிர்த்து குரல்கொடுத்த பெரியாரே தேசிய
கோரிக்கையை முன் மொழிந்தார்.ஆனால் மக்களின்
சாதி உணர்வு இன உணர்வை நோக்கி வராமல்
சாதிக்குள்ளேயே சிக்குண்டு போனது. இப்போதும் தமிழ்
தேசியம் பேசும் நீங்கள் சாதியை எதிர்த்து குரல்
கொடுக்காமல் போராடாமல் “சாதியை மறந்து தமிழினமே
ஒன்று சேருங்கள்” என்று தமிழக மக்களிடம் சாதியை
மறக்குமாறு மன்றாடுகிறீர்கள்.
தமிழ்தேசியவாதிகளின் சாதிக்கெதிரான போராட்டங்களைக்
கூறமுடியுமா? உண்டென்றால் அது பெரியாரின் வழிவந்த
இயக்கமே அன்றி திராவிடத்தை மறுத்த தமிழ்
தேசிவாதிகளுடையதல்ல!
நல்லது,
உங்களை யாரும் போராட வேண்டாம் என்று கூறவில்லை.
ஆனால் யதார்த்த்தை பார்க்க மறுத்து ஈழ போராட்ட்த்தின் ஈழ
தமிழருடன் உங்களையும் ஒப்பிட்டு தமிழ் நாட்டில் போராட
சாத்தியமில்லை என்று தான் சொல்கிறோம். தமிழனை
சுற்றியுள்ள சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாத
தமிழ் தேசியவாதிகள் அதை மறந்து தமிழனாய் ஒன்று பட
அறைகூவல் விடுகின்றீர்கள்.இதனால் தான் சாதியை
மறைத்து தேசிய கோரிக்கை எழுப்பும் தமிழ் தேசியத்தை
நாம் “தமிழ் பார்ப்பனீயம்” என்கிறோம்.
ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் ஒருங்கிணைவிற்கு தடை யாரால்?
————————————————————————————
சர்வதேசியவாதிகள் :
//////இந்திய கட்டமைப்பு புரட்சிகரமானதா ! என்ன சொல்கிறீர்கள் ?//////
தற்பொழுது உள்ள இந்தியக் கட்டமைப்பு புரட்சிகரமானது என்று நாம் கூறவில்லை.
தற்பொழுது கட்டியெழுப்பப்பட்டுள்ள, இந்தி ஆதிக்க பார்ப்பன பனியாக்களின் கட்டமைப்பான இந்தியக் கட்டமைப்பு, தகர்க்கப்பட்டட பின்னர், ”புரட்சிகரமான” ஒரு ”இந்தியா”வை உருவாக்க விரும்பும் தங்களைப் போன்றவர்களின் கனவை தான் நாங்கள் சந்தேகிக்கிறோம்…அது முடியாதெனவும் சொல்கின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியா என்ற பெயரில், தம் தேசிய இனத்தின் ஆதிக்கத்தை இழப்பதற்கு இந்திக்காரர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பது தான் உண்மை. ஒருவேளை இந்தித் தேசிய இனத்தின் “புரட்சிகர” பாட்டாளி வர்க்கத்தை ம.க.இ.க.வினர் தட்டி எழுப்பி, அப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியாவை படைப்போம்” என்று வாதிட்டாலும் அது நடைமுறைக்கு ஒவ்வொததாகவே காட்சியளிக்கிறது.
//////////////இந்திய தேசியத்தை நாம் முறியடிக்க வேண்டுமானால், நம்மைப் போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தேசிய இனங்களுடனும் ஐக்கியப்படுவது ஒன்றே சாத்தியம். இதற்கு மாற்றான வழிமுறை இல்லை என்பதே எமது கருத்து.//////////////
புரட்சியாளர் லெனின் தலைமையில் ரசியப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் இயங்கியக் கொண்டிருந்த போது, ரசியப் புரட்சி நடந்தவுடன், பின்லாந்து பிரிந்து போக விரும்பியது ஏன்?
அப்பொழுது கூட, ”பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உடைகின்றது, ஏகாதிபத்தியம் உங்களை ஏப்பம் விட்டு விடும், அதனால் பிரிநது போகாதீர்!” என்று புரட்சியாளர் லெனின் அப்பொழுது ம.க.இ.க.வைப் போல வறட்டுவாதம் பேசவில்லை.
மாறாக, ரசியப் பாட்டாளி வர்க்கத்தின் கீழ் இயங்க விரும்பாத அந்நாட்டை பிரிந்து செல்லுங்கள் என வழிவிட்டார். அப்பிரிவினையை ஆதரித்தார். இது தான் லெனின் வகுத்தளித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம். ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போக முடிவெடுத்தால், அதனை ஒடுக்கும் இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தன் நடைமுறையின் மூலம் வலுப்படுத்தினார் புரட்சியாளர் லெனின்.
ஆனால், தற்பொழுது ம.க.இ.க. போன்ற சக்திகள், ஏகாதிபத்தியத்தைக் காரணம் காட்டியும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு எதிரானது இது என்று சொல்லியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தமக்கென்று ஒரு தேசம் அமைத்துக் கொள்ள உள்ள தேசிய இனங்களுக்குள்ள பிறப்புரிமையை தடுக்கின்றனர். அவதூறு செய்கின்றனர். ஒடுக்குகின்ற இனத்தைக் கூட இனங்காண மறுக்கின்றனர்.
இந்தித் தேசிய இனத்துடனும், மற்ற அயல் தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசிய இனம் ஐக்கியம் பேண வேண்டும் என்று விரும்பினால், தமிழ்நாட்டைப் போல ஓரளவாவது தேசிய இன உரிமைகளை பேசக்கூடிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளை மற்ற தேசிய இனங்களில், ம.க.இ.க. போன்ற ”அகில இந்தியப் புரட்சி” கனவு காணும் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை யார் தடுத்தார்? ஏன் இதனை இவர்களால் செய்ய முடியவில்லை? உத்திரப்பிரதேசத்திலும், ஹரியானாவிலும் சென்று இந்தித் தேசிய இன மக்களிடம் பாட்டாளி வகுப்பு சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுங்கள். யார் தடுத்தது?
கடந்த மாதம் கூட, தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான ”தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க”த்தின் மாநாடு ஈரோட்டில் நடந்தது. அதில் கேரளாவிலிருந்து ”போராட்டம்”(ஸட்ரகல்) என்ற அமைப்பு, காநாடகவிலிருந்து ”கருநாடக ஜனபரவேதிகே”, மணிப்புரிலிருந்து ”மனாப் அதிகார் சுரக்ஷா ணமிதி”, நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர். கர்நாடக, கேரள அமைப்புகளுடன், அத்தேசிய இனத்தவருடனான நதிநீர் பங்கீட்டு சிக்கல்களில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், கூட அவ்வமைப்புகளின் ”தேசிய இன முன்னுரிமை”, ”மனித உரிமை” போன்ற தளங்களில் ஒன்றுபட்டு உழைத்திட தமிழ்த் தேசிய அமைப்புகள் தயாராகவே இருக்கின்றன.
1990களில் தமிழ்நாட்டில் ”தன்னுரிமை” முழக்கங்கள் எழுந்த போதும் அதன் பின்னர் நடந்த பல கூட்டங்களிலும், இவ்வாறு அண்டைத் தேசிய இனத்திலுள்ள போராட்ட இயக்கங்களை தமிழ்த் தேசிய அமைப்புகள் அங்கீகரித்து, அவற்றை அரவணத்துக் கொண்டே வந்திருக்கின்றன.
”அனைத்திந்தியப் புரட்சி” பேசுகின்ற ம.க.இ.க. போன்ற சீர்குலைவு சக்திகள், இது போன்ற தேசிய இனங்களுடனான குறைந்த பட்ச ஒருங்கிணைப்பு, குறைந்த பட்ச பொது வேலைத் திட்டம் என்பதைக் கூட வைக்காமல், அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு தம் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பியும், ”இனவாத” முத்திரை குத்தியும் தம் அணிகளை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்கின்றன.
/////////இந்த ஒடுக்குமுறைக்குள்ளியிலிருந்து தேசிய இனங்கள் அனைத்தும் விடுதலை பெற வேண்டுமானால் ஒடுக்குமுறையாளனான இருக்கும், அனைத்து மக்களுக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்திய தேதியத்துக்கு எதிராக தமக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனி ஒரு தேசிய இனம் மட்டும் இதை எதிர்த்து போராடி விடுதலை பெற முடியாது. இதற்கான உதாரணம் தான் காஷ்மீரும்,வடகிழக்கு மாநிலங்களும். //////////
தேசிய இனங்களிடையே பகைமையை உண்டாக்குவதும், வளர்த்து வருவதும் இந்திய அரசு தான் என்று யாருக்குத் தெரிந்திருக்கிறது? தமிழினம் போன்ற, அப்பகைமையால் பாதிப்புக்குள்ளாகும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.
ஆனால், இவற்றை உணராமல் இந்திய அரசின் இனவெறிக்கும், பிரித்தாளும் பகைமைக்கும் இரையாகி தம் தேசிய இன நலன்களைப் பேணுகின்ற அண்டைத் தேசிய இனங்களை நாம் கண்டிக்கவே கூடாது?
அப்படி கண்டித்தாலே அது ”இனவாதம்” என்றாகிவிடுமா? கன்னடர்களையும் மலையாளிகளையும் இந்திய அரசின் இனவெறிப் போக்கிற்கு பலியாகிவிடாதீர் என்று தானே கண்டிக்கிறோம். அதனை கூட கண்டித்தால் ”குறுந்தேசியஇனவெறி” என்று, இங்கிருந்து கொண்டு கூச்சலிடும் உங்களது வாதங்களை தான் நாம் சந்தேகிக்கிறோம். அது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானது என்று கூறுகிறோம்.
கேரளாவிலும், ஆந்திரத்திலும் இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் சூழ்ச்சிக்கு எதிராக இதுவரை எந்த சிறு குரல்களும் எழவில்லை? ஏன்? இவ்வாறு குரல்கள் எழுவதை யார் தடுத்தார்? ம.கஇ.க.வினர் சென்று முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொண்ட ”புரட்சிகர” கேரளப் பாட்டாளி வர்க்கத்தைத் தட்டி எழுப்பட்டுமே யார் தடுத்தது? இவற்றை செய்வதற்கான துணிவோ, முன்முயற்சியோ உங்களுக்கு இல்லை. மாறாக, தமிழ்த் தேசிய இன உரிமைக்குப் போராடுகின்ற அமைப்புகளை ”இனவாதிகள்” என்று அவதூறு செய்வதற்குத் தான் உங்களைப் போன்றோர்க்கு நேரமிருக்கிறது. அவ்வாறு கூறி, தம் சொந்த அணிகளை திருப்தி படுத்திக் கொண்டு சுயஇன்பம் காணவும் பிடித்திருக்கிறது.
அயல் தேசிய இனங்களில் ஏற்கெனவே உள்ள ”புரட்சிகர” அமைப்புகளையோ, கட்சிகளையோ, அரவணத்துக் கொள்வதற்கும், புதிய புரட்சிகர அமைப்புகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு வக்கில்லை, நேரமில்லை, மாறாக தமிழினத்தின் உரிமை பறிபோகிறதே என்று குரல் கொடுக்கும் தேசிய இன அமைப்புகள் மீது ”இனவாத” முத்திரை குத்துவதோடு உங்களது ”புரட்சிகர” பணி சுருங்கி விடுகிறதே… இது ஏன்..? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்?
சத்தீஸ்கர், ஆந்திரம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாவோயிஸ்டுகள், மக்கள் யுத்தக் குழுவினர் உள்ளிட்ட போராளி அமைப்புகளில் யாருடனாவது உங்களுக்கு தோழமை உண்டா? எல்லோரையும் சகட்டு மேனிக்கு ”விமர்சனம்” என்ற பெயரில் அவதூறு செய்து விட்டு இறுதியில் ”இந்தியப் புரட்சி” என்ற கனவுடன், தனிமைப்பட்டிருப்பது நீங்கள் தான். இது தான், நீங்களே சொல்லுகின்ற ”அனைத்திந்தியப் புரட்சி”யின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலும்.
தனித்து தேசிய இனங்கள் போராடி வெற்றி பெற முடியாது என்று சொல்லும் நீங்கள், முதலில் தமிழ்த் தேசிய இனத்துடன் போராட முன் வரும், புரட்சிகர அண்டைத் தேசிய இனப் பாட்டாளி வர்க்கங்களை அடையாளம் காட்டுங்கள். ”ஐக்கியத்தை” பற்றி சிறிதாவது சிந்திக்கலாம்.. அதை விட்டுவி்ட்டு, தமிழ்த் தேசிய அமைப்புகளை, ”குறுந்தேசியஇனவெறி”, ”இனவாதம்” என்றெல்லாம் கூறி இழிவுபடுத்தும், இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்பு போல நின்று கூச்சலிடாதீர்கள்…
////////ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை பெற்ற ஒரு நாடாவது இன்று உலகில் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.//////////
ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாத தேசிய இன விடுதலை கிடையாது என்று சொல்கின்ற நீங்கள், யார் சார்பாக இக்கருத்தை வைக்கிறீர்கள்? ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர் கொள்கின்ற வலிமை மிக்கப் போராட்டங்களைக் கட்டமைத்து விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எமது நோக்கமே அன்றி, ”ஏகாதிபத்தியம் தலையீடு செய்யும்” என்று பயந்து கொண்டு, பம்மிக் கொண்டு, மார்க்சியத்தின் பெயரைச் சொல்லி தேசிய இன விடுதலைப் போரை பின்னுக்குத் தள்ளி விடுவது அல்ல.
சர்வதேசியவாதிகள்:
/////////////////இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல.///////////////
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவும், பிற தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு செயல்பட்டு தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகிறது என்ற நாம் கூறினோம். அதற்கு பதிலாக நீங்கள் சொன்னது தான் மேற்கண்டது. ”இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல”….
”இது முழு உண்மை அல்ல” என்ற கூற்றின் மூலம், நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகின்றது என்பதை நீங்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதே போல், பிற தேசிய இனத்திற்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்பதையும் நீங்கள் ”உண்மையல்ல” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
வாய்ப்பு வசதிக் கருதி, எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் ”இது பொய்யுமல்ல” என்றும் கூறி மழுப்பியிருக்கிறீர்கள்.
அதே போல, அதாவது மற்ற தேசிய இனங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை. எனவே //////////////// இங்கு எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படாமல் இல்லை, அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன.//////////////// என்றும் கூறியிருக்கின்றீர்….
அதாவது உங்களது கூற்றுகளின் சாரம் கீழ்க்கண்டது தான் என வரையறுக்கிறேன்.
”இந்திய அரசு வேறு தேசிய இனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன”
இவ்வாறெனில், இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழினத்தை ஒடுக்கி வருவதற்குக் காரணம் அதன் ஆரிய இனச் சார்பு தான் என்கிறோம். ”நீங்கள் அதெல்லாம் கிடையாது” பொருளாதாரம் தான் காரணம் என்று வாதிடுகிறீர்.
பொருளாதார நோக்கம் தான் காரணம் என்றால் இந்திய அரசு இவ்வாறு பகைமையை உண்டாக்கி, அதன் ஆளும் வர்க்கங்கள் தொழி்ல் நடத்துவதற்குத் தேவையான அமைதியான நிலைமையை கெடுத்துக் கொள்ளாது. இதனை ஏற்கிறீரா? இல்லையா?
”காசுமீர், மணிப்புர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இந்தியப் பாசிச அரசு செலுத்துகின்ற ஆயுதந்தாங்கிய ஒடுக்குமுறைகளை விட, தமிழினம் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்று நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? எடுத்துக் காட்ட முடியுமா?
அங்கு நடைபெறுகின்ற தேசிய இனப் போராட்டங்களைப் போல தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டம் வீறு கொள்ள வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோமே தவிர, அங்கு நடைபெறுகின்ற ஒடுக்குமுறையைவிட தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுகின்றது என்பதனை நாம் எங்கேயும் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் இதனை திரித்து எழுத வேண்டியதன் நோக்கம் என்ன…?
முதலில்,
”அனைத்து தேசிய இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றது” என்று சொன்னீர்கள்,
”தமிழினத்திற்கு ஒடுக்குமுறையின் தன்மை அதிகம்” என்று சொன்னீர்கள்,
அதெல்லாம் கூறிய நீங்கள் இப்பொழுது என்னவென்றால், ”ஈழத்தமிழர்களைப் போல, காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதி தேசிய இனத்தவர்கள் போல தமிழர்கள் ஒடுக்கப்படவில்லை” என்கிறீர்கள்,
இவ்வாறு கூறுவதன் மூலம் இரண்டு விடயங்களை உங்களது எழுத்துகளிலிருந்து உணர முடிகின்றது.
ஒன்று, ”ஆயுதம் தாங்கி ஒடுக்கினால் மட்டும் தான் அது தேசிய இன ஒடுக்குமுறை, அங்கு மட்டும் தான் தேசிய இன விடுதலையை முன்னிறுத்தி போராட வேண்டும்….” என்று கூற முற்படுகிறீர்கள்..
இரண்டு, ”அவ்வாறு ஆயுதம் தாங்கிய ஒடுக்குமுறை தமிழகத்தில் இல்லாத காரணத்தினால், தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டம் தேவையற்றது, தமிழர்கள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை தான் நடத்த வேண்டும்” என்கிறீர்கள்…
அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே… அவாளுக்கு ஏன் நாடு வேணும்… நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது…..
இந்தி தேசிய இனம் ஒரு ஒடுக்குகிற தேசிய
இனமாக இல்லை என்பதை உங்களுக்கு முதலிலேயே
சொல்லியிருக்கிறோம், இருந்தும் நீங்கள் அதே பழைய
கண்ணோட்டத்திலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்தி மக்களாகட்டும்,பிகாரி மக்களாகட்டும்.அவர்கள்
அனைவரும் உழைக்கும் மக்கள்.மக்களை
புரட்சிகரமானவர்களாக மாற்றுவது தான் எமது நோக்கம்.
அதற்காக நாங்கள் இங்கிருந்து பிகாருக்கும் வட
இந்தியாவிற்கும் சென்று வகுப்பெடுக்க வேண்டும் என்று
நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். அந்த மாநிலங்களிலும்
புரட்சிகர சக்திகள் இருக்கிறார்கள்.அவர்களோடு நாம்
ஐக்கியத்தை கட்டுவோம் அது எமது பாடு.இந்தியாவின் கீழ்
உள்ள அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும்
களைந்தெறிய வேண்டுமானால் இந்தியாவின் உழைக்கும்
மக்களை அணி திரட்டுவதன் மூலம் தான் அது சாத்தியம்.
மாறாக நாங்கள் எல்லாம் புறநானூற்றுப் பெருமை வாய்ந்த
சங்கத்தமிழர்கள், நாங்கள் தனியாகத்தான் வாழ்வோம்
என்று நீங்கள் அடம் பிடிக்கலாம்,ஆனால் வரலாற்றை நாம்
ஆசைப்படுவது போல வளைத்துக்கொள்ள முடியாது.
ஆசைகளும்,கற்பனைகளும் வரலாற்றின் கால ஓட்டத்தில்
கரைந்து கானாமல் போய் விடும். காலத்தை எதார்த்தமாக
அனுகி,மிகையின்றி சாத்தியத்தை உள்வாங்கும் சக்திகளே
வரலாற்றை உருவாக்க முடியும்.
உண்மை தான், ஆனால் அதை தோழர் லெனின்
எப்போது செய்தார்? 1917 புரட்சிக்கு பிறகு.
ரஷ்யாவில் புரட்சிக்குப் பிறகு நடந்ததை சம்பந்தமே
இல்லாமல் இங்கு வைத்து ஒப்பிடுவது எப்படி சரியாகும் ?
இன்னும் இங்கு புரட்சியே நடக்கவில்லை என்பதை
உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தமிழ் தேசிய கனவில் நீங்கள் இருப்பீர்களேயானால்
உங்களை நீங்களே கிள்ளிக்கொள்ளுங்கள்.பிறகாவது
யதார்த்த உலகை கண்டு விவாதியுங்கள்.
இங்கு புரட்சி நடந்து முடிந்து ம.க.இ.க என்னவோ
யாரும் பிரிந்து போய்விடாதீர்கள் என்று அனைத்து
தேசிய இனங்களையும் கட்டிப்போட்டு கொல்லுவதைப்
போலவும் சித்தரிக்கிறீர்கள். அதற்கு தோழர் லெனினை
வேறு உதாரணம் காட்டுகிறீர்கள். இதற்கு என்ன பொருள் ?
ம.க.இ.க விற்கு மட்டும் தான் மார்க்ஸியம் தெரியுமா?
எனக்கும் தெரியுமே என்பதை காட்டுவதற்காகவே
சொல்வது போலிருக்கிறது. அதிலும் தப்புதப்பாக
சொல்லியிருக்கிறீர்கள்.பாசிச புலிகளை மார்க்சியவாதிகள்
என்ற கூறிய உங்களுடைய மார்க்சிய அறிவு அனைவரும்
அறிந்ததே.சரி அது போகட்டும் நாம் விசயத்திற்கு வருவோம்.
தோழர் லெனின் சொன்னதை எப்படி பார்க்க வேண்டும்
என்றால், நாளை இங்கு புதிய ஜனநாயகப் புரட்சி நடந்த
பிறகு தமிழ் மக்கள் அனைவரும் தனியாக பிரிந்து
செல்கிறோம் என்கிற கோரிக்கையை வைக்கும் போது
புதிய ஜனநாயக அரசு அதை அனுமதித்து அதற்கு வழிவிடும்,
மேலும் உதவிகள் செய்யும்.ஆனால், அப்போதும் உங்களைப்
போல நாலு பேர் இருப்பார்கள், அவர்கள் கேட்பதால் தனி
நாடு கிடைக்காது. காஷ்மீரி, மணிப்பூரிகளைப் போல
தமிழ் மக்கள் அனைவரும் கேட்கும் போது தான்,
அது தமிழ் தேசிய இனத்தின் ஒரு தீவிரமான
இனப்பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் தான் பிரிந்து
செல்வது அனுமதிக்கப்படும்.இதை இப்படி நேர் வழியில்
புரிந்து கொள்ளுங்கள்.
நம் நாட்டில் நிலவும் யதார்த்தமான பொருளாதார
சுரண்டல், வர்க்க விடுதலை,இன பிரச்சனைப் பற்றி
முதலில் தமிழ் தேசியவாதிகளுக்குத்தான்
வகுப்பெடுக்க வேண்டியுள்ளது.
மற்ற தேசிய இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த
வேண்டும் என்று நாங்கள் சொல்வது ஒடுக்குமுறைக்கு
உள்ளாகும் ஒரு இனம், இனப் பிரச்சனையை முன்
மொழிந்து தனி தேசியம் கோருபவர்களுக்காக இருந்தால்
அவர்களுக்கானது. தமிழ் தேசியவாதிகள் “தமிழினம்
ஒடுக்கப்படுகிறது. எனவே தனித்தமிழ்நாடு” என்று
தனியாக கூப்பாடு போடுவதால் இந்தியாவில் தேசிய
இனப்பிரச்சனைக்கான தீர்வாக சாத்தியமான அறிவியல்
பூர்மான மார்க்ஸிய வழியையே நாங்கள் கூறுகிறோம்.
இதுவே எங்கள் வேலையும் அல்ல.கொள்கையும்
அல்ல.எங்கள் நோக்கம் உழைக்கும் மக்களை
சுரண்டலிலிருந்து விடுவிக்கும் ஒரு புதிய ஜனநாயக
சமூகத்தை படைப்பது தான்.சாதிய கொடுமைகளிலிருந்து
தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்கும் சமூக விடுதலை,
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை. இதற்கு
நாங்கள் முன் மொழிவது தான் “புதிய ஜனநாயக சமூகம்”.
புதிய ஜனநாயக புரட்சியை சாத்தியமாக்குவதற்காக
மற்ற மாநிலங்களிலுள்ள நேர்மையான கம்யூனிஸ்ட்
கட்சிகளுடன் எமக்கு ஐக்கியம் உள்ளது. ஐக்கியம்
இல்லாத இடங்களில் புரட்சியை சாதிப்பதற்காக
ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்வது தான்
கம்யூனிஸ்டுகளாகிய எங்களின் கடமை.
நம் நாட்டில் புதிய ஜனநாயப் புரட்சியின் மூலம்
மட்டும் தான்,ஒடுக்குப்படும் தேசிய இங்களுக்கான
விடுதலை, நிலப்பிரபுத்துவத்திலிருந்து உழைக்கும்
மக்களின் வர்க்க விடுதலை, சாதிக்கெதிரான
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது போன்ற
அனைத்து அர்சியல்,சமூக,பொருளாதார
பிரச்சனைக்களையும் தீர்க்க முடியும்.
ஆகவே இதில் தேசிய இன விடுதலை என்பதும் ஒரு
அம்சமே அன்றி அதுவே பிரதானமானது அல்ல.
பல ஆண்டுகளாய் போராடிக்கொண்டிருக்கும் காஷ்மீர்,
வடகிழக்கு மாநில மக்களின் தேசியப் இனப் பிரச்சனைக்கு
தீர்வு என்பது தன்னிச்சையான இந்தியாவிற்கெதிரான
அவர்களின் போராட்டங்களினால் இதுவரை கிடைக்கவில்லை.
இனிமேலும் அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயாமல்
இருப்பார்களேயானால், இந்நாட்டு சூழலுக்கு பொருந்தக்கூடிய
புதிய ஜனநாயக புரட்சியை விடுத்து மற்ற தேசிய
இனங்களுடனான ஐக்கியத்தை கட்டியமைக்காமல்
போராடுகிறார்கள் என்றால் அவ்ர்களின் தேசிய
இனப்பிரச்சனை புரட்சி வரை தீர்வதற்கு சாத்தியமில்லை.
அவர்களுக்கு சொல்லும் அதே விடயத்தை தான் நாங்கள்
தமிழ் தேசியவாதிகளான உங்களுக்கும் சொல்கிறோம்.
உண்மையிலேயே தமிழ் தேசிய தாகம் தமிழ் நாட்டு
தமிழர்களின் ஒட்டு மொத்த தாகமாகவும் தனித்தமிழ்நாடு
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாகவும்
இருந்தால், அது இந்திய ஆளும்வர்க்க கட்டமைப்பை பல
தேசிய இனங்களின் கூட்டிணைவுடன் எதிர்க்கும்
கட்டமைப்பின் மூலமே சாத்தியம்.
நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தேசிய இனவிடுதலை
மட்டும் எங்களின் தலையாய கோரிக்கையன்று. நாங்கள்
உழைக்கும் மக்களின் சாதிக்கெதிரான,சுரண்டலுக்கெதிரான
விடுதலையை அடையும் உழைக்கும் மக்களின் வர்க்க
சர்வாதிகாரத்தை கட்டியமைக்க போராடுகிறோம். இதற்காக
மார்க்ஸிய வழியில் புதிய ஜனநாயக புரட்சியையே இதற்கு
தீர்வாக முன்வைக்கிறோம். இதில் தேசிய இனங்களின்
விடுதலையும் உள்ளடங்கியே உள்ளது. தனி தேசியம்
என்பது பெரும்பான்மை மக்களின் தேவையாக இருந்தால்,
அதுவும் புரட்சிக்கு பிறகே அது சாத்தியம்.இவ்வாறு தான்
ரஷ்ய புரட்சிக்கு பிறகு தோழர் லெனின் நீங்கள் மேற்க்கூறிய
காலத்தில் செய்தார்.
நாங்கள் இனவாதிகள் அல்ல,மார்க்சியவாதிகள்.
ஒரு மார்க்சியவாதியை மார்க்சிய கண்ணோடம் தான்
(வர்க்க கண்ணோடம்) வழி நடத்த வேண்டுமே அன்றி
இனவாத கண்ணோட்டம் வழி நடத்தக் கூடாது.எனவே
எமது கோரிக்கை மற்ற தேசி இனங்களிடமிருந்து பிரிந்து
செல்லும் தமிழ்தேசியம் அல்ல.
மாறாக புதிய ஜனநாயகப்புரட்சிக்கான வர்க்க சேர்க்கையே
ஆகும். நாம் இந்தியாவில் ஐக்கியத்தை முன் மொழிகிறோம்
எனில் அது புதிய ஜனநாயகப்புரட்சிக்காகத் தான்.
நாம் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறையை மட்டும்
காணவில்லை. இங்கு கொடூரமான பார்ப்பனீய சாதிய
ஒடுக்குமுறை நிலவுகிறது,தரகு முதலாளிகள்
நிலப்பிரபுக்களின் வர்க்க ஒடுக்குமுறை நிலவுகிறது.
இந்த ஒடுக்குமுறைகளுடன் இந்து தேசியத்தின் இன
ஒடுக்குமுறையும் நிலவுகிறது, அவ்வளவு தான்.
அதுவே முக்கிய ஒடுக்குமுறை என்று நாம் கருதவில்லை.
இந்த அனைத்து ஒடுக்கு முறைகளிலிருந்தும் உழைக்கும்
மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு
புதிய ஜனநாயகப்புரட்சி தான் தீர்வு என்பதை முன்
வைக்கிறோம்.மற்ற ஒடுக்குமுறைகளுடன் தேசிய
இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும் நாம் ஒரு
அம்சமா பார்க்கிறோமே அன்றி அதையே பிரதான
அம்சமாக பார்க்கவில்லை.அவ்வாறு நோக்குவதற்கு
அடிப்படையான சூழலும் இங்கு நிலவவில்லை.
புதிய ஜனநாயக சமூகத்தில் சாதி,வர்க்க
ஒடுக்குமுறைகளுடன் இன ஒடுக்குமுறைக்கும் முடிவு
கட்டப்படும்.
தோழர் லெனினை மேற்கோள் காட்டும் தமிழ்
தேசியவாதிகள்,தோழர் லெனினுடைய தேசிய
இனம் பற்றிய நூல்களை கொஞ்சமாவது வாசித்துப்பார்க்க
வேண்டும். அவ்வாறு வாசிப்பதன் மூலம் தேசிய இனம்
பற்றிய தமது பழைய மூட நம்பிக்கைகளிலிருந்து
கொஞ்சமாவது விடுதலை பெற்று வெளியில் வர
முயற்சிக்க வேண்டும்.
“உலகில் எல்லா இடங்களிலும் தமிழன் அடிவாங்கினான்
ஆனால் ஈழத்தில் மட்டும் திருப்பி அடித்தான்” என்று
புளங்காகித்து இங்கேயும் தமிழ் தேசியம் கோரும் தமிழ்
தேசியவாதிகளுக்கு இது இலங்கையல்ல! தெற்காசிய
ரவுடி இந்தியா! என்று புரியவைக்க எவ்வளவு மல்லுக்கட்ட
வேண்டியிருக்கிறது! தமிழ் தேசிய போதையில் இந்தியாவை
பற்றி சரியான பார்வையில்லை போலும்!
அதற்கு நாம் என்ன செய்ய ?
இதை நாங்கள் சொன்னால் மண்ணை வாரி இரைத்து
சாபம் இடாத குறையாக எங்களை சாடுகிறார்கள்
தமிழ் தேசியவாதிகள்.
இப்போதும் சொல்கிறோம், தமிழ் தேசியம் என்பது
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாக
இருக்கும் பட்சத்தில், அப்போதும் இந்தியாவிற்கெதிரான
பல தேசிய இனக்களினால் கட்டியமைக்கப்பட்ட மார்க்சிய
வழியிலான ஐக்கியத்தின் போராட்டமின்றி விடுதலை
சாத்தியமில்லை.ஆனால் இன்று யதார்தத்தில்
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாக
தமிழ் தேசியமா இருக்கிறது ? இல்லை! ஆனால்
ஈழ தமிழ் மக்களை பார்த்து அவர்களின் உண்மையான
உணர்வை பார்த்து தமிழ் தேசியவாதிகள் இந்தியாவிலும்
செயற்கையாக இவ்வுணர்வை ஏற்படுத்த முயன்றால்,
அவர்களுக்கு நாங்கள் சொல்வது இந்தியாவையும்
இலங்கையையும் ஒப்பிட்டு, ஈழமக்களின்
ஒடுக்குமுறையையும், தமிழ் நாட்டுத்தமிழர்களின்
ஒடுக்குறையையும் ஒப்பிட்டு பிறகு புலிகளையும்
பார்த்து இங்கிருக்கும் தமிழ்தேசியவாதிகளான நீங்கள்
சூடு போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அது என்றைக்குமே
சாத்தியமாகாது, கற்பனாவாதமாகவே கரைந்து போகும்.
இதை நாம் சொன்னால் உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்.
என்ன செய்வது நோயை முறிக்கும் மருந்தும் கற்பனையை
தகற்கும் உண்மையும் கசக்கத்தான் செய்யும். ஏற்பது
ஏற்காததும் உங்கள் விருப்பம். மற்றபடி எங்கள்
தோழர்களுக்கு போராட்டம் தான் மகிழ்ச்சி,
உங்களுக்கு முத்திரை குத்துவதால் மகிழ்ச்சியடைவது
எம்மைப் பொருத்தவரை கேவலமானது!
புலியிலிருந்து மாவோயிஸ்டுகள் வரை யாரையும்
விமர்சிக்க கூடாது என்கிறீர்கள்.அப்படி விமர்சிப்பதால்
தான் நாங்கள் தனிமைப்பட்டு போய்விட்டோம்
என்கிறீர்கள்,நல்லது நாங்கள் அப்படித்தான் விமர்சனம்
செய்கிறோம்,இனிமேலும் அப்படித்தான் விமர்சனம்
செய்வோம். அதன் காரணமாக நாங்கள் தனிமைப்பட்டால்
அது எங்களுடைய பிரச்சனை, அதனால் எங்களுக்குத்
தான் நட்டம், எனவே அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்,
எங்களுக்காக நீங்கள் ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்.
மாவோயிஸ்டுகளும் புலிகளும் செய்கிற தவறுகள் ஒன்றும்
சிறு பிள்ளைத்தனமானது அல்ல. அவர்களுடைய தவறுகள்
மக்களுடைய விடுதலையை தாமதப்படுத்துகிறது.
புரட்சியை பின்னுக்கு இழுக்கிறது. எனவே மக்களுக்கு எதிரான
தவறுகளை வேடிக்கை பார்ப்பது மக்களுக்கு செய்கின்ற
துரோகம்,அந்த தவறுக்கு துனை போகின்ற செயல் எனவே
நாங்கள் அதை கடுமையாகத் தான் விமர்சிப்போம்.
மாவோயிஸ்டுகளுடன் எமக்கு எத்தகைய ‘தோழமை’
இருக்கிறது என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
நாம் இன்றைய உலகில் அனைத்திலும் ஏகாதிபத்திய
தலையீடு என்கிற புற நிலை எதார்த்தத்தை உள்ளதை
தான் சொல்கிறோம். ‘விடுதலை’ என்கிர பெயரில்
பிரிந்து சென்ற அனைத்து நாடுகளும் ஏகாதிபத்திய
தலையீட்டின் காரணமாகத் தான் பிரிந்து சென்றுள்ளன.
தற்போது அவை அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு
அடிமை நாடுகளாகவே செயல்பட்டு வருகின்றன.
இல்லை ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை
அடைந்த நாடு உண்டு எனில் ஒன்றை சொல்லுங்களே
பார்ப்போம்.
ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர்
கொள்கின்ற போராட்டங்களா??? இதை ஈழத்தில்
புலிகள் செய்யவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு.
சரி உங்களை ஈழத்தில் உள்ள தமிழ் தேசிய
கோரிக்கையை முன்மொழிந்த தமிழ் தேசியவாதிகளோடு
ஒப்பிடுவது சற்று மிகை, எனவே இந்தியாவில்
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக புயலாக எழுந்த தமிழ்நாட்டு
தமிழ் தேசியவாதிகளான உங்களை கேட்கிறோம்.
பிறகு ஏன் நீங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை பற்றி
புலிகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை ?
இந்திய மேலாதிக்கத்துக்கும்,ஏகாதிபத்தியத்துக்கும்
நல்ல பிள்ளைகளாக தோப்புக்கரணம் போட்ட புலிகளை
ஏன் தடவிக் கொடுத்தீர்கள்? அது மட்டுமின்றி அவர்களை
மார்க்சியவாதிகள் என்று கூறி அவர்களின் செயலுக்கு
ஆதரவாக பிரச்சாரமும் செய்தீர்களே அது ஏன் ?
உங்களையும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்பதாலா ?
அமெரிக்கா தலையிடும், ஆப்பிரிக்கா தலையிடும்,
நார்வே தலையிடும், இந்தியா தலையிடும்,
ஈ,காக்கா தலையிடும் என்று ஏன் ஏகாபத்தியத்தையும்
அதன் ஏவல் நாய்களின் காலையும் சுற்றிக் கொண்டிருந்தீர்கள்.
அப்போது மட்டும் ஏகாதிபத்தியத்தை பணியவைக்கும்
போராளிகளுக்கு ஏகாதிபத்தியம் என்ற சொல்லே
நினைவில் இல்லையோ?
தனது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள,
அதற்கு எதிராக எழும் போராட்டங்களை திசை
திருப்புவதற்காகத் தான் ஆளும் வர்க்கம், தேசிய
இனங்களிடையே இனவெறி வாதத்தையும் தூண்டி
விடுகிறது என்றோம். இதன் காரணமாக ஆளும்
வர்க்கங்களின் தொழி்ல் அமைதி கெடும் எனில்
அதை தனது போலீசு, இராணுவத்தை வைத்து
ஒடுக்கி அமைதியை நிலை நாட்டும்.
இப்போதும் சொல்கிறோம், இந்து தேசியத்தின்
கீழ் அனைத்து தேசிய இனங்களும் மிக
மோசமாகத்தான் ஒடுக்கப்படுகின்றன.
ஆனால் அனைத்தும் சம அளவில்
ஒடுக்கப்படுவதில்லை,அதில் வேறுபாடு உள்ளது.
காஷ்மீர்,மணிப்பூர் வடகிழக்கு மக்கள் மற்றைய
மக்களை விட மிக மிக மோசமான முறையில்,
அருவறுப்பான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே அதிகமாக ஒடுக்கப்படுவது
அவர்கள் தான். அவர்கள் அளவுக்கு தமிழர்கள் மீதும்
ஒடுக்குமுறை செலுத்தப்படுகிறது எனில், அந்த
ஒடுக்குமுறையில் எல்லாம் செலுத்தப்படுகிறது
என்பதை விளக்கினீர்கள் என்றால் நாங்கள்
புரிந்து கொள்வோம்.
தமிழுக்கும் பார்ப்பனியத்துக்கும் பல காரணங்களால்
வரலாற்று ரீதியான பகை இருந்தது, அது இன்று வேறு
வகைகளில் நீடிக்கிரது என்று தான் கூறியிருந்தோம்.
சில காரணங்களால் சில விசயங்களில்
( காவிரி, மு.பெரியாறு,பாலாறு) தமிழ் இனத்திற்கு
இந்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்று தான்
கூறியிருந்தோம். அதை காஷ்மீர்,வடகிழக்கு மக்களுடன்
கற்பனையாக ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்.
அன்புள்ள தோழர்களுக்கு,
அதிரடியான் என்பவர் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை வெளியிடுகிறார். ம.க.இ.கவின் மேல் ஏதாவது விமரிசனங்களை அள்ளி வீசினால் பரபரப்பாக பலரும் படிப்பார்கள் என்று கீற்று தளமும் இதை உள்ளநோக்கத்தோடு வெளியிடுகிறது. எனவே இவருடன் விவாதிப்பது என்பது இவருக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்குவதாக கருதுகிறோம். இவர்களையெல்லாம் சட்டை செய்யாமல் புறக்கணிப்பதே சரியானது. பொதுவில் தமிழினவாதிகள் அனைவரும் தீவிரமான நடைமுறையில் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே கட்சி என்ற பெயரில் காலம் தள்ளுகின்றனர். புறநிலையாக ஈழம், காவிரி என்று ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டுமே இவர்கள் விழித்துக் கொண்டு ஏதாவது பேசி செய்து விட்டு தங்களது பலத்தை அதாவது பலவீனத்தை மிகையாக கற்பித்துக் கொள்கிறார்கள். மேலும் இவர்களுடன் நமது அமைப்புத் தோழர்கள் நேரடியாகவே பல வருடங்கள் பேசி எந்தப் பலனையும் கண்டதில்லை என்பதே அனுபவம். இவர்களை அற்பவாதிகளாக நினைத்து புறக்கணிப்பதே புத்திசாலித்தனமானது. நாம் புதியவர்களையும், இன்னும் புரட்சிகர அரசியலுக்கு அறிமுகமாகதவர்களையும் தேடிபிடித்து வென்றெடுப்பதற்கே இணையத்தை பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இதனால் தமிழினவாதிகளை விமரிசனம் செய்யக்கூடாது என்பதல்ல. அதை நூற்றுக்கணக்கான பிரச்சினைகளில் ஒன்றாக கருதி மட்டும் பார்க்க வேண்டும் என்கிறோம்.தற்போது அதிரடியானுக்கு வாய்ப்பு வழங்கினால் இவரைப்போல பல அட்டைக்கத்தி வீரர்கள் பலர் இருக்க்கஃகூடும். அவர்களும் இதை ஒருபாணியாக மேற்கொள்வார்கள். இதில் நேரத்தை விரையமாக்கவேண்டாம் என்பது எமது கருத்து.
Pingback: ஒடுகாலிகளுக்கு அங்கீகாரம் தர வேண்டுமா ?? « சர்வதேசியவாதிகள்
அன்புள்ள தோழர்களுக்கு,
அதிரடியான் என்பவர் பொய்களையும்,அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை கீற்று தளத்தில் வெளியிட்டு வந்தார். கீற்று தளமும் இதனை ஒரு உள்நோக்கத்துடனும்,வண்மத்துடனும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நாம் அவரை விவாதிக்க அழைப்பதன் மூலம் அவரை பொது தளத்தில் வைத்து அம்பலமாக்கலாம் என்று கருதி அழைத்தோம். இவருடனான விவாதத்தை தோழர்கள் கவனித்திருப்பீர்கள்.நமது பல்வேறு கேள்விகளுக்கும் தனது தரப்பிலிருந்து இவர் மழுப்பலான பதில்களையே தந்தார்.சிலவற்றை ‘கண்டுகொள்ளாமல்’ கடந்தும் சென்றார்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி,கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்.(அந்த அழகை பார்க்க வேண்டும் என்றால் இந்த விவாத சுட்டியில் சென்று அவருடைய விவாததின் தரத்தை காணுங்கள்-https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-404) போதை ஏறிய ஒரு மதவாதியை போன்று முரட்டுத்தனமான தமிழ்தேசிய போதையை ஏற்றிக் கொண்ட நபராக இருக்கும் இவரிடம் நாம் எவ்வளவு விளக்கம் கூறினாலும்,தெளிவு படுத்தினாலும் அது அவருடைய மண்டையில் நிச்சயமாக ஏறப்போவதில்லை.கருத்துக்களை நேர்மையாக அலசி ஆராயும் நாணயமும் இவரிடம் இல்லை.சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்.விவாதத்தில் இவருடைய தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எதுவும் இன்றி எனக்கும் மார்க்ஸியம் தெரியும் என்று மார்தட்டும் போக்கு தான் உள்ளது.அதுவும் அரை குறையாக தெரிந்து கொண்டு விவாதிக்கிறார்.அதற்கு லெனின் மேற்கோளை காட்டியதே உதாரணம்.
இவர் தன்னை எந்த அமைப்பையும் சாராத நபர்,பொதுவான தமிழ் தேசிய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிறார், இது ஒரு பொய் ! கூச்சமின்றி சொல்லும் பச்சைப் பொய்! இவர் ஓடுகாலிகளான த.நா.மா.லெ.க அமைப்பை சேர்ந்தவர். தன்னுடைய அமைப்பு எது என்று கூட சொல்லிக்கொள்ள துணிவில்லாத அநாமதேயங்களுடன் விவாதிப்பது என்பது நாம் அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்.நாம் மிகவு அவசரப்பட்டு இவரை விவாதிக்க அழைத்து விட்டோம், அது மிகவும் தவறான முடிவு என்பதை தற்போது உணர்கிறோம். இனிமேல் வேறு எந்த தோழர்களும் இந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். முகவரியே இல்லாத நேர்மையும் இல்லாத இந்த நபருடன் விவாதிப்பது என்பது யார் என்றே தெரியாத அநாமதேயமான இவரை பெரிய ஆள் ஆக்குவதும், அங்கீகரிப்பதுமாகும் என்று கருதுகிறோம்.
நாம் இவரை வென்றெடுக்கப் போவதில்லை,இவரும் நம்மை வென்றெடுக்கப் போவதில்லை. எனவே நாம் நமது நேரத்தை இவருடன் மல்லுக்கட்டி வீணடிக்காமல் இவரை புறக்கணிப்பதையே சரி என்று கருதுகிறோம். இதனால் நாம் ஓடிவிட்டோம் என்றும் பயந்து விட்டோம் என்றும் அவர் கீற்றில் போய் கூப்பாடு போடலாம். எனினும் நாம் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இவரை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேறு வேலைகளை பார்ப்பது தான் சரி என்று கருதுகிறோம்.
சில தோழர்களுக்கு எமது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கலாம். தோழர் வினவு இரண்டு நாட்களுக்கு முன்பு எமது தளத்தில் ஒரு பின்னூட்டதை இட்டுள்ளார். ஆனால் நாம் அதன் காரணமாக இந்த முடிவிற்கு வரவில்லை,நமது ஆழமான பரிசீலனையே இந்த முடிவிற்கு காரணம். விவாதத்தின் இடையிலேயே இது பயனுள்ளதா என்கிற பரிசீலனைக்குள் போய் விட்டோம். தோழர் வினவின் பின்னூடம் முடிவை எடுக்க வைத்துள்ளது. இது சரியான முடிவு தான் என்று கருதுகிறோம்.எமது இந்த முடிவு சரியா தவறா என்று பிற தோழர்கள் கருத்து சொல்லுங்கள்.
அடிப்படை அரசியல் அறிவே இல்லாத அதிரடியான் போன்றவர்களின் கருத்துக்கள் தமிழர்களை இன்னும் முட்டாள்களாக்கவே பயன்படும். கட்சி,புரட்சி,என்பதின் அரசியல் அர்த்தங்களை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியவைகளும் நிறைய இருப்பதால் அவைகளையும் கற்றுக்கொண்டு விவாதங்களுக்கு வருவது நல்லது. @ நான்காம் நரகாசூரன்.
விவாதம் வேண்டாமாம்: ஓடுகிறது ம.க.இ.க.
——————————————————————————–
தமிழ் இனத்திற்கான உரிமையை வலியுறுத்திப் பேசும் அனைவரையும் ”இனவாதிகள்” என்று கொச்சைப் படுத்தும் கோயபல்சுகளின் கும்பலான ம.க.இ.க.வினர் தற்பொழுது மீண்டும் ஒருமுறை அம்பலப்பட்டுள்ளனர்.
ம.கஇ.க.வின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி நாம் தொடர்ந்து எழுதி வருகின்ற விமர்சனங்களை, தர்க்க ரீதியாக எதிர்கொள்ள துப்பில்லாத இவர்கள், ”விவாதத்திற்கு தயாரா?” என்று வாய்ச்சவடால் விடுத்தனர். சரி, விவாதிப்போம் என்றேன் நான்.
தொடக்கத்திலேயே இவர்கள் ஓடிவிடுவர் எனவே விவாதிப்பது வீண் என்றும், இவர்கள் நேரத்தை தான் விரயம் செய்வார்கள் என்றும் என்னை பல தோழர்கள் எச்சரித்தனர். நான் அவர்களது கூற்றுகளை பொருட்படுத்தாமல் எனது நேரத்தையும் ஒதுக்கி அவ்வப்போது அவர்களே எமக்களித்திருந்த பக்கத்தில், எனது கருத்துகளை பதிந்து வந்தேன். அவர்கள் மறுத்து எழுதினர். நானும் எதிர் கருத்துகளை முன் வைத்துக் கொண்டு தான் இருந்தேன். நேரமின்மையால் பாரிய நேர இடைவெளிகளில் பதில் அளித்தும் வந்திருந்தேன். பாதுகாப்புக் கருதி என்னுடைய பதில்களை எனது வலைப்பதிவிலும் எழுதி வந்தேன். இது அனைவருக்கும் தெரிந்தே வெளிப்படையாக நடந்தது.
கடைசியாக நான் பதிவிட்டது இதைத் தான்,
அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே… அவாளுக்கு ஏன் நாடு வேணும்… நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது…..
இந்த கருத்துகளால் இந்திய ஆளும் வர்க்கமும், அதன் உளவுத்துறையும் வேண்டுமானால் கலங்கியிருக்கலாம். ஆனால், கலங்கியது இவர்களது ”தோழமை” அமைப்பான ம.க.இ.க. தான். அதனால் தான் இவ்விவாதங்கள் மூலம் மேலும் பல எதிர்க் கருத்துகள் வெளியாகும் என புறக்கணித்திருப்பார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
விவாதம் செய்யவதற்கு முன்பிருந்தே இவர்களது நோக்கம் என்னவாக இருந்ததென்றால், நான் கூறும் கருத்துகளை விமர்சிக்கவோ, தர்க்க ரீதியாக எதிர்த்து வாதிடவோ இவர்களுக்கு அக்கறையில்லை. நேர்மையில்லை. மாறாக, நான் எந்த அமைப்பைச் சார்ந்தவன் என்பதை நோண்டுவதிலேயே இவர்களது அக்கறை வெளிப்பட்டது. இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறினால், உடனே அந்த அமைப்பைப் பற்றி அவர்கள் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்ட வசைகளை பொழிந்து விட்டு, ”உங்களுடன் விவாதிக்க விருப்பமில்லை” என்று ”மீசையில் மண் ஒட்டாமல்” ஓடிவிடுவது தான் இவர்களது திட்டமாக இருந்தது. இச்சூழ்ச்சியை எண்ணியே, இவர்களிடம் நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரைக் கூறவில்லை.
இப்பொழுது, விவாதிக்க வெறுத்துப் போய் நான் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.ம.லெ.க.) அமைப்பைச சேர்ந்தவன் என்று இவர்களாகவே கற்பிதம் செய்து கொண்டு, ”என்னை புறக்கணிக்கிறோம்” என்ற அறிவிப்பின் பெயரில் மீண்டும் ஒருமுறை தானாகவே விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.
”கீற்று” இணையதளத்தின் விவாதத்தின் போது, இது போல இவர்கள் ஓடினர். அப்பொழுது நான் ”இவர்கள் ஓடியது ஏன்?” என்று கேட்டவுடன் ரோசம் பொத்துக் கொண்டு வந்து, ”விவாதத்திற்கு வா!” என்று அறைகூவினர். இப்பொழுது, விவாதத்திற்கு நான் வந்தும் கூட, ”புறக்கணிக்கிறோம்” என்ற பெயரில் விவாதத்திற்கு பயந்து ஓடுகின்றனர்.
இனி இவர்களுடன் நான் விவாதிக்கப் போவதில்லை. இவர்கள் எப்படி அழைத்தாலும், இவர்களுடன் இனி விவாதிக்கத் தேவையுமில்லை என நினைக்கிறேன். ”தமிழ்த் தேசியம்” என்ற சித்தாந்தம் தர்க்க ரீதியில் தவறானது என்று விவாதிக்க இவர்களிடம் சரக்கில்லை. இதற்குக் காரணமாக, உண்மைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் இவர்களிடம் துளியளவும் இல்லாமையை சொல்லலாம். வறட்டுத்தனமே இவர்களை வழிநடத்துவதால் இவர்களிடம் நாம் விவாதிப்பதில் பயனுமில்லை என்று நினைக்கிறேன்.
இவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின், கருத்தியலைப் பின்பற்றி தேசிய இன விடுதலைப் புரட்சியை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள சீர்குலைவு அமைப்புகளே என நான் மீண்டும் பிரகடனப்படுத்துகிறேன்.. வங்கதேச விடுதலையின் போது இந்திய உளவுத்துறையினர் ”முக்தி வாஹினி” போன்ற போலி ”புரட்சிகர” அமைப்புகளை உருவாக்கியதைப் போல தமிழ்த் தேசிய இன விடுதலையை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள போலி புரட்சியாளர்களின் அமைப்பை மக்கள் கலை இலக்கியக் கழகம். அதனைப் பின்னின்று இயக்கி வருகின்ற ”இந்திய(?) கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தமிழ் மாநில அமைப்புக் கமிட்டி CPI ML SOC”, இந்திய உளவுத்துறையினருடன் நேரடித் தொடர்பில் இருப்பினும், அது வியப்புக்குரியதில்லை…
நாம் தொடர்ந்து இவர்களை அம்பலப்படுத்தி எழுதுவோம். விட மாட்டோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.க.இ.க.வின் உண்மை முகம் அம்பலப்படுத்தும் படம்

ம.க.இ.க.வினரின் வேண்டுகோளுக்கேற்ப,
இத்தளத்தில் நடைபெறும் விவாதங்களில்
இனி நான் பங்குபெறப் போவதில்லை…
தோழமையுடன் விவாதித்த அனைவருக்கும் நன்றியுடன்,
அதிரடியான்..
நன்றி!!! சென்று வருக!!! 🙂
Adhiradiyan you already showed your political deficit. All your bluffs (in the name of debate) is just here. Go back and see how many times even after our comrades gave proper explanation on our stands you are just clinging to the same point you’ve been telling without any proper reason. You cleverly neglected some of our questions – and overlooked some. You have somewhere around 10 points against us and even after countering all of them, you just repeat them in different words.
Why?
You dont have politics. You are a spineless coward that you are not revealing your party. You are a coward to the core that you are not even ready to face our questions. You burried your head in the mud.
So what the hell do you what to proove with that comparison chart?
I shit and Hindu Ram shits and Cho shits
I pee and hindu Ram pee and so does Cho
So because of the above common things, I am a bhraminist? is that what the conclusion you arrive?
Get a life you blind moron
_______________________________________________________________________________________________________
Comrade Internationalist,
Now that these people will stick to their favourite facist Goebbels formula of propoganda. They will start repeatedly telling that ‘PALA ran away- PALA ran away’ everywhere.. and will try to create an image that we are not able to debate or defend our politics..
Please write a new post with the ‘experience’ of debating with this guy and mention the points he repeatedly put forward without any logical backings and the questions he escaped. Let us all have that link handy and wherever these idiots opens the mouth, lets dump this link into their mouth.
Revolutionary wishes to you.
Sangu
தொடர்ந்து விவாதித்து இருக்கனும் சர்வதேசியவாதிகள்
வினவு சொன்னதால் நிறுத்தினோம் என சொல்லாதீர்கள்
இணையத்தில் யார்வேணுமானாலும் யாருடன் வேண்டுமென்றாலும் விவாதிக்கலாம்
அதை நிறுத்தி விடலாம் எனில் எந்தெந்த அம்சங்களில் முரண்படுகிறீர்கள்
என்பதை சொல்லிவிட்டு மற்ற விசயங்களை பேசலாம்
விவாதத்தின் பயன் என்ன/
இந்த கேள்விக்கு பதில் சரியான புரிதலே
அதிரடியானை நீங்கள் மாற்ற முடியாது
உங்களை அதிரடியான் மாற்ற முடியாது
ஆனால் வாசகர்கள் பயன்படுவார்கள் என்பது எனது கருத்து