அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு

Keetru_logo_70தமிழ் தேசியம் என்கிற மண் குதிரையில் அமர்ந்துகொண்டு ஆற்றைக்கடக்க முயலும் இனவாதிகளுக்கு எத்தனை முறை சொன்னாலும் அது ஒன்னுக்கும் ஆகாத ‘மண்’னு  என்று புரிவதே இல்லை. ஏனென்றால் அவர்கள் அதை குதிரை என்றே நம்புகிறார்கள்.

மார்க்சிய‍-லெனினிய புரட்சிகர அமைப்புகளான எம் மீது தமிழினவாத கும்பலுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி, எதற்கு பொறாமையில் புழுங்குகிறார்கள் என்பதற்கு எமக்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான் புலப்படுகின்றன. ஒன்று எமது அமைப்புகள் இளமைத்துடிப்புடன் பெரும்பாண்மையாக இளைய தலைமுறை இளைஞர்களையே அதிக எண்ணிக்கையில் கொண்டதாக இருக்கிறது. மாறாக அவர்கள் பக்கமோ தாத்தா பாட்டிகள் கூட்டம் தான் அதிகம். இரண்டாவதாக அவர்களுடைய கொள்கைகளை எமது வாயால் நாம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அத்துடன் இனவாதிகளின் சந்தர்ப்பவாத டவுசரை நாம் அவ்வப்போது கழட்டிவிட்டு அம்மணமாக்கிவிடுவதாலும் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.

இவர்களிடம் துளியும் நேர்மையோ,நாண‌யமோ கிடையாது. கொஞ்சமும் நா கூசாமல் ஒரு அமைப்பைப் பற்றி கற்பனையான செய்திகளை பரப்பி விடுவது, அதாவது அவதூறு செய்வது. தமது செயல்களுக்கு சந்தர்ப்பவாதமாக விளக்கமளிப்பது. தாம் ஆதரிப்பவர்களின் யோக்கியதையை கேள்விக்குட்படுத்தினால் அதை சந்தர்ப்பவாதமாக நியாயப்படுத்துவது. எப்போதும் புறநாணூற்று பழம்பெருமை பேசி தமிழ்தேசிய கற்பனாவாதத்திலேயே மூழ்கிக்கிடப்பது.அதை சரியாக தட்ட வேண்டிய இடத்தில் நாம் தட்டினால் ‘பார்ப்பான், பார்ப்பனீயம்’ என்று நம் மீது விழுந்து பிறாண்டி வைப்பது.அதற்கு விளக்கமளித்து தெளிவுபடுத்தினாலும் நேர்மை கொண்டு சிறிதும் பரிசீலிக்காமல் சொன்னதையே மீண்டும்,மீண்டும் சொல்வது. இது தான் இவர்களுடைய, அனைத்து தமிழினவாதிகளின் அரசியல் நடைமுறை.

தமிழினவாதிகளே உங்களுக்கு மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறோம். நாங்கள் முதலில் கம்யூனிஸ்டுகள் உங்க‌ளுக்கு புரியும் படி சொன்னால் சர்வதேசவாதிகள்.அதன் பிறகு தான் ‘தமிழன்’ என்பதெல்லாம். நாங்கள் எங்களை முதலில் பாட்டாளி வர்க்கமாக அடையாளப்படுத்திக்கொள்வதையே விரும்புகிறோம், மற்ற அனைத்திற்கும் இரண்டாவது இடம் தான்.
நாங்கள் ‘தமிழன்’ என்று அழைக்கப்படுவதை விட ‘கம்யூனிஸ்டு’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம் மார்க்சியத்தை அறிந்தவர்களுக்கு இது போன்ற‌ ‘அ’ன்னா ‘ஆ’ வன்னா பாடத்தையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இவர்கள் இனவாதிகளாக இருப்பதால் இவற்றை விளக்க வேண்டியுள்ளது. ஆனால் இது முதல் முறை அல்ல, பல முறை விளக்கி விட்டோம். ஆனாலும் புரிந்துகொள்வது மாதிரி தெரியவில்லை.

3802abstract_design

அதிரடியான் என்பவருக்கு நாம் இனி பதிலளிக்கப் போவதில்லை என்று உறுதியாக கூறியிருந்தோம். எனினும் இதை எழுத வேண்டிய சூழல் வந்துவிட்ட்டது. ஆனாலும் இது  அவருக்கான பதில் கட்டுரை அல்ல. ஒரு சிறு விளக்கம் அவ்வளவே. அவரைக் கண்டு நாம் ‘ஓடி ஒளிந்து கொண்டதாக’ திரு அதிரடியான் அளவுக்கு மீறி அநியாயமாக ஆசைப்பட்டுள்ளார். இவர் வைப்பதெல்லாம் ஒரு வாதமே இல்லை என்பது தான் நமது கருத்து. எனவே தான் அவருடைய முதல் கட்டுரையை நாம் சிறிதும் சட்டை செய்யவில்லை. இரண்டாவது கட்டுரைக்கும் சில அவசிய காரனங்களின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று கருதியதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கிறோம் என்று குறிப்பிட்டு அனைத்திற்கும் விரிவாக கீற்றிலேயே பதிலளித்திருக்கிறோம். ஆனால், அதன் பிறகும் அதே பாணியில் அவதூறுகள் தொடர்ந்ததால் இறுதியாக தமிழ்தேசியத்தை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரையுடன் இவருக்கு பதிலளிப்பதில் சிறிதும் பயன் இல்லை எனவே இதிலிருந்து நாம் விளகிக்கொள்கிறோம், இனி உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறி வில‌கிக்கொண்டோம். அதுவும் கீற்றில் வெளியானது. ஆனால், அதன் பிறகு தற்போது நாம் ‘ஓடிவிட்டதாக’ ஜாலியாக கனா கண்டுகொண்டிருக்கிறார் அதிரடியான். அவருக்கு கொஞ்ச‌ம் தண்ணி தெளித்து எழுப்பிவிடுவதற்காகத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

நீங்கள் ஒரு கட்டுரையை எழுதினால் அதற்கு நாங்கள் ஒரு பதில், நாங்கள் ஒரு பதில் எழுதினால் அதற்கு நீங்கள் ஒரு கட்டுரை என்று கட்டுரைக்கு கட்டுரை,கட்டுரைக்கு கட்டுரை என்று எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். அவ்வாறு எழுதி எழுதி விளையாட உங்களுக்கு ரொம்ப ஆசை இருக்கலாம், எமக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை. ஆசை இருந்தாலும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாங்கள் உங்களைப் போன்ற கற்பனைப் புரட்சியாளர்கள் அல்ல .தீபாவளி வரும், பொங்கல் வரும் என்பதைப் போல புரட்சியும் வரும் என்று அந்த நாளுக்காக உங்களைப் போல தின்னையில் உட்கார்ந்து கொண்டு எங்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. அதற்காக நாங்கள் வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு இருக்கும் பத்து வேலைகளில் இணையத்திற்கு வருவதும் ஒன்று அவ்வளவு தான். எனவே இந்த எழுதி எழுதி விளையாடும் விளையாட்டுக்கு ஒரு அழுத்த்மாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு தான் இதை எழுதுகிறோம். இதைக் கூட முதலில் எழுத வேண்டுமா என்று தான் யோசித்தோம். அதன் பிறகு ‘நாங்கள் ஓடிப்போய் விட்டதாக‌’ கனவு காணும் உங்களை கொஞ்சம் துக்கத்திலிருந்து எழுப்பிவிடுவது அவசியம் என்று கருதியதால் இதை எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து எழுதினோம்.

இதற்கு முன்பு உங்களுடைய‌ அனைத்து கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம். ஆனால் நீங்கள் தப்பிக்கும் விதமாக எமது பெரும்பாண்மையான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஒரு சில சிலவற்றுக்கு மட்டும் ‘பதில்’ என்கிற பெயரில் ஒரு அவதூறு கட்டுரையை எழுதி அதில் நேர்மையற்ற முறையில் எமது விளக்கங்களையும் திரித்திருந்தீர்கள். எனினும் நாம் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். ஆனால் தற்போது நாம் ஒரு முடிவிற்கு வந்துள்ளோம். உங்களுடன் தர்க்கம் செய்வதென்று முடிவு செய்திருக்கிறோம். தனித்தனியாக கட்டுரை எழுதுவதில் ஒருவரை அவ்வளவு சுலபமாக அம்பலமாக்க முடியாது, தர்க்கிப்பதன் மூலம் தான் நாலு பேர் பார்க்கும் வகையில் தர்க்கிப்பதன் மூலம் தான் உங்களை அம்பலமாக்க முடியும் என்று கருதுகிறோம். சுருக்கமாக சொன்னால் உங்களை இல்லாமல் ஒழித்துக்கட்ட விரும்புகிறோம். அதாவது, உங்களிடமிருக்கும் கருத்துக்களை ஒழித்துக்கட்ட விரும்புவதை சொல்கிறோம். ஏற்கெனவே ‘ஸ்டாலின்’ குரு என்கிற தமிழ்தேசிய வீரருக்கு விருந்து வைக்கலாம் என்று விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர் அழைக்கும் போதே தயங்கினார். அதன் பிறகு தான் அவர் மான்கராத்தேயில் மாபெரும் வல்லுனர் என்றும், பிளாக் பெல்ட் என்றும் தெரிந்தது. அவருடைய தமிழ்தேசிய துடை நடுக்கத்தை எமது தளத்தில் கிழித்து தொங்க விட்டுள்ளோம் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் போய் பாருங்கள்.

https://vrinternationalists.wordpress.com/2009/08/20/தமிழ்தேசியவாதியுடன்-ஒரு/

abstract-blackஇப்போது உங்களுடைய வீரத்தையும் தரிசிக்க காத்து நிற்கிறோம். உங்களை விவாதிக்க அழைக்கிறோம். நீங்கள் பங்கேற்காத பட்சத்தில் அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இது ஒரு பகிரங்க அழைப்பு. இந்த விவாதத்திற்கு நீங்கள் வராத பட்சத்தில் உங்களுடைய ‘நேர்மையும் வீரமும்’ வாசகர்களுக்கு அறிமுகமாகும். உங்களுடைய அனைத்து பின்னூட்டங்களும் பிரசுரிக்கப்படும். அவற்றுக்கு உடனுக்குடன் பதிலளிக்கப்படும் என்கிற உத்திரவாதத்துடன் உங்களுடைய தமிழ் வீரத்துடன் ச‌ர்வதேசியவாதிகள் மோதுவதற்காக‌ காத்து நிற்கிறோம். வாருங்கள்.
எமது தள முகவரி.

https://vrinternationalists.wordpress.com

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்தேசியவாதியுடன் ஒரு விவாதம் பகுதி-1

தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்

வாழ்க தமிழ்! வாழ்க பார்ப்பனீயம்!

தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!

81 responses to “அதிரடியானுக்கு ஓர் பகிரங்க அழைப்பு

  1. அய்யா அவர் விவாதிக்க மாட்டார்

    விமர்சனங்களை வைத்து விட்டு மட்டும் போய்விடுவார்

    • செந்தில்குமார்

      மாவோ
      அவர் விவாதிக்க வந்துவிட்டார்.

  2. சந்திரசேகர் ஆசாத்

    சரியான சவால்,
    தமிழ் வீரம் முறுக்கிக்கொண்டு முட்டுவதற்கு வருமா ?
    பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

  3. இவர்களை விவாதிப்பதன் மூலமே அம்பலமாக்க முடியும் என்கிற முடிவு சரியானது. அதில் நாங்களும் பங்கேற்கிறோம்.பெரும்பாலும் அவர் விவாதத்திலிருந்து தப்பி ஓடத்தான் நினைப்பார், வர மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.

  4. சங்கர்

    உங்கள் பழைய‌ பதிவுகளையும் முழுமையாக‌ வாசித்தேன்.தமிழ்தேசியம் பற்றின உங்கள் கருத்துக்கள் உண்மை என்று தான் கருதுகிறேன்.அது சாத்தியப்படுத்தவியலாத கற்பனை என்பது உண்மை தான்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  5. மகாதேவன்

    இது ஆரோக்கியமான அழைப்பு. நீங்கள் விவாதம் செய்யுங்கள்,நாங்கள் ஒதுங்கி
    நின்று வேடிக்கை பார்க்கிறோம்.

  6. ‘நிழல்’ என்று ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தாரே அவா எங்கே போனா ?

    • நான் இங்க தான் டா அம்பி இருக்கேன் .. என்ன வேணும் நோக்கு ?

      • இங்கே தா இருக்கேளா.. ஓக்கே ஓக்கே அப்படினாச் சரி மாமா, நீங்களே உங்களைப் பத்தி ஒத்துன்டேள் அப்புறம் நேக்கு என்ன ஜோலி நான் வரட்டே..

  7. முத்துக்குமார் என்பவரிடமிருந்து எனக்கு வந்த மெயில்
    மற்றும் நான் அதற்கு அனுப்பிய பதிலை இங்கு
    பின்னூட்டமிடுகிறேன்.

    முத்துக்குமார்:
    வணக்கம் நீங்கள் வேண்டுமானால் கம்யூனிஸ்ட் அக
    இருக்கலாம் ………………….
    பட் நாங்கள் தமிழன் தமிழர்கள் ………….

    நான்:‌ நல்லது..
    ‘ஆனால்’ தமிழன் என்கிற உணர்விருந்தால்
    தமிழில் பேச வேண்டியது தானே அது என்ன ‘பட்’ ?

    சரி அதனால் நீங்கள் தமிழர் என்று சொல்லவில்லை
    ஒன்று செய்யுங்கள், சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ
    போன்றவர்களின் படங்களை உங்கள் புரொபைலிலிருந்து
    எடுத்துவிட்டு. ராஜராஜ சோழன் பாண்டிய மன்னனுடைய
    படங்களை எல்லாம் போட்டுக்கொள்ளுங்கள்.

    சேகுவேர,பிடல் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்பதற்காக
    சொல்லவில்லை, அவர்கள் கம்யூனிஸ்டுகளும் அல்ல
    அது வேறு கதை. அவர்கள் வேற்று இனத்தவர்கள்
    என்பதால் சொல்கிறேன்.

    உங்களுக்கு மேற்கொண்டு ஆட்சேபனைகள்,
    கருத்து வேறுபாடுகள் இருப்பின் சர்வதேசியவாதிகள்
    தளத்தில் போய் விவாதியுங்கள்.

    நன்றி

  8. பின்னூட்டத்தை முதலில் போட முடியவில்லை. பின்னர் முழுமையாக போட முடியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

  9. மின்னஞ்சலின் தொடர்ச்சி

    முத்துக்குமார்:

    எனக்கோ அந்தே வார்த்தைக்கு உண்டனே தமிழ் எழுத்துகிடைக் வில்லை …..என்ன சொன்னீர் என் ப்ரோபிலே பாரும் என் தலைவன் இருப்பார் ……………சரி

    நான்:‌

    இருந்தால் நல்லது.
    யார் உங்கள் தலைவர் பிரபாகரனா ?

    புலி பற்றிய இந்த பதிவையும் வாசியுங்கள்
    ரசிக மணப்பாண்மையிலிருந்து வெளியேற‌
    உதவும்.
    https://vrinternationalists.wordpress.com/2009/08/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/

    மேலும் நீங்கள் எனக்கு அனுப்பிய மெயில்
    நான் உங்களுக்கு அனுப்பியது இரண்டையும்
    பொதுமேடைக்கு வைத்துவிட்டேன்.

    பாருங்கள்.
    https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comments

  10. அதிரடியான் கீற்றில் எழுதுவதில் மட்டும் கெட்டிகாரரா? அல்லது அரசியலில் நேர்மையும் கொள்கையும் உள்ளவரா என்பதை அறிய அதிரடியானுக்காக காத்திருக்கிறோம்.

  11. அன்பார்ந்த தோழர்களுக்கு… வணக்கம்.

    விவாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். விவாதிப்போம்.

    இவ்விவாதம், நேர்மையானதாக, ஒளிவு மறைவற்றதாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். தாங்கள் உறுதியளித்துள்ளபடி தயவு செய்து அனைத்துப் பின்னூட்டங்களையும் வெளியிடுங்கள்.

    தமிழ்த் தேசியத் தோழர்களோ, ம.க.இ.க. தோழர்களோ அனைவரும் இச்சமூகத்தின் விடிவுக்காக ஏதேனும், செய்ய வேண்டுமென தாங்களுக்கு சரியெனப்பட்ட தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள இளைஞர்களே.. எனவே தனிநபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் வேண்டாம். விவாதம் தோழமையுடன் நடந்தால் நன்றாகவிருக்கும். கொச்சைப் பேச்சுகளுக்கு எதிராக் திரும்பவும் கொச்சைப் பேச்சகளே பதியப்படும் போது விவாதம் திசைத்திருப்பப்பட்டு விடும்.

    கட்டுரைக்கு பதில் கட்டுரை என்று எழுதும் பொழுது, புதிய செய்திகளையும் மறுப்புகளையும் எழுத இயலும் என்று நினைத்தேன். வரிக்கு வரி விவாதம் எனும் பொழுது ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், உமது விருப்பப்படியே வரிக்கு வரி விவாதம் செய்வோம்.

    தமிழ்த் தேசியத்தை மண் குதிரை என்றிருக்கிறீர். அந்த ”மண் குதிரை”யிலிருந்தே விவாதத்தை தொடங்கும் பொருட்டாக, அதைப் பற்றி எமது நிலைப்பாட்டை நான் தெளிவு படுத்துகிறேன். பிறகு, இந்நிலைப்பாடுகளை ம.க.இ.க.வினர் தர்க்கம் செய்யுங்கள். விமர்சியுங்கள். விளக்கமளிப்போம். விவாதிப்போம்.

    அன்புடன்,
    அதிரடியான்.

  12. தமிழ்த் தேசியம் – வரலாற்று அடிப்படை

    உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது. இது பல்வேறு ஆய்வுகளாலும நிறுப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் தற்பொழுது உள்ள இந்திய நிலப்பரப்புகள் முழுவதிலும் ”தமிழர்” என்ற மரபினம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

    பின்னர் வந்த, வந்தேறிகளான ஆரியர்கள் தமிழர்களின் சிந்துசமவெளி நாகரீகங்களை அழித்து சமஸ்கிருத மேலாண்மையை புகுத்தி, தமிழர்களின் இடங்களை பாரம்பர்யப் பிரதேசங்களைப் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கான ஆதாரங்களாகவே ருக் வேதம் உள்ளிட்டவை விளங்குகின்றன.

    தமிழினம் பல்வேறு குறுநில மன்னர்களாலும், பேரரசுகளாலும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்த நிலையில், ”தமிழ்” என்ற மொழி தமிழர்களை உளவியல் ரீதியாக ஒன்றிணைத்திருந்தது.

    தொல்காப்பியத்திற்கு விளக்கமளித்து எழுதிய இளம்புரனார், ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கு எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவாறு எழுதினார்.

    ”நும் நாடு யாதெனில் தமிழ் நாடு என்க!”

    ”உன்னுடைய நாடு தமிழ்நாடு” என்று ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கேற்ப அன்றைக்கே உரைத்திருக்கின்றனர்.

    ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்”

    இதுவும் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பிற்கான சங்க காலத்தில் வழங்கப்பட்ட ஒர் வரையரையே எனலாம்.

    லெமூரியர் கண்டம் என்ற நிலப்பரப்பு முழுவதும் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இதற்கான சான்றுகளை முனைவர் க.ப.அறவாணன் தனது ஆய்வு நூல்களின் படி நிறுவியுள்ளார். தற்பொழுதிருக்கும், தமிழ்நாடும் இலங்கைத் தீவும் லெமூரியா கண்டத்தின் பிரியாத நிலப்பரப்புகளாக விளங்கிற்று. இவ்வாறு விளங்கிய நிலப்பரப்புகள் கடல் கோள்களால் பிரிக்கப்பட்டே இலங்கைத் தீவு, தனியாகவும் தமிழ்நாடு தனியாகவும் பிரிய நேர்ந்தது.

    தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்னர் வந்த வந்தேறிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டனர். இலங்கைத் தீவின் தமிழர்கள் சிங்களர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். இன்றைக்கு ”இந்தியா” என்ற ஒரு செயற்கை நாட்டில், ஒரு மாநிலமாகக் குறுக்கப்பட்டு, மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அவர்களின் விடுதலைக்கான தத்துவமாகவே, வழிகாட்டு நெறியாகவே, ”தமிழ்த் தேசியம்” உள்ளது.

    எம்மைப் பொறுத்தவரை, ”இந்தியா” என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூட்டிய காலனிப் பெயர். பார்ப்பன பனியாக்களும் பெருமுதலாளிகளும் விரும்பி உருவாக்கிய ஒர் சந்தை. பார்ப்பனர்களும், பார்ப்பனிய பாதந்தாங்கிகளும் இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனத்தவர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டிக் கொழுக்கவும் உருவாக்கியக் கட்டமைப்பே ”இந்தியா”. அந்த ”இந்தியா” என்ற நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும், தற்பொழுதுள்ள இந்திய ஆளும் வர்க்கம் (பார்ப்பனர்கள், பனியாக்கள், பெருமுதலாளிகள்) ஒரு போலித்தனமான ”இந்தியத் தேசியம்” என்ற இல்லாத தேசியத்தை கட்டமைத்தது.

    இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்ற கருத்தியலை ஆரியப் பார்ப்பன இந்து மத வெறி சக்திகளையும், பெரு முதலாளிகளின் நலன் காக்கும் சந்தைகளையும் நன்கு வளர்த்து வருகின்றது. எனவே இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பது யம் நிலைப்பாடு.

    உடைத்தெறிப்பட்டப் பிறகு, இந்நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. இந்நிலப்பரப்பில், வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை யார் வைத்திருப்பார்கள்? மார்க்சிய லெனினியப் புரட்சகர சக்திகள் ”இந்தியா” என்ற இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் தற்பொழுதுள்ள ஒடுக்குமுறையை ஒழித்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது என்று நாம் தெளிவாகக் கூறுகிறோம்.

    முதலில் இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும், ”இந்தியன்” என்ற போலித்தனமான கருத்தியலை மிருகத்தனமாக இந்திய ஆளும் வர்க்கம் வளர்த்துவிட்டுள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படாமலிருக்க, தேசிய இனங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து விட்ருப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியே ஆகும்.

    இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமமான அளவில் இருந்ததில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினையிலும் கன்னடத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரளத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றது இந்திய அரசு. பாலாறு அணை சிக்கலில் ஆந்திரத்திற்கு ஆதரவாக வாய் மூடி நிற்கிறது இந்திய அரசு. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படும் பொழுது கூட, அதனை ஆதரித்து குதூகலிக்கிறது இந்திய அரசு.

    ஈழத்தமிழர்கள் மீது இந்திய அரசு நடத்திய இன அழிப்புப் போரை நிறுத்து என்று தமிழகம் ஒன்று திரண்டு போராடிய பிறகும், அப்போரை தொடர்ந்து நடத்தி ஈழத்தமிழினத்தை இந்திய அரசு கொன்றழித்தது.

    இந்திய அரசின், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண்டு காசுமீரிலும், அசாமிலும், மிசோரத்திலும் அந்தந்த தேசிய இனத்தவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வாறான தேசிய இனப் போராட்டங்கள் மற்ற தேசிய இனங்களில் நடைபெறவுமில்லை.

    அதே சூழலில், ”தமிழர்கள்” மீது இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது பல்வேறு நடவடிக்கைகளாலும் தொடரப்பட்டு வருவதும் மறுக்கப்படாத உண்மை.

    இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில், ”இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பான இந்திய அரசு” என்பது ஆரியர்கள், பார்ப்பனர்கள், பனியா முதலாளிகள் உள்ளிட்டவர்களாலும், அந்த கும்பலுடன் சமரசம் செய்து கொண்ட தேசிய இனத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அரசே என்பதால் இந்திய அரசை ஆரிய இனவெறி அரசு என்று நாம் வரையறுக்கிறோம்.

    இந்தித் தேசிய இனமே ஆரிய இனவெறி அரசை வழிநடத்துகின்றது என்கிறோம்.

    இந்துமதவெறிப் பண்பாடே இந்தியத் தேசியப் பண்பாடு என்கிறோம்.

    இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.

    இந்தியத் தேசியக் கருத்திலை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், முதலாளிகள் உள்ளிட்டோர் இப்புரட்சிக்கான எதிரிகள்.

    தமிழ்த் தேசிய ஆதரவு சனநாயக சக்திகள், இயக்கங்கள், கட்சிகள் முதலியன இப்புரட்சிகான நேச அணிகளாக அணிவகுப்பர்.

    மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.

    எனவே அத்தத்துவங்களை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ப உபயோகித்து அவற்றைக் கொண்டு நமக்கான ஒரு சுயநிர்ணயமுள்ள ஒரு தனித் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவே ”தமிழ்த் தேசியம்” என்ற இக்கருதாக்கம் படைக்கப்பட்டுள்ளது.

    (இதன் மீது விவாதம் செய்யுங்கள்)..

    மீண்டும் தொடர்வேன்..

    • மார்க்சிய மாணவன்

      /////இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.////

      தோழர் ஸ்டாலின் ‘வரையறை’ படி தமிழர்கள்
      ஒரே தேசிய இனமாக வளர்ச்சியடைந்துள்ளதாக
      கூறுகிறீர்கள்.
      தோழர் ஸ்டாலினுடைய தேசிய இன வரையறை என்ன,
      தமிழர்கள் எப்படி எவ்வாறு தேசிய இனமாக
      அமைந்துள்ளார்கள் என்பதை கூற முடியுமா ?

  13. பரவாயில்லை, அதிரடியான் விவாதத்தில் குதித்து விட்டார்.
    வாழ்த்துக்கள் அதிரடியான். எல்லை மீறும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தாதீர்கள்.‌

  14. ////மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.////

    இதில் தேசியம் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு பற்றிய உங்கள் புரிதல் என்ன?
    தேசிய இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்துவது மார்க்சிய நிலையா அல்லது தேசிய இனங்களிடையே பிளவையும் பூசலையும் ஏற்படுத்துவது மார்க்சிய நிலையா ?

    நீங்கள் மார்க்சியத்தையும் பயன்படுத்திக்கொள்வோம் என்று கூறுவதால் தான் இதை கேட்கிறேன்.

  15. இது அனைவரும் படிக்க வேண்டிய நல்ல கட்டுரை

    தமிழனென்று சொல்லடா! வர்க்க உணாவு கொள்ளடா!!

    ஒய்யாரக் கொண்டையாம் இனவாதமாம் உள்ளே இருப்பது முதலாளி வர்க்கமாம்!

    இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.

    சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

    புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

    இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

    “தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?

    ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?

    கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?

    தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,

    ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?

    பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?

    தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.

    எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

    ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?

    பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!

    ந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.

    இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

    “தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.

    பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

    “வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?

    வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!

    “வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?

    சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?

    தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.

    “பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?

    வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.

    ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.

    தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?

    இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?

    ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.

    இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.

    மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.

    வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கு ம் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

    தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.

    · பரிதி

  16. பகத்சிங்

    அதிரடியான் விவாதிக்க வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

    நாங்கள் அனைவரும் ம.க.இ.க வினர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.ஆனால் நீங்கள் எந்த கட்சி என்று எங்களுக்குத் தெரியாது,பொதுவில் தமிழ்தேசியவாதி
    என்று மட்டுமே அறிகிறோம், எனவே உங்களுடைய கட்சி, மற்றும் பல முக்கிய விசயங்களில் அதன் நிலைப்பாடு ஆகியவற்றையும் கூறினீர்கள் என்றால் விவாதிக்க வசதியாக இருக்கும்.

  17. சுகுமார்

    ஒவ்வொரு விசயமாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது நல்லது, உதாரனமாக ஈழம் பற்றி,புலிகள் பற்றி என்று வரிசைப் படி விவாதியுங்கள்.

  18. தமிழ் மறவன்

    தமிழர்கள் ஒரு தேசிய இன இல்லை என்பதை சர்வதேசியவாதிக‌ளே நீங்கள் எப்படி மறுக்கிறீர்கள் ? தமிழர்கள் ஒரு இனம் இல்லையா ?

  19. தமிழ்தேசிய அரசு என்றால் நீங்கள் கூறுவதைப் போல அதுவும் ஒரு சோசலிச அரசு தான்.எனது புரிதல் சரி எனில் தமிழ்தேசீய குடியர‌சு என்பது சோச‌லிச குடியரசு தான்.

    • மார்க்சிய மாணவன்

      தம்பி’
      தமிழ்தேசிய சோசலிச குடியரசு என்பதெல்லாம் கற்பனைக் கோட்டை.

      • சோஷலிச அரசு என்பது எந்த ஒரு கொள்கையின் அடிப்படையிலும் இருக்கலாம். அது மார்சிய அடிபடயில் தான் இருக்க வேண்டும் என்ற வரையறு கிடையாது என்பதை நீங்க முதலில் புரிஞ்சுக்கணும்.. ஆகையால் தமிழ் தேசிய குடியரசு என்பது வெறும் கற்பனை கோட்டை அல்ல.. நடை முறைக்கு ஒத்து போக கூடியதே

  20. தமிழ் மறவன்

    தமிழ்தேசியம் என்பது தமிழ் பார்ப்பனியம் என்று சொல்வது எப்படி சரி ?

  21. மார்க்சிய மாணவன்

    சாதி என்கிற நிலப்பிரபுத்துவ உறவு இன்னும் இருக்கிறதா இல்லையா ?
    அது தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இருக்கிறதா இல்லையா அனைவரிடமும் என்று சொல்ல முடியாது.
    பார்ப்பனப் பண்பாட்டை தான் அப்படியே மாற்றாமல் அல்ல்து சின்ன சின்ன மாற்றங்களை மட்டும் செய்து தமிழ் பண்பாடு என்று அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். அது பார்ப்பனீயம் அல்லாமல் வேறு என்ன ?

  22. இந்தியா என்பதை தேசிய இனங்களின் சிறைக்கூடாரம் என்று தான் ம.க.இ.க வரையறுத்துள்ளது. இந்தியாவை ம.க.இ.க ஒரு தேசம் என்றும் கருதவில்லை. இது இந்து தேசம் என்று தான் சொல்கிறது.

  23. விவாதம் எப்போது துவங்கும் ?

  24. நமஸ்காரம்

    இந்த விவாதம் துவங்கிவிட்ட பரபரப்பில் எல்லோரும் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,
    நிழல் என்கிற பெயரில் உலாவும் அம்பியை யாரும் நம்பிவிடாதீர்கள்.

    • என்னை நம்பாவிட்டால் நான் என்ன தற்கொலையா செய்து கொள்ள போகிறேன். அட போங்கபா.. இந்த நிஜம் என்பவர் காமெடி பீஸ் என்று எனக்கு கொஞ்சம் முன்னாடியே தெரியும். இப்போ யாரு நமஸ்காரம் என்று ஒருத்தர் வந்துருக்கார் புதுசா.. நிஜத்துக்கு நீங்க ரொம்ப நெருங்கிய தோழர் தான் என்று நினைகிறேன்.. சரி ஜூலிஸ் ஃபூசிக் கூறியதை போல தனி நபர் தாக்குதலுக்கு இது நேரம் அல்ல. விவாதம் நடக்கும் . அதில் நான் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

  25. உண்மை இதை நான் வழி மொழிகிறேன்.

  26. எல்லாம் அடிதடியின்றி நல்லபடியாக நடந்து
    முடிய இரு தரப்புக்கும் வாழ்த்துக்கள்.

  27. ஜூலிஸ் ஃபூசிக்

    அதிரடியான் விவாதத்தில் கலந்துகொள்வதற்கு மகிழ்ச்சி.

    தோழர்களே, தனிநபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் வேண்டாம்.
    விவாதம் தோழமையுடன் நடந்தால் நன்றாகவிருக்கும்.
    அதிரடியானும் இதை கடைபிடிப்பார் என்று எதிர்பார்கிறோம்…

  28. அதிரடியான் விவாதத்திக்க முன் வந்தது மகிழ்ச்சி.
  29. இவ்விவாதம் தனிநபர்
    தாக்குதாலாக திசை
    திரும்பாமலிருக்க வேண்டும்.
    அதற்கு விவாதத்தில் பங்கேற்போர்
    உதவ வேண்டும்.


    //////////////உடைத்தெறிப்பட்டப் பிறகு, இந்நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. இந்நிலப்பரப்பில், வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை யார் வைத்திருப்பார்கள்? மார்க்சிய லெனினியப் புரட்சகர சக்திகள் ”இந்தியா” என்ற இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் தற்பொழுதுள்ள ஒடுக்குமுறையை ஒழித்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது என்று நாம் தெளிவாகக் கூறுகிறோம்/////////////////

    தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை பாட்டாளி வர்க்கம் தான் வைத்திருக்கும்.அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தான் எந்த ஒரு ஒடுக்குமுறையையும் நிர்மூலமாக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும்,அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் வழங்குவது புரட்சிகர சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றும் போது தான் சாத்தியம். இதை எப்படி நீங்கள் ’தெளிவாக’ முடியாது என்று கூறுகிறீர்கள் ?

    தேசிய இனங்களின் சிறைக்கூடாரமான இந்தியாவை கைப்பற்றி உடைத்தெறியாமல் தேசிய இனங்களுக்கு வேறு எவ்வாறு சுயநிர்ணய உரிமையை வழங்க இயலும் என்பதை நீங்கள் தான் ‘தெளிவாக’ கூற வேண்டும்.

    /////////////////இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமமான அளவில் இருந்ததில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினையிலும் கன்னடத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரளத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றது இந்திய அரசு. பாலாறு அணை சிக்கலில் ஆந்திரத்திற்கு ஆதரவாக வாய் மூடி நிற்கிறது இந்திய அரசு/////////////////

    இந்திய தேசிய அரசு அனைத்து தேசிய இனங்களையும் ஒரே விதமாக ஒடுக்குவதில்லை என்கிறீர்கள்! அதற்கு உதாரணமாக, காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் பிரச்சினையிலும் கன்னட தேசிய இனத்திற்கு ஆதரவாகவும், முல்லைப் பெரியாறு நீர் பிரச்சினையில் கேரளவிற்கு ஆதரவாகவும், பாலாற்று பிரச்சனையில் ஆந்திராவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது என்கிறீர்கள். இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல. இந்திய அரசு அனைத்து தேசிய இனங்களையும் ‘இந்தியா’ என்கிற சிறைக்கூடாரத்திற்குள் தான் அடைத்து வைத்திருக்கிறது. எந்த தேசிய இனத்தையும் சுதந்திரமாக விட்டுவைக்கவில்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளில் இந்திய அரசு ஆதரவாக நடந்து கொள்வதை அந்த இனங்களின் மீது மட்டும் குறைவான ஒடுக்குமுறை செலுத்தப்படுவதாக புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக நீங்களே ஒரு இடத்தில் கூறியிருப்பதைப் போல இந்திய ஆளும் வர்க்கம் தேசிய இனங்களுக்கிடையில் வெறுப்பையும், பகைமையையும், முரண்பாட்டையும் வளர்த்துவிடும் தனது சூழ்ச்சியின் ஓர் பகுதியாகத்தான் மேற்கண்ட பிரச்சனைகளில் சில தேசிய இனங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறது. அதிலும், பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நாத்திக இயக்கம், தமிழகம் மட்டும் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்’ வராமல் இருப்பது ஆகிய சிறப்பு காரணங்களால் தமிழகத்துடன் இந்திய தேசிய அரசுக்கு நீண்ட கால பகை இருப்பதால் நமக்கு ஓரவஞ்சனை இன்னும் அதிகமாக இருக்கிறது. அது காஷ்மீருக்கும், மணிப்பூருக்கும் இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படாமல் இல்லை, அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன.

    /////////////////இந்திய அரசு” என்பது ஆரியர்கள், பார்ப்பனர்கள், பனியா முதலாளிகள் உள்ளிட்டவர்களாலும், அந்த கும்பலுடன் சமரசம் செய்து கொண்ட தேசிய இனத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அரசே என்பதால் இந்திய அரசை ஆரிய இனவெறி அரசு என்று நாம் வரையறுக்கிறோம்/////////////////


    இந்திய அரசு என்பது பார்ப்பன இந்து தேசிய அரசு தான் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால் எந்த தேசிய இனம் இந்திய அரசிடம் சமரசம் செய்துகொண்டது? அதாவது உங்களுடைய கூற்றுப்படி அப்படி ஒரு இனம் இருந்தால், அது இந்திய தேசியத்துக்கு கைக்கூலி வேலை செய்கிறது என்று அர்த்தமாகிறது. அந்த கைக்கூலி தேசிய இனம் எது என்பதை சொல்லுங்கள். நீங்கள் இந்திய தேசியத்துக்கு காட்டிக்கொடுக்கிற கைக்கூலிகளா என்பதை அந்த மக்களிடமே கேட்கலாம்.

    /////////////////இந்தித் தேசிய இனமே ஆரிய இனவெறி அரசை வழிநடத்துகின்றது என்கிறோம்/////////////////

    உங்கள் கூற்றின்படி இந்தி தேசிய இனம் தான் இந்த அரசை வழி நடத்துகிறது எனில் அது தான் ஒடுக்கும் தேசிய இனமாகும். ஆனால் நாம் அப்படி இல்லை என்கிறோம். இந்த நாட்டில் ஒடுக்கும் தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தி தேசிய இனமும் கூட ஒடுக்கப்படுகிற இனம் தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவது இந்து தேசியமும், அதை கட்டியமைத்த பார்ப்பன பனியா கும்பல் தான். இந்தி தேசிய இனம் தான் ஒடுக்கும் இனம் எனில் அது எவ்வாறு என்று விளக்க முடியுமா?

    ///////////////// இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம்/////////////////


    நவீன சமூகத்தில் தேசம், தேசிய இனம் குறித்து தோழர் ஸ்டாலின் கூறிய வரையறையை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பின் ‘தேசிய இனமாக வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுத் தமிழர்கள்’ எனும் பதத்தை பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனெனில் தமிழ் இனம் ஒரு முழுமை பெற்ற தேசிய இனமாக இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதே உங்களைச் சுடும் உண்மை.சிதறிக்கிடந்த நிலப்பிரபுத்துவ சமூகமாக வெள்ளையன் வந்து இணைக்கும் வரை உருவாக்கப்படாத இந்தியா பின்னர் அவர்களால் காலனியாக்கப்பட்டது. பிரிட்டனில் முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை முழுமையாக வென்றெடுத்த உடன் நிகழ்வாக இங்கு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து காலனியாட்சி முழுமையாக நிலை நிறுத்தப்பட்டு பிரிட்டன் பாணி முதலாளிய வடிவம் இங்கும் புகுத்தப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு அதிகார மாற்றத்திற்கு பிறகு காலனிய உற்பத்தி முறையிலிருந்து இந்த நாடு முழுமையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுடன் அரை காலனிய உற்பத்திக்கு மாற்றமடைந்தது. 47ல் அதிகார மாற்றம் நிகழும் இச்சூழலில் தமிழ் தேசிய இனமோ அல்லது மற்ற பிற தேசிய இனங்களின் தேசிய எழுச்சிகளோ எதுவும் இங்கு நடக்கவில்லை. காரணம், இங்கு தேசிய முதலாளித்துவமே வளரவில்லை. மாறாக வெள்ளையன் தரகு முதலாளிகளைத் தான் உணர்வுப் பூர்வமாகவே வளர்த்துவிட்டான். மேலும் உற்பத்தி முறை அரைகாலனி அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தியாக நீடிக்கும் சமூகத்தில் பிரபுத்துவ உறவே ஆதிக்க நிலை செலுத்துவதாக இருந்தது. அத்துடன் பார்ப்பனிய இந்து தேசியமும் கட்டி எழுப்பப்பட்டது. இவை அனைத்தின் காரணமாக தான் தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனமாக வளர்ச்சி பெறவில்லை.

    /////////////////மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்/////////////////

    மார்க்சியம் மனிதகுல விடுதலைக்கான தத்துவம் என்று உணந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் முன் மொழியும் தமிழ் தேசியத்திலும் சரி வேறு எந்த தேசிய இன பிரச்சனையிலும் சரி மார்க்சியம் வர்க்கத்தையே முதன்மைப் படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

    கவுண்டர்கள் ஒன்று சேர்ந்து “வரலாற்றை மீட்டெடுப்போம்; கொங்கு நாட்டை மார்க்சிய வழியில் அடைவோம்” என்பதும், “செட்டியார்கள் வரலாற்றை மீட்டெடுப்போம்; செட்டிநாட்டை நாங்கள் மார்க்சிய பாதையில் அடைவோம்” என்றும் முழங்குவது போல் தமிழ் தேசியமும் ஆகிவிடக்கூடாது. இவையிரண்டும் சாதி வெறிக்கு இட்டுசெல்ல கூடியது. தமிழ் தேசியமோ இனவாதத்துக்கு இட்டுச் செல்லக்கூடியது. தேசிய இனப்பிரச்சனையில் நாம் நமது வர்க்கப் பார்வையை இழப்போமேயானால் அது இனவாதத்திற்கும் அதற்கடுத்தகட்டமாக பாசிசத்திற்கு பக்கத்திலும் நம்மை அறியாமலே நம்மை அழைத்துச் சென்று விடும் என்பதை உணருங்கள்.