Monthly Archives: October 2009

சென்னை நகருக்குள் தேவர் சாதி காட்டுமிராண்டிகள்

காட்டில் வாழ வேண்டிய தேவர் சாதி காட்டுமிராண்டிகள் நகரத்தில் அமர்ர்ந்து கொண்டு சாதி வெறியை வளர்க்க இணையம் நடத்துகிறார்கள்.

காட்டில் வாழ வேண்டிய தேவர் சாதி காட்டுமிராண்டிகள் நகரத்தில் அமர்ந்து கொண்டு சாதி வெறியை வளர்க்க இணையம் நடத்துகிறார்கள்.


சில நாட்களுக்கு முன் சென்னை நகரின் சுவர்களில்  “முக்குலத்தோரின் முகவரி” என்னும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.  சுவரொட்டியில் முத்துராமலிங்க தேவனும் அந்த சாதிவெறியனுக்கு பக்கத்தில் சினிமா நடிகன் கருணாசும் நிற்பது போல சுவரொட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அது முத்துராமலிங்கனை பற்றிய‌ இசை வெளியீட்டுக்கான‌ (Album) சுவரொட்டி.  இந்த ஆல்பம் தேவர் சாதி பெருமையையும், முத்துராமலிங்கனின் பெருமையையும் பேசுவதாக இருக்கும் என்று கருணாஸ் பேட்டியளிக்கிறார். அவர் தான் இதற்கு இசை அமைக்கப்போகிறார்.

பாடல்கள் : வைரமுத்து, கபிலன், புதுமைப்பித்தன்
(பாம்பின் கால் பாம்பரியும். முக்குலதோரின் பெருமை முக்குலத்தோரே அறிவர்)

யார் யாரெல்லாம் இதற்கு பாட்டு எழுதுகிறார்கள் என்று பார்த்தீர்களா ? வைரமுத்து, தன்னை முற்போக்காலன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த கிழட்டு நரி தனது தேவர்சாதிப் பற்றை நுட்பமாகத்தான் வெளிப்படுத்தும். இதற்கு முன் தனது ஒரு நாவலில் தேவர் என்கிற கதாபாத்திரத்தை புணிதப்படுத்தியது, இப்போது முத்துராமலிங்கனை பற்றி புகழ் பாடப்போகிறது. அடுத்து கபிலன், இவரும் முற்போக்காளர் தான், முற்போக்கு மட்டுமின்றி இவர் தன்னை ஒரு தமிழ்தேசியவாதிகாகவும் சொல்லிக்கொள்கிறார். தான் கலப்புத்திருமணம் செய்து கொண்டதை ஊர் முழுக்க பிர்ச்சாரம் வேறு செய்து கொண்டிருக்கிறார். இது போன்ற முற்போக்கு வேசம் கட்டிக்கொண்டு சினிமாவில் கூலிக்கு பாட்டெழுதும் அற்பஜீவிகள் தமது சாதியின் தலைவனை பற்றி கூலிக்கு எழுதுவதை போன்று எழுத மாட்டார்கள், சாதி உணர்வுடன் தான் எழுதுவார்கள். முற்போக்கு என்று பேசிக்கொண்டு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் இது போன்றவர்களை பொது இடங்களில் பார்க்கும் போது இளைஞர்கள் தமது கேள்விகளால் துளைத்துஎடுக்க வேண்டும்.

Dvr

முத்துராமலிங்கத்தை தெய்வம் போல் பிரச்சாரம் செய்யும் பஜனை கூட்டத்தின் பாடல் முழுவதும் ஆதிக்க சாதிவெறியின் பெருமையை மன்னர் குல பெருமை என்னும் சாயந்தோய்ந்த குரலில் ஒலிப்பதையே நீங்கள் கேட்கலாம்.ஏற்கனவே தேவர் மகன் என்று படம் எடுத்து தேவர் குல பெருமையை கமல் என்னும் கலைசூனியம் பரப்பியதை நாம் அறிவோம்.

”போற்றிப் பாடடி பெண்ணே. தேவர் காலடி மண்ணே. எட்டுத்திசை ஆண்ட தேவர் மகன் தான். முக்குலத்தை சேர்ந்த மன்னன் மகன் தான்….”

இவ்வாறு மன்னர் பெருமை பேசி தாழ்த்தப்பட்ட மக்களை ஏய்க்கவும், ஒடுக்கவும் அடிமையாய் வைப்பதிலும் ஆதிக்க சாதியினருக்கு அலாதி பெருமை. ஓர் ஆதிக்க சாதி வெறியனை, தனது மக்களின் சுயமரியாதைக்காக‌ போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்த கொலைகாரனை பற்றி பெருமையாக பீற்றிக்கொள்வது பற்றி இவர்களுக்கு அருவருப்போ குற்ற உணர்ச்சியோ எதுவும் இல்லை.

மேலும்  ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை; நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை’ என்னும் வாசகமும் சுவரொட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் பொருட்களை திருடும் காலம் போய் பெருமை பேசுவதற்கு வாசகத்தை திருடும் காலமும் வந்துவிட்டது.

தோழர் மதிமாறன் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பும், அவர் அவரது தோழர்களுடன் வெளியிட்ட அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையிலும் உள்ள வாசகம் அது.

”நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை” என்னும் வாசகத்தை பல இணைய உலாவிகள் அறிந்திருப்பர். அதையே, அதாவது ‘நான்’ என்று சொன்னதை ‘நாம்’ என்று மாற்றி சுவரொட்டியில் போட்டுக்கொண்டார்கள் இந்த கள்ளர்கள்.

அண்ணல் அம்பேத்கரின் போராட்டத்தை புத்தரின் வார்த்தையில் ஒரே வரியில் விளக்கும் வாசகம் அது. இந்த வாசகத்தை போடுவது பெரிய தவறு என்று நாம் சொல்லவில்லை.  இந்த வாசகத்தை இவர்கள் போடுவதுதான் பொருத்தம‌ற்ற வேடிக்கையாக இருக்கிறது.

நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்று சொல்வத‌ன் பொருள் என்ன என்றாவது தெரியுமா இந்த தேவர் சாதி வெறியர்களுக்கு? நம் சமூகத்தில் சனாதன முறையை பயிற்றுவித்த பார்ப்பனரைத் தாங்கி பிடித்து அவர்களிடம் தாழ்ந்து கிடப்பவ‌ர்கள் யார் ? இந்து மத சனாதனம் உயிரோடு இருப்பதற்கு உரம் போடுபவர்கள் யார் ?  அடிமைத்தனம் உயிர்ப்புடன் இருப்பதற்கு பெருமைபட்டு கொள்பவர்களும், பார்ப்பனரையும், பார்ப்பனீயத்தின் உயிர்நாடியான இந்து மதத்தையும் தூக்கி நிறுத்துவதன் மூலம் பார்பனர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களும் இந்த ஆதிக்க சாதி வெறியர்கள் இல்லாமல் வேறு யார்? தன்னை ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொள்ளும் இந்த சாதி ஆதிக்க கும்பல் பார்ப்பானுக்கு அடிமையாகத்தான் கிடக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை மீசையை முறுக்கிக் கொண்டு அடக்கியாளும் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மீசை பார்ப்பானுக்கு முன்னால் தொங்கித் தரையை தொட்டுவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டும் வீரம் இவர்களிடம் செல்லுபடியாவதில்லை.  இந்த லட்சணத்தில் ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை’ என்று சொல்லிக்கொள்ள இந்த கும்பலுக்கு கொஞ்சமாவது யோக்கியதை உண்டா?


நமக்கு யாரும் தாழ்ந்தவர் இல்லை
உட்சபட்ச காமெடி இது தான். ஒரு வேளை முக்குலத்தோர் சங்கத்திற்கு 123தெரியாமல் இந்த வாசகத்தை போட்டுவிட்டார்களோ என்னவோ! சமூகத்தில் சாதி வேற்றுமை பாராட்டுவதும், தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் தாழ்த்தபட்ட மக்களின் மீதான‌ வன்கொடுமைகளை நிகழ்த்துவதும் இவர்களே என்பதை நாம் ஒன்றும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.  தாழ்த்தப்பட்ட  மக்கள் மீது வன்மத்துடன் பாய்ந்து அவர்களை படுகொலை செய்யும் சாதி வெறியர்கள் நாமக்கு யாரும் அடிமையில்லை என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.  தன் அருகில் உட்கார்ந்த குற்றத்திற்காவே இம்மானுவேலை படுகொலை செய்யச்சொல்லி உத்தரவிட்ட முத்துராமலிங்கன் என்கிற சாதி வெறி பிடித்த‌வனை ஜனநாயகவாதி என்றால் தலித் மக்கள் பின் வாயால் உங்கள் முகத்தில் துப்புவார்கள்.

முக்குலத்தின் முகவரியாக முத்துராமலிங்கத்தை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக முக்குலத்தோரின் முகவரி யாதெனில்,

1. ஆதிக்க சாதிவெறி

2. கொலைகாரர்கள்

3. பார்ப்பானுக்கு அடிமைகள்

இவை மூன்றும் தான் முக்குலத்தோரின் முகவரி.

தற்போது மருதிருவர் குரு பூஜை என்கிற பெயரில் தேவர் சாதி வெறியை கிளப்ப துவங்கிருக்கிறார்கள் தேவர் சாதி சங்கத்தினர். சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும்  ‘தேவர் குருபூஜைக்காக அணி திரளு சொந்தங்களே’  முழக்கத்துடனும்,  “தோழன் என்றால் தோள்கொடு! சாதியில் தேவன் என்றால் உயிரையே கொடு!” என்றும் பிளக்ஸ் பேன‌ர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பானர்களில் போஸ் கொடுக்கிற ஒவ்வொருவனும் தன்டி தன்டி மீசையை வைத்துக்கொண்டு திருட்டுப்பயல்களை போல‌ முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கிழடுகள் உட்பட இளைஞர்கள் வரை அனைவரும் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னையில் தான் குடியிருக்கிறார்கள். நாகரீகமான பெரு நகரத்திற்கு குடி பெயர்ந்த பிறகும் இவர்களுக்கு சாதி வெறி அடங்கவில்லை. சென்னை நகரிலும் வெட்கமில்லாமல் தன்னை தேவன் என்று சொல்லிக்கொண்டு பேனர் வைத்துக்கொள்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட காட்டுவாசிகளாக இருப்பார்கள் என்பதை பார்த்துக்கொளுங்கள். சாதாரணமாவர்கள் மட்டும் இப்படி இல்லை. நன்றாக படித்துவிட்டு  சாலையின் உயர்ந்த கட்டிடங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பொட்டி தட்டுகிற கூட்டமும் கூட, படித்தவனுக்கான எந்த அறிகுறியுமே இல்லாமல் கூச்சமின்றி தன்னை தேவன் என்று சொல்லிக்கொள்கிறது. ஒரு பெரு நகரத்திலேயே வெட்கமின்றி மீசையை முறுக்கிக்கொண்டு திரியும் இந்த சாதி ஆதிக்க வெறியர்கள் தமது சொந்த ஊர்களில் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? தலித் மக்கள் இவர்களிடம் எவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பார்கள் என்பதை உணர முடிகிறதா?

maruthu
மருதுவின் திருச்சி பிரகடனம்

தமது சாதி திமிரையும், வெறியையும் காட்ட குருபூஜை என்கிற பெயரில்  இந்த கூட்டம் மாவீரர்கள் மருது சகோதரர்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. மருது சகோதரர்களின் தன்மானம் எங்கே இந்த பார்ப்பன தாசர்களின் அடிமைத்தனம் எங்கே? மருது சகோதரர்கள் சாதி வெறியர்கள் அல்ல. அவர்கள் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். அவர்களுடைய பெயரை இந்த சாதிவெறி கும்பல் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  அவர்களுக்கு இவர்கள் சூட்டும் சாதி அடையாளத்தை நீக்க நாம் போராட‌ வேண்டும். அதை அந்த சாதியிலுள்ள ஜனநாயக சக்திகள் போராடி முறியடிக்க வேண்டும். மருது சகோதரர்களின் உண்மையான அடையாளம் நிலை நாட்டப்பட வேண்டும்.

ஆதிக்க சாதியினர் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாக நினைக்கவோ, நடத்தவோ கூடாதென்பதை தான் நாம் தமிழகத்தின் பல கிராமங்களில் உழைக்கும் மக்களிடையே பிரச்சாரமாய் செய்துவருகிறோம். தேவர் சாதியிலுள்ள படித்த இளைஞர்கள், சாதியை மறுக்கக் கூடிய ஜனநாயகவாதிகள் தமது சாதிக்கெதிராக போராட வேண்டும். தமது சாதியை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவி விடும் கொலை வெறியாட்டத்தை கண்டிக்க வேண்டும். அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பதன் மூலம் தான் தேவர் சாதி வெறியை வேரறுக்க முடியும். தமது சாதியிலேயே உள்ள பிறரிடம் இது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி அவர்களையும் தனது கருத்துக்கு ஆதரவாக, தனது சாதிக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இல்லையென்றால் தாழ்த்தப்பட்ட மக்களும் மீசையை முறுக்குவார்கள்.  அவர்களுக்கும் அரிவாளைத் தூக்கி நாலுத்  தேவனை போடத்தெரியும்.


தொடர்புடைய இடுகைகள்

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே!

மருதிருவர்

ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?

தோழர்களுக்கும், நண்பர்களுக்கும்,எமது எதிரிகளுக்கும் வணக்கம்.

தோழர் ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும் பொழுது நமக்குள் ஒரு மிடுக்கும், கம்பீரமும்,உற்சாகமும் உண்டாவதை தோழர்கள் அறிவீர்கள்.கம்யூனிச எதிரிகளோ ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டால் அச்சமும் பீதியும் கொண்டு அலறுகிறார்கள்.ஐரோப்பாவில் மட்டுமல்ல நமது ஊர்களில் கூட‌ ஸ்டாலின் என்ற பெயரை கேட்டாலே ஞானஸ்நானம் கொடுக்க வரும் பாதிரிமார்கள் கூட முகத்தை திருப்பிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

stalin

தோழர் ஸ்டாலின் மீது குற்றம் சுமத்துகின்ற,அவதூறு செய்கின்ற‌ அறிவாளிகள்
அத்தனை பேரும் ஸ்டாலினை மட்டும் அவதூறு செய்வதில்லை.நாங்கள் ஸ்டாலினை தான் விமர்சிக்கிறார்கள் மற்றபடி கம்யூனிசத்தை ஏற்கிறோம் என்று யாரும் சொல்வதில்லை. ஸ்டாலினை அவதூறு செய்கிற அனைவரும் கம்யூனிசத்தையும் கட்டோடு வெறுக்கிறார்கள்.இவ்வாறு ஸ்டாலின் சர்வாதிகாரி என்று அவதூறு செய்கிற அத்தனை பேரும் முதலாளித்துவ சுரண்டலையும், ஒடுக்குமுறையையும், சர்ர்வாதிகாரத்தையும் பல வகைகளிலும் நியாயப்படுத்துகிறார்கள்.

எங்கே மீண்டும் ஸ்டாலினுடைய ஆவி எழுந்து வந்துவிடுமோ என்று அஞ்சி இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன‌ பிறகும் அவரைப்பற்றிய அவதூறுகளை முதலாளித்துவ தொடை நடுங்கிகள் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்கள். இதற்கு தமிழகமும் விதி விலக்கல்ல, தமிழ்நாட்டில் உள்ள இலக்கியவாதிகள் முதல் சினிமாக்காரன் வரை அனைவருக்கும் ஸ்டாலின் ஜீரம் பிடித்தாட்டுகிறது. தமிழ் பதிவுலகிலும் சில மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாப்பத்திற்குறிய பிறவிகள் ஸ்டாலின்-சர்வாதிகாரம்- சோவியத்- கமிசார்கள் என்று பினாத்திக்கொண்டு இணைய வெளிகளில் அலைந்து திரிகின்றன. இவ்வாறு அவதூறு செய்கிறவர்களில் இரண்டு வகை உண்டு ஒன்று அ.மார்க்ஸ்,எஸ்.வி. ராஜதுரை அறிவாளி வகையறா, இரண்டாவது ஜெயமோகன், K.Rஅதியமான்,அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ கோமாளிகளின் கூட்டம்.இந்த‌ இரண்டு தரப்புக்கும் இடையே பல கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இரண்டும் ஒன்றுபடும் ஒரு புள்ளி  இருக்கிறது, அது தான் கம்யூனிச எதிர்ப்பு. பித்தம் தலைக்கு ஏறிப்போய் கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளை மட்டுமே எழுதும் ஒரு நபர் தமிழ் பதிவுலகில் இருக்கிறார்,அவர் தான் தமிழ்மணி.இவருக்கு கம்யூனிச எதிர்ப்பு என்பது படித்து பெரிய ஆள் ஆன பிறகு ஏற்பட்டது இல்லையாம், பிறக்கும் போதே இவர் கம்யூனிச எதிர்ப்பாளனாகத் தான் பிறந்தாராம். அந்தளவிற்கு முதலாளித்துவ வெறி , தோழர் ஸ்டாலின் மீது பயம்!

தோழர் ஸ்டாலின் பற்றியோ கம்யூனிசம் பற்றியோ அறிந்திராத புதிய நபர்கள்
இது போன்றவர்களின் பொய்களையும் அவதூறுகளையும் வாசிக்க நேரிடும் போது அவற்றை உண்மை என்று கூட‌ நம்பி விடும் அபாயமும் உள்ளது. இவர்கள் ஸ்டாலின் பற்றியும் சர்வாதிகாரம் பற்றியும் எந்த அடிப்படையிலிருந்து பேசுகிறார்கள். இவர்கள் கூறும் ‘உண்மை’ எங்கிருந்து எடுக்கப்படுகிறது ? அனைத்து தரவுகளையும் இவர்கள், மேற்குலக நாடுகள் லட்சக்கண‌க்கில் மலிவு விலையில் அச்சடித்து போட்ட ஸ்டாலின் பற்றிய திகில் கதைகளிலிருந்து தான் எடுக்கிறார்கள்.இதில் ஒன்றாவது உண்மையா என்றால் இல்லை. ஸ்டாலின் பற்றிய‌ புத்தகங்களை லட்சக்கணக்கில் அச்சடித்து சந்தைக்கு இறக்கிய அனைவரும் அமெரிக்கா ஐரோப்பாவின் மிகப்பெரிய முதலாளித்துவ முதலைகள் யாரும் நேர்மையான பத்திரிகையாளர்கள் கிடையாது. முதலாளிகளுக்கு ஸ்டாலின் சர்வாதிகாரி தான்.அதனால் தான் அவர்கள் ஸ்டாலின் என்கிற பெயரை கேட்டாலே இப்போது உட்கார்ந்த இடத்திலேயே கக்கா போகிறார்கள்.

தமிழ் பதிவுலகில் தோழர் ஸ்டாலின் பற்றிய செய்யப்பட்டுவரும் பொய் பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் அம்பலமாக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த பதிவு எழுதப்படுகிறது. புதிய நபர்களுக்கும், இளைஞ‌ர்களுக்கும் ஸ்டாலின் பற்றிய‌ பொய்களை விலக்கி உண்மையை காட்டும் நோக்கில் தான் இந்த பதிவு எழுதப்படுகிறது.கம்யூனிசத்தை பற்றியும் கம்யூனிச கொள்கையை உயர்த்தி பிடித்த மேதைகளை பற்றியும் இன்றைய சூழலில் அறிந்து கொள்வதென்பது முக்கியமானது.அதன் முன்னெடுப்பாக தோழர் ஸ்டாலினை பற்றிய வரலாற்று நிகழ்வுகளை சர்வதேசவாதிகள் தளத்தில் புதிய நபர்களுக்காகவும், கம்யூனிசத்தின் மீது பற்று கொண்டோருக்காகவும்,அவதூறுகளை உண்மை என நம்பியவர்களுக்காகவும் நாம் பதிக்கவிருக்கிறோம்.  தோழர் ஸ்டாலினை பற்றியும் அவர் காலத்திய‌ வரலாற்றை பற்றியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அவற்றை ஒன்று இரண்டு பதிவுகளுக்குள் அடக்க  முடியாது என்னும் காரணத்தினால் சில தொடர் பதிவுகளாக எழுத‌லாம் என்னும் நோக்கில் நாம் பயணிக்க இருக்கிறோம். தோழர் ஸ்டாலின் பற்றிய பதிப்பு பதிக்கும் முன்னர் அவரின் தனிமனித குணாம்சங்கள்,அவரின் ஆளுமை, அவரின் மீதான விமர்சனங்கள் ஆகியவைகளை பற்றி நம்முடைய பார்வை.

stalin2

வரலாற்றின் மாபெரும் புரட்சி நாயகர்களில் ‘ஜோசப் ஸ்டாலின்’ தனிப் பெருமை பெற்று விளங்குகிறார். அவர் மார்க்ஸிய லெனினியத்தின் சிறந்த மாணவனாக‌த் திகழ்ந்தார். தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா வின் புரட்சிகர நடவடிக்கைகள் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தது. மனித குல முன்னேற்றத்துக்குப் புதிய திசையைக் காட்டியது. மார்க்ஸிய லெனினிய–கோட்பாடுகளின் ஒளியில் மனித குலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. சோவியத் ரசியாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல அவர் மாபெரும்  இருந்தார்.அவர் மீதான  ‘தனி நபர் வழிப்பாட்டு முறை’ என்னும் குற்றச்சாட்டை கம்யூனிச  எதிர்ப்பாளர்கள் வைக்கின்றனர். ஆனால்  ‘தனி நபர் வழிபாட்டு’ முறைக்கு காரணமாக ஸ்டாலின் இருக்கவில்லை.

பின் யார் இதை துவக்கியது? யார் இதை பரப்பியது? யார் இதை நீட்டிக்க செய்தது? குருஷேவ், காரல்ரதேக், அனஸ்தாஸ் மிகோயான் மற்றும் திருத்தல்வாதிகள் என்பதே இதற்கு பதிலாகும்.

ஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர்?

‘தவறுதல் மனித இயல்பு’ ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ, தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும்போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அவரது மேன்மைகளையும் வரலாற்று பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல.

தோழர் ஸ்டாலின் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒரு கம்யூனிஸ்டுக்கு சுயவிமர்சனம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தோழர்களுக்கு எடுத்து காட்டியவர் தான் தோழர் ஸ்டாலின்.

சுயவிமர்சனம் குறித்து ஸ்டாலின் கூறியது.

”நமது கட்சியின் தொண்டர்களில் பலர் சுயவிமர்சனத்தை விரும்புவதில்லை என்பதை நான் அறிவேன்.நமது கட்சியின் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்கள்.சுயவிமர்சனம் என்ற கோசத்தைப் புதிய ஒன்றாக கருத முடியாது. கட்சியின் அடைப்படையாக அது உள்ளது. ஒரு கட்சியால் கம்யூனிஸ்டு கட்சியால் வழி நடத்தப்படும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ நமது நாட்டில் உள்ளதால் நாம் முன்னேற விரும்பினால் நமது குறைகளை நாமே வெளிப்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். நமது வளர்ச்சியின் மிக முக்கிய உந்து சக்தியாக சுயவிமர்சனம் இருக்க வேண்டும்.”

தலைவர் தொண்டர்களுடான உறவை பற்றிகூட தோழர் ஸ்டாலின் நீண்ட உரையாற்றியிருக்கிறார்.

“அண்மை காலத்தில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு விசித்திரமான உறவு முறை தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் பொது மக்களால் நெருங்க முடியாதவர்களாக தலைவர்கள் மாறி இருக்கிறார்கள். மறுபக்கம் உழைக்கும் வர்க்க வெகுமக்கள் கண் இமைக்காது கீழிருந்து மேல் நோக்கி தலைவர்களைக் காணத் தொடங்கியிருக்கிறார்கள். அரிதாகக் கூட அவர்களை விமர்சனம் செய்ய அஞ்சுகின்றனர். பொது மக்களின் தொடர்பை இழக்கும் தலைவர்கள், தலைவர்களிடமிருந்து விலகிச் செல்லும் பொதுமக்கள் என்ற நிச்சயமான அபாயம் இதனால் ஏற்படுகிறது.. இந்த அபாயம் தலைவர்களை இறுமாப்புடையவர்களாக ஆக்கிவிடும், தவறே செய்யாதவர்கள் என்று தன்னை பற்றி கருத வைக்கும். உயர் தலைவர்கள் தற்பெருமை கொண்டவர்களாக மாறி பொது மக்களை கீழானவர்களாக பார்த்தால் என்ன நன்மையை எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக இதிலிருந்து கட்சிக்கு அழிவு தவிர வேறு எந்த பயனும் ஏற்படாது. பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்த சுயவிமர்சனம் என்ற வால்வை எல்லா நேரங்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். சோவியத் மக்கள் தங்களின்  தலைவர்களை எந்த நேரத்திலும் சந்திப்பதற்கும் அவர்களின் தவறுகளை விமர்சனம் செய்வதற்கும் சாத்தியமான நிலையை நாம் உருவாக்க வேண்டும்.இதன் மூலம் தலைவர்கள் இறுமாப்பு கொண்டவர்களாக மாறமாட்டார்கள்.தங்களின் மக்களிடமிருந்து விலகி செல்ல மாட்டார்கள்.

stalin_childhoodஇரண்டாம் உலகப் போரில் தன் மகனை பறிகொடுத்து தன் தாய்மண்ணை காக்க மக்களை வழிநடத்தி இங்கிலாந்து,அமெரிக்காவும் அஞ்சி நடுங்கிய‌ பாசிச ஹிட்லரை வீழ்த்தி பாசிச கரங்களில் பிடிபட்டிருந்த‌ மக்களை விடுவித்தவர் தோழர் ஸ்டாலின், அவருடைய‌ ஆளுமை திறனை யாராலும் மறுக்க இயலாது.

தோழர் ஸ்டாலின் எளிமையாகவே தன் வாழ்நாளை கழித்தவர். ஹென்றி பார்ஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஸ்டாலின் வாழ்க்கை முறை பற்றிய சித்திரத்தை தீட்டிக்காட்டுகிறார்.

”ஒருவர் முதல் மாடிக்கு சென்றால் மூன்று ஜன்னல்களில் வெள்ளை திரை சீலைகள் தொங்கக் காணலாம். இந்த மூன்று ஜன்னல்களுக்குள் தான் ஸ்டாலின் வீடு.அந்த சிறிய ஹாலில் சட்டை மாட்டும் கொம்பில் ஒரு தொப்பிக்குப் பின்னால் நீளமான ராணுவ அங்கி தொங்கிக் கொண்டிருந்தது. இந்த ஹாலோடு இரண்டு படுக்கை அறைகளும் ஒரு சாப்பிடும் அறையும் இருந்தது.படுக்கை அறைகள் மிகவும் எளிய முறையில் அமைந்திருந்தன. மூத்த மகன் யாகூவ் இரவு நேரத்தில் சாப்பாட்டு அறையில் போடப்பட்டிருந்த படுக்கையாக மாற்றப்பட்ட சோபாவில் தூங்கினான்.இளைய மகன் வாசிலி அறையின் ஒதுக்கு புறமாய் இருந்த ஒரு சிறிய இடத்தில் தூங்கினான்.அவரது மாத வருவாய் ஐநூறு ரூபிள்கள்.மிகவும் குறைவான இந்த ஊதியம் தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இன்றைய போலி ஜனநாயகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முதல் நகராட்சி கவுன்சிலர் வரை செய்யும் ஊழல் நமது நாட்டில் தலைவிரித்தாடுகிறது.இதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.ஆனால் ஸ்டாலின் மீதான அவதூறு வீசுபவர்களும் அவர் மீது ஊழல் பற்றிய வார்த்தைகளை உதிர்க்க கூட முடியாத அளவிற்கு அவர் நேர்மையாகவே தன் வாழ்நாளை கழித்தார்.

தனது கொள்கையில் தெளிவு,விமர்சனம் சுயவிமர்சனம், எளிமையான வாழ்க்கை,கம்யூனிஸ்ட் ஆளுமை இவைகளே ஒருவரை நல்ல தலைவராக உருவாக்கும் பண்புகள். இவைகளே தோழர் ஸ்டாலினையும் தலைவராக உருவாக்கியது.

-இனி அடுத்த பதிப்புகள் தொடர் பதிப்புகளாக

நம் தளத்தில் வெளிவரும்…


தொடர்புடைய இடுகைகள்

ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1

ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2

அவ‌தூறுகளுக்கு ஓர் மறுப்பு ரசியப்புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்ராலின்:எஸ்.பாலச்சந்திரன்

சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்! அசுரன்

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்! அசுரன்

மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!! அசுரன்

ஸ்டாலின் எதிர்ப்பில் ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி!

தமிழ்தேசியம்-பாசிசத்தை நோக்கிய பயணம்!!

சினிமாவால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து இன்னொரு பக்கம் கிரிக்கெட் பல மணி நேரங்களை பறித்தெடுக்கிறது. வீட்டிலிருந்தாலோ மானாட மயிலாட கன்றாவியை பெற்றோர்களே பிள்ளைகளின் மூளைக்குள் நுழைக்கிறார்கள்.ந‌ம்மைச்சுற்றி இது போன்ற கலாச்சார சீரழிவுகள் நிரம்பியுள்ள இன்றைய‌ சூழ‌லில்,இவையே இளைஞர்களால் அதிகமும் பேசப்படுகின்ற விசயமாகவும் இருக்கும் இன்றைய சூழலில், தமிழ் உணர்வு பற்றி,சமூகத்தை பற்றி அரசியல் நிகழ்வுகள் குறித்து ஈழப்பிரச்சனை ஒரு குறிப்பிட்ட (குறைவான எண்ணிக்கை தான் என்றாலும்) இளைஞர்களையாவது உணர்வு என்கிற அளவிலாவது தட்டி எழுப்பியுள்ளது. அரசியல்வாதிகளின் ஓட்டுக்கான உணர்வாய் மட்டும் போலியாய் இருப்பதுபோல இல்லாமல் உண்மையான ஈழ மக்களுக்கான உணர்வாக இளைஞர்களின் மத்தியில் இருந்தது. அதை உலகிற்கு அறிவித்தது தியாகி முத்துகுமரனின் தியாகமும்,அதை தொடர்ந்த‌ சிலரின் தியாகச் சம்பவங்களும்.

muththukumarதியாகி முத்துக் குமரனின் மரணம் ஏற்படுத்திய எழுச்சி பல கல்லூரிகளில் இளைஞர்களிடையே, உண்ணாநிலை போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று பல வடிவங்களில் வெளிப்பட்ட்து. அந்த எழுச்சியை வற்றச்செய்ய‌ ஓட்டுச் சீட்டு அரசியலில் சகுனியான கருணாநிதி எல்லா கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை விடுத்து மாணவர்களை கலைத்தும்,எம்.பி. பதவிகளை காப்பாற்றிக்கொள்ள ஈழ மக்களை கொல்ல அனுமதித்தையும் நாம் கண்டோம். ‘புலிகள் தீவிரவாதிகள்’,’போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று ஈழத்திற்கு எதிராகவே பேசி வந்த பாசிச பாப்பாத்தி ஜெயலலிதா திடீரென்று ஒரு நாள், ‘நான் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைப்பேன்’ என்று பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகளின் மீதெல்லாம் இளைஞர்களுக்கு என்றும் நம்பிக்கையும் இருந்ததில்லை, மரியாதையும் இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே! எனினும் பாசிச ஜெயலலிதா வின் ‘ஈழம்’ பற்றிய அறிவிப்பின் மீது ஒரு நப்பாசை இருந்தது என்பதும் உண்மை.

ஈழ போராட்டங்களில் போராடிய மாணவர்களும் இளைஞர்களும் ஓட்டு சீட்டு அரசியலில் பங்கு பெறாத பல வகைப்பட்ட‌ தமிழ் தேசியவாதிகளின் பேச்சையே நம்பினார்கள்.அவர்கள் பின்னாலேயே அணி திரண்டார்கள்.ஓட்டு சீட்டு அரசியலில் பங்கு பெறாத இந்த தமிழினவாதிகள் தான், தேர்தல் வந்தவுடனே ‘காங்கிரசுக்கு போடும் ஓட்டு தமிழத்துக்கு வைக்கும் வேட்டு’ என்று கூறி பாசிச‌ ஜெயாவைவும் பிற ஓட்டுப்பொறுக்கிகளையும் ஆதரித்து ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று கூறி அவர்களுக்காக பிரச்சாரம் செய்தார்கள். இதனால் சில இளைஞர்களுக்கு தமிழினவாதிகளின் கருத்துக்களுடன் முரண்பாடுகளும் ஏற்பட்டது.சில பிரிவு இளைஞர்கள் இந்த நட்சத்திர பேச்சாளர்கள் என்ன பேசுகிறார்களோ,அதையே இவர்களின் கருத்தாகவும் நியாயப்படுத்தி ஒருவாறு ஓட்டு சீட்டு தமிழினவாதிகளின் கருத்துகளோடு ஒன்றிப்போனார்கள்.

ஈழப்போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் தமிழினவாதிகள்,போலி ஜனநாயகத்தில் தன் கருத்தின் பலத்தை காட்டும், உரிமையை எதிர்பார்க்கும் தேர்தல் களத்தில் பயணிக்க வைத்தனர்,பழக்க வைத்தனர். இளைஞர்களுக்கு ஓட்டு மட்டுமே ஆயுதம் எனும் பாடம் கற்பிக்கப்பட்ட நிலையில் ஓட்டு போட்டு நம் பலத்தை காட்டவேண்டும் என்று இளைஞர்களை ஓட்டு போட திசை திருப்பி அவர்கள் ஆதரிக்கும் ஓட்டு சீட்டு கட்சிகளுக்கு ஆரவாய் தேர்தலில் பிரச்சாரமும் செய்ய வைத்தனர்.உலகத்தை புரட்டி போடும் அவர்களின் கரங்களை வாக்குச்சாவடியில் பொத்தானை அழுத்த வைத்தார்கள் தமிழின‌வாதிகள். இந்த போலி ஜனநாயகத்தில் உரிமைகள் ஓட்டு போடுவது மூலம் மட்டும் எப்படி கிடைக்கும் என்பதை மறந்து அவர்களும் ஓட்டு போடும் ஜனநாயக கடமையில் மூழ்கி போயினர்.

‘சிங்களவர்கள் கிளிநொச்சியை நெருங்கி விட்டார்களாம். கிளிநொச்சி மட்டுமல்ல, கிளிக்குஞ்சியை கூட‌ சிங்களவர்களால் பிடிக்க முடியாது’ என்று ஓட்டுப்பொறுக்கும் மேடைகளில் தமிழின‌ பேச்சாளர்கள் புலிகளை பற்றிய வீர சாகச பேச்சுக்களினால் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளை உரமேற்றிக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் தேசியத் தலைவன்,எங்கள் அண்ணனுக்கு எதுவும் நேராது. நாங்களெல்லாம் யார் தெரியுமா ? நாங்கள் எல்லாம் வீரத்தமிழினம்!’ எனும் தொணியிலேயே பேசி பேசி இளைஞர்களின் உளவியலையும் மாற்றினார்கள்‌. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் கனத்த செய்தி வந்தது அது அனைவரின் இதயத்தையும் ஆழமாக‌ பதம் பார்த்தது.ஆம். புலிகளின் பாரிய பின்னடைவு, புலித்தலைமை படுகொலை என்று ஊடகங்களில் செய்திகள் பரவின. இதுகாறும் புலிகளுக்கு எதுவும் நேராது,வீரத் தமிழினம் தோற்காது.அண்ணன் களமாடி வெல்வார் என்று தன் எண்ணத்தில் ஈழத்தையும் பிரபாகரனையும் வைத்திருந்தவர்களின் நம்பிக்கை ஆட்டம் காணத் துவங்கிய‌து. அப்போதும் புலிகள் யாரால் இந்நிலையை அடைந்தார்கள் என்று இளைஞர்களுக்கு கேள்வி கேட்கத் தோன்றவில்லை. அப்படியே அவர்கள் கேள்விகள் எழுந்தாலும் ‘காங்கிரஸ்’ என்னும் ஒற்றை சொல்லில் அவர்களுக்கு அவர்களே பதிலளித்து கொண்டனர். இப்படித்தான் அரசியல் கற்பிக்கப்பட்டு ‘காங்கிரஸ்’ எனும் ஒற்றை சொல்லில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்த தமிழினவாதிகளையும், புலித் தலைமைக்கு தவறான வழிகாட்டிய தமிழின அரசியல்வாதிகளையும் இனங்கான மறந்தனர்.ராஜீவ் காந்திக்காக‌ காங்கிரஸ் அர‌சின் மூலம் சோனியாவின் பழிவாங்கும் போக்கு என்கிற பேச்சில் மூழ்கி இந்தியா தான் இந்த‌ போரை நடத்துகிறது என்பதையும், அதற்கு அடிப்படையான வர்க்க அரசியலையும் காண மறுத்தார்கள். நாம் அப்போது இந்தியாவின் ஆளும் வர்க்கம் தான் இந்த‌ போரை நடத்துகிறது. இந்திய மேலாதிக்கம் தான் இந்த போருக்கு காரணம். காங்கிரஸ் மட்டுமல்ல நீங்கள் கொண்டு வர நினைக்கும் பி.ஜே.பி யாக‌ இருந்தாலும் இதையே தான் செய்யும். பிரச்சனை பி.ஜே.பி யா காங்கிரசா என்பத‌ல்ல என்று கூறி இந்த போரில் இந்தியாவின் நலன்களை அம்பலப்படுத்தினோம். ஆனால் ஆளும் வர்க்கம் கிடையாது,ஆரியம் தான் போரை நடத்துகிறது என்று நமக்கு அறிவுரை கூறிய தமிழினவாதிகள் இன்று மெல்ல மெல்ல நம் கருத்தை கொலைப்புற வழியாக நுழைத்து, மீசையில் மண் ஒட்டவில்லை எனும் தொணியில் ஆங்காங்கே பேசிவருகின்றனர்.

சென்னையில் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய தாமரை ‘சோனியாவோ, காங்கிரசோ இன அழிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா தான் ஏற்படுத்தியது. அங்கே பி.ஜே.பி யே இருந்தாலும் அதை தான் செய்திருக்கும் என்று இந்தியாவை சாடி பேசினார்.ஆனால் அக்கருத்தை தமிழ் தேசியத்திற்கான பேச்சாக லாவகமாக பேசினார். இன்றும் தமிழ் தேசியவாதிகள் இளைஞர்களை தக்க வைக்க என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ‘அண்ணன் களமாடுவான், திரும்பி வருவான்’ என்று இயேசு நாதர் வருவார் என்று பாதிரியார்கள் கிறித்தவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதை போல‌ நம்பிக்கையையும்,உணர்ச்சியையும் மட்டுமே அளிக்கக்கூடிய உபவாச கூட்டங்களைத் தான் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் தமிழ் தேசியவாதிகள் குழம்பிய‌ நிலையிலிருந்து தமது தமிழ்தேசிய தத்துவத்தின் சாரமான ‘பாசிசத்தை’ நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வ‌ருகிறார்கள். இளைஞர்களும் அந்த குழப்பமான பேச்சுக்களை தெளிவாகவே கேட்கிறார்கள். சமீப காலமாக‌ சீமான், மணியரசன் போன்றோர் பேசிய பேச்சுக்களே இதற்கு சிறந்த‌ உதாரணம்.mumbai_mnes21

 

 

 

 

 

 

 

மும்பை கூட்டத்தில் பேசிய சீமான், ‘பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய‌ அரும்புதல்வர் ராஜ் தாக்கரே ஐயாவை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். மராட்டிய இனத்திற்காக அவர் எவ்வாறெல்லாம் போராடுகிறாரோ அதையெல்லாம் பார்த்தாவது நாம் இன உணர்வு கொள்ளவேண்டும்’ என்று பேசியிருக்கிறார். வடநாட்டு உழைப்பளிகளை அடித்து அவர்களை மும்பையை விட்டு வெளியேற்ற, இனவெறி விசத்தை கக்கிய‌ ராஜ் தாக்கரேவை நாம் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவேண்டுமாம். மும்பைக்கு கூலி வேலைகளுக்கு பிழைப்பு தேடி வந்த‌ பிகார்,உத்திரபிரதேச உழைக்கும் மக்களைத் தாக்கி வெறியாட்டம் போட்ட கும்பலை,அந்த மக்களில் சிலரை கொலையும் கூட செய்த பார்ப்பன இனவெறி பாசிஸ்டுகளை ஆதரிக்க வேண்டும் என்கிறார் இந்த சீமான், எனில் இவருக்கு எவ்வளவு தமிழின போதை மண்டைக்கு ஏறியிருக்க வேண்டும். மும்பையில் இருக்கும் சில‌ தமிழரும் இந்த இனவெறி பேச்சை ஆதரித்து ராஜ் தாக்கரேயின் தரப்பு நியாயமானது என்றும் கருதுகின்றனர். பாசிசம் இப்படித்தான் ஆதரவை பெறுகிறது!

தாக்கரே என்கிற‌ பாசிச கும்பல் அங்கிருக்கும் உழைக்கும் வடநாட்டவரை வெறித்தனமாக தாக்குகிறது. இதை சரியென்கிறார்கள் என்றால், நாளை அந்த அடி உதைகள் தமிழன் மீதும் திரும்பும், அப்படி திரும்பினால் அப்போதும் தமிழினவாதிகள் ராஜ்தாக்கரேவிற்கு ஆதரவளிப்பார்களா ? அப்போதும் ராஜ் தாக்கரேயின் இன உணர்வை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவார்களா? மண்ணின் மைந்தன் ராஜ்தாக்கரே மண்ணை காப்பாற்ற அடித்தானே அவர்கள் அனைவரும் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் தினக்கூலிகள், டாக்ஸி ஓட்டுனர்களும் பெட்டிக்கடையும், பானி பூரி கடையும் வைத்திருந்த சாதாரண 

உழைக்கும் மக்க‌ள்.இதே வீரர் இம்மண்ணில் காலூன்றி தனது மராத்தா இனத்தின் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் ரிலைன்ஸ்,டாடா போன்ற பெரும் முதலைகளை அடிக்கவில்லையே ஏன்? அவர்களுக்கெதிராய் குரலும் எழுப்பியதில்லையே ஏன்? இது தான் அவர்களின் இன உணர்வு.உழைக்கும் வடநாட்டு மக்களுக்கெதிரான இன உணர்வு.

இதே இன உணர்வுடன் கர்நாடகாவில் தமிழனை அடித்தால்,அப்போது மட்டும் கன்னடன் அடிக்கிறான் என்று கூப்பாடு போடுவது ஏன் ? பிறரை அடித்தால் ஆதரவளிப்பது தன்னை அடித்தால் மட்டும் கூப்பாடு போடுவது இது தான் தமிழினவாதிகளின் அரசியல்.இது தான் மாந்தநேயமிக்க தமிழ்தேசிய அரசியலா ? அடிப்பவனை திருப்பி அடிப்பதில் தவறில்லை. ஆனால் அடிப்பவனை விடுத்து ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாய் தன் காலத்தை கழிக்கும் உழைப்பாளிகளை அடிப்பது வீரமல்ல.அது தான் பாசிசமாக மாறும் இனவாதம். உழைக்கும் மக்களுகெதிரான குரல் தான் தமிழ் தேசியவாதிகளின் குரல் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

copy-of-getimage3

 

 

 

 

 

 

 

தமிழினவாதிகள் தமது அரசியல்  பாமரத்தனத்தை தாமே பொது மேடைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தம்மைத் தாமே முட்டாள் என்று கூட்டத்தில் வைத்து அறிவித்துக் கொள்கிறார்கள்.சீமான் தனது மும்பை உரையில் ‘சே குவேரா உருவம் பொறித்த டீ சர்டை ஆரம்பத்தில் நான் தான் அணிந்திருந்தேன்.அதை தமிழகத்துக்கும் நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன். பிறகு ‘தம்பி’ படத்தின் மூலம் கதாநாயகனையும் அணியவைத்து பரவலாக பிரபலமாக்கினேன்.எனது காரிலும் ‘சே’ ஸ்டிக்கர் தான் ஒட்டியிருந்தேன்.ஆனால் அவருடைய‌ நாடு(கியூபா) இன்று சிங்களவனுக்கு ஆதரவாய் ஐ நா அவையில் வாக்களித்துவிட்டது.எனவே அன்றிலிருந்து இந்த டீசர்டை அணிவது தவறு என்று உணர்ந்து அதை அணிவதில்லை தற்போது அண்ணன் பிரபாகரன் டீ சர்டை அணிந்து வருகிறேன்’ என்றார். சீமான் தனது அரசியல் பாமரத்தனத்தை அறிவுள்ளவரைப் போல‌ பேசியிருக்கிறார். கியூபா தவறிழைத்ததால் சே குவேரா டீ சர்ட் அணியவில்லையாம். என்ன கொடுமைடா இது! ‘பெரியாரின் பேரன்’ என்று சொல்லிக்கொள்ளும் சீமான் அவர்களே, மனங்கெட்ட மாமாப்பயல் கி.வீரமணி ஆயிரம் தப்பு பன்றான் அதுக்காக‌ பெரியாரை விட்டு விடுவீர்களா? நாளையிலிருந்து பெரியார் பற்றி பேசவே மாட்டேன் என்று சொல்லிவிடுவீர்களா ?

ஒருவகையில் நீங்கள் ‘சே’ விட்டு விலகியதும் நல்லது தான். உங்களை முன்னிட்டு ‘சே’வுக்கு அவப்பெயராவது ஏற்படாம‌ல் இருக்கும்!

தற்போது சென்னையில் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய த.தே.பொ.க மணியரசனோ அபாயகரமான சில விசயங்களை பேசினார்.அதில் அபாயம் மட்டுமல்ல அபத்தமும், நகைச்சுவையும் கூட இருக்கிறது! அனைத்திற்கு மார்க்சியத்தை துணைக்கு அழைத்துக்கொள்ளும் இந்த இனவாதி என்ன பேசினார் தெரியுமா ? இந்திய உளவுத்துறையான‌ ‘ரா’   (RAW) தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித் திட்டத்தை வைத்திருக்கிற‌தாம்.அந்த திட்டப்படி, அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவிலுள்ள மற்ற தேசிய இனங்களை எல்லாம் தமிழகத்திற்குள் குடியேற்றி தமிழ் இனத்தை இல்லாமல் செய்யப் போகிறதாம் ‘ரா’.இந்த‌ திட்டப்படி தமிழர்களிடையே இனக்கலப்பை உண்டாக்கி தமிழ் இனத்தை அழிக்க பார்க்கிறதாம் ‘ரா’, தமிழினத்திற்குள் கலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்களாம்! அதை அழிக்க பார்க்கிறார்களாம் ! எனவே நாம் உடனடியாக விழிப்படைந்து இதை தடுத்து நிறுத்த போராடாவிட்டால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் இனம் என்று ஒரு இனமே இருக்காது, நாம் கலப்பினமாக மாற்றப்படுவோம் என்று கூட்டத்தை மிரட்டி பயமுறுத்திவிட்டார். இது கூட்டத்தின் காமெடி. சீரியஸ் விசயம் என்ன தெரியுமா ? தமிழின பாசிசம்! தான் மணியரசன்பேச்சில் கவனிக்கத்தக்க சீரியசான‌ விசயம். ‘ரா’ வின் இந்த திட்டத்தை முறியடிக்க நாம் விழித்துக்கொண்டு போராட வேண்டும் என்று கூறிய மணியரசன் அதற்கு ஒரு வேலைத்திட்டத்தையும் கூறினார் அதாவது ‘மொழிவாரி மாநில பிரிவினைக்கு பிற‌கு தமிழகத்தில் குடியேறிய அனைத்து வேற்று மொழி, இன மக்களையும் தமிழகத்தை விட்டு கட்டாயமாக‌ வெளியேற்ற நாம் போராட வேண்டும்’ என்றார். எப்பேர்பட்ட பாசிசம்! ‘பொதுவுடமை’ கட்சி என்று தனது கட்சிக்கு ‘சிவப்பு’க் கலரில் பெயரை வைத்துக்கொண்டு இப்படி இனவாத பாசிசத்தை வெட்கமில்லாமல் தமிழ்தேசியம் என்கிற பெயரில் விதைத்து வருகிறார் இந்த‌ மணியரசன்.INDIA

 

 

 

 

 

 

இனக்கலப்பு இன வேற்றுமைகளை களையும். சாதிகலப்பு சாதிய வேற்றுமைகளை களையும். இதையே அண்ணல் அம்பேத்கரும் தன் ஆய்வுநூலில் அக மணமுறைக்கெதிராக சாதி கலப்பு திருமணமாக குறிப்பிடுகிறார். மணியரசனின் இந்த எதிர்ப்புக்குரல் உழைக்கும் மக்களையும் உழைப்பாளனாக காணாமல் இன்னொரு இனமானவன் என்றே காணும் வேறுபாட்டுக் கருத்தையே நாம்மை கொள்ளச்செய்கிறது. ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த நாம் இன வேறுபாடின்றி மற்ற இனத்தவரையும் உழைக்கும் வர்க்கமாய் காணவேண்டும்.ஆனால் தமிழினவாதிகள் இங்கு வந்து குடியேறிய உழைக்கும் மக்களை உழைக்கும் வர்க்கமாய் பார்க்காமல் அவர்களை இனவாதிகளாகவே கண்டு அவர்களுக்கெதிராய் குரல் கொடுகின்றனர்.ஆனால் இவர்களின் குரல் ஒரு போதும் இங்கு குடியேறிய பெரிய முதலாளிகளையும்,உழைக்கும் மக்களை வட்டி மூலம் சுரண்டி கொழுக்கும் தொழும்பர்களிடத்தும் ஒலிப்பதில்லை.

மற்ற தேசங்களிலிருந்து குடியேறிய உழைக்கும் மக்களை இனவாதிகளாக பார்க்கும் இனவாதிகளை பார்த்து மாமேதை லெனின், “கடும் வறுமையால் மட்டுமே மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதில் ஐயமில்லை, முதலாளியம் மிகவும் வெட்கமற்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறிய தொழிலாளிகளைச் சுரண்டுகிறது என்பதிலும் ஐயமில்லை.ஆனால் பிற்போக்குவாதிகள் மட்டுமே தேசிய இனங்களின் இந்த நவீன குடியேற்றத்தின் முற்போக்கான முக்கியத்துவத்தை பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வர்”. என்றார். (லெ.தொ.நூ. 19.454)

தமிழ்தேசிய உணர்வால் இனவாத அரசியலில் செல்லும் இளைஞர்களே! இனக்கலப்பு ஏற்படுவதை கண்டு அச்சப்படும் தமிழினவாதிகளை போலத்தான் ஆதிக்க சாதிவெறியனும் சாதிகலப்பு ஏற்பட்டுவிடும் என்று அச்சப்படுகிறான். இனவாதிகள் அச்சப்படுவது சரியானால் ஆதிக்க சாதியாளனின் கருத்தும் சரியா?? சாதிக்கலப்பு திருமணங்களை ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் இன்னொரு இனத்தோடு தமிழினத்திற்கு கலப்பு ஏற்பட்டால் அது தீட்டா ? என்ன ஒரு பகுத்தறிவு தீண்டாமை! சாதியொழிந்து இனங்களிடையே கலப்பு ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். நாடுகளிடையே எல்லைகளை தகர்த்து சமத்துவ சமுதாயம் படைக்க சாதி மறந்து,இனங்கடந்த உழைக்கும் வர்க்கத்தால் மட்டுமே சாத்தியம். சாதியில் பரிசுத்தத்தை கட்டிக்காக்க நினைக்கும் பார்ப்பன கருத்தைப் போல்வே இனத்தில் பரிசுத்தத்தை கட்டிக்காத்து நிலை நாட்ட முயலும் தமிழ் தேசியக் கருத்தும் பாசிசமே அன்றி வேறில்லை!

chenagalpattu41

  •  
    • தமிழினவாதிகளின் கருத்து இளைஞர்களின் உணர்வை உரமேற்றலாம்.ஆனால் அறிவை மங்கச் செய்கிறது என்பதை நாம் உணரவேண்டும். தேர்தலில் ‘ஈழத்தை எதிர்ப்பது காந்தியாகவே இருந்தாலும் நாம் காந்தியை எதிர்ப்போம். ஆதரிப்பது கோட்சேவாக இருந்தாலும் கோட்சேவை ஆதரிப்போம்’ போன்ற அரசியலடிப்படையற்ற பேச்சுக்கள் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. ராஜ் தாக்கரே என்னும் இனவாதியை நாம் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகள் தான் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. இனக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது எனும் இன பரிசுத்ததை ஆதரிக்கும் இனவாதம் தான் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. அரசியலடிப்படையற்று இவர்கள் பின்னால் செல்லும் தோழர்களே! அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் உள்ள தோழர்களே! சிந்தியுங்கள்! இந்த பாதை பாசிசத்தை நோக்கிப் போகும் பாதை என்பதை கண்களை திறந்து கொண்டு காணுங்கள்.