உன்னைப் போல் ஒருவன் – யார் நீ????

yaar nee

ஆழ்வார்பேட்டை ஆண்டவர் நாத்திகர், முற்போக்காளர், எந்த மதத்தையும் சாராதவர் என்றெல்லாம் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழு உண்மையா என்றால் இல்லை என்று நாம் மட்டும் கூறவில்லை தனது நடைமுறையின் வாயிலாக அவரே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை விமர்சனம் செய்வதை விட‌ கமலஹாசனை விமர்சனம் செய்வது பொருத்தமாக இருக்கும்  என்பதை விமர்சனம் எழுதி முடித்த பிறகு தான் உணர்ந்தோம்.  பின்னர் ஒரு சமயம் அது பற்றி எழுத முயற்சிக்கலாம்.  தற்போது படத்திற்குள் செல்வோம்.

முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும்.  தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்  தான் ஒழிக்க முடியும் என்பதை உணர்த்துகிற படமாம் இது.  பயங்கரவாதிகளுக்கு பயங்கரவாதிகளின் மொழியிலேயே தீர்வு சொல்கிற படம் என்றும் இன்னும் ப‌லவாறும் இந்தப் படம் பாராட்டப்படுகிறது. சரி அப்படிஎ ன்னதான் இ‌ப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? எகச்சக்கமான பதிவர்கள் இப்படம் பற்றி எழுதி விட்டதால் கதை அனைவரும் அறிந்ததே. எனினும் படம் பார்க்காதவர்களுக்காக கதையின் சுருக்கம் சில வரிகளில்.

கமல் முழுமைபெறாத ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு செல்கிறார். அங்கே தன்னை யாரும் அலைவரிசையின் மூலம் கண்டுபிடிக்க முடியாதவாறு அலைப் பேசிகளுடன் சில எலக்ட்ரானிக் சாதனங்கள், மடிக்கணினி (Laptop),  போன்றவற்றை பொருத்தி வெவ்வேறு சிம் கார்ட்டுகளிலிருந்து காவல்துறை ஆணையர் மோகன் லாலை அழைக்கிறார், போனை எடுக்கும் மோகன்லாலிடம் தான் சென்னையின் முக்கியமான சில‌ இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும் அது சில மணி நேரங்களில் வெடித்துச் சிதறி பயங்கர உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த‌ குண்டுகள் வெடிக்காமலிருக்க‌ வேண்டுமானால் குண்டு வெடிப்பு வழக்குகளில் கைதாகி சிறையிலிருக்கும் தன் கூட்டாளிகளான மூன்று இஸ்லாமியர்களையும் அவர்களுக்கு ஆயுத வினியோகம் செய்த ஒரு இந்துவையும் விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார். காவல் துறை ஆணையர் மோகன்லால் தலைமை செயலரிடம் அதிகாரம் பெற்று தீவிரவாதிகளை கமலிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் கமல் அந்த தீவிரவாதிகளை மொத்தமாக குண்டு வைத்து கொல்கிறார். காவல் துறையே ஆச்சரியப்பட்டுப்போகிறது. தீவிரவாதிகளில் விடுபட்ட ஒருவரை கமலின் கோரிக்கைப்படி காவல் துறையே கொன்று விடுகிறது. பிறகு கமல் தன்னை ‘காமென் மேன்’ என்றும் தீவிரவாதிகளுக்கு சட்டத்தால் இன்னும்  தீர்ப்பு  வழங்கபடவில்லை, ஆதலால் தானே தீவிரவாதத்தை மேற்கொண்டு அவர்களை அழித்தேன் என்றும் சட்டதுறையின், காவல்துறையின் அலட்சிய போக்கை பற்றியும், தீவிரவாதத்தின் பயங்கரங்களை பற்றியும், தீவிரவாத அமைப்புகளை பற்றியும் இறுதியில் பொங்கி எழுகிறார், க‌டைசியில் அழுகிறார். (கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார். ஏனென்று தான் தெரியவில்லை. ஆனால் அதை வைத்து தாடியை மட்டும் சொரிந்து கொள்கிறார் ) இது தான் கதை.

“இப்படிதான் சார் இவனுங்களை கொல்லனும். எத்தனை அப்பாவி மக்களை கொன்னுருப்பானுங்க” என்று இந்த போலி ஜனநாயகத்தில் வாழும் ‘ஜனநாயகவாதிகள்’ பொருமி, உணர்ச்சி வயப்பட்டு குரல் எழுப்புகிறார்கள்.unnai-pol-oruvan2 சரி நீ போய் அதை செய்ய வேண்டியது தானே என்றால் அமைதியாகிவிடுவார்கள். ஆனால் இந்த அமைதிக்கு பொருள் இல்லாமல் இல்லை. தன்னால் செய்ய முடியததை, கமல் செய்யும்பொழுது, பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும்பொழுது இவர்கள் அதை அமைதியாக ஆதரிப்பார்கள்.

‘A Wednesday’ எனும் இந்தி படத்தின் மறு உருவாக்கமே (Remake) இப்படம்.
ஏற்கனவே வெளிவந்த ‘A Wednesday’ எனும் இந்திப் படத்தில் கொல்லப்படும் பயங்கரவாதிகளில் நாலு பேரும் இஸ்லாமியர்களாகவே காட்டப்படுகிறார்கள், அவர்களில் இந்துக்களே இல்லை என்று எழுந்த விமர்சனம் இந்தப்படத்திலும் எழுந்துவிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான்  நான்கு பயங்கரவாதிகளில், மூன்று இஸ்லாமியர்கள் ஒரு இந்து என்னும் விகிதாச்சாரத்தில் பயங்கரவாதிகளை பிரித்து கதையின் பாத்திரங்களையே சாதுர்யமாக (ஏ)மாற்றியிருக்கிறார் கமல்.

அந்த ஒரு இந்துவையும் மூன்று இஸ்லாமியர்களைச் சித்தரிப்பதைப் போல‌ படு பயங்கர பின்னணி கொண்ட பயங்கரவாதியாக‌ சித்தரிக்கவில்லை! ஒரு ஆயுத வியாபாரியாக! காமெடியனைப் போல, வெறும் வயிற்று பிழைப்புக்காக இந்த‌ செயலில் ஈடுபட்டதாக காட்டி டம்மி பீசாக்கி விட்டார். ஆனால் இஸ்லாமியர்களோ மத வெறியிலேயே ஊறி அதன் காரணமாகவே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக ‘கதை’ கூறுவதன் மூலம் இசுலாமியர்களை இழிவு செய்திருக்கிறார்.

‘A Wednesday’ எனும் இந்தி படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணமாக காட்டி இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கிறார் நஸ்ருதீன்க்ஷா. அதே போன்ற‌ சம்பவங்களை தமிழ் கதையில் புகுத்த முயற்சித்து, கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணம் காட்டி இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கிறார் கமல். ஆனால் பாவம்! இந்திமொழி இலக்கண சூத்திரம் தமிழுக்கு பொருந்தாதால் திணறிப்போயிருக்கிறார். அதனால் தான் பெஸ்ட் பேக்கரி சம்பவத்தையும், கோவை குண்டு வெடிப்பு சம்பத்தையும் போட்டு குழப்பியிருக்கிறார். இதை பலரும் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். படம் பார்க்க வர்றவனெல்லாம் முட்டாள் என்கிற‌ நினைப்பு இந்த அறிவாளிக்கு.

காலையில் அலுவலகம் செல்லும் போது சாலையில் மறியல், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது போராட்டம் நடப்பதை கண்டுவிட்டால்  ‘இவனுங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்ல சார்,  எப்ப பாத்தாலும் மறியல் அது இதுன்னு ரோட்ல உட்கார்ந்திடுறானுங்க. இவனுங்களால தான் நம்ம‌ நாடே முன்னேற மாட்டேங்குது’ என தொழிலாளிகளின் வாழ்க்கை பிரச்சனை என்ன என்பதை பற்றி துளியும் சிந்திக்காமல் தன் நாட்டின் (சரியாக சொன்னால் தனது சொந்த‌!!) முன்னேற்றத்தை பற்றி கனவு காணும் வர்க்கம். இந்தியாவின் துரோக வரலாறு தெரியாமல் காஷ்மீர் இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்று காஷ்மீரை உரிமை கொண்டாடும் வர்க்கம். ஈழ பிரச்சனையில், ‘தமிழர்கள் இங்கிருந்து போய் அங்க உட்கார்ந்துட்டு நாடு, உரிமை அது இதுன்னு கேட்கலாமா’ என்று தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் வர்க்கம். தேசபக்தி என்கிற‌ போலியான தேசிய உணர்ச்சிக்கு ஆட்பட்டு ஜெய்ஹிந்த் என்னும் முழக்கத்தை மதிக்கும் வர்க்கம்.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டால்,  ‘மக்கள் சட்டத்தை மீறலாமா சார். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டப்படி தான் அணுக வேண்டும், இப்படி எல்லோரும் ஆயுதம் எடுத்தால்  நாடு என்னாத்துக்கு ஆகிறது’ என்று அனைத்திற்கும் சட்டவாதம்  (As per the Law) ‌ பேசும் வர்க்கம். மக்கள் ஏதோ டைம் பாஸுக்கு ஆயுதம் தூக்கிப் போராடுவது போலவும், அவர்களுக்கு அறிவில்லாததைப் போலவும் மக்களுக்கு அறிவுரை சொல்வதும், இவ்வாறு அரைவேக்காட்டுத்தனமான அரசியல் அறிவை கொண்டதும் தான் நடுத்தரவர்க்கம். இப்படத்தில் கமல் நடுத்தர வர்க்கத்தின் வழியே இந்துத்வா கருத்தை நமக்கு கலந்து தருகிறார்.

தமிழக மக்களில் ஒருவனாக‌ (காமென் மேன்) தன்னை பொத்தாம் பொதுவாக அடையாளபடுத்திக்கொள்வதற்காகவே படத்திற்கு ‘உன்னைப் போல்ஒருவன்’ என்கிற‌ பெயரை வைத்திருக்கிறார். பெயரை பொதுவாக வைத்திருந்தாலும் கதாப்பாத்திரம் சொல்லும் கருத்தும், செயலும் எந்த வர்க்கத்தினுடையது என்பது பொதுவில் தெரிந்ததே. கமல் பேசும் வசனங்களும், உடல் மொழியும் நடுத்தர வர்க்கத்தையே அடையாளப்படுத்துகிறது. (அதாவது ‘இந்து’ நடுத்தர வர்க்கம்) நடுத்தர வர்க்க மனிதன் இந்துத்துவ பிண்ணனியை கொண்டிருந்தால் எப்படியிருப்பான் என்பதே இப்பாத்திரம்.

ஆனால் கதையின்படி கமலின் பாத்திரம் இந்துவா முஸ்லீமா என்று பார்வையாளர்களிடம் சொல்ல விருப்பமில்லையாம். ஏனெனில் அவர் சொல்லும் கருத்துக்கு நாம் மதச்சாயம் பூசிவிடக்கூடாதாம், எனவே சொல்லவில்லையாம். ஒரு இந்துவோ, கிறித்தவனோ கதாபாத்திரமாக இருந்தால் நாம் சுதாரித்துவிடுவோம். அதையே ஒரு இஸ்லாமியன் உருவில் இஸ்லாமியன் என்று தெரியாத வகையில் சொன்னால்? அதை தான் இ‌ப்படத்தில் செய்திருக்கிறார்கள். இந்து இல்லை என்பதும் புரிய வேண்டும். இஸ்லாமியன் என்றும் சொல்லக் கூடாது, அதே சமயம் அவர் இஸ்லாமியர் தான் என்று மக்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். பயங்க‌ரவாதிகளான‌ இஸ்லாமியர்களையே கொல்லும் ‘நேர்மையான இஸ்லாமியர்’ என்பதை சூக்குமமாக‌ காண்பிக்கிறார்களாம். ஒரு இஸ்லாமியனின் உருவில் தன்னை மறைத்துக் கொண்டு பார்ப்பனிய‌ கருத்தை திணிப்பதற்காகவே இந்த கயமைத்தனம் கையாளப்பட்டிருக்கிற‌து.  கதாபாத்திரம் யாரென்று சொல்ல விருப்பமில்லை என்றால் விட்டுத்தொலைக்க வேண்டியது தானே எதற்கு இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்த இத்தனை அயோக்கியத்தனமான‌ முயற்சிகள் ?

இப்படம் கோவை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை மையமாக கொண்டு  எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில், 1992ல் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை.

Kamala Hassan in Unnai Pol Oruvan

‘தீவிரவாததிற்கு எதிரான தீவிரவாதம்’ என்று தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதமே நியாயம் என்று கற்பிக்கிறார் கமல். எனவே இஸ்லாமிய பயங்கரவாதிகளை கொல்கிறார். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன் உருவானது, அதன் வேர் எது  என்பதை இப்படம் நேர்மையாக‌ சொல்லவில்லை. இவர் நியாயம் கற்பிப்பதைப்போல் “இந்து மதவெறி பயங்கரவாதத்திற்கெதிரானதே இஸ்லாமிய பயங்க‌ரவாதம்” என்று இஸ்லாமியர்களும் நியாயம் கற்பிக்கலாமே! அதை ஏற்பாரா கமல். அல்லது அவரின் இந்த பாசிச படைப்பை உச்சி முகரும் நடுத்தர வர்க்கம் ஏற்குமா ? இஸ்லாமிய தீவிரவாதத்தை பெற்றெடுத்ததே , உருவாக்கி விட்டதே இந்துமதவெறியர்கள் தான். ஆனால் இந்த சாகேத ராமன் அதை தனது வசதிக்கேற்ப  மறைத்து விட்டார்

தீவிரவாதத்திலிருந்து மக்களை காக்க  தனது கரங்களில் வரம்பற்ற‌  அதிகாரத்தை ஒப்படைக்க கோரும் அதிகாரவர்க்கத்தின் குரலாகவே இப்படம் ஒலிக்கிறது. இந்த அதிகாரவர்க்கம் தான் முஸ்லீம் என்ற காரணத்திற்காகவே அந்த மக்களை,குறிப்பாக இளைஞர்களை நாடெங்கிலும் (குறிப்பாக காஷ்மீரில்) அநியாயமாக போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்கிறது. இந்த தடையில்லா அதிகாரம் தான் மணிப்பூரில் AFSPA வாக மக்களை கடுமையாக ஒடுக்கிவருகிறது.  இவற்றை அறியாதவரா  இந்த அறிவுஜீவி? தீவிரவாதிகளாக கைது செய்யப்படுபவர்கள் எந்த விசாரணையுமின்றி எந்த ஜனநாயக உரிமையுமின்றி கொலை செய்யப்படுவதை நியாயப்படுத்துவதன் மூலம் இந்த காந்தி ரசிகன் போலி என்கவுன்டரையும் நியாயப்படுத்துகிறார்!

மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு சம்பவத்தை நாம் மறந்து போனோமாம் நமக்கு நினைவூட்டுகிறார். அதெல்லாம் ரொம்ப பழசுங்க கமல். இரண்டு ஆண்டுகளுக்குள் நடந்த‌ ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, லும்பினி பூங்கா குண்டுவெடிப்பு, கோகுல் சாட் உணவு விடுதி குண்டுவெடிப்பு, ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, லுதியானா நகரின் திரைப்பட அரங்கில் நடந்த‌ குண்டுவெடிப்பு, மாலேவ்கான் குண்டு வெடிப்பு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகளை எல்லாம் நீங்கள் மற‌ந்து போனது ஏன் என்று நாங்கள் தான் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.   அவையெல்லாம் பார்ப்பன‌ இந்துமதவெறி பயங்கரவாதிகளால் நடத்தபட்ட குண்டுவெடிப்புகள் என்பதால் மற‌ந்து போனீர்களோ ?

படத்தில் ஒரு வசனம் “Thanks to late karkare” என்று வரும், இந்த டயலாக் பாஸிச மோடி கார்க்கரேயின் குடும்பத்திற்க்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து கார்க்கரேயின் நேர்மையை விலைக்கு வாங்க‌ முயன்றதற்கு  சமமானது !   (மோடி  கொடுத்ததை கார்கரேயின் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.) அவருக்கு இவர் நன்றி தெரிவிக்கிறாராம். கார்க்கரேவுக்கு நன்றி சொல்ல இவருக்கு எந்த அருகதையும் இல்லை.  ‘கார்கரே’ மாலேவ்கான் குண்டுவெடிப்பில் பாஸிச ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு சற்றும் அஞ்சாமல் சமரசமின்றி அவர்களை அம்பலமாக்கினார். இந்த தேசபக்த யோக்கியர் அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு அவருக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் செய்ய விரும்புவது என்ன தெரியுமா ? தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில், முசுலீம் எதிர்ப்புக்கு அவரையும் தங்களுடன் சேர்த்துகொள்ளும் அயோக்கியதனம் தான்  இதன் பின் இருக்கிறது.

இப்படத்தில் எல்லா குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாதமே காரணமாக காட்டப்பட்டுள்ளது. மேற்கூறிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இஸ்லாமியர்க‌ள்அதிகமாக உள்ள இடங்களில் தான் நிகழ்ந்தது. இஸ்லாமியர் அதிகமாக கொல்லப்படுவர் என்று தெரிந்தும் இஸ்லாமியர்தான் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்களா ? இச்சம்பவங்களில் அப்பாவி குழந்தைகள், முஸ்லீம் பெண்கள், பொது மக்களை கொன்றவர்களின் மீது கமலின் கோபம் பாயவில்லையே ஏன் ?

மற்ற மாநிலங்களில் குண்டு வெடித்தால் நாம் அமைதியாய் இருக்கிறோம் என்று ஆவேசமாய் நம்மை திட்டும் கமல், இந்நாட்டிலுள்ள மத்திய மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் ரெஹெமத் நகரில் உள்ள மெகமதியா மஸ்ஜித்தில் 21-11-2003 அன்று வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது, அதே மாவட்டத்தின் புர்ணா நகரிலுள்ள‌ சித்தார்த் நகரின் ராஜ்-உல்-உலூரம் மதார்சாவில் 27-08-2004 அன்று வெள்ளிக்கிழமை ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதே மாநிலத்தின் ஜால்னா நகரின் சதர் கடைவீதியில் உள்ள காதிரியா மஸ்ஜித்தில் 27-08-2004 அன்று வெள்ளிக்கிழமை ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. கவணியுங்கள், இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் ம‌சூதிகளில் தொழுகை நாளான‌ ‘வெள்ளிக்கிழமை’ அன்று தான் நடந்தேறியுள்ளது. இந்த குண்டு வெடிப்புகளைச் செய்த பயங்கரவாதிகள் யார் ? இதற்கான பதிலை சொல்லும் வாய்ப்பை, இந்த படத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான படம் என்று பட்டம் கொடுப்பவர்களிடமே விட்டுவிடுவோம்.

உலக நாடுகளிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளையெல்லாம் பட்டியலிட்டு கொதிக்கிறார் கமல். பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகளையும் கூட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் கமலுக்கு உள்ளூர் குரங்கு கம்பெனியான‌ இந்து முன்னணியும், விசுவ இந்து பரிசத்தும் கண்ணில் படாமல் போனது ஏன் ? விட்டால் கம‌லஹாசன் தனது பயங்கரவாதிகளின் பட்டியலில் முந்தாஸ‌ர் அல் ஜெய்தியையும் கூட சேர்த்துவிடுவார்.

இவருடைய கருத்தின்படி தீவிரவாதிகளை வெடி வைத்து கொல்வது ஒன்றும் தவறில்லை (இவர் கருத்து தான் அத்வானியின் கருத்தும்!!) அவர்களை கரப்பான் பூச்சிகள் என்று தான் கூறுகிறார். அதற்கு என்ன பொருள் ? பூச்சியை நசுக்கி எறிவது எவ்வளவு முக்கியத்துவமற்றதோ அந்தளவிற்கு இவர்களை கொல்வதும் முக்கியத்துவமற்றது என்கிறார். அதன்படி அப்சல் குருவை உடனடியாக கொல்ல வேண்டும், விடுதலையான‌ கீலானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவர்களைப் பற்றிய உண்மைகளை பேசும் தெகல்கா முதல் அருந்ததிராய் வரை அத்தனை ஜனநாயகவாதிகளையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இந்த அறிவாளிக்கு நரமாமிச வெறியன் மோடியை பற்றி தெரியாது, பாசிஸ்ட் தெகாடியா பற்றி தெரியாது,பயங்கரவாதி அத்வானியை பற்றி தெரியாது ஆனால், சில கரப்பான்பூச்சிகளை மட்டும் எப்படி நன்றாக தெரிகிறது. அதுவும் பச்சைக்கலர் கரப்பான்பூச்சிகள் மட்டும் எப்படி தென்படுகின்றன. காவி கலர்  பூச்சிகள் பற்றி இந்த உலக நாயகனுக்கு அறிவு இல்லையா ?

கமல் மட்டுமல்ல ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் நாட்டில் எந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் உடனே இதற்கு இஸ்லாமியர்கள் அல்லது நக்சலைடுகள் தான் காரணம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். குண்டு வெடிப்பு சம்பவங்கள் பார்ப்பன-இந்து மதவெறி பயங்கரவாதிகளின் செயலாகவும் இருக்கலாம் என்னும் கோணத்தில் சந்தேகிப்பதே இல்லை.

‘குருதிப் புனல்’ படத்தில் நக்சல்பாரி போராளிகளை கேவலமாக சித்தரித்த இதே கமல் தான்  ‘அன்பே சிவம்’ படத்தில் திடீரென்று கம்யூனிசத்தை தூக்கி பிடித்தார். இது தான் அவரின் கம்யூனிச பார்வை. இப்படத்திற்கு போலி கம்யூனிஸ்டுகள் புகழாரங்கள் சூட்டி விருதுகளும் வழங்கினர் (கூடவே இல.கணேசனும் பாராட்டினார் என்பதும் கவனிக்கத்தக்க ஒற்றுமை). தன்னை நாத்திகன் என்றும், பெரியாரிஸ்டு என்றும் சொல்லிக்கொள்பவர்  ஆதிக்க சாதிவெறியர்களுக்காக  ‘தேவர் மகன்’ என்று தேவர் புகழ் பாடினார்.
unnaipol-oruvan-new-stills15
கமலஹாசன் தன்னை சமூகத்திற்கு மிகவும் பொறுப்புள்ளவன் என்று கருதிக்கொள்கிறார். திரைத்துறையிலேயே (திரைத்துறையில் என்று மட்டும்  சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, தமிழ‌கத்திலேயே என்று கூட சொல்லலாம்) தன்னை பெரிய அறிவாளி என்று அவர் உணர்வுபூர்வமாகவே நம்புகிறார். எனவே திரைப்படங்கள் மூலம் தான் சமுதாயத்திற்கு சொல்லும் செய்தி மிகவும் அவசியமானது என்றும் அதை அனைவ‌ரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறார்.

கமல் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாத்திகம், பெரியார், கம்யூனிசம் என்றெல்லாம் ‘முற்போக்காக’ பேசலாம் அப்படி  பேசுவதாலேயே அவரை கம்யூனிஸ்ட் என்றும், பெரியாரியவாதி என்றும் நம்புவது முட்டாள்த்தனம். மேற்கூறியவையெல்லாம் அவரைப் பொருத்தவரை ஒரு பாக்ஷன், அதாவது தனது பார்ப்பன சமூகத்தில் உள்ள‌ மற்றவர்களைப் போல‌ தான் ஒன்றும் கட்டுப்பெட்டித்தனங்களில் மூழ்கிக் கிடக்கும் பிற்போக்குவாதியல்ல என்று வெளி உலகுக்கு அறிவிப்பதற்கும், தான் அனைத்தும் அறிந்த அறிவாளி என்று தன்னைச் சுற்றி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வதற்கும் தான் இந்த முற்போக்கு லேபிள்கள். இதைத் தவிர‌ அதற்கு வேறு ஒரு மதிப்பும் இல்லை. இதில் பலர் மயங்குவதற்கு காரணம், கமலை யாரும் விமர்சனம் செய்யாமல் இருப்பது தான், மேலும் மேலும் சுகமாக‌ சொறிந்து விடுவதால் அவருக்கும் திமிர் அதிகமாகிவிடுகிறது. இளைஞர்களின் நம்பிக்கையும் மேலும் உறுதிப்பட்டு விடுகிற‌து. உதாரணமாக இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகள் கமலஹாசனை 24 காரட் கம்யூனிஸ்ட் என்பதைப் போல ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். தி.க வீரமணி கம்பெனியோ அவர் பெரிய பகுத்தறிவாளர் என்று பட்டமளித்தது.  தசாவாதாரம் படத்தை நாத்திக படம் என்று புகழ்ந்தது. இவர்கள் இப்படி சொறிய சொறிய கமலுக்கு மண்டைக் கணமும், திமிரும் கூடிக்கொண்டு போகுமே  தவிர தன்னை யாரும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதை ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்.

குருதிப்புனல் படத்தில் போராளிகள், குழந்தைகளைக் கூட கற்பழிக்கும் கயவர்கள் என்பதைப் போல ஒரு அயோக்கியத்தனத்தை செய்திருப்பார். அந்த தீவிரவாதிகளின் கொள்கை என்ன, ஏன் போராடுகிறார்கள் என்பதை அவர்களையே பேச விட்டிருந்தால் கமலின் அருவருப்பான போலீசு முகம் விகாரமாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் வாயில் துணியை அடைத்துவிட்டார் இந்த யோக்கியர். அவர்களை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் இந்த அறிவாளியே அவர்களைப் பற்றி அவதூறுகளாக பேசி அவர்களுக்கு ச‌மூக விரோதிகள் என்று பட்டமும் கட்டி போராளிகளை கேவலப்படுத்துவார். ஆனால் படத்தில் நடித்துவிட்டு் வெளியில் வந்து பேட்டிக்கொடுக்கும் போது, தான் நடிகனாகாகியிருக்காவிட்டால் நக்சலைட் ஆகியிருப்பேன் என்று கூறுகிறார். என்ன ஒரு அயோக்கியத்தனம் இது! இந்த படத்திலோ இசுலாமியர்களை பேச விட்டுள்ளார். ஆனால் அவர்களே தம்மைப் இழிவுபடுத்திக்கொள்ளும்படி வசனம் எழுதி கொடுத்துள்ளார்.

ஒருவன் எப்படி சிந்திக்கிறானோ அது அப்படியே அவனுடைய நடைமுறையி்ல் வெளிப்பட்டே தீரும். ஒரு கலைஞன் என்பவன் தனக்குள் பிற்போக்குத்தனங்களை வைத்துக்கொண்டு வெளியில் எவ்வளவு முற்போக்கு வேடம் போட்டாலும், கலையில் அவனுடைய ஆளுமையின் போலித்தனம் தோல் உரிந்து தொங்கிவிடும். இது தவிர்க்க முடியாதது. இது கலைக்கும் கலைஞனுக்கும் இடையிலான அறுக்கவியலாத‌ தொடர்பு.

கமல் தனது பார்ப்பனப் பிண்ணனியை மிகவும் பெருமையாகவே கருதுகிறார். அதன் காரணமாகவே, தான் அறிவாளியாக இருப்பதாகவும் கருதுகிறார். இது போல பார்ப்பனியத்திற்கு ஆதரவான கருத்து கொண்டிருக்கும் அனைவரும் பாசிச‌ பா.ஜ.க வில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாசிசம் அவர்களுடைய மூளையில் உட்கார்ந்திருக்கிற‌து என்பதை புரிந்து கொள்வது தான் அவசியம். இந்த படத்தின் மூலம் கமல் மேலும் ‘முற்போக்கானவராக’ உயர்ந்துள்ளார். ராமானுஜதாசன் என்கிற நிலையிலிருந்து ராமகோபாலதாசன் என்கிற நிலைக்கு உயர்ந்து தன்னை இன்னும் துலக்கமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.‌

தொடர்புடைய இடுகைகள்

tehalka

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி : ஆழியூரான்

‘உன்னைப் போல் ஒருவன்’ ‍ கமலின் இன்னுமொரு இந்துத்துவச் சினிமா

உன்னைப்போல் ஒருவன் – விடுபட்டவை ‍:உறையூர்காரன்

நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

29 responses to “உன்னைப் போல் ஒருவன் – யார் நீ????

 1. In 1992 @ coimbatore 13 muslims killed by police in order to avenge the death of selvaraj (policeman). dont give false data

 2. poi mukangalin muka thiraiyai kiziththu erinthu vitteerkal.theerkkamaana alasal.

 3. அய்யா காமன் மேன் சொல்வது சரிதானெ

  சும்மா குண்டு வைச்சு கொல்ல எல்லாரும் கிள்ளு கீரைகளா

  நாங்களும் வைப்பம்ல

 4. இந்தியில் படம் பார்த்த பொழுது, அயோக்கியத்தனமான படம் என நினைத்தேன்.

  கமல் எடுக்கப்போவதை அறிந்து, இந்தி படத்திற்கான விமர்சனங்களை தொகுத்து முன்பே எழுத வேண்டும் என நினைத்தேன். பிறகு, படம் பார்த்து எழுதலாம் என நினைத்தேன். பலர் கமலின் இந்துத்துவ சார்பை நன்றாகவே அம்பலப்பத்தியிருக்கிறார்கள்.

  நல்ல விமர்சனம். தெளிவான நடையில் எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

 5. In Pakistan, Afgan and Iraq thousands of muslims are killed by terrorists… are they killed by RSS terrorists? The truth is muslim peoples in Pak, Afgan and Iraq were killed by talian or other terrorists(I would not say that they are Muslim terrorists, because there is no relogion for terrorists.) why can’t the same happen in India? To induce the Islam people in india why can’t the same pakistan/Afgan/Iraq terrorists bombed the masjids?

  One more questions for you…. Did RSS kills bunches and munches of Hindus? Does bunches of Jews Killed in Isrel Terrorists? NO… But the Pak/Afgan/Iraq terrorists are killing their own people… why are you not talking abt this?

 6. ஜட்டி போடுவதையும் கழட்டுவதையும் ஒரு கலையாக காட்டும் ஆபாச நாயகன் தன்னை யாரென்று அடையாளம் காட்டி விட்டான். இனி அவனை அம்பலப்படுத்தி தோலுரிப்பது அவசியமாகிறது.

 7. ஒவ்வொரு பத்தியும் சவுக்கடி நண்பரே!

 8. This is a madman’s whining. Look at the film in an unbiased angle. Get a life, man

 9. Its all ok. If u have grudge over modi or rss u fight directly with them.
  what makes to kill the innocent people in mumbai railway station. If you say that these are outburst the angers over RSS or modi, then no other way, I will ONLY support kamal
  First u Mind it

 10. நல்ல பதிவு.கமலுடன் ஒப்பிடும் போது விஜயகாந்தும்,அர்ஜீனும் கூட பிரச்சனை இல்லை.அவர்களை சுலபமாக அம்பலமாக்கிவிடலாம்.ஆனால் பாகிஸ்தான் பெயரையே உச்சரிக்காத கம‌ல் மிகவும் ஆபத்தானவர்.

  கமலஹாசனை இப்படி சொல்லலாமா நவீன துக்ளக் சோ !!

 11. கட்டியக்காரன்

  எளிமையான,தெளிவான‌ விமர்சனம். படம் இன்னும் பார்க்கவில்லை. இதை பார்க்க வேண்டுமா என யோசிக்கிறேன்.

 12. vrinternationalists

  தோழர் குருத்து,ஏகலைவன்,உறையூர்காரன்ஆகியோருக்கு நன்றி.

  @ – Sivakumar,Common Man And Nagaraj.

  ‘We nwver Justified Killing Of innocent People’s Neither
  Supported islamic Extremism/Terrorism Nor Have intention
  To Do So.’

  ‘This Article Just Analyses Kamal’s Centerist image (Which is
  portrayed by Him And Beleived by Several) it Questions His
  Version of Biased Truth’

  it is Not That You are Supporting Kamal, Rather He Supperts
  You People by Justifying So Called Common Man-Middle Class Mindset.

  Does it Hurt Your Soft Feelings ? its Better Grow up You Morons !
  Come Up With The Points,Which You Do Not Agree With,We Will Discuss.

  DONT COMMENT JUST ONE LINERS

 13. “உன்னை போல் ஒருவன்” பாடல் கேட்டிருந்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உண்மை புரிந்திருக்கும்.. பாவம் நீங்க பாடு எதுவும் கேகல போல..

  “உன்னை போல்.. என்னை போல்.. நம்மை போல்.. ” என்ற பாடலில் “இது ஒரு புது முகம்.. ” என்று வாசகங்கள் வரும்.. ஆங்கிலத்தில் “I am a new face of terror” என்று கூறப்படும் மறுபடியும்!! அதற்கு என அர்த்தம்? இதுவும் ஒரு விதமான தீவிர வாதம் தான் என்று பொருள்!!

  “நிலை வருமா ” என்ற பாடலில் “தலைமைகள் வர வர பிறந்திடுமா!! ” என்று வாசகங்கள் வரும்!! என அர்த்தம்? தலைமைகள் தவறுகளை தாண்டிகாதது நாலா தான் இது போல் சராசரி மனிதனும் சட்டத்தை கையில் எடுக்கிறான்! தவறு செய்பவன் எந்த ஒரு மததவன ஜாதியனாக இருந்தாலும் அதை தண்டிக்க தலைவர்கள் வர வேண்டும் என்று அர்த்தம்.. அதற்காக பாட்டாளி வர்க்கம் பதவிக்கு வந்தால் தான் அதெலாம் நாடாகும் என்று நீங்க காமெடி பண்ணிரதீங்க.. மாற்க்ஸ்யா பாதையில் போராடலாம் வாங்க என்று உங்கள் வழக்கமான பொய்யை இதிலும் திணிக்க முயலாதீர்கள்..

  கமல் விஜய் டிவி இல நடந்த கலந்துரையாடலின் போது தன தாடிக்கு ஒரு விலகும் கூறினார்.. “இப்படி தாடி வைத்தவன் எல்லாம் முஸ்லிம் தீவிரவாதி என்று பாகு பாடு இருக்க கூடாது என்று உணர்த்தவே தான் அப்படி வைத்தேன்” என்று .. உண்மை.. செப்டம்பர் அமெரிக்காவில் நடந்த தாக்குதலிற்கு பிறகு அங்கு வாழும் சிகியர்களுக்கு எல்லாம் அடி விழுந்தது.. காரணம் தாடி மற்றும் அவர்களின் டர்பன்.. இந்த பாகு பாடும் இருக்க கூடாது என்பதை உணர்த்தவே இது..
  //
  மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டால், ‘மக்கள் சட்டத்தை மீறலாமா சார். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டப்படி தான் அணுக வேண்டும், இப்படி எல்லோரும் ஆயுதம் எடுத்தால் நாடு என்னாத்துக்கு ஆகிறது’ என்று அனைத்திற்கும் சட்டவாதம் (As per the Law) ‌ பேசும் வர்க்கம்.
  //

  அட முட்டாள் சர்வதேசியவாதிகள்a.. படத்தை உற்படிய பாருங்க முதல்ல ..”A wednesday” படத்திலயே போலீஸ் காரர் தெளிவாக சொல்வார்” சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்று” .. அதற்கு நசுருதின் ஷா “அப்படி எவளோ நாளைக்கு தான் நாங்க காத்துடே இருக்குது.. நீங்க செய்யா விட்டால் நாங்க தான் செய்யணும்.. ” என்று கூறுவர்.. நீங்கள் கூறும் நடுத்தர வர்கத்திற்கும் கோவம் இருக்கிறது என்று உணர்த்தும் படம் தான் இது.. அந்த மைய கருத்தையே புருஞ்சுகாம எதற்கையா படத்திற்கு விமர்சனம் எழுத வறீங்க?

  கலவரத்தில் ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ணுவதை அவர் கூறுவது போல் ஒரு காட்சி வரும்.. ” கூடத்தில் எத்தனை லால் கிருஷ்ணர்கள் இருந்தார்களோ .. ஆனாலும் அந்த பெண்ணின் மானத்தை காப்பாற்ற முடியவிலயே.. அவளிற்கு கொடுமை இழைக்க பட்டதே ” என்று கூறுவார்.. இந்து சமுதாயத்தை சேர்ndhavargalum தவறு செய்கிறார்கள் என்று விளக்கும் இடமாக அது அமைந்திருக்கிறது. அதெல்லாம் உம்ம கண்ணனுக்கு தெரியாதே…
  //
  கமலஹாசன் தன்னை சமூகத்திற்கு மிகவும் பொறுப்புள்ளவன் என்று கருதிக்கொள்கிறார். திரைத்துறையிலேயே (திரைத்துறையில் என்று மட்டும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, தமிழ‌கத்திலேயே என்று கூட சொல்லலாம்) தன்னை பெரிய அறிவாளி என்று அவர் உணர்வுபூர்வமாகவே நம்புகிறார். எனவே திரைப்படங்கள் மூலம் தான் சமுதாயத்திற்கு சொல்லும் செய்தி மிகவும் அவசியமானது என்றும் அதை அனைவ‌ரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கருதுகிறார்.
  //

  இப்படி அவர் உங்களுக்கு எதாவது லெட்டர் போட்டு சொன்னாரா? ஏன் கேக்குறேன்னா பத்திறிக்கைலயோ தொலைகாட்சிலயோ அவரு இப்படி சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல..

  அப்கானிஸ்தான்லையும் பாக்கிஸ்தான்லயும் சாவது யாரு? முஸ்லிம்.. கொல்வது யாரு? ஹிந்துவா? உங்கள் அரைவேக்காடு சிந்தனையை இந்த கட்டுரை நன்றாக வெளி படுத்தி இருக்கிறது.

  நீங்கள் கூறிய Morons சிவகுமாரோ நாகராஜனோ இல்லை.. நீங்கள் தான் !!!

  • கைப்புள்ள‌

   ஆஹா ராமகோபாலதாசனை விமரிசிச்சா நம்ம தலிவருக்கு இன்னாப்பா இம்மாங் கோபம் வருது.இதுக்கு இன்னா காரணமா இருக்கும் ?

   • தவறுகள் எங்கு தென் பட்டாலும் அதை விமர்சிக்கும் உரிமை எனக்கு உண்டு… அதற்கும் சிகப்பு கொடி பிடிக்க வேண்டும் என்று ஏதேனும் புது சட்டம் போட்டு விட்டார்களா என்ன?

 14. கட்டியக்காரன்

  நிழல் எனக்கு கேள்விகளை கேட்கும் வரை நான் அவரை விடப்போவதில்லை. நான் பதில் சொவதற்கு இவர் எனக்கு கேள்விகள் தர மாட்டேன் என்கிறார். எல்லோரும் இந்த அநியாயத்தை கேளுங்களேன்.

 15. //மக்கள் சட்டத்தை மீறலாமா சார். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டப்படி தான் அணுக வேண்டும், இப்படி எல்லோரும் ஆயுதம் எடுத்தால் நாடு என்னாத்துக்கு ஆகிறது’ என்று அனைத்திற்கும் சட்டவாதம் (As per the Law) ‌ பேசும் வர்க்கம். மக்கள் ஏதோ டைம் பாஸுக்கு ஆயுதம் தூக்கிப் போராடுவது போலவும், அவர்களுக்கு அறிவில்லாததைப் போலவும் மக்களுக்கு அறிவுரை சொல்வதும், இவ்வாறு அரைவேக்காட்டுத்தனமான அரசியல் அறிவை கொண்டதும் தான் நடுத்தரவர்க்கம். இப்படத்தில் கமல் நடுத்தர வர்க்கத்தின் வழியே இந்துத்வா கருத்தை நமக்கு கலந்து தருகிறார்.//

  சரி, அப்படி அறிவு பூர்வமாக ஆயுதம் எடுப்பவர்கள், மற்றொரு அறிவுபூர்வமான வர்கமான அதிகார/அரசியல்வாதிகளை கொள்வதை விட்டுவிட்டு அப்பாவி சாரி முட்டாள் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து தாக்குதல் நடப்பது எதனால்? மேலும் அவ்வாறு தன்னை கொலை செய்தாலும் நடுத்தர வர்க்கம் தீவிரவாதிகளை ஆதரித்தே பேச வேண்டும் என்று நினைக்கறீர்களா? நீங்கள் கமலஹாசனை திட்டுவதற்கு நடுத்தர வர்க்கத்தினை துணைக்கு அழைக்காதிர்கள், வட இந்திய நடுத்தரவர்க்கம்தான் அதிகப்படியான உயிரிழப்பை இதுவரை சந்தித்துள்ளது.

  // 1992ல் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. //

  இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, இந்த வாக்கியத்திற்கு ஆதாரமாக சுட்டி ஏதாவது உள்ளதா?

  //கோகுல் சாட் உணவு விடுதி குண்டுவெடிப்பு,லும்பினி பூங்கா குண்டுவெடிப்பு //

  பார்ப்பன‌ இந்துமதவெறி பயங்கரவாதிகளால் நடத்தபட்ட குண்டு வெடிப்புக்களா? இதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஆரம்ப கட்ட விசாரணைகள் இதை செய்தது பங்களாதேஷை சேர்ந்த “ஹர்கத் – உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்று தெரிவித்தன , ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை, மற்றபடி இதை செய்தது இந்து அமைப்புகள் என்று எந்த ஆதாரத்தில் என்று சொல்ல முடியுமா?

  //இந்த குண்டு வெடிப்புகளைச் செய்த பயங்கரவாதிகள் யார் ? இதற்கான பதிலை சொல்லும் வாய்ப்பை, இந்த படத்திற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான படம் என்று பட்டம் கொடுப்பவர்களிடமே விட்டுவிடுவோம்//

  சரி இந்தியாவில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளில் அதிகமாக உயிரிழந்தது இந்துக்களா முஸ்லீம்களா? சொல்லுங்கள். இதில் காஷ்மீரையும் சேர்த்துக்கொள்ளுங்கள், இதனை விமர்சனமாகவோ, எதிர்வினையாகவோ எடுத்துக்கொள்ளாமல், ஒரு எளிய கேள்வியாக மட்டும் எடுத்துக்கொண்டு பதில் அளியுங்கள்.

 16. in hindi movie to its 3 muslim and 1 hindu terrorist only his name is also some lala only

  mothalla padatha ozhungaappaarudaa vennai. ngoiyaala enna masurukku neeyellaam vimarsanam ezhutha vanthuttadaa en venru!!!

  • ////mothalla padatha ozhungaappaarudaa vennai. ngoiyaala enna masurukku neeyellaam vimarsanam ezhutha vanthuttadaa en venru!!! ////

   அட வெண்ணை வெட்டி வெண்க்காயமே, படத்தை நீ முதலில் ஒழுங்கா பாருடா ங்கொய்யால‌. கமலோட தொண்டரடிப்பொடியா பார்க்காம சாதாரண மனுசனா போயி படத்தை இன்னொரு தபா பார்த்துட்டு வந்து அப்புறமா இந்த‌ புண்ணூடம் போடுற வேலைய செய்யு.

 17. Today i wasted my precious time reading this stupid blog….
  Anyway succes of this film tells us how kamal is correct in his concept

  • இவரைப் போன்ற நடுத்தர வர்க்க காரியவாதிகள் தான் பாசிசத்தை கொண்டு வருகிறார்கள். இவர் பேரு இந்தியனாம். இவரு இதை படிச்சு தன்னோட பொண்ணான நேரத்தை வேஸ்ட் பன்னிட்டாராம்,ரொம்ப தான் கவலை படுறாரு. இல்லாட்டியும் இவரு என்னா பன்னியிருப்பாரு, இந்த நாட்டு மக்களோட பிரச்சனையை பத்தி யோசிச்சு அதுக்காக‌ கவலைப்பட்டுருப்பாரா ?

   எங்கையாவது பார்ல போய் தன்னியடிச்சிருப்ப அந்த மாபெரும் காரியம் இவருக்கு தடை பட்ருச்சாம். இவரு பேரு வேற இந்தியனாம்.

   மற்றவங்களுக்கெல்லாம் நீங்களே பதில் சொல்லிக்கீங்க சர்வதேசவாதி. அதாவது கோகுல் மாதிரி உண்மையாக‌ கேள்வி கேட்கும் ஆளுங்களுக்கு நீங்கள் தான் பதில் சொல்லனும், நமக்கு அது வராது.

 18. அப்படியே சமயத்தை நீக்கிவிட்டு, நாத்திகனாக இந்தப் படத்தைப் பார்த்தால், குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றவர்களைக் காமன் மேன் தந்திரமாக கொள்கிறார்.

  In the same way, if Kamal takes next NEW film – ( நம்மைப்போல் ஒருவன் )’s story is : –

  கமலின் அக்கா புருகாவில் இருப்பதால் பட்டப்பகலில் மும்பை மார்கெட்டில் ‘ஹிந்துத்வா தீவிரவாதிகளால்’ வெட்டிக்கொள்ளபடுகிறார். நீதி கேட்டு போலீசில் புகார் செய்ய கமல் சென்றால் அவரையே தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள்.
  ஹீரோவாயிர்றே கமல்! ஜெயிலில் இருந்து தப்பித்து தன பெற்றோருடன் சொந்த ஊரான கோவைக்கு குடி பெயர்ந்து புதிய வாழ்க்கையை துவங்குகிறார். அவர் தந்தை தான் மும்பையில் செய்த அதே துணிக்கடை தொழிலை துவங்குகிறார்.

  சில வருடங்கள் கழித்து ஒரு கலவரத்தில் அவரின் துணிக்கடை ‘ஹிந்துத்வா கலவரக்காரர்களால்’ கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடு அவரின் அம்மாவுடன் சேர்த்து கொளுத்தப்படுகிறது. கமலின் அப்பா கடுங்கோபத்துடன் காவல் நிலையம் சென்று மீண்டும் மீண்டும் முறையிட, அவரை ஒரு குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்லி போலிஸ் தடாவில் உள்ளே போட்டு விடுகிறது. தினமலரில் கமலின் முகம் பயங்கரவாதி என வருகிறது.

  கமல் இம்முறை அஹ்மதாபாத்திற்கு தப்பி செல்கிறார். அங்கு கவுசர் பானு என்ற புர்கா போட்ட முஸ்லிம் பெண்ணை சந்திக்கிறார். அவர் இவரை ஒருவாறு தேற்றி சகஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறார். திருமணமும் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கலவரத்தில் அவர் ‘ஹிந்துத்வா மக்களால்’ “க ரு வ ரு க் க ப் ப டு கி றா ர்”. இப்போது கமல் எந்த கம்ப்லைண்டும் கொடுக்காமலேயே என்கௌன்டரில் போட்டுத்தள்ள குஜராத் போலிஸ் துரத்துகிறது.

  எப்படியோ கமல் தப்பித்து டெல்லி செல்கிறார். பல வருடம் உச்ச நீதிமன்ற வாசலில் நீதி கிடைக்கும் என நம்பி நின்று நம் நாட்டின் போக்கையும் நீதியின் போக்கையும் பார்த்த கமல், தன் வாழ்க்கையும் இது போல பலர் வாழ்க்கையும் இருண்டு போனதற்கு காரணமான, அணைத்து அரசியல் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் இலாகாக்களை ஒதுக்கிக்கொள்ளும் ஆர்வத்திலும், பிரதமரை தேர்வு செய்யும் குஷியிலும் ஒரே இடத்தில் ஒன்றாக குழுமி இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில், தாமரை மலர் பேனர் கட்டப்பட்ட ஒரு பெரிய அரங்கத்துக்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு ரிமோட்டை அழுத்துகிறார். பேக்கிரவுண்டில் தீப்பிழாம்பாய் காட்சி தர காமன் மேன் தற்போது ஹீரோவாய் சுலோ மோஷனில் நடந்து வருகிறார்…..

  இப்போது மீண்டும் முதல் பாராவை படிக்கவும்.

  இது ஜஸ்ட் ஒரு படம்தானே என்று சென்சார் எந்த கட்டும் இன்றி வெளியிடுமா? அல்லது இந்த கதையில் கமல் தான் நடிப்பாரா?

  விமர்சனம் படிக்க படிக்க சூப்பர். நிறைய சிந்திக்க தூண்டுகிறது. எல்லா மீடியாக்களும் காவி கலர் பூசியவை அல்ல என்று சொல்ல நீங்கள் தான் ஒரு உதாரணம்.

 19. வெங்காயம்

  ////mothalla padatha ozhungaappaarudaa vennai. ngoiyaala enna masurukku neeyellaam vimarsanam ezhutha vanthuttadaa en venru!!! ////

  வெங்காயம், முதல்ல நீ அந்த இந்தி படத்தை பாருடா வெங்காயம் வெங்காயம்.

  சரி. அது என்னடா kamal fan?
  கமலுக்கு எங்கெல்லாம்(!) வேர்க்குதோ அங்கெல்லாம் Fan ஆ இருந்து விசுருவியோ???

  கமலு மசுருக்கு விசுராமா இங்க வந்து எழுதுதர வெங்காயம்…வெங்காயம்..

  போ… போ… வேலைய பாரு..ஆன் டுட்டியலிருந்து வந்துட்டியேன்னு கமல் கோவிச்சிக்கபோராரு… வெங்காயம்.

 20. ஒரு விமர்சனம் எழுதினா இவனுங்க என்னமாய் கூச்சல் போடுறானுங்க, தாங்க முடியலைட சாமியோவ்.

  • தோடா சொல்லிட்டாறு கலெக்டர்!! உண்மைய சொன்ன அது உங்களுக்கு கூச்சலா தெரியும்..

   உண்மை இது தான் மஹா ஜனங்களே..

   இந்த படத்தில் ஒரு மிடில் கிளாஸ் மனிதன் தீவிரவாதிகளை கொல்வது போல் காட்டி விட்டார்கள்.. அனால் இவர்களுக்கு மார்க்ஸ்யம் கறபித்தவர்களோ “மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் ஒண்ணுக்கும் உதவாதர்வர்கள்.. புரட்சியின் காப்பி ரைட் பாட்டாளி வர்கதினரிடம் தான் இருக்கிறது!! “என்று சொல்லி குடுத்து விட்டார்கள்.. ஆகையால் இந்த படத்தில் மிடில் கிளாஸ் காரனுக்கு கோவம் வர மாதிரி கட்டுன உடனே ம.க.இ.க கான்களுக்கு அய்யோ இது தப்பாச்சே என்று தோன்றி விட்டது!! அதன் இப்படி தாம் தூம் என்று படத்தை சமந்தமே இல்லாத வகையில் விமர்சனம் செய்கிறார்கள்.. மிடில் கிளாஸ் ஜனகளை விமர்சினதிலயே நிறைய தடவை இவர்கள் சாடி இருகிறார்கள் என்பதை நீங்களே பாக்கலாம்

   ஒரு செய்யுங்கள் ம.க.இ.காங்களா “மிடில் கிளாஸ் மாதவன் ” படம் இருக்குல அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுங்க.. அந்த படத்தை நீங்க போற இடத்துக்கு எல்லாம் போட்டு காட்டி “பாத்திங்கள மிடில் கிளாஸ் இப்படி தான் இருப்பாங்க.. அவங்களை நம்பாதீங்க” அப்படி இப்படினு பிரச்சாரம் பன்னுங்க.. அப்போவாவது எவனாவது உங்கள நம்புரானானு பாப்போம்..

 21. Please, read this also, the relevant article about UPO.

  http://www.satyamargam.com/1339

 22. பணத்துக்காக எந்த இழிவான செயலையும் செய்ய வெட்கப்படாதவர்கள் இந்த சினிமா காரர்கள். பொதுவாய் முஸ்லிம்கள், (இஸ்லாம் பற்றி அறியாத ஒரு சிலரை தவிர) தங்கள் ஒழுக்க நெறிகளை பேணிக்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த சாக்கடையில் விழுவதில்லை.

  முன்பெல்லாம் ஹிந்துத்வா பயங்கரவாதக்கூட்டம் மீடியாக்களில் மட்டும் தங்கள் காவிக்கழிசடைகளை வாந்திஎடுத்து தீர்த்த பின்பு இப்போது சினிமா எனும் கழிப்பிடத்தில் ‘வெளியிருக்க’, கமல் எனும் முற்போக்கு வேஷம் போட்டுத்திரியும் பாப்பான் கமல் மூலம் “தனியொருவன் தான் செய்த குண்டினால் சட்டத்தை கையில் எடுத்து எந்த குற்றவாளியையும் குண்டு வைத்து அழிக்கலாம்” என்று தங்கள் காவிக்கொள்கையை சொல்ல வந்திருக்கின்றனர். (இந்த ‘காமன் மேன் கொள்கை’, மோடிக்கும், அத்வானிக்கும், தொகாடியாவுக்கும், தாக்கரேக்கும், பஜ்ரங்கிக்கும், மற்றும் பல ஆர.எஸ்.எஸ்.- ஹிந்துத்வாகா தீவிரவாதிக்கும் பொருந்தும் தானே?)

  இவர்களின் வாந்தி பேதிக்கு, அரசாங்கம் என்ற மருத்துவமனையில் என்றுதான் வைத்தியம் செய்வார்களோ? காந்தி சுடப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை நம்நாடு இவர்களின் இந்த இழிசெயலால் நாறிக்கொண்டு உள்ளது. ஆனால் அரசு மூக்குக்கு என்னாச்சு? இவற்றை அப்போதே சுத்தப்படுத்தி இருந்திருந்தால் இந்த ஹிந்துத்வா எனும் கொள்ளை நோய்க்கு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகி கடந்த 63 வருடங்களில் மரணித்திருக்க மாட்டார்கள்.

  இனியும் இந்த கயவர்களை இவர்களின் ‘சுதந்திர வாந்திபேதிக்கு’ அரசு அனுமதி கொடுத்து, விட்டுவைத்திருந்தால் இந்தியாவில் இனி இடுகாடும் சுடுகாரும் தான் மிஞ்சும்.

 23. ஒரு திரைப்படத்தில் விவேக் சிறுவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பார்.

  “அம்மா இங்கே வா! வா!”

  என்ற பாடலுடன் ஆரம்பிப்பார். உடனே இரு சிறுவன் எழுந்து “சார் நீங்க அம்மாவைப் பத்தி பேசுறதுனால நீங்க அதிமுக வா?” என்று கேட்பான்.

  பிறகு “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு” என்று சொல்லுவார், அதற்கு வேறு ஒரு சிறுவன் எழுந்து “சார் நீங்க சூரியனைப் பற்றி பேசுரீங்க அதுனால நீங்க திமுக தானே?” என்று கேட்பான்.

  அந்த சிறுவர்களுக்கும் உங்களுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

  உங்களையெல்லாம் சரிசெய்யா 100 அல்ல 200 பெரியார் வந்தாலும் முடியாது என்று நினைக்கிறேன்.

 24. ஒரு திரைப்படத்தில் விவேக் சிறுவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பார்.

  “அம்மா இங்கே வா! வா!”

  என்ற பாடலுடன் ஆரம்பிப்பார். உடனே இரு சிறுவன் எழுந்து “சார் நீங்க அம்மாவைப் பத்தி பேசுறதுனால நீங்க அதிமுக வா?” என்று கேட்பான்.

  பிறகு “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு” என்று சொல்லுவார், அதற்கு வேறு ஒரு சிறுவன் எழுந்து “சார் நீங்க சூரியனைப் பற்றி பேசுரீங்க அதுனால நீங்க திமுக தானே?” என்று கேட்பான்.

  அந்த சிறுவர்களுக்கும் உங்களுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

  உங்களையெல்லாம் சரிசெய்யா 100 அல்ல 200 பெரியார் வந்தாலும் முடியாது என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s