ஒடுகாலிகளுக்கு அங்கீகாரம் தர வேண்டுமா ??

அன்புள்ள  தோழர்களுக்கு,

அதிரடியான் என்பவர் பொய்களையும்,அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை கீற்று தளத்தில் வெளியிட்டு வந்தார். கீற்று தளமும் இதனை ஒரு உள்நோக்கத்துடனும்,வண்மத்துடனும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நாம் அவரை விவாதிக்க அழைப்பதன் மூலம் அவரை பொது தளத்தில் வைத்து அம்பலமாக்கலாம் என்று கருதி அழைத்தோம். இவருடனான விவாதத்தை தோழர்கள் கவனித்திருப்பீர்கள்.நமது பல்வேறு கேள்விகளுக்கும் தனது தரப்பிலிருந்து இவர் மழுப்பலான பதில்களையே தந்தார்.சிலவற்றை ‘கண்டுகொள்ளாமல்’ கடந்தும் சென்றார்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி,கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்.(அந்த அழகை பார்க்க வேண்டும் என்றால் இந்த விவாத சுட்டியில் சென்று அவருடைய விவாததின் தரத்தை காணுங்கள்-https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-404) போதை ஏறிய‌ ஒரு மதவாதியை போன்று முரட்டுத்தனமான தமிழ்தேசிய போதையை ஏற்றிக் கொண்ட‌ நபராக இருக்கும் இவரிடம் நாம் எவ்வளவு விளக்கம் கூறினாலும்,தெளிவு படுத்தினாலும் அது அவருடைய‌ மண்டையில் நிச்சயமாக ஏறப்போவதில்லை.கருத்துக்களை நேர்மையாக‌ அலசி ஆராயும் நாணயமும் இவரிடம் இல்லை.சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்.விவாதத்தில் இவருடைய தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எதுவும் இன்றி எனக்கும் மார்க்ஸியம் தெரியும் என்று மார்தட்டும் போக்கு தான் உள்ளது.அதுவும் அரை குறையாக தெரிந்து கொண்டு விவாதிக்கிறார்.அதற்கு லெனின் மேற்கோளை காட்டியதே உதாரணம்.

இவர் தன்னை எந்த அமைப்பையும் சாராத நபர்,பொதுவான தமிழ் தேசிய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிறார், இது ஒரு பொய் ! கூச்சமின்றி சொல்லும் பச்சைப் பொய்! இவர் ஓடுகாலிகளான த.நா.மா.லெ.க‌ அமைப்பை சேர்ந்தவர். தன்னுடைய அமைப்பு எது என்று கூட‌ சொல்லிக்கொள்ள துணிவில்லாத‌ அநாமதேயங்களுடன் விவாதிப்பது என்பது நாம் அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்.நாம் மிகவு அவசரப்பட்டு இவரை விவாதிக்க அழைத்து விட்டோம், அது மிகவும் தவறான முடிவு என்பதை தற்போது உணர்கிறோம். இனிமேல் வேறு எந்த தோழர்களும் இந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். முகவரியே இல்லாத நேர்மையும் இல்லாத இந்த நபருடன் விவாதிப்பது என்பது யார் என்றே தெரியாத அநாமதேயமான இவரை பெரிய ஆள் ஆக்குவதும், அங்கீகரிப்பதுமாகும் என்று கருதுகிறோம்.

நாம் இவரை வென்றெடுக்கப் போவதில்லை,இவரும் நம்மை வென்றெடுக்கப்  போவதில்லை. எனவே நாம் நமது நேரத்தை இவருடன் மல்லுக்கட்டி வீணடிக்காமல் இவரை புறக்கணிப்பதையே சரி என்று கருதுகிறோம். இதனால் நாம் ஓடிவிட்டோம் என்றும் பயந்து விட்டோம் என்றும் அவர் கீற்றில் போய் கூப்பாடு போடலாம். எனினும் நாம் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இவரை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேறு வேலைகளை பார்ப்பது தான் சரி என்று கருதுகிறோம்.

சில தோழர்களுக்கு எமது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கலாம். தோழர் வினவு இரண்டு நாட்களுக்கு முன்பு எமது தளத்தில் ஒரு பின்னூட்டதை இட்டுள்ளார். ஆனால் நாம் அதன் காரணமாக இந்த முடிவிற்கு வரவில்லை,நமது ஆழமான‌ பரிசீலனையே இந்த முடிவிற்கு காரணம். விவாதத்தின் இடையிலேயே இது பயனுள்ளதா என்கிற பரிசீலனைக்குள் போய் விட்டோம். தோழர் வினவின் பின்னூடம் முடிவை எடுக்க வைத்துள்ளது. இது சரியான முடிவு தான் என்று கருதுகிறோம்.எமது இந்த முடிவு சரியா தவறா என்று பிற‌ தோழர்கள் கருத்து சொல்லுங்கள்.

19 responses to “ஒடுகாலிகளுக்கு அங்கீகாரம் தர வேண்டுமா ??

 1. வீரபாண்டியன்

  சப்பைக் கட்டெல்லாம் இருக்கட்டும்.இங்கு நாம்,நாம் என்று அடிக்கடி சொல்றீங்களே,இந்த “நாம்” ஒட்டு மொத்தமா எல்லா நக்சல் தீவிரவாத வெறி நாய்களை குறிக்கிறதா அல்லது வெறும் ம க் இ க வெறி நாய்களை மட்டும் குறிக்கிறதா?தெளிவு படுத்தவும்.

  • வீரபாண்டியன் எனும் ஆர்எஸ்எஸ் பொறம்போக்கு பன்றியே, நீ கார்பரேஷ் கட்டண கக்கூசில் கக்காவை தின்னும் நேரம் போக வேறு எங்கெல்லாம் மோந்து பார்த்து கொண்டே போகிறாய் என சொன்னால் அங்கங்கே ‘பேண்டு’ வைத்து உனக்கு வயிறு நிறையுமாறு பார்த்துகொள்ள என்னால் முடிந்த உதவிகளை செய்யமுடியும். எப்போ சொல்வாய் பீயத்தின்னும் வராக பாலாவே?

 2. Comrade, we should use this chance (of debating with Athiradiyan) to square him off. He is already on the edge of the bout.. just give him the final kick to throw him out. Any way the debate started.. now dont leave it in between – finish it. Now that he is in a weeker position.. if we stop here, he will get a chance to say he has won. And there are a lot of people happily waiting outside and watching this debate and they too will get a chance. Hence please dont stop this debate..

  This is only my view. Please consider it.

 3. பலா என்கிற பல்லு போன வெறி நாயை குறிக்கவில்லை என்கிற மட்டில் இந்த வெறி நாய் சற்று நிம்மதி அடையலாம்.

 4. மார்க்சிய மாணவன்

  இந்த முடிவு சரியானதே.
  அதிரடியானை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து ஒதுக்குவதே
  சரியானது.

 5. அதிரடியானை புறக்கணித்தது சரி என்கிற உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.
  கீற்று தளத்திலும் நமது தோழர்கள் போய் பின்னூட்டமிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிரடியானை போல குப்பை தளமான கீற்றுவையும் புறங்கையால் எட்டித்தள்ள வேண்டும்.

 6. சந்திரசேகர் ஆசாத்

  உங்கள் முடிவு சரியானது தோழர்களே!

  இந்த விவாதத்தை ஆர்வத்துடன் தான் கவனித்தேன்
  என்றாலும் இது நமக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக‌
  இருக்காது மாறாக முகவரி இல்லாத நபரை அங்கீகரிப்பதாகும்
  என்கிற உங்கள் கருத்தை நான் எற்கிறேன்.

  இவர்களை புறக்கணித்து பயணுள்ள பணிகளை மேற்கொள்வோம்.

 7. ஓடுகாலிகள் வாழ்க By வெள்ளைக்காரன்

  ஓடுகாலிகள் த.நா.மா.லெ.க எங்கிருந்து எங்கே ஓடினார்கள் ?
  எந்த் ஓட்டப்பந்தயத்தில் ஓடி இந்த பட்டத்தை பெற்றார்களா ?

  இந்த் கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களுக்கு அதிரடியான் பரிசளிப்பார்.!!

 8. vrinternationalists

  @ Sangu,

  Dear Comrade,

  People and We already came to know that he is in weeker position for not answering our questions polictially and his debate was squander.

  He answered occasionaly in this debate. So we had to wait for his reply some times. We have given honourable replies for his abusing questions and you can see that our banging questions were cornered him. Even now, we have not been replied for our last post.

  Despite, we desired to stop due to this will not affect us anymore in anyway.
  So Please do not consider that it has been finished. We can say that we have started our debate with a person who is not fit for the debate. More over he is not willing to reveal his political identity. So the situation made us to decide to stop debate with him.

  Hope you can understand our situation to took this decision.

  Thank you for your suggestion.

 9. vrinternationalists

  தங்கள் கருத்துக்களை அளித்த மார்க்சிய மாணவன், Periyarstalin, சந்திரசேகர் ஆசாத் தோழர்களுக்கு நன்றி.

 10. அன்புள்ள சர்வதேசியவாதிகளுக்கு,

  ஓடுகாலிகளின் கருத்து எந்த வகையில் வெளிப்பட்டாலும் நாம் அதனை எதிர்த்தாக வேண்டும். அதிரடியான் எனும் நபருடன் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தை அதன் அடுத்தகட்டத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். அதாவது, தமிழ் தேசியம் பற்றியும், ஓடுகாலிகள்‍‍‍ த.நா.மா.லெ.க வின் வரலாறு பற்றியும் விளக்குவது என்ற கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த விளக்கம் ஓடுகாலிகளுக்கோ, அதிரடியானுக்கோ பதில் சொல்வற்க்காக அல்ல; ஒரு திரிபுவாதத்தின் வரலாற்றை தொகுப்பதற்காகவே நாம் செய்ய வேண்டும்.தேசியம், தேசியம் குறித்த மா‍.லெ பார்வை, தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி நக்சல்பாரி பாதையை விட்டு தா.நா.மா.லெ.க வினர் ஓடியது ஆகிய அனைத்தைப் பற்றியும் ஒரு விரிவான தொகுப்பை நாம் உருவாக்க வேண்டும்.இது நமது தோழர்களுக்கு ஒரு தெளிவான புரிதலைக் கொடுக்கும்.

 11. அதை நிச்சயம் தொகுக்கலாம் தோழர்,
  நீங்கள் கூறுவது போல அது ஓடுகாலிகளை
  அம்பலமாக்குவதுடன் நமது தோழர்களுக்கும்
  பயன்படும். இந்த பணியை செய்ய முயற்சிக்கிறோம்.
  அதற்கு நீங்கள் கூட உதவலாம். முடிந்தால் நீங்களே
  அதை எழுதி தொகுக்கலாம்,
  என்ன சொல்கிறீர்கள் ?

 12. நிச்சயமாக தோழர்களே!

  இது குறித்து உங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

  • vrinternationalists

   முன் வந்ததற்கு வாழ்த்துக்கள் தோழர்.
   உங்கள் மின்னஞ்சலை எதிர்பார்க்கிறோம்.

 13. அலோ அதுக்குள்ள் முற்று புள்ளி வச்சுட்டா எப்படி

 14. நீங்கள் அதிரடியானுடன் விவாதத்தில் இருந்து விலகுகிறேன் என சொன்னீர்களா அல்லது அவர் சொன்னாரா

  அவர் சொல்லி இருந்தால் விட்டு விடலாம் நீங்களாக ஏன் சொல்கிறீர்கள்

 15. வணக்கம் தோழர்,

  அதிரடியான் அவர்களுடன் நடந்த விவாதத்தில் நீங்கள் எடுத்த முடிவு சரியானது தான், பயனில்லாதது என்று தெரிந்த பின் அதில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். ஆனால் இதை அழைக்குமுன்னரே நாம் உணர்ந்திருக்க வேண்டும். கீற்று வில் அவர் சவடாலாக எழுதியதற்கு விளக்கம் மட்டுமே போதுமானது. ஆயினும் விவாதத்திற்கு அழைத்துவிட்டு நாமே முடித்துக்கொண்டது இன்னும் அதிகமாக கீற்று போன்றதளங்களில் அவதூறாய் எழுதுவதையே ஊக்குவிக்கும். குறிப்பிட்ட அமைப்பிற்கு ஆதரவாய் எழுதுகிறேன் எனக்குறிப்பிட்டு எழுத அவரை நிர்ப்பந்தித்திருந்தால் இன்னும் சுபலமாக அவரை அம்பலப்படுத்தியிருக்கமுடியும் என்றே கருதுகிறேன்.

  தோழமையுடன்
  செங்கொடி

 16. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நான் இணையத்தின் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. இப்பொழுதுதான் நடைபெற்ற அனைத்து விவாதங்களையும் நிதானமாக வாசிக்க முடிந்தது. அதிரடியானையும் கீற்று தளத்தையும் பொறுத்தவரை நாம் சட்டை செய்யாமல் விடுவதுதான் சரியானது, என்பது எனது கருத்தும் கூட. அதிரடியானது அவதூறூகளை மறுத்து கீற்றில் நானும் வாதிட்டிருக்கிறேன். அதிரடியானை பதிலளிக்க நிர்பந்தித்திருக்கிறேன். ஆனால் அதிலொன்றும் பலனில்லை என்பதை அடுத்த சில தினங்களிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுது, இந்தப் பதிவினூடாக நீங்கள் எட்டியிருக்கும் முடிவு மிகச் சரியானதே. முந்தைய பதிவில் வினவு குறிப்பிட்டிருக்கும் கருத்தும் கூட ஏற்புடையதுதான். இப்படிப்பட்ட அனாமதேயங்களுடன் அரசியலற்ற நபர்களுடன் விவாதிப்பதில் எந்தப் பலனுமல்ல. மேலும், வேறு பல அனாமதேயங்களும் கூட அதிரடியானைப் போன்று நம்முடன் விவாதிக்கிறேன் பேர்வழியென்று புறப்பட்டு வந்துவிடுவார்கள்.அவர்கள் அரசியலாக விவாதித்தால் நமக்கு மறுப்பேதுமில்லை. அரசியலற்று வெட்டி அரட்டையாகவும், வெற்று ஜம்பங்களாகவும் பதிகையில் அதனைத் தவிர்த்து அடுத்த கட்டத்திற்குச் செல்வதுதான் சரியான வழி. ஆக, சர்வதேசியவாதிகளின் இம்முடிவு மிகவும் சரியானது.

  அடுத்து, கீற்று பற்றி சில கருத்துக்களை நான் இங்கு பதியவேண்டும் என்று விரும்புகிறேன். கீற்றுவுக்கென்றும் கூட எந்த அரசியலோ அறிவு நாணயமோ கிடையாது. ஓவியர் புகழேந்தியின் பித்தலாட்ட, கமர்ஷியல் நடவடிக்கைகள் குறித்து வாய்கிழிய கூப்பாடு போட்ட கீற்று நந்தன், தன்னுடைய தளத்தை அரசியலற்ற தொழிலாக சிறிதும் கூச்சமின்றி மாற்றியிருக்கிறார். ஈழமக்களுக்காகப் போராடுவதாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நந்தன், ஈழ விரோதிகளான சி.பி.எம்., கட்சியினரான ஆதவன் தீட்சன்யா, தமிழ்செல்வன் போன்ற கோமாளிகளின் எழுத்துக்களையும் முந்திக்கொண்டு பதிவிட்டுக் கொள்கிறார். பார்ப்பன எதிர்ப்பாளர்களது பதிவுகளும், பார்ப்பன ஆதரவாளர்களது எழுத்துக்களும் ஒரு சேர பதிவிட்டு தனது தளத்தின் அரசியலற்ற வியாபார நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். எப்படியாவது தமது தளம் வியாபார நோக்கத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதிக எண்ணிக்கையிலான ‘கிளிக்’குகளை எதிர்பார்த்து கடைவிரித்துக் காத்திருக்கிறார்.

  இணையத்தைப் பொறுத்தவரை அமைப்பு ரீதியில் அதிக எண்ணிக்கையிலான நபர்களும் நின்று விவாதிக்கக் கூடிய நபர்களாகவும் நமது அமைப்பினர் விளங்குவதால், நமது கவனத்தை ஈர்க்கவும், நாம் தலையிட்டு விவாதித்தால் சிறிது பரபரப்பு கூடும் என்கிற நோக்கத்திலும்தான் இதுபோன்ற அரசியலற்ற அவதூறுகளை உவந்து பதிப்பித்து வருகிறது கீற்று தளம்.கீற்று தளத்தை நாம் அடியோடு புறக்கனிக்கவும் வேண்டும். அங்கு ஈழ விரும்பிகளும் ஈழ விரோதிகளது பதிவுகளும் நிறைந்திருக்கின்ற போதிலும் அவர்களுக்குள் எந்த முரன்பாடோ மோதல்களோ நிகழ்வதில்லை. ஆதவன் தீட்சன்யாவின் போலி மார்க்சிய முகமும் தமிழின துரோகப் போக்கும், அமெரிக்கக் கைக்கூலிகளான சுசீந்திரன், சுகன், சோபாசக்தி போன்ற ஊதாரிகள் எழுதுகின்ற பதிவுகளில், நமது அதிரடியானகள் தலையிட்டு விவாதித்ததே கிடையாது. இந்த தமிழ் தேசியப் புடுங்கிகள் இவர்களின் எழுத்துக்கள் கீற்றில் பதியப்படுவது குறித்து எந்தக் கவலையும் கொள்வதில்லை, அதில் தலையிட்டு விவாதிக்கவும் திராணியில்லை. குறிப்பாக ந்மது தோழர்களின் தலையீட்டைத் தவிர வேறு எந்த விவாதமும் கீற்று தளத்தில் கிட்டத்தட்ட நடப்பதே கிடையாது. ஏனெனில் ஆதவன், சுசீந்திரன் போறோரது செயல்பாடுகள் நமம் போலித் தமிழ்த்தேசியப் பார்ப்பனர்களை எந்த வகையிலும் அம்பலப்படுத்துவது கிடையாது. ம.க.இ.க. முன்வைக்கும் அரசியல் போலி கம்யூனிஸ்டுகள் முதல் தமிழித்தேசிய வாதிகள் வரை அனைவரது அரசியலையும் நேரடியாக அம்பலப்படுத்துவதனால்தான் நம்மீது இவர்களது அவதூறுகள் பாய்கின்றன. இதுதான் நாம் முன்வைக்கும் நேர்மையான அரசியலுக்கான அங்கீகாரமாகக் கொள்ள வேண்டும்.

  எனினும், அதிரடியானுடனான உங்களது விவாதம் தமிழ்த்தேசியவாதிகளை களத்தில் சந்தித்து விவாதிக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்தவகையில் சர்வதேசியவாதிகளின் இம்முயற்சி பாராட்டத்தக்கதே.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 17. அட்டாக்பாண்டி,அஞ்சாநெஞ்சன்,பிளேடுபக்கிரி,அதிரடியான்,இது எப்படி இருக்குன்னா…கண் இல்லாதவன்==கண்ணாயிரம்,கொன்னவாயன்==சொல்லின்செல்வன், நோயாளிக்கு பெயர்==ஆரோக்கியசாமி,அப்படி..ஓடுகாலி+சோளக்கொல்லைபொம்மை=அதிரடியான்,இந்தஆளு தூங்குரமாதிரி நடிக்கிராறு ,அதனாளே,இந்தஓடுகாலியோட விவாதம் செய்வது என்பது வீன்வேலை, நமக்கு எவ்வளவோ வேலை இருக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s