தமிழ்தேசியம்-பாசிசத்தை நோக்கிய பயணம்!!

சினிமாவால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து இன்னொரு பக்கம் கிரிக்கெட் பல மணி நேரங்களை பறித்தெடுக்கிறது. வீட்டிலிருந்தாலோ மானாட மயிலாட கன்றாவியை பெற்றோர்களே பிள்ளைகளின் மூளைக்குள் நுழைக்கிறார்கள்.ந‌ம்மைச்சுற்றி இது போன்ற கலாச்சார சீரழிவுகள் நிரம்பியுள்ள இன்றைய‌ சூழ‌லில்,இவையே இளைஞர்களால் அதிகமும் பேசப்படுகின்ற விசயமாகவும் இருக்கும் இன்றைய சூழலில், தமிழ் உணர்வு பற்றி,சமூகத்தை பற்றி அரசியல் நிகழ்வுகள் குறித்து ஈழப்பிரச்சனை ஒரு குறிப்பிட்ட (குறைவான எண்ணிக்கை தான் என்றாலும்) இளைஞர்களையாவது உணர்வு என்கிற அளவிலாவது தட்டி எழுப்பியுள்ளது. அரசியல்வாதிகளின் ஓட்டுக்கான உணர்வாய் மட்டும் போலியாய் இருப்பதுபோல இல்லாமல் உண்மையான ஈழ மக்களுக்கான உணர்வாக இளைஞர்களின் மத்தியில் இருந்தது. அதை உலகிற்கு அறிவித்தது தியாகி முத்துகுமரனின் தியாகமும்,அதை தொடர்ந்த‌ சிலரின் தியாகச் சம்பவங்களும்.

muththukumarதியாகி முத்துக் குமரனின் மரணம் ஏற்படுத்திய எழுச்சி பல கல்லூரிகளில் இளைஞர்களிடையே, உண்ணாநிலை போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்று பல வடிவங்களில் வெளிப்பட்ட்து. அந்த எழுச்சியை வற்றச்செய்ய‌ ஓட்டுச் சீட்டு அரசியலில் சகுனியான கருணாநிதி எல்லா கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை விடுத்து மாணவர்களை கலைத்தும்,எம்.பி. பதவிகளை காப்பாற்றிக்கொள்ள ஈழ மக்களை கொல்ல அனுமதித்தையும் நாம் கண்டோம். ‘புலிகள் தீவிரவாதிகள்’,’போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று ஈழத்திற்கு எதிராகவே பேசி வந்த பாசிச பாப்பாத்தி ஜெயலலிதா திடீரென்று ஒரு நாள், ‘நான் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைப்பேன்’ என்று பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகளின் மீதெல்லாம் இளைஞர்களுக்கு என்றும் நம்பிக்கையும் இருந்ததில்லை, மரியாதையும் இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே! எனினும் பாசிச ஜெயலலிதா வின் ‘ஈழம்’ பற்றிய அறிவிப்பின் மீது ஒரு நப்பாசை இருந்தது என்பதும் உண்மை.

ஈழ போராட்டங்களில் போராடிய மாணவர்களும் இளைஞர்களும் ஓட்டு சீட்டு அரசியலில் பங்கு பெறாத பல வகைப்பட்ட‌ தமிழ் தேசியவாதிகளின் பேச்சையே நம்பினார்கள்.அவர்கள் பின்னாலேயே அணி திரண்டார்கள்.ஓட்டு சீட்டு அரசியலில் பங்கு பெறாத இந்த தமிழினவாதிகள் தான், தேர்தல் வந்தவுடனே ‘காங்கிரசுக்கு போடும் ஓட்டு தமிழத்துக்கு வைக்கும் வேட்டு’ என்று கூறி பாசிச‌ ஜெயாவைவும் பிற ஓட்டுப்பொறுக்கிகளையும் ஆதரித்து ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று கூறி அவர்களுக்காக பிரச்சாரம் செய்தார்கள். இதனால் சில இளைஞர்களுக்கு தமிழினவாதிகளின் கருத்துக்களுடன் முரண்பாடுகளும் ஏற்பட்டது.சில பிரிவு இளைஞர்கள் இந்த நட்சத்திர பேச்சாளர்கள் என்ன பேசுகிறார்களோ,அதையே இவர்களின் கருத்தாகவும் நியாயப்படுத்தி ஒருவாறு ஓட்டு சீட்டு தமிழினவாதிகளின் கருத்துகளோடு ஒன்றிப்போனார்கள்.

ஈழப்போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் தமிழினவாதிகள்,போலி ஜனநாயகத்தில் தன் கருத்தின் பலத்தை காட்டும், உரிமையை எதிர்பார்க்கும் தேர்தல் களத்தில் பயணிக்க வைத்தனர்,பழக்க வைத்தனர். இளைஞர்களுக்கு ஓட்டு மட்டுமே ஆயுதம் எனும் பாடம் கற்பிக்கப்பட்ட நிலையில் ஓட்டு போட்டு நம் பலத்தை காட்டவேண்டும் என்று இளைஞர்களை ஓட்டு போட திசை திருப்பி அவர்கள் ஆதரிக்கும் ஓட்டு சீட்டு கட்சிகளுக்கு ஆரவாய் தேர்தலில் பிரச்சாரமும் செய்ய வைத்தனர்.உலகத்தை புரட்டி போடும் அவர்களின் கரங்களை வாக்குச்சாவடியில் பொத்தானை அழுத்த வைத்தார்கள் தமிழின‌வாதிகள். இந்த போலி ஜனநாயகத்தில் உரிமைகள் ஓட்டு போடுவது மூலம் மட்டும் எப்படி கிடைக்கும் என்பதை மறந்து அவர்களும் ஓட்டு போடும் ஜனநாயக கடமையில் மூழ்கி போயினர்.

‘சிங்களவர்கள் கிளிநொச்சியை நெருங்கி விட்டார்களாம். கிளிநொச்சி மட்டுமல்ல, கிளிக்குஞ்சியை கூட‌ சிங்களவர்களால் பிடிக்க முடியாது’ என்று ஓட்டுப்பொறுக்கும் மேடைகளில் தமிழின‌ பேச்சாளர்கள் புலிகளை பற்றிய வீர சாகச பேச்சுக்களினால் மட்டுமே இளைஞர்களின் உணர்வுகளை உரமேற்றிக் கொண்டிருந்தார்கள். ‘தமிழ் தேசியத் தலைவன்,எங்கள் அண்ணனுக்கு எதுவும் நேராது. நாங்களெல்லாம் யார் தெரியுமா ? நாங்கள் எல்லாம் வீரத்தமிழினம்!’ எனும் தொணியிலேயே பேசி பேசி இளைஞர்களின் உளவியலையும் மாற்றினார்கள்‌. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் கனத்த செய்தி வந்தது அது அனைவரின் இதயத்தையும் ஆழமாக‌ பதம் பார்த்தது.ஆம். புலிகளின் பாரிய பின்னடைவு, புலித்தலைமை படுகொலை என்று ஊடகங்களில் செய்திகள் பரவின. இதுகாறும் புலிகளுக்கு எதுவும் நேராது,வீரத் தமிழினம் தோற்காது.அண்ணன் களமாடி வெல்வார் என்று தன் எண்ணத்தில் ஈழத்தையும் பிரபாகரனையும் வைத்திருந்தவர்களின் நம்பிக்கை ஆட்டம் காணத் துவங்கிய‌து. அப்போதும் புலிகள் யாரால் இந்நிலையை அடைந்தார்கள் என்று இளைஞர்களுக்கு கேள்வி கேட்கத் தோன்றவில்லை. அப்படியே அவர்கள் கேள்விகள் எழுந்தாலும் ‘காங்கிரஸ்’ என்னும் ஒற்றை சொல்லில் அவர்களுக்கு அவர்களே பதிலளித்து கொண்டனர். இப்படித்தான் அரசியல் கற்பிக்கப்பட்டு ‘காங்கிரஸ்’ எனும் ஒற்றை சொல்லில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்த தமிழினவாதிகளையும், புலித் தலைமைக்கு தவறான வழிகாட்டிய தமிழின அரசியல்வாதிகளையும் இனங்கான மறந்தனர்.ராஜீவ் காந்திக்காக‌ காங்கிரஸ் அர‌சின் மூலம் சோனியாவின் பழிவாங்கும் போக்கு என்கிற பேச்சில் மூழ்கி இந்தியா தான் இந்த‌ போரை நடத்துகிறது என்பதையும், அதற்கு அடிப்படையான வர்க்க அரசியலையும் காண மறுத்தார்கள். நாம் அப்போது இந்தியாவின் ஆளும் வர்க்கம் தான் இந்த‌ போரை நடத்துகிறது. இந்திய மேலாதிக்கம் தான் இந்த போருக்கு காரணம். காங்கிரஸ் மட்டுமல்ல நீங்கள் கொண்டு வர நினைக்கும் பி.ஜே.பி யாக‌ இருந்தாலும் இதையே தான் செய்யும். பிரச்சனை பி.ஜே.பி யா காங்கிரசா என்பத‌ல்ல என்று கூறி இந்த போரில் இந்தியாவின் நலன்களை அம்பலப்படுத்தினோம். ஆனால் ஆளும் வர்க்கம் கிடையாது,ஆரியம் தான் போரை நடத்துகிறது என்று நமக்கு அறிவுரை கூறிய தமிழினவாதிகள் இன்று மெல்ல மெல்ல நம் கருத்தை கொலைப்புற வழியாக நுழைத்து, மீசையில் மண் ஒட்டவில்லை எனும் தொணியில் ஆங்காங்கே பேசிவருகின்றனர்.

சென்னையில் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய தாமரை ‘சோனியாவோ, காங்கிரசோ இன அழிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியா தான் ஏற்படுத்தியது. அங்கே பி.ஜே.பி யே இருந்தாலும் அதை தான் செய்திருக்கும் என்று இந்தியாவை சாடி பேசினார்.ஆனால் அக்கருத்தை தமிழ் தேசியத்திற்கான பேச்சாக லாவகமாக பேசினார். இன்றும் தமிழ் தேசியவாதிகள் இளைஞர்களை தக்க வைக்க என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? ‘அண்ணன் களமாடுவான், திரும்பி வருவான்’ என்று இயேசு நாதர் வருவார் என்று பாதிரியார்கள் கிறித்தவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதை போல‌ நம்பிக்கையையும்,உணர்ச்சியையும் மட்டுமே அளிக்கக்கூடிய உபவாச கூட்டங்களைத் தான் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கும் தமிழ் தேசியவாதிகள் குழம்பிய‌ நிலையிலிருந்து தமது தமிழ்தேசிய தத்துவத்தின் சாரமான ‘பாசிசத்தை’ நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வ‌ருகிறார்கள். இளைஞர்களும் அந்த குழப்பமான பேச்சுக்களை தெளிவாகவே கேட்கிறார்கள். சமீப காலமாக‌ சீமான், மணியரசன் போன்றோர் பேசிய பேச்சுக்களே இதற்கு சிறந்த‌ உதாரணம்.mumbai_mnes21

 

 

 

 

 

 

 

மும்பை கூட்டத்தில் பேசிய சீமான், ‘பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய‌ அரும்புதல்வர் ராஜ் தாக்கரே ஐயாவை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். மராட்டிய இனத்திற்காக அவர் எவ்வாறெல்லாம் போராடுகிறாரோ அதையெல்லாம் பார்த்தாவது நாம் இன உணர்வு கொள்ளவேண்டும்’ என்று பேசியிருக்கிறார். வடநாட்டு உழைப்பளிகளை அடித்து அவர்களை மும்பையை விட்டு வெளியேற்ற, இனவெறி விசத்தை கக்கிய‌ ராஜ் தாக்கரேவை நாம் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவேண்டுமாம். மும்பைக்கு கூலி வேலைகளுக்கு பிழைப்பு தேடி வந்த‌ பிகார்,உத்திரபிரதேச உழைக்கும் மக்களைத் தாக்கி வெறியாட்டம் போட்ட கும்பலை,அந்த மக்களில் சிலரை கொலையும் கூட செய்த பார்ப்பன இனவெறி பாசிஸ்டுகளை ஆதரிக்க வேண்டும் என்கிறார் இந்த சீமான், எனில் இவருக்கு எவ்வளவு தமிழின போதை மண்டைக்கு ஏறியிருக்க வேண்டும். மும்பையில் இருக்கும் சில‌ தமிழரும் இந்த இனவெறி பேச்சை ஆதரித்து ராஜ் தாக்கரேயின் தரப்பு நியாயமானது என்றும் கருதுகின்றனர். பாசிசம் இப்படித்தான் ஆதரவை பெறுகிறது!

தாக்கரே என்கிற‌ பாசிச கும்பல் அங்கிருக்கும் உழைக்கும் வடநாட்டவரை வெறித்தனமாக தாக்குகிறது. இதை சரியென்கிறார்கள் என்றால், நாளை அந்த அடி உதைகள் தமிழன் மீதும் திரும்பும், அப்படி திரும்பினால் அப்போதும் தமிழினவாதிகள் ராஜ்தாக்கரேவிற்கு ஆதரவளிப்பார்களா ? அப்போதும் ராஜ் தாக்கரேயின் இன உணர்வை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவார்களா? மண்ணின் மைந்தன் ராஜ்தாக்கரே மண்ணை காப்பாற்ற அடித்தானே அவர்கள் அனைவரும் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் தினக்கூலிகள், டாக்ஸி ஓட்டுனர்களும் பெட்டிக்கடையும், பானி பூரி கடையும் வைத்திருந்த சாதாரண 

உழைக்கும் மக்க‌ள்.இதே வீரர் இம்மண்ணில் காலூன்றி தனது மராத்தா இனத்தின் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் ரிலைன்ஸ்,டாடா போன்ற பெரும் முதலைகளை அடிக்கவில்லையே ஏன்? அவர்களுக்கெதிராய் குரலும் எழுப்பியதில்லையே ஏன்? இது தான் அவர்களின் இன உணர்வு.உழைக்கும் வடநாட்டு மக்களுக்கெதிரான இன உணர்வு.

இதே இன உணர்வுடன் கர்நாடகாவில் தமிழனை அடித்தால்,அப்போது மட்டும் கன்னடன் அடிக்கிறான் என்று கூப்பாடு போடுவது ஏன் ? பிறரை அடித்தால் ஆதரவளிப்பது தன்னை அடித்தால் மட்டும் கூப்பாடு போடுவது இது தான் தமிழினவாதிகளின் அரசியல்.இது தான் மாந்தநேயமிக்க தமிழ்தேசிய அரசியலா ? அடிப்பவனை திருப்பி அடிப்பதில் தவறில்லை. ஆனால் அடிப்பவனை விடுத்து ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாய் தன் காலத்தை கழிக்கும் உழைப்பாளிகளை அடிப்பது வீரமல்ல.அது தான் பாசிசமாக மாறும் இனவாதம். உழைக்கும் மக்களுகெதிரான குரல் தான் தமிழ் தேசியவாதிகளின் குரல் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

copy-of-getimage3

 

 

 

 

 

 

 

தமிழினவாதிகள் தமது அரசியல்  பாமரத்தனத்தை தாமே பொது மேடைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தம்மைத் தாமே முட்டாள் என்று கூட்டத்தில் வைத்து அறிவித்துக் கொள்கிறார்கள்.சீமான் தனது மும்பை உரையில் ‘சே குவேரா உருவம் பொறித்த டீ சர்டை ஆரம்பத்தில் நான் தான் அணிந்திருந்தேன்.அதை தமிழகத்துக்கும் நான் தான் அறிமுகம் செய்து வைத்தேன். பிறகு ‘தம்பி’ படத்தின் மூலம் கதாநாயகனையும் அணியவைத்து பரவலாக பிரபலமாக்கினேன்.எனது காரிலும் ‘சே’ ஸ்டிக்கர் தான் ஒட்டியிருந்தேன்.ஆனால் அவருடைய‌ நாடு(கியூபா) இன்று சிங்களவனுக்கு ஆதரவாய் ஐ நா அவையில் வாக்களித்துவிட்டது.எனவே அன்றிலிருந்து இந்த டீசர்டை அணிவது தவறு என்று உணர்ந்து அதை அணிவதில்லை தற்போது அண்ணன் பிரபாகரன் டீ சர்டை அணிந்து வருகிறேன்’ என்றார். சீமான் தனது அரசியல் பாமரத்தனத்தை அறிவுள்ளவரைப் போல‌ பேசியிருக்கிறார். கியூபா தவறிழைத்ததால் சே குவேரா டீ சர்ட் அணியவில்லையாம். என்ன கொடுமைடா இது! ‘பெரியாரின் பேரன்’ என்று சொல்லிக்கொள்ளும் சீமான் அவர்களே, மனங்கெட்ட மாமாப்பயல் கி.வீரமணி ஆயிரம் தப்பு பன்றான் அதுக்காக‌ பெரியாரை விட்டு விடுவீர்களா? நாளையிலிருந்து பெரியார் பற்றி பேசவே மாட்டேன் என்று சொல்லிவிடுவீர்களா ?

ஒருவகையில் நீங்கள் ‘சே’ விட்டு விலகியதும் நல்லது தான். உங்களை முன்னிட்டு ‘சே’வுக்கு அவப்பெயராவது ஏற்படாம‌ல் இருக்கும்!

தற்போது சென்னையில் நடந்த தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய த.தே.பொ.க மணியரசனோ அபாயகரமான சில விசயங்களை பேசினார்.அதில் அபாயம் மட்டுமல்ல அபத்தமும், நகைச்சுவையும் கூட இருக்கிறது! அனைத்திற்கு மார்க்சியத்தை துணைக்கு அழைத்துக்கொள்ளும் இந்த இனவாதி என்ன பேசினார் தெரியுமா ? இந்திய உளவுத்துறையான‌ ‘ரா’   (RAW) தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித் திட்டத்தை வைத்திருக்கிற‌தாம்.அந்த திட்டப்படி, அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவிலுள்ள மற்ற தேசிய இனங்களை எல்லாம் தமிழகத்திற்குள் குடியேற்றி தமிழ் இனத்தை இல்லாமல் செய்யப் போகிறதாம் ‘ரா’.இந்த‌ திட்டப்படி தமிழர்களிடையே இனக்கலப்பை உண்டாக்கி தமிழ் இனத்தை அழிக்க பார்க்கிறதாம் ‘ரா’, தமிழினத்திற்குள் கலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்களாம்! அதை அழிக்க பார்க்கிறார்களாம் ! எனவே நாம் உடனடியாக விழிப்படைந்து இதை தடுத்து நிறுத்த போராடாவிட்டால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் இனம் என்று ஒரு இனமே இருக்காது, நாம் கலப்பினமாக மாற்றப்படுவோம் என்று கூட்டத்தை மிரட்டி பயமுறுத்திவிட்டார். இது கூட்டத்தின் காமெடி. சீரியஸ் விசயம் என்ன தெரியுமா ? தமிழின பாசிசம்! தான் மணியரசன்பேச்சில் கவனிக்கத்தக்க சீரியசான‌ விசயம். ‘ரா’ வின் இந்த திட்டத்தை முறியடிக்க நாம் விழித்துக்கொண்டு போராட வேண்டும் என்று கூறிய மணியரசன் அதற்கு ஒரு வேலைத்திட்டத்தையும் கூறினார் அதாவது ‘மொழிவாரி மாநில பிரிவினைக்கு பிற‌கு தமிழகத்தில் குடியேறிய அனைத்து வேற்று மொழி, இன மக்களையும் தமிழகத்தை விட்டு கட்டாயமாக‌ வெளியேற்ற நாம் போராட வேண்டும்’ என்றார். எப்பேர்பட்ட பாசிசம்! ‘பொதுவுடமை’ கட்சி என்று தனது கட்சிக்கு ‘சிவப்பு’க் கலரில் பெயரை வைத்துக்கொண்டு இப்படி இனவாத பாசிசத்தை வெட்கமில்லாமல் தமிழ்தேசியம் என்கிற பெயரில் விதைத்து வருகிறார் இந்த‌ மணியரசன்.INDIA

 

 

 

 

 

 

இனக்கலப்பு இன வேற்றுமைகளை களையும். சாதிகலப்பு சாதிய வேற்றுமைகளை களையும். இதையே அண்ணல் அம்பேத்கரும் தன் ஆய்வுநூலில் அக மணமுறைக்கெதிராக சாதி கலப்பு திருமணமாக குறிப்பிடுகிறார். மணியரசனின் இந்த எதிர்ப்புக்குரல் உழைக்கும் மக்களையும் உழைப்பாளனாக காணாமல் இன்னொரு இனமானவன் என்றே காணும் வேறுபாட்டுக் கருத்தையே நாம்மை கொள்ளச்செய்கிறது. ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த நாம் இன வேறுபாடின்றி மற்ற இனத்தவரையும் உழைக்கும் வர்க்கமாய் காணவேண்டும்.ஆனால் தமிழினவாதிகள் இங்கு வந்து குடியேறிய உழைக்கும் மக்களை உழைக்கும் வர்க்கமாய் பார்க்காமல் அவர்களை இனவாதிகளாகவே கண்டு அவர்களுக்கெதிராய் குரல் கொடுகின்றனர்.ஆனால் இவர்களின் குரல் ஒரு போதும் இங்கு குடியேறிய பெரிய முதலாளிகளையும்,உழைக்கும் மக்களை வட்டி மூலம் சுரண்டி கொழுக்கும் தொழும்பர்களிடத்தும் ஒலிப்பதில்லை.

மற்ற தேசங்களிலிருந்து குடியேறிய உழைக்கும் மக்களை இனவாதிகளாக பார்க்கும் இனவாதிகளை பார்த்து மாமேதை லெனின், “கடும் வறுமையால் மட்டுமே மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதில் ஐயமில்லை, முதலாளியம் மிகவும் வெட்கமற்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறிய தொழிலாளிகளைச் சுரண்டுகிறது என்பதிலும் ஐயமில்லை.ஆனால் பிற்போக்குவாதிகள் மட்டுமே தேசிய இனங்களின் இந்த நவீன குடியேற்றத்தின் முற்போக்கான முக்கியத்துவத்தை பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வர்”. என்றார். (லெ.தொ.நூ. 19.454)

தமிழ்தேசிய உணர்வால் இனவாத அரசியலில் செல்லும் இளைஞர்களே! இனக்கலப்பு ஏற்படுவதை கண்டு அச்சப்படும் தமிழினவாதிகளை போலத்தான் ஆதிக்க சாதிவெறியனும் சாதிகலப்பு ஏற்பட்டுவிடும் என்று அச்சப்படுகிறான். இனவாதிகள் அச்சப்படுவது சரியானால் ஆதிக்க சாதியாளனின் கருத்தும் சரியா?? சாதிக்கலப்பு திருமணங்களை ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் இன்னொரு இனத்தோடு தமிழினத்திற்கு கலப்பு ஏற்பட்டால் அது தீட்டா ? என்ன ஒரு பகுத்தறிவு தீண்டாமை! சாதியொழிந்து இனங்களிடையே கலப்பு ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். நாடுகளிடையே எல்லைகளை தகர்த்து சமத்துவ சமுதாயம் படைக்க சாதி மறந்து,இனங்கடந்த உழைக்கும் வர்க்கத்தால் மட்டுமே சாத்தியம். சாதியில் பரிசுத்தத்தை கட்டிக்காக்க நினைக்கும் பார்ப்பன கருத்தைப் போல்வே இனத்தில் பரிசுத்தத்தை கட்டிக்காத்து நிலை நாட்ட முயலும் தமிழ் தேசியக் கருத்தும் பாசிசமே அன்றி வேறில்லை!

chenagalpattu41

 •  
  • தமிழினவாதிகளின் கருத்து இளைஞர்களின் உணர்வை உரமேற்றலாம்.ஆனால் அறிவை மங்கச் செய்கிறது என்பதை நாம் உணரவேண்டும். தேர்தலில் ‘ஈழத்தை எதிர்ப்பது காந்தியாகவே இருந்தாலும் நாம் காந்தியை எதிர்ப்போம். ஆதரிப்பது கோட்சேவாக இருந்தாலும் கோட்சேவை ஆதரிப்போம்’ போன்ற அரசியலடிப்படையற்ற பேச்சுக்கள் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. ராஜ் தாக்கரே என்னும் இனவாதியை நாம் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகள் தான் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. இனக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது எனும் இன பரிசுத்ததை ஆதரிக்கும் இனவாதம் தான் தமிழ் தேசியத்தை வழிநடத்துகிறது. அரசியலடிப்படையற்று இவர்கள் பின்னால் செல்லும் தோழர்களே! அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் உள்ள தோழர்களே! சிந்தியுங்கள்! இந்த பாதை பாசிசத்தை நோக்கிப் போகும் பாதை என்பதை கண்களை திறந்து கொண்டு காணுங்கள்.

 

9 responses to “தமிழ்தேசியம்-பாசிசத்தை நோக்கிய பயணம்!!

 1. மிகத்தெளிவான அலசல்,

  சிவப்பால் தங்களை இழுத்துப்போர்த்திக்கொண்டால் தங்கள் கோரைப்பற்கள் மறைந்துபோகும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களை அவர்களின் பின்னால் செல்லும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்

  தோழமையுடன்
  செங்கொடி

 2. TAMIL RAJENDIRAN

  SINTHIKKA VENDIA KARUTHTHU…..

 3. நித்தில்

  //மும்பை கூட்டத்தில் பேசிய சீமான், ‘பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய‌ அரும்புதல்வர் ராஜ் தாக்கரே ஐயாவை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். மராட்டிய இனத்திற்காக அவர் எவ்வாறெல்லாம் போராடுகிறாரோ அதையெல்லாம் பார்த்தாவது நாம் இன உணர்வு கொள்ளவேண்டும்’//

  Shame on you Mr. Seeman.

  Good analysis and writing

  Nithil

 4. கொலைஞ்சன் கருணா நிதி மீண்டும் ஒரு அப்பட்டமான பொய்

  ONELANKA.WORDPRESS.COM Read abt this news..

 5. நல்ல கட்டுரை, உணர்ச்சிகளில் வழுக்கி விழும் இளைஞர்கள் அவசியம் வாசித்து பரிசீலிக்க‌ வேண்டிய கட்டுரை.

  கம்யூனிசம் மலரும் அது காலத்தின் கட்டாயம் என்பதையும் அதனூடாக தான் சமூகம் முழுமையும் உய்வடையும் என்பதையும் ம.க.இ.க தோழர்களின் போராட்ட வாழ்க்கையின் மூலம் அறிகிறேன் அது தான் என்னை போன்றவர்களுக்கு உற்சாகமளிக்கிறது.

  தோழர்களுக்கு செவ்வணக்கம்.

 6. சர்வதேசியவாதிகள்..

  செவ்வணக்கம் தோழர்களே,

  தஙகள் கருத்துக்களை பதித்த தோழர்கள்,

  செங்கொடி, TAMIL RAJENDIRAN, நித்தில், eelawin மற்றும் செல்வராஜ் அவர்களுக்கு நன்றி.

 7. வெங்காயம்

  இளைஞர்கள் இன்று எப்படி கற்பனாவாதவாய் உள்ள தமிழ் தேசியம் பேசும் நபர்களின் பின்னால் செல்கிறார்கள் என்பதை பற்றிய அலசல். தமிழ் தேசியம் மீது ஈடுபாடுள்ள இளைஞர்கள் இதை படித்து திருந்த வேண்டும் அல்லது மாற்று கருத்து இருந்தால் அதை பற்றி விவாதிக்க வேண்டும்.

 8. வேந்தன்

  அன்று தமிழ் தமிழன் என்று தமிழன் தலையில் மிளகாய் அரைத்து அரசியலில் இடம் பிடித்து பிழைத்தார்கள்.
  இப்போது இது இரண்டாம் கட்டம். இவர்களின் உணர்வு பூர்வமாக பேச்சு இப்பாதானே ராஜ் தாக்கரே, ஜெயான்னு போயிருக்கு. அடுத்து எங்கேயோ போய் முட்டும் போது புரியும். ஆகா அவனா இவன் என்று.

 9. nalla alasal… oru vitha insecurity yaerpadukirathu….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s