Monthly Archives: December 2009

ஈழத்தை அழித்த‌ இந்திய ஜனநாயகம் இந்திய மக்களையும் அழிக்கிறது !அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ தமிழகம் தழுவிய மாபெரும் பிரச்சார இயக்கம் துவக்கம்.

அன்பார்ந்த நண்பர்களே, பெரியோர்களே  உழைக்கும் மக்களே, மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டுத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள். “இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

இந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான். தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்தெட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் !

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு நாற்பது (40) கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் ஏழு (7%) சதவிகிதம் மட்டுமே !! இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய் !. இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் !

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.


“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்.” என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

”1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான், “நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும்
நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன்
போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!

மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில்
நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!


தமிழகம்  தழுவிய  பிரச்சார இயக்கம்


ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றினைந்து குரல் கொடுக்க‌‌ அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.


பிப்ரவரி 20, 2010

சென்னை- எம்ஜியார் நகர் மார்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டம்.


மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னனி.தொலைபேசியில் தொடர்பு கொள்ள:

ம.க.இ.க      : 94446 48879

பு.ம.இ.மு     : 94451 12675

பு.ஜ.தொ.மு   : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.


தொடர்புக்கு:
அ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.
கைபேசி: 9444834519.

தொடர்புடைய இடுகைகள்:

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!

Advertisements

மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!

‘அரசு’ என்பதும் ‘ஜனநாயகம்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்பதை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் மெய்ப்பித்துவிட்டன. வெண்மணி அதற்கு நவீன கால உதாரணம். நந்தன் அதற்கு பழங்கால உதாரணம்.  எனினும் சிலர் உழைக்கும் பெரும்பண்மை மக்களுக்கான ஜனநாய‌கத்தை சர்வாதிகாரம் என்றும் சுரண்டும் சிறுமாண்மை கூட்டம் உழைக்கும் பெரும்பாண்மை மக்களின் மீது ஏவிவிடும் சர்வாதிகாரத்தை ஜனாநாயகம் என்றும் கொண்டாடுகிறார்கள். ஆதிக்க சாதி, வர்க்க வெறியர்களால் நந்தனை மட்டும் தான் எரிக்க முடிந்தது, வெண்மணியை மட்டும் தான் கருக்க முடிந்தது, அவர்களின் கனவுகளோ எங்களிடம் கை மாற்றப்பட்டு கண‌ன்று கொண்டிருக்கிறது. அந்த கங்கைக் கொண்டு அனைத்து அநீதிகளுக்கும் தீ மூட்டுவோம்!   இரிஞ்சூர்  கோபாலகிருக்ஷ்னனுக்கு தீர்ப்பு எழுதிய நக்சல்பாரிகள் தான்,  தில்லை  தீட்சிதனுக்கு உரியதல்ல என்கிற வரலாற்றுத் தீர்ப்பையும் எழுதப்போகிறார்கள்.  நக்சல்பாரிகள் தான் வெண்மணி தியாகிகளுக்கு ஜனநாயகம் வழங்கிய அநீதியை புறம் தள்ளி  நீதியை வழங்கி அவர்களின் லட்சியத்தை தமது நெஞ்சிலேந்தி வரித்துக் கொண்ட  அவர்களின் வாரிசுகள்.  நந்தனுக்கோ இன்னும்  நீதி வழங்கப்படவில்லை அவனுக்கான நீதியையும் நக்சல்பாரிகளே எழுதி வைப்பார்கள்.

தீயில் கருகிய வெண்மணி தியாகிகளே உங்கள்
நினைவை நெஞ்சில் ஏந்துகிறோம்!
தீயில் எறிந்த தில்லை நந்தனே!
தீர்ப்பு எழுத விரைந்து வருகிறோம்!
நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை தடுத்து நிற்கும்
தீண்டாமைச்சுவரை தகர்த்தெறிய விரைந்து வருகிறோம்!‌

அன்று ஒரு சிறு கிராமத்திற்குள் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த கோபாலகிருக்ஷ்ண‌ன் நக்சல்பாரிகளால்  களை எடுக்கப்பட்டான். இன்றோ அந்த கோபால கிருக்ஷ்ணனின் பிரம்மாண்ட உருவமாக, மறுகாலனியாதிக்கத்தின் தாசர்களான‌ மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் நக்சல்பாரிகளை அழித்தொழித்து‌ வேட்டையாட‌ வெளிப்படையாகவே‌ பிரகடணம் செய்திருக்கிறார்கள். நாட்டையும் , நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும், அந்நியனுக்கு நட்டை காட்டிக்கொடுக்கும் இந்த அந்நியக்கைகூலிக் கும்பல் நாட்டின் நலனையும், மக்கள் நலனையுமே தமது வாழ்வாக கொண்டு அநீதிகளுக்கு எதிராக போரிடும் நக்சல்பாரிகளை பயங்கரவாதிகள் என்றும், மக்கள் விரோதிகள் என்றும் சித்தரித்து அழித்தொழித்துவிட துடிக்கிறது.

ஆற்காடு நவாப், எட்டப்பன், தொண்டைமான் போன்ற‌ கைக்கூலிகளின் வரிசையில் அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்த நவீன கைக்கூலிகள் மக்களுக்காகவே வாழும், மக்களுக்காகவே சாகும் மாவோயிஸ்டுகளை, நக்சல்பாரி புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என்று மக்களிடமிருந்து பிரிக்கப்பார்க்கிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் என்கிற பெயரில் இந்த அரசபயங்கரவாத கும்பல் அப்பாவி பழங்குடி மக்களைக் கொல்கிறது. பன்னாட்டு நிறுவ‌னங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட‌ எதிரிகள் அறிவித்திருக்கும் இந்த உள்நாட்டுப்போர் நாட்டை முற்றாக அடிமைப்படுத்தும் போராகும். எதிரிகள் போரை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தமது தற்காப்பிற்காக‌ அயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர்கள்.

வில், அம்பு போன்ற எளிய‌ ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் மீது நவீன ஆயுதங்களைக் கொண்டு “ஆப்பரேக்ஷன் கிரீன் ஹண்ட்” என்கிற பெயரில் அரசு நடத்த‌விருக்கும் இந்த பயங்கரவாத தாக்குதலை ஜனநாயக உணர்வு கொண்ட‌ ஒவ்வொருவரும் வ‌ண்மையாக கண்டிக்க வேண்டும். இந்த அரசபயங்கரவாதத்தை அனைத்து இடங்களிலும் அம்பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்கள் தாமாகவே நிறுத்திக்கொள்ளும் வரை இந்த போர் ஒரு முடிவுக்கு வராது.
வெண்மணித்தியாகிகளின் நினைவு நாளில் அரச பயங்கரவாதிகளுக்கு மக்கள் விடுக்கும் எச்சரிக்கை இது!

தொடர்புடைய இடுகைகள்:

வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவலவுல வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில‌…

விதியை வென்றவர்கள் யாரடா…

மறையாது மடியாது நக்சல்பாரி…

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

வெண்மணிச் சரிதம்

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

“நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்  என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்” என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் நாளன்று நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், “நாட்டின் 180 மாவட்டங்களில் நக்சல்பாரிகள் ஊடுருவி விட்டார்கள். நாட்டின் 40 சதவீதப் பகுதியில் அவர்கள் இணையான அரசு நடத்துகிறார்கள்” என்று அப்போதே பீதியூட்டினார். நக்சல்பாரிகளால்தான் நாட்டுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதைப் போல காட்டுவதற்காகவும், இந்த உள்நாட்டுப் போருக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும், “நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றியடைந்து விடவில்லை. தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நக்சல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். “நக்சல் வன்முறையை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். ஆனால், இப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இனியும் தாமதிப்பதற்கில்லை. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்” என்று கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் வரை, அவர்களுக்கெதிராக துணை இராணுவப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை; அவர்களோடு எந்தவித பேச்சுவார்த்தையுமில்லை” என்று அவர் சீறுகிறார். நேற்றுவரை இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டுவந்த ஆட்சியாளர்கள், இப்போது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால்தான் நாட்டுக்குப் பேராபத்து என்று அலறுகிறார்கள்.

“நாடெங்கும் ஆளெடுப்பு நடத்தப்பட்டு 1,50,000 போலீசார் புதிதாகச் சேர்க்கப்படுவார்கள். இதேபோல, துணை இராணுவப் படைகளுக்கு 26,000 பேர் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் வட்டார அளவில் உளவுத்துறை மையங்கள் நிறுவப்படும்.

முதற்கட்டமாக மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஜார்கந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு கோப்ரா படையின் தலைமையகங்கள் நிறுவப்படும். அதன் தொடர்ச்சியாக உ.பி., ஒரிசா மாநிலங்களிலும், பின்னர் இதர மாநிலங்களிலும் நிறுவப்படும். இந்த கோப்ரா படை என்பது கைத்துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், எரிகணைகள், வீடுகள் கட்டிடங்களைத் தகர்க்கும் ஆற்றல் மிக்க துப்பாக்கிகள், கவச உடைகள் கொண்ட அதி நவீன அதிரடிப்படையாகக் கட்டியமைக்கப்படும்” என்று அரசு அறிவித்துள்ளது.

மே.வங்கத்தில் ஏற்கெனவே மாநில போலீசுப் படைகளும் மைய அரசின் துணை இராணுவப் படைகளும் நக்சல்பாரிகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டையையும் தாக்குதலையும் தொடங்கிவிட்டன. 17 கம்பெனி படைகள் (ஒரு கம்பெனி என்பது ஏறத்தாழ 1,700 பேர்) அதாவது ஏறத்தாழ 28,000 பேர் கொண்ட படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநில அரசு, நாட்டிலேயே முதன்முறையாக அமையும் ஃபோர்ஸ்1 என்ற இஸ்ரேலிய பாணியிலான பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படையைக் கட்டியமைத்து, முதலில் மும்பையிலும் அதன் பிறகு புனே மற்றும் நாக்பூரிலும் நிறுவத் தீர்மானித்துள்ளது. நக்சல் வன்முறையால் போர்க்காலச் சூழல் ஏற்பட்டுள்ளதென்றும், நக்சல் வன்முறையை முறியடிக்க ரூ.100 கோடி செலவில் மாநிலப் போலீசுப் படை வலுப்படுத்தப்படும் என்றும், நக்சல் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் ரோந்துப் படைகளும் ஆயுதமேந்தியப் புறக்காவல் நிலையங்களும் நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் நக்சல்பாரிகளை நரவேட்டையாட தனிச்சிறப்பாக போலீசு வேட்டைநாய்கள் படை  உருவாக்கப் பட்டுள்ளதைப் போலவே, சட்டிஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கந்து ஆகிய மாநிலங்களில் இத்தகைய சிறப்புப் போலீசுப் படைகள் உருவாக்கப்படும் என்று மைய அரசு அறிவித்துள்ளது.

இது தவிர கோப்ரா படைகளும் அதிரடிப் படைகளும் மூன்றாண்டுகளுக்கு இம்மாநிலங்களில் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யு.பி.ஜி.எல். எனப்படும் எறிகுண்டு தாக்குதல் பீரங்கியை இனி மாநில அளவிலான தீவிரவாத எதிர்ப்புப் படைகளும் பயன்படுத்த மைய அரசு அனுமதித்துள்ளது. உ.பி.யின் மாயாவதி அரசு, சட்டிஸ்கரில் அரசே கட்டியமைத்துள்ள சல்வாஜூடும் குண்டர் படையைப் போல, 35,000 பேர் கொண்ட குண்டர் படையைக் கட்டியமைக்கத் தீர்மானித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவிலும் கத்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியினரைக் கொண்ட குண்டர்படை கட்டியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

உள்ளூர் பத்திரிகையாளர்கள் லால்கார் போராட்டம் பற்றிய செய்திகளைத் திரட்ட விரும்பினால், தனது இரகசிய இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பி போராட்டச் செய்திகளையும் நேர்காணல்களையும் அவர் அளித்து வந்தார்.

இந்நிலையில், மே.வங்க உளவுத்துறை போலீசார் தம்மை வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் என்றும் அவரிடம் நேர்காணல் நடத்த விரும்புவதாகவும் தகவல் அனுப்பினர். சத்ரதார் மஹடோவும் அவர்களைப் பத்திரிகையாளர்களாகக் கருதி லால்காரிலுள்ள தனது இரகசிய இடத்துக்கு வருமாறு அழைத்தார். பத்திரிகையாளர்களாகக் காட்டிக் கொண்ட உளவுத்துறை போலீசார், இரகசிய இடத்தில் அவரைச் சந்தித்ததும் கைத்துப்பாக்கியை அவரது நெற்றியில் அழுத்தி அவரைக் கடத்திச் சென்று, கைது செய்துள்ளதாக அறிவித்தனர். தலைமறைவாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்த முக்கிய தீவிரவாதியைக் கைது செய்துள்ளதாக மே.வங்க அரசும் உளவுத்துறை போலீசும் தமது சாகசத்தைப் பெருமையாகக் குறிப்பிட்டன.

அதைத் தொடர்ந்து, லால்கார் மக்களின் போராட்டத் தலைவரான சத்ரதார் மஹடோ மிகக் கொடிய பயங்கரவாதி என்றும் அவர் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் மே.வங்கப் போலீசு அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஜூன் 13ஆம் தேதி வரை அவர் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்கு இருநாட்கள் முன்புவரை, லால்கார் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கெஞ்சி தேர்தல் கமிசன் அதிகாரிகளும் மே.வங்க அரசு அதிகாரிகளும் மஹடோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்த பிறகு, அவர் இப்போது “பயங்கரவாதி”யாகி விட்டார்.

“மஹடோவுக்கு ஒரிசாவிலுள்ள மயூர்பன்ச் நகரில் அடுக்கு மாடி வீடு உள்ளது; அவர் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு பாலிசி வைத்துள்ளார். லால்கார் வட்டாரத்தில் அவருக்கு 5 வீடுகள் உள்ளன. அவர் தலைமையிலான போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் பல லட்ச ரூபாய் உள்ளது; மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டிய அவர், நகர்ப்புற அறிவுத்துறையினரிடம் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்தும் லால்கார் வட்டாரத்தில் கட்டாய வரி வசூலித்தும் சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்” – என்றெல்லாம் மே.வங்க இடதுசாரி அரசும் போலீசும் மஹடோ மீது அவதூறு சேற்றை வாரியிறைத்தன.

ஆனால், மஹடோவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு பாலிசி எதுவுமில்லை. ஒரிசாவிலுள்ள மயூர் பன்ச் நகரில் அவரது முன்னோர்களின் பழங்கா

ல வீடு உள்ளது எனினும், உறவினர்கள் பங்கு போட்டுள்ளபடி அவருக்கு அதில் ஒரு சிறு அறை மட்டுமே கிடைக்கும். லால்கார் பகுதியில் உள்ள அம்லியா கிராமத்தில் உள்ள அவரது குடிசை இடிந்த நிலையில் உள்ளது. சால்மர இலைகளை விற்று அவர் தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அண்மையில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து, புதிய கண்ணாடி வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் தவித்ததால், போராட்டக் கமிட்டிதான் அவருக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துள்ளது. போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் சில ஆயிரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகள் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்øமகளை உள்ளூர் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரும், இன்னமும் இந்த அண்டப்புளுகையும் அவதூறையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது, மே.வங்க “இடதுசாரி” அரசு.

எல்லாவற்றுக்கும் மேலாக, மஹடோவைக் கைது செய்த விதமே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி (டி.கே.பாசு விசாரணை வழக்கையொட்டி), ஒருவரைக் கைது செய்யும்போது போலீசார் சீருடையும் தமது பெயர் பொறித்த அதிகாரபூர்வ வில்லையும் அணிந்திருக்க வேண்டும். எதற்காக கைது செய்கிறோம் என்ற விவர அறிக்கையையும் அளிக்க வேண்டும். இது அரசியல் சட்டத்தின் 22வது விதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இந்தியக் குற்றவியல் சட்டத் திருத்த 50ஏ விதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, பத்திரிகையாளர்கள் போல நடித்து உளவுத்துறைப் போலீசு அவரைக் கோழைத்தனமாகக் கைது செய்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தொழிலையே களங்கப்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் உண்மைச் செய்திகள் வெளிவருவதையே தடுக்க முயற்சிக்கிறது. மஹடோ மட்டுமல்ல; மாவோயிஸ்டு கட்சி முன்னணியாளர்களும் லால்கார் போராட்டத்தை ஆதரித்து வந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைமுயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது, வெடி மருந்துகள் வைத்திருந்தது, சதிகளில் ஈடுபட்டது என பயங்கரவாத ஊபா சட்டப்படி இவர்கள் மீது பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

இப்பயங்கரவாத அடக்குமுறையையும் சட்டவிரோத கைதுகளையும் எதிர்த்தும் போராளிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அருந்ததி ராய், நோம்சாம்ஸ்கி, பிரசாந்த் பூஷண், ஆனந்த் பட்வர்த்தன், சுமித் சர்க்கார், வந்தனா சிவா, மீரா நாயர் என பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், சமூகவியலாளர்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை இயக்கத்தினர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு மே.வங்க பாசிச அரசை எச்சரித்துள்ளனர்.

புதிய ஜனநாயகம்
நவம்பர் 09


தொடர்புடைய இடுகைகள்:

The Heart Of India Is Under Attack-Arundhati Roy

Human rights activists raise voice against operation greenhunt

Stop War Against the People

Green Hunt:Homeless triblas wanderers in their own country

Delhi Protesters March Against Operation Green Hunt

Mr Chidambaram’s War-Arundhati Roy

Operation Saffron Hunt?

India: Protect Civilians in Anti-Maoist Drive – Human Rights Watch

Seeking Mandate For Operation Jharkhand Hunt

Why Operation Green Hunt will fail

Burnt in oil: A fact-finding report on operation Green hunt in Dantewada in September-October 2009

Operation tribal hunt?

“OPERATION GREEN HUNT”: CENTRAL GOVERNMENT TARGETS TRIBALS AND GUERILLAIST LEFTISTS

Sandwich Theory And Operation Green Hunt

Chhattisgarh Groups Plan Opposition to Operation Green Hunt

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி!

பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேரணிகள், கூட்டங்கள்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தோழர் ஸ்டாலின், அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன். டிசம்பர் 21, அவருடைய 130வது பிறந்த நாள்.

ரஷ்யாவில் உழைக்கும் மக்களை அழுத்தி கொண்டிருந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தர் தோழர் ஸ்டாலின். அப்போராட்டத்தில் சிறை சென்றார். நாடு கடத்தப்பட்டார். பல்லாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின்.

உழைப்பவர்களுக்கே அரசியல் அதிகாரம் என்று சுரண்டும் வர்க்கங்களுக்கெதிராக போர்க் குரலெழுப்பிய மார்க்சிய லெனினியத்தை உறுதியாக பற்றி நின்று நடைபோட்ட கம்யூனிச போராளி தோழர் ஸ்டாலின்.

சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் பொதுவாய் ஒரு அரசு இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்க, இருக்கும் அரசை தூக்கியெரிந்து, உழைக்கும் மக்களின் அரசை நிறுவ வேண்டும் என்று மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்தி பிடித்த போல்ஷ்விக் தோழர் ஸ்டாலின்.

சிறுபான்மை முதலாளிகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் கூறும் பொதுவான அரசு என்பது முதலாளித்துவ சர்வாதிகாரமே! பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஜனநாயகம் என்று நிலை நாட்டிய மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போதும் ஜப்பான் மீது அணுகுண்டை போட்டு பல லட்சம் மக்களை கொன்று குவித்து மனித கறி தின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். அந்தப் போரில் உலகத்தையே அச்சுறுத்திய பாசிச ஹிட்லரை வீழ்த்த இரண்டு கோடி சோவியத் மக்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தோழர் ஸ்டாலின் தன் மகனை இழந்தார். ஆனால் உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டார். பாசிச ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையை வழிநடத்திய மாவீரர் தோழர் ஸ்டாலின்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இரண்டு நூற்றாண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்து முதலாளித்துவத்தை வளர்த்து வல்லரசுகளாகின. ஆனால் எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் உணவு என்று மக்களின்  வாழ்க்கையை மேம்படுத்தி, இருபதே ஆண்டுகளில் வலிய சோசலிச முகாமை படைத்தது சோவியத் ரஷ்யா. அதை கட்டியமைத்த சிற்பி தோழர் ஸ்டாலின்.

மனித குலத்தின் ரத்ததை உறிஞ்சி வாழும் முதலாளித்துவத்தை கொன்று மனித குலத்தின் மேன்மையை பறைசாற்றும் சோசலிசத்தை நிலைநாட்டிய பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் ஸ்டாலின்.

உலகை சூறையாட மூர்க்கமாய் திரிந்த ஏகாதிபத்தியங்களுக்கு தடையரணாய், பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாய், காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஆதரவாய் நின்றது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யா.

’கம்யூனிசம் தோற்றுவிட்டது, சோசலிசம் நடைமுறைக்கு உதவாது’ என்று பிதற்றுகிறது முதலாளித்துவம். ஆனால் முதலாளித்துவமோ தினம், தினம் திவாலாகிக் கொண்டும் அழுகி நாறிக்கொண்டும் சவக்குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தன்னுடன் சேர்த்து உலகத்தையே அழிவில் தள்ளிக்கொண்டிருக்கின்றது. வேலையை பறித்தும், உணவை பதுக்கியும் உழைக்கும் மக்களை வறுமை பட்டினியில் தள்ளி அடங்காத லாப வெறி கொண்டு அலைகிறது. உலக வங்கி, உலக வர்த்தக கழகம், சர்வதேசிய நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய கைகூலி நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உழைப்பை சுரண்டியும் பின் தங்கிய நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையிட்டும் வருகிறது. வியட்நாம், ஆப்கான், ஈராக், என ஆக்கிரமிப்பு போர்களை நடத்தி மக்களை கொன்று குவிக்கிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற நாசக்கார கொள்கைகளை திணித்து நாடுகளை மறுகாலனியாக்குகிறது.

கம்யூனிசம் வெல்லும் வரை முதலாளித்துவம் கொன்று கொண்டே இருக்கும். மக்களைக் கொல்வதன் மூலம் முதலாளித்துவம் தன்னுடைய வெற்றியை லாபத்தை வாரி சுருட்டிக்கொள்கிறது. முதலாளித்துவத்தை கொள்வதன் மூலமே மக்கள் வெல்ல முடியும். அதுவே கம்யூனிசத்தின் வெற்றி.

உழைக்கும் மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டாய், உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலமாக நிலைநாட்டி கம்யூனிசத்தின் குறியீடாய், பாசிசத்தை தோற்கடித்து மனித குலத்தை காத்த ஜனநாயகத்தின் பிம்பமாய், சோசலிசத்தை நிலைநாட்டி கம்யூனிச உறுதிபாட்டின் சின்னமாய் விளங்கும் தோழர் ஸ்டாலின்  வழியில் நெஞ்சு நிமிர்த்தி நடைபோடுவோம்.

நமது நாட்டை விழுங்கிகொண்டிருக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய முகாமை வீழ்த்த, ’மக்களே புரட்சியின் நாயகர்கள்’ என்ற தோழர் ஸ்டாலினின் முழக்கத்தை நினைவில் ஏந்துவோம். மக்கள் படையாய் திரண்டெழுவோம். புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடிப்போம்.

தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!

தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள்


சென்னையில்

குரோம்ப்பேட்டை பேருந்து நிலையம், மாலை 4 மணி

பொன்னேரி

அண்ணா சிலை, மாலை 5 மணி


அனைவரும் வருக!


மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.

தொடர்புடைய இடுகைகள்:

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

தோழர் ஸ்டாலின் குறித்த பதிவுகள்

நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!

இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி

டிசம்பர் 6 1992.

பகல் 12 மணி. கிட்டதட்ட 5000 காவி கும்பல் அயோத்தியில் பாபர் மசூதியின் வெளியே சுற்றி போடப்பட்டிருந்த தடையை உடைத்துக் கொண்டு மசூதியின் மேற்பகுதியை தாக்கி இடிக்கிறார்கள். பின் அங்கே பழங்கால‌ இந்து தீவிரவாதி ராமன் சிலையை வைத்து தற்காலிக‌ கோவிலை கட்டுகிறார்கள். மசூதி தகர்க்கப்பட்டு அங்கே ராமன் கோவில் எழுந்தது. இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளை மீறிய ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலின் இச்செயலை விசாரிக்க 10 நாட்களுக்குள் லிபரான் தலைமையில் விசாரணை குழுவும் அமைந்தது.

இந்து பயங்கரவாத கும்பல் மசூதியை இடித்து சரியாக‌ 17 ஆண்டுகளாகின்றன. ஆனால் 10 நாட்களுக்குள் அமைக்கப்பட்ட லிபரான் தலைமையிலான‌ விசாரணை குழு ஆமை வேகத்தில் நகர்ந்து இப்போது தான் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னமே அந்த அறிக்கையில் வாஜ்பேய் உள்ளிட்ட‌ 68 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள‌ விஷயங்கள் பத்திரிகைகளுக்கு கசிந்து பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா ஒரு பக்கம், ஆளும் கட்சியின் மீது பயங்கரமாக சீறி “சிதம்பரம் உடனே ராஜினாமா செய்யவேண்டும்” என்று அறிக்கை விடுகிறார்.

மறுபக்கம் நாம் நடுநிலையாளர்கள் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்ளும் படித்த(!)  மனிதர்கள்  இதெல்லாம் இப்ப தேவையா? இது போன்ற அறிக்கைகள் எல்லாம் மேலும் மேலும் பிளவைத் தான் உண்டு பன்னும்” என்று தமது அறிவுரைகளை நமக்கு இலவசமாக‌ கொட்டுகிறார்கள்.

உண்மையில் இந்த லிபரான் அறிக்கை முழு உண்மைகளை பகிரங்கமாக முன்வைக்கவில்லை, போலி ஜனநாயகத்திற்குரிய தவிர்க்க முடியாத‌ தன்மைகளோடு வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை அத்வானியை சிறயிலடைக்கப் பரிந்துரைக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிக்கை வெளி வந்ததும் ‘நடுநிலை’ வாதிகளான படித்த நடுத்தர வர்க்கம் நாலா பக்கங்களிலும் தனது நடுநிலை கருத்துக்களை நிலை நாட்டிக்கொண்டிருக்கிற‌து. மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் பெரிய தலைகளையும், நம் நாட்டில் இந்து மதவெறி கும்பலுக்குள்ள ஆதிக்கம் என்ன என்பதையும், தனது  ‘நடுநிலை’ எனும் கருத்தால் இந்த நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் எவ்வாறு மறைக்கிறார்கள் அல்லது மறைமுகமாக அவர்களை ஆதரிக்கிறார்கள் என்பதை கூறவே இந்த பதிவை எழுதுகிறோம்.

தினமணி என்கிற பத்திரிகை மிதவாத இந்து நடுத்தர வர்க்க பார்வையை கொண்ட வலதுசாரி பிற்போக்கு பத்திரிகை என்பதை தினமணியை வாசிப்பவர்கள் அறிவார்கள். அந்த பத்திரிகையில் பத்து நாட்களுக்கு முன் விவாத மேடை என்கிற பகுதியில் விவாதிக்க ‘நேர்மையான’ ஒரு கேள்வி கேட்க்கப்பட்டிருந்தது. ’லிபரான் கமிஷன் அறிக்கை நியாயமானது தானா?’ என்பது தான் அந்த‌ கேள்வி !! அதற்கு வாசகர்களிடமிருந்து வந்திருந்த‌ கடிதங்களில் மிக பெரும்பாலும் இந்த நடுநிலைவாதிகள் என்னும் மேதாவிகளின் கருத்துக்களே!

முதலில் இந்த ’நடுநிலை’ என்னும் நீதி வ‌‌ழுவா நிலைபாடு எப்படிப்பட்டது என்பதை பார்த்தோமானால் அது ஏதோ ஒருவகையில் உண்மையை முற்றிலும் மறைத்து அநீதிக்கு துணைபோகும் செயலாகவே அமையும். நேர்மையாக ஒரு செயலை அணுகும் போது முடிவு என்பது நடுநிலை என்று எந்த விஷயத்திலும் இருக்கமுடியாது. ஏதாவது ஒரு சார்பாக தான், ஏதோ ஒரு கருத்தை சார்ந்து தான், நீதியையோ அநீதியையோ ஆதரிக்காமல் இருக்கமுடியாது. இரு பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் நிற்பது தான் ஒருவனுடைய‌ உண்மையான கருத்தாகவும் இருக்க முடியும். நடுநிலை வகிப்பது உண்மையை மறைப்பதும், அநீதிக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதுமாகும்.

அதை நிரூப்பிக்கும் வகையில் தான் இந்த வாசகர்களின் கடிதங்கள் அமைந்துள்ளன. அதில் ஒரு சிலவற்றை பார்போம்.

“லிபரான் கமிஷன் அறிக்கை மீண்டும் ஒரு மதக்கலவரத்துக்கு வழி செய்யும். நாட்டின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். 17 ஆண்டுகள் கடந்து மீண்டும் ஒரு பயங்கரத்தை நிகழ்த்த வேண்டாம்”

– பா.அரவிந்த். திருப்பூர்.

மசூதியை இடிக்கும் மதவெறி கும்பலும் கிளம்பி வந்த குரங்கு கூட்டமும்

தன்னை நடுநிலை யோக்கியவான்கள் என்று நினைத்து கொண்டு இப்படியெல்லாம் யோசிக்கும் கனவான்கள் நாட்டின் வளர்ச்சியும்  பொருளாதாரமும் லிபரான் கமிஷனால் தடுக்கப்படுகிறது என்று அச்சப்படுகின்றனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் VSNL நிறுவனத்தை டாட்டாவுக்கு 5 மடங்குக்கும் குறைவாக, வாஜ்பாய் தன் அப்பன் வீட்டு சொத்தைக் கொடுப்பதைப் போல‌ அள்ளிக்கொடுத்த போது இந்த நடுநிலைவாதிகள் நாட்டைப் பற்றி என்ன நினைத்தார்கள் ?

2002 இல் கடும் வறட்சியிலும் பஞ்சத்திலும் சிக்கி இந்திய மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த போது அரசுக் கையிலிருந்த 2.2 கோடி டன் கோதுமையை ஐரோப்பியப் பன்றிகளுக்குத் தீவனமாக அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க அரசை இவர்களின் நடுநிலைக் கண்ணோட்டம்  கண்டிக்காதது ஏன் ?  பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவித்த இந்த விஷயங்கள் மீது இந்த நடுநிலையாளர்களுக்கு அக்கறை இல்லை. ஓரளவுக்காவது உண்மையை சொல்லும் லிபரான் அறிக்கை வந்ததும் தான் இவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கரை வருகிறது.

நடந்தவை நடந்தவையாகவே இருந்து விட்டுப் போகட்டும். இனிமேலாவது விட்டு விடுங்கள் என்று நடுநிலையாக நியாயம் பேசுபர்கள் நம்மிலும் பலர் இருக்க கூடும். நாம் கேட்பது, அதேபோல் மும்பையின் நவம்பர் சம்பவத்தையும் மறந்து நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று நியாயபடுத்தி பேச முடியுமா? அப்படி இவர்கள் பேசுவார்களா?

“பாபர் மசூதி சம்பந்தமாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை எப்படியோ வெளியில் வந்துள்ளது. நாடு ஏற்கனவே மதவாத சக்திகளாலும் மத தீவிரவாத சக்திகளாலும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளாலும் ஓர் இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கும் நேரம். எதிர் கட்சிகள் அரசியல் நடத்த வேண்டும். நாட்டைப் பற்றி கவலையில்லை. அண்டை நாடுகள் எல்லாம் வளரும் இந்தியாவை கண்டு பொறாமைப்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் லிபரான் கமிஷனால் இந்து கலவரத்தை உருவாக்குவது நியாயமா?

– தி.சேஷாத்ரி. ஆழ்வார் திருநகரி.

எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை வைத்து அரசியல் நடுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்காக காங்கிரசுக்கு நாம் வக்காலத்து வாங்க முடியாது. பி.ஜே.பி மதவெறி கும்பல் என்றால் காங்கிரஸ் மிதவாத பி.ஜே.பி. குமபல்.

ஆக இரண்டு கட்சிகளும் ஒப்பீட்டளவிலோ கொள்கையளவிலோ மக்களை சுரண்டுவதிலும், ஒடுக்குவதிலும், பார்ப்பனியத்தை குற்றங்களிலிருந்து  காப்பதிலும் இந்த இரண்டு ஓட்டுப்பொறுக்கி கும்பலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வளரும் இந்தியாவை இப்படி செய்கிறீர்களே என்று கவலைப்படுபவர்களே, நாட்டின் வளர்ச்சி என்பது எது? இதுவா ஒரு நாட்டின் வளர்ச்சி?

இந்தியாவின் வளர்ச்சியால் யாரும் பொறாமை கொள்ள முடியாது. அப்படி பொறாமை கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்கள் தன்னிறைவை அடையவில்லை. வளர்ச்சி என்பதை மக்களுடைய வாழ்க்கத்தரத்தை வைத்து தான் பார்க்க முடியும், பங்குச்சந்தை புள்ளிகள் உயர்வது வளர்ச்சி அல்ல. ஆனால் இங்குள்ள படித்த நடுத்தர வர்க்க அறிவாளிகள் நாட்டின் முன்னேற்றத்தை இப்படித் தான் பார்க்கிறார்கள். இந்த ஒரு விசயம் போதும் இவர்களின் நடுநிலை எவ்வளவு ஒரு பக்கச்சார்புடையது என்பதை அறிந்துகொள்ள.

விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி-யின் வாரிசுகள். இவர்கள் இந்தியர்கள் இல்லையா?

லிபரான் கமிஷன் அறிக்கை நாட்டில் மறுபடியும் கலவரத்தை உருவாக்கும் என்று பதறுகிறார்கள் சிலர். அப்படியென்றால் முன்பு செய்த தவறுக்காக ஒருவனுக்கு தண்டனைகள் என்று எதுவும் கொடுக்ககூடாது. அப்படி செய்தால் அவன் திருப்பி ஏதாவது செய்வான். அதனால் இவர்களை பற்றியெல்லாம் நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

மசூதி இடிப்பில் அத்வானியும், வாஜ்பாயும் இன்னபிற மதவெறியர்களுக்கும் தொடர்புண்டு, இவர்கள் தான் தூண்டிவிட்டார்கள் என்று அறிக்கை சமர்பித்தால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும், நாட்டின் முன்னேற்றம் கெடும்.

மோடி குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கின்றான். அவனைப் பற்றி அறிக்கை சமர்பித்தாலும் கலவரங்கள் வெடிக்கும். எனவே எல்லாவற்ரையும் மறந்துவிடுங்கள், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடப்பவற்றை பார்ப்போம் என்பது தான் இவர்களின் நேர்மையான‌ நடுநிலை வாதம். சரி அப்படிப்பார்த்தால் அதே விதி தானே இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பொருந்தும் ? அப்படியானால் மும்பை தாக்குதலுக்காக கசாப் மீது விசாரனை நடத்த வேண்டாம், அதை கிளறினால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். எனவே அவர்களைப் பற்றியும் பேச வேண்டாம், நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் மேற்கொண்டு நடக்க‌ வேண்டியதை பார்ப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. மாறாக இந்த நடுநிலை அறிவாளிகளுக்கு இசுலாமிய பயங்கரவாதம் என்றால் தான் தேசபக்தி பொங்கி வழியும்.

பயங்கரவாதம் என்றாலே அது இஸ்லாமியர்கள் தான் என்று எண்ணும் இவர்களுக்கு இந்து பயங்கரவாதம் என்ற‌ ஒன்றை பற்றி பேசவோ நினைக்கவோ கூட முடிவதில்லை. ஆனால் இவர்களின் கண்ணோட்டம் நேர்மையான, நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட‌ நடுநிலையான கண்ணோட்டம்!!

“அயோத்தி இயக்கத்தில் எனக்கிருக்கும் தொடர்பு குறித்து நான் பெருமைப்படுகிறேன். ராமர் கோவிலை கட்டும் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன்” என்று  பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக பேசிய‌ மதவெறியன் அத்வானியை, மசூதியை இடிக்கச்சொல்லி உத்தரவு போட்ட முதல் கிரிமினல் அத்வானியை இந்த ‘ஜனநாயக’ நாட்டின் சட்டங்கள் தண்டிக்காததற்கு என்ன காரணம் என்பதை நமது நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் விளக்குவார்களா ?

மசூதியை இடிக்க உத்தரவிட்ட கிரிமினல் அத்வானி

எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து காங்கிரசை எதிர்ப்பதற்கு பதிலாக  பா.ஜா.கா வை எதிர்க்கிறார்கள் என்று தன் நடுநிலையை வெளிப்படுத்தியுள்ளது ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை. ‘இந்தியா டுடே’, ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளுக்கு நாட்டில் நடக்கும் அநீதிகள் எவையும் தெரிவதில்லை. மக்கள் சோறின்றி சாகிறார்கள், வேலையில்லை, இருக்கிற வேலைகளும் பறி போகின்றன, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். இந்த ‘பார்ப்பன’ ஜனநாயகத்தூண்களின் கண்களுக்கு இந்த‌ அநீதிகள் எதன் மீதும் கோபமோ, சீற்றமோ வந்ததில்லை , ஆனால் இந்துமதவெறியர்கள் தற்போது மாட்டிக்கொண்டதும் மக்கள் முன்பு அவர்கள் அம்பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறையோடு கருத்தை பரப்புகின்றன.

இந்த நாட்டில் “ஜனநாயகம்” எப்படி அழுகி நாறிப்போயிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது போலி ஜனநாயகம் என்பதற்கு இந்த பத்திரிக்கைகளும், நடுத்தர வர்க்கத்தின் நடுநிலை என்கிற ‘சார்பு’ நிலை கண்ணோட்டங்களே சிறந்த உதாரணங்களாகும்.‌

உங்களில் பலரும் கூட‌ இது போன்ற நடுநிலை மாயைகளில் உங்களை அறியாமலே கூட‌ சிக்கியிருக்கலாம், எனவே நீங்களும் உங்கள் கணோட்டத்தை பரிசீலியுங்கள். நீதியையும் உண்மையையும் தேடுங்கள். எனது கண்ணோட்டம் நடுநிலையானது என்று கூறி குற்றத்திற்கு துணை போகாதீர்கள்.

குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் ஹாயாக உலா வரும் மோடிக்கு இதுவரை என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

இனத்தின் பெயரால் உழைக்கும் மக்களை அடித்து விரட்டிய பால் தாக்கரே கும்பலுக்கு, ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில் இதுவரை என்ன தண்டனை கிடைத்தது?

பிரவின் தெகாடியாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?

தமிழ்நாட்டையே மொட்டையடித்த கொள்ளைக்காரி ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

பயங்கரவாதிகளான இந்த‌ காவிகும்பலுக்கு எப்போதும் தண்டனைகள் கிடையாது குற்றங்கள் செய்யச்செய்ய‌ சலுகைகள் தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன‌.

 

பச்சைக் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் எரித்துக் கொன்ற‌ பார்ப்பன பயங்கரவாதம்.

அய்யய்யோ பழையதை கிளறாதீர்கள் கலவரம் வெடிக்கும் என்று கூச்சலிடும் நடுநிலைவாதிகளே!  இந்த லிபரான் கமிஷனால் இங்கு என்ன தலைகீழ் மாற்றம் நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ? வாஜ்பாயையும், அத்வானியை தூக்கிலா போடப்போகிறார்கள் ? செத்த பிறகும் கூட   இந்த கேடுகெட்ட ஜனநாயகம் இவர்களை தண்டிக்காது.  இந்த சட்டங்களின் கீழ், இந்த உச்சிக்குடுமி மன்றங்களின் கீழ் இவ‌ர்களுக்கெல்லாம் ஒரு காலும்  தண்டனைகள் கிடைக்கப் போவதில்லை என்பதை நாங்கள் இன்றைக்கே அடித்துச்சொல்கிறோம். சட்டங்களும், அதன் பிரிவுகளும், தண்டனைகளும், அதன் வலிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவுமே இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த‌ சட்டங்கள் என்றைக்கும் அப்படியே நீடித்தும் நிற்க‌ முடியாது. அனைத்தும் மாறுவது போல இந்த போலி ஜனநாயக சமூகமும் மாறும், மிகப்பெரும்பாண்மையான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் போது, சட்டங்களும் மாறும், தண்டனைகளும் மாறும், அதிகாரமும் மாறும், உழைக்கும் மக்களின் அதிகாரம் ஆட்சி செய்யும் போது‌ அத்வானிக்கும், வாஜ்பாய்க்கும், நரேந்திர‌ மோடிக்கும், பிரவீன் தெகாடியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும், சசிக்கலாவுக்கும் அவர்களால் ஆளப்பட்ட மக்களாலேயே தண்டனைகள் வழங்கப்படும்.அப்போது அவர்கள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுவார்கள் என்பதையும் இப்போதே உங்களுக்கு அடித்துச்சொல்கிறோம். ஆனால் அப்போது நடுநிலைவாதமும் இருக்காது.

தொடர்புடைய இடுகைகள்:

நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

“சுரணையற்ற இந்தியா”

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி !

‘Thanks To BJP, Ram Lalla Stands Like A Beggar’

ஐடி துறை நண்பா இதை கொஞ்சம் கவனி

அன்பார்ந்த தொழிலாளர்களே உழைக்கும் மக்களே!

வெளிச்சத்தின் அருமை இருளில் தெரியும்! நிழலின் அருமை வெயிலில் தெரியும்! சிறிது நேரம் விளக்குகள் எரியாவிட்டால் குருடர்களாகிப் போகிறோம். மின் விசிறி சுற்றாவிட்டால் வியர்த்துப் போகிறோம். ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே அனைத்தும் செயலிழந்தது போலாகிவிடுகிறது. இப்படி வீட்டை, ஊரை, நாட்டை அனைத்தையும் இயக்கும் மின்சாரத்தை தயாரிப்பது என்பது, சுவிட்சைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல் அவ்வளவு எளிமையானது அல்ல! எங்கோ சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பதில் இருந்து, நம் தெருக்களில் மின் கம்பங்களில் ஒயர்களை இழுப்பது வரை அனைத்திலும்  பல லட்சம் தொழிலாளிகளின் இரவு, பகல் பாராத இரத்தமும், வியர்வையும் சிந்தும் உழைப்பு உறைந்து கிடக்கிறது.

தங்களுடைய உழைப்பின் மூலம் வெளிச்சத்தை படைக்கும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கையோ இன்னும் இருளில் தான் உள்ளது. நெய்வேலியின் சுரங்கத் தொழிலாளி முதல், வட சென்னையின் அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகள் வரை இது தான் நிலைமை. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள் !

ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல், 1970 என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஒரு ஆலையில் உற்பத்திக்கு தேவையான வேலையில் வருடம் முழுவதும் ஈடுபடும் தொழிலாளிகள், நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் உரிமைகள் அனைத்தையும் பெறும் தகுதியுடையவர்கள் என்று சொல்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தைப் போட்ட அரசின் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் தான், இந்த சட்டத்தை மீறி இந்தியாவிலேயே அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளிகளை பயன்படுத்துகின்றன.

சிந்தித்துப்பாருங்கள்! கரியை வெட்டி எடுக்காமல், கரியை அள்ளிப்போடாமல் அனல் மின் நிலையம் எப்படி மின்சாரம் தயாரிக்க முடியும்? ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் உரிமை கேட்க முடியாத ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கின்றன அனல் மின் நிலைய நிறுவனங்கள்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகளாக 300 பேர் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து வருகிறோம். எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி தான், எமது உழைப்பால் தான் இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் குறைந்த கூலியில் வேலை உத்திரவாதம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளாக உரிமைகளின்றி இருக்கிறோம். இந்நிலையில் தான், உழைப்பது மட்டுமல்ல, உரிமைகளுக்காக போராடுவதும் தான் தொழிலாளிகளின் பண்பு, கடைமை என்று உணர்ந்து கொண்டோம்.

ஆகவே நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் துவங்கியுள்ளோம். இதுவரை தொழிலாளிகளாக மட்டும் இருந்த நாங்கள், தற்போது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட படையணியில் இணைந்துள்ளோம். தொழிலாளர் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

உழுது பயிரிட்ட விவசாயிகளின் உழைப்பு உணவாக, நெசவாலைத் தொழிலாளிகளின் உழைப்பு மானமாக, கட்டுமானத் தொழிலாளிகளின் உழைப்பு கூரையாக என உழைக்கும் மக்களின் உழைப்பே உலகை இயங்க வைக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளது.‌ உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட நடக்கும் அரசியல் போராட்டங்களில் முன்நிற்போம்.

அந்த அடிப்படையிலேயே, “உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று முழங்கும் நக்சல்பாரி அரசியல் வழியில் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துள்ளோம்.

மண்ணுக்கடியில் கிடக்கும் கரி தான் வெட்டியெடுத்தால் மாபெரும் மின் சக்தியை கொடுக்கிறது. உழைத்துக் காய்த்த கரங்கள் அனைத்தும் திரண்டெழுந்தால் நாம் தான் மாபெரும் அர‌சியல் சக்தி.

தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வோம். தொழிற்சங்கத்தில் ஒன்றிணைவோம். உழைக்கும் மக்களுடன் திரண்டெழுவோம், அனைவரும் வாரீர் என அறைகூவி அழைக்கிறோம்.

வட சென்னை அனல்மின் நிலைய (NCTPS) ஒப்பந்த‌ தொழிலாளர்களின் தொழிற்சங்க துவக்க விழா.

நிகழ்ச்சி நிரல்

சங்கத் துவக்க விழா

நாள் 11. 12 .09

மாலை 4.00 மணி
NCTPS ஆலைவாயில்

தலைமை
தோழர் சி.மோகன், NCTPS கிளை

கொடியேற்றுபவர்
தோழர் அ.முகுந்தன்
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

பெயர்ப்பலகை திறப்பவர்
தோழர் பா.விஜயக்குமார்
மாநிலப்பொருளால‌ர், பு.ஜ.தொ.மு


பொதுக்கூட்டம்

மாலை 6.00 மணி
அத்திப்பட்டு புது நகர்
இரயில் நிலையம் அருகில்

முன்னிலை
தோழர் எம். மதியழகன்
தலைவர், NCTPS கிளை

தலைமை
தோழர் ம.சி.சுதேக்ஷ் குமார்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,பு.ஜ.தொ.மு.

சிறப்புரை
தோழர் சு.ப.தங்கராசு
மாநில பொதுச்செயலாளர்,பு.ஜ.தொ.மு.

ம.க.இ.க மைய்யக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி.

அனைவரும் வருக‌

தோழமையுடன்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

NCTPS கிளை.

தொடர்புக்கு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அ.முகுந்தன்,110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 24
9444834519, 9444442374

தொடர்புடைய இடுகைகள்:

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை,  ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!