ஐடி துறை நண்பா இதை கொஞ்சம் கவனி

அன்பார்ந்த தொழிலாளர்களே உழைக்கும் மக்களே!

வெளிச்சத்தின் அருமை இருளில் தெரியும்! நிழலின் அருமை வெயிலில் தெரியும்! சிறிது நேரம் விளக்குகள் எரியாவிட்டால் குருடர்களாகிப் போகிறோம். மின் விசிறி சுற்றாவிட்டால் வியர்த்துப் போகிறோம். ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே அனைத்தும் செயலிழந்தது போலாகிவிடுகிறது. இப்படி வீட்டை, ஊரை, நாட்டை அனைத்தையும் இயக்கும் மின்சாரத்தை தயாரிப்பது என்பது, சுவிட்சைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல் அவ்வளவு எளிமையானது அல்ல! எங்கோ சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பதில் இருந்து, நம் தெருக்களில் மின் கம்பங்களில் ஒயர்களை இழுப்பது வரை அனைத்திலும்  பல லட்சம் தொழிலாளிகளின் இரவு, பகல் பாராத இரத்தமும், வியர்வையும் சிந்தும் உழைப்பு உறைந்து கிடக்கிறது.

தங்களுடைய உழைப்பின் மூலம் வெளிச்சத்தை படைக்கும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கையோ இன்னும் இருளில் தான் உள்ளது. நெய்வேலியின் சுரங்கத் தொழிலாளி முதல், வட சென்னையின் அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகள் வரை இது தான் நிலைமை. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள் !

ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல், 1970 என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஒரு ஆலையில் உற்பத்திக்கு தேவையான வேலையில் வருடம் முழுவதும் ஈடுபடும் தொழிலாளிகள், நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் உரிமைகள் அனைத்தையும் பெறும் தகுதியுடையவர்கள் என்று சொல்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தைப் போட்ட அரசின் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் தான், இந்த சட்டத்தை மீறி இந்தியாவிலேயே அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளிகளை பயன்படுத்துகின்றன.

சிந்தித்துப்பாருங்கள்! கரியை வெட்டி எடுக்காமல், கரியை அள்ளிப்போடாமல் அனல் மின் நிலையம் எப்படி மின்சாரம் தயாரிக்க முடியும்? ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் உரிமை கேட்க முடியாத ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கின்றன அனல் மின் நிலைய நிறுவனங்கள்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகளாக 300 பேர் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து வருகிறோம். எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி தான், எமது உழைப்பால் தான் இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் குறைந்த கூலியில் வேலை உத்திரவாதம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளாக உரிமைகளின்றி இருக்கிறோம். இந்நிலையில் தான், உழைப்பது மட்டுமல்ல, உரிமைகளுக்காக போராடுவதும் தான் தொழிலாளிகளின் பண்பு, கடைமை என்று உணர்ந்து கொண்டோம்.

ஆகவே நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் துவங்கியுள்ளோம். இதுவரை தொழிலாளிகளாக மட்டும் இருந்த நாங்கள், தற்போது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட படையணியில் இணைந்துள்ளோம். தொழிலாளர் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

உழுது பயிரிட்ட விவசாயிகளின் உழைப்பு உணவாக, நெசவாலைத் தொழிலாளிகளின் உழைப்பு மானமாக, கட்டுமானத் தொழிலாளிகளின் உழைப்பு கூரையாக என உழைக்கும் மக்களின் உழைப்பே உலகை இயங்க வைக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளது.‌ உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட நடக்கும் அரசியல் போராட்டங்களில் முன்நிற்போம்.

அந்த அடிப்படையிலேயே, “உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று முழங்கும் நக்சல்பாரி அரசியல் வழியில் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துள்ளோம்.

மண்ணுக்கடியில் கிடக்கும் கரி தான் வெட்டியெடுத்தால் மாபெரும் மின் சக்தியை கொடுக்கிறது. உழைத்துக் காய்த்த கரங்கள் அனைத்தும் திரண்டெழுந்தால் நாம் தான் மாபெரும் அர‌சியல் சக்தி.

தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வோம். தொழிற்சங்கத்தில் ஒன்றிணைவோம். உழைக்கும் மக்களுடன் திரண்டெழுவோம், அனைவரும் வாரீர் என அறைகூவி அழைக்கிறோம்.

வட சென்னை அனல்மின் நிலைய (NCTPS) ஒப்பந்த‌ தொழிலாளர்களின் தொழிற்சங்க துவக்க விழா.

நிகழ்ச்சி நிரல்

சங்கத் துவக்க விழா

நாள் 11. 12 .09

மாலை 4.00 மணி
NCTPS ஆலைவாயில்

தலைமை
தோழர் சி.மோகன், NCTPS கிளை

கொடியேற்றுபவர்
தோழர் அ.முகுந்தன்
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

பெயர்ப்பலகை திறப்பவர்
தோழர் பா.விஜயக்குமார்
மாநிலப்பொருளால‌ர், பு.ஜ.தொ.மு


பொதுக்கூட்டம்

மாலை 6.00 மணி
அத்திப்பட்டு புது நகர்
இரயில் நிலையம் அருகில்

முன்னிலை
தோழர் எம். மதியழகன்
தலைவர், NCTPS கிளை

தலைமை
தோழர் ம.சி.சுதேக்ஷ் குமார்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,பு.ஜ.தொ.மு.

சிறப்புரை
தோழர் சு.ப.தங்கராசு
மாநில பொதுச்செயலாளர்,பு.ஜ.தொ.மு.

ம.க.இ.க மைய்யக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி.

அனைவரும் வருக‌

தோழமையுடன்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

NCTPS கிளை.

தொடர்புக்கு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அ.முகுந்தன்,110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 24
9444834519, 9444442374

தொடர்புடைய இடுகைகள்:

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை,  ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

 

7 responses to “ஐடி துறை நண்பா இதை கொஞ்சம் கவனி

  1. பார்த்திபன்

    ஐடி துறை நன்பர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொருத்த‌மான தலைப்பை தான் கொடுத்திருக்கிறீர்கள். கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  2. மிஸ்டர் மிஸ்டேக்

    வாழ்த்துக்கள் தோழரே,

    ஆனால், நிகழ்ச்சி நடக்கும் தேதி குறிப்பிடப்படவில்லை. அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டால் பங்கேற்கலாம்.

  3. சர்வதேசியவாதிகள்

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி தோழர்.
    நிகழ்ச்சி இன்று தான் நடக்கிறது,
    அவசியம் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.

  4. தோழர்,

    நேற்று என்னுடைய அலுவலக வேலை முடிந்த பொழுது, மணி 5.15. இடம் பற்றி துண்டறிக்கையில் இருந்த இடத்திற்கு எப்படி வரலாம் என கேட்ட பொழுது, பாடியில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், புழல் வழியாக, பொன்னேரி, பிறகு மீஞ்சூர் தாண்டி அத்திப்பட்டு என்றார்கள்.

    ஒரு தோழருடன் நானும் 5.15க்கு கிளம்பி தோழர் சொன்ன ரூட்டில் போய் சேர்ந்த பொழுது… இரவு 8 மணி. நான் செய்த ஒரே தவறு எத்தனை கி.மீ. என கேட்காதது தான். மொத்தம் 50 கி.மீ.க்கும் மேல். பாதிக்கு மேல் ரோடும் சரியில்லை.

    அதைவிடக் கொடுமை, குறைந்த பட்சம் எப்பொழுதும் 9.30 வரைக்கும் கூட்டம் நடத்தும் தோழர்கள், நேற்று 8.20க்குள் நன்றியுரையே முடித்துவிட்டார்கள். தூரம் அதிகம் என்பதால் என நினைக்கிறேன்.

    எழுதலாம் என நினைத்து தான் போனேன். ஆனால், எல்லாம் சொதப்பலாகிவிட்டது.

    நிறைய தோழர்கள் நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்தார்கள். நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால், யாராவது ஒருத்தரை பிடித்துவிட முடியும். எனக்கு மக்கள் திரளில் அறிந்த தோழர்கள் எனக்கில்லை. ஆகையால், நீங்கள் எழுதுங்கள். நானும் படித்து கொள்கிறேன்.

    நன்றி

    குருத்து

    பின்குறிப்பு : இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த தோழர்கள், இப்பொழுது சோர்வுற்றிருக்கும் பொழுது, தொடர்ந்து நீங்கள் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    உங்கள் மெயில் ஐ.டி. தாருங்கள். தகவல் பரிமாற்றத்துக்கு உதவும்.

    என்னுடைய ஐ.டி

    socratesjr2007@gmail.com

  5. “ஐடி துறை நண்பா இதை கொஞ்சம் கவனி”

    என்று தலைப்பு வைக்க காரணம் என்ன? ஐ.டி துறையிலும் தொழிற் சங்கங்கள் உருவாக வேண்டும் என்பதாலா?

    • பாட்டாளி வர்க்கம்

      அது தான் ஏற்கெனவே இருக்கே இது தெரியாதா உங்களுக்கு ?
      தொழிற்சங்கம் இருக்கு இன்னும் ஸ்ட்ரைக்கு தான் பன்னலை. ஆனா அது பன்ன முடியுமான்னும் தெரியல முடியாதான்னும் தெரியல. ஒரு வேலை முடியும் ஆனா முடியாதோ ?

      நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s