நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!

இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி

டிசம்பர் 6 1992.

பகல் 12 மணி. கிட்டதட்ட 5000 காவி கும்பல் அயோத்தியில் பாபர் மசூதியின் வெளியே சுற்றி போடப்பட்டிருந்த தடையை உடைத்துக் கொண்டு மசூதியின் மேற்பகுதியை தாக்கி இடிக்கிறார்கள். பின் அங்கே பழங்கால‌ இந்து தீவிரவாதி ராமன் சிலையை வைத்து தற்காலிக‌ கோவிலை கட்டுகிறார்கள். மசூதி தகர்க்கப்பட்டு அங்கே ராமன் கோவில் எழுந்தது. இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளை மீறிய ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலின் இச்செயலை விசாரிக்க 10 நாட்களுக்குள் லிபரான் தலைமையில் விசாரணை குழுவும் அமைந்தது.

இந்து பயங்கரவாத கும்பல் மசூதியை இடித்து சரியாக‌ 17 ஆண்டுகளாகின்றன. ஆனால் 10 நாட்களுக்குள் அமைக்கப்பட்ட லிபரான் தலைமையிலான‌ விசாரணை குழு ஆமை வேகத்தில் நகர்ந்து இப்போது தான் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னமே அந்த அறிக்கையில் வாஜ்பேய் உள்ளிட்ட‌ 68 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள‌ விஷயங்கள் பத்திரிகைகளுக்கு கசிந்து பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா ஒரு பக்கம், ஆளும் கட்சியின் மீது பயங்கரமாக சீறி “சிதம்பரம் உடனே ராஜினாமா செய்யவேண்டும்” என்று அறிக்கை விடுகிறார்.

மறுபக்கம் நாம் நடுநிலையாளர்கள் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்ளும் படித்த(!)  மனிதர்கள்  இதெல்லாம் இப்ப தேவையா? இது போன்ற அறிக்கைகள் எல்லாம் மேலும் மேலும் பிளவைத் தான் உண்டு பன்னும்” என்று தமது அறிவுரைகளை நமக்கு இலவசமாக‌ கொட்டுகிறார்கள்.

உண்மையில் இந்த லிபரான் அறிக்கை முழு உண்மைகளை பகிரங்கமாக முன்வைக்கவில்லை, போலி ஜனநாயகத்திற்குரிய தவிர்க்க முடியாத‌ தன்மைகளோடு வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை அத்வானியை சிறயிலடைக்கப் பரிந்துரைக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிக்கை வெளி வந்ததும் ‘நடுநிலை’ வாதிகளான படித்த நடுத்தர வர்க்கம் நாலா பக்கங்களிலும் தனது நடுநிலை கருத்துக்களை நிலை நாட்டிக்கொண்டிருக்கிற‌து. மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் பெரிய தலைகளையும், நம் நாட்டில் இந்து மதவெறி கும்பலுக்குள்ள ஆதிக்கம் என்ன என்பதையும், தனது  ‘நடுநிலை’ எனும் கருத்தால் இந்த நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் எவ்வாறு மறைக்கிறார்கள் அல்லது மறைமுகமாக அவர்களை ஆதரிக்கிறார்கள் என்பதை கூறவே இந்த பதிவை எழுதுகிறோம்.

தினமணி என்கிற பத்திரிகை மிதவாத இந்து நடுத்தர வர்க்க பார்வையை கொண்ட வலதுசாரி பிற்போக்கு பத்திரிகை என்பதை தினமணியை வாசிப்பவர்கள் அறிவார்கள். அந்த பத்திரிகையில் பத்து நாட்களுக்கு முன் விவாத மேடை என்கிற பகுதியில் விவாதிக்க ‘நேர்மையான’ ஒரு கேள்வி கேட்க்கப்பட்டிருந்தது. ’லிபரான் கமிஷன் அறிக்கை நியாயமானது தானா?’ என்பது தான் அந்த‌ கேள்வி !! அதற்கு வாசகர்களிடமிருந்து வந்திருந்த‌ கடிதங்களில் மிக பெரும்பாலும் இந்த நடுநிலைவாதிகள் என்னும் மேதாவிகளின் கருத்துக்களே!

முதலில் இந்த ’நடுநிலை’ என்னும் நீதி வ‌‌ழுவா நிலைபாடு எப்படிப்பட்டது என்பதை பார்த்தோமானால் அது ஏதோ ஒருவகையில் உண்மையை முற்றிலும் மறைத்து அநீதிக்கு துணைபோகும் செயலாகவே அமையும். நேர்மையாக ஒரு செயலை அணுகும் போது முடிவு என்பது நடுநிலை என்று எந்த விஷயத்திலும் இருக்கமுடியாது. ஏதாவது ஒரு சார்பாக தான், ஏதோ ஒரு கருத்தை சார்ந்து தான், நீதியையோ அநீதியையோ ஆதரிக்காமல் இருக்கமுடியாது. இரு பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் நிற்பது தான் ஒருவனுடைய‌ உண்மையான கருத்தாகவும் இருக்க முடியும். நடுநிலை வகிப்பது உண்மையை மறைப்பதும், அநீதிக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதுமாகும்.

அதை நிரூப்பிக்கும் வகையில் தான் இந்த வாசகர்களின் கடிதங்கள் அமைந்துள்ளன. அதில் ஒரு சிலவற்றை பார்போம்.

“லிபரான் கமிஷன் அறிக்கை மீண்டும் ஒரு மதக்கலவரத்துக்கு வழி செய்யும். நாட்டின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். 17 ஆண்டுகள் கடந்து மீண்டும் ஒரு பயங்கரத்தை நிகழ்த்த வேண்டாம்”

– பா.அரவிந்த். திருப்பூர்.

மசூதியை இடிக்கும் மதவெறி கும்பலும் கிளம்பி வந்த குரங்கு கூட்டமும்

தன்னை நடுநிலை யோக்கியவான்கள் என்று நினைத்து கொண்டு இப்படியெல்லாம் யோசிக்கும் கனவான்கள் நாட்டின் வளர்ச்சியும்  பொருளாதாரமும் லிபரான் கமிஷனால் தடுக்கப்படுகிறது என்று அச்சப்படுகின்றனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் VSNL நிறுவனத்தை டாட்டாவுக்கு 5 மடங்குக்கும் குறைவாக, வாஜ்பாய் தன் அப்பன் வீட்டு சொத்தைக் கொடுப்பதைப் போல‌ அள்ளிக்கொடுத்த போது இந்த நடுநிலைவாதிகள் நாட்டைப் பற்றி என்ன நினைத்தார்கள் ?

2002 இல் கடும் வறட்சியிலும் பஞ்சத்திலும் சிக்கி இந்திய மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த போது அரசுக் கையிலிருந்த 2.2 கோடி டன் கோதுமையை ஐரோப்பியப் பன்றிகளுக்குத் தீவனமாக அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க அரசை இவர்களின் நடுநிலைக் கண்ணோட்டம்  கண்டிக்காதது ஏன் ?  பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவித்த இந்த விஷயங்கள் மீது இந்த நடுநிலையாளர்களுக்கு அக்கறை இல்லை. ஓரளவுக்காவது உண்மையை சொல்லும் லிபரான் அறிக்கை வந்ததும் தான் இவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கரை வருகிறது.

நடந்தவை நடந்தவையாகவே இருந்து விட்டுப் போகட்டும். இனிமேலாவது விட்டு விடுங்கள் என்று நடுநிலையாக நியாயம் பேசுபர்கள் நம்மிலும் பலர் இருக்க கூடும். நாம் கேட்பது, அதேபோல் மும்பையின் நவம்பர் சம்பவத்தையும் மறந்து நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று நியாயபடுத்தி பேச முடியுமா? அப்படி இவர்கள் பேசுவார்களா?

“பாபர் மசூதி சம்பந்தமாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை எப்படியோ வெளியில் வந்துள்ளது. நாடு ஏற்கனவே மதவாத சக்திகளாலும் மத தீவிரவாத சக்திகளாலும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளாலும் ஓர் இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கும் நேரம். எதிர் கட்சிகள் அரசியல் நடத்த வேண்டும். நாட்டைப் பற்றி கவலையில்லை. அண்டை நாடுகள் எல்லாம் வளரும் இந்தியாவை கண்டு பொறாமைப்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் லிபரான் கமிஷனால் இந்து கலவரத்தை உருவாக்குவது நியாயமா?

– தி.சேஷாத்ரி. ஆழ்வார் திருநகரி.

எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை வைத்து அரசியல் நடுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்காக காங்கிரசுக்கு நாம் வக்காலத்து வாங்க முடியாது. பி.ஜே.பி மதவெறி கும்பல் என்றால் காங்கிரஸ் மிதவாத பி.ஜே.பி. குமபல்.

ஆக இரண்டு கட்சிகளும் ஒப்பீட்டளவிலோ கொள்கையளவிலோ மக்களை சுரண்டுவதிலும், ஒடுக்குவதிலும், பார்ப்பனியத்தை குற்றங்களிலிருந்து  காப்பதிலும் இந்த இரண்டு ஓட்டுப்பொறுக்கி கும்பலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வளரும் இந்தியாவை இப்படி செய்கிறீர்களே என்று கவலைப்படுபவர்களே, நாட்டின் வளர்ச்சி என்பது எது? இதுவா ஒரு நாட்டின் வளர்ச்சி?

இந்தியாவின் வளர்ச்சியால் யாரும் பொறாமை கொள்ள முடியாது. அப்படி பொறாமை கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்கள் தன்னிறைவை அடையவில்லை. வளர்ச்சி என்பதை மக்களுடைய வாழ்க்கத்தரத்தை வைத்து தான் பார்க்க முடியும், பங்குச்சந்தை புள்ளிகள் உயர்வது வளர்ச்சி அல்ல. ஆனால் இங்குள்ள படித்த நடுத்தர வர்க்க அறிவாளிகள் நாட்டின் முன்னேற்றத்தை இப்படித் தான் பார்க்கிறார்கள். இந்த ஒரு விசயம் போதும் இவர்களின் நடுநிலை எவ்வளவு ஒரு பக்கச்சார்புடையது என்பதை அறிந்துகொள்ள.

விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி-யின் வாரிசுகள். இவர்கள் இந்தியர்கள் இல்லையா?

லிபரான் கமிஷன் அறிக்கை நாட்டில் மறுபடியும் கலவரத்தை உருவாக்கும் என்று பதறுகிறார்கள் சிலர். அப்படியென்றால் முன்பு செய்த தவறுக்காக ஒருவனுக்கு தண்டனைகள் என்று எதுவும் கொடுக்ககூடாது. அப்படி செய்தால் அவன் திருப்பி ஏதாவது செய்வான். அதனால் இவர்களை பற்றியெல்லாம் நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

மசூதி இடிப்பில் அத்வானியும், வாஜ்பாயும் இன்னபிற மதவெறியர்களுக்கும் தொடர்புண்டு, இவர்கள் தான் தூண்டிவிட்டார்கள் என்று அறிக்கை சமர்பித்தால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும், நாட்டின் முன்னேற்றம் கெடும்.

மோடி குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கின்றான். அவனைப் பற்றி அறிக்கை சமர்பித்தாலும் கலவரங்கள் வெடிக்கும். எனவே எல்லாவற்ரையும் மறந்துவிடுங்கள், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடப்பவற்றை பார்ப்போம் என்பது தான் இவர்களின் நேர்மையான‌ நடுநிலை வாதம். சரி அப்படிப்பார்த்தால் அதே விதி தானே இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பொருந்தும் ? அப்படியானால் மும்பை தாக்குதலுக்காக கசாப் மீது விசாரனை நடத்த வேண்டாம், அதை கிளறினால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். எனவே அவர்களைப் பற்றியும் பேச வேண்டாம், நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் மேற்கொண்டு நடக்க‌ வேண்டியதை பார்ப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. மாறாக இந்த நடுநிலை அறிவாளிகளுக்கு இசுலாமிய பயங்கரவாதம் என்றால் தான் தேசபக்தி பொங்கி வழியும்.

பயங்கரவாதம் என்றாலே அது இஸ்லாமியர்கள் தான் என்று எண்ணும் இவர்களுக்கு இந்து பயங்கரவாதம் என்ற‌ ஒன்றை பற்றி பேசவோ நினைக்கவோ கூட முடிவதில்லை. ஆனால் இவர்களின் கண்ணோட்டம் நேர்மையான, நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட‌ நடுநிலையான கண்ணோட்டம்!!

“அயோத்தி இயக்கத்தில் எனக்கிருக்கும் தொடர்பு குறித்து நான் பெருமைப்படுகிறேன். ராமர் கோவிலை கட்டும் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன்” என்று  பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக பேசிய‌ மதவெறியன் அத்வானியை, மசூதியை இடிக்கச்சொல்லி உத்தரவு போட்ட முதல் கிரிமினல் அத்வானியை இந்த ‘ஜனநாயக’ நாட்டின் சட்டங்கள் தண்டிக்காததற்கு என்ன காரணம் என்பதை நமது நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் விளக்குவார்களா ?

மசூதியை இடிக்க உத்தரவிட்ட கிரிமினல் அத்வானி

எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து காங்கிரசை எதிர்ப்பதற்கு பதிலாக  பா.ஜா.கா வை எதிர்க்கிறார்கள் என்று தன் நடுநிலையை வெளிப்படுத்தியுள்ளது ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை. ‘இந்தியா டுடே’, ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளுக்கு நாட்டில் நடக்கும் அநீதிகள் எவையும் தெரிவதில்லை. மக்கள் சோறின்றி சாகிறார்கள், வேலையில்லை, இருக்கிற வேலைகளும் பறி போகின்றன, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். இந்த ‘பார்ப்பன’ ஜனநாயகத்தூண்களின் கண்களுக்கு இந்த‌ அநீதிகள் எதன் மீதும் கோபமோ, சீற்றமோ வந்ததில்லை , ஆனால் இந்துமதவெறியர்கள் தற்போது மாட்டிக்கொண்டதும் மக்கள் முன்பு அவர்கள் அம்பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறையோடு கருத்தை பரப்புகின்றன.

இந்த நாட்டில் “ஜனநாயகம்” எப்படி அழுகி நாறிப்போயிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது போலி ஜனநாயகம் என்பதற்கு இந்த பத்திரிக்கைகளும், நடுத்தர வர்க்கத்தின் நடுநிலை என்கிற ‘சார்பு’ நிலை கண்ணோட்டங்களே சிறந்த உதாரணங்களாகும்.‌

உங்களில் பலரும் கூட‌ இது போன்ற நடுநிலை மாயைகளில் உங்களை அறியாமலே கூட‌ சிக்கியிருக்கலாம், எனவே நீங்களும் உங்கள் கணோட்டத்தை பரிசீலியுங்கள். நீதியையும் உண்மையையும் தேடுங்கள். எனது கண்ணோட்டம் நடுநிலையானது என்று கூறி குற்றத்திற்கு துணை போகாதீர்கள்.

குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் ஹாயாக உலா வரும் மோடிக்கு இதுவரை என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

இனத்தின் பெயரால் உழைக்கும் மக்களை அடித்து விரட்டிய பால் தாக்கரே கும்பலுக்கு, ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில் இதுவரை என்ன தண்டனை கிடைத்தது?

பிரவின் தெகாடியாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?

தமிழ்நாட்டையே மொட்டையடித்த கொள்ளைக்காரி ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

பயங்கரவாதிகளான இந்த‌ காவிகும்பலுக்கு எப்போதும் தண்டனைகள் கிடையாது குற்றங்கள் செய்யச்செய்ய‌ சலுகைகள் தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன‌.

 

பச்சைக் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் எரித்துக் கொன்ற‌ பார்ப்பன பயங்கரவாதம்.

அய்யய்யோ பழையதை கிளறாதீர்கள் கலவரம் வெடிக்கும் என்று கூச்சலிடும் நடுநிலைவாதிகளே!  இந்த லிபரான் கமிஷனால் இங்கு என்ன தலைகீழ் மாற்றம் நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ? வாஜ்பாயையும், அத்வானியை தூக்கிலா போடப்போகிறார்கள் ? செத்த பிறகும் கூட   இந்த கேடுகெட்ட ஜனநாயகம் இவர்களை தண்டிக்காது.  இந்த சட்டங்களின் கீழ், இந்த உச்சிக்குடுமி மன்றங்களின் கீழ் இவ‌ர்களுக்கெல்லாம் ஒரு காலும்  தண்டனைகள் கிடைக்கப் போவதில்லை என்பதை நாங்கள் இன்றைக்கே அடித்துச்சொல்கிறோம். சட்டங்களும், அதன் பிரிவுகளும், தண்டனைகளும், அதன் வலிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவுமே இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த‌ சட்டங்கள் என்றைக்கும் அப்படியே நீடித்தும் நிற்க‌ முடியாது. அனைத்தும் மாறுவது போல இந்த போலி ஜனநாயக சமூகமும் மாறும், மிகப்பெரும்பாண்மையான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் போது, சட்டங்களும் மாறும், தண்டனைகளும் மாறும், அதிகாரமும் மாறும், உழைக்கும் மக்களின் அதிகாரம் ஆட்சி செய்யும் போது‌ அத்வானிக்கும், வாஜ்பாய்க்கும், நரேந்திர‌ மோடிக்கும், பிரவீன் தெகாடியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும், சசிக்கலாவுக்கும் அவர்களால் ஆளப்பட்ட மக்களாலேயே தண்டனைகள் வழங்கப்படும்.அப்போது அவர்கள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுவார்கள் என்பதையும் இப்போதே உங்களுக்கு அடித்துச்சொல்கிறோம். ஆனால் அப்போது நடுநிலைவாதமும் இருக்காது.

தொடர்புடைய இடுகைகள்:

நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

“சுரணையற்ற இந்தியா”

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி !

‘Thanks To BJP, Ram Lalla Stands Like A Beggar’

Advertisements

20 responses to “நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!

 1. காரல்மார்க்ஸ்

  //அய்யய்யோ பழையதை கிளறாதீர்கள் கலவரம் வெடிக்கும் என்று கூச்சலிடும் நடுநிலைவாதிகளே! இந்த லிபரான் கமிஷனால் இங்கு என்ன தலைகீழ் மாற்றம் நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ? வாஜ்பாயையும், அத்வானியை தூக்கிலா போடப்போகிறார்கள் ? செத்த பிறகும் கூட இவர்களின் ஜனநாயகம் போட விடாது. இவ‌ர்களுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடைக்கப் போவதில்லை என்பதை நாங்கள் இன்றைக்கே அடித்துச்சொல்கிறோம். சட்டங்களும், அதன் பிரிவுகளும், தண்டனைகளும், அதன் வலிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவுமே இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.//

  sari enna seyyalam sollungal

  • காரல்மார்க்ஸ்

   //அய்யய்யோ பழையதை கிளறாதீர்கள் கலவரம் வெடிக்கும் என்று கூச்சலிடும் நடுநிலைவாதிகளே! இந்த லிபரான் கமிஷனால் இங்கு என்ன தலைகீழ் மாற்றம் நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ? வாஜ்பாயையும், அத்வானியை தூக்கிலா போடப்போகிறார்கள் ? செத்த பிறகும் கூட இவர்களின் ஜனநாயகம் போட விடாது. இவ‌ர்களுக்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடைக்கப் போவதில்லை என்பதை நாங்கள் இன்றைக்கே அடித்துச்சொல்கிறோம். சட்டங்களும், அதன் பிரிவுகளும், தண்டனைகளும், அதன் வலிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவுமே இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது//

   இஸ்லாமியரும் பதிலடியாக ஆங்காங்கெ குண்டு வைப்பது என்பது மிக கொடூரமாக
   சாதாரணமனிதன் பாதிக்கப்படும் அளவுக்க்க் போகும் போது

   உங்கள் கேள்வி இஸ்லாமிய்ய பயங்கரவாதிகளையும் நோக்கி இருக்கனும்
   கண்டனமும்தான்

   • ///sari enna seyyalam sollungal////

    நீங்கள் சொல்லுங்களேன். என்ன தான் செய்யலாமென்று, நாங்கள் படித்து பின்பற்றி பலனடைவோம்!

    ////இஸ்லாமியரும் பதிலடியாக ஆங்காங்கெ குண்டு வைப்பது என்பது மிக கொடூரமாக
    சாதாரணமனிதன் பாதிக்கப்படும் அளவுக்க்க் போகும் போது

    உங்கள் கேள்வி இஸ்லாமிய்ய பயங்கரவாதிகளையும் நோக்கி இருக்கனும்
    கண்டனமும்தான்/////

    இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தையும், அதன் பயங்கரவாதத்தையும் எங்கும் ஆதரிப்பதாக இக்கட்டுரையில் இல்லையே? கட்டுரை பார்பன பாசிசத்தை நடுநிலை என்கிற போர்வையில் ஆதரிப்பவர்களையும் (தங்களை அறியாமலே ஆதரிப்பவர்களையும்) பற்றியது. இதை பற்றி உங்கள் கருத்தென்ன?

    கார்ல் மார்க்ஸ் என்று பெயரிட்டு கொண்டு முஸ்லீம் மகளின் மீதான பார்பன விசத்தை இங்கு கக்கவேண்டாம்!

   • நீங்களும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள‌ நடுத்தர வர்க்க கூட்டத்தை சேர்ந்தவரா ?

    பேரைப்பாரு காரல்மார்க்சாம்?

    முடியலைடா சாமி.

   • உங்களின் பெயரை சாவ’ர்கர் என்றோ ராம பக்த “ரங்கன்” (இனிசியல் “கு”) என்றோ மாற்றிக்கொள்ளவும். 🙂

 2. பாட்டாளி வர்க்கம்

  ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு “வர்க்கம்” ஒளிந்து கொண்டிருக்கிறது என்கிற வரலாற்றுப்பொருள்முதல்வாத அறிவியலை உலகிற்கு முன் வைத்தார் மார்க்ஸ். ஆனால் இங்கே காரல் மார்க்ஸ் என்ம்கிற பெயரில் ஒரு “நடுத்தர வர்க்கம்” புலம்புகிறது இதையெல்லாம் என்ன தான் செய்யவோ ?? கட்டுரை சிறப்பு, வாழ்த்துக்கள்.

 3. மிகவும் நல்ல பதிவு.. நான் இந்த தலத்தில் வாசிததிலயே ஆஹா என்று கூறும் அளவிருக்கு உள்ள ஒரு பதிவு என்றால் அதில் இதுவும் ஒன்று.. ஹ்ம்ம்..வாழ்த்துகள்.. நடுநிலை வாதம் ஒழிய வேண்டும் என்று தான் நானும் போராடி கொண்டு இருகிறேன்..

 4. இது எங்கள் மண்!

  மேல் நாட்டு கலாச்சாரத்தை தத்துவம் எனும் பெயரில் மக்களிடம் பரப்பும் விஷ கிருமிகளே,
  இது எங்கள் மண். நாங்கள் எங்கள் உரிமையை நிலை நாட்டிய நாள் இது.
  உங்களுக்கு ஏன்டா வயிறு எரியுது?
  நீங்க கூடத்தான் ரஷ்யாவுல சர்சுகளை இடிசீங்க. அதுக்கு பேர் என்ன?
  இது ராம ஜென்ம பூமி. எங்கள் ராஜ்ஜியத்தை நிலை நாட்டுவோம்.
  கொள்ளையிட வந்து எங்கள் உரிமையை பறித்த முஸ்லீம்களை இந்நாட்டை விட்டே விரட்டுவோம். உங்களையும் சேர்த்து தான்..

  • மேலை நாட்டைப்பற்றியும் வந்தேறியதைப்பற்றியும் நீ பேசாதே ஆர்.எஸ்.எஸ் பிசாசே. ஆரியப்பார்ப்பன கும்பல் எங்கிருந்து வந்தது ஆழ்வார்பேட்டையா மயிலாப்பூரா இல்லை கைபர் போலன் கனவாயா ?

   மார்க்சும் ஏங்கெல்சும் எமது உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்.

   ரசியாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் உன்னைப்போன்ற மதவெறியர்களுக்கு பாடை கட்டுவோம்.

   முதலில் உங்களைத்தான்டா நாட்டைவிட்டு விரட்டியடிக்க வேண்டும்.

  • என்னாது இது “உங்க மண்ணா” அதைப்போய் குதிரை ஓட்டிகினு எங்க இருந்து வந்தீங்களோ அங்க போயி சொல்லுல.

   சரி உன் பேச்சுக்கே வருவோம். நீயும் நானும் ஒண்ணுதான, மத்த சாதிக்காரன் கொலை செஞ்சா எங்க ஆளுங்க ரோட்ட மறிக்கறாங்களா? நீ எதுக்கு பூனூல தடவிகிட்டு அந்த சப்பவாயன் சங்கரனுக்கு சங்கூதுனீங்க!

   நீ தான சாமிக்கு அத்தாரிட்டி (எல்லோரும் அவங்கம்மா வயித்துல பிறப்பாங்க நீதான் பிரம்மன் மூஞ்சில பொறந்தீயே) யாரோ உனக்குத்தெரியாம மனுன்னு ஒரு தே………….மவன் நம்மள எல்லாம் பிரிச்சு வச்சுருக்கான், என்னமோ சூத்திரன் எல்லாம் வப்பாட்டி மவன்னும், தலித்தெல்லாம் பஞ்சமன்னும் எழுதி வச்சுருக்கான், நீ அதை கிழிச்சு போட்டுட்டு வா ஒண்ணா சேர்ந்து போராடலாம். கோயிலுக்குள்ள தமிழ்ல பாடக்கூடாதுன்னும், மத்த சாதிக்காரன் கருவறைக்குள்ள நுழையறது தப்புன்னு சொல்லுற உன் பார்ப்பனீயத்த தூக்கிப்போடு .

   ஆமா அரிசி விலை பருப்பு வில ஏறுது நீயும் பாதிக்கப்படுற நானும் பாதிக்கப்படுற, ஏன் தனியா நிக்குற உன்னோட அந்த பூனூல அத்துட்டு அப்படியே சொந்தக்காரங்க பூணுலெல்லாம் அத்துட்டு வா ஒண்ணா சேர்ந்து போராடலாம்.

   என்னாது இது “உங்க மண்ணா” அதைப்போய் குதிரை ஓட்டிகினு எங்க இருந்து வந்தீங்களோ அங்க போயி சொல்லுல.

   அம்பேத்கர் பிரிவினைவாதியா? சரி உன் பேச்சுக்கே வருவோம். நீயும் நானும் ஒண்ணுதான, மத்த சாதிக்காரன் கொலை செஞ்சா எங்க ஆளுங்க ரோட்ட மறிக்கறாங்களா? நீ எதுக்கு பூனூல தடவிகிட்டு அந்த சப்பவாயன் சங்கரனுக்கு சங்கூதுனீங்க!

   நீ தான சாமிக்கு அத்தாரிட்டி (எல்லோரும் அவங்கம்மா வயித்துல பிறப்பாங்க நீதான் பிரம்மன் மூஞ்சில பொறந்தீயே) யாரோ உனக்குத்தெரியாம மனுன்னு ஒரு தே………….மவன் நம்மள எல்லாம் பிரிச்சு வச்சுருக்கான், என்னமோ சூத்திரன் எல்லாம் வப்பாட்டி மவன்னும், தலித்தெல்லாம் பஞ்சமன்னும் எழுதி வச்சுருக்கான், நீ அதை கிழிச்சு போட்டுட்டு வா ஒண்ணா சேர்ந்து போராடலாம். கோயிலுக்குள்ள தமிழ்ல பாடக்கூடாதுன்னும், மத்த சாதிக்காரன் கருவறைக்குள்ள நுழையறது தப்புன்னு சொல்லுற உன் பார்ப்பனீயத்த தூக்கிப்போடு .

   ஆமா அரிசி விலை பருப்பு வில ஏறுது நீயும் பாதிக்கப்படுற நானும் பாதிக்கப்படுற, ஏன் தனியா நிக்குற உன்னோட அந்த பூனூல அத்துட்டு அப்படியே சொந்தக்காரங்க பூணுலெல்லாம் அத்துட்டு வா ஒண்ணா சேர்ந்து போராடலாம்.

   பார்ப்பானீயத்துக்கு செருப்படி

 5. தமிழகம் முழுவதும் ம.க.இ.க விடம் செமத்தியாக‌ அடி வாங்கிக்கொண்டு வேட்டி அவிழ‌ ஓடி கும்பல் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல். சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலேயே இந்த பார்ப்பன கும்பலை நாம் அடித்து துரத்தினோம். அது எல்லாம் இவர்களுக்கு போதாது இவர்களை மொத்தமாக சுடுகாட்டுக்கு அனுப்பபிட பார்ப்பன எதிர்ப்பாளர்களே ஒன்று திரளுங்கள்.

 6. சிறந்த பதிவு
  நடு நிலை என்று உண்மையில் எதுவும் இல்லை.
  மார்க்சியம் தான் உண்மையான‌ அறிவியல்.

 7. இது எங்கள் மண்!

  //மார்க்சும் ஏங்கெல்சும் எமது உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்//

  இதை சொல்லியே எத்தனை நாளுக்கு ஏமாத்த போறிங்க.

  மார்க்ஸியம் நடைமுறையில் தோற்று போன தத்துவம். ஆனால் இந்து மத தத்துவம் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்து மக்களை மேன்மைபடுத்திய தத்துவம்.

  மார்க்ஸிய தத்துவத்தையும் இந்துமத தத்துவத்தையும் பற்றி விவாதிப்போம்.உங்களுக்கு அறிவிருந்தால்?

  ஆ.எஸ்.எஸ் அமைப்பை எத்தனை முறை நீங்கள் மதவெறி என்று சொன்னாலும் நாங்கள் எங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்.

  நான் கேட்பது நீங்கள் ரஷ்யாவில் செய்தால் தவிறில்லை.நாங்கள் எங்கள் மண்ணில் செய்தால் தவறா?

  நாங்க ஸ்டாலின பாசிஸ்டு சொன்னா அவரு அப்படியில்ல இப்படியில்லன்னு இல்லாத வியாக்கானம் பேசுறீங்க. எங்களை மட்டும் மதவெறின்னு சொல்றீங்க.

  இப்படிதான் உங்க மார்க்ஸியம் பாக்க சொல்லுதா? நல்ல தத்துவம்.
  கம்யூனிசம்னு பேசுரீங்களே எங்கள் போராட்டங்கள் எங்கள் உரிமைகளுக்கான போராட்டமாக கம்யூனிச புரிதலில் பாருங்கள். அப்போது புரியும் நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம் என்று.

  போங்கய்யா நீங்களும் உங்க கம்யூனிசமும்.

  • ஏய் பார்ப்பன பயங்கரவாதியே நான் மேலே கேட்ட கேள்விக்கே நீ இன்னும் பதில் தரவில்லை. முதலில் அதற்கு ப‌தில் சொல்லிவிட்டு அதன் பிறகு மார்க்சை பற்றியும் ஸ்டலினை பற்றியும் பேசு.

 8. ஏய் பார்ப்பன பயங்கரவாதியே நான் மேலே கேட்ட கேள்விக்கே நீ இன்னும் பதில் தரவில்லை. முதலில் அதற்கு ப‌தில் சொல்லிவிட்டு அதன் பிறகு மார்க்சை பற்றியும் ஸ்டலினை பற்றியும் பேசு.

  ///////////////////மேலை நாட்டைப்பற்றியும் வந்தேறியதைப்பற்றியும் நீ பேசாதே ஆர்.எஸ்.எஸ் பிசாசே. ஆரியப்பார்ப்பன கும்பல் எங்கிருந்து வந்தது ஆழ்வார்பேட்டையா மயிலாப்பூரா இல்லை கைபர் போலன் கனவாயா ?

  மார்க்சும் ஏங்கெல்சும் எமது உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்.

  ரசியாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் உன்னைப்போன்ற மதவெறியர்களுக்கு பாடை கட்டுவோம்.

  முதலில் உங்களைத்தான்டா நாட்டைவிட்டு விரட்டியடிக்க வேண்டும்./////////////////////////////

 9. இது எங்கள் மண்!

  ஆமாய்யா! ஆனா வுன்னா இதை புடிச்சிக்கோங்க. கைபர் போலன்னு. அப்படிபாத்தா எல்லாரும் ஆப்பிரிக்கா தான் ஞாபகம் வச்சுகோங்க.
  மனித சமூகம் நாகரீகம் என்னும் நிலையை அடைந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே நாம் இந்த மண் யாருக்கு சொந்தம் எனும் ஆய்வை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்.

  மனித நாகரீகம் உருவாகி கலாச்சாரம், பொருளாதாரம் வாழ்வியல் நெறிகள் உருவாகி எங்கள் மண்ணில் எங்கள் மக்களின் நாகரீகம் முன்னேறி கொண்டிருந்த நிலையில் இருந்தோம். ஆனால் இன்று? எங்களை கொள்ளையடிக்க வந்த கூட்டம் இன்று எங்கள் இடத்தை பிடித்துள்ளது.
  இது எங்கள் மண்!

  சரி. இப்ப மார்க்சையும் ஸ்டாலின் பத்தியும் பேசலாமா?
  எங்கள் உரிமைக்கான போராட்டத்தை பற்றி பேசலாமா?

  இல்ல விவாதிக்க பயந்து மறுபடியும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்னு ஒத்த கால்ல கொக்கு மாதிரி நிக்க மாட்டீங்களே!

 10. இது எங்கள் மண்!

  சரி நீங்க ஏன் செந்தமிழன் பேரை செந்தமிழ்ன்னு மாத்திக்கிட்டீங்க.

  தமிழன்னு சொன்னா கூச்சமா இருக்கா??

  • எங்களுக்கு இந்துன்னுன்னு சொன்னா தான் வெட்கக்கேடாக, மானக்கேடாக, அவமானமாக‌ இருகிறது. உன்னைப்போன்ற பயங்கரவாதியிடம் நாங்கள் எதற்கு விவாதிக்க வேண்டும் ? இவ்வளவு வெறிப்பிடித்தவனாக இருக்கும் உன்னையெல்லாம் எதுவும் செய்ய முடியாது. அதனால கட்டுரையின் கடைசி பாராவை மறுபடியும் ஒரு தரம் படிச்சுக்கோ. நான் வர்றேன். உன்னப்போன்ற பாசிஸ்டுகளையெல்லாம் தூக்கில போடனும்ன்னா புரட்சி வரனுமில்ல, புரட்சி வரனுமின்னா வேலை செயனுமில்ல. அதனால ஓங்கிட்ட பேசி என் நேரத்தை வீனடிக்க முடியாது நான் கிளம்புறேன் நிறைய வேலைகள் இருக்கு

 11. இது எங்கள் மண்!

  விவாதிக்க வக்கில்லைனா இப்படி ஓடுவாங்க… ஓட்டபந்தய வீரர்களையே மிஞ்சிட்டீங்க போங்க.

  நீங்க சொன்னதுக்கு நான் பதில் சொன்னேன். ஆனா நான் விவாதிக்க கூப்பிட்டா வரமாட்டேன் ”எங்கம்மா உன் கூட சேர வேண்டாம்னு சொல்லிட்டாங்க”ன்னு சொல்லாம ஓடுறீங்க.

  பரவாயில்ல போங்க. போயிட்டு எத்தன பேரை வேணும்னாலும் அனுப்புங்க இல்லைனா கூட்டிட்டு வாங்க.

  இது எங்கள் மண்!

 12. காரல்மார்க்ஸ்

  ஆகா காரல் மார்க்ஸ்னுன்னு பேரு வைச்சா நான் இதையெல்லாம் கேட்க கூடாதோ

  நீங்கள் முஸ்லீம் ஆதரவு செய்வது ஏன்னு தெரியாதோ நேக்கு

  ஆவாலோட ஓட்டை அபேஸ் பன்றதுக்கு தானே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s