மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேரணிகள், கூட்டங்கள்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தோழர் ஸ்டாலின், அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன். டிசம்பர் 21, அவருடைய 130வது பிறந்த நாள்.

ரஷ்யாவில் உழைக்கும் மக்களை அழுத்தி கொண்டிருந்த ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தளகர்த்தர் தோழர் ஸ்டாலின். அப்போராட்டத்தில் சிறை சென்றார். நாடு கடத்தப்பட்டார். பல்லாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார். தன்னுடைய வாழ்க்கையை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர் தோழர் ஸ்டாலின்.

உழைப்பவர்களுக்கே அரசியல் அதிகாரம் என்று சுரண்டும் வர்க்கங்களுக்கெதிராக போர்க் குரலெழுப்பிய மார்க்சிய லெனினியத்தை உறுதியாக பற்றி நின்று நடைபோட்ட கம்யூனிச போராளி தோழர் ஸ்டாலின்.

சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் பொதுவாய் ஒரு அரசு இருக்க முடியாது. சுரண்டலை ஒழிக்க, இருக்கும் அரசை தூக்கியெரிந்து, உழைக்கும் மக்களின் அரசை நிறுவ வேண்டும் என்று மார்க்சிய லெனினிய அரசியலை உயர்த்தி பிடித்த போல்ஷ்விக் தோழர் ஸ்டாலின்.

சிறுபான்மை முதலாளிகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் கூறும் பொதுவான அரசு என்பது முதலாளித்துவ சர்வாதிகாரமே! பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஜனநாயகம் என்று நிலை நாட்டிய மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போதும் ஜப்பான் மீது அணுகுண்டை போட்டு பல லட்சம் மக்களை கொன்று குவித்து மனித கறி தின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். அந்தப் போரில் உலகத்தையே அச்சுறுத்திய பாசிச ஹிட்லரை வீழ்த்த இரண்டு கோடி சோவியத் மக்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தோழர் ஸ்டாலின் தன் மகனை இழந்தார். ஆனால் உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டார். பாசிச ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையை வழிநடத்திய மாவீரர் தோழர் ஸ்டாலின்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இரண்டு நூற்றாண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்து முதலாளித்துவத்தை வளர்த்து வல்லரசுகளாகின. ஆனால் எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் உணவு என்று மக்களின்  வாழ்க்கையை மேம்படுத்தி, இருபதே ஆண்டுகளில் வலிய சோசலிச முகாமை படைத்தது சோவியத் ரஷ்யா. அதை கட்டியமைத்த சிற்பி தோழர் ஸ்டாலின்.

மனித குலத்தின் ரத்ததை உறிஞ்சி வாழும் முதலாளித்துவத்தை கொன்று மனித குலத்தின் மேன்மையை பறைசாற்றும் சோசலிசத்தை நிலைநாட்டிய பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் ஸ்டாலின்.

உலகை சூறையாட மூர்க்கமாய் திரிந்த ஏகாதிபத்தியங்களுக்கு தடையரணாய், பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியாய், காலனிய நாடுகளின் விடுதலைக்கு ஆதரவாய் நின்றது தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யா.

’கம்யூனிசம் தோற்றுவிட்டது, சோசலிசம் நடைமுறைக்கு உதவாது’ என்று பிதற்றுகிறது முதலாளித்துவம். ஆனால் முதலாளித்துவமோ தினம், தினம் திவாலாகிக் கொண்டும் அழுகி நாறிக்கொண்டும் சவக்குழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தன்னுடன் சேர்த்து உலகத்தையே அழிவில் தள்ளிக்கொண்டிருக்கின்றது. வேலையை பறித்தும், உணவை பதுக்கியும் உழைக்கும் மக்களை வறுமை பட்டினியில் தள்ளி அடங்காத லாப வெறி கொண்டு அலைகிறது. உலக வங்கி, உலக வர்த்தக கழகம், சர்வதேசிய நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய கைகூலி நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உழைப்பை சுரண்டியும் பின் தங்கிய நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையிட்டும் வருகிறது. வியட்நாம், ஆப்கான், ஈராக், என ஆக்கிரமிப்பு போர்களை நடத்தி மக்களை கொன்று குவிக்கிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற நாசக்கார கொள்கைகளை திணித்து நாடுகளை மறுகாலனியாக்குகிறது.

கம்யூனிசம் வெல்லும் வரை முதலாளித்துவம் கொன்று கொண்டே இருக்கும். மக்களைக் கொல்வதன் மூலம் முதலாளித்துவம் தன்னுடைய வெற்றியை லாபத்தை வாரி சுருட்டிக்கொள்கிறது. முதலாளித்துவத்தை கொள்வதன் மூலமே மக்கள் வெல்ல முடியும். அதுவே கம்யூனிசத்தின் வெற்றி.

உழைக்கும் மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டாய், உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலமாக நிலைநாட்டி கம்யூனிசத்தின் குறியீடாய், பாசிசத்தை தோற்கடித்து மனித குலத்தை காத்த ஜனநாயகத்தின் பிம்பமாய், சோசலிசத்தை நிலைநாட்டி கம்யூனிச உறுதிபாட்டின் சின்னமாய் விளங்கும் தோழர் ஸ்டாலின்  வழியில் நெஞ்சு நிமிர்த்தி நடைபோடுவோம்.

நமது நாட்டை விழுங்கிகொண்டிருக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய முகாமை வீழ்த்த, ’மக்களே புரட்சியின் நாயகர்கள்’ என்ற தோழர் ஸ்டாலினின் முழக்கத்தை நினைவில் ஏந்துவோம். மக்கள் படையாய் திரண்டெழுவோம். புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடிப்போம்.

தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!

தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள்


சென்னையில்

குரோம்ப்பேட்டை பேருந்து நிலையம், மாலை 4 மணி

பொன்னேரி

அண்ணா சிலை, மாலை 5 மணி


அனைவரும் வருக!


மக்கள் கலை இலக்கிய கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.

தொடர்புடைய இடுகைகள்:

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

தோழர் ஸ்டாலின் குறித்த பதிவுகள்

22 responses to “மாபெரும் ஜனநாயகவாதி தோழர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேரணிகள், கூட்டங்கள்.

 1. உழைக்கும் வர்க்கத்தின் தலைவர் தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக! முதலாளித்துவத்தை சவக்குழிக்குள் தள்ள தோழர் ஸ்டாலின் பிறந்த நாளான இன்று உறுதியேற்போம்.

  முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

 2. ஜூலிஸ் ஃபூசிக்

  தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!

  தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!

  முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

  முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

 3. நமது நாட்டிலும் சோசலிசம் படைக்க பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளில் உறுதியேற்போம். தோழர்களுக்கு செவ்வணக்கம்.

 4. தோழர்கள் லெனின் ஸ்டாலின் வழி நின்று முதலாளித்துவத்தை
  அகற்றி சோசலிசம் படைப்போம்.

  மார்க்ஸ் மீண்டும் பிறப்பெடுக்கப்போகும் புரட்சிகளின் நூற்றாண்டு இது!
  முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

  முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

  பதிவிட்ட தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

 5. அண்ணே அண்ணே ஜனநாயகம்னா democracy தானே ??

  சரி அதுக்கும் ஸ்டாலினுக்கும் என சமபந்தம்!!

  முதல லெனினிசதிற்கும் ஜனநாயகத்திற்கும் என்ன சமந்தம்??

  ஊற ஏமாத்துறதுக்கு ஒரு அளவில்லையா??

  இதற்கு சர்வதேசிய வாதிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று இல்லை..என்ன சொனாலும் வாழ்க என்று கத்தும் இந்த தளத்தில் பின்னூட்டம் இடும் Periyarstalin,ஜூலிஸ் ஃபூசிக், Superlinks இவர்களுக்கும் இதற்கு பதில் சொல்லாம்..

  போன தடவ ஸ்டாலின் பத்தி வாதிடும் போது பாதில ஓடுன மாதிரி ஓடாம இருந்த சரி

 6. ஜூலிஸ் ஃபூசிக்

  முதலில் ஜனநாயகம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்த வரையறை சொல்லுங்கள்.
  பிறகு ஸ்டாலின் ஜனநாயகவாதியா இல்லைன்னு விவாதிப்போம்.

 7. சாதி, மதம் , பொருளாதாரம், கல்வி தகுதி இவற்றை அடிபடையாக கொள்ளாமல், நாட்டின் பிரஜைகள் அனைவரயும் சமாக கருதி அவர்களின் கருத்தின் அடிபடையில், அவர்கள் யாரை ஆட்சி கட்டில் எத்துகிரார்களோ அவர்கள் செய்யும் ஆட்சி தான் ஜனநாயக ஆட்சி.. தங்களால் ஆட்சிக்கட்டில் ஏதபடவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை குடுக்கும் உரிமையும் கொண்ட ஒரு ஆட்சியே ஜனநாயக ஆட்சி முறை.. சரி உங்கள் பார்வையில் என்ன ஜனநாயகம்என்றால்?

  • வர்க்கச்சமூகத்தில் வர்க்கச்சார்பற்ற ஜனநாயகம் இருக்கவே முடியாது!!

   அதுக்கு பேர் ஜனநாயகமா ? நல்லது, அப்படியானால் இந்தியாவில் தற்போது இருப்பது என்ன நாயகம் ?

   • முதலில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை கொடுங்கள்.. அப்புறம் இந்திய பற்றிய விவாதத்திற்கு வருவோம்!!

 8. ஜூலிஸ் ஃபூசிக்

  அனைவருக்குமான சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பது வர்க்க வேறுபாடுகளற்ற சூழிலில் மட்டுமே சாத்தியம். ஜனநாயகம் என்பது வர்க்க வேறுபாடுகள் உள்ள சூழலில் அது நிச்சயம் ஏதோ ஒரு வர்க்கத்தின் சார்பாகவே இருக்க முடியும். அது ஒரு பக்க சார்புள்ள சர்வாதிகாரமாகவே அமையும். அனைவருக்கான ஜனநாயகம் என்னும் அமைப்பை முன் மொழியும் ஏகாதிபத்தியம் இந்த உண்மையை மறைக்கிறது. அனைவருக்குமான ஜனநாயகம் என்பது தனிமனித சுதந்திரம் என்னும் பெயரில் மற்றவர்களை சுரண்டுவதை மறைமுகமாக ஆதரிக்கிறது. எனவே ஏகாதிபத்தியம் முன் மொழியும் முதலாளித்துவ ஜனநாயகம் அனைவருக்கும் சுதந்திரம் எனும் போர்வையில் அது ஒரு வர்க்க சார்பாக முதலாளித்துவத்திற்கே சாதகமாக இருக்க முடியும்.

  அதனால் மார்க்சியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முன் மொழிகிறது.
  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம்.

  உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை வழங்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவிய தோழர் ஸ்டாலின் ஜனநாயகவாதியே!

  • ஆக ஒரு சர்வாதிகாரத்தை நீங்கள் ஜனநாயகம் என்று கூறுகிறீர்கள்..

   சரி…

   லெனின் அக்டோபர் புரட்சிக்கு முன்னால் எழுதிய பிரசுரங்களை (குறிப்பாக state and revolution ) படித்து பார்க்கும் போது அவர் பாட்டாளிகள் சர்வாதிகாரம் என்று எதை கூறுகிறார் என்றால் “கொள்கை பிடிப்பு கொண்ட புரட்சியாளர்கள் சிலர் ஆட்சி செலுத்துவதே பாட்டாளி சர்வாதிகாரம்” என்று கூறுகிறார்.. மேலை நாடுகளில் இருந்து வந்த ஜனநாயக முறையை அறவே வெறுத்து ஒதுக்குகிறார் லெனின்..

   அப்படி அந்த புரட்சியாளர்கள் செய்யும் மாற்றங்களிலும் எடுக்கும் நடவடிக்கைகளிலும் மக்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதற்கு முடிவு தான் என்ன?

   ” நான் வைச்சது தான் டா சட்டம்… சும்மா உன் இஷ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது” என்று ஒரு கேடு கெட்ட மன்னர் மக்களை பார்த்து கேட்பதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்யாசம்??

   ஜனநாயகம் இன்றி சோசியலிசம் தளைகவே முடியாது என்று அடித்து கூறியவர்கள் பலர்… டிரோட்ச்கி , கார்ல் கவுட்ஸ்கி என்று அடிக்கி கொண்டே போகலாம்..

   • பாரதி மோகன்

    ஜார்ஜ் புக்ஷ் ஜனநாயகவாதியா சர்வாதிகாரியா ?
    மன்மோகன் சிங் ஜனநாய‌கவாதியா சர்வாதிகாரியா ?
    என்பதை சொல்லுங்கள் அதன் பிறகு தலைவர்
    ஸ்டாலினை பற்றி பேசுங்கள்.

    • ஏன் யா யோவ்.. நான் கேட்டதுக்கும் நீ சொல்றதுக்கும் எதாவது சமந்தம் இருக்கா?
     கேட்ட கேள்விக்கு நேரா முகத்த பாத்து பதில் சொல்ல பழகுங்கயா..
     இல்ல, பதில் இல்லையா, இல்லைன்னு ஒதுக்கிட்டு போங்க..
     அதா விட்டுபுட்டு சும்மா மொக்க போட்டுகிட்டு..
     போ போ வீட்டுல பெரியவங்க யாராவது இருந்த வர சொல்லு

 9. தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், தோழர்கள் பார்வைக்கு

  http://vitudhalai.wordpress.com/

 10. மிஸ்டர் மிஸ்டேக்

  நிழல் தம்பி,

  எப்பயும் போல நிழலைத் தேடியே அலையுறயே?

  நீ சொன்னது:
  //குறிப்பாக state and revolution//

  தம்பி கத வுடுறதுக்கு ஒரு அளவு இருக்கு. அரசும் புரட்சியும் புத்தகத்தை பல முறை தலைகீழ படிச்சி வச்சிருக்கோம். இத வைச்சி போடப்பட்ட ஒரு பதிவு.

  http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html

  இது தவிர்த்து, அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்கெடுப்பதன் மூலம் அரசு குறித்த பயம் மக்களிடம் போக வேண்டும். அது மக்கள்மயப்படுத்தப்பட வேண்டும். அதற்கான புரட்சி முதலாளித்துவம் வீழ்த்தப்பட்ட பின்பு செய்யப்பட வேண்டும் என்றும் லெனின் விரிவாக குறிப்பிடுகிறார் வேறு இடங்களி. இது மட்டுமின்றி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு(அல்லது முதலாளித்துவ சர்வாதிகாரம்) மாற்றாக பாட்டாளி வர்க்க ஜனநாயகம் (அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) எந்தெந்த வகையில் செழுமை பெற வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்:
  1/ திருப்பியழைக்கும் உரிமை
  2/ அரசு, அரசாங்கம் பிரிவை நீக்கி ஒன்றாக்கி. அரசும், அதிகார வர்க்கமும் எந்த வோட்டெடுப்புக்கும் கட்டுப்படாமல் நிரந்தர அதிகார மையமாக இருக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இழிவை போக்குவது

  இது தவிர்த்து இன்னும் பல….

  நீ என்னடாவென்றால் இங்கு வந்து ரீல் சுற்றிக் கொண்டிருக்கிறாய்.

  ஜூலியஸ் பூசிக் சொன்னது:
  //அதனால் மார்க்சியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முன் மொழிகிறது.
  பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம். //

  //ஏகாதிபத்தியம் முன் மொழியும் முதலாளித்துவ ஜனநாயகம் அனைவருக்கும் சுதந்திரம் எனும் போர்வையில் அது ஒரு வர்க்க சார்பாக முதலாளித்துவத்திற்கே சாதகமாக இருக்க முடியும்.//

  இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான் பெரும்பான்மைக்கான ஜனநாயகமாகும்.

  ஜனநாயகம் குறித்து விளக்கிய பிறகுதான் உன்னிடம் கீழ்கண்ட கேள்வி கேட்க்கப்பட்டுள்ளது.

  //ஜார்ஜ் புக்ஷ் ஜனநாயகவாதியா சர்வாதிகாரியா ?
  மன்மோகன் சிங் ஜனநாய‌கவாதியா சர்வாதிகாரியா ?//

  இதுக்கு பதில் சொல்ல பயந்துக்கிட்டு ஓடுது இந்த நிழலு…

  அப்படியே இதுக்கும் பதில் சொல்லிரு கண்ணா…

  //அதுக்கு பேர் ஜனநாயகமா ? நல்லது, அப்படியானால் இந்தியாவில் தற்போது இருப்பது என்ன நாயகம் ?//

  மிஸ்டர் மிஸ்டேக்

  • நிழல்

   அண்ணே நீங்க ஒரு தடவ நேரா வைச்சு படிங்க..

   மார்சிய கொள்கையில் லெனின் செய்த ஒரு முக்கிய சமரசம் “vangaurd party” எனப்படும் புரட்சியை முன் நடத்தும் கட்சி .
   புரட்சியை மற்றுமே கடமையாக கொண்ட புரட்சியாளர்கள் இந்த கட்சியில் சேர்ந்து புரட்சியை நடத்த வேண்டும்..
   மேலும் புரட்சி நடந்த பிறகு பிறகும் சமுதாயத்தின் முதல் கட்டமான சோசியலிச கட்டத்தில் அரசு இருக்கும் என்று தெள்ள தெளிவாக
   குறிப்பிட படுள்ளது.
   மேலும் ஒன்றை ஆணி தரமாக குறிபிடுகிறார் “கம்முநிசத்தை யாராலும் சமுதாயத்தில் புகுத்த முடியாது” என்று..
   இதற்கு என்ன பொருள்?
   என்று சமுதாயத்தில் உள்ள மக்கள் சுயநல உணர்வை இழந்து பொதுநலத்துக்கு பாடு பட அரம்பிகிரார்களோ, எப்பொழுது சமூக கடமைகைகளை தாங்களே செய்யும் அளவுக்கு தேர்ச்சி அடைகிரார்கலோய் அப்போது மட்டுமே கம்முநிசம் பிறகும்.. அபோது மட்டுமே இரண்டாம் நிலைக்கு கம்முநிசம் முன்னேறும் என்று பொருள் .. இதற்கு எவளோ காலம் பிடிக்கும் என்று யாராலும் சொல்ல இயலாது என்று மிகவும் தெள தெளிவாக பல இடங்களில் , பல இடங்களில் லெனின் ஒப்புக்கொண்டுள்ளார்.

   ஆகா முதல் கட்டத்தில் சமூகம் இருக்கும் வரை “உழைப்பாளிகளின் சர்வாதிகாரம்” தான் அமலில் இருக்கும்.. அரசும் இருக்கும்.. லெனினிசத்தில் அந்த சமூகம் புரட்சியாளர்களின் கையில் தான் இருக்கும்.. இதனால் தான் லெனினிசம் ஜனநாயக முறை அல்ல என்று கூறுகிறேன்

   //ஜார்ஜ் புக்ஷ் ஜனநாயகவாதியா சர்வாதிகாரியா ?
   மன்மோகன் சிங் ஜனநாய‌கவாதியா சர்வாதிகாரியா ?//

   கண்டிப்பாக இல்லை..
   அனால் இந்த கேள்வி இங்கு என் எழுகிறது என்று தான் எனக்கு முதலில் இருந்தே புரிய வில்லை
   நான் மன்மோகன் சிங்கிற்கும் ஜார்ஜ் புஷ்ஷிற்கும் எபோதாவது இந்த தலத்தில் வாழ்க கோஷம் போடு இருகிறேனா? அப்புறம்
   ஏன் சமந்தமே இல்லாமல் இந்த கேள்வி?
   உங்களை எதிர்க்கும் எவரும் இந்திய பேரரசின் கைக்கூலி என்ற உங்களின் முட்டாள் தனமான சிந்தனையை இது பிரதிபலிகிறது ..

 11. பீட்டர் மாமா

  There is no Democracy wihtout Socialism!
  There is no Socialism without Democracy!

 12. கருப்பழகு

  நிழல காணோம்!

 13. கருப்பழகு

  சர்வதேசியவாதிகளுக்கு,

  தோழர் ஸ்டாலின் பற்றி தொகுப்பான பதிவுகள் இடுவதா சொல்லியிருந்தீங்க. என்னாச்சு?
  ஒரு பகுதி மட்டும் எழுதினீங்க.

  • சர்வதேசியவாதிகள்

   தோழர் கருப்பழகு அவர்களுக்கு,

   நாம் சிறிது பணிசுமை காரணமாக இரண்டாம் பதிப்பு பதிக்க சிறிது காலதாமதமாகிவிட்டது.
   கால தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.
   சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

   இன்னும் ஓரிரு நாட்களில் தோழர் ஸ்டாலின் பற்றிய இரண்டாம் பகுதி பதிக்கப்படும். மற்றும் இனிவரும் காலங்களில் காலம் தாழ்த்தாமல் தோழர் ஸ்டாலின் – தொடர் பதிவுகள் பதிக்கப்படும் என்பதை தோழர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

 14. கேள்விக்கு பதிலே இல்லை

  இன்னாப்பா நிழல் மிஸ்டர் மிஸ்டேக் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையெ ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s