இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

“நக்சல் ஒழிப்பு கோப்ரா படை, மத்திய ரிசர்வ் போலீசு, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் இப்போரில் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக் கோள் வழியே அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். நக்சல்பாரிகள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களின் வன்முறையை முறியடிக்க உளவுத்துறை, இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம்  என்ற உயர்மட்ட அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் நிறுவப்படும். தேசத்தின் பாதுகாப்பு நலனையொட்டி உருவாக்கப்படும் இத்தகைய அமைப்புக்கென தனியே சட்டம் இயற்றப்படும்” என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் நாளன்று நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், “நாட்டின் 180 மாவட்டங்களில் நக்சல்பாரிகள் ஊடுருவி விட்டார்கள். நாட்டின் 40 சதவீதப் பகுதியில் அவர்கள் இணையான அரசு நடத்துகிறார்கள்” என்று அப்போதே பீதியூட்டினார். நக்சல்பாரிகளால்தான் நாட்டுக்கு மிகப் பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதைப் போல காட்டுவதற்காகவும், இந்த உள்நாட்டுப் போருக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும், “நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் வெற்றியடைந்து விடவில்லை. தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நக்சல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். “நக்சல் வன்முறையை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். ஆனால், இப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இனியும் தாமதிப்பதற்கில்லை. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்” என்று கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். “மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஆயுதப் போராட்டம் நடத்தும் வரை, அவர்களுக்கெதிராக துணை இராணுவப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை; அவர்களோடு எந்தவித பேச்சுவார்த்தையுமில்லை” என்று அவர் சீறுகிறார். நேற்றுவரை இஸ்லாமிய தீவிரவாதிகளால்தான் நாட்டுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டுவந்த ஆட்சியாளர்கள், இப்போது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால்தான் நாட்டுக்குப் பேராபத்து என்று அலறுகிறார்கள்.

“நாடெங்கும் ஆளெடுப்பு நடத்தப்பட்டு 1,50,000 போலீசார் புதிதாகச் சேர்க்கப்படுவார்கள். இதேபோல, துணை இராணுவப் படைகளுக்கு 26,000 பேர் சேர்க்கப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் வட்டார அளவில் உளவுத்துறை மையங்கள் நிறுவப்படும்.

முதற்கட்டமாக மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஜார்கந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு கோப்ரா படையின் தலைமையகங்கள் நிறுவப்படும். அதன் தொடர்ச்சியாக உ.பி., ஒரிசா மாநிலங்களிலும், பின்னர் இதர மாநிலங்களிலும் நிறுவப்படும். இந்த கோப்ரா படை என்பது கைத்துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், எரிகணைகள், வீடுகள் கட்டிடங்களைத் தகர்க்கும் ஆற்றல் மிக்க துப்பாக்கிகள், கவச உடைகள் கொண்ட அதி நவீன அதிரடிப்படையாகக் கட்டியமைக்கப்படும்” என்று அரசு அறிவித்துள்ளது.

மே.வங்கத்தில் ஏற்கெனவே மாநில போலீசுப் படைகளும் மைய அரசின் துணை இராணுவப் படைகளும் நக்சல்பாரிகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டையையும் தாக்குதலையும் தொடங்கிவிட்டன. 17 கம்பெனி படைகள் (ஒரு கம்பெனி என்பது ஏறத்தாழ 1,700 பேர்) அதாவது ஏறத்தாழ 28,000 பேர் கொண்ட படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநில அரசு, நாட்டிலேயே முதன்முறையாக அமையும் ஃபோர்ஸ்1 என்ற இஸ்ரேலிய பாணியிலான பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படையைக் கட்டியமைத்து, முதலில் மும்பையிலும் அதன் பிறகு புனே மற்றும் நாக்பூரிலும் நிறுவத் தீர்மானித்துள்ளது. நக்சல் வன்முறையால் போர்க்காலச் சூழல் ஏற்பட்டுள்ளதென்றும், நக்சல் வன்முறையை முறியடிக்க ரூ.100 கோடி செலவில் மாநிலப் போலீசுப் படை வலுப்படுத்தப்படும் என்றும், நக்சல் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் ரோந்துப் படைகளும் ஆயுதமேந்தியப் புறக்காவல் நிலையங்களும் நிறுவப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திராவில் நக்சல்பாரிகளை நரவேட்டையாட தனிச்சிறப்பாக போலீசு வேட்டைநாய்கள் படை  உருவாக்கப் பட்டுள்ளதைப் போலவே, சட்டிஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கந்து ஆகிய மாநிலங்களில் இத்தகைய சிறப்புப் போலீசுப் படைகள் உருவாக்கப்படும் என்று மைய அரசு அறிவித்துள்ளது.

இது தவிர கோப்ரா படைகளும் அதிரடிப் படைகளும் மூன்றாண்டுகளுக்கு இம்மாநிலங்களில் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த யு.பி.ஜி.எல். எனப்படும் எறிகுண்டு தாக்குதல் பீரங்கியை இனி மாநில அளவிலான தீவிரவாத எதிர்ப்புப் படைகளும் பயன்படுத்த மைய அரசு அனுமதித்துள்ளது. உ.பி.யின் மாயாவதி அரசு, சட்டிஸ்கரில் அரசே கட்டியமைத்துள்ள சல்வாஜூடும் குண்டர் படையைப் போல, 35,000 பேர் கொண்ட குண்டர் படையைக் கட்டியமைக்கத் தீர்மானித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவிலும் கத்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியினரைக் கொண்ட குண்டர்படை கட்டியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

உள்ளூர் பத்திரிகையாளர்கள் லால்கார் போராட்டம் பற்றிய செய்திகளைத் திரட்ட விரும்பினால், தனது இரகசிய இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பி போராட்டச் செய்திகளையும் நேர்காணல்களையும் அவர் அளித்து வந்தார்.

இந்நிலையில், மே.வங்க உளவுத்துறை போலீசார் தம்மை வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் என்றும் அவரிடம் நேர்காணல் நடத்த விரும்புவதாகவும் தகவல் அனுப்பினர். சத்ரதார் மஹடோவும் அவர்களைப் பத்திரிகையாளர்களாகக் கருதி லால்காரிலுள்ள தனது இரகசிய இடத்துக்கு வருமாறு அழைத்தார். பத்திரிகையாளர்களாகக் காட்டிக் கொண்ட உளவுத்துறை போலீசார், இரகசிய இடத்தில் அவரைச் சந்தித்ததும் கைத்துப்பாக்கியை அவரது நெற்றியில் அழுத்தி அவரைக் கடத்திச் சென்று, கைது செய்துள்ளதாக அறிவித்தனர். தலைமறைவாக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்த முக்கிய தீவிரவாதியைக் கைது செய்துள்ளதாக மே.வங்க அரசும் உளவுத்துறை போலீசும் தமது சாகசத்தைப் பெருமையாகக் குறிப்பிட்டன.

அதைத் தொடர்ந்து, லால்கார் மக்களின் போராட்டத் தலைவரான சத்ரதார் மஹடோ மிகக் கொடிய பயங்கரவாதி என்றும் அவர் மீது 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் மே.வங்கப் போலீசு அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஜூன் 13ஆம் தேதி வரை அவர் மீது எந்த வழக்கும் இல்லை. தேர்தலுக்கு இருநாட்கள் முன்புவரை, லால்கார் மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கெஞ்சி தேர்தல் கமிசன் அதிகாரிகளும் மே.வங்க அரசு அதிகாரிகளும் மஹடோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்த பிறகு, அவர் இப்போது “பயங்கரவாதி”யாகி விட்டார்.

“மஹடோவுக்கு ஒரிசாவிலுள்ள மயூர்பன்ச் நகரில் அடுக்கு மாடி வீடு உள்ளது; அவர் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு பாலிசி வைத்துள்ளார். லால்கார் வட்டாரத்தில் அவருக்கு 5 வீடுகள் உள்ளன. அவர் தலைமையிலான போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் பல லட்ச ரூபாய் உள்ளது; மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டிய அவர், நகர்ப்புற அறிவுத்துறையினரிடம் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்தும் லால்கார் வட்டாரத்தில் கட்டாய வரி வசூலித்தும் சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்” – என்றெல்லாம் மே.வங்க இடதுசாரி அரசும் போலீசும் மஹடோ மீது அவதூறு சேற்றை வாரியிறைத்தன.

ஆனால், மஹடோவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு பாலிசி எதுவுமில்லை. ஒரிசாவிலுள்ள மயூர் பன்ச் நகரில் அவரது முன்னோர்களின் பழங்கா

ல வீடு உள்ளது எனினும், உறவினர்கள் பங்கு போட்டுள்ளபடி அவருக்கு அதில் ஒரு சிறு அறை மட்டுமே கிடைக்கும். லால்கார் பகுதியில் உள்ள அம்லியா கிராமத்தில் உள்ள அவரது குடிசை இடிந்த நிலையில் உள்ளது. சால்மர இலைகளை விற்று அவர் தனது பிழைப்பை நடத்தி வந்துள்ளார். அண்மையில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்து, புதிய கண்ணாடி வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் தவித்ததால், போராட்டக் கமிட்டிதான் அவருக்குக் கண்ணாடி வாங்கிக் கொடுத்துள்ளது. போராட்டக் கமிட்டிக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் சில ஆயிரங்கள் உள்ளன. அந்தக் கணக்குகள் மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்øமகளை உள்ளூர் பத்திரிகைகள் அம்பலப்படுத்திய பின்னரும், இன்னமும் இந்த அண்டப்புளுகையும் அவதூறையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது, மே.வங்க “இடதுசாரி” அரசு.

எல்லாவற்றுக்கும் மேலாக, மஹடோவைக் கைது செய்த விதமே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி (டி.கே.பாசு விசாரணை வழக்கையொட்டி), ஒருவரைக் கைது செய்யும்போது போலீசார் சீருடையும் தமது பெயர் பொறித்த அதிகாரபூர்வ வில்லையும் அணிந்திருக்க வேண்டும். எதற்காக கைது செய்கிறோம் என்ற விவர அறிக்கையையும் அளிக்க வேண்டும். இது அரசியல் சட்டத்தின் 22வது விதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இந்தியக் குற்றவியல் சட்டத் திருத்த 50ஏ விதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி, பத்திரிகையாளர்கள் போல நடித்து உளவுத்துறைப் போலீசு அவரைக் கோழைத்தனமாகக் கைது செய்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்களின் தொழிலையே களங்கப்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் உண்மைச் செய்திகள் வெளிவருவதையே தடுக்க முயற்சிக்கிறது. மஹடோ மட்டுமல்ல; மாவோயிஸ்டு கட்சி முன்னணியாளர்களும் லால்கார் போராட்டத்தை ஆதரித்து வந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைமுயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது, வெடி மருந்துகள் வைத்திருந்தது, சதிகளில் ஈடுபட்டது என பயங்கரவாத ஊபா சட்டப்படி இவர்கள் மீது பொய்வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

இப்பயங்கரவாத அடக்குமுறையையும் சட்டவிரோத கைதுகளையும் எதிர்த்தும் போராளிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அருந்ததி ராய், நோம்சாம்ஸ்கி, பிரசாந்த் பூஷண், ஆனந்த் பட்வர்த்தன், சுமித் சர்க்கார், வந்தனா சிவா, மீரா நாயர் என பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், சமூகவியலாளர்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமை இயக்கத்தினர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு மே.வங்க பாசிச அரசை எச்சரித்துள்ளனர்.

புதிய ஜனநாயகம்
நவம்பர் 09


தொடர்புடைய இடுகைகள்:

The Heart Of India Is Under Attack-Arundhati Roy

Human rights activists raise voice against operation greenhunt

Stop War Against the People

Green Hunt:Homeless triblas wanderers in their own country

Delhi Protesters March Against Operation Green Hunt

Mr Chidambaram’s War-Arundhati Roy

Operation Saffron Hunt?

India: Protect Civilians in Anti-Maoist Drive – Human Rights Watch

Seeking Mandate For Operation Jharkhand Hunt

Why Operation Green Hunt will fail

Burnt in oil: A fact-finding report on operation Green hunt in Dantewada in September-October 2009

Operation tribal hunt?

“OPERATION GREEN HUNT”: CENTRAL GOVERNMENT TARGETS TRIBALS AND GUERILLAIST LEFTISTS

Sandwich Theory And Operation Green Hunt

Chhattisgarh Groups Plan Opposition to Operation Green Hunt

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி!

பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!

இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

16 responses to “இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

 1. வர்க்கச்சமூகத்தில் வர்க்கச்சார்பற்ற ஜனநாயகம் இருக்கவே முடியாது!!

  உடனடியாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட‌ வேண்டிய விசயம் இது. ஈழத்தில் புலிகளை அழித்தொழித்ததைப்போல இந்தியாவில் மாவோயிஸ்டுகளையும் ஒழித்துவிட கனவு காண்கிறது ஆளும் கும்பல், அதை மக்கள் துணையுடன் அம்பலமாக்கி முறியடிப்போம்.

 2. ஈழத்தில் நேரடியாக தலையிட்டு தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு உதவிய‌ இந்திய அரசின் கொலை முகத்தை இந்திய உதாரணத்துடன் விளக்கும் சிறந்த பதிவு. சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்க்க‌ ஈழத்தில் நடந்ததைப் போன்ற ஒரு அவலம் இங்கேயும் நடந்து விடாமல் தடுக்க இந்திய அரசை முழு மூச்சுடன் அம்பலமாக்கி தனிமைப்படுத்த வேண்டும்.

 3. தோழர் பாரதி மோகன்

  தனது நாட்டு மக்கள் மீதே இப்படி ஒரு தாக்குதலை நடத்த இரக‌சியமான முறையில் திட்டமிட்டிருக்கும் இந்தியாவின் போக்கு அரச பயங்கரவாதமாவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் ம‌க்கள் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். அதற்கு நாமும் உடந்தையானவர்களாகிவிடுவோம்.

  • தனது நாடு மக்கள் மீது தாமே போர் தொடுப்பது தவறு. அப்படி தானே? எந்த ஒரு சூழலிலும் இந்த விதி பொருந்தும் தானே?

   • ஜூலிஸ் ஃபூசிக்

    சொந்த மக்களை கொல்வதில் எந்த விதியை வைத்தும் நியாயம் கற்பிக்க முடியாது.

    கேட்க வேண்டியதை நேரடியாகவே நீங்கள் கேட்டிருக்கலாம்.

    • இல்ல கம்யூனிஸ்ட் நாடுகளில் கூட தங்கள் கடலைகளைகளுக்கு அடி பணியாத மக்களை கொத்து கொத்தாக கொன்றது அரசு என்று கேள்வி பட்டுருகேன் . அதான் கேட்டேன்..
     ஆனா நீங்களே சொல்லிடிங்க எந்த விதியை வைத்தும் ஜயா படுத்த முடியாதுனு…

     “இல்ல இல்ல..உணர்ச்சிவச பட்டு சொலிட்டேன் ..மார்சியம் வர்க்க போராட்டம்.. அதுல நாங்க கொல்லுவோம் .. அதெல்லாம் நீங்க கேக்க கூடாதுன்னு” சொல்லபோறிங்களா?

     • இல்ல கம்யூனிஸ்ட் நாடுகளில் கூட தங்கள் கட்டளைகளுக்கு அடி பணியாத மக்களை கொத்து கொத்தாக கொன்றது அரசு என்று கேள்வி பட்டுருகேன் . அதான் கேட்டேன்..

      ஆனா மார்சியம் படிச்சா பெரியவர் நீங்களே சொல்லிடிங்க எந்த விதியை வைத்தும் நியாய படுத்த முடியாதுனு…

      “இல்ல இல்ல..உணர்ச்சிவச பட்டு சொலிட்டேன் ..மார்சியம் வர்க்க போராட்டம்.. அதுல நாங்க கொல்லுவோம் .. அதெல்லாம் நீங்க கேக்க கூடாதுன்னு” சொல்லபோறிங்களா?

     • அவ்வை பாட்டி

      கேள்விபட்டதை, முதலாளித்துவ அவதூறுகளை திரும்ப திரும்ப சொல்வதனால் அது உண்மையாகிவிடாது.

      கேள்விபட்டதை வைத்து பேசும் அறிவிலியே, இப்போது நிகழ்காலத்தில் பார்பதை பற்றி என்ன சொல்கிறாய்?

      மக்கள் மீது போர் தொடுப்பது சரியா?
      ஈழத்தில் சொந்த மக்களை கொன்றது சரியா? அதைப்போலவே இங்கும் நடைமுறைப்படுத்த முற்படுவது சரியா?

   • பாவெல்

    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ராசா?
    தனது நாட்டு மக்கள் மீது அரசு போர் தொடுப்பது சரி என்கிறீர்களா?

    நிகழ்காலத்தில் கண்ணெதிரில் தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதை, ஒடுக்குமுறையை கண்டித்து ஊர்வலம் சென்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு (20 November நாராயண்பாட்னா), சாதாரண பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்லி ஒடுக்கி அவர்களது நிலங்களை விட்டு விரட்டியடிக்கும் அரசின் பயங்கரவாதம் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை?

    சட்டீஸ்கரில், சல்வா ஜுடும் என்ற அரசு ஆதரவு பெற்ற கூலிப்படை மக்களை தங்களது கிராமங்களில் இருந்து விரட்டியடித்து மக்கள் சொந்த நாட்டில் அகதியாக்கப்பட்டுள்ளனர்.
    அதை பற்றியும் அக்கறை இல்லை?

    பார்பன மத குருக்களும், சாமியார்களும், பனியா கூட்டமும், நடுத்தரவர்க்கமும் தான் மக்களா?
    பழங்குடியினர் இம்மண்ணின் மைந்தர்கள், மக்கள் இல்லையா?

    மக்களின் நிலங்களை பிடுங்கி துரத்தியடித்து அதை பன்நாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கிறார்கள், நாடு விரைந்து மறுகாலனியாக்கப்படுகிறது. அதை பற்றியும் அக்கறை இல்லை?

    தேசபக்தி, ஜனநாயகம், மனிதநேயம் என எவற்றை பற்றியும் பேச உங்களுக்கு அருகதை இல்லை!

 4. ளிமாகோ

  மேற்கு வங்க இடதுசாரி போலி கம்யுனிஸ்டுகள் இன்றல்ல நேற்றல்ல, நக்சல்பாரி எழுச்சி தொடங்கிய காலம் தொட்டே, மக்களை படுகொலை செய்துவருகிறது.

  மறுகாலனியத்தை முழுமையடைய செய்யும் நோக்குடன் ஒருபுறம் அரச பயங்கரவாதம் என்றால், மறுபுறம் ஊடக பயங்கரவாதம். ஊடகங்கள் உண்மையை மறைத்து பொய்யை திட்டமிட்டு பரப்புகின்றன.

  காலை முதல் மாலை வரை மாவோயிஸ்ட் பயங்கரவாதம் என கூக்குரலிடும் ஊடகங்கள், அரச பயங்கரவாதத்தை பற்றி ஒருவரி செய்தி கூட வாசிப்பதில்லை. அப்பகுதி மக்களின் உரிமைகளையும், வாழ்வாதார பிரச்சனைகளையும் பற்றி துளி செய்தி கூட வெளிவந்து விடாமல் பார்த்துக்கொள்கின்றன.
  மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் செய்திகளை திரும்ப திரும்ப சொல்வது, மீதி நேரங்களில் ஏதாவது ஒரு நடிகன் கக்கூசு போனதை சொல்வது என்ற போக்கின் உச்சகட்டமாக மாவோயிஸ்டுகள் என அரசால் கைது செய்யப்பட்டு பின் மாவொயிஸ்டுகளால் போலீஸ் அதிகாரியை பிணைவைத்து விடுவிக்கப்பட்ட பழங்குடியின பெண்களை ‘கந்தகார்-விமான கடத்தலில்’ விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு தங்களது வக்கிரத்தை வெளிப்படுத்தின.

  அத்தகைய முதலாளித்துவ வக்கிர (தீவிரவாத!) ஊடகங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

  இச்சூழலில் அனைவரும் பார்க்கவேண்டிய படம். 1084ன் அம்மா..

  ஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் – திரைப்படம்
  http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_19.html

  1084 இன் அம்மா- உண்மையைத் தேடி ஒரு பயணம்!
  http://thiraiveli.blogspot.com/2007/09/1084.html

 5. ஜூலிஸ் பூசிக்

  ஆனா மார்சியம் படிச்சா பெரியவர் நீங்களே சொல்லிடிங்க எந்த விதியை வைத்தும் நியாய படுத்த முடியாதுனு…

  “இல்ல இல்ல..உணர்ச்சிவச பட்டு சொலிட்டேன் ..மார்சியம் வர்க்க போராட்டம்.. அதுல நாங்க கொல்லுவோம் .. அதெல்லாம் நீங்க கேக்க கூடாதுன்னு” சொல்லபோறிங்களா?//

  கவலைபடாதீர்கள். லூசு மாதிரி எல்லாம் பேச மாட்டேன்.
  ஏதோ கம்யூனிஸ்ட் நாடு மக்களை கொன்னாங்கன்னு சொன்னீங்களே, அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

  “இல்ல யாரோ சொன்னாங்க”ன்னு கேள்வி வழி செய்தி மாதிரி சொல்லாம ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?

  • Communism a World History என்ற புத்தகத்தை படித்திருகிறேன்.. அந்த புத்தகத்தில் அப்பட்டமாக உண்மை சொல்ல படிருகிறது.. அந்த புத்தகம் சோவித் வீழ்ந்த பின்பு அதன் அரசு சோவித் ஆட்சி காலத்து ஆவணங்களை வெளி இட்டது. அதை அடிபடையாக கொண்டு எழுதபட்டது.

 6. oho appatiyaa

 7. Pingback: மறையாது மடியாது நக்சல்பரி மரணத்தை வென்று எழும் நக்சல்பரி! « சர்வதேசியவாதிகள்

 8. Pingback: மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி! « சர்வதேசியவாதிகள்

 9. Pingback: “நீ எங்களோடு இல்லையென்றால் தீவிரவாதியோடு இருக்கிறாய்!” அரச‌ பயங்கரவாதிகள் விடுக்கும் எச்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s