ஆப்ரேஷன் கிரீன் ஹன்ட்டை அம்பலமாக்கும் கருத்தரங்கம்‍ சென்னையில். அனைவரும் வாருங்கள்.

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும்
நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன்
போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!

மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில்
நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!


தமிழகம்  தழுவிய  பிரச்சார இயக்கம்

ஜனவரி 30, 2010

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.காடு மலைகளின் அடிமடி ஆழத்தில்,
தங்கம்-வைரம்-பாக்சைட்-
செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு
நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு
கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !
எல்லா வளமும் அள்ளி எடுக்குது
டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால்
தரகு முதலாளிக் கும்பல்களும்
போஸ்கோ, லபார்க், வேதாந்தா
அன்னிய முதலாளிகளும் !

ஒரு டன் இரும்பு
உலகச் சந்தையில் 10,000 ரூபாய் !
முதலாளிகளுக்கு
அரசு விற்பதோ 27 ரூபாய் !


சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம்
உலகச் சந்தையில் ஏலம் போகுது !
பத்து, நூறு, ஆயிரம் அல்ல,
லட்சம் ஏக்கர் பறிபோகுது !
கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !


இந்தியாவின் மானம் காக்க மண் காக்க
போராடும் உழைக்கும் மக்களை,
நக்சல்பாரி புரட்சியாளர்களை
அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ !
பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’
மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’
வேட்டைகள் தொடர அனுமதியோம் !


கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
பன்னாட்டு கம்பெனிகள்,
தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள
தேசத்துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !


உண்மை என்ன, உண்மை என்ன ?
மண்ணைப்பறிக்கும்
மறுகாலனியத்திற்கு எதிராய்
மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் !
மக்களை அடக்கி ஒடுக்கி
மண்ணை விற்குது இந்திய அரசு !
இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் !
‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !


ஒரு லட்சம் இராணுவத்தை
சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும்
தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து
இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே
இந்திய அரசு போரை நடத்துது !


பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் !
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில்
நக்சல்பாரிகள் தலைமையில்
அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !


பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால்
மீண்டும் ஒரு சுதந்திரப் போரை
உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !


நேற்று வரை ‘சல்வாஜீடும்’
இன்று முதல் ‘காட்டுவேட்டை’
700 கிராமங்கள் எரிப்பு,
3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு,
50,000 மக்கள் முகாம் சிறைகளில்.


இனியும் பொறுக்கப் போகிற‌மா ?
சும்மா இருக்கப் போகிற‌மா ?


கருத்தரங்கம்

நாள்:  23.01.2010

நேரம்: மாலை 4 மணி

இடம்:

சைதை வர்த்தகசபை,
(சைதை காவல் நிலையம் பின் புறம்)
சைதாப்பேட்டை, சென்னை.

தலைமை:
தோழர் வெங்கடேசன்
செயலர். ம.க.இ.க, சென்னை

உரையாற்றுவோர்:
திரு.எஸ்.எஸ். ராஜகோபாலன்
கல்வியியலாளர், சென்னை.

திரு.அரங்க.சம்பத்குமார்
வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.த.வெள்ளையன்
தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

தோழர் வெ.பழனிநாதன்
மாநில இணைச்செயலர்,
பு.ஜ.தொ.மு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
நடைபெறும்.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.

தொடர்புடைய இடுகைகள் :

Campaign Against Operation Green Hunt!

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

“நீ எங்களோடு இல்லையென்றால் தீவிரவாதிகளோடு இருக்கிறாய்!” அரச‌ பயங்கரவாதிகள் விடுக்கும் எச்சரிக்கை.

ஈழத்தை அழித்த‌ இந்திய ஜனநாயகம் இந்திய மக்களையும் அழிக்கிறது !அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ தமிழகம் தழுவிய மாபெரும் பிரச்சார இயக்கம் துவக்கம்.

மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!

3 responses to “ஆப்ரேஷன் கிரீன் ஹன்ட்டை அம்பலமாக்கும் கருத்தரங்கம்‍ சென்னையில். அனைவரும் வாருங்கள்.

  1. பாரதி மோக‌ன்

    அவசியம் கலந்து கொள்கிறேன்.
    தகவலுக்கு நன்றி தோழர்.

  2. மருது

    ஃபோட்டோவில ஒரு முண்டம் இருக்கிறதே.அது யார்?வினவு தானே?

  3. Pingback: சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். « சுவிசின் ஆய்வு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s