ஆணாதிக்க பொறுக்கித்தனத்தை தனிமைப்படுத்துவோம் !

பெண்ணுரிமைக்காய்
“அ” என்று முதலெழுத்து
எழுதி நாமின்று
புறப்படுகையில்
“போ” என்று
பொல்லாதன பேசி
பழிகின்றார்

பெண்ணடிமை
விலங்குடைக்க
புறப்பட்ட என் சகோதரிகளை
ஈனமான சொற்களால்
ஊனமாகிய நண்பரே
சற்று கேளும் எமது குரலை.
எங்கள் சகோதரிகளின்
பிள்ளை கறி
கேட்டவர்களே
கேளுங்கள் எங்களது குரலை.

“கற்பித்தல்” என்பது
எமது அடையாளம்
“ஒன்று சேர்” என்பது
எங்கள் மந்திரம்
“புரட்சி செய்” என்பது
எங்கள் லட்சியம்

மலர்பறித்து
நாரெடுத்து
மலர் கோர்க்கும்
“பூக்காரி” என்றாலும்
பூ கட்டுவது எனது தொழில்
ஈனமில்லை அதை பகர்வதற்க்கு.

கூறுகெட்டு
வாய் பேசும்
உம் “வளர்ப்பில்”
வாயே உனது மூலதனம்
உனக்கில்லை தொழில்
என்னும் அடையாளம்

பிறப்பிலே வந்ததென்று
சொல்லும் ஈனமான
வளர்ப்பு நீ
சேர,சோழ,பாண்டிய
வழி வந்த
தமிழ்மான மரபு நான்

தகுதி இல்லார்க்கு
தமிழ் என்றும்
துணையில்லை
வந்தேறிகள்
வாய்பேசுவதால்
வாடிடாது
வாச(சந்தன) முல்லை.

Superlinks பின்னூட்டத்திலிருந்து Anonymous

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பார்பனிய பண்பாட்டை எதிர்த்து ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டியது, கருவறுக்க வேண்டியது ‘முற்போக்காளர்’ என்று கருதிக்கொள்ளும் அனைவரின் கடமை!

பதிவுலகம் என்பது சமூகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனியான, சுயேச்சையான ஒன்றல்ல. பதிவுலகமும் சமூகத்தின் ஒரு அங்கமே! அந்த வகையில் வினவு பதிவுலகில் சமூகத்திற்கான, ஒடுக்கப்படுபவர்களுக்கான கருத்துக்களை எழுதிவருவதுடன், பதிவுலகில் இருக்கும் ஒடுக்குமுறைகளை, ஆணாதிக்கத்தை, பார்பனியத்தை எதிர்த்தும் போராடிவருகிறது!

ஒரு பெண்ணை எதிர்கொள்வதற்க்கு அவளின் பால் ஒழுக்கத்தை கையிலெடுத்தாலே போதும் என்ற வக்கிரபுத்தி பார்ப்பனியம் பன்னெடுங்காலமாக கைகொண்டுவருவதே! அதே ஆயுதத்தை கையிலெடுத்து, தனது பார்ப்பனிய வக்கிரபுத்தியை கழிந்து வைத்திருக்கும் நர்சிம் என்கிற‌ பெறுக்கியை – அம்பலப்படுத்தி அவரை தனிமைப்படுத்தி தண்டிக்கவேண்டும் என்று வினவு கட்டுரை வெளியிட்டது!

அதற்கு எதிராக இப்போது புனிதக்கூட்டணி உருவாகியுள்ளது! பார்ப்பன ஆணாதிக்க மலத்தை தலையில் சுமந்து கொண்டுள்ள நரசிம்மிற்காக‌ நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி பொங்கி எழுறார் பாருங்க கொக்ககோலா வே தோத்து போயிடும் போல. வினவை இவரு ஒதுக்கி வைக்கிறாராம். ஒரு பெண்ணை பச்சை பச்சையாக‌ இந்த நொன்னை புனைந்து எழுதுவானாம். அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று இந்த‌ உண்மைத் தமிழன் விளக்கமளிப்பாராம்.இதுவே அயோக்கியத்தனம் இல்லையா ?

இவருடைய பதிவில் நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால் / அதை கேட்க நீங்கள் யார் என்கிற தொனியில் எழுதியிருக்கிறார்! இந்த நாங்கள், நீங்கள் என்பதில் யார் யாரெல்லாம் வருவார்கள்? பதிவெழுதுபவர்கள் மட்டுமா ? அல்லது வாசகர்களுமா? பதிவெழுதுபவர்களில் புதிதாக பதிவெழுத வந்தவர்களும் அடங்குவார்களா? மூத்த – பிரபல (!!!) பதிவர்கள் மட்டுமா? இக்கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காவிடினும், நாங்கள் என்பத‌ன் அடையாளம் தெரிந்ததே!

பதிவெழுதுபவர்கள் அனைவரும் மொக்கைகள் உட்பட அந்த நாங்களுக்குள் அடக்கம் என்றால், வினவு மட்டும் எப்படி வெளியிலிருந்து வந்தது ஆகும்? வினவு வெளியிலிருந்து வந்தது என்றானால், புது பதிவர்களும் வெளியில் இருந்து தானே வருகிறார்கள்? இது முருகனுக்கு தான் வெளிச்சம்! வினவு வெளியிலிருந்து வந்ததாகவே இருக்கட்டும்! அதனால் உள்ளுக்குள் நாறிக்கொண்டு இருக்கும் பிற்போக்கு தனங்களை கேள்வி கேட்க கூடாதா?

”இந்த எழவெடுத்த ஜாதியை மறந்துதானே வலையுலகம் என்ற ஒரு லேபிளின் கீழ் நாம் குடியிருந்து வருகிறோம்” என்று திருவாய் மலரும் ‘பொய்’ தமிழனின் கூற்றுக்கும், பொதுப்புத்தியில் “இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” கூற்றுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால், அதுவும் முருகனுக்கே வெளிச்சம்!

பதிவுலகில் பார்ப்பன ஆதிக்கமிருந்ததும், அதை எதிர்த்து அசுரன், ராஜா வனஜ், மற்றும் சுகுனா திவாகர் போன்றோர் போராடியதையும் பதிவுலகம் அறியும். பதிவர்கள் சமூகத்தில் இருந்து தானே பதிவெழுத வருகிறார்கள்? பார்பனியமும், ஆணாதிக்கமும் சமூகத்தில் இருக்கும் வரை பதிவுலகிலும் இருக்கும் என்ற எளிய உண்மை “உண்மை(!) தமிழனுக்கு” தெரியாமலிருக்க வாய்பில்லை என்பதும் முருகனுக்கே வெளிச்சம்!

ஆணாதிக்க வக்கிரம் பிடித்த பொறுக்கியை துரத்த சொல்லும் வினவை பதிவுலகில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற புதிய கோரிக்கையை இந்த உ.த வைக்க‌ என்ன காரணம்? வினவு இதுவரை நேரிடையாக பெயரைக் குறிப்பிட்டோ அம்பலப்படுத்தியோ – அவர்களது மொழியில் முத்திரை குத்தியோ, மார்க் போட்டோ அல்லது திட்டியோ – இல்லாத சிலரும் கூட வினவை எதிர்க்க காரணம் என்ன?

”இதுவரையில் பதிவுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலாவது இவர்களை நாம் நேராக அழைத்திருக்கிறோமா. இல்லையே.? இவர்களாவது தேடி வந்து நமக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்களா. வரவே இல்லையே.? எத்தனையோ பதிவுலக் கூட்டங்களுக்கு பதிவர்களை அழைத்திருக்கிறோம். இவர்கள் வந்திருக்கிறார்களா.” இது தான் சேதி, இது தான் பிரச்சனை.. நேராக அழைக்காவிட்டாலும், வலிந்து தானே போய் இவர்களின் காலை நக்கி மரியாதையை செலுத்தவில்லை. இது மட்டுமா? பல்வேறு தருணங்களில் இவர்களின் முகத்தை உரசிப்பார்க்கும் விதமாக வினவு எழுதுவதும், சில பிரச்சனைகளில் நேரிடையாகவே இவர்களது குட்டி முதலாளித்துவ அற்பத்தனங்களை வினவு கேள்விக்குள்ளாக்குவதும் தான் பிரச்சனையே!
மட்டுமின்றி தற்போதைய பிரச்சனையில் நர்சிமுக்கும் இவர்களுக்கும் (அதாவது நர்சிமை ஆதரிப்பவர்களுக்கும்) உள்ள‌ பிரிக்க முடியாத உறவு இரு தரப்பும் பச்சையான ஆணாதிக்க வெறியர்கள்.

யார் யாரெல்லாம் கூட்டணியிலிருக்கிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும் அவர்களின் வினவின் மீதான காழ்ப்புனர்ச்சி! நீண்ட நாட்கள் பின் செல்ல வேண்டியதில்லை, வினவின் சமீபத்திய பதிவான ”வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்” இதைப் படித்தாலே உண்மைதமிழனின் பதிவிற்க்கு காரணம் விளங்ககூடும்! ஆதரவளிப்போரில் முக்கியமாக கலக சாரி! கலகலப்ரியாவை பர்தா நற்குடி மற்றும் இந்த நர்சிம் நிகழ்வில் வினவு கேள்வி எழுப்பியதாலேயே கக்கூசை மோர்ந்து பார்ப்பதாக சொல்கிறார்! ஒருவேளை அவர் கக்கூசிலேயே வாழ்வதாகவும் வாழ விரும்புவதாகவும் கூட இருக்ககூடும்!

ஆக, நாங்கள் என்ற இந்த வாதத்தின் ஊற்றுகண், நான் எனும் தனிமனித வாதமே! பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவு தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட, அவர்களுடைய மொழியில் சொன்னால் ’புண்படுத்தப்பட்ட’ தனிமனித மணங்கள் சேர்ந்தே இப்புனித கூட்டணி அமைக்கப்படுகிறது! அக்கூட்டணி அமைக்கப்படுவது மட்டிமின்றி தமது குடும்பப் பிரச்சனை என்றும் முன்வைக்கப்படுகிறது! அது உங்களுடைய‌ புனிதக் குடும்பம் என்பதாலேயே, பெண்கள் மீதான குடும்ப வன்முறையை நீங்கள் ஆதரிப்பவர்களாக‌ இருக்கலாம்! வக்கிரமான முறையில் பார்ப்பன ஆணாதிக்க வெறியை கட்டவிழ்த்து விட்ட‌ பொறுக்கியை குடும்பத்தை விட்டு நீங்கள் துரத்தியடிக்காமல் இருக்கலாம்! உங்கள் முற்போக்கு முகமுடியும் அத்துடன் முடிவடையலாம்! ஒவ்வொரு முகமுடியும் கிழிய கிழிய மற்றொன்று துருத்திக்கொண்டு வெளித்தெரியும் ! குடும்பம் என்பதே பெண்களை கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கும் வன்முறை கருவியாகவும் இருப்பதால் அப்புனித குடும்பத்தையும் சேர்த்தே முற்போக்காளர்களாகிய நாங்கள் எதிர்க்க வேண்டியுள்ளது! எதிர்ப்போம். அதை நாங்கள் தான் எதிர்ப்போம். மற்ற‌வர்களையும் எதிர்க்கச்சொல்லி அணிதிரட்டுவோம். இதற்கெதிராக மொக்கை போடுவதை தவிர உங்களால் என்ன செய்ய முடியும் மொக்கைகளே ?

பதிவுலக நண்பர்களே,
இணையத்தை பயன்படுத்தக்கூடிய‌ நாமெல்லோரும் ஓரளவுக்காவது படித்தவர்கள்.குறைந்தபட்சம் கல்லூரி படிப்பு.ஓரளவுக்கேனும் முற்போக்கு அறிமுகம் உள்ளவர்கள்.

சமூகத்தில் ‘சாதி’யின் பெயரால் கீழ் நிலையிலிருத்தி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான‌ ஒடுக்கப்பட்ட மக்கள் அனுதினமும் அனுபவிக்கும் துயரத்திற்கு யார் காரணம் ? பார்ப்பன இந்து மதம் தான் என்பதை ம.க.இ.க ஒன்றும் புதிதாக சொல்லவேண்டியதில்லை. அம்பேத்கரும் பெரியாரும் அதை தான் வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்தார்கள். பார்ப்பன இந்து மதம் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி சாதி ரீதியாக ஒடுக்கி வைத்ததோ, வைத்திருக்கிறதோ அதே போல தான் பெண்களையும் ஒடுக்கி வருகிற‌து. உலகம் முழுவதும் ஆணாதிக்கம் இருப்பினும் அது இந்தியாவில் பார்ப்பன இந்து மதத்தில் தான் இறுகி கெட்டி தட்டி போயிருக்கிறது.

ஆணாதிக்கம் என்பது அனைத்து ஆண்களுக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. அது சாதி, வர்க்கம் ஆகியவற்றோடு சேர்ந்து கூட குறைய இருக்கும். ஒருவர் பார்ப்பன சமூகத்தில் பிறப்பது அவருடைய த‌வறல்ல. ஆனால், பார்ப்பனனாக வாழ்வது கேவல‌மானது. பார்ப்பனீயத்தின் கொடுமைகளை தெரிந்து கொண்ட பிறகும் கூட பார்ப்பானாக வாழ முடிவது அதை விட கேவலமானது. மற்ற‌வர்களை விட பார்ப்பனர்கள் கொடூரமான ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள்.காரணம், தான் அனைத்துக்கும் மேலான‌ உயர்சாதி பார்ப்பான் என்கிற‌ சாதி கொழுப்பு.

இங்கு நர்சிம் என்பவர் முழுக்க முழுக்க ஒரு பார்ப்பன ஆணாதிக்க வெறியராகவே நடந்து கொண்டிருக்கிறார். இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் இவ்வளவு மோசமாக இழிவு செய்யப்படுவதை முற்போக்கு பேசும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிக மிக கேவலமானது. எனவே, பார்ப்பனிய ஆணாதிக்க வக்கிரபுத்தியுடைய பொறுக்கி நர்சிம்மை பதிவுலகை விட்டு வெளியேற்ற தமிழ்மணத்திற்கு கோரிக்கை வைப்பதோடு, ஆணாதிக்கமும் பார்ப்பனீயமும் தொடர்பான இப்பிரச்சினையை மொக்கை போட்டு நீர்த்துப்போகச் செய்ய நினைப்போரையும், சந்தனமுல்லையையும் நர்சிம் என்கிற பொறுக்கியையும் சமதட்டில் வைத்து பார்போரையும் அம்பலப்படுத்தி முகத்திரையை கிழிப்பது முற்போக்கு, ஜனநாயகம், பெண்ணடிமைத்தனம் குறித்தெல்லாம் பேசுவோரின் கடமை !

அந்த வகையில் பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான விவாதச் சூழலை உருவாக்கப் போராடி வரும், ஆணாதிக்கத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து போராடி வரும் வினவு தோழர்களை ஆதரிப்போம். பிற்போக்கு பார்ப்பனீய, ஆணாதிக்க வெறியர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம். அதற்காக‌ கரம் கோர்ப்போம்.

தொடர்புடைய இடுகைகள் :

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

நடுநிலை நாடகம்

5 responses to “ஆணாதிக்க பொறுக்கித்தனத்தை தனிமைப்படுத்துவோம் !

 1. Rameshkarthikeyan

  unkalukku yen avar mela kopam
  avara poruki nu sollura alavukku neenkalam rompa yokiya ma enna

 2. அக்காகி

  பின் நக்கியவாதிகள் மன்னிக்கவும், நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் கேளுங்கள்..
  லீனா = சந்தன முல்லை
  நர்சிம் = வினவு. (இந்த equal to கணக்கெல்லாம் அறிவிலிகளுக்கே, சாரி அறிவாளிகளுக்கே வர்ர விசயம் போல, நமக்கு அதெல்லாம் வராது!)

  வினவு சொன்னதோ, லீனாவும் நர்சிம்மும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

  நானும் நீயும் ஒன்றென்று லீனா ஒத்துகொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும், முல்லை ஒத்துக்கொள்ளப்போவதில்லை!
  நானும் நீயும் ஒன்றென்று பொறுக்கி நர்சிம் ஒத்துகொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும், வினவு ஒத்துக்கொள்ளப்போவதில்லை!

  அட வெண்ணை வெட்டிகளா…. அப்ப, லீனா எழுதியதும் நோக்கமும் முல்லை எழுதியதும் நோக்கமும் ஒன்ன்றாகுமா??
  இவங்க நர்சிம்மை வன்மையா கண்டிக்குறானுங்களாம்!!! அதே சமயம் லீனாவும் முல்லையும் ஒன்னாம்.

  வினவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு நீங்கள் நர்சிம் தனது பொறுக்கித்தனத்துக்கு நியாயம் கற்பிக்கும், காரணமாக கூறும் முல்லையின் பகடியை லீனாவின் அவதூறு கழிதலுடன் ஒப்பிட்டு, நர்சிம்மிற்க்கு மறைமுக ஆதரவளிக்கிறீர்கள். இதை விட நீங்கள் நர்சிம் செயலை நேரடியாகவே ஆதரித்திருக்கலாம்! பின் நவீனத்துவ லும்பன்கள் பார்பனிய பொறுக்கிகள் கூட்டணி மிக நன்றாக இருந்திருக்கும்!

  அ.மார்க்ஸ், லீனா கும்பல் அங்கு நடந்த அனைத்தையும் வீடியோ எடுத்தார்களே, ஒரு லூஸு தோழர்களை குளோஸ் அப்ப்பில் கூட போய் படமெடுத்ததே! வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பின் என்ன வேண்டுமானாலும் எழுதலாமே??? என்ன தயக்கம்! ஆதாரம் வெளியிட்டால் புனைவெழுத முடியாதோ? லீனா விவகாரத்தில் தோழர்கள் கோவத்துடன் நடந்தது உண்மை தான்! அப்படி தான் நடந்து கொள்வார்கள்!!! ஆனால் அதையே திரித்து அவதூறு கிளப்பினால்….. ஆதாரத்தை கேட்போம்! அதையும் அம்பலப்படுத்துவோம்!!!

  உங்களுக்கு தான் வரைமுறை இல்லையே, பின் ஏன் எங்களுக்கு வரைமுறையை திணிக்கிறீர்கள்? கட்டற்ற – வரைமுறையற்ற சுதந்திரத்தை கோருபவர்கள், எதிராளிகளை வரைமுறைக்குள் தள்ள எத்தனிப்பது நல்ல கூத்து தான்!

  அய்யோ அய்யோ! முன்-பின் நக்கியத்துவமே சாட்சி!!!

 3. பொறுக்கித்தனமாக செயல்படுபவன் பொறுக்கிதான்.

 4. Pingback: வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும் « எம்.ஆர். ராதா

 5. Pingback: குற்றம் -நடந்தது என்ன? « ஸ்மார்ட் பார்வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s