பதிவர் பைத்தியக்காரன் செய்த துரோகம் !

ஆணாதிக்க திமிருடன் வக்கிரமாக‌ சந்தனமுல்லையை குதறி எடுத்த‌ பார்ப்பன பொறுக்கி நர்சிம்மையும், அவனுக்கு ஆதரவாக‌ குழந்தையை கொல்ல வேண்டும் என்று கூறிய சைக்கோ கார்க்கியையும் இந்த பொறுக்கிக்கும் சைக்கோவுக்கும் ஆதரவாக களமிறங்கிய ஆணாதிக்க வெறியர்களையும் அம்பலப்படுத்தி வினவு ஒரு பதிவு எழுதியது. வினவின் பதிவுக்கு வினையாக ஜனநாயக உணர்வுள்ள பல பதிவர்களும் ஆணாதிக்க வெறியர்களை எதிர்க்க ஒன்றிணைந்தார்கள். பிரச்சினை இவ்வாறு சூடாகி நாம் அனைவரும் ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்தப்படுத்திக்கொண்டிருந்த‌ சூழழில் தான் எதிரிக்கு உதவும் விதமாக‌ அந்தோணிச்சாமி மார்க்சின் அல்லக்கை சுகுணா திவாகர் மொத்த பிரச்சினையையும் அழகாக ‘துரோகம்’ என்கிற‌ திசையை நோக்கி திருப்பி விட்டுவிட்டார். பிரச்சினையை எப்படி மடை மாற்றலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்கள் (அதுவரை ஆணாதிக்க வெறியர்களை எதிர்ப்பதாக கூறியவர்களும் இதில் அடக்கம்) இதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு பதிவர் பைத்தியக்காரனை துரோகி என்று தனிமைப்படுத்த முயன்றார்கள். ‌அதன் பிறகு உடனடியாக‌ வினவும், பைத்தியக்காரனும் இதற்கு தக்க‌ விளக்கமளித்திருக்கிறார்க‌ள். ஆனால், இப்போதும் பலர்  பைத்தியக்காரனை துரோகி என்றே கூறுகிறார்கள்.

சரி, எது துரோகம் ? பைத்தியக்காரன் அப்படி என்ன துரோகம் செய்து விட்டார் ? தான் அறிந்த சில‌ ஆணாதிக்க வெறியர்களை பற்றி தனக்கு தெரிந்த‌ சில விவரங்களை பொதுவெளியில் வைத்து அம்பலப்படுத்தினார்.

இது துரோகமா ?

சரி, அதை ஏன் அவர் தனது சொந்த‌ பெயரிலேயே செய்யாமல் வினவுக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு செய்தார் என்று சிலர் கேட்கிறார்கள். அவர் வினவுக்கு பின்னாடி எல்லாம் ஒளியவில்லை. சிவராமன் முதலில் இப்பிரச்சினை குறித்த பதிவை தனது சொந்த‌ பெயரில் தனது தளத்தி‌லேயே எழுத தான்‌ திட்டமிடிருந்தார். ஆனால், வினவு தோழர்கள் தான் நாம் இதை சேர்ந்தே எழுதலாம், எழுதியதை வினவில் வெளியிட்டால் பரவலாகவும் போய்ச்சேரும் என்று கூறி, எழுதியதை வாங்கி அதில் பல‌ திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்து வெளியிட்டார்கள்.சொந்த பெயரில் எழுதினால் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அது தவிர்க்கப்பட்டுள்ளது. இது தான் நடந்தது. இதில் என்ன துரோகம் இருக்கிறது ?

பைத்தியக்காரன் தனது இன்றைய பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்.அதை ஒரு முட்டாளோ பிற்போக்குவாதியோ மட்டும் தான் ஏற்க மறுப்பான்.

/////பொது தளத்தில் சமூக பிரச்னைகளுடன் போராட பெண்கள் வருவதும், எழுத ஆரம்பிப்பதும் வரவேற்க வேண்டிய விஷயம். காலம்காலமாக பார்ப்பனீயத்தின் கொடூர அடக்குமுறைகளால் சிறைப்பட்டிருந்த அவர்களில் சிலர் இப்போதுதான் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து ஓரளவுக்காவது சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள். இது பொறுக்க முடியாமல் ஆணாதிக்கம் கொழுந்துவிட்டு எரியும் மனுதர்மவாதிகள் அப்படி வரும் பெண்களின் ஒழுக்கத்தை கேள்வி கேட்கிறார்கள். இப்படிப்பட்ட வக்கிர எண்ணம் பிடித்தவர்களை முழுமூச்சுடன் எதிர்க்கத்தான் வேண்டும். இப்படி எதிர்ப்பதற்கு நட்பு தடையாக இருக்கிறதென்றால்…. அப்படிப்பட்ட நட்பு எந்தளவுக்கு உயரியதாக இருந்தாலும் அது அவசியமில்லை.//////////

////////ப்ரியத்துக்குரிய சுந்தரை எந்தளவு நான் நேசிக்கிறேன் என்பதில் ஒரு சிறுபகுதியாவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த நேசிப்பு, அன்பு, ப்ரியத்தை விட அதிகமாக பார்ப்பனீயத்தையும், அதிகாரத்தையும் எதிர்ப்பதில் உறுதியாக நிற்கிறேன். நட்புக்காக என்னால் சமரசமாக முடியாது. நான் நம்பும் அரசியலையும், கோட்பாடுகளையும் காற்றில் பறக்க விடமுடியாது.///////

இந்த உணர்வு தான் மதிக்கப்படவேண்டியதும், போற்றப்படவேண்டியதும். இவரைப் பார்த்து தான் அ.மா வின் அல்லக்கை பார்ப்பான் என்று ஊளையிடுகிறது ! சிவராமன் சீரியலுக்கு டயலாக் எழுதினாராம். சந்தனைமுல்லை ஆர்குட் வன்னியர் கம்யூனிடிட்டியில் இணைந்திருக்கிறாராம். சரி தான், ஆனால் அவை எல்லாம் எப்போது நடந்தது ?

எல்லோருக்கும் பிற்போக்கான கடந்த காலம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.பிற்போக்கு சமூகத்திலிருந்துவரும் ஒருவர் மார்க்சிய கல்வியின் மூலம் தானே தன்னை வர்க்க நீக்கம், சாதி நீக்கம் செய்து கொள்ள முடியும் ? பேரறிஞராக  இருந்தாலும் அல்லக்கையின் குருவுக்கும் கூட கடந்த காலம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா ? கடந்தகாலத்தை தாண்டி முற்போக்காளனாக, மார்க்சிய, பின்நவீனத்துவ பேரறிஞ‌ராக‌‌ மாறிய பிறகும் கூட அந்தோணிச்சாமி மார்க்ஸ் இரண்டு பொண்டாட்டி வைத்துக்கொண்டிருப்பதும், அவருடைய மகள் அம்மன் சீரியலை இயக்குவதும் எவ்வளவு பெரிய பெண்ணிய சிந்தனை, முற்போக்கு !

ஆனால்,பலர் துரோகி என்று கூறிய பிறகும் கூட‌, நெருங்கிய நண்பர் ஐயோவ்ராம் சுந்தர் நட்பை அறுத்தெறிந்து விட்ட பிறகும் கூட சிவராமன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். தனது இன்றைய‌ பதிவில் அவர் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

///////////நடந்த சம்பவங்களால் குரூரமாக பாதிக்கப்பட்டவர் பதிவர் சந்தனமுல்லை. எனவே அவரை ஆதரிக்கிறேன். சம்மந்தப்பட்ட சீழ்வடியும் பார்ப்பன சிந்தனை கொண்டவரை அம்பலப்படுத்துகிறேன். நாளை வேறொரு பதிவர் பாதிக்கப்பட்டாலும் அவருக்கு உறுதுணையாகவும் நின்று போராடுவேன். இதற்காக எந்த உறவை – நட்பை இழக்க வேண்டும் என்றாலும் அதற்கும் தயாராகவே இருக்கிறேன். அப்படி அம்பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும்போது வினவு தோழர்களுடன் இப்போது போலவே இணைய வேண்டிய சூழல் வந்தால், கண்டிப்பாக இணைந்து போராடுவேன்.////////////

இந்த உறுதிக்காக நாம் சிவராமனை பாராட்ட வேண்டும். பிற்போக்கையும்,  ஆணாதிக்கத்தையும் எதிர்ப்பதில் நண்பர்களின் செண்டிமெண்ட் அம்புகளுக்கு எல்லாம் அசைந்து கொடுக்காமல் நிற்கும் தோழர் சிவராமனை முற்போக்கு பேசுபவர்கள், பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்கள், ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்து, பதிவர்கள் மங்களூர் சிவா, அபி அப்பா, லதானந்த் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சிவராமன் கூறியிருக்கிறார். அவையும் அப்படியே முழுமையாக ஏற்கத்தவை தான். ஆணாதிக்கத்தை எதிர்க்காத யோக்கிய சிகாமணிகள் எல்லாம்‌ அது யார்ன்னு சொல்லு, அது யார்னு சொல்லு என்று அவரை  நச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மங்களூர் சிவா இதுவரை இது தொடர்பாக‌ ஒரு நாலு பதிவாவது இட்டிருப்பார். இது தொடர்பாக சிவராமனின் நிலைப்பாடு ஏன் முழுமையாக ஏற்கத்தக்கது ஏனெனில், அந்த பெண் ப‌திவர்களின் பெயரை இவர் துணிந்து வெளியிட்டால் அதற்கடுத்து வரப்போகின்ற‌ பிரச்சினை பெண்களுக்குத்தானே தவிர பொறுக்கிகளுக்கு அல்ல. பிறகு அந்த பெண்களுக்கு பல பதிவுல‌க‌ பொறுக்கிகள் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடும், அல்லது ஆபாச‌ மெயில் அனுப்பக்கூடும். எனவே பாதிப்பு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு என்பதால் அவர் அதையும் வெளியிடவில்லை, அது மிகவும்  சரியான செயல் தான்.

கடைசியாக ஒன்று,
ஆனாலும் சிவராமன் ‘துரோகம்’ தான் செய்திருக்கிறார்,பச்சை துரோகம் !

ஆணாதிக்க பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி ஒரு பெண்ணின் பக்கம் நின்று நட்புக்கு துரோகம் செய்திருக்கிறார். எதற்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் கூறிவருகிறோமோ அந்த ‘சொந்த சாதிக்கு‘ துரோகம் செய்திருக்கிறார். இவை எல்லாம் வரவேற்கப்படவேண்டிய துரோகங்கள் தான். இதனால் சிவராமன் இழந்தது ஒன்றுமில்லை இனி இழக்கப்போவதும் ஒன்றுமில்லை பெறப்போவது தான் அதிகம்.

பின் குறிப்பு :
மலக்குட்டைகளை குறித்து எழுத விருப்பமில்லை. தோழர் கார்க்கி குறிப்பிட்டிருப்பதை போல எதிர்காலத்தில் தூர் வாரும் உத்தேசமும் இல்லை.  ஏனெனில், எவ்வளவு வாரினாலும் ம‌லக்குட்டையிலிருந்து பூக்கள் மலர‌ப்போவதில்லை.

அடுத்து லும்பன் சோபாசக்திக்கு…


தொடர்புடைய இடுகைகள் :

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் ?

நடுநிலை நாடகம்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

வினவு தோழர்கள்

நசுங்கும் சொம்புகள்!

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவெனும் பொறுக்கித்தனம்!

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்!

இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

உரையாடல் அமைப்பு மற்றும் உலக சினிமா திரையிடல் இனி?

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!


வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்

‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரவு தரும் ‘கண்ணியவான்களும்’…

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

மிக்க நன்றி சுகுணா

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

3 responses to “பதிவர் பைத்தியக்காரன் செய்த துரோகம் !

 1. உடன்பருப்பு

  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=561177
  இது இந்த பதிவிற்கான தமிழ்மணம் வாக்களிப்பு உரல்
  குத்துக்க எசமான் குத்துங்க அப்படியே உடன்பருப்பு மூஞ்சீல காறி துப்புங்க

 2. நண்பன்

  அருமையான பகிர்வுக்கு நன்றி +1

 3. கருப்பன்

  நண்பர் சிவராமனுக்கு ஒரு ரெட் சல்யூட்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s