Tag Archives: இந்து

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அயோத்தி தீர்ப்பு…

இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்!

பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்..

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?

ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?

நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?

1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?

கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?

1957 ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை எதிர்த்து பெரியார் அதன் நகலை எரித்து சிறை சென்றபோது, அம்பேத்கார் அதனை வரவேற்றது ஏன்?

1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?

1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?

500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?

இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?

அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?

அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?

ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய
ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?

அனைத்து கேள்விகளுக்கும் விடை காண வாருங்கள்…

அரங்கக்கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494.

தொடர்புடைய பதிவுகள்:

Advertisements

நடுத்தர வர்க்கமும் நடுநிலை வாதமும்!

இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி

டிசம்பர் 6 1992.

பகல் 12 மணி. கிட்டதட்ட 5000 காவி கும்பல் அயோத்தியில் பாபர் மசூதியின் வெளியே சுற்றி போடப்பட்டிருந்த தடையை உடைத்துக் கொண்டு மசூதியின் மேற்பகுதியை தாக்கி இடிக்கிறார்கள். பின் அங்கே பழங்கால‌ இந்து தீவிரவாதி ராமன் சிலையை வைத்து தற்காலிக‌ கோவிலை கட்டுகிறார்கள். மசூதி தகர்க்கப்பட்டு அங்கே ராமன் கோவில் எழுந்தது. இஸ்லாமிய மக்களின் மத உரிமைகளை மீறிய ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலின் இச்செயலை விசாரிக்க 10 நாட்களுக்குள் லிபரான் தலைமையில் விசாரணை குழுவும் அமைந்தது.

இந்து பயங்கரவாத கும்பல் மசூதியை இடித்து சரியாக‌ 17 ஆண்டுகளாகின்றன. ஆனால் 10 நாட்களுக்குள் அமைக்கப்பட்ட லிபரான் தலைமையிலான‌ விசாரணை குழு ஆமை வேகத்தில் நகர்ந்து இப்போது தான் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னமே அந்த அறிக்கையில் வாஜ்பேய் உள்ளிட்ட‌ 68 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள‌ விஷயங்கள் பத்திரிகைகளுக்கு கசிந்து பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா ஒரு பக்கம், ஆளும் கட்சியின் மீது பயங்கரமாக சீறி “சிதம்பரம் உடனே ராஜினாமா செய்யவேண்டும்” என்று அறிக்கை விடுகிறார்.

மறுபக்கம் நாம் நடுநிலையாளர்கள் என்று தன்னைப் பற்றி நினைத்துக் கொள்ளும் படித்த(!)  மனிதர்கள்  இதெல்லாம் இப்ப தேவையா? இது போன்ற அறிக்கைகள் எல்லாம் மேலும் மேலும் பிளவைத் தான் உண்டு பன்னும்” என்று தமது அறிவுரைகளை நமக்கு இலவசமாக‌ கொட்டுகிறார்கள்.

உண்மையில் இந்த லிபரான் அறிக்கை முழு உண்மைகளை பகிரங்கமாக முன்வைக்கவில்லை, போலி ஜனநாயகத்திற்குரிய தவிர்க்க முடியாத‌ தன்மைகளோடு வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை அத்வானியை சிறயிலடைக்கப் பரிந்துரைக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிக்கை வெளி வந்ததும் ‘நடுநிலை’ வாதிகளான படித்த நடுத்தர வர்க்கம் நாலா பக்கங்களிலும் தனது நடுநிலை கருத்துக்களை நிலை நாட்டிக்கொண்டிருக்கிற‌து. மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் பெரிய தலைகளையும், நம் நாட்டில் இந்து மதவெறி கும்பலுக்குள்ள ஆதிக்கம் என்ன என்பதையும், தனது  ‘நடுநிலை’ எனும் கருத்தால் இந்த நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் எவ்வாறு மறைக்கிறார்கள் அல்லது மறைமுகமாக அவர்களை ஆதரிக்கிறார்கள் என்பதை கூறவே இந்த பதிவை எழுதுகிறோம்.

தினமணி என்கிற பத்திரிகை மிதவாத இந்து நடுத்தர வர்க்க பார்வையை கொண்ட வலதுசாரி பிற்போக்கு பத்திரிகை என்பதை தினமணியை வாசிப்பவர்கள் அறிவார்கள். அந்த பத்திரிகையில் பத்து நாட்களுக்கு முன் விவாத மேடை என்கிற பகுதியில் விவாதிக்க ‘நேர்மையான’ ஒரு கேள்வி கேட்க்கப்பட்டிருந்தது. ’லிபரான் கமிஷன் அறிக்கை நியாயமானது தானா?’ என்பது தான் அந்த‌ கேள்வி !! அதற்கு வாசகர்களிடமிருந்து வந்திருந்த‌ கடிதங்களில் மிக பெரும்பாலும் இந்த நடுநிலைவாதிகள் என்னும் மேதாவிகளின் கருத்துக்களே!

முதலில் இந்த ’நடுநிலை’ என்னும் நீதி வ‌‌ழுவா நிலைபாடு எப்படிப்பட்டது என்பதை பார்த்தோமானால் அது ஏதோ ஒருவகையில் உண்மையை முற்றிலும் மறைத்து அநீதிக்கு துணைபோகும் செயலாகவே அமையும். நேர்மையாக ஒரு செயலை அணுகும் போது முடிவு என்பது நடுநிலை என்று எந்த விஷயத்திலும் இருக்கமுடியாது. ஏதாவது ஒரு சார்பாக தான், ஏதோ ஒரு கருத்தை சார்ந்து தான், நீதியையோ அநீதியையோ ஆதரிக்காமல் இருக்கமுடியாது. இரு பக்கத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் நிற்பது தான் ஒருவனுடைய‌ உண்மையான கருத்தாகவும் இருக்க முடியும். நடுநிலை வகிப்பது உண்மையை மறைப்பதும், அநீதிக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதுமாகும்.

அதை நிரூப்பிக்கும் வகையில் தான் இந்த வாசகர்களின் கடிதங்கள் அமைந்துள்ளன. அதில் ஒரு சிலவற்றை பார்போம்.

“லிபரான் கமிஷன் அறிக்கை மீண்டும் ஒரு மதக்கலவரத்துக்கு வழி செய்யும். நாட்டின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். 17 ஆண்டுகள் கடந்து மீண்டும் ஒரு பயங்கரத்தை நிகழ்த்த வேண்டாம்”

– பா.அரவிந்த். திருப்பூர்.

மசூதியை இடிக்கும் மதவெறி கும்பலும் கிளம்பி வந்த குரங்கு கூட்டமும்

தன்னை நடுநிலை யோக்கியவான்கள் என்று நினைத்து கொண்டு இப்படியெல்லாம் யோசிக்கும் கனவான்கள் நாட்டின் வளர்ச்சியும்  பொருளாதாரமும் லிபரான் கமிஷனால் தடுக்கப்படுகிறது என்று அச்சப்படுகின்றனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் VSNL நிறுவனத்தை டாட்டாவுக்கு 5 மடங்குக்கும் குறைவாக, வாஜ்பாய் தன் அப்பன் வீட்டு சொத்தைக் கொடுப்பதைப் போல‌ அள்ளிக்கொடுத்த போது இந்த நடுநிலைவாதிகள் நாட்டைப் பற்றி என்ன நினைத்தார்கள் ?

2002 இல் கடும் வறட்சியிலும் பஞ்சத்திலும் சிக்கி இந்திய மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த போது அரசுக் கையிலிருந்த 2.2 கோடி டன் கோதுமையை ஐரோப்பியப் பன்றிகளுக்குத் தீவனமாக அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்த பா.ஜ.க அரசை இவர்களின் நடுநிலைக் கண்ணோட்டம்  கண்டிக்காதது ஏன் ?  பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவித்த இந்த விஷயங்கள் மீது இந்த நடுநிலையாளர்களுக்கு அக்கறை இல்லை. ஓரளவுக்காவது உண்மையை சொல்லும் லிபரான் அறிக்கை வந்ததும் தான் இவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கரை வருகிறது.

நடந்தவை நடந்தவையாகவே இருந்து விட்டுப் போகட்டும். இனிமேலாவது விட்டு விடுங்கள் என்று நடுநிலையாக நியாயம் பேசுபர்கள் நம்மிலும் பலர் இருக்க கூடும். நாம் கேட்பது, அதேபோல் மும்பையின் நவம்பர் சம்பவத்தையும் மறந்து நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று நியாயபடுத்தி பேச முடியுமா? அப்படி இவர்கள் பேசுவார்களா?

“பாபர் மசூதி சம்பந்தமாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை எப்படியோ வெளியில் வந்துள்ளது. நாடு ஏற்கனவே மதவாத சக்திகளாலும் மத தீவிரவாத சக்திகளாலும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளாலும் ஓர் இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கும் நேரம். எதிர் கட்சிகள் அரசியல் நடத்த வேண்டும். நாட்டைப் பற்றி கவலையில்லை. அண்டை நாடுகள் எல்லாம் வளரும் இந்தியாவை கண்டு பொறாமைப்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் லிபரான் கமிஷனால் இந்து கலவரத்தை உருவாக்குவது நியாயமா?

– தி.சேஷாத்ரி. ஆழ்வார் திருநகரி.

எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை வைத்து அரசியல் நடுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்காக காங்கிரசுக்கு நாம் வக்காலத்து வாங்க முடியாது. பி.ஜே.பி மதவெறி கும்பல் என்றால் காங்கிரஸ் மிதவாத பி.ஜே.பி. குமபல்.

ஆக இரண்டு கட்சிகளும் ஒப்பீட்டளவிலோ கொள்கையளவிலோ மக்களை சுரண்டுவதிலும், ஒடுக்குவதிலும், பார்ப்பனியத்தை குற்றங்களிலிருந்து  காப்பதிலும் இந்த இரண்டு ஓட்டுப்பொறுக்கி கும்பலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வளரும் இந்தியாவை இப்படி செய்கிறீர்களே என்று கவலைப்படுபவர்களே, நாட்டின் வளர்ச்சி என்பது எது? இதுவா ஒரு நாட்டின் வளர்ச்சி?

இந்தியாவின் வளர்ச்சியால் யாரும் பொறாமை கொள்ள முடியாது. அப்படி பொறாமை கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்கள் தன்னிறைவை அடையவில்லை. வளர்ச்சி என்பதை மக்களுடைய வாழ்க்கத்தரத்தை வைத்து தான் பார்க்க முடியும், பங்குச்சந்தை புள்ளிகள் உயர்வது வளர்ச்சி அல்ல. ஆனால் இங்குள்ள படித்த நடுத்தர வர்க்க அறிவாளிகள் நாட்டின் முன்னேற்றத்தை இப்படித் தான் பார்க்கிறார்கள். இந்த ஒரு விசயம் போதும் இவர்களின் நடுநிலை எவ்வளவு ஒரு பக்கச்சார்புடையது என்பதை அறிந்துகொள்ள.

விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி-யின் வாரிசுகள். இவர்கள் இந்தியர்கள் இல்லையா?

லிபரான் கமிஷன் அறிக்கை நாட்டில் மறுபடியும் கலவரத்தை உருவாக்கும் என்று பதறுகிறார்கள் சிலர். அப்படியென்றால் முன்பு செய்த தவறுக்காக ஒருவனுக்கு தண்டனைகள் என்று எதுவும் கொடுக்ககூடாது. அப்படி செய்தால் அவன் திருப்பி ஏதாவது செய்வான். அதனால் இவர்களை பற்றியெல்லாம் நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

மசூதி இடிப்பில் அத்வானியும், வாஜ்பாயும் இன்னபிற மதவெறியர்களுக்கும் தொடர்புண்டு, இவர்கள் தான் தூண்டிவிட்டார்கள் என்று அறிக்கை சமர்பித்தால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும், நாட்டின் முன்னேற்றம் கெடும்.

மோடி குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கின்றான். அவனைப் பற்றி அறிக்கை சமர்பித்தாலும் கலவரங்கள் வெடிக்கும். எனவே எல்லாவற்ரையும் மறந்துவிடுங்கள், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடப்பவற்றை பார்ப்போம் என்பது தான் இவர்களின் நேர்மையான‌ நடுநிலை வாதம். சரி அப்படிப்பார்த்தால் அதே விதி தானே இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பொருந்தும் ? அப்படியானால் மும்பை தாக்குதலுக்காக கசாப் மீது விசாரனை நடத்த வேண்டாம், அதை கிளறினால் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். எனவே அவர்களைப் பற்றியும் பேச வேண்டாம், நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் மேற்கொண்டு நடக்க‌ வேண்டியதை பார்ப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. மாறாக இந்த நடுநிலை அறிவாளிகளுக்கு இசுலாமிய பயங்கரவாதம் என்றால் தான் தேசபக்தி பொங்கி வழியும்.

பயங்கரவாதம் என்றாலே அது இஸ்லாமியர்கள் தான் என்று எண்ணும் இவர்களுக்கு இந்து பயங்கரவாதம் என்ற‌ ஒன்றை பற்றி பேசவோ நினைக்கவோ கூட முடிவதில்லை. ஆனால் இவர்களின் கண்ணோட்டம் நேர்மையான, நாட்டின் முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட‌ நடுநிலையான கண்ணோட்டம்!!

“அயோத்தி இயக்கத்தில் எனக்கிருக்கும் தொடர்பு குறித்து நான் பெருமைப்படுகிறேன். ராமர் கோவிலை கட்டும் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன்” என்று  பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக பேசிய‌ மதவெறியன் அத்வானியை, மசூதியை இடிக்கச்சொல்லி உத்தரவு போட்ட முதல் கிரிமினல் அத்வானியை இந்த ‘ஜனநாயக’ நாட்டின் சட்டங்கள் தண்டிக்காததற்கு என்ன காரணம் என்பதை நமது நடுத்தர வர்க்க நடுநிலைவாதிகள் விளக்குவார்களா ?

மசூதியை இடிக்க உத்தரவிட்ட கிரிமினல் அத்வானி

எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து காங்கிரசை எதிர்ப்பதற்கு பதிலாக  பா.ஜா.கா வை எதிர்க்கிறார்கள் என்று தன் நடுநிலையை வெளிப்படுத்தியுள்ளது ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை. ‘இந்தியா டுடே’, ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளுக்கு நாட்டில் நடக்கும் அநீதிகள் எவையும் தெரிவதில்லை. மக்கள் சோறின்றி சாகிறார்கள், வேலையில்லை, இருக்கிற வேலைகளும் பறி போகின்றன, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள். இந்த ‘பார்ப்பன’ ஜனநாயகத்தூண்களின் கண்களுக்கு இந்த‌ அநீதிகள் எதன் மீதும் கோபமோ, சீற்றமோ வந்ததில்லை , ஆனால் இந்துமதவெறியர்கள் தற்போது மாட்டிக்கொண்டதும் மக்கள் முன்பு அவர்கள் அம்பலப்பட்டுவிடக்கூடாது என்பதில் அக்கறையோடு கருத்தை பரப்புகின்றன.

இந்த நாட்டில் “ஜனநாயகம்” எப்படி அழுகி நாறிப்போயிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இது போலி ஜனநாயகம் என்பதற்கு இந்த பத்திரிக்கைகளும், நடுத்தர வர்க்கத்தின் நடுநிலை என்கிற ‘சார்பு’ நிலை கண்ணோட்டங்களே சிறந்த உதாரணங்களாகும்.‌

உங்களில் பலரும் கூட‌ இது போன்ற நடுநிலை மாயைகளில் உங்களை அறியாமலே கூட‌ சிக்கியிருக்கலாம், எனவே நீங்களும் உங்கள் கணோட்டத்தை பரிசீலியுங்கள். நீதியையும் உண்மையையும் தேடுங்கள். எனது கண்ணோட்டம் நடுநிலையானது என்று கூறி குற்றத்திற்கு துணை போகாதீர்கள்.

குஜராத்தில் 5000 இஸ்லாமிய மக்களை கொன்று விட்டு இன்றும் ஹாயாக உலா வரும் மோடிக்கு இதுவரை என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

இனத்தின் பெயரால் உழைக்கும் மக்களை அடித்து விரட்டிய பால் தாக்கரே கும்பலுக்கு, ஜனநாயகம் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில் இதுவரை என்ன தண்டனை கிடைத்தது?

பிரவின் தெகாடியாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது ?

தமிழ்நாட்டையே மொட்டையடித்த கொள்ளைக்காரி ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை கிடைத்தது இந்த நாட்டில் ?

பயங்கரவாதிகளான இந்த‌ காவிகும்பலுக்கு எப்போதும் தண்டனைகள் கிடையாது குற்றங்கள் செய்யச்செய்ய‌ சலுகைகள் தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன‌.

 

பச்சைக் குழந்தைகளையும் விட்டுவைக்காமல் எரித்துக் கொன்ற‌ பார்ப்பன பயங்கரவாதம்.

அய்யய்யோ பழையதை கிளறாதீர்கள் கலவரம் வெடிக்கும் என்று கூச்சலிடும் நடுநிலைவாதிகளே!  இந்த லிபரான் கமிஷனால் இங்கு என்ன தலைகீழ் மாற்றம் நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ? வாஜ்பாயையும், அத்வானியை தூக்கிலா போடப்போகிறார்கள் ? செத்த பிறகும் கூட   இந்த கேடுகெட்ட ஜனநாயகம் இவர்களை தண்டிக்காது.  இந்த சட்டங்களின் கீழ், இந்த உச்சிக்குடுமி மன்றங்களின் கீழ் இவ‌ர்களுக்கெல்லாம் ஒரு காலும்  தண்டனைகள் கிடைக்கப் போவதில்லை என்பதை நாங்கள் இன்றைக்கே அடித்துச்சொல்கிறோம். சட்டங்களும், அதன் பிரிவுகளும், தண்டனைகளும், அதன் வலிகளும் இஸ்லாமியர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்காகவுமே இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்த‌ சட்டங்கள் என்றைக்கும் அப்படியே நீடித்தும் நிற்க‌ முடியாது. அனைத்தும் மாறுவது போல இந்த போலி ஜனநாயக சமூகமும் மாறும், மிகப்பெரும்பாண்மையான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் போது, சட்டங்களும் மாறும், தண்டனைகளும் மாறும், அதிகாரமும் மாறும், உழைக்கும் மக்களின் அதிகாரம் ஆட்சி செய்யும் போது‌ அத்வானிக்கும், வாஜ்பாய்க்கும், நரேந்திர‌ மோடிக்கும், பிரவீன் தெகாடியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும், சசிக்கலாவுக்கும் அவர்களால் ஆளப்பட்ட மக்களாலேயே தண்டனைகள் வழங்கப்படும்.அப்போது அவர்கள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுவார்கள் என்பதையும் இப்போதே உங்களுக்கு அடித்துச்சொல்கிறோம். ஆனால் அப்போது நடுநிலைவாதமும் இருக்காது.

தொடர்புடைய இடுகைகள்:

நாங்கள், அவர்கள்……….நீங்கள்?

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

“சுரணையற்ற இந்தியா”

குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !

வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி !

‘Thanks To BJP, Ram Lalla Stands Like A Beggar’