Tag Archives: சந்தனமுல்லை

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக நாளை  (26.12.2010) எட்டு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்

விலை ரூ. 40.00

ஈராக்: வரலாறும் அரசியலும்

பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00

அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்

– வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00

விடுதலைப் போரின் வீர மரபு

– புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்

– உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00

நினைவின் குட்டை கனவு நதி

சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

– சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00

மீண்டும் தொழிலாளி வர்க்கம்

வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00

நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,

விலை ரூ. 110.00

_____________________________________________________________________

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”

தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

 

தொடர்புடைய பதிவுகள்

Advertisements

ஆணாதிக்க பொறுக்கித்தனத்தை தனிமைப்படுத்துவோம் !

பெண்ணுரிமைக்காய்
“அ” என்று முதலெழுத்து
எழுதி நாமின்று
புறப்படுகையில்
“போ” என்று
பொல்லாதன பேசி
பழிகின்றார்

பெண்ணடிமை
விலங்குடைக்க
புறப்பட்ட என் சகோதரிகளை
ஈனமான சொற்களால்
ஊனமாகிய நண்பரே
சற்று கேளும் எமது குரலை.
எங்கள் சகோதரிகளின்
பிள்ளை கறி
கேட்டவர்களே
கேளுங்கள் எங்களது குரலை.

“கற்பித்தல்” என்பது
எமது அடையாளம்
“ஒன்று சேர்” என்பது
எங்கள் மந்திரம்
“புரட்சி செய்” என்பது
எங்கள் லட்சியம்

மலர்பறித்து
நாரெடுத்து
மலர் கோர்க்கும்
“பூக்காரி” என்றாலும்
பூ கட்டுவது எனது தொழில்
ஈனமில்லை அதை பகர்வதற்க்கு.

கூறுகெட்டு
வாய் பேசும்
உம் “வளர்ப்பில்”
வாயே உனது மூலதனம்
உனக்கில்லை தொழில்
என்னும் அடையாளம்

பிறப்பிலே வந்ததென்று
சொல்லும் ஈனமான
வளர்ப்பு நீ
சேர,சோழ,பாண்டிய
வழி வந்த
தமிழ்மான மரபு நான்

தகுதி இல்லார்க்கு
தமிழ் என்றும்
துணையில்லை
வந்தேறிகள்
வாய்பேசுவதால்
வாடிடாது
வாச(சந்தன) முல்லை.

Superlinks பின்னூட்டத்திலிருந்து Anonymous

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பார்பனிய பண்பாட்டை எதிர்த்து ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டியது, கருவறுக்க வேண்டியது ‘முற்போக்காளர்’ என்று கருதிக்கொள்ளும் அனைவரின் கடமை!

பதிவுலகம் என்பது சமூகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனியான, சுயேச்சையான ஒன்றல்ல. பதிவுலகமும் சமூகத்தின் ஒரு அங்கமே! அந்த வகையில் வினவு பதிவுலகில் சமூகத்திற்கான, ஒடுக்கப்படுபவர்களுக்கான கருத்துக்களை எழுதிவருவதுடன், பதிவுலகில் இருக்கும் ஒடுக்குமுறைகளை, ஆணாதிக்கத்தை, பார்பனியத்தை எதிர்த்தும் போராடிவருகிறது!

ஒரு பெண்ணை எதிர்கொள்வதற்க்கு அவளின் பால் ஒழுக்கத்தை கையிலெடுத்தாலே போதும் என்ற வக்கிரபுத்தி பார்ப்பனியம் பன்னெடுங்காலமாக கைகொண்டுவருவதே! அதே ஆயுதத்தை கையிலெடுத்து, தனது பார்ப்பனிய வக்கிரபுத்தியை கழிந்து வைத்திருக்கும் நர்சிம் என்கிற‌ பெறுக்கியை – அம்பலப்படுத்தி அவரை தனிமைப்படுத்தி தண்டிக்கவேண்டும் என்று வினவு கட்டுரை வெளியிட்டது!

அதற்கு எதிராக இப்போது புனிதக்கூட்டணி உருவாகியுள்ளது! பார்ப்பன ஆணாதிக்க மலத்தை தலையில் சுமந்து கொண்டுள்ள நரசிம்மிற்காக‌ நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி பொங்கி எழுறார் பாருங்க கொக்ககோலா வே தோத்து போயிடும் போல. வினவை இவரு ஒதுக்கி வைக்கிறாராம். ஒரு பெண்ணை பச்சை பச்சையாக‌ இந்த நொன்னை புனைந்து எழுதுவானாம். அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று இந்த‌ உண்மைத் தமிழன் விளக்கமளிப்பாராம்.இதுவே அயோக்கியத்தனம் இல்லையா ?

இவருடைய பதிவில் நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால் / அதை கேட்க நீங்கள் யார் என்கிற தொனியில் எழுதியிருக்கிறார்! இந்த நாங்கள், நீங்கள் என்பதில் யார் யாரெல்லாம் வருவார்கள்? பதிவெழுதுபவர்கள் மட்டுமா ? அல்லது வாசகர்களுமா? பதிவெழுதுபவர்களில் புதிதாக பதிவெழுத வந்தவர்களும் அடங்குவார்களா? மூத்த – பிரபல (!!!) பதிவர்கள் மட்டுமா? இக்கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காவிடினும், நாங்கள் என்பத‌ன் அடையாளம் தெரிந்ததே!

பதிவெழுதுபவர்கள் அனைவரும் மொக்கைகள் உட்பட அந்த நாங்களுக்குள் அடக்கம் என்றால், வினவு மட்டும் எப்படி வெளியிலிருந்து வந்தது ஆகும்? வினவு வெளியிலிருந்து வந்தது என்றானால், புது பதிவர்களும் வெளியில் இருந்து தானே வருகிறார்கள்? இது முருகனுக்கு தான் வெளிச்சம்! வினவு வெளியிலிருந்து வந்ததாகவே இருக்கட்டும்! அதனால் உள்ளுக்குள் நாறிக்கொண்டு இருக்கும் பிற்போக்கு தனங்களை கேள்வி கேட்க கூடாதா?

”இந்த எழவெடுத்த ஜாதியை மறந்துதானே வலையுலகம் என்ற ஒரு லேபிளின் கீழ் நாம் குடியிருந்து வருகிறோம்” என்று திருவாய் மலரும் ‘பொய்’ தமிழனின் கூற்றுக்கும், பொதுப்புத்தியில் “இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” கூற்றுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால், அதுவும் முருகனுக்கே வெளிச்சம்!

பதிவுலகில் பார்ப்பன ஆதிக்கமிருந்ததும், அதை எதிர்த்து அசுரன், ராஜா வனஜ், மற்றும் சுகுனா திவாகர் போன்றோர் போராடியதையும் பதிவுலகம் அறியும். பதிவர்கள் சமூகத்தில் இருந்து தானே பதிவெழுத வருகிறார்கள்? பார்பனியமும், ஆணாதிக்கமும் சமூகத்தில் இருக்கும் வரை பதிவுலகிலும் இருக்கும் என்ற எளிய உண்மை “உண்மை(!) தமிழனுக்கு” தெரியாமலிருக்க வாய்பில்லை என்பதும் முருகனுக்கே வெளிச்சம்!

ஆணாதிக்க வக்கிரம் பிடித்த பொறுக்கியை துரத்த சொல்லும் வினவை பதிவுலகில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற புதிய கோரிக்கையை இந்த உ.த வைக்க‌ என்ன காரணம்? வினவு இதுவரை நேரிடையாக பெயரைக் குறிப்பிட்டோ அம்பலப்படுத்தியோ – அவர்களது மொழியில் முத்திரை குத்தியோ, மார்க் போட்டோ அல்லது திட்டியோ – இல்லாத சிலரும் கூட வினவை எதிர்க்க காரணம் என்ன?

”இதுவரையில் பதிவுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலாவது இவர்களை நாம் நேராக அழைத்திருக்கிறோமா. இல்லையே.? இவர்களாவது தேடி வந்து நமக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்களா. வரவே இல்லையே.? எத்தனையோ பதிவுலக் கூட்டங்களுக்கு பதிவர்களை அழைத்திருக்கிறோம். இவர்கள் வந்திருக்கிறார்களா.” இது தான் சேதி, இது தான் பிரச்சனை.. நேராக அழைக்காவிட்டாலும், வலிந்து தானே போய் இவர்களின் காலை நக்கி மரியாதையை செலுத்தவில்லை. இது மட்டுமா? பல்வேறு தருணங்களில் இவர்களின் முகத்தை உரசிப்பார்க்கும் விதமாக வினவு எழுதுவதும், சில பிரச்சனைகளில் நேரிடையாகவே இவர்களது குட்டி முதலாளித்துவ அற்பத்தனங்களை வினவு கேள்விக்குள்ளாக்குவதும் தான் பிரச்சனையே!
மட்டுமின்றி தற்போதைய பிரச்சனையில் நர்சிமுக்கும் இவர்களுக்கும் (அதாவது நர்சிமை ஆதரிப்பவர்களுக்கும்) உள்ள‌ பிரிக்க முடியாத உறவு இரு தரப்பும் பச்சையான ஆணாதிக்க வெறியர்கள்.

யார் யாரெல்லாம் கூட்டணியிலிருக்கிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும் அவர்களின் வினவின் மீதான காழ்ப்புனர்ச்சி! நீண்ட நாட்கள் பின் செல்ல வேண்டியதில்லை, வினவின் சமீபத்திய பதிவான ”வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்” இதைப் படித்தாலே உண்மைதமிழனின் பதிவிற்க்கு காரணம் விளங்ககூடும்! ஆதரவளிப்போரில் முக்கியமாக கலக சாரி! கலகலப்ரியாவை பர்தா நற்குடி மற்றும் இந்த நர்சிம் நிகழ்வில் வினவு கேள்வி எழுப்பியதாலேயே கக்கூசை மோர்ந்து பார்ப்பதாக சொல்கிறார்! ஒருவேளை அவர் கக்கூசிலேயே வாழ்வதாகவும் வாழ விரும்புவதாகவும் கூட இருக்ககூடும்!

ஆக, நாங்கள் என்ற இந்த வாதத்தின் ஊற்றுகண், நான் எனும் தனிமனித வாதமே! பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவு தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட, அவர்களுடைய மொழியில் சொன்னால் ’புண்படுத்தப்பட்ட’ தனிமனித மணங்கள் சேர்ந்தே இப்புனித கூட்டணி அமைக்கப்படுகிறது! அக்கூட்டணி அமைக்கப்படுவது மட்டிமின்றி தமது குடும்பப் பிரச்சனை என்றும் முன்வைக்கப்படுகிறது! அது உங்களுடைய‌ புனிதக் குடும்பம் என்பதாலேயே, பெண்கள் மீதான குடும்ப வன்முறையை நீங்கள் ஆதரிப்பவர்களாக‌ இருக்கலாம்! வக்கிரமான முறையில் பார்ப்பன ஆணாதிக்க வெறியை கட்டவிழ்த்து விட்ட‌ பொறுக்கியை குடும்பத்தை விட்டு நீங்கள் துரத்தியடிக்காமல் இருக்கலாம்! உங்கள் முற்போக்கு முகமுடியும் அத்துடன் முடிவடையலாம்! ஒவ்வொரு முகமுடியும் கிழிய கிழிய மற்றொன்று துருத்திக்கொண்டு வெளித்தெரியும் ! குடும்பம் என்பதே பெண்களை கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கும் வன்முறை கருவியாகவும் இருப்பதால் அப்புனித குடும்பத்தையும் சேர்த்தே முற்போக்காளர்களாகிய நாங்கள் எதிர்க்க வேண்டியுள்ளது! எதிர்ப்போம். அதை நாங்கள் தான் எதிர்ப்போம். மற்ற‌வர்களையும் எதிர்க்கச்சொல்லி அணிதிரட்டுவோம். இதற்கெதிராக மொக்கை போடுவதை தவிர உங்களால் என்ன செய்ய முடியும் மொக்கைகளே ?

பதிவுலக நண்பர்களே,
இணையத்தை பயன்படுத்தக்கூடிய‌ நாமெல்லோரும் ஓரளவுக்காவது படித்தவர்கள்.குறைந்தபட்சம் கல்லூரி படிப்பு.ஓரளவுக்கேனும் முற்போக்கு அறிமுகம் உள்ளவர்கள்.

சமூகத்தில் ‘சாதி’யின் பெயரால் கீழ் நிலையிலிருத்தி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான‌ ஒடுக்கப்பட்ட மக்கள் அனுதினமும் அனுபவிக்கும் துயரத்திற்கு யார் காரணம் ? பார்ப்பன இந்து மதம் தான் என்பதை ம.க.இ.க ஒன்றும் புதிதாக சொல்லவேண்டியதில்லை. அம்பேத்கரும் பெரியாரும் அதை தான் வாழ்நாள் முழுவதும் சொல்லி வந்தார்கள். பார்ப்பன இந்து மதம் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி சாதி ரீதியாக ஒடுக்கி வைத்ததோ, வைத்திருக்கிறதோ அதே போல தான் பெண்களையும் ஒடுக்கி வருகிற‌து. உலகம் முழுவதும் ஆணாதிக்கம் இருப்பினும் அது இந்தியாவில் பார்ப்பன இந்து மதத்தில் தான் இறுகி கெட்டி தட்டி போயிருக்கிறது.

ஆணாதிக்கம் என்பது அனைத்து ஆண்களுக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. அது சாதி, வர்க்கம் ஆகியவற்றோடு சேர்ந்து கூட குறைய இருக்கும். ஒருவர் பார்ப்பன சமூகத்தில் பிறப்பது அவருடைய த‌வறல்ல. ஆனால், பார்ப்பனனாக வாழ்வது கேவல‌மானது. பார்ப்பனீயத்தின் கொடுமைகளை தெரிந்து கொண்ட பிறகும் கூட பார்ப்பானாக வாழ முடிவது அதை விட கேவலமானது. மற்ற‌வர்களை விட பார்ப்பனர்கள் கொடூரமான ஆணாதிக்கவாதிகளாக இருப்பார்கள்.காரணம், தான் அனைத்துக்கும் மேலான‌ உயர்சாதி பார்ப்பான் என்கிற‌ சாதி கொழுப்பு.

இங்கு நர்சிம் என்பவர் முழுக்க முழுக்க ஒரு பார்ப்பன ஆணாதிக்க வெறியராகவே நடந்து கொண்டிருக்கிறார். இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் இவ்வளவு மோசமாக இழிவு செய்யப்படுவதை முற்போக்கு பேசும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிக மிக கேவலமானது. எனவே, பார்ப்பனிய ஆணாதிக்க வக்கிரபுத்தியுடைய பொறுக்கி நர்சிம்மை பதிவுலகை விட்டு வெளியேற்ற தமிழ்மணத்திற்கு கோரிக்கை வைப்பதோடு, ஆணாதிக்கமும் பார்ப்பனீயமும் தொடர்பான இப்பிரச்சினையை மொக்கை போட்டு நீர்த்துப்போகச் செய்ய நினைப்போரையும், சந்தனமுல்லையையும் நர்சிம் என்கிற பொறுக்கியையும் சமதட்டில் வைத்து பார்போரையும் அம்பலப்படுத்தி முகத்திரையை கிழிப்பது முற்போக்கு, ஜனநாயகம், பெண்ணடிமைத்தனம் குறித்தெல்லாம் பேசுவோரின் கடமை !

அந்த வகையில் பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான விவாதச் சூழலை உருவாக்கப் போராடி வரும், ஆணாதிக்கத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து போராடி வரும் வினவு தோழர்களை ஆதரிப்போம். பிற்போக்கு பார்ப்பனீய, ஆணாதிக்க வெறியர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம். அதற்காக‌ கரம் கோர்ப்போம்.

தொடர்புடைய இடுகைகள் :

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்?

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

நடுநிலை நாடகம்