Daily Archives: October12, 2009

ஒடுகாலிகளுக்கு அங்கீகாரம் தர வேண்டுமா ??

அன்புள்ள  தோழர்களுக்கு,

அதிரடியான் என்பவர் பொய்களையும்,அவதூறுகளையும் அள்ளி வீசி தனது கட்டுரைகளை கீற்று தளத்தில் வெளியிட்டு வந்தார். கீற்று தளமும் இதனை ஒரு உள்நோக்கத்துடனும்,வண்மத்துடனும் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நாம் அவரை விவாதிக்க அழைப்பதன் மூலம் அவரை பொது தளத்தில் வைத்து அம்பலமாக்கலாம் என்று கருதி அழைத்தோம். இவருடனான விவாதத்தை தோழர்கள் கவனித்திருப்பீர்கள்.நமது பல்வேறு கேள்விகளுக்கும் தனது தரப்பிலிருந்து இவர் மழுப்பலான பதில்களையே தந்தார்.சிலவற்றை ‘கண்டுகொள்ளாமல்’ கடந்தும் சென்றார்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி,கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்டு அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறார்.(அந்த அழகை பார்க்க வேண்டும் என்றால் இந்த விவாத சுட்டியில் சென்று அவருடைய விவாததின் தரத்தை காணுங்கள்-https://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-404) போதை ஏறிய‌ ஒரு மதவாதியை போன்று முரட்டுத்தனமான தமிழ்தேசிய போதையை ஏற்றிக் கொண்ட‌ நபராக இருக்கும் இவரிடம் நாம் எவ்வளவு விளக்கம் கூறினாலும்,தெளிவு படுத்தினாலும் அது அவருடைய‌ மண்டையில் நிச்சயமாக ஏறப்போவதில்லை.கருத்துக்களை நேர்மையாக‌ அலசி ஆராயும் நாணயமும் இவரிடம் இல்லை.சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார்.விவாதத்தில் இவருடைய தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எதுவும் இன்றி எனக்கும் மார்க்ஸியம் தெரியும் என்று மார்தட்டும் போக்கு தான் உள்ளது.அதுவும் அரை குறையாக தெரிந்து கொண்டு விவாதிக்கிறார்.அதற்கு லெனின் மேற்கோளை காட்டியதே உதாரணம்.

இவர் தன்னை எந்த அமைப்பையும் சாராத நபர்,பொதுவான தமிழ் தேசிய ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்கிறார், இது ஒரு பொய் ! கூச்சமின்றி சொல்லும் பச்சைப் பொய்! இவர் ஓடுகாலிகளான த.நா.மா.லெ.க‌ அமைப்பை சேர்ந்தவர். தன்னுடைய அமைப்பு எது என்று கூட‌ சொல்லிக்கொள்ள துணிவில்லாத‌ அநாமதேயங்களுடன் விவாதிப்பது என்பது நாம் அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்.நாம் மிகவு அவசரப்பட்டு இவரை விவாதிக்க அழைத்து விட்டோம், அது மிகவும் தவறான முடிவு என்பதை தற்போது உணர்கிறோம். இனிமேல் வேறு எந்த தோழர்களும் இந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். முகவரியே இல்லாத நேர்மையும் இல்லாத இந்த நபருடன் விவாதிப்பது என்பது யார் என்றே தெரியாத அநாமதேயமான இவரை பெரிய ஆள் ஆக்குவதும், அங்கீகரிப்பதுமாகும் என்று கருதுகிறோம்.

நாம் இவரை வென்றெடுக்கப் போவதில்லை,இவரும் நம்மை வென்றெடுக்கப்  போவதில்லை. எனவே நாம் நமது நேரத்தை இவருடன் மல்லுக்கட்டி வீணடிக்காமல் இவரை புறக்கணிப்பதையே சரி என்று கருதுகிறோம். இதனால் நாம் ஓடிவிட்டோம் என்றும் பயந்து விட்டோம் என்றும் அவர் கீற்றில் போய் கூப்பாடு போடலாம். எனினும் நாம் அதையெல்லாம் சட்டை செய்யாமல் இவரை புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேறு வேலைகளை பார்ப்பது தான் சரி என்று கருதுகிறோம்.

சில தோழர்களுக்கு எமது இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளிக்கலாம். தோழர் வினவு இரண்டு நாட்களுக்கு முன்பு எமது தளத்தில் ஒரு பின்னூட்டதை இட்டுள்ளார். ஆனால் நாம் அதன் காரணமாக இந்த முடிவிற்கு வரவில்லை,நமது ஆழமான‌ பரிசீலனையே இந்த முடிவிற்கு காரணம். விவாதத்தின் இடையிலேயே இது பயனுள்ளதா என்கிற பரிசீலனைக்குள் போய் விட்டோம். தோழர் வினவின் பின்னூடம் முடிவை எடுக்க வைத்துள்ளது. இது சரியான முடிவு தான் என்று கருதுகிறோம்.எமது இந்த முடிவு சரியா தவறா என்று பிற‌ தோழர்கள் கருத்து சொல்லுங்கள்.