நமது காஷ்மீர் வெல்க !

காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராடமும், பின்வாங்கும் கோழை இந்திய படைகளும்..

உலகின் மிகப்பெரிய ’ஜனநாயக’ நாடு என்று தன்னைத் தானே பீற்றிக்கொள்ளும் இந்த நாட்டின் கடந்த கால வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் பார்ப்பனர்களுக்கும் ஆளும் கும்பலுக்கும் சாதகமான முறையில் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றின் ஒரு கிளை. ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் எழுதிவைத்துள்ளது தான் உண்மையான வரலாறு என்று இந்த ’ஜனநாயக நாட்டில்’ வாழும் ’ஜனநாயகவாதி’கள் அனைவருக்கும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மனப்பாட கல்வியின் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் இந்த ‘வரலாறு’ மீண்டும், மீண்டும் பிரச்சாரம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட உண்மை என்கிற அளவிற்கு பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறான ’வரலாறு’ தான் இராமர் கோவிலை இடித்த இட்த்தில் தான் பாபர் மசூதியை கட்டினார் என்பது, அவ்வாறான வரலாறு தான் தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்பது, அவ்வாறான வரலாறு தான் காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்பது. இதே பாணியிலான ஒரு பச்சை பொய் தான் காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம் என்பதும். உண்மையான வரலாற்றை திரிக்கும் இந்த பொய், தேசிய வெறியை ஊட்டுவதன் மூலமும், பார்ப்பனிய செய்தி ஊடகங்களின் மூலமும் மீண்டும் மீண்டும் உண்மை என்று நிலை நிறுத்தப்படுகிறது.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீர் மக்கள் நடத்தும் வீரஞ்செறிந்த ’சுதந்திரப் போராட்டத்தை’ அவதூறு செய்து,  இழிவுபடுத்தி வரும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களிடம் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி என்கிற ‘பொய்’யையும், அந்த மண்ணின் புதல்வர்களை தீவிரவாதிகள் என்றும் கூறி வருகிறது. பார்ப்பனிய செய்தி ஊடகங்களும், பிழைப்புவாத பன்றிகளால் நிரம்பி வழியும் சகல ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இந்த வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு பீர் பாட்டில் பொங்குவதை போல தேசப்பற்றால் பொங்கி வழிகிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா, டைம்ஸ் நவ், தினமலர் போன்ற பார்ப்பன மலத்தை நுகரும், தேசப்பற்று என்றால் என்ன என்று அதன் சரியான பொருளில் அர்த்தம் புரியாத பிழைப்புவாதிகள், இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் காஷ்மீரிகளுக்கெதிரான கூச்சல்களுக்கு பின்னால் தேசபக்தி பொங்க அணிவகுத்து நிற்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று கேட்டால் இந்த தேசபக்த குஞ்சுகள் எந்த ஆதாரத்தையும் முன் வைப்பதில்லை, மாறாக ’வேதம் பொய்யாக இருக்காது’ என்பதைப் போல காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம், அது தான் ’வரலாறு’ என்று கூறுகிறார்கள். ஜனநாயக உணர்வோ, அறிவு நாணயமோ அற்ற முறையில் இந்திய தேசிய வெறியுடன் விஷத்தை கக்குவார்கள். ஆனால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இவர்கள் எல்லோரும் ஜனநாயகவாதிகள் என்பதை மட்டும் வெட்கமின்றி சொல்லிக்கொள்கிறார்கள், நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் !

காஷ்மீர் என்கிற ’தனிநாடு’ நேரு ’மாமா(!!)’ ஆட்சியின் போது   இந்தியாவால் நயவஞ்சகமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டது. என்றைக்குமே அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்று என்றைக்குமே வரலாறு இல்லை. அது தனி ஒரு ’சுதந்திர நாடு’.  காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கிலுள்ள பல பகுதிகளும் கூட இந்தியாவுக்கு சொந்தமானவை அல்ல !

இவர்களை தான் தீவிரவாதிகள் என்கின்றனர் ஆளும் வர்கமும், ஊடகங்களும்!

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் விரிவாதிக்க வெறிக்கெதிராக காஷ்மீர் மக்கள் வாழ்வா சாவா என்கிற விடுதலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதற்கெதிராக காஷ்மீரி மக்கள் மீது இந்திய அரசு ஏவி வரும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ஹீரியத் மாநாட்டு கட்சியை சேர்ந்த கீலானி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் (மாவோயிஸ்ட்) சேர்ந்த தோழர்.வரவரராவ் ஆகியோர் பங்கு பெற்ற காஷ்மீர் குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. வழக்கம் போல மோப்பம் பிடிக்கச் சென்ற இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் காஷ்மீர் குறித்து பல வரலாற்று உண்மைகளை கூறிய அருந்ததிராய், கீலானி ஆகிய இருவருக்கும் எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்தது. காஷ்மீர் குறித்து அருந்த்திராய் அப்படி என்ன பேசினார் ? காஷ்மீர் பற்றிய உண்மைகளை சொன்னார் ! காஷ்மீர் காஷ்மீரிகளுடையது அது என்றைக்கும் இந்தியாவுக்கு சொந்தமானதில்லை என்கிற உண்மையை சொன்னார். காஷ்மீரின் உண்மையான வரலாற்றை சொன்னதற்கே தேசத் துரோக வழக்கு என்றால் இது என்ன வகையான ஜனநாயக நாடு ? உண்மையை பேசியதற்காக அருந்த்திராய் மீது வெறி நாய்களைப் போல பாயும் இந்த விரிவாதிக்க வெறியர்கள் அருந்த்திராய் பேசியது தவறு என்றால், எது சரி அல்லது எது உண்மை என்கிற வரலாற்று விவரங்களை முன் வைப்பது தானே நியாயம் ? அருந்த்திராய் பேசுவது பொய் என்றால் இந்த அரசு உண்மையை பேச வேண்டியது தானே ? அவர்கள் கூட்டியதை போல அரசின் சார்பில் ஒரு கூட்ட்த்தை ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களை அழைத்து ’வரலாற்று உண்மை’களை அறிவிக்க வேண்டியது தானே ? அதை விடுத்து கைது செய்து சிறையிலடை என்று உத்தரவிடுவது ஏன் ? ஏனெனில், இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு அல்ல, இது ஒரு போலி ஜனநாயக நாடு ! எனவே தான் இங்கு உண்மைகளை கூட துணிந்து சொல்ல முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஏட்டளவில் தான். அரசுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை சொல்ல இங்கு உரிமை இல்லை. எனவே தான் ராய் தடுக்கப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு பிளாக்மெயில். உண்மைகளை பேசும் அறிவுஜீவிகளை அடக்கி ஒடுக்கி வைக்க ஜனநாயகமற்ற அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் இது. ஒரு போலி ஜனநாயக அரசு மட்டுமே இப்படி நடந்துகொள்ள முடியும்.

இந்த நாடு ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கும், இங்கு முழு கருத்து சுதந்திரம் இல்லை என்பதற்கும் மேற்கூறியது மட்டும் சான்றல்ல, இன்னொரு சான்றும் தர முடியும். காஷ்மீரிகளை காசுக்கு கல்லெறியும் கூட்டம் என்று இழிவுபடுத்தும் பார்ப்பன தினமணி இந்த பிரச்சினையை ஒட்டி உடனடியாக ஒரு தலையங்கத்தை எழுதியது. அந்த தலையங்கத்தின் முதல் பத்தியே இது தான். இப்படி ஒரு கருத்தரங்கம் நட்த்துவதற்கு அனுமதி கொடுத்து விட்டு, பிறகு அதில் பேசுவதற்கும் அனுமதியளித்துவிட்டு, பேசியவை அனைத்தும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரசுரமாவதற்கும், ஒளிபரப்புவதற்கும் அனுமதியளித்துவிட்டு கடைசியில் கைது வழக்கு என்று பேசிக்கொண்டிருப்பதெல்லாம் கேலிக்கூத்துஎன்று எழுதியுள்ளது. இதற்கு என்ன பொருள் ? இது தான் ஜனநாயக நாட்டிலுள்ள பத்திரிகையின் லட்சணமா  ? அதன் பிறகு இறுதியாக அந்த தலையங்கத்தை எழுதிய வைத்தியநாத பார்ப்பான், அருந்த்திராய் போன்றவர்களை பேச அனுமதிக்க கூடாது, இது போன்ற பிரிவினைவாத பேச்சுக்களை எல்லாம் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும் என்கிறார். பார்ப்பன கும்பலுக்கு என்ன ஒரு ஆசை ! இந்த லட்சணத்தில் இவர்கள் ஜனநாயகத்தூண்களில் ஒன்றாம். இந்த வைத்தியையெல்லாம் இராணுவத்தலைவர் ஆக்கினால் நாடு சீக்கிறமே சுபிட்ஷமாயிடும்! ஜனநாயகமற்ற ஒரு நாட்டில் ஒருவன் இப்படித் தான் சிந்திப்பான். ஆனாலும், இது அனைவருக்குமான பொது விதியல்ல.   

அருந்ததி ராய்

பார்ப்பன விஷம் கக்கும் மேற்கண்ட தலையங்கம் வெளியான அடுத்த நாள் அதே பார்ப்பனமணியில் இன்னொரு செய்தி வெளியானது. காஷ்மீரில் குங்குமப்பூ தோட்டத்தில் பூவை பறித்தெடுக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழே  நமது காஷ்மீரில் விளையும் குங்குமப்பூக்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் மிகவும் தெளிவாக“நமது என்பதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது தினமணி. இது பார்ப்பன கும்பல் வழக்கமாக கையாளும் நரித்தனம் தான். பார்ப்பன பயங்கரவாத கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தள்ளிய பிறகு அந்த இட்த்திற்கு இவர்கள் வழங்கிய பெயர் ‘சர்ச்சைக்குரிய இடம்’. இந்த அயோக்கியத்தனத்தை அப்போதே பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு பார்ப்பன செய்தி ஊடகங்கள் அனைத்தும் பாபர் மசூதி இருந்த இட்த்தை சர்ச்சைக்குரிய இடம் என்றே குறிப்பிட்டன. இன்று அந்த சொல்லை வழக்கத்திற்கும் கொண்டு வந்துவிட்டார்கள். இப்படித்தான் ’வரலாறு’ உருவாகி எழுகிறது.

காஷ்மீரி மக்களின் தாய் நிலத்தை கொஞ்சம் கூட வெட்கமோ, குற்றவுணர்வோ இன்றி நமது காஷ்மீர் என்று பேசும் இவர்கள் ’நமது தண்டகாரன்யாவில்லட்சக்கணக்கான மக்கள் ’நமதுஅரசாலேயே அகதிகளாக்கப்பட்டிருப்பதையும், நமதுஅரசாலேயே கொலை செய்யப்படுவதையும் இருட்டடிப்பு செய்வது ஏன் ? நமது குஜராத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த கொலைகாரன் மோடியை காப்பாற்ற முயல்வது ஏன் ?

ஏனென்றால் ஆளும் கும்பலின் ஊதுகுழல்கள் தான் இந்த பத்திரிகைகள் எல்லாம். இதில் நடு நிலைமை வகிக்கும் பத்திரிகைகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆளும் வர்க்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவை தான் இந்த பத்திரிகைகள். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும், தாண்டேவாடாவில் லட்சக்கணக்கான பாங்குடிகள் அகதிகளாக்கப்பட்ட போதும், பல நூறு பேர் படுகொலை செய்யப்பட்ட போதும் பீறிட்டெழாத தேசபக்தி காஷ்மீர் பிரச்சினையில் மட்டும் தினமணிக்கு வருகிறது என்றால் அதற்கு விரிவாதிக்க இந்திய தேசிய வெறியே காரணம். அதை தான் இந்த அரசும் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பார்ப்பன செய்தி ஊடகங்களும் தமது ‘நடுநிலைமை’யையும் மீறி அவ்வப்போதும், தற்போது அடிக்கடியும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்தியா ஒரு போலி ஜனநாயக நாடு என்பதற்கு இந்த அரசும், பத்திரிகைகளும், மற்றுமுள்ள ஜனநாயக தூண்களும் அவர்களுடைய நடைமுறைகளுமே போதுமான சான்றுகளாகும். உதாரணமாக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து சொல்ல வேண்டுமானால், இராமன் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளே போதுமானவை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பொருளாதார கொள்கையின் கீழ் இந்த நாட்டையே மீண்டும் ஏகாதிபத்தியங்களுக்கு காலனியாக்கி, மக்களை  அடிமைகளாக்கும் கைக்கூலிகளின் வேலையை தான் இந்த அரசும், ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள். மொத்த நாட்டையும் துண்டு துண்டாக பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விற்கும் இந்த கைக்கூலிகள் காஷ்மீரை மட்டும் செத்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முக்கிக்கொண்டிருப்பது நல்ல முரண் நகை.

காஷ்மீர் என்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த்து இல்லை. இந்திய விரிவாதிக்க வெறியர்கள் விரும்புவது போல இனி இருக்கப்போவதும் இல்லை. இது தான் வரலாறு, இது தான் உண்மை. இதை துணிவுடன் கூறிய அருந்த்திராயின் குரலை நாமும் எதிரொலிப்போம். இந்திய தேசிய வெறியர்களை அம்பலப்படுத்துவோம். எத்தனை காலம் ஆனாலும், எத்தனை உயிர்கள் மாண்டாலும் அந்த மண்னின் மைந்தர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிமைகளிடம் மண்டியிடமாட்டார்கள். ஆக்கிரமிப்பாளர்களை முறியடித்து ’நம் காஷ்மீர்’ வெல்லும். அப்பொழுதும் வரலாறு எழுதப்படும்.


தொடர்புடைய பதிவுகள்

3 responses to “நமது காஷ்மீர் வெல்க !

 1. சிறந்த தொகுப்பு நடுநிலையோடு.

  • சுதா தமிழன்

   இது போன்ற நல்ல பதிவுகளை ஆதரிக்கும் ராஜவம்சம்
   மறுபடியும் பூக்கும் என்ற பெயரில் தணிகை என்ற இநத்துத்வ, காந்திய வெறியனின் தளத்துக்கு சென்று பாராட்டுவதும் ஏன்?

 2. வானம்

  அருந்ததி ராய் கைது செய்யப்பட்டால் இந்திய எ(ஒ)ருமைப்பாடும்,ஜனநாயகமும் உலக அரங்கில் தற்போதைய நிலையைவிட கேவலமாக சந்திசிரிக்கும் என்பதால்தான் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால் அவர் புக்கர் பரிசு பெற்ற பிரபலம்.குக்கர் வாங்கவே யோசிக்கும் சாதாரண மக்கள் இதைப்பேசினால் தேசிய பாதுகாப்பு(??) சட்டத்தின் கீழ் சிறைதான் என்பதை நினைவில் கொள்ளவும்.
  ஒரு வேண்டுகோள் : கருப்பு பிண்னணியில் வெள்ளை எழுத்துகள் என்பது படிக்க சற்று சிரமமாக இருக்கிறது.வினவு போல வெள்ளை நிறப்பிண்ணணியில் கருப்பு எழுத்துகள் இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s